பன்னீர் தெளிக்கிறோமில... ப்ளீஸ்... கொஞ்சம் தலை குனியுங்க...

வணக்கம் பங்காளீ! வாங்க, சவுக்கியங்களா? நம்ம வலைபதிவு பக்கம் வந்ததுக்கு நன்றீங்கோ...Get this Widget

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே! என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி! நண்பர்களே!

மனிதர்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் சிந்தனைகள், இங்கு சிதறிகிடக்கிறது. படித்து பார்த்து உங்கள் கருத்துக்களை இடவேண்டுகிறேன்!

தொடர்ந்து, இந்த வலைபதிவுக்கு உங்களின் ஆதரவை தாருங்கள்!!! நன்றி! தொடர்ந்து வருக!!!

இந்த நாள், உங்களுக்கு, இனிய நாளாக அமைவதாக!!!

பாசகார பங்காளி கூட்டமுங்க! நீங்களும் கூட வாறீகளா?

25-Sep-2010

முட்டையைத் தள்ளுங்க! ஜீவகாரண்யத்தை பாருங்க!


பங்காளி! மனித நாகரீகமாம்! ரொம்ப உயர்ந்த நாகரீகமாம்!


தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்?


வள்ளுவரு நமக்குச் சொன்னது பங்காளி! உன் உடம்பை வளர்கிறதுக்காக மத்த ஜீவன்களோட உசிரை வாங்காதேன்னு சொல்றாரு! அப்படி மத்த ஜீவன்களோட மாமிசத்தை தின்னு உன் உடலை வளர்த்தா, தர்மம் எங்கே இருக்கப்போகுது சொல்லுன்னு ஸ்டார்ங்கா கேட்குறாருப்பா!

மனுஷங்க ராஷசக் கூட்டங்களா மாறி கும்பல் கும்பலா திறியறாங்கப்பா! என்னது மனுஷங்க ராஷசக் கூட்டமான்னு ஏன் கோபப்படற? உண்மை தான் சொன்னேன் பங்காளி.

நான் சொலறதக் கேட்டப்பின்னாடி, நீயே சொல்லு! சின்ன சின்ன இரும்புக் கூண்டுக்குள்ள, ஐந்தில இருந்துப் பத்து கோழிகளை அடைச்சு வைச்சிருக்காங்க. அதுங்க வாழ்நாள் முழுசும் நின்ற நிலையிலேயே தங்களோட ரக்கைங்களக் கூட விரிக்க முடியாதபடி ஒரு இறுக்கமான நிலையில அடைச்சி வைச்சிருக்காங்க. 

நினைச்சிப் பாரு! அதுங்க முட்டைங்க இடற காலம் 18ல இருந்து 20 மாசம் வரைக்குமாம். அதுக்குப்பின்னாடி, அதுங்களோட பயன் தீர்ந்தப்பின்னாடி கொலைச் செய்யப்படவேண்டியது தான்.

ஆனா அந்த 18 மாசமும் நின்னபடியே இருக்கணும்னா எப்படி இருக்கும் சொல்லு? அதைவிட கொலைச்செய்யப்படுறது எவ்வளவோ மேல் இல்லையா? இப்படி நரக வேதனை தினம் அனுபவிக்கிறதுக்குப் பதிலா கொலைச் செய்யப்பட்டா கூடப் பரவாயில்லைன்னு தான் அதுங்க மனசுக்குள்ள வேண்டிக்கும் இல்லையா?

காத்துப் புகாத கூடங்கள்ல ஒரு லட்சத்துக்கும் மேலே கோழிகளை வைச்சிருக்காங்க. இப்படி அடைச்சி வைச்சிருகிறதால அதுங்க ரக்கையெல்லாம் உதிர்ந்துப்போகுது, அதுங்க இயற்கையா செய்ற மண்ணை கிளறி விடறது, மண்ணில புரல்றதுன்னு, தங்களோட ரக்கைங்களை நீவி, சுத்தம் செய்றதுன்னு, எந்த செயலையும் செய்ய விடுறதில்ல. இந்த நெரிச்சலான சூழ்நிலையால பலக் கோழிங்க மிதிப்பட்டே செத்துப்போதுங்க. நோய் தொற்றி இறந்துப்போறது, அடிக்கடி நடக்குதுப்பா! இப்போ சொல்லப்போறது இன்னும் ரொம்பக் கொடுமை! தெரியுமா? கோழிகள் நெருக்கமா அருகருகே இருக்கிறதால, ஒன்னு இன்னொன்னை கொத்திக் காயப்படுத்திக்காம இருக்கிறதுக்கு அதுங்களோட மூக்குகளை உடைக்குறாங்கப்பா, இதுக்கு De-beaking -ன்னு பேராம். அதுவும் எப்படி? எந்த ஒரு மயக்கமருந்தும் கொடுக்காமலே. கற்பனைப் பண்ணிப்பாரு! அந்த கொடுமை எப்படி இருக்கும்னு. அதுங்களுக்கு நீங்காத துன்பமா இது அமைஞ்சுடுது.

இங்கே கீழே இணைச்சிருக்கிற வீடியோவைத் தான் கொஞ்சம் பாரு பங்காளி! உனக்கே உண்மைத் தெரியும்!வீடியோ படம் எப்படி இருக்கு! பார்கவே பயங்கரமா இருக்குல்ல. 

வருஷம் பூராவும் முட்டை இடுகிற மாதிரி ஒளியையும், வெப்பத்தையும் கூடங்கள்ல செயற்கையா பாய்ச்சுறாங்க. கோழிகளுக்கு எப்பவுமே கோடைக்காலமா தெரியணும்ங்கிறதுக்காக இந்த ஏற்பாடு. 

தொடர்ந்து முட்டைகளை இடுறதால, அதுங்க எலும்புங்க எல்லாம் பலமில்லாம உடைஞ்சிப்போகுது.  Osteoporosis நோய் அதுங்களை தாக்குது. அதுங்களைப் பார்க்குறதுக்கேப் பரிதாபமா இருக்கு. நோய்வாய் பட்டு சீக்கிரமா செத்துப்போகுதுங்க.


மேல இருக்கிற வீடியோவையும் பாரு பங்காளி! 

இப்போ ஜீவகாரண்யத்தைப் பத்தி சொன்னேன் இல்ல. யோசிச்சிப் பாரு! இப்படி மத்த ஜீவன்களைக் கஷ்டப்படுத்தித் தான் நாம உயிர் வாழணுமான்னு நிதானமா யோசிச்சிப் பாரு!

நல்ல முடிவு எடுப்பேன்னு நம்புறேன். சீக்கிரமா அடுத்த முறை சந்திப்போம். வரேன்! வீட்டிலே எல்லோரையும் கேட்டதா சொல்லு!  

24-Sep-2010

காமன் வெல்த் Games-ம் Common Man கந்தசாமியும்!

"அண்ணே முனுசாமி அண்ணே! இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டீங்களா?"

"
அட வாப்பா கந்தசாமி! எப்படி இருக்கே? எந்த விஷயத்தைக் கேள்விப்பட்டீங்களான்னு கேட்கிறா? எதைப்பத்தி சொல்ற?

"
காமன் வெல்த் Games பத்தி தான் அண்ணே சொல்றேன்! இந்தியா, அமோகமா காமன் வெல்த் போட்டிகள்ல, அதிக தங்க மெடல்களை வாங்கி குவிச்சிடுச்சாமே!"

காமன் வெல்த் தெய்வம் -1

"அப்படியா சங்கதி! எனக்குத் தெரியாதே! விஷயம் என்னான்னு தான் விவரமா சொல்லேன்."

அதாவது அண்ணே! காமன் வெல்த் போட்டிகள்ல நடந்த கூத்தெல்லாம் பாத்திட்டு, போட்டிகள்ல, பங்கு பெற்றதுக்கு மத்த நாட்டு விளையாட்டு வீரர்கலெல்லாம் வர்றதுக்கு பயந்தாங்க இல்ல? அதனால தான் நம்ப நாட்டுக்கு கிடைச்சிருக்கு லக்கிப் ப்ரைஸ்!

யாருமே கலந்துக்கல என்கிறதால, இந்தியா வீரர்கள் மட்டும் தானே மீதி எஞ்சி இருந்தாங்க! இப்போ புரியுதா அண்ணே? ஏன் இந்தியா, போட்டிகள்ல, அதிகமா தங்க மெடல்களா வாங்கி குவிச்சிட்டாங்கன்னு.

காமன் வெல்த் தெய்வம் - 2

அண்ணே! அது மட்டும் இல்ல! யாரும் வெளியல இருந்து வராததால காமன் வெல்த் கேம்ஸ்சையே, நேஷனல் கேம்ஸ்சா அறிவிச்சிட்டாங்களாம். அதனால மொத்தமா இந்தியா இத்தனை மெடல்களை ஜெயிசதுன்னு பேருக்கு சொல்லிகலாமாம்.

அது மட்டும் இல்லாம, தமிழ்நாடு இத்தனை மெடல்கள் ஜெயிச்சது, ஆந்திரா இத்தனை மெடல்கள் ஜெயிச்சது, கர்நாடகா இத்தனை மெடல்கள் ஜெயிச்சதுன்னு, மாநில மாநிலமா தனித்தனியா பிரிச்சி அறிவிச்சி இருக்காங்க! ஒட்டுமொத்த இந்தியா நிறைய மெடல்கள் ஜெயிச்சதுன்னும் ஒரு வகையில பெருமை. 

அதே சமயத்தில, அந்த அந்த ஸ்டேட்டை சேர்ந்தவங்களுக்கும், தங்களோட ஸ்டேட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களைப் பாத்து பெருமைப் பட்டுக்கலாம். எப்படி ஒரே சமயத்தில, ஒரே கல்லுல ரெண்டு மாங்க அடிச்சிட்டாங்க இல்ல? என்ன இருந்தாலும் இந்த மாதிரி மாத்தி யோசின்னு சொல்ற ப்ளான்ல நம்ப நாட்டை, அடிச்சிக்க ஆளே இல்லைன்னே

அது சரி கந்தசாமி! எதிர்கட்சி ஆளுங்க எல்லாம் இனி சுரேஷ் கல்மாடின்னு, அவரு பேரு வெச்சிக்க கூடாது, வேணும்னா, அவரு மண்மாடின்னு பேரு வெச்சிக்கலாம்னு போராட்டம் செய்றாங்களாமே! அவர் தலைமையில கட்டி இருக்கிற கட்டிடம் எல்லாம் பீச் மணல் கோபுரம் அளவுக்குத் தான் ஸ்டார்ங்கா இருக்காமே! 

ஆமா அண்ணே! நம்ப நாட்டு தலைவருங்க எல்லோருக்கும் மணல் கோபுரம் கட்டி விளையாடுற குழந்தை மனசு தான் அண்ணே!" 

இதை யோசிச்சீங்களா?” குழந்தைங்க தானே, பரிட்சை வருதுன்னு, கொஞ்சமும் பயம் இல்லாம, பரிட்சை வர்ற வரைக்கும் விளையாட்டுபுத்தியோட இருந்திட்டு, பரிட்சைக்கு முதநாள், ராத்திரியெல்லாம் கண் விழிச்சி படிச்சி பரிட்சைக்குப் போவாங்க!

அந்த மாதிரி, இருக்கிற காலம் எல்லாம் விட்டுட்டு, சாகும்போது சங்கரா! சங்கராங்கிற மாதிரி விளையாட்டு ஆரம்பிக்கிறதுக்கு, இன்னும் 1 வாரம் தான் இருக்குன்னு தெரிஞ்சவுடனே, பரபரப்பா எல்லா தலைவருங்களும் முண்டியடிச்சிட்டு வேலை பாத்தாங்களே. அப்போ எல்லோருக்குமே குழந்தை மனசு தானே?

 கந்தசாமி!இப்படி விளையாட்டை, விளையாட்டா எடுத்துகிட்டு நம்ப மானம் மரியாதை எல்லாத்தையும் சிக்ஸர் அடிச்சி கிரவுண்டுக்கு வெளியே அனுப்பிட்டாங்களேப்பா. இவனுங்களுக்கு மானம் ரோஷம் எல்லாம் இல்லையா?

மானமாவது! ரோஷமாவது! அதெல்லாம் பாத்தா துட்டைப் பாக்கமுடியுமா அண்ணே? இவனுங்களுக்குன்னு ஸ்பெஷல் போட்டி வைச்சா இவங்க தான் அண்ணே அதில நிறைய தங்க பதக்கமா வாங்கிட்டு வருவானுங்க!

காமன் வெல்த் தெய்வம் -  3

 அது என்ன போட்டின்னு கேட்கறீங்களா? அதாவது எவ்வளவு காரித்துப்பினாலும், அதைக் கண்டுக்காத மாதிரியே சிரிச்ச முகத்தோடயே, டீவியில பேட்டி கொடுக்குறானுங்களே, அதுக்கு ஒரு தங்கப் பதக்கம்

ஊழல் செய்தா, திட்டத் தொகையில 10% ஊழல் செய்வாங்க. அதுதான் உலகம் பூரா எல்லா நாடுகள்லேயும் இருக்கிற நடைமுறை. ஆனா நம்ப ஆளுங்க 90% ஊழல் செய்றானுங்களே! அந்த திறமைக்கு ஒரு தங்கப் பதக்கம்.

இத்தனை விஷயம் வெளியில தெரிஞ்சாலும், திரும்ப திரும்ப எலக்ஷன்ல நின்னு ஜெயிச்சி வர்றாங்களே, இந்த விஷயத்துக்கு மட்டும், முதல் பரிசுக்கு ரெண்டு பேரயையும் ஜாயின்ட் வின்னரா அறிவிக்கணும் அண்ணே.

ஒன்னு எலக்ஷன்ல நின்னு ஜெயிக்கிற தலைவனுங்க. இன்னொன்னு யாரு தெரியுமாண்ணே? திரும்ப திரும்ப ஓட்டுப் போட்டு இவனுங்களை பதவிகள்ல உட்கார வைக்கிறோமே, அந்த மடை சாம்பிராணிகளா இருக்கிற நாமத்தான்! எப்படியோ சின்ன சின்ன நாடெல்லாம் கூட நம்பளை பாத்து சிரிப்பா சிரிக்கிற மாதிரி வைச்சிட்டானுங்க. த்தூன்னு காரித்துப்பி ரொம்பவே கேவலமா பாக்க வைச்சிட்டானுங்க!

அட விடு கந்தசாமி! இவ்வளவு நடந்தப் பின்னாடியும் ஒலிம்பிக்ஸ்சை நம்ப நாட்டுல நடத்துறதுக்கு ரகசியமா பேரம் பேசிக்கிட்டு இருக்கானுங்களாமே. அந்த தில்லுக்குக் கூட ஒரு தங்கபதக்கம் கொடுக்கலாம் இவனுங்களுக்கு!

யப்பா! யோசிக்கும் போதே மயக்கம் வருதே! இந்த விஷயத்தில கூட இவனுங்க சாதிச்சாலும் சாதிப்பானுங்க! ஒன்னும் சொல்றதுக்கு இல்ல அண்ணே! இந்தியாக்காரன்னா சும்மா இல்லைன்னு ஆச்சரியபட வைச்சாலும் வைப்பானுங்க! சரி! நான் நம்ப ஜோலியைப் பாக்க கிளம்பறேன்.

உள் அமைதிக்கு உகந்த படிகள் - பாகம் 2

Peace Pilgrim - அமைதிப் பயணியை பற்றிய எல்லா பதிகளும் படிக்க இங்கே அழுத்தவும்

ஆன்மீக பாதையில் முன்னேறி செல்லும்போது, பல விதமான மனப் போராட்டங்கள், புயல்கள் எல்லாம் நேரும். முன்பே என் மனம் பக்குவபட்ட நிலையில் இருந்ததால், எனக்கு கொஞ்சம் தீவிரம் குறைந்ததாகவே அந்த புயல்கள் எல்லாம் இருந்தன. 

உங்களின் உள்ளமைதி எங்களுக்கும்
கிடைக்கட்டும் தாயே...


இந்த சுயநல நாட்டம் கொண்ட மனது மிக பயங்கரமான எதிரி. அது அதனுடைய கட்டுப்பாட்டை நிலைநிறுத்த பல விதமாக போராடுகிறது. அது பலவித வஞ்சக முறைகளில் தன்னை காத்துக்கொள்ளும் வழிகளில் இறங்குகிறது. அது உங்களின் பலவீனம் எது என்று அறிந்துக்கொண்டு, சரியான சந்தர்ப்பத்தில் உங்களை தாக்கும். இந்த வித தாக்குதல்களின் போது நாம் பொறுமையோடு இருந்து நம் ஆன்மாவின் குரலை கூர்ந்து கேட்கும் ஆற்றலை பெற வேண்டும்.

இந்த ஆன்மாவின் குரலுக்கு பல அற்புதமான பெயர்களை நமது மதபெரியவர்கள் இட்டு இருக்கிறார்கள். சிலர், the higher governing power, the inner light, or the indwelling Christ என்கிறார்கள். இயேசு பிரான், "The Kingdom of God is within you" என்று சொன்ன போது, அவர், இந்த ஆன்மாவின் குரலைப் பற்றித் தான் குறிப்பிடுகின்றார்.

நான் உள் அமைதிக்கு உகந்த படிகளைப் பற்றி கூறும்போது, அதனை ஒரு கட்டத்தினுள் வைத்தே பேசுகின்றேன். உள் அமைதிக்கு, எத்தனை படிகள் என்பது அறுதியானவை அல்ல. அவரவர் அனுபவத்திற்கு ஏற்ப படிகளின் எண்ணிக்கை மாறுபடலாம். அவற்றை சுறுக்கவோ விரிக்கவோ இயலும்.

உள்முக அமைதி நோக்கிய பார்வை தான், இதில் முக்கியம். அதை எந்த வரிசையில் அமைத்துக் கொள்ளுதல் என்பது அவரவர் விருப்பம். ஒருவருக்கு இசைவான முதற்படி இன்னொருவருக்கு, கடைசிபடியாகவும் இருக்கலாம். உங்களுக்கு எது இயல்பாகவும் எளிதாகவும் உள்ளதோ அந்த வரிசையில் அமைத்துக் கொள்ளலாம். படிப்படியாக நீங்கள் அமைதியை நோக்கி அடி எடுத்து வைப்பீர்களாயின் அது உங்களை மேலே உந்தி இட்டுச் செல்லும்.

இந்த விஷயத்தில், நாம் ஒருவருக்கொருவர் நமது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுவது நல்லது. யாரோ ஒருவர் உங்களை வழிநடத்திச் செல்வதாகப் பாவிக்காதீர்கள். உங்களுக்கு நீங்களே இந்த அமைதி யாத்திரையில் பங்கு பெறுவதாகப் பாவியுங்கள். உங்களிடம் இல்லாத ஒன்றை நான் உணர்த்தி, ஊக்குவிப்பதாக எண்ண வேண்டாம். அந்த விதமாக நாம் செய்யவும் முடியாது. அமைதி பணியில் நாம் நமது அனுபவங்களைப் பகிர்ந்துக் கொள்ளுவதன் மூலம் ஒருவரை ஒருவர் பரஸ்பரம் ஊக்குவிப்போம்.

முதலாவதாக, என்னை தயார்படுத்திக் கொள்ளுதளின் நான் கையாள வேண்டி இருந்தவைகளைப் பற்றிக் குறிப்பிட விரும்புகின்றேன்.

முதலாவது ஆயத்தம்:

வாழ்வு பற்றிய சரியான கண்ணோட்டம் கொள்வதே எனது முதலாவது ஆயத்தமாகும். எதிலும் பட்டுக்கொள்ளாமல் தப்பித்துச் செல்லும் மனப்பான்மையை கைவிடுக! என்பதே இதன் பொருளாகும்.

மேம்போக்காக வாழ்ந்து மேல் மட்டளவிலேயே வாழ்ந்திருப்பதைக் கைவிடுங்கள். இது போன்று பல்லாயிரக்கணக்கான மக்கள் மேம்போக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பின் எந்த ஒரு சுவடும் இல்லாமல் மறைந்தும் விடுகிறார்கள். அவர்கள் இத்தகு வாழ்வில் வெறும் நடைப் பிணங்களாகவே பூமியின் மீது வாழ்ந்து, எந்தவிதமான பாராட்டக்கூடிய குணங்கள் எதுவும் பெறாமலேயே வாழ்வை முடித்தும் கொள்கிறார்கள். அவர்கள் பரிதாபத்திற்கு உரியவர்கள்.

வாழ்வை நேருக்கு நேராக சந்திப்பதில் ஆர்வம் காட்டுங்கள். வாழ்வின் அடிமட்டத்திற்குச் செல்லுங்கள். அங்கு தான் வாழ்வின் பல்வேறு தன்மைகளும், உண்மை நிலைகளும் காணக்கிடைக்கின்றன. இப்பொழுது இங்கு நாம் செய்து கொண்டிருப்பது இவைகளே.

வாழ்வில் நமக்கு முன்வரும் சிக்கல்களைச் சரியான பார்வையில் காணும் மனப்பாங்கு இதில் உள்ளது. முழுக் காட்சியையும் நீங்கள் காண முடியுமேயானால், முழுக் கதையையும் நீங்கள் அறிய முடியுமேயானால், எந்த சிக்கலானாலும், ஏதோ ஒரு குறிக்கோள் இல்லாமல் வருவதில்லை என்பதையும், அவை நம்முடைய உள்முக வளர்ச்சிக்கு உதவாமல் இருப்பதில்லை என்பதையும் நீங்கள் உணர்வீர்கள். இதை உணரும் பொழுது சிக்கல் அனைத்தும் மாறுவேடத்தில் வந்த வாய்ப்புகளே என்பதை அறிவீர்கள்.

வாழ்வின் சிக்கல்களை சந்திக்காமல் இருந்தால், அவைகளால் அடித்துச் செல்லபடுபவர்களாகவும், மன அமைதி இல்லாதவர்களாகவும் இருப்பீர்கள். நம்மிடமிருக்கும் உயர்ந்த ஞானத்தின் தன்மைக்கு ஏற்ப சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதின் மூலமே உள்முக வளர்ச்சி அடைய முடிகிறது.

அடுத்து, உலகுக்கே பொதுவான சிக்கல்களை அனைவரும் ஒன்று சேர்ந்தே களைந்திடல் வேண்டும். உலக அமைதி, உலகளவில் போர் படைகளின் எண்ணிக்கையை குறைப்பது போன்ற பொதுபணிகளில் ஒருவர் தனக்குரிய பங்கைச் செலுத்தாமல் ஒதுங்கியிருப்பவர் உள் அமைதி பெறுவதில்லை. எனவே நாம் அனைவரும் இதுபோன்ற சிக்கல்களைக் கூடிச் சிந்திப்போம்; கூடிப்பேசுவோம்; கூடிச் செயல்பட்டு நல்வழி காணுவோம்.

உள்முகம் நோக்கிய பார்வையில் நீங்கள் மற்றொரு பேருண்மையை காண்பீர்கள். நீங்கள் தனிமைப்பட்டிருக்கவில்லை. பரந்த சிருஷ்டியின் அங்கம் என்பது புலனாகும். உங்களின் பிரச்சனை சமுதாயத்தின் பிரச்சனையுமாகிறது. அது கூட்டுறவை வளர்க்க உதவுகிறது. சமுதாய உறவு உருவாகிறது.


அமைதி தூதுவர் - புத்த பகவான்


பங்காளி! Peace Pilgrim இன்னமும் நமக்கு நிறைய சொல்ல இருக்காங்க... 

சொன்னது வரைக்கும், உங்களை எந்தவிதத்தில பாதிச்சதுன்னு சொல்லிட்டுப் போங்களேன் மக்கா!

23-Sep-2010

வினோத அனுபவங்கள் -1: அமைதி பயணி


Peace Pilgrim - அமைதிப் பயணியை பற்றிய எல்லா பதிகளும் படிக்க இங்கே அழுத்தவும்

அனுபவங்களை சொல்லிக்கொண்டு
இருப்பவர் - அமைதிப்பயணி

என் அமைதி பயணத்தில், சில செயல்கள், சிரமமானதாக ஒன்றும் இருக்கவில்லை. நான் உணவு இல்லாமல் இருக்கவேண்டி இருந்த தருணங்களைப் பற்றி தான் சொல்லுகிறேன். 

தொடர்ந்து 3 அல்லது 4 வேலை உணவுகளை மட்டுமே தவறவிட்டிருப்பேன். நானாக யாரிடமும் உணவு கேட்பதில்லை என்கின்ற கொள்கையை வைத்திருக்கின்றேன். யாராவது எனக்கு உணவு வழங்கினால் உண்பது இல்லையென்றால் பட்டினி இருப்பது என்பதே என் வழக்கம்! 


ஒரு முறை, அதிகபட்சமாக 3 நாட்கள் உணவு இல்லாமல் இருக்க வேண்டிய சூழ்நிலை வந்தது. அந்த நேரத்தில் இயற்கை அன்னை எனக்கு உணவு அளித்தாள். அது மரத்தில் இருந்து கீழே விழுந்திருந்த ஆப்பிள்களின் ரூபத்தில். 


ஒரு முறை, பிராத்தனை கட்டுப்பாடாக 45 நாட்கள் உபவாசம் இருந்தேன். அதனால் எத்தனை நாட்கள் வரை உணவு இல்லாமல் இருக்க முடியும் என்று எனக்கு தெரியும். இப்பொதெல்லாம் என்னுடைய பிரச்சனை, எப்படி அடுத்த வேலை உணவு கிடைக்கும் என்பதல்ல. எப்படி தேவைக்கும் அதிகமாய் கிடைக்கும் உணவை, கொடுப்போரின் மனம் புண்படாமல் மறுப்பது என்பது தான். எல்லோருமே எனக்கு அதிகமாக உணவை கொடுக்கவே விரும்புகிறார்கள். அது ஏன் என்றே தெரியவில்லை!       

எனக்கு, தூக்கம் இல்லாமல் இருப்பது மிகவும் கஷ்டமான செயலாகும். அதிகபட்சம் ஒரு இரவு வேண்டுமானால் தூக்கம் இல்லாமல் இருந்திடுவேன். அதைப்பற்றி பெரியதாக அலட்டிக் கொள்ளமாட்டேன்.

சில நேரங்களில் என் கட்டுப்பாட்டை மீறி, தூக்கம் இல்லாதபடி சூழ்நிலைகள் அமைந்துவிடுகின்றன. ஒரு முறை சரக்கு லாரிகள் நிறுத்தப்படும் இடத்தில், தூங்குவதற்காக சென்றிருந்தேன். அங்கிருந்த லாரி ஓட்டுனர் ஒருவர் நான் நுழைந்ததும், என்னை டி.வியில் பார்த்திருந்தாராம்; அதனால் எனக்கு உணவு வாங்கிக் கொடுத்து பேசிக் கொண்டிருந்தார்.

பின் ஒருவர் பின் ஒருவராக பல லாரி டிரைவர்கள் என்னை சுற்றி நின்றுக் கொண்டு அடுக்கடுக்காக, உள்ளத்தில் அமைதியை வளர்பது எப்படி என்று பலவாறு கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தனர். முழு இரவும் இப்படி அவர்களுடன் பேசிய படியே கழிந்தது. பொழுது விடிந்ததும் காலை சிற்றுண்டியை வாங்கி கொடுத்தனர். அதை உண்டப்பின் அங்கிருந்து கிளம்பினேன். 

இன்னொரு அனுபவத்தினை சொல்கிறேன் கேளுங்கள். ஒரு முறை ஒரு லாரி ஓட்டுனர் என்னிடம், "நீங்கள் ஒருமுறை டி.வியில், நமக்குள் முடிவே இல்லாத சக்தி ஊற்றெடுக்கிறது என்று சொன்னீர்கள் இல்லையா? என் அனுபவம் ஒன்றை சொல்கிறேன் கேளுங்கள்" என்று தனது அனுபவத்தினைக் கூறினார். 

"ஒரு முறை ஒரு டவுன் முழுதுமே வெள்ளத்தால் சூழ்ந்திருந்தது. முதலில் எதுவும் யாருக்கும் உதவி செய்யும் மனமெல்லாம் எனக்கு இருக்க இல்லை. ஆனால் ஏதோ ஒரு சக்தி, வெள்ளத்தால் சிக்கியுள்ளவர்களை காப்பாற்ற என்னை தூண்டியது. நானும் அந்த பணியில் ஆர்வமாகி, பலரையும் வெள்ளத்தில் இருந்து மீட்கும் பணியில் ஈடுப்பட்டேன். பசித் தூக்கம் எல்லாம் மறந்து அந்த சேவையில் என்னை நானே மறந்த நிலையில் முழுவதுமாக ஈடுபட்டேன். எனக்கு சோர்வு என்று எதுவும் ஏற்படவே இல்லை.

ஆனால் இப்போது, அவ்விதமான முடிவில்லாத சக்தி என்னுள் ஊற்றெடுப்பதில்லை. அது ஏன் என்று எனக்குத் தெரியவில்லை.

நான் அவரை, "இப்போது எதன் பொருட்டு வேலை செய்கிறீர்கள்" என்றுக் கேட்டேன். அதற்கு அவர் சிறிது தயக்கத்துடன், "பணத்திற்காகத் தான்" என்று சொன்னார்.அப்படி என்றால், நீங்கள் கூறுவது சரிதான். 


"முடிவேயில்லாத சக்தி, எல்லோருக்கும், நன்மை விளைவிக்கும் செயலில் ஈடுப்பட்டால் மட்டுமே, உங்களுக்குள் ஊற்றெடுக்கும். அந்த சக்தியை அடைய வேண்டுமானால், உங்களின் சிறு எல்லையை பாதுகாக்கும் சுயநலச் சிந்தனையில் இருந்து வெளியே வாருங்கள். நீங்கள் உலகத்திற்கு எதைக் கொடுக்கிறீர்களோ, அது தான் பல மடங்கு பெருகி உங்களுக்கு திரும்பி வருகிறது. இது தான் இயற்கை விதியின் இரகசியம்" என்று சொன்னேன்.

அமைதி தூதுவர் - காந்தி மகாத்மா!


பங்காளி! அமைதிப் பயணி, இன்னமும் நமக்கு நிறைய சொல்ல இருக்காங்க... 

சொன்னது வரைக்கும், உங்களை எந்தவிதத்தில பாதிச்சதுன்னு சொல்லிட்டுப் போங்களேன் மக்கா!    

22-Sep-2010

உள் அமைதிக்கு உகந்த படிகள் - பாகம் 1


நான் உலகத்தை நோக்கிய போது, என்ன ஒரு கொடுமை! ஐயோ! மக்கள் சமூகத்திலே எவ்வளவு வறுமை! என்னிடம் இவ்வளவு அதிகமான பொருட்கள் இருக்கின்றனவே! ஆனால் ஒன்றும் இல்லாமல் அதிகமான என் சகோதர சகோதரிகள் பட்டினி கிடக்கின்றனரே என்று பலநாட்களாக, மனம் வேதனைப் பட்டுக்கொண்டிருந்தது.

வணங்குகிறோம் தாயே!


எப்படியும் இந்த வேதனைக்கு ஒரு தீர்வு கண்டாக வேண்டும். இந்த இயலாமை நிலையின் காரணமாகவும், ஒரு தீவிரமான தேடுதல் காரணமாகவும், கடைசியில் ஒரு வழி கிடைத்தது. நான் மரங்கள் அடர்ந்து இருந்த ஒரு ஒதுக்குப்புறப் பகுதியில் இரவு முழுதும் மனச்சஞ்சலத்துடன் நடந்துக்கொண்டிருந்தேன். வானத்திலே நிலா குளுமையான ஒளி வீசிக்கொண்டிருந்தது. நான் தரையில், மண்டியிட்டு கடவுளை நோக்கி, பிராத்தனை செய்தேன்.

பிராத்தனையின் ஊடே, என் வாழ்க்கையை பிறருக்கு சேவை செய்வதற்காகவே அர்பணிப்பதென்று ஒரு தீர்கமான தெளிவு கிடைத்தது. அந்த முடிவு முழுமையானதாகவும், தீவிரமானதாகவும், இச்சை இன்மை என்பதன் சுவடு சிறிதும் இல்லாததுமாக உணர்ந்தேன்.

கர்தாவே! தயவு செய்து என்னைப் பயன்படுத்திக் கொள்! என்று இறைவனிடம் வேண்டினேன். அப்போது ஒரு ஆழ்ந்த அமைதி என்னுள் குடிக்கொண்டது. இப்போது உங்களுக்கு சொல்ல விரும்புவது என்னவென்றால், அந்த நொடியில் மனம் முழுமையாக மாற்றம் கண்டது. அதிலிருந்து பின்வாங்குதல் என்பது இனி இருக்காது. இனி சுயநல வாழ்க்கைக்கு திரும்பிப் போகவே முடியாது.

அந்த நொடியில் இருந்து என்னுடைய வாழ்வின் இரண்டாவது கட்டத்தில் நுழைந்தேன். என்னால் என்ன முடியுமோ அவைகளை இல்லாதவர்களுக்கு கொடுக்க ஆரம்பித்தேன். நான் அதிசயமான ஒரு உலகத்தினுள் நுழைந்தேன் என்றே சொல்லலாம். அன்றிலிருந்து என்னுடைய வாழ்வு அர்த்தமுள்ளதாக ஆனது. நான் கடவுளின் ஆசியோடு நல்ல உடல் மன ஆரோக்கியத்தை பெற்று வாழ்ந்து வருகிறேன்.

இப்போது எனது உடல் வளமும் உறுதியாகியுள்ளது. அன்று முதல் இன்றுவரை பல்வேறு சிரமங்களுக்கு இடையிலும் எனது உடல் நலம் எந்த வகையிலும் பாதிக்கவில்லை. தலைவலியோ, காய்ச்சலோ, வலியோ இதுவரை தலைகாட்ட வில்லை. இதிலிருந்து நான் அறிந்தது என்னவெனில், உடல் நோய்க்கு முதல் காரணம் உள்ளத்தின் நோய்தான் என்றும், உள்ளத்தின் அமைதியே, உடல் நலத்துக்கு அடிப்படை ஆதாரம் என்பதாகும்.

அன்று முதல் எனது பணி அமைதிப் பணியாயிற்று. நாடுகளிடையே அமைதி, ஜாதி மதங்களிடையே அமைதி, இனங்களிடையே அமைதி, தனிமனிதர்களிடையே அமைதி, இவற்றுக்கெல்லாம் அடிப்படையான உள்ளத்தில் நிலவும் உள்அமைதி ஏற்பட, என்னாலானதைச் செய்வது என்று ஒரு இலட்சியத்தை கடைப்பிடிக்கின்றேன். 


ஆனால், முழுமையாக வாழ்வை அமைதிப் பணிக்காக ஒப்படைப்பதென்கின்ற மனதில் எழும் விருப்பத்திற்கும், நடைமுறையில் வாழ்ந்துவந்த வாழ்க்கைக்கும், பெரிய கடல் அளவு வித்தியாசம் இருக்கிறது என்று அனுபவப் பூர்வமாகக் கண்டேன். முழுமையான ஒரு அமைதி பயணியாக மாறுவதற்கு சிலபல தயாரிப்புக்கள் தேவையாக இருந்தன. இந்த அமைதி பணிக்காக, என்னைத் தயார் செய்ய எனக்கு 15 ஆண்டு காலம் பிடித்தது.

மனோ தத்துவ அறிஞர்கள் இன்று குறிப்பிடும் நான், எனது என்ற அகந்தை (Ego) மற்றும் மனசாட்சி (Conscience) என்பவற்றைப் புரிந்து கொள்ள எனக்கு வாய்ப்புக் கிட்டியது. இதனையே நான், சுயநல நாட்டம் மற்றும் ஆன்மீக நாட்டம் அல்லது கடவுளை மையபடுத்திய நாட்டம் என்று சொல்வேன்.

இந்த இரண்டும் இரு வேறு முரண்பட்ட வெவ்வேறு கண்ணோட்டமுடையவை என்பதும் தெரிய வந்தது. இந்த சுயநல நாட்டம், எப்போதும் தன்னுடைய சுகத்தை பற்றி மட்டுமே சிந்திக்கும் தன்மை கொண்டது. அது பிரபஞ்சம் முழுமையும் தன்னை மைய படுத்தியே சுற்ற வேண்டும் என்று எண்ணுகிறது.

ஆனால் நம்முடைய ஆன்மீக நாட்டமோ, முழுமனித சமூகத்தையே ஒரு உடலாக கொண்டு, தன்னை அந்த உடலின் சிறுக் கூறாக - ஒரு செல்லாக நினைக்கிறது. நீங்கள் உயர்ந்த நாட்டமான ஆன்மீக நாட்டத்தை வளர்த்துக்கொண்டால் உங்களிலும், மற்றவர்களிலும் இசைவை காண்பீர்கள்.

உடல், மனம், உண்ர்ச்சிகள் எல்லாம் கருவிகள் தாம். இவைகளை ஆன்மீக நாட்டம் கொண்ட மனது இயக்கும் போது போராட்டங்கள் வருவதில்லை. உள் அமைதி குடிக்கொள்கிறது. ஆனால் சுயநல மனது இயக்கும் போது போராட்டங்களே வாழ்க்கை என்று ஆகிறது.
அமைதியின் தூதுவர் -இயேசு பிரான்

ஆன்மீக நாட்டம் நம்முள் மிகுதியாகும் வரை கட்டுபாடுகள் மூலம் மனதை அடக்கலாம். நாம் வேண்டாம் என்று நினைத்தும் சில பல காரியங்களில் ஈடுபடுகின்றோம் என்றால் நமக்கு சுயக்கட்டுப்பாடு குறைவாக இருக்கிறது என்று அர்த்தம். நான் அதற்கு ஆன்மீக பாதையில் முன்னேறி செல்வதே சரியான தீர்வென்பேன். அது வரை சுயக்கட்டுப்பாடு தான் சிறந்த வழி!


பங்காளி! இன்னமும் நமக்கு நிறைய சொல்ல இருக்காங்க... 

சொன்னது வரைக்கும், உங்களை எந்தவிதத்தில பாதிச்சதுன்னு சொல்லிட்டுப் போங்களேன் மக்கா!

21-Sep-2010

அமைதியை நோக்கி போகலாமா அப்பு?


பங்காளி! ஒரு தியாக விளக்கை பத்தி சொல்றேன்! சீக்கிரம் வாயேன். அவங்க தியாகத்தை பத்தி தெரிஞ்சிகிட்டா, உனக்கு நல்லது நடக்குமோ என்னமோ? நல்லது நடந்தா சரிதானே? கவனமா கேளு அப்பு!

தியாக சுடர் விளக்கு
Peace Pilgrim - அமைதி பயணி


ஒரு பெண்மணி, 28 வருஷமா தன்னந்தனியா, நடை பயணமாகவே அமெரிக்கா நாடு முழுசும், 25,000 மைல்களுக்கும் மேல நடந்து, கேட்க விருப்ப படுகின்ற மக்கள் கிட்ட எல்லாம் உள்ளத்தில அமைதியை எப்படி வளர்த்துகிட்டு உலகத்து அமைதிக்காக, தங்களால முடிஞ்ச சேவையை எப்படி எல்லாம் செய்யலாம் என்கிறதை பத்தி இடைவிடாம பேசுவாங்க தெரியுமா?  

வழியில யாராவது அவங்களை பாத்து, உணவு கொடுத்தாங்கன்னா வாங்கிப்பாங்க, இல்லைன்னா பட்டினியாவே நடப்பாங்க. அதேப்போல யாராவது அவங்களை பாத்து, தங்க இடம் கொடுத்தா அவங்க வீட்டில இரவில தங்கிட்டு மறு நாள் மறுபடியும் அவங்களோட, அமைதி பயணத்தை தொடர்வாங்க.

அவங்க அமைதி பயணத்தினால பல ஆயிரம் பேர்களுக்கு தூண்டுதலா இருந்திருக்காங்க. அத்தனை பேர்களுடைய உள்ளத்திலேயும் ஒரு ஆழமான பாதிப்பை உண்டாக்கினாங்க.

எளிமையா, ஆனா அதே சமயம், ரொம்ப தீவிரமா இருக்கிற அவங்களோட செய்தி, இப்போ மனுஷங்களுக்கு உடனடி தேவையா இருக்குப்பா. அவங்களோட வார்தைங்க, உலகத்தோட எதிர்காலத்துக்கு ஒரு நம்பிக்கையும் புத்துணர்ச்சியும் கொடுக்குது பங்காளி!

உனக்கு ஒன்னு சொல்றேன் கேளேன்! இவங்க சொல்றதை கேட்டு, உலகத்தில இருக்கிறங்க அட்லீஸ்ட், குறஞ்சபட்சம் ஒரு 20% மக்கள், உள் அமைதியை வளர்த்துகிட்டாங்கன்னா இப்போ வெறும் கனவா இருக்கிற உலக அமைதி, நிஜமாலுமே நடைமுறை சாத்தியமா மாறும். என்ன அப்பு, நம்பமுடியலையா? நிஜம்தான்! அவங்களோட மெசேஜ் அந்த அளவுக்கு ஃபவர்ஃபுள்ப்பா!

பங்காளி! அவங்க நமக்கு ஒரு இயங்கும் உதாரணமாக வாழ்ந்து மறைஞ்சிருக்காங்க. அவங்க கடவுளோட அமைதி தூதுவரா உலகத்தில வாழ்ந்தாங்க.

இப்படி அமைதி யாத்திரை செய்றதுக்கு முன்னாடி, ஒரு 15 வருஷம் அவங்க தன்னை மனசளவுல தயார்படுத்திக்கிட்டு இருந்தாங்க தெரியுமா?

அவங்களோட அமைதி யாத்திரையை 1953 ஆம் வருஷம் ஜனவரி முதல் நாள்ல தொடங்கினாங்க. மனுஷ இனம் அமைதியோட பாதையை புரிஞ்சி, அதில நடக்கிற வரைக்கும், அவங்க நாடு முழுதும் அமைதிக்காக நடந்து திரியறதுன்னு, தனக்குத்தானே ஒரு சங்கல்பம் எடுத்துக்கிட்டாங்க.

அவங்க கால்சட்டை பாக்கட்டில அவங்களுக்கு தேவை படுகிற பொருட்கள் என்னனென்ன இருந்தது தெரியுமா? சொன்னா அப்படியே வாயடைச்சிப்போவே! ஒரு சீப்பு, ஒரு பல் துலக்கும் பிரஷ், ஒரு பேனா அப்புறம் சில கடிதங்க, இவ்வளவு தான் வைச்சிருந்தாங்க. பணம்னு சுத்தமா அவங்க கிட்ட எதுவும் இல்ல.

அவங்க சட்டையோட முன்பக்கம் அமைதிப் பயணி (Peace Pilgrim) என்ற எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தது. சட்டையோட பின்பக்கம் அமைதிக்காக 25,000 மைல் பாத யாத்திரை ("25,000 Miles for Peace") என்ற எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தன. மக்கள் கிட்ட தொடர்பு ஏற்படுத்திக்கொள்றதுக்காக இந்த ஏற்பாடு செஞ்சாங்க.  

1964 ல, 11 வருஷம் கழிச்சி, தன்னோட 25,000 மைல் இலக்கை அவங்க அடைஞ்சாங்க. பல ஆயிரம் பேர்களுக்கு அவங்கள பத்தி தெரிய வந்தது. பல டீவி நிகழ்ச்சிகள்ல, செய்தி தாள்கள்ல, பள்ளிகள்ல, கல்லூரிகள்ல, சேவை அமைப்புகள்ல இப்படி பல இடங்கள்ல அவங்களை கூப்பிட்டு பேச வைச்சாங்க.

அவங்க எப்பவுமே Peace Pilgrim என்கின்ற பேராலத் தான் அழைக்கப்பட்டாங்க. அவங்க உண்மையான பேரை விட இதுவே போதும்ன்னு சொல்லுவாங்க. அப்போ அமெரிக்கா நாடு, பல இடங்கள்ல சண்டை போட்டுகிட்டு இருந்தது. கொரியா போர், வியாட்நாம் போர், ரஷ்யாவோட பனிப்போர் இப்படி பல நெருக்கடிகள் நிறைஞ்சு இருந்திச்சு.

மனுஷன் இப்போ, ஒரு பக்கம் அணு ஆயுத அழிவு, மறுபக்கம் அமைதியின் பொற்காலம் என்று கூரான பாகத்தில நடக்கிறான்ன்னு அவங்க சொன்னாங்க.

அவங்க வாழ்ந்த காலம் முழுக்க உள் அமைதியை வளர்கிறதை பத்தியும் அதனால உலக அமைதையை கொண்டுவர்றதை பத்தியுமே பேசிக்கிட்டு இருந்தாங்க.

ஓய்வில்லாம் நடைபயணம் மூலமா அமெரிக்கா முழுதும், கனடா, மெக்சிகோல எல்லாம் சில பகுதிகளுக்கு அவங்க போய் அமைதிக்கான பிரச்சாரம் செய்தாங்க. அவங்களக்கு சாவு வர்ற நிமிஷம் வரைக்கும் அவங்க நடைப்பயணத்தை கை விடவே இல்லை.


அந்த 25,000 மைல்கள் அப்புறமா, அவங்க நடந்த தூரத்தை எல்லாம் அவங்க கணக்கு வைச்சிக்கவே இல்லை. நடை, நடை, ஓயாம நடை தான்!

திடீர்ன்னு ஒரு சாலை விபத்தில July 7, 1981 அன்னைக்கி இறந்து போனாங்க.

வாழ்க்கை முழுசும் மனித சமூகத்தோட அமைதிக்காகவே வாழ்ந்தாங்க. அவங்க சொன்ன விஷயங்களை வைச்சி சின்ன புத்தகம் My Spiritual Growing Up: My Steps Toward Inner Peace - இலவசமா மென்புத்தகமா வெளியிட்டிருக்காங்க, சில நல்ல இதயம் படைச்சவங்க. அந்த புத்தகத்தை தமிழ்படுத்தி உங்களுக்கு விருந்தா கொடுக்கணும்னு எனக்கு ஆசை.

பங்காளிகளே! அடுத்த பதிவில இருந்து, அந்த புத்தகதை பகுதி பகுதியா, உங்களுக்காக, மொழிமாற்றி எழுதறேன். நீங்கள் எல்லாம் உற்சாகமா வரவேற்பீங்க என்கின்ற நம்பிக்கையோடு. 

நாமளும் தான் கொஞ்சம் உள் அமைதியை வளர்த்துக்கலாமே. நீங்க என்ன சொல்றீங்க? 


உலக அமைதி வளருதோ இல்லையோ, குறைஞ்சபட்சம் எல்லோருடைய வீட்டிலேயும் தங்கமணி, ரங்கமணி சண்டையாவது இல்லாம இருக்கும் இல்ல! நான் சொல்றது சரிதானே அப்பாவி தங்கமணி அக்கா?


தங்கமணி ரங்கமணியோட சண்டைகளை பத்தி தெரியாதவங்க இதை அழுத்தி போய் பாருங்க   முடிஞ்சா அவங்களுக்கு நல்லா புத்திமதி சொல்லிட்டுவாங்க

20-Sep-2010

பங்காளி! நான் சொல்றதை செய்தா மன நிம்மதி Guarantee!


பங்காளி! உனக்கே மனசே சரியில்லைன்னு ஃபோன் செய்த இல்லை. அதுக்கு சில பல காரணங்கள் இருக்குப்பா! நான் சொல்ற விஷயத்தை நல்லா கவனி! அப்புறம் யோசிச்சி நல்ல முடிவா எடு, என்ன?


முதல்ல நாம பார்க்க போறது உடலையும் மனசையும் எப்படி லேசா வைச்சுக்க முடியும்னு தான். அதற்கு பேரு Simple Living!
தமிழ்ல இதை எளிய வாழ்க்கை இல்லைன்னா இயற்கை வாழ்வியல்ன்னு சொல்லலாம்! 

நம்ப தேவையை ஒட்டியே பொருட்களை பயன்படுத்துறது. சரியா பங்காளி? தேவைக்கு மிஞ்சி எதையும் சேர்த்துகறதில்ல; எதையும் வீனாக்குறதில்லை; முடிஞ்ச வரைக்கும் நம்ப சுற்று சூழலை பாதிக்காத வகையில, ஆன்மீக சிந்தனையோடு, ஆரோக்கியத்தை பேணி காக்கிற வகையில வாழ்றது. இந்த சிந்தனை நிறைய பேர்களுக்கு புதுசா இருக்கலாம்!

ஏன்னா இன்னைக்கி பொருட்கள் நுகர்ச்சி என்கிறது, வெறி லெவல்ல எங்கேயோ போயிட்டு இருக்கு! எங்க போய் முட்டிகிட்டு மோதிகிட்டு மண்டை உடைபட்டி நிக்குமோ நம்ப நாகரீகம் தெரியலைப்பா! 

நம்ப காந்தி தாத்தா சொன்னது, உலகத்தில எல்லோருடைய தேவைக்கும் போதுமானபடி பொருட்கள் இருக்கு, ஆனா எல்லோருடைய பேராசைக்கு தகுந்த மாதிரி தான் பொருட்கள் இல்லைன்னு சொன்னாரு.

நம்ப ஆசையை அளவோட வைச்சிக்கிட்டா நோ டென்ஷன்மா கண்ணு! வள்ளுவர் தாத்தா என்ன சொல்றாரு பாரு!

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்

விளக்கம் புரியுது இல்ல? அதாவது எந்த எந்த பொருட்கள்ல இருந்து விலகி இருக்கிறோமோ, அந்த அந்த பொருட்கள் மூலமா வர்ற டென்ஷன் இல்லைன்னு சொல்றாரு.

நீ ஒரு விஷயத்தை நல்லா கவனிச்சி பாத்தா தெரியும்! நம்ப கிட்ட அதிகமா பொருட்கள் சேர சேர, அதுங்களை பராமரிக்கறதுக்கு, அதிகமா செலவு செய்ய வேண்டி இருக்குது. அதனால பல டென்ஷன், மனசுல குழப்பம், ஒரு ஏமாற்றம், பயம்! இதெல்லாம் தேவை தானா?

பாலைய்யா பாடுவாரு இல்ல, பாமா விஜயம் என்கிற படத்தில

வரவு எட்டணா செலவு பத்தணா
அதிகம் ரெண்டனா கடைசியில் துந்தனா துந்தனா துந்தனா 
நிலைமைக்கு மேலே நினைப்பு வந்தால், நிம்மதி இருக்காது, அய்யா நிம்மதி இருக்காது
அளவுக்கு மேலே ஆசையும் வந்தால், உள்ளதும் நிலைக்காது, அம்மா உள்ளதும் நிலைக்காது 

தமாஷாவே உண்மையை எளிமையா
சொல்லிட்டாரு இல்ல... பங்காளி?

எப்படி சிம்பிளா அழகா புரிய வைச்சிட்டாரு பாத்தியா? யோசிச்சி பாரு! நம்ப வாழ்க்கையும் அந்த மாதிரி போகுதா? இல்ல, நல்ல மாதிரி தான் போகுதான்னு! 


உன் பிரச்சனைக்கு காரணம் அளவுக்கு மேல ஆசைப் படறது தான். போதும் என்கின்ற மனமே பொன் செய்யும் மருந்துன்னு சும்மாவா சொல்லிவைச்சாங்க நம்ப பெரியவங்க.

நான் சொல்றதை யோசிச்சிப் பாத்தா, உனக்கே உண்மை புரியும்! எந்த டீவியில படம் பாத்தாலும் பாடாவதி படமாத்தான் பாக்கபோறோம். ஆனா டீவியை விக்க விளம்பரம் செய்றவன், டீவியில படம் பாக்கணும்னா, அதுக்கு LCD TV வாங்குங்கிறான், இல்லை LED TV வாங்குங்கிறான், இல்லை PLASMA TV வாங்குங்கிறான், இல்லை! இல்லை! Latest Technology - 3D TV வாங்குங்கிறான். 

புத்தி உள்ளவங்க சிந்திச்சி செயல்படணும் இல்லையா? எது வீனான ஆடம்பர செலவுன்னு சிந்திச்சி, எது தேவையில்லாத பொருள்ன்னு யோசிக்கணுமா இல்லையா? ஆனா அப்படித் தான் செய்றோமா? பக்கத்து வீட்டுக்காரன், எதிர்த்த வீட்டுக்காரன் ஏதேதோ வாங்கறான்னு, நாமலும் அதையே வாங்கறோம். Peer Pressure என்கிற பேரில, Office-ல லோன் போட்டாவது, பொருட்களா வாங்கி குவிக்கிறோம். 

பங்காளி! எதையும் வீனாக்க கூடாது! ஒவ்வொரு பொருளையும் அதன் முழுமையான பயன்பாட்டினை உபயோகிச்சே ஆகணும். வேஸ்ட் பண்ண நினைசான்னா, வேஸ்ட் ஆகி போயிடுவான் மனுஷன்!

காந்தி தாத்தைவை பத்தி உனக்கு தெரியுமா? அவரு எதையும் வேஸ்ட் செய்யவே மாட்டாரு! டர்ன்னு கிழிச்சி எறிகிற காலண்டர் ஷீட் பின்னாடி கூட வேஸ்ட் பண்ணாம, அவரு சின்ன சின்ன குறிப்புக்கள், அன்றைய தேதியில யாரை பார்கணும், என்ன செய்யனும்னு லிஸ்ட் எல்லாம் அதில எழுதி வைப்பாரு.

ஒரு முறை, அவருடைய ஆசிரமத்தில ஒருத்தரு ஒரு சின்ன குட்டியூண்டு பென்சிலை தொலைச்சிட்டாங்களாம். அவங்களை இவரு தொலைச்சி எடுத்திட்டாராம் தெரியுமா? அந்த குட்டியூண்டு பென்சிலை தேடி கண்டுபிடிச்சி அவர்கிட்ட கொடுக்கிற வரைக்கும் விடைலையாம் நம்ப தாத்தா!

இந்த ஆஸரமத்தில தான் காந்தி தாத்தா, சின்ன பென்சில்
துண்டை தேட வச்சாரு! சமர்மதி ஆஸ்ரம் 

எப்படி இருக்கு பாத்தீயா கதை! உனக்கு இதை கேக்கும்போது ஆச்சரியத்தை தருதோ இல்ல சிரிப்பை தருதோ எனக்கு தெரியல. ஆனா எதையும் வேஸ்ட் பண்ண கூடாதுன்னு ஒரு கொள்கை பிடிப்போடு இருந்தாரு பாரு! அதை நாம பாராட்டியே ஆகணும். அந்த கொள்கை தான் அவரை மஹாத்மாவா மாத்தி இருக்குதுங்கிறேன்.

நீ, நானு எல்லாம் மஹாத்மாவா மாற முடியலைன்னா, போகுது விடு! அதுக்கு நிறைய விஷயம் செய்யணும். ஆனா குறைஞ்சபட்சம் ஒரு நல்ல ஆத்மாவா இருக்க ட்ரை பண்ணலாம் இல்ல! உனக்கும் டென்ஷன் இல்லாம, ஊருக்கும் டென்ஷன் இல்லாம, நாம வாழ்ற பூமிக்கும் டென்ஷன் இல்லாம, நாம வாழ்ந்து முடிச்சிட்டா, அது தானே சந்தோஷம்!

ஒவ்வொரு பொருளை தயாரிக்கிறதுக்கும் இயற்கை வளங்களை அழிச்சித் தான் தயாரிக்க படுது. அதனால இயற்கை அன்னையை முடிஞ்ச வரை டிஸ்டர்ப் பண்ணாம இருந்தா அந்த அன்னை எப்பவுமே சிரிச்சி சிங்காரிச்சி அழகா இருப்பாங்க! நம்பளையும் சிரிக்க வைச்சி சிங்காரிச்சி அழுகு பார்ப்பாங்க!

அவங்களை டிஸ்டர்ப் செய்தோம்னா, அவங்க பத்ரகாளியா மாறி, அவங்க கோபத்தை நம்ப மேலேயே திருப்பிடுவாங்க! அந்த கோபத்தை தாங்கிற சக்தி யாருக்கு இருக்கு சொல்லு பங்காளி? 

இன்னைக்கி கதை அது தானே நடந்திட்டு இருக்கு! சரியானபடி மழை பொழிய மாட்டெங்குது, பொழிஞ்சா வெள்ளக்காடா ஆக்குது ஊரையெல்லாம். வெய்யில் கொடுமையோ நம்பளை சுட்டு எரிக்குது. ரோட்டிலேயே முட்டை ஆம்லேட் போடற அளவுல, நம்பை மண்டையை காய வைக்குது. அதை பத்தி ஒரு அக்கா நல்லா காமெடியா சொல்லி இருக்காங்க பங்காளி. அதை படிக்கணும்னா இது வழியா ஏறி போப்பா!

எந்த பொருளை பயன்படுத்தும் போதும் கவனிக்க வேண்டிய விஷயங்கள்:

Re Duce
Re Use
Re Cycle  

விஷயம் சொல்றது புரியுதா?

பொருட்களோட பயன்பாட்டை குறைச்சுக்கோ!
முடிஞ்ச வரை அவைகளை மறுமறுபடியும் பயன்படுத்து!
அவைகளை மறு சுழற்ச்சி செஞ்சி மறுபடியும், பயன்பட்டுக்கு கொண்டு வா!

இதை எத்தனை பேரு கேக்கிற மனநிலையில இருக்காங்க பங்காளி? இன்னைக்கு மாசம் பொறந்தா 2 செட் புது ட்ரஸ் எடுக்குறாங்க, 3 மாசத்துல்ல ஒரு செல்ஃபோன் வாங்குறாங்க, 2 வருஷத்தில ஒரு முறை காரு பைக்க்னு வாங்கறாங்க, கட்டின பொண்டாட்டி புருஷனை அப்படி ஈஸ்யா மாத்தமுடியலைன்னு நிறைய பேரு தவிக்கிறதா கேள்வி.  

எப்பவுமே புதுசு புதுசா, தினுசு தினுசா, பார்க்கணும், திங்கணும், ட்ரஸ் பண்ணனும்னு நினைக்கிறது ஒரு மனநோய் தெரியுமா? அதோட பேரு Maglomania. இன்னைக்கி அந்த வியாதி, பலபேருக்கு இருக்கும் போல

எனக்கு எப்பவுமே Simple and Sweet தான் Best Policy பங்காளி! என்னை பத்தி சொல்லி இருக்கேனே என்னை பற்றி இங்கேன்னு ஒரு தனி பக்கத்திலே. அதிலே வேணா போய் படிச்சி பாரு. நான் எப்படி பட்டவன்னு உனக்கு நல்லா தெரிய வரும்.

இந்த எளிய வாழ்க்கை வாழறதை பத்தி நிறைய பேசலாம். டாபிக் புடிச்சிருக்கான்னு ஒரு வார்தை சொல்லிட்டு போங்க மக்கா! சந்தோஷபடுவேன்.