உங்களுக்கு மேல சொன்ன நோய்ங்கெல்லாம்,
“என்ன மாமு! மாமுல் கொடுக்க மாட்டேங்கிறியாமேன்னு” மாமுலா வந்து உங்கள மிரட்டிட்டு போகிற கேஸா நீங்க?
அப்போ சரியான இடத்ததுக்கு தான் வந்திருக்கீங்க! மேல படியீங்க!
கண்டதை படிச்சா பண்டிதன் ஆவான்; சரி கண்டதை தின்னா??? நோயாளி ஆவான்னு, சொல்லி தரணுமா இல்லையா?
‘ஆமா! சொல்லி தந்தா மட்டும் நீங்கெல்லாம் அப்படியே கேட்டு நடந்திட போறீங்களாக்கும்!’ அப்படின்னு பெரியவங்க சொல்றது காதில விழுதில்ல
சரி விஷயம் இதுதான்! நம்ப உடம்புகுள்ள அசுத்தம் பல ரூபங்கள்ல போய் சேருது. உணவு மூலமா, சுவாசிக்கிற காத்து மூலமா, குடிக்கிற தண்ணி, சாப்பிடற மருந்து மாத்திரை மூலமான்னு. உடம்புக்கு அஸ்திவாரமா இருக்கிற செல்லுல எல்லாம் கூட போய் நச்சு தன்மையோடு அசுத்தம் தங்கிடுது பங்காளி!
ஒரு அளவுக்கு மேல உடம்புனால தாங்கமுடியாம போகுது. நோயோட ரூபத்தில வெளிபடுது. அதனால தான் நமக்கு அடிக்கடி தலைவலி, காய்ச்சல், சளி, இருமல், தோல்வியாதி, கட்டி, இப்படி நோயா வந்து பேயா ஆட்டுது (என்ன ரைமிங்க் இல்ல!! கைதட்டுங்கப்பா!!!)
சரி, அடுத்து என்ன நடக்குது? டாக்டர் கிட்ட போய் மொழி பணம் அழுவுறோம். அவர் குடுக்கிற மருந்து மாத்திரை எல்லாம் சாப்பிட்டு, உடம்பு தேறுதுன்னு ஆறுதல் படறோம்! படறோமா இல்லையா?
ஆனா டேஞ்சரே அங்க தான் இருக்குது! மருந்து மாத்திரை எல்லாம் சாப்பிட்டு வைக்கிறோமா! 4,5 நாள்ல சோர்வா எழுந்து நடமாடுவோம். நோய் போச்சான்னா? போச்சு....!!!
ஆனா... நோய் போகல. (வரும்... ஆனா வராது! வடிவேலு டயலாக் ஞாபகம் வருதா பங்காளி)
நோய் வர்ரதுக்கு காரணமான அந்த நச்சு பொருட்கள் எல்லாம் உடம்பு உள்ளேயே தங்கி கிடக்கே தவிற வெளியே போகல! இதை கம்ப்யூட்டர் பாஷயில சொல்லனும்னா Anti Virus Software, Firewall எல்லாத்தையும் Inactive பண்ணின மாதிரி தான். வைரஸ் எல்லாம் உள்ளேயே இருக்குங்கிற மாதிரி தான். வெறும் Symtoms போச்சே தவிர நோய் போகல
இப்படியே ஒவ்வொரு முறையும் சின்ன சின்ன நோய்களுக்கும் மருந்து மாத்திரைன்னு முழுங்கிகிட்டு இருந்தா, அது உடம்போட நோய் எதிர்கிற தன்மையை திரும்ப திரும்ப, மண்டை மேல அடிக்கிற மாதிரி அடிச்சினே இருக்கிற மாதிரி தான் அப்பு!.
One Fine Day நம்மகிட்ட வைத்தியர் சொல்லுவாரு - உனக்கு இதய கோளாறு, பிளட் கேன்சர், வயித்தில அல்சர், Brain Tumour, Liver Damage, Kidney Damage-ன்னு. நாமலும் அவங்க சொல்றதுக்கு எல்லாம் தலை ஆட்டுவோம். ஆபரேஷன் செய்யனும்னு சொல்லி, நம்ப உடம்ப, பிறந்த நாள் கேக் வெட்ற மாதிரி அறுத்து கூறு போடுவாங்க.
நான் சொல்றேன்! இதெல்லாம் வேலைக்கு ஆகாது பங்காளி! சின்ன பசங்க பொம்மைய உடைசிட்டு பெரியவங்க கிட்ட வந்து அதை சரி ஆக்கி கொடுங்கன்னு கெஞ்சுவாங்க. பெரியவங்களும் அதை சரியாக்குறதுக்கு எவ்வளவோ ட்ரை செய்வாங்க. நாம இந்த ஸீனை பல இடங்கள்ல பாத்திருக்கோமில்ல?
ஆனா அதை சரியாக்க முடியாது. அதுக்கு காரணம் என்ன பங்காளி? அந்த பொம்மை உருவான சூழ்நிலை வேற, அங்கே அதுக்கேத்த மாதிரி பல மெஷின்கள் இருந்திச்சு! சின்ன சின்ன பாகங்களை கூட அழகா சேர்த்து பொம்மை ரூபமா வெளியே அனுப்புறாங்க. ஆனா, உடைஞ்சி போன பொம்மையை சரியாக்க, பெரியவங்க கிட்ட மிஞ்சி போனா, ஸ்பேனர், ஸ்க்ரு டிரைவர்ன்னு தான் இருக்கும்!!!
அதனால தான், அந்த உடைஞ்ச பொம்மையை ஒன்னாக்க முடியாம போகுது. அதே கதை தான் இங்கேயும் நடக்குது
![]() |
பணம் மட்டும் இருந்தா ஆரோகியம் வந்திடுமா அப்பு! |
கடவுள், சின்ன செல்லுக்குள்ளயே, உயரை வெச்சி அதை வளர்த்து வளர்த்து ஒரு முழு மனுஷனா மாத்துறாரு. அதனுடைய ரகசியம் தெரியாம, நானும் கடவுளோட வேலையை செய்றேன்னு சொல்லி மனுஷன் இறங்கினா வேலைக்காகுமா?
சிம்பிள் சல்யூஷன் - வயித்த காலியா போடுங்க; ஜாலியா இருங்க!!! அம்புட்டுதேன் அப்பு!
இதை நாகரீகமா, உபவாசம்ன்னு சொல்லுவாங்க! என்னது வயித்துக்கு லீவு கொடுக்கனுமா? அதுவும் நோயில படுத்திருக்கும்போது!
என்ன பங்காளி! அதிர்ச்சியை, அதிகமாத்தான் காட்டுற! இதுவரைக்கும் எத்தனை விஷயம் சொல்லி இருக்கேன். திரும்ப திரும்ப நோய் வர்ரதுக்கு மூல காரணமே உடம்புக்குள்ள சேர்ற நச்சிகழிவு தான்னு, ஏன் மறந்து போற நீ?
உபவாசம் இருந்து எந்த டாக்டரையும் பாக்காம, நோய தீத்துக்கிற வழிய பாரு பங்காளி! அது தான் உனக்கு Safe!
உபவாசம், உளர் உபவாசம் (Dry Fasting) நீர் உபவாசம் ( Water Fasting) சாறு உபவாசம் (Juice Fasting) -ன்னு மூனு வகை இருக்கு அப்பு!
Dry Fasting-ன்னா, தண்ணிய கூட குடிக்காம உபவாசம் இருக்கிறது. அது வேண்டாம் நமக்கு
Water Fasting -ன்னா, தண்ணி மட்டுமே குடிச்சிட்டு உபவாசம் இருக்கிறது
Juice Fasting -ன்னா, அதே தான் பங்காளி, வெறும் ஜூஸ் குடிச்சிட்டு உபவாசம் இருக்கிறது.
மேல சொன்ன நோய் எதுவாச்சும் வந்ததின்னா, நீங்க கம்முனு இருந்திடுங்க! நோய் உங்களை விட்டு போய், நீங்க ஜம்முன்னு ஆயிடுவீங்க! (அட திரும்பவும் ரைமிங்க பாரு, அப்பு!)
நீர் உபவாசம் 1ல இருந்து 3 நாள் வரை Safe-ஆ வீட்டிலேயே இருக்கலாம். ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை தண்ணி குடிச்சிட்டு இருக்கணும். தினம் 2 இல்ல 3 முறை எனிமா எடுத்துகணும். வேலை எதுவும் செய்ய கூடாது. காலாற மெதுவா நடக்கலாம்.
ஆசன பயிற்ச்சி, பிரணயாமம் எல்லாம் மெதுவா செய்யலாம். தியானம் தெரிஞ்சவங்க தியானம் செய்யலாம். பிரார்த்தனை செய்யலாம். மத்த நேரத்தில நல்லா ஓய்வு எடுத்துகணும். நோய் வர்ரதே, உடம்புக்கு, நல்லபடியா நாம ஓய்வு கொடுக்காத காரணத்தினால தான்.
வயிறு காலியா இருக்கிறதால இப்போ உடம்பு House Cleaning, கம்ப்யூட்டர் பாஷயில சொல்லனும்னா Registry Clean up & Virus Scanning செய்ய தொடங்கும்.
உடம்பும் மனசும் நல்லா தெளிவா, ஆரோகிய பாதைக்கு திரும்பறதை நீங்க எல்லாம் அனுபவ பூர்வமா உணரலாமுங்க பங்காளி!
![]() |
பார்க்கும் போதே ஜூஸ் உபவாசம் ஆரம்பிச்சிடலாம்னு தோனுதில்ல |
சாறு உபவாசம்ன்னா அரை எலுமிச்சை பழ சாறில 2 இல்ல 3 தம்ளர் தண்ணி கலந்து குடிக்கிறது. இனிப்பு சுவைக்கு கொஞ்சமா தேன் சேத்துகலாம்.
ஆரஞ்சு, திராட்சை, அண்ணாசி, பப்பாளின்னு கூட பழச்சாறு குடிச்சி உபவாசம் இருக்கலாமுங்க.
உபவாசத்தை முடிக்கிற விதம் ரொம்ப முக்கியம் பங்காளி!
உபவாசத்தை முடிக்கும் போது, ஜூஸ், அப்புறம் கனிஞ்ச பழங்கள், அடுத்து இயற்கை உணவு (பச்சை காய்கறி சேலட், பழங்கள் சேலட்) அடுத்து புளி, காரம், உப்பு குறைவா இருக்கிற சமைச்ச உணவு சாப்பிடறதுன்னு படிபடியா முடிக்கனும்
இதனுடைய பயன்கள் அதிகம் பங்காளி! எல்லா நோய்ங்களும் சீக்கிரம் குணமாகுது, உடல் எடை குறையுது, ஊளைச் சதை, தொந்தி குறையுது, எல்லா செல்களும், நச்சி கழிவுகளை நீக்கி புத்துணர்ச்சி அடையுது. மனசு அமைதி ஆகி சாத்வீக குணம் மேலோங்குது.
மொத்ததில யானை பலம் உடம்புக்குள்ள சேந்திடும் (எறும்பு பலம் இருக்கிறப்பவே நம்பல யாராலேயும் சமாளிக்க முடியல..இன்னும் யானை பலம் வந்தா அம்புட்டுதேன்)
(உண்மையை அப்படியே ஒப்புகிறதில, காந்தி தாத்தாக்கு அடுத்து நீங்க தான் பங்காளி)
சரி ரைட்டு! மேட்டரு முடிஞ்சது! வர்ரேன் பங்காளி!
ஓட்டு போட மறந்திடாதிங்க! மக்களே! அது ரொம்ப முக்கியம். அப்ப தானே உங்கள மாதிரி நிறைய பங்காளிங்க கிடைப்பாங்க!
கருத்து ஏதாச்சும் இருக்கா அப்பு! தயங்காம சொல்லிட்டு போங்க!
யாருப்பா தம்பி அங்க, கூட்டத்து மத்தியில மைக்க பாஸ் பண்ணுபா!!!
39 மேதைங்க இதபத்தி என்ன சொன்னாங்கன்னா...:
appada intha terar paya inga illa...
//Juice Fasting//
கூல் ட்ரிங்க்ஸ் or ஹாட் ட்ரிங்க்ஸ்?
பயனுள்ள பதிவுங்க.
@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா): நண்பா! என்ன இது? கருத்து சொல்லுவீங்கன்னு பாத்தா... அந்த விளையாட்டு புத்தி உங்களை விட்டு இன்னும் போகலியே. உங்களை மதிச்சி மேதைன்னு பட்டம் எல்லாம் கொடுத்தா அதை காப்பாத்திக்க வேணுமா இல்லையா?
@ஜீவன்பென்னி: நண்பரே! பாராட்டுக்கு நன்றிங்க!
காலையில காபி குடிக்கிறோமோ இல்லையோ, உங்க பதிவைப் படிச்சாலே போதும் போலிருக்கு, ஆரோக்கியமா வாழலாம், நல்ல தகவல்கள், நன்றி!
ஐயோ என்னை ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டியே அப்பு. உண்மைலயே நல்ல பதிவு...
நல்ல வைத்தியம். அடுத்த தடவை காய்ச்சல் வந்தா செஞ்சு பாக்கிறேன்.
மிகப்பயனுள்ள பதிவு பங்காளி
///One Fine Day நம்மகிட்ட வைத்தியர் சொல்லுவாரு - உனக்கு இதய கோளாறு, பிளட் கேன்சர், வயித்தில அல்சர், Brain Tumour, Liver Damage, Kidney Damage-ன்னு. நாமலும் அவங்க சொல்றதுக்கு எல்லாம் தலை ஆட்டுவோம்.///
இத்தனையும் ஒரே டைம் ல ய சொல்லுவாரு ..!!
நிச்சயம் உங்க பதிவு அருமைங்க. போன பதிவுல
உபவாசம், உளர் உபவாசம் (Dry Fasting) நீர் உபவாசம் ( Water Fasting) சாறு உபவாசம் (Juice Fasting) -ன்னு மூனு வகை இருக்கு அப்பு! பத்தி சொல்லறேன் அப்படின்னு சொன்னிங்க .. இப்ப தெளிவாவே விளக்கிடீங்க ரொம்ப நன்றிங்க .. கோமாளியின் ஆதரவு உங்களுக்கு எப்போதும் உண்டு ,,
@பெயர் சொல்ல விருப்பமில்லை: பாராட்டுகளுக்கு நன்றி! தொடர்ந்து படிச்சி பாத்து கருத்து சொல்லி ஆதரவு தரணும் நண்பா!
@DrPKandaswamyPhD: ///அடுத்த தடவை காய்ச்சல் வந்தா செஞ்சு பாக்கிறேன்///
கண்டிப்பா செய்து பாருங்க. உடம்புக்கும் மனசுக்கும் நன்மை உண்டாக்கும்
@VELU.G: உங்க பாராட்டுக்கு நன்றிங்க! தொடர்ந்து வாங்க! நிறைய பேசுவோம்!
@ப.செல்வக்குமார்:
///இத்தனையும் ஒரே டைம் ல ய சொல்லுவாரு ..!!///
செல்வா! இத்தனை வியாதி ஒன்னா வந்தா அவன் டாக்டர்கிட்ட பேசற நிலைமைல இருப்பானா? இல்ல நிரந்திர ஓய்வு எடுத்திட்டு இருப்பானா, சொல்லு?
@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா):
///ஐயோ என்னை ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டியே அப்பு.///
நீங்களே சத்தியம் செய்யும் போது, நான் எப்படி நம்பாம இருக்க முடியும் சொல்லுங்க நண்பா?
பாராட்டுக்கு நன்றி! தொடர்ந்து வாங்க! உடல்நலத்தை பத்தி அதிகம் பேசுவோம்!
Guarantee கொடுப்பீங்கதானே...... துணிஞ்சு ட்ரை பண்ணலாமா? Very interesting information.
@Chitra: //Guarantee கொடுப்பீங்கதானே...... துணிஞ்சு ட்ரை பண்ணலாமா?//
அக்கா! கண்டிப்பா Guarantee கொடுக்கிறேன். என் அனுபத்தில வெற்றி அடைஞ்ச பின்னாடி தானே எழுதறேன். முன்னாடி ஒரு பதிவுல காய்ச்சல் வந்தப்ப, நான் ஜூஸ் Fasting இருந்ததை எழுதினேனே! மறந்திருப்பீங்க போல!
கருத்துக்கு நன்றி அக்கா!
நல்ல விசயம் ஆனால் இந்த உபவாசம் என்கிற விஷயத்தை நம்ம முன்னோர்கள் விரதம்கிற பேரில் சொல்லி வச்சாங்க சில விசேஷ தினங்களில் ஒருவேளை விரதம், ஒரு நாள் விரதம் என்று பல விதங்களில் உபவாசம் செய்வார்களாம். இதையெல்லாம் நோய்கள் இல்லாதபோதே வாரம் அல்லது மாதம் ஒரு முறை அல்லது இருமுறை செய்தால் நல்லது. அவரவர் உடல்நிலைக்கு ஏற்ப இது மாறுபடலாம்.
இது என் கருத்து இதில் தவறு இருந்தால் கூறவும் நண்பரே!
@எஸ்.கே:
///இந்த உபவாசம் என்கிற விஷயத்தை நம்ம முன்னோர்கள் விரதம்கிற பேரில் சொல்லி வச்சாங்க சில விசேஷ தினங்களில் ஒருவேளை விரதம், ஒரு நாள் விரதம் என்று பல விதங்களில் உபவாசம் செய்வார்களாம். இதையெல்லாம் நோய்கள் இல்லாதபோதே வாரம் அல்லது மாதம் ஒரு முறை அல்லது இருமுறை செய்தால் நல்லது. அவரவர் உடல்நிலைக்கு ஏற்ப இது மாறுபடலாம்.///
பதிவுல எழதவிட்டு போனதை, அருமையா சொல்லிட்டீங்க நண்பா! நம் முன்னோர்கள் இயற்கையோடு ஒன்று இணங்கி வாழ்ந்தார்கள். அவர்களோட எல்லா பழக்க வழக்கங்களும் உடல்நலனை காக்க செய்வதாக இருந்தது! நன்றி நண்பா!
நல்ல பயனுள்ள தகவல்கள்...உபவாசம்,விரதம் பத்தியெல்லாம் சும்மா ஒண்ணும் பெரியவங்க சொல்லல..ஒவ்வொண்ணுலயும் இப்படி நிறைய நல்ல விஷயங்கள் ஒளிஞ்சுகிடக்கு...அத ரொம்ப அழகா எல்லாருக்கும் புரியற மாதிரி சொல்லி இருக்கீங்க நண்பரே ! பாராட்டுக்கள் !!
@சுடர்விழி: உங்க வருகைக்கும், பாராட்டுகளுக்கும் நன்றி தோழி!
///உபவாசம்,விரதம் பத்தியெல்லாம் சும்மா ஒண்ணும் பெரியவங்க சொல்லல..ஒவ்வொண்ணுலயும் இப்படி நிறைய நல்ல விஷயங்கள் ஒளிஞ்சுகிடக்கு...///
சரியா சொன்னீங்க தோழி! இப்போதைய தலைமுறை மனிதர்களுக்கு, நிறைய விஷயங்கள் தெரிவதில்லை. அதனாலே துன்பங்கள் அதிகம் படுகிறார்கள்.
தொடர்ந்து உங்களின் ஆதரவு தேவை சுடர்விழி!
நல்ல விசங்கள சுவாரஸ்யமா சொல்லிருக்கீக. இத்தனை நாள் இந்தபக்கம் வராம போய்ட்டேனே...
கண்ட்டினியூ.... , அப்புறம் எல்லா பட்டையிலு வோட்டு குத்தியாச்சி...:)
@Jey: வந்ததுக்கும், பாராட்டி, கருத்தை சொன்னதுக்கும், ஓட்டு போட்டதுக்கும் நன்றி தல!
நல்ல நல்ல விஷயங்களை சொல்லறீங்க நண்பரே :) தொடரட்டும் உங்கள் பதிவுகள்!
@வெங்கட் நாகராஜ்: உங்களின் பாராட்டுகளுக்கு நன்றி!
kandippa vikkum. nalla sarakku iddu. kalappadam ellai. eppadi.
அருமையான தகவல்கள்..
nanrii nanpa...
பங்காளி! Very good article. Every one should read this... I will post in my website. Thanks.
NARATH
Riyas
Anonymous
Paarvai
பாராட்டிய உங்கள் அனைவருக்கும் நன்றிகள்!
@Paarvai: //Every one should read this... I will post in my website.//
தாரளமாக செய்யுங்கள். பல பேர்களுக்கு நல்ல விஷயம் போய் சேர்கிறது என்றால் நல்லது தானே. இந்த வலைபக்கம் ஆரம்பிக்கபட்ட நோக்கமே அது தானே! :-)
What is எனிமா? Sorry I from TamilEelam.
@Paarvai: எனிமா என்றால் ஆங்கிலத்தில் Enema ஆகும். ஆசனவாயின் மூலம் உடலின் உள்ளே தண்ணீரை பாய்ச்சும் முறை பல சிக்கல் வேண்டாமுன்னா மலசிக்கலை போக்குங்க என்கின்ற பதிவில், படமும் அதற்கான விளக்கமும் இருக்கிறது.
படித்து பார்க்கவும்! உங்களுக்கு வேண்டிய விளக்கம் கிடைக்கும்.
//** எனிமா என்றால் ஆங்கிலத்தில் Enema ஆகும். ஆசனவாயின் மூலம் உடலின் உள்ளே தண்ணீரை பாய்ச்சும் முறை பல சிக்கல் வேண்டாமுன்னா மலசிக்கலை போக்குங்க என்கின்ற பதிவில், படமும் அதற்கான விளக்கமும் இருக்கிறது.
படித்து பார்க்கவும்! உங்களுக்கு வேண்டிய விளக்கம் கிடைக்கும். **///
Thanks alot... it helped me alot. Me and my wife have started fasting on fridays now. We didn't know why my mom fasting on Friday's and Tuesday's until I read your Blog. I think our religion always with Nature, but never taught itthat way.
@Paarvai:
//We didn't know why my mom fasting on Friday's and Tuesday's until I read your Blog. I think our religion always with Nature, but never taught itthat way.//
உங்களின் கருத்து முற்றிலும் சரியானது. நமது முன்னோர்கள் செய்த அனைத்து காரியங்களுக்கும் ஏதோ ஒரு காரணம் இருக்கும். ஆனால் கால போக்கில் அந்த காரணங்கள் மறைந்து விட்டதனால், இன்றைய தலைமுறையை சேர்ந்தவர்கள் அவைகளை மூட நம்பிக்கை என்று புறம் தள்ளி விடுகின்றனர்.
//Me and my wife have started fasting on fridays now.//
நீங்கள் உபவாசம் ஆரம்பித்திருப்பது நல்ல செய்தி! நீங்கள் நீண்ட நாள் ஆரோகியமாக வாழ வாழ்த்துகின்றேன்.
காய்ச்சலில் பலவகை உண்டு,அதாவது சாதாரண காய்ச்சல்,மலேரியா,டெங்கு,டைபாயிட்,லெப்டொபைரோசிஸ்(எலி ஜுரம்),தற்பொழுது சிக்கன் குன்யா மற்றும் சுவைன் ஃப்ளு(பன்றி காய்ச்சல்)இன்னும் பல.தாங்கள் கூறிய விரதத்தைக் கடைபிடித்தால் அனைத்து ஜுரங்களும் குணமாகுமா?அல்லது குறிப்பிட்ட ஜுரங்கள் மட்டும் குணமாகுமா?
@Anonymous
//காய்ச்சலில் பலவகை உண்டு,அதாவது சாதாரண காய்ச்சல்,மலேரியா,டெங்கு,டைபாயிட்,லெப்டொபைரோசிஸ்(எலி ஜுரம்),தற்பொழுது சிக்கன் குன்யா மற்றும் சுவைன் ஃப்ளு(பன்றி காய்ச்சல்)இன்னும் பல.தாங்கள் கூறிய விரதத்தைக் கடைபிடித்தால் அனைத்து ஜுரங்களும் குணமாகுமா?அல்லது குறிப்பிட்ட ஜுரங்கள் மட்டும் குணமாகுமா?//
நண்பரே! நோய் என்பது ஒன்று தான் என்று பதிவுகளில் தெளிவுப் படுத்திக்கொண்டு வருகிறேன். அதனால் எந்த காய்ச்சலாக இருந்தாலும், என்ன? உடலில் நச்சுப் பொருட்களை தேக்குகின்ற கழிவுப் பொருட்கள் இல்லையென்றால் ஒருக் கவலையும் இல்லை. கிருமிகள் வளருவதற்கான சூழலை நாம் கழிவுகளை வெளியேற்றுவதன் மூலம் கொடுப்பதில்லை.
அதனால் எந்த நோயும் நம்மைத் தாக்க முடியாத சூழலை உருவாக்குவதே முக்கியம். எந்த மருந்தோ, தடுப்பூசிகளோ எதுவும் தேவையில்லை. உண்மையில் இந்த மருந்துகள் தாம் நம் உடம்புக்குள் விஷத்தை புகுத்துகிறது. கருத்தினை சரியாக விளங்கிக் கொண்டீர்கள் இல்லையா?
வேறு ஏதாகிலும் விளக்கம் தேவையென்றாலும் என் ஈமெயில் விலாசத்திற்கு எழுதுங்கள். என்னால் எனக்குத் தெரிந்த விஷயங்களை சொல்ல முடியும். நன்றி நண்பரே!
மிகவும் நல்ல பதிவு ...
நீங்கள் கூறிய கருத்துக்கு ஏதேனும் Scientific கரணம் உண்டா? அப்படி இருந்தால் அண்டத linkஐ share செய்ய முடியுமா?
எனது நோக்கம் நீங்கள் எந்த அடிப்படையில் இந்த தகவலை கூறினீர்கள் என்பதை தெரிந்து கொள்வதற்கே!
நான்தான் வின்,
உபயோகமான விஷயந்தான்
ரொம்ப நன்றி பங்காளி
பலருக்கும் இதை பரப்புங்க (நோயைத் தவிர)
superb
Post a Comment
பங்காளி! சரக்கு எப்படி? விக்குமா... விக்காதா...??? கொஞ்சம் சொல்லிட்டு போங்க!!!