பன்னீர் தெளிக்கிறோமில... ப்ளீஸ்... கொஞ்சம் தலை குனியுங்க...

வணக்கம் பங்காளீ! வாங்க, சவுக்கியங்களா? நம்ம வலைபதிவு பக்கம் வந்ததுக்கு நன்றீங்கோ...Get this Widget

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே! என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி! நண்பர்களே!

மனிதர்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் சிந்தனைகள், இங்கு சிதறிகிடக்கிறது. படித்து பார்த்து உங்கள் கருத்துக்களை இடவேண்டுகிறேன்!

தொடர்ந்து, இந்த வலைபதிவுக்கு உங்களின் ஆதரவை தாருங்கள்!!! நன்றி! தொடர்ந்து வருக!!!

இந்த நாள், உங்களுக்கு, இனிய நாளாக அமைவதாக!!!

பாசகார பங்காளி கூட்டமுங்க! நீங்களும் கூட வாறீகளா?

20 Aug 2010

பங்காளி! சாவி நம்ப கையிலங்க! அட நம்புங்க!!!

டாக்டர்களையும், மருத்துவணைகளையும் சுயநலமானவங்க, தயவுதாட்சன்யம் காட்டாதவங்கன்னு, மக்கள் நினைக்கிறாங்க. கடவுளா காட்சி தரவேண்டியவங்க இப்படி இரத்தம் குடிக்கிற கொசுவா மூட்டபூச்சியா இருக்காங்கலேன்னு மக்கள் நொந்துக்காத மேடைகளே இல்ல. ஏன்னா எல்லாரோட வீட்டிலேயும் நோய் என்கிற பயங்கரவாதியோட நிழல் படர்ந்திருக்கு. இது உண்மை தானே அப்பு!

அவங்களை சொல்லி என்ன ஆவ போகுது சொல்லு? உலகமே தனியார்மய பொருளாதர சுனாமில சிக்கிகிட்டு அள்ளல் படுது. ஒவ்வொருத்தனும் இன்னொருத்தனுடைய, தலை மேல காலை வச்சி கீழ அமுத்தி விட்டு, மேல போக பாக்கிறான். அது தான் நியாயம்னு வேற பெருமையா பேசறான், வெக்கமில்லாம.  

மக்களாகிய நாம் தான் நம்முடைய உடல்-மன ஆரோகியத்தை, காப்பாத்திக்க வழி என்னான்னு பாக்கனும். என்ன பங்காளி நான் சொல்றது சரிதானே?

இந்த இயற்கை மருத்துவத்தை விட்டா நம்ப ஆரோகியத்தை காப்பாத்த முடியாது. செலவு குறைஞ்ச, பக்க விளைவுகள் இல்லாத மருத்துவம், எல்லோருக்கும் ஏத்த மருத்துவம் எதுன்னு கேட்டா, அது  இந்த இயற்கை மருத்துவம் தான்னு, நம்ப காவல் தெயவம் ஐயனாரு மேல சத்தியம் செஞ்சி சொல்லுவேனுங்க.

சரி மக்கா! போன பதிவுக்கு முந்திய பதிவுல, இயற்கை மருத்துவத்தோட 2 முக்கிய விஷயங்களை பாத்தோம் இல்ல. இப்போ இங்க இன்னும் கொஞ்சம் பார்போம். அதை படிக்காதவங்க இங்க அழுத்துங்க! 

மூன்றாவது விஷயம்: நம்ப உடம்பே ஒரு டாக்டரு தாங்க! அதுக்கு ஏத்த படி நடந்துகிட்டா போதும். அதாவது நாம்ப எல்லாம் தப்பா நினைச்சுகிட்டு இருக்கோம். ஏதோ டாக்டர், 7, 8 வருஷம் படிச்சவரு! அவரு கைவெச்சு பாத்து மருந்து கொடுத்தாருன்னா, நம்ப நோய் தீர்ந்துடும்னு! ஆனா உண்மை என்னான்னா, நோயை தீர்கறது, நம்ப உடம்பு தான்.

கொடுக்கிற மருந்தை வேலை செய்ய வைக்கிறது, நம்ப உடம்புக்குள்ள இருக்கிற பிராண சக்தி தான். நீங்க என்ன சக்தி வாய்ந்த மருந்து கொடுத்தாலும், நமக்குள்ள இருக்கிற பிராண சக்தி தான் அதை வாங்கி நம்ப உடம்புக்கு ஏத்த ஊட்ட பொருளா மாத்துது.

ஒரு சின்ன விஷயம்! நீங்களே கொஞ்சம் யோசிச்சு பாருங்க அப்பு! சின்ன வயசில நோய் வந்தா எவ்வளவு சீக்கிரம் குணமாகுது. ஆனா வயசான உடனே அடிக்கடி நோய் வருது. வர்ற நோயும் சீக்கிரம் போக மாட்டேங்குது. இது ஏங்க மாப்பு?

சாவு படுக்கையில இருக்கிறவங்களுக்கு என்னா உசத்தியான ராஜவைத்தியம் செஞ்சாலும், அவரோட சாவுக்கு நேரம் குறிக்கபடுதே தவிர, வேற என்ன செய்ய முடியுது மனுஷனால? சாவுன்னு சொல்றோமே, அப்படின்னா என்னா தெரியுமாங்க?

பிராண சக்தி கொஞ்சம் கொஞ்சமா மங்கி, அது முழுசா மறைஞ்சு போன பின்னாடி நாம அதை சாவுன்னு சொல்றோம். அம்புட்டுதேன்.

இது தெரியுமா உங்களுக்கு? நம்ப பிராண சக்தியை சீக்கிரமா நாம்ப தான் அழிச்சிக்கிறோம். கோப படறோமா? மனபோராட்டங்களுக்கு ஆளாகிறோமா? அசைவ உணவு சாப்பிடறோமா? தண்ணி அடிக்கறது, சிகரெட் இப்படி வேண்டாத பழக்கத்தை தொடர்றோமா? இப்படி நம்ப உடம்புக்கு எதிரான செயல்கள் செய்யும் போது செல்போன் பேட்டரில இருந்து சார்ஜ் இறங்கிற மாதிரி பிராண சக்தியும் விர்ன்னு இறங்கும் அப்பு!

புதுசா பிராண சக்தியை நம்மால உண்டாக்க முடியாது. ஆனா அதனுடைய செலவை கட்டுபடுத்தி வெச்சா, ஜீவ சமாதி வரை கூட நாம முன்னேறி போக முடியும். என்னது ஜீவ சமாதியா? ஆளை விடுங்கன்னு சொல்றீங்களா? அட விடுங்க! அட்லீஸ்ட் 100 வருஷமாவுது எல்லா உறுப்புகளும் நல்ல நிலையில செயல்பட்டு, நல்ல நிலையில வாழ்ந்த பின்னாடி, சந்தோஷமாவே செத்து போவோமே! அதுக்கு வழி இருக்கே!

நோயில்லாம வாழ முடியும் அப்பு!

அப்படி சிலபல சூழ்நிலையால நோய் வந்தா கூட, நம்ப இயற்கை அன்னை கொடுத்திருக்கிற இயற்கை மருத்துவம் இருக்கே!

உங்களுக்கு எல்லாம் ஒரு அதிர்ச்சியான சேதி சொல்லட்ட? கொடுத்திருக்கிற லிங்க பிடியீங்க! படியிங்க!

என்ன படிச்சீங்களா? அமெரிக்காவில, இங்கலீஷ் வைத்தியம் தான் ஜனங்க சாவுறதுக்கு, கேன்சர், இருதய கோளாறுகள் விடவும் பெரிய காரணமா இருக்காம். மக்கா பாத்தியா இந்த அநியாயத்தை! இதை பத்தி இணையத்தில நிறைய இருக்கு. டைம் இருக்கும் போது படியீங்க அப்பு!

சரி டைம் ஆச்சு மக்கா! இன்னொரு முறை சந்திச்சு மீதிய பேசுவோம். நான் கிளம்புறதுக்கு முன்னாடி அதே விஷயம் தான் நியாபக படுத்த விரும்பறேன்.

கருத்து இடறத, ஓட்டு போடறத சொன்னேன் அப்பு!

அண்ணன்மாருங்களே! தம்பிமாருங்களே! அக்காமாருங்களே! தாய்மாருங்களே ஓட்டு போட மறக்காதீங்க.

நம்ப அண்ணன், அன்பின் சின்னம், பாசத்தின் வண்ணம், சூரியனின் பின்னம், நம் எல்லோருடைய எண்ணம்.

அவரை பெருவாரியான ஓட்டு வித்தியாசத்தில் ஜெயிக்க வைப்பது நம் அனைவரின் கடமை என்று தாழ்மையுடன் சொல்லிக்கொள்ள கடமைபட்டிருக்கிறேன்.

யாருப்பா தம்பி! குடிக்க சோடா சொல்லுப்பா! தொண்ட வறலுது.                     

19 Aug 2010

என்னது! ஆபரேஷன் இல்லாம மூளை கட்டி குணமாகுதா?....!!!!




மூளை கட்டி, எந்த ஒரு ஆபரேஷனும் இல்லாம குணமாச்சு, இயற்கை மருத்துவத்திலன்னு சொன்னேன் இல்ல அப்பு போன பதிவுல.

அந்த உண்மை சம்பவம் இதோ:

எனக்கு தாய்மாமா ஒருத்தர் வாணியம்பாடியில Shoe companyல சூப்பர்வைசரா வேலை பாத்தாருங்க. ஒன்றரை வருஷம் முன்னாடி அவர் வேலை செய்ற கம்பனில ஒருநாள் மயக்கமா அப்படியே தரையில சாஞ்சிட்டாரு. உடனே கிட்ட இருக்கிற மருத்துவமணைக்கு தூக்கிட்டு போனாங்க.

அங்க முதலுதவி மட்டும் செயதபின்னாடி வேலூருக்கு போக சொன்னாங்க. அவருக்கு ரெண்டு வருஷமா, அடிக்கடி தலை வலி  வர்றது வழக்கமுங்க. அதை அவர் பெருசா எடுத்துகல. தலை வலி வரும்போதெல்லாம் Paracetamol  மாத்திரைகளை சாப்பிட்டு வந்திருக்கிறாரு.

வேலூர் மருத்துவமணை, Scan எடுத்து வர சொல்லி சென்னைக்கு அனுப்பினாங்க.

Scan எடுத்து பாத்தப்பத்தான் தெரிஞ்சது, அவருக்கு மூளையில கட்டி இருக்குன்னு. அதுவும் 8.2 செண்டி மீட்டரு நீளம். நம்ப நடுவிரல் அளவு கட்டிங்க. கொஞ்சம் கற்பனை செய்து பாருங்க. கட்டி வேற முத்தின நிலையில எப்ப வேணுமின்னாலும் வெடிக்கலாமுங்கற நிலையில இருந்திச்சு.

இங்கலீஷ் டாக்டரெல்லாம் என்ன சொன்னாங்கன்னா, உடனே ஆபரேஷன் செஞ்சு கட்டிய எடுக்கலன்னா எந்த நிமிஷத்திலேயும், கட்டி வெடிக்கிற அபாயம் இருக்கு, கட்டி வெடிச்சதுன்னா, அது உயிருக்கே கூட ஆபத்துன்னாங்க. அப்படி இல்லன்னா உடம்புல ஒரு பகுதி செயல்படாம போக வாய்ப்பு இருக்குன்னாங்க. 

ஆபரேஷனுக்கு குறைஞ்சபச்சம் மூனு லட்சம் செலவு ஆகுமுன்னாங்க. கட்டி மூளையில இருக்கிறதால, அத வேரோட எடுக்கவும் முடியாதாமா. சும்மா மேலாக்கா அறுத்து எடுப்பாங்கலாம். அந்த கட்டி மறுபடியும் வளர்றாம இருக்கிறதுக்கோ, இல்ல வேறு இடத்தில பரவாம செய்றதுக்கோ எந்த கேரண்டியும் தர முடியாதுன்னுட்டாங்க. அப்படி மறுபடியும் வளர்ந்தா திரும்பவும் ஆபரேஷன் செய்யனும்னாங்க. (இதபார்றா! அப்ப எதுக்கு 3 லட்சம்

மாமா குடும்பம் ஏழை குடும்பம். அவ்வளவு பணத்துக்கு எங்கே போறது. இருக்கிற வீட்டை விற்க துணிஞ்சிட்டாங்க. வேற வழி தெரியாம, சாவு கலையோட அவங்க வீடு இருந்திச்சுங்க

இப்ப தாங்க, கதையில ஹிரோ என்ட்ரீ! யாருப்பா அது, ஹிரோ யாருன்னு கேட்கறது? அது நான் தான்னு வேற சொல்லனுமாக்கும்!

நானு, இயற்கை மருத்துவத்தை பத்தி M.Phil ஆராய்ச்சு செய்திருக்கேங்க. மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில Peace Making and Gandhian Thought என்கின்ற M. Phil பாட பிரிவில படிக்கும் போது தான் அந்த  வாய்ப்பு கிடைச்சுதுங்க. (அப்பாடி நம்பளை பத்தி பெருமையா பேச  எப்படியோ ஒரு சந்தர்ப்பம்).

காந்திஜி அவர் வாழ்க்கை முழுதும் இயற்கை மருத்துவத்தை தான் Follow செய்தாருங்க. உங்க எல்லோருக்கும் தெரிஞ்ச சேதி அவர் பச்சை வேர்கடலை அப்புறம் ஆட்டு பால் குடிச்சாருன்னு தானே? அவர் இயற்கை உணவு, இயற்கை மருத்தும்ன்னு, தன் உடம்பு மேலேயே ஆராய்ச்சி செஞ்சவரு. அவரை பத்தி நிறைய இருக்கு பங்காளி! பேசுவோமே அப்புறமா!

இப்ப கதைக்கு வருவோம். எங்க விட்டேன்? மாமா குடும்பம் வழி தெரியாம கலங்கிட்டு இருந்திச்சா, நான் போன் போட்டு அவங்களை சென்னைக்கு வரவழைச்சேன். இதுக்கு முன்னாடியே என் ஆராய்ச்சுக்காக நான் போன AVG Nature Cure Hospitalக்கு போன் போட்டு டாக்டர் கிட்ட இது விஷயமா பேசி தெரிஞ்சுகிட்டேன். பங்காளி! இந்த ஹாஸ்பிட்டல், சென்னை அரும்பாக்கத்தில இருக்குது.

அங்க கூட்டிட்டு போய் காட்டினா, ஸ்கேன் ரிபோட்டெல்லாம் பாத்துட்டு டாக்டர், கட்டி முத்திபோய் தான் இருக்குது, ஹாஸ்பிட்டல்ல உள்நோயாளியா சேருங்க! முயற்ச்சி செஞ்சிபாக்கலாம்னு சொன்னாரு.

முதல்ல, எங்க மாமா குடும்பத்தில யாருக்கும் நம்பிக்க வரலே. அவங்க மேல தப்பில்ல. மருத்துவம்ன்னா அது இங்கலீஷ் மருத்துவம்ன்னு ஆயிடிச்சு. எப்படியோ அவரை வற்புறுத்தி சேத்தாச்சு.

அப்புறம் என்ன! அவருக்கு ரெண்டு மாசம் இயற்கை மருத்துவ ட்ரீட்மெண்ட். ட்ரீட்மெண்ட் எல்லாம் விநோதமா இருக்கும். மண் குளியல், வாழையிலை குளியல், சூரிய குளியல், அஹிம்சை எனிமா, மசாஜ், நீராவி குளியல், காந்த சிகிச்சை. சமைக்காத பச்சை காய்கறீங்க, பழங்கள் உணவு, இப்படி பல விதமா இருக்கும்.

இதை எல்லாம் பத்தி புரியாதவங்களுக்காக, இந்த சிகிச்சை முறைகளை விளக்கி ஒரு பதிவு போடறேன்.

கொஞ்சம் கொஞ்சம் தேறி வந்தாரு. அந்த ரெண்டு மாசத்தில அபாய கட்டத்தில இருந்து மீண்டு வந்தாரு.

வெரும் எழுத்தா இருந்தா போர் அடிக்கும் இல்ல அப்பு! அதுக்குதான் இது 
வீட்டுக்கு வந்த பின்னாடியும் ஒரு 4 மாசம், இதே சிகிச்சை முறை தொடர்ந்தாரு. ஆச்சரியம் என்னானா, எந்த ஒரு ஆபரேஷன் இல்லாம கட்டி கரைய ஆரம்பிச்சிடுச்சு. இப்ப ரொம்ப நார்மலா வேலைக்கு போறாரு.

இதில ஹைலைட்டான விஷயம். அவருக்கு ஆன மொத்த மருத்துவ செலவும் 20,000 ரூபாய் தான். இங்கலீஷ் மருத்துவர்கள் சொன்ன 3 லட்சத்தில இது 7 சதவீதம் கூட இல்ல. கட்டி திரும்பவும் வளருமோன்னு பயம் இல்ல.          

இந்த நல்ல விஷயத்தை தெரிய படுத்தறது பங்காளி உங்க கிட்ட தான் இருக்கு! போன பதிவ பிரபளமாக்கினதுக்கு உங்க எல்லோருக்கும் நன்றி சொல்லிக்கிறேனுங்க.

உங்க கருத்து மிகவும் முக்கியம்! உங்க ஓட்டு - அதுவும் கூட முக்கியம் தான்!  

ஓட்டு போட்டுடுங்க! இல்லன்னா.... 






அழுதுடுவேன்
(என்ன எழுத்து தெரியலியா? கண்டுபிடிச்சவங்க, சும்மா இருங்கப்பா மானம் போயிடப்போது!)  

நன்றிங்க! வரேனுங்க!

17 Aug 2010

நலம் தானா?... நலம் தானா?... உடலும் உள்ளமும் நலம் தானா?

மக்கா எல்லோரும் சௌக்கியம் தானே? நீங்கெல்லாம் எல்லா வளத்தோட சௌக்கியமா இருக்கனும்னு மனசார வாழ்த்தறேங்க. அப்பு தொடர ஆரம்பிச்சிட்டேன்!

இன்றய தேதில நீயா நானா டீவி நிகழ்ச்சி ஆகட்டும், vinavu.com ஆகட்டும், நம் பத்திரிக்கைகள் ஆகட்டும், எல்லோரும் சொல்லி புலம்பும் விஷயம் நம்முடைய மருத்துவ துரையில் வியாபாரமும் அரசியலும் புகுந்து விளையாடுது. நாம இப்படி கையாள ஆகாம இருக்கோமேன்னு தான். 

ஏன் அப்பு இந்த இழி நிலை? நமக்கான மருத்துவம் நம்மிடம் தானே இருந்தது. அதை மறந்தது யாரு அப்பு! நமக்கு சொந்தமான மருத்துவத்தை விட்டுவிட்டு அந்நிய மருந்துகளை நாடினால், நாம இந்த இழி நிலை தானே அடைய முடியும்.

மனுஷனுக்கு ஏற்ற உணவு இயற்கை உணவு!
நமக்கு சொந்தமான மருத்துவம் எதுன்னு கேட்கறீங்களா? அது இயற்கை மருத்துவம் அப்பு!

கத்தி இல்லாம, இரத்தம் இல்லாம, ஆப்பரேஷன் ஏதும் இல்லாம மூளை கட்டி (அதுவும் 82 மில்லிமீட்டர் நீளம்) இயற்கை மருத்துவ முறையில குணமாச்சுன்னு சொன்னா நீங்க ஒரு வேலை நம்பாம கூட இருக்கலாம். நான் ஏதோ கதை அளக்கிறேன்னு நினைக்கலாம். (அந்த உண்மை சம்பவத்தை பத்தி இன்னொரு பதிவுல எழுதறேன்). மூளை கட்டி மட்டும் இல்ல அப்பு, இருதய கோளாறுகள், சிறுநீரக நோய்கள், வயிற்று கட்டிகள்ன்னு பல விஷயங்களுக்கு  இந்த இயற்கை மருத்துவம் குணமாக்குது. இதை எல்லாம் நான் நேரில பாத்திருக்கேன்.

அது என்ன மாய சக்தி இயற்கை வைத்தியத்திலன்னு கேட்கறீங்களா?

முதல்ல அதபத்தி தெரிஞ்சுப்போமே!   

இயற்கை மருத்துவம்: இதை பத்தி தெரியாதவங்களுக்கு ஒரு அறிமுகம்

முதல் விஷயம்: நோய் ஒன்றே பல அல்ல

எல்லா நோய்களுக்கான காரணம் ஒன்றே! அது, உடலில் இருந்து நீங்கா கழிவுகளே

அப்பு! உடல்ல இருந்து, கழிவுகள், மலஜலமாக, வேர்வையாக, மூக்கு சளியாக, இப்படி பல ரூபங்கள்ல உடலில் தேங்கி நில்லாமல் வெளியேறி விடணும். ஆனா இன்னைய தேதியில மலச்சிக்கல்னால அவதி படுறவங்க நிறைய பேர். அது ஏன்? மக்கா யோசியுங்க கொஞ்சம் யோசிச்சா, கண்டுபிடிச்சிடலாம். எல்லோருக்கும் தெரிஞ்ச சங்கதி தான்.

{குறிப்பு:- விடை தெரிஞ்சவங்க, பின்னூட்டத்தில தெரிய படுத்துங்க. அவங்களுக்கு "ஆரோகிய செம்மல்"ன்னு பட்டம் அளிக்க படும்}   

இரண்டாம் விஷயம்: ஜுரம், சளி, கட்டிகள், வாயு தொல்லை, அஜீரண கோளாறுகள் எல்லாம் உடலில் இருக்கும் தானியங்கி செயல்பாடுகளே! இவைகளின் மூலமாக நம்ப உடல், தேங்கி இருக்கும் அழுக்குகளை வெளியேற்ற செய்யும் முயற்சிகளே இவையெல்லாம்.

தீராத வியாதிகளான இருதய நோய்கள், சர்கரை வியாதி, சிறுநீரக வியாதிகள் போன்ற பல வியாதிகளுக்கும் காரணம் என்னன்னு நினைக்கறீங்க?

உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம் அப்பு! அது, ஜுரம், சளி, கட்டிகள், வாயு தொல்லை, அஜீரண கோளாறுகள்ன்னு பார்த்தோமே, அவைகளை குணமாக்குவதாக நினைச்சுகிட்டு கண்ட கண்ட மருந்து, மாத்திரை முழுங்கிகிட்டு, ஊசி போட்டுகிட்டு இருக்கோமே. அதுதான்.

எனக்கு ஜுரமோ, தலைவலியோ, சளியோ வந்தா என்ன செய்வேன் தெரியுமா? வெறும் சுடு தண்ணியோ அல்லது எலுமிச்சை ஜூசோ குடிச்சி, ஒரு நாள் முழுசும் "நீர் உபவாசம்" (Water Fasting) இருப்பேன். ஒரு நாள் முழுதும் வேறு ஆகாரம் ஏதும் சாப்பிடமாட்டேன். ஒரே நாள்ல குணமாகிவிடும். வேறு எந்த மருந்தோ, மாத்திரையோ சாப்பிடுவதில்லை.  

போன பதிவுல கேள்வி ஒண்ணு கேட்டிருந்தேனே. கேள்வி "நோய் நமக்கு நன்பன்னு" இது சரியா? தவறா?

அதற்கு பதில்: நோய் நமக்கு நன்பன் தான். நோய் என்பது வேறு ஒண்ணுமில்ல, மேலே பார்த்தோமே நோய் என்பது உடலில் இருக்கும் தானியங்கி செயல்பாடுகளின் வெளிப்பாடே!

நோயின் மூலமாக நம்ப உடல், தேங்கி இருக்கும் அழுக்குகளை வெளியேற்ற செய்யும் முயற்சிகளே இவையெல்லாம். நம் உடல் ஆரோகிய பாதைக்கு திரும்புவதற்கு செய்யும் காரியமே நோயின் ரூபமாக வெளிபடுகிறது.  

என்ன இந்த இயற்கை வைத்தியம் பத்தி தெரிஞ்சுக்க ஆவல் வந்திடுச்சா? பேசுவோம் அப்பு! 
நாம யாருக்கும் அடிமை ஆகாம நம்ப நாட்ட சேர்ந்த வைத்தியம், அதுவும் செலவு குறைஞ்ச வைத்திய முறை - நம்ப இயற்கை வைத்திய முறை பத்தி பேசுவோம். இதுவும் நாட்டுக்கு நாம செய்கிற தொண்டு தான்.

உங்க கருத்து மிகவும் முக்கியம்! உங்க ஓட்டு - அதுவும் முக்கியம்!  

ஓட்டு போடுங்க மகராசா! ஓட்டு போடுங்க மகாராணி! (அவங்களை கேட்கலன்னு கோவிச்சிக்க போறாங்க!)

நன்றிங்க
வரேனுங்க
உங்க...உறவுகாரனுங்க...அப்பு!

        
  

16 Aug 2010

பதினாறும் பெற்று..என்னது பதினாறும் பெற்றா!

அப்பு! எல்லோரும் எப்படி இருக்கீங்க, சௌக்கியம் தானே?

முதல் பதிவுக்கு நீங்க கொடுத்த ஊக்கத்துக்கும், உற்சாகத்துக்கும், வரவேற்புக்கும் ரொம்ப ரொம்ப நன்றீங்க! நீங்க எல்லோரும் எல்லா வளமும் பெற்று நலமா வாழனுங்க! 

இப்போ எத பத்தி பேச போறேன்னா,  மனிஷனுக்கு எல்லா செல்வங்களும் வேணுமப்பா. எங்க பெரியவங்க காலத்தில எல்லாம், பதினாறும் பெற்று பெறு வாழ்வு வாழ்கன்னு வாழ்த்துவாங்க. அந்த வாழ்த்துக்குள்ள நிறைய அர்த்தம் இருந்தது. அதை சரியா புரிஞ்சுக்காம, காமடி செய்றதா நினைச்சுகிட்டு, நம்ம சினிமா காமடியன்ஸ், பதினாறு குழந்தைகளை பெத்துகிட்ட பின்னாடியும் எப்படி பெறு வாழ்வு வாழறதுன்னு காமடி செய்வாங்க.

பதினாறு செல்வம்ன்னா என்னன்னன்னு முதல்ல தெரிஞ்சுகலாம் அப்பு. அவை எதுன்னா,
1.    கல்வி
2.    புகழ்
3.    வலிமை
4.    வெற்றி
5.    நன் மக்கள்
6.    பொன்
7.    நெல்
8.    நல்லூழ் (அதிர்ஷ்டம்)
9.    நுகர்ச்சி
10. அறிவு
11. அழகு
12. பொறுமை
13. இளமை
14. துணிவு
15. நோயின்மை
16. வாழ்நாள்

பங்காளி! நல்ல உடல் ஆரோகியம் வேணும். அதனோடு கூட மன ஆரோகியமும் வேணும்.

இந்த பதினாறு செல்வங்கள்ல நான் தலையானதா எதை நினைக்கிறேன்னா உடல் நலனும், மன நலனும். மற்ற செல்வங்கள் நம்மோட இருந்தா கூட, இந்த ரெண்டும்  நம்பக்கிட்ட இல்லன்னா, எந்த செல்வத்தின் பயனையும் அனுபவிக்க முடியாது. என்ன நான் சொல்றது சரிதானே அப்பு?

உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்..அச்சமில்லை! அச்சமில்லை!! அச்சமென்பதில்லையே!!!
உங்களோட ஆசியோடு இந்த விஷயத்தை தொடர் பதிவா எழுதலாம்னு இருக்கேன். என்னப்பு சொல்றீங்க? உங்களுக்கு சம்மதம் தானே?

அப்பு, நான் கிளம்பறதுக்கு முன்னாடி, நம்ப எல்லோரோட மனசுக்கு பிடிச்ச பாரதியார் என்னா சொல்றார் பாருங்க!

ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா
உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா வா
களி படைத்த மொழியினாய் வா வா வா
கடுமை கொண்ட தோளினாய் வா வா வா
தெளிவு பெற்ற மதியினாய் வா வா வா
சிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா
எளிமை கண்டு இரங்குவாய் வா வா வா
ஏறு போல் நடையினாய் வா வா வா 

பார்தீங்களா! நல்ல உடல்நலனை வரவேற்கிற மாதிரி, என்னா தெளிவா சொல்றார். கவிதை சம தூளில்ல! சரி, உங்களுக்கு ஒரு கேள்விங்க. நான் சொல்றேன் "நோய் நமக்கு நன்பன்னு" இது சரியா? தவறா? எங்கே பதில் சொல்லுங்க! யோசியுங்க! நல்லா யோசிச்சு பதில் சொல்லுங்க!

உங்க பதில பின்னூட்டத்தில இடுங்க. நாம எல்லோருமே ஆரோகியமா இருக்கனும்னு ரொம்ப மனப்பூர்வமா விரும்பரேனுங்க. 

ஓட்டு போடுங்க மகராசா! ஓட்டு போடுங்க மகாராணி! (அவங்களை கேட்கலன்னு கோவிச்சிக்க போறாங்க)

நன்றிங்க
வரேனுங்க
உங்க...உறவுகாரனுங்க...அப்பு