பன்னீர் தெளிக்கிறோமில... ப்ளீஸ்... கொஞ்சம் தலை குனியுங்க...

வணக்கம் பங்காளீ! வாங்க, சவுக்கியங்களா? நம்ம வலைபதிவு பக்கம் வந்ததுக்கு நன்றீங்கோ...Get this Widget

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே! என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி! நண்பர்களே!

மனிதர்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் சிந்தனைகள், இங்கு சிதறிகிடக்கிறது. படித்து பார்த்து உங்கள் கருத்துக்களை இடவேண்டுகிறேன்!

தொடர்ந்து, இந்த வலைபதிவுக்கு உங்களின் ஆதரவை தாருங்கள்!!! நன்றி! தொடர்ந்து வருக!!!

இந்த நாள், உங்களுக்கு, இனிய நாளாக அமைவதாக!!!

பாசகார பங்காளி கூட்டமுங்க! நீங்களும் கூட வாறீகளா?

18-Sep-2010

அடுப்பில்லா சமையல் - வெஜிடபுள் அவல் மிக்ஸ் சாதம்

ஹலோ யாரு பேசறது, மாப்பிளயா? நான் தான்பா உன்னோட மச்சான் பேசறேன். எப்படி இருக்கீங்க எல்லோரும்? வீட்டில எல்லோருமே சௌக்கியம் தானே?

தங்கச்சி, குழந்த ரமா எல்லோருமே நல்லா இருக்காங்க இல்ல?

மச்சான்! அட இப்பத்தான் உன்னை நினைச்சிட்டு இருந்தேன். என்னமோ இங்கலீஷ்ல ஒரு பழமொழி சொல்லுவாங்களே ஆங்...Talk of the Devil - and the Devil appears! அதுப்போல இல்ல இருக்கு!  நினைச்சவுடனேயே நீயே ஃபோன் செய்றியே. இங்க எல்லோரும் நல்லத்தான் இருக்கோம்.

மாப்பிள! என்னை இங்கலீஷ்ல என்னனென்னமோ சொல்லி பாராட்டுறீக! ரொம்ப நன்றி! எனக்கு இங்கலீசில, சிங்கிள் பீசும் தெரியலைன்னா கூட உங்க நல்ல மனசு பத்தி தான் தெரியுமே?

(அட அக்க..மக்க.. நான் இவனை பிசாசுன்னு கலாய்கிறேன்.. அதை புரிஞ்சிக்காத மாதிரியே நடிக்கிறதை பாரு! நெஞ்சழுத்தம் புடிச்ச பய!)

என்ன மாப்பு! சைலண்ட் அயிட்ட! என்ன யோசிக்கிற!

மச்சான்! அது ஒன்னுமில்ல! ஏதோ யோசனையில இருந்திட்டேன். சரி அதை விடு! நீ சொல்லி கொடுத்த அடுப்பில்லா சமையல் ரெஸிபிகளோட மகிமையை பத்தி தெரியுமா! இப்ப ஐயாவோட மவுசு ரொம்ப ஏறிபோச்சி! உன் தங்கச்சிக் கூட என்னை பெருமையா பாக்குறான்னா பாறேன்.

மச்சான்! வேற எதாவது அடுப்பில்லாத சமையல் ரெஸிபி இருந்தா சொல்லேன். இப்போ அடிக்கடி வீட்டில பழ சேலட், பேரிச்சை முந்திரி லட்டு எல்லாம் செய்ஞ்சி சாப்பிடறோம். எல்லோருமே நல்லா இருக்குன்னு சொல்றாங்க! (ஹைலைட் செய்த ரெஸிப்பி எல்லாம் "அடுப்பில்லா சமையல்" லேபில்ல இருக்குதுங்க)

என் மவுஸை தக்கவைச்சிறேன்ப்பா! சீக்கிரம் ஏதாவது ஒரு நல்ல ரெஸ்பியை சொல்லு!

சரி வேற ஒரு ரெஸிபியா....ம்ம்ம்ம் யோசிக்கிறேன்ப்பா... சரி சொல்றேன். பேப்பரு எடுத்து எழுதிக்கோ!


இந்த ரெஸிபியோட பேரு வெஜிடபுள் அவல் மிக்ஸ் சாதம்

5 ஆளுங்களுக்கு தேவையானதை சொல்றேன்! நோட் பண்ணிக்கோ!

அவல்               - 500 கிராம்
தேங்காய் துருவல்    - 2 மூடிகள்

காய்கறிகள்:   
பெரிய வெங்காயம்    - 2 
காரட்                - 2
தக்காளி              - 2
வெள்ளரி             - 1
எலுமிச்சை           - 3
இஞ்சி                - 25 கிராம்
கோஸ்               - 100 கிராம்
மிளகுத்தூள், சீரகத்தூள் - கொஞ்சமாக
கொத்தமல்லிதழை
கருவேப்பிலை        - கொஞ்சமாக
குடைமிளகாய்        - 1
உப்பு                 - சுவைக்கு ஏற்றபடி. கொஞ்சம் குறைவா இருந்தா கூட தப்பில்லை மாப்பு!

தயாரிக்கிற முறையை சொல்றேன் பாரு! கவனமா நோட் பண்ணிக்கோ!

அவலை சுத்தம் செய்து கல்லெல்லாம் நீக்கிட்டு, தண்ணியில கழுவி, அப்புறமா நல்ல தண்ணியில ஒரு 10 நிமிஷம் ஊற வைப்பா!


வெங்காயத்தை தோல் நீக்கிட்டு, பொடியா நறுக்கிக்கோ! காரட், தக்காளி, கோஸ், குடமிளகாய் எல்லாத்தையும் கழுவிட்ட பின்னாடி சின்ன சின்ன பீஸா வெட்டு! இஞ்சியை தோல் சீவிட்டு, அதையும் சின்னதா வெட்டிக்கோ! கொத்தமல்லி தழை, கருவேப்பில்லை எல்லாத்தையும் கூட முதல்ல கழுவிட்டு சின்ன சின்னதா வெட்டிக்கோ! எலுமிச்சை பழத்தை பிழிஞ்சி சாறு எடுத்துக்கோ!

ஊறவைச்ச அவல் இருக்கில்ல? அத்தோட இந்த வெட்டிய காய்கறிங்க, தேங்காய் திருகல், இஞ்சி, கொத்தமல்லித் தழை போட்டபின்னாடி, மிளகுதூள், சீரகத்தூள், உப்பு, எலுமிச்சை சாறு எல்லாம் சேர்த்து கிளறிவிட்டா, உன்னோட வெஜிடபுள் அவல் மிக்ஸ் சாதம் ரெடி!

இதை சர்கரை வியாதி காரங்களும் இந்த உணவை தாராளமா சாப்பிடலாம். சமைச்ச சாதத்துக்கு பதிலா ஒரு வேலை இதையே முழுசா எடுத்துக்கலாம். இதுக்கு சைட் டிஷ்-ஆ தேங்காய் சட்டினி, வேற்கடலை சட்டினி ஏதாவது செய்துக்கலாம்

High BP ஆளுங்களும், மலச்சிக்கல் ஆளுங்களும், உடல் பருமனால அவதிபடுறவங்களும், அல்சர், அசிடிட்டி பிராப்ளம் இருக்கிறவங்களும், மூட்டுவலி ஜீரண கோளாறு இருக்கிறவங்க, வயிற்று வலி ஆளுங்களும் அடிக்கடி இந்த அடுப்பில்லா ஆரோக்கிய உணவை சாப்பிட்டு வந்தா, அவங்க நோயிலிருந்து எல்லாம் சீக்கிரம் விடுதலை பெறலாம் மாப்பு!

ரொம்ப நன்றி மச்சான்! இப்பவே செய்து பார்திடறேன். அடுப்பில்லாம சமையல் ரெஸிபிக்களை சும்மா ஃபிங்கர் டிப்ஸ்லேயே வைச்சிருக்கீங்க போல! ஆரோக்கியத்துக்கு குறைஞ்ச பட்சம் ஒரு வேலையாவது சமைக்காத உணவு தான் பெட்டர்ன்னு என்னோட அனுபவத்தில தெரிஞ்சிகிட்டேன்

ஆமாம் மாப்பிள! எனக்கு கூட நண்பர்கள் ஈமெயில் மூலமா, ஃபோன் மூலமா, சமைக்காத உணவை சாப்பிட்டு ஆரோக்கியமா இருக்கிறதா சொல்றாங்க! சரி பேங்கில ஒரு வேலை இருக்கு! அப்புறமா பேசறேன்

நண்பர்களே! உங்க இயற்கை உணவு அனுபவங்கள் இருந்தா பகிர்ந்துக்கோங்க! அது மத்தவங்களுக்கும் பயனா இருக்கும் இல்ல! என்ன நான் சொல்லுறது? 

இயற்கை வாழ்வியல், இயற்கை மருத்துவ பதிவுகளை எல்லோரும் தொடர்ந்து படிச்சிட்டு வர்றீங்க! எனக்கு மகிழ்ச்சியா இருக்கு! இதிலே எதை எதை Follow செய்றீங்கன்னு சொன்னீங்கன்னா சந்தோஷப்படுவேன்.

16-Sep-2010

அசைவம் ஏன் டேஞ்சர்ன்னு தெரிஞ்சதில்ல பங்காளி?போன ரெண்டு பதிவுகள்ல ஏன் மனுஷனுக்கு மாமிசம் ஏத்த உணவு இல்லைன்னு பாத்தோம் இல்ல. இப்போ அதோனோட தொடர்ச்சியை பார்க்க போறோம்.

முதல் பாகத்தை படிக்கணுமா? அப்போ இங்கே அழுத்துங்க!

2வது பாகத்தை படிக்கணுமா? அப்போ இங்கே அழுத்துங்க!

ச்ச்சி... பாவம் இல்ல! இவங்கெல்லாம் மனுஷங்களா?  

சரி பங்காளி! ஒரு விஷயம் கேட்கிறேன், எங்கே பதில சொல்லு பார்க்கலாம்!

மாமிச உணவு சாப்பிடறது பொருளாதார ரீதியா சரியான ஒரு விஷயமா? 

பரவாயில்ல! கொஞ்ச நேரம் எடுத்து யோசி பங்காளி!

ஏதாவது யோசனை வந்ததா? இல்லையா? சரி விடு! எப்பவும் போல நானே இதுக்கும் பதிலை சொல்லிடறேனே!

அமெரிக்காவில எடுத்த ஒரு கணக்கு பத்தி கேளேன்! அந்த நாட்டில இருக்கிற மாமிசத்துக்காக வளர்க்கபடுகிற மாடுங்க, பன்னிங்க, செம்மறியாடுங்க, கோழிங்க எல்லாம் அந்த நாட்டு ஜனதொகை சாப்பிடறத விட 5 மடங்கு அதிகமா தானியங்களையும், சோயா பீன்ஸ்சையும் சாப்பிடுதாம்.

மனுஷனுக்கு ஏன் தான் இப்படி கொலை செய்ற புத்தி வருதோ?
ஆறாவது அறிவு உள்ளவன்னு வேற சொல்லிக்கிறான்!

ஒரு ஏக்கர் நிலத்தில புல்லை வளர்த்து அதை மாடுங்களுக்கு கொடுத்தா கடைசியில கிடைக்கிறது என்ன தெரியுமா? வெறும் 165 பவுண்ட் மாட்டுகறி மட்டும் தான்! அதே ஒரு ஏக்கரில 20,000 பவுண்ட் உருளைகிழங்கு நமக்கு விளைச்சலா பெற முடியும்னு சொல்றாங்க அப்பு! பாத்தியா இந்த அநியாயத்தை!

அமெரிக்கர்கள் மட்டும் அவங்க சாப்பிடற மாமிச அளவில் வெறும் 10% குறைச்சிட்டாலே, உலகத்தில வருஷத்துக்கு உணவில்லாம சாகிற 60 மில்லியன் மனுஷங்களோட பட்டினியை திர்த்திட முடியுமாம்.

கற்பனை பண்ணி பாரு! இன்னும் வர்ற காலத்தில ஜனதொகை கூடுமே தவிர குறைய போறதில்ல. இப்படி அநியாயமா உணவு தானியங்களை விளைவிச்சி விலங்குகளுக்கு கொடுத்து, அதுங்களை சாகடிச்சி, அதில இருந்து கிடைக்கிற மாமிசத்தை எல்லா ஜனதொகைக்கும் கொடுக்க முடியுமா? அது எல்லோருக்கும் பத்தும்படி இருக்குமா? இப்பவே உணவில்லாம பல நாடுகள்ல சாவுறாங்க! இதை பத்தி என்ன நினைக்கிற நீ?

ஏழை நாடுகள்ல ஒரு மனுஷன், ஒரு வருஷத்துக்கு, சராசரியா 400 பவுண்ட் தானியங்களை சாப்பிடறான். அதே பணக்கார நாடுகள்ல 2000 பவுண்ட சாப்பிடறான். என்ன புரியலையா? அதாவது 90% தானியங்களை முதல்ல ஆடு மாடுங்களுக்கு கொடுத்து, பின்னாடி அதுங்களோட கறியை சாப்பிடறான்னு அப்படி சொன்னேன். எப்படி எல்லாம் வேஸ்ட் பண்றாங்க பாரு!

அடுத்த விஷயம், நம்ப சுற்றுபுற சூழல் எப்படி பாதிப்பு அடையுது பாரு!     

விலங்குகளை அறுத்து கூறு போடற இடங்களிலே இருந்து எல்லாம் நச்சுதன்மையோடு கழிவுநீர் வெளியே விடபடுது. அதெல்லாம் ஆறுகள்ல போய் கலக்குது. இதில கொடுமையான விஷயம் என்னான்னா, குடியிருப்புகள்ல இருந்து வெளிபடுகிற கழிவுநீரை விட 10 மடங்கு அதிக நச்சுதன்மையா இருக்காம், இந்த பண்ணைகள்ல இருந்து வர்ற கழிவுநீர்ல.

ஏழைநாடுகள்ல காடுங்க அழிக்கபடுறது பெரிய பிரச்சனையா இருக்கு அப்பு! உதாரணத்துக்கு, இந்தியாவில இன்றைய சூழலில, வெறும் 18% காடு மாத்திரம் தான் இருக்கு! குறைஞ்சபட்சம் 33% காடு இருந்தா தான் நல்லா மழைவளம் இருக்கும்.


காடுங்க அழியறதில முக்கிய காரணம், இந்த கால்நடைங்களை வளர்கிறது தான்னு, சொல்றாங்க விஷயம் தெரிஞ்சவங்க! இதனால் புல் செடிங்க எல்லாம் இல்லாம மழைநீரை தடுக்க முடியாம வெள்ள பெருக்கு அடிக்கடி ஏற்படுது

இன்னொரு கணக்கு சொல்றேன் பாரு! உனக்கு மயக்கமே கூட வரலாம்!


ஒரு பவுண்ட் கோதுமையை விளைவிக்க 60 பவுண்ட தண்ணி இருந்தா போதும். ஆனா அதே ஒரு பவுண்ட் மாமிசத்தை பெற கிட்டதட்ட 6000 பவுண்ட் தண்ணி தேவைபடுதாம். தண்ணிக்காக மூன்றாம் உலக போரே வரலாம்னு சொல்றாங்க! இவங்க என்னடான்னா இப்படி வேஸ்ட் பண்றாங்களேன்னு தோணுதா பங்காளி? 


நீ நல்ல மனுஷன் இல்ல அதனால உனக்கு அப்படிபட்ட நல்ல சிந்தனை தான் தோணும்!

எல்லா மதங்களும் அன்பா இரு! அஹிம்சையை கைகொள்ன்னு சொல்லுது. நாம சகமனுஷங்க கிட்ட அன்பா இருக்கணும்னா, நாம எல்லோருமே சைவம் சாப்பிடறவங்களா தான் இருக்க முடியும். என்ன நான் சொலறது ஏத்துகிற இல்ல?

எல்லோருக்கும் தாத்தா - வள்ளுவர் தாத்தா என்ன சொல்றாரு பாரு!

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்

அர்த்தம் புரியுதா? அதாவது நாம எந்த விலங்கையும் உணவுக்காக கொல்லாம விட்டோம்னா அதுங்க எல்லாம் கையெடுத்து நம்மை கும்பிடுமாம்பா

உனக்கு பெரிய மனுஷங்க நட்பு வேணும்னு சொன்னே இல்ல. அப்போ உடனே சைவமா மாறு! யாரெல்லாம் உனக்கு நண்பர்களா ஆகுறாங்க பாரு! இங்கே ஒரு லிஸ்ட் இருக்கு படிக்கிறேன் கேளு!

Pythogoras, Socrates, Plato, Clement of Alexandria, King Ashoka, Leonardo Da Vinci, Montaigne, King Akbar, John Milton, Sir Issac Newton, Voltaire, Benjamin Franklin, Shelly, Ralph Waldo Emerson, Henry David Thoreau, Leo Tolstoy, George Bernard shaw, Rabindranath Tagore, Albert Schweitzer, Albert Einstein.

கடைசியா இந்த லிஸ்ட்ல இருக்கிறது, நம்ப அன்புக்கு உகந்த, பொக்கை வாய் தெரிகிற மாதிரி சிரிக்கிற நம்ப காந்தி தாத்தா

நண்பர்களே! மூனு பாகங்களையும் பற்றி உங்க கருத்து என்ன? எத்தனை பேரு சைவமா மாறி அப்பாவி ஜீவன்கள் கிட்ட இருந்து தேங்கஸ்சை வாங்கிக்க போறீங்க!  

அட சும்மா மனம் விட்டு சொல்லிட்டு போங்க! நாங்களும் தெரிஞ்சுப்போம் இல்ல, நீங்க என்ன நினைக்கறீங்கன்னு!

15-Sep-2010

பங்காளி! அசைவம்னா... அசையாதீங்க... மாட்டேன்னு மறுத்திடுங்க!போன பதிவுல ஏன் மனுஷன் மாமிசபட்சினி இல்லைன்னு பாத்தோம் இல்ல. இப்போ அதோனோட தொடர்ச்சியா மாமிச உணவு ஏன் நமக்கு சரியில்லைன்னு பார்க்க போறோம்.

முதல் பாகத்தை படிக்கணுமா? அப்போ இங்கே அழுத்துங்க

பங்காளி நீயே சொல்லு, விலங்குகளை கொன்னுதான் நம்ப உடலை வளர்கணுமா? அப்படி ஒரு வாழ்க்கை தான் நாம வாழணுமா? நீ என்னா சொல்றே அதைபத்தி?

பார்க்கவே கஷ்டமா இருக்கில்ல! இவ்வளவு கோராமைக்கு
அப்புறமும் அதுங்களை சாப்பிடணுமா பங்காளி?

இந்த ஆடு மாடுங்களை அறுக்கிற இடங்களுக்கு போனவங்களுக்கு தெரியும், எவ்வளவு கோராமையா அந்த இடம் இருக்கும்னு. இந்த அப்பாவி ஜீவன்கள் மேல வன்கொடுமைகளை உபயோகிச்சி, அதுங்கெல்லாம் வலியால துடி துடிக்க சாகடிக்கிறதை பாத்தோம்னா எந்த கல்நெஞ்சுகாரனும் மனசு இரங்கிடுவான். அப்புறம் ஜென்மத்துக்கும் அசைவ உணவு சாப்பிடற ஆசையே வராது! அப்படியும் ஆசை வந்தா, அவங்களை பத்தி என்ன சொல்ல?

இப்படி இந்த கொடுமைகளை செய்து தான் நம்ப வயித்தை நிறப்பணுமா, நம்ப நாக்கு ஆசைபடுதேன்னு அதுக்கு தீனி போடணுமா? சிந்திச்சி பாரு பங்காளி!

இப்பெல்லாம் பெரிய பெரிய பண்ணைகள்ல நிறைய எண்ணிக்கையில ஆடு, மாடு கோழின்னு வளர்கிறாங்க. அதுங்களுக்கு ஆரோகியமான சூழ்நிலையை அமைச்சி கொடுக்க படுறதில்ல. அதனால பல நோய்களால தாக்கபடுதுங்க. இதை பத்தி எல்லாம் சரியா சோதிக்காம, அப்படி சோதிச்சாலும் அதை கண்டுக்காம விடபடுது.

அதனால அந்த நோய்ங்க எல்லாம் அந்த விலங்குகளை சாப்பிடற மனுஷங்களுக்கு போய் சேர்கிற வாய்ப்பு இருக்கு! வெட்டுபடறதுக்கு முன்னே, விலங்குகளுக்கு, பயம், பதட்டம், பயங்கரமான கோபம்னு பல உணர்ச்சிகள் அதுங்க உள்ளுக்குள்ளே ஓடிட்டே இருக்கும். இதெல்லாம், அவைகளிருந்து கிடைக்கும் மாமிசத்தை விஷ தன்மை அடைய செய்யுது. இப்படி மனுஷனுக்குள்ளே போகிற மாமிச உணவு அவனுக்கு பல நோய்களை இலவசமா சப்ளை செய்யுது. 


என்ன பங்காளி ஒரே யோசனையா பூடிச்சா? இப்பவாவது யோசனை பண்ணு! மூளையை யூஸ் பண்ணாம வைச்சி என்னத்தை சாதிக்க போற?

பறவை காய்ச்சல், பன்றி காய்ச்சல், Mad Cow Disease –ன்னு (இதுக்கு தமிழ்ல என்ன அப்பு?) பல நோய்கள் விலங்குகளிருந்து மனுஷனுக்கு சமீபத்தில தான் வந்தது இல்லையா? அதனால அதை பத்தி மறந்திருக்க மாட்டீங்கன்னு நினைக்கிறேன். இது எதுக்கு? இதுக்கு பேரு தான் நாகரீகமா? விலை கொடுத்து இந்த மாதிரி புதுசு புதுசா நோய்ங்களை ஏன் வாங்கிகணும்? யோசி பங்காளி! நல்லா யோசி!

இன்றைய காலகட்டத்தில, கேன்சர், இதய நோய்கள், உடல் எடை அதிகரித்தல், அல்சர், உயர் இரத்த அழுத்தம், சர்கரை வியாதின்னு மனித இனத்தையே பயமுறுத்துகிற நோய்ங்க எல்லாம் வேகமா பரவிகிட்டு இருக்கு. இதுக்கெல்லாம் மூலகாரணங்கள்ல ஒன்னா அசைவம் சாப்பிடறது இருக்குங்கிறதை யாரும் மறுக்க முடியாது.

அதிகமான மாமிச கொழுப்பை நம்ப உடம்பினால சமாளிக்க முடியாம போகுது. இதனால இதய வால்வுகள் எல்லாம் அடைபட்டு கடைசியில மாரடைப்பு வந்து நிரந்திரமா ஓய்வு எடுக்க போய் விடுகிறான் மனுஷன். அதுவும் பல அவஸ்தைகள் பட்டு முடிவா தான் அந்த ஓய்வு கிடைக்குது!


கோலன் கேன்ஸர், மலக்குடல் கேன்ஸர், மார்பு புற்றுநோய், கர்பபை புற்றுநோய் இதெல்லாம் மாமிச சாப்பிடறவங்களுகே அதிகமா வருதாம்பா! சைவம் அதிகமா சாப்பிடுகிற ஜப்பான்காரங்க, இந்திய நாட்டுகாரங்களுக்கு எல்லாம் அதிகமா வர்றதில்லையாம்.

இப்போ உனக்கு ஒரு கேள்வி வருமே மனசில. ஏன் அசைவம் சாப்பிடறவங்களுக்கு அதிகமா நோய் வருதுன்னு. அதுக்கு ஆன்சர் என்னான்னா, மனுஷனோட குடல், தாவிரபட்சினிய போல நீளமா இருக்கு. மாமிசத்தில இருக்கிற எல்லா நச்சு தன்மையும் உடம்புக்குள்ளாற உரிஞ்சபட்டு நம்ப உடம்புல மெயின் பார்ட்ஸ் எல்லாம் டேமேஜ் ஆகி போகுது.

அது மட்டும் இல்ல அப்பு! இந்த விலங்குகளுக்கு பல விதமான மருந்துங்க, Tranquilizers, ஹார்மோன்கள், ஆண்டிபயடிக்ஸ் எல்லாம் கொடுக்க படுது. இது எல்லாம் மாமிசம் மூலமா மனுஷனுக்கு ட்ரான்ஸ்பர் ஆகுது. இதில என்ன கொடுமைன்னா, இதை பத்தி பேக்கேஜ் மேல எதுவும் சொல்ல தேவையில்லைன்னு அமெரிக்கா போன்ற நாடுகள்ல சட்டமே இருக்காம்.
     
ஒரு பெரிய லிஸ்ட்டே இருக்கு! என்னென்ன நோய்ங்க வருதுன்னு கொஞ்சம் கேளு! Epilepsy, Ulcerative Colitis, Appendicitis, Cartinoma of Colon and rectum, Rheumatoid Arthritism, Gout, Atherosclerosis (பங்காளி மன்னிச்சிக்கோ! இதுக்கெல்லாம் தமிழ்ல என்ன பேருன்னு தெரியல), கிட்னி சம்பந்தபட்ட நோய்ங்க, எல்லாவித கேன்சருங்க, குடல் அழுகல், நோய் எதிர்ப்பு சக்தி குறையறது, தோல் வியாதிகள், மரு, பரு போல பல நோய்ங்க வருது.

ஒற்றை தலைவலி, பெண்களுக்கு மாதவிடாய் சம்பந்தபட்ட நோய்ங்க எல்லாம் கூட அசைவ உணவு சாப்பிடறவங்களுக்கு ரொம்ப ரொம்ப அதிகமா வருது. ஆட்டுகறி கிலோ 300 ரூபாய்ன்னு சொல்றாங்க. அது தப்பு! அதுக்கு நாம கொடுக்கிற விலை நம்மோட அரோக்கியம். 


இவ்வளவு விலை கொடுத்து அந்த அப்பாவி ஜீவன்களோட உயிரை எடுத்து அதுங்க மாமிசத்தை சாப்பிடணுமா? அந்த ஜீவன்களின் சுடுகாடா நம்ப வயித்தை மாத்திக்கிட்டோமே! இது எந்த மாதிரி நாகரீகம்ப்பா! கொஞ்சம் தயவு செஞ்சி எண்ணி பாருப்பா பங்காளி! 

நீ மட்டும் திருந்திட்டேன்னா, அதுங்க எல்லாம், வாயில்லங்கிறதால, மனசால வாழ்த்தும். 

இன்னும் கொஞ்சம் விஷயம் இருக்கு! அடுத்த முறை அவைகளை பற்றி பேசலாம். என்ன சொல்ற பங்காளி? 


இதனுடைய கடைசி பகுதியை படிக்கணுமா? அப்போ இங்கே அழுத்துங்க

உங்க உணவு பழக்கத்தால ஏற்பட்ட நன்மை தீமைகள் என்னென்னனு உங்க கருத்தை சொன்னீங்கன்னா எல்லோருக்கும் பயனா இருக்கும் இல்ல! 

அதனால எல்லோருமே கருத்தை சொல்லிட்டு தான் போகணும்.

14-Sep-2010

நோய்ங்க வேணாமுன்னா... அசைவம் வேணாமுங்க!!!இன்னிக்கி உலகத்தில, சைவ உணவை விட அசைவ உணவத்தான் அதிகமான பேரு விரும்புறாங்க. அதனால நோய்ங்க எல்லாம் அதிகமா இருக்கிறதில ஒரு அச்சரியமும் இல்லை இல்லையா பங்காளி!

உங்களுக்கு எல்லாம் ஒரு விஷயம் சொன்னா Shocking-ஆ இருக்கும். மனுஷனை, கடவுள் அசைவம் சாப்பிடற மாதிரி படைக்கபடல. இதை கேட்டு எல்லோரும் ஷாக் ஆயிட்டீங்களா? காரணம் என்னான்னு சொல்றேன் கேளுங்க. அப்போ உண்மை என்னான்னு விளங்கும்.

இப்படி மனுஷனால வெறும் பற்களையும் நகங்களையும்
வெச்சி வேட்டையாடவே முடியாது... யோசிச்சி பாருங்க!

மனுஷனோட பற்களோட அமைப்பு, தாடை, வயிற்றின் அமைப்பு, குடலின் நீளம் எல்லாம் தாவரஉண்ணி (Herbivorous) விலங்குகளோட அதிகமா ஒத்துபோகுதே தவிர, மாமிசபட்சனிகளோடு கொஞ்சம்கூட ஒத்துபோகல. இந்த பாகங்கள் எல்லாம் மாமிசபட்சினி (Carnivorous) விலங்குகளுக்கு வேற விதமா இருக்கு!

மாமிசபட்சினிகளோட பற்கள் ஒரு விலங்கை பிடிச்சி சாவடிச்சி, அதனோட மாமிசத்தை பிடிச்சி இழுத்து திங்கிற மாதிரி அமைக்க பட்டிருக்கு. (Incisor பற்கள் – கூரிய நீண்ட பற்கள்) மனுஷனால அவனுடைய பற்களும் சரி, விரல் நகங்களும் சரி, அவைகளை மட்டுமே பயன்படுத்தி, வேற ஆயுதம் எதுவும் பயன்படுத்தாம மாமிசபட்சினிகளை போல, எந்த ஒரு விலங்கையும் சாவடிக்கவே முடியாது. மாமிசத்தையும் கடிச்சி, பிடிச்சி இழுத்து பச்சையா சாப்பிடவே முடியாது. (அது எந்த மாதிரி கொடுமையா இருக்கும்னு யோசிச்சி பாருங்க)

மனுஷனுக்கு தாவரபட்சினிகள போல உணவுகுழாய் ரொம்ப பெரிசா இருக்கும். அதனால தாவர உணவு, இந்த குழாய் வழியா பயணபட்டு மலக்குடலை அடையறதுக்கு, பல மணிநேரம் எடுத்துக்கொள்ளும். தாவிர உணவு அவ்வளவு சீக்கிரம் அழுகாது என்கிறதால இந்த உணவோட நீண்ட பயணத்தினால மனுஷனுக்கோ, தாவரபட்சினிகளுக்கோ பிரச்சனை ஏதும் இல்ல.

ஆனா மாமிசபட்சினிகளுக்கு அப்படி இல்ல. அதுங்களோட உணவு குழாய், அளவில சின்னது. அதுங்க சாப்பிடறது மாமிசம் என்கிறதால, அவையெல்லாம் சீக்கிரம் ஜீரணிக்கபட்டு வெளியே தள்ளபட்டுவிடணும்னு தான் இயற்கை அப்படி படைச்சிருக்கு. தாவிர உணவோடு ஒப்பிட்டு பாத்தா மாமிச உணவு சீக்கிரம் அழுகும்னு நமக்கு எல்லாம் தெரிஞ்சது தானே பங்காளி! உணவு ஜீரணம் ஆகும்போதே அழுகினா அது உடம்புக்கு டேஞ்சர்ன்னு தான் இந்த மாதிரி சின்ன அளவுல உணவுகுழாய் அமைப்பு. புரிஞ்சுதா பங்காளி?

அறிவியல் ஆராய்ச்சி செய்றவங்க, மனுஷங்க முதன்முதல்ல தாவிரங்களை மட்டும் தான் உணவா உண்டு வந்திருக்காங்கன்னு ஆராய்ச்சி செஞ்சி கண்டுபிடிச்சிருக்காங்க. அவனுடைய உடல், மன அமைப்பு இயற்கையா அப்படி தான் இருக்கு.

மாமிசபட்சிகள் கோபமாவும் ஆக்ரோஷமாகவும் இருக்கிறதை நாம பாத்திருக்கோம் இல்ல. ஆனா தாவிரபட்சிகள் சாந்தமா இருக்கிறதும் நமக்கு தெரியும். மனுஷனோட இயல்பும் இயற்கையா சாந்தகுணம் தான். நாம தான் மாமிச உணவா சாப்பிட்டு சாப்பிட்டு, ‘உள்ளே மிருகம் தூங்குது..வேணாம் அதை தட்டி எழுப்பாதேன்னு டயலாக் பேசிட்டு இருக்கோம்.

சரி ஒரு கேள்வி கேட்கிறேன் பங்காளி! அதுக்கு பதிலை சொல்லு! உணவோட நோக்கம் தான் என்ன?

பதில் தெரியலையா! சரி நானே சொல்லிடறேன். உணவோட நோக்கம் சும்மா வயித்தை நிறப்பறதோ, இல்லன்னா நாக்கோட ஆசையை தீர்கறதோ இல்ல. அதோட உண்மையான நோக்கம் உடலுக்கு ஆரோகியம் கொடுத்து மனுஷனோட மனசையும், குணத்தையும் நல்ல விதமா வளர செய்றது தான்.

உனக்கு ஒன்னு தெரியுமா? உணவு தான் மனுஷனோட குணத்துக்கு அடிப்படை. அதனால, உணவுல, நம்ப நோக்கம் எப்படி இருக்கணும்னா, நம்மோட உடலுக்கும், மனசுக்கும் ஆரோகியம் கொடுத்து, ஆன்மீக தன்மையை நமக்குள்ள வரவழைச்சி, அன்பை, இரக்கத்தை, அமைதியை, அஹிம்சையை, நோக்கி நம்மை வழிநடத்துறமாதிரி இருக்கணும் அப்பு!


அன்பின் வடிவமான இயேசு பெருமான் சொல்றதை கேளுங்க! Man shall not live by bread alone, but by every word that proceedth out of the mouth of God   

இந்த வாக்கியத்தோட அர்த்தம் சாப்பிடறதுக்காக வாழாதே! சாப்பாட்டு ராமானா இருக்காதே! வாழறதுக்காக சாப்பிடுன்னு சொல்றாரு! அதுவும் தெய்வீகமான வாழ்வு வாழ சொல்றாரு! அவரு சொல்றது சரி தானே?


இது சம்பந்தமா இன்னும் கொஞ்சம் விஷயம் இருக்கு (இன்னமும் 2 பகுதிகள்) நாளையும், நாளை மறுநாளும் இதை பத்தி அவைகளை பற்றி பேசலாம். நீங்க எல்லோரும் கண்டிப்பா வந்திடுங்க! வருவீங்க இல்ல?

உங்க உணவு விஷயத்தால ஏற்பட்ட நன்மை தீமைகள் என்னென்னனு உங்க கருத்தை சொன்னீங்கன்னா எல்லோருக்கும் பயனா இருக்கும் இல்ல! 

அதனால எல்லோருமே கருத்தை சொல்லிட்டு தான் போகணும்.


இதனுடைய அடுத்த பகுதியை படிக்கணுமா அப்போ இங்கே அழுத்துங்க

13-Sep-2010

காபி குடிக்கலைன்னா கையும் ஓடமாட்டேங்குது காலும் ஓடமாட்டேங்குது!


இந்த லஷ்மி எங்கே போய் தொலைஞ்சான்னு தெரியலையே?

ஏன் மாமி? என்ன ஆச்சி? வீட்டில நுழையும் போதே ஒரே புலம்பலா இருக்கே?

வாடி அம்மா ரமா! வா! நீயே நியாத்தை சொல்லு! இப்போ மணி என்னா ஆறதுன்னு பாரு! காலை 11 மணி ஆகுதில்ல! இந்த ஆத்து மாட்டுபொண்ணு லஷ்மி இருக்காளோ இல்லையோ! சித்த நாழி இருங்கோ மாமி! நான் கடைக்கு போயிட்டு வந்திடறேன்னு சொல்லிட்டு போனா! இன்னும் ஆளையே காணலை!

எனக்கானா 11 மணிக்கு காபி குடிக்கலைன்னா தலையே வெடிச்சிடும்னு நோக்கு தான் நல்லா தெரியுமே. சரி, நாமலே சமயகட்டுக்கில, காபி கலந்துக்கலாம்னா, நேக்கு வரவர சரியா கண்ணே தெரிய மாட்டேங்குறது!

அம்மணிகளா! காபியோட வில்லத்தனம் என்னான்னு
தெரியாமா சிரிச்சிகிட்டு இருக்கீங்க...

மாமி! சித்த இருங்கோ! உங்களுக்கு நான் காபி கலந்து எடுத்து வர்றேன்.

தேங்க்ஸ்டி ரமா! நீ நன்னா 100 வருஷம் சந்தோஷமா இருப்பே!

இந்தாங்கோ காபி! நீங்க என்ன சொன்னேள்? நான் 100 வருஷம் நல்லபடியா இருப்பேன்னு சொன்னேள் இல்லையா? அது பலிச்சிடும் மாமி!

ஏன்னா நான் கொஞ்ச நாளா, காபி, டீன்னு எதுவும் சாப்பிடறதில்லை பாத்துக்கோங்கோ!

நீங்களானா இப்படி அடிக்கடி காபி குடிச்சி உடம்பை கெடுத்துக்குறேள். அது குடிக்கிற காபியா இல்ல கடையில போடற xerox copy-யா மாமி? ஒன்னு பின்னால ஒன்னு உள்ளே தள்ளின்டே இருக்குறேளே? ஒரு நாளைக்கி எத்தனை முறை தான் காபி குடிப்பேள்? உங்க உடம்பு பாழாகுறது, உங்களுக்கு தெரியலையா மாமி?  

என்ன ரமா சொல்ற? எனக்கு ஒன்னும் விளங்கமாட்டேங்குது! சித்த விளக்கி சொன்னா தேவலை!

சரி சொல்றேன் கேளுங்கோ மாமி! காபி, டீ குடிக்கறவா எல்லாம் என்ன சொல்றா, காபி, டீ குடிச்சா, உடனே ஒரு புத்துணர்ச்சி வருதுன்னு சொல்றாளா இல்லையோ?

அதெல்லாம் காபி டீல இருந்து வர்றதில்லை மாமி! எல்லாம் நம்ப உடம்பில ஏற்கனவே சேர்த்து வெச்சிருக்கிற சக்தியில இருந்து வர்றது. இந்த பாணம் எல்லாம் அந்த சக்தியை தூண்டி விட்டு ஏதோ ஒரிஜினலாவே சக்தியை கொடுக்குற மாதிரி ஆக்டிங்க் கொடுக்குது!

இந்த சேர்த்து வெச்சிருக்கிற சக்தி எதுக்குன்னா, நாம ஏதாவது நோய்வாய் படும்போது, அதை எதிர்த்து போராடுறதுக்காக ஒரு முன்யோசனையோடு நம்ப உடம்பு சேர்த்து வெச்சிருக்கு! நியாயமா அதற்காக தான் பயன்படுணும். 

அந்த இருப்பிலேயே கையை வெச்சா, இது ஏதோ விதை நெல்லை சமைச்சி சாப்பிட்டானாம் ஒரு புத்தி கெட்டவன். அந்த கதை மாதிரி தான் இதுவும்.

நாளடைவில, நரம்பு தளர்ச்சி நோய், சீக்கிரமா முதுமை வர்றது, வயித்தில அசிடிட்டியை கூட்டுறதுன்னு ஏகபட்ட நோய்ங்க செட் சேர்ந்து நம்பளை தாக்க வந்திடும் மாமி! காபிலேயும் டீலேயும், Caffine என்கிற நச்சுபொருளும், Tannin என்கிற நச்சுபொருளும் இருக்காம். அதுங்க நமக்கு பல நோய்ங்களை பிரசண்ட் பண்ணாம நம்ப கிட்ட இருந்து போகாது தெரிஞ்சிகோங்கோ மாமி!

நம்ப எதிர்த்த வீட்டு கோமளா இருக்கா இல்லையா மாமி! அவளுக்கு ஏதோ தூரத்து உறவாம், பேரு கூட உங்க மகன் பேரு தானாம் வசந்த்ன்னு பேரு. உறவுகாரன்னு ஒரு வலைபதிவு ஆரம்பிச்சி இயற்கை வாழ்வியல், இயற்கை மருத்துவம் எல்லாம் எழுதினு வர்றாறாம்.

(மாமி! நம்பளை பத்தி தான் சொல்லிட்டு இருக்காங்கோ! கவனமா கேளுங்க! நானும் அவங்க என்ன சொல்றாங்கன்னு கேக்குறேன்)

அதில பால் ஏன் குடிக்க கூடாதுன்னு எழுதி இருக்காரு. நானும் படிச்சேன். (நீங்க படிக்கலையா அப்போ இங்கே அழுத்துங்க ) அன்னையில இருந்து பாலோ, பாலில இருந்து கிடைக்கிற பொருட்களோ தொடறதில்லை. காபி, டீ குடிக்கறதையும் விட்டாச்சி! அவரு எழுதினதை எல்லாம் பிரண்டஅவுட் எடுத்து வெச்சிருக்கேன். உங்களுக்கு சாயங்காளமா கொண்டு வந்து கொடுக்கிறேன் மாமி! நிதானமா படிச்சி பாருங்கோ.

ரமா, நீ சொல்றது வாஸ்தவமா இருக்கும்னு தான் தோனுது. ஆனா இந்த பழக்கத்தை லேசில விட முடியாதுடி! இந்த பழக்கத்துக்கு அடிமையானவங்களை நிறைய பேரை பாத்திருக்கேன் என் அனுபத்தில. ஆவாள் எல்லாம் இதை விட்டு வெளியே வர்றதுக்கு ரொம்ப சிரமம்ன்னு சொல்றா தெரியுமோ?

மாமி! கொஞ்ச காலத்துக்கு முந்தி, நானும் நீங்க சொல்றவங்கள்ல ஒருத்தியா தான் இருந்தேன். இப்போ பாத்தேளா? காபி டீயை விட்டபின்னாடி நான் எவ்வளவு தெம்போடு இருக்கேன். மனமிருந்தா மார்கம் உண்டுன்னு பெரியவா சும்மாவா சொல்லி இருக்கா?

உங்களுக்காக, காதி க்ராப்ட் கடையில இருந்து மூலைகை பாணம் பொடி வாங்கி வரசொல்றேன், என் ஆத்துகாரர்கிட்டே. காபி, டீக்கு பதிலா அந்த பொடியை சுடுதண்ணியில கலந்து சுவைக்கு வெல்லம் போட்டு குடிங்கோ மாமி! கொஞ்சம் கொஞ்சமா இந்த பழக்கத்தில இருந்து விடுபட்டிடலாம்.    

என்னமோடி அம்மா! நீ சொல்றதால கேக்குறேன். நீ சொல்ற மாதிரியே செய்து தான் பார்ப்போமே! உடம்பு ஆரோகியம் முக்கியமான விஷயம் தானே?

மாமி! காபி குடிக்கிறதை விட்டுட்டாங்க! ரொம்ப நல்ல விஷயம்! நண்பர்களே! இப்போ உங்க கதை என்ன? எப்போ இந்த பழக்கத்தை விடறதா இருக்கீங்க?

சும்மா கீழே கருத்து பெட்டியில சொல்லிட்டு போங்க!

12-Sep-2010

இயற்கை மருத்துவம் குடியை கூட மறக்கடிக்குமா? ஆச்சரியம்தான்!

நான் ஒரு குடிக்காரனாக இருந்தேன்

எதற்கோ குடிக்க ஆரம்பித்தேன். விட முடியவில்லை. தொடர்ந்து குடித்தேன். பின் குடிப்பதிலேயே ஆராய்ச்சி செய்வோம் என்று ஆராய்ந்தேன். குடியை மட்டும் என்னால் விடமுடியவில்லை.

மூச்சி முட்டற அளவு குடிச்சா எப்படி மக்கா...!!!
லிவர் போனா பரவாயில்லையா???

எந்த முயற்ச்சி செய்தும் குடிபழக்கம் தொடர்ந்தது. என்னுடைய புண்ணியபலன் தான் என்று நினைக்கின்றேன். எனக்கு இயற்கை வாழ்வியல், இயற்கை மருத்துவத்தின் அறிமுகம் கிடைத்தது. 


என்ன ஒரு ஆச்சரியம் பாருங்கள்! இயற்கையுணவு சாப்பிட ஆரம்பித்த 43ஆவது நாளிலிருந்து குடிப்பழக்கம் தன்னாலே போய்விட்டது. இனி, என்னால் குடிக்கவே முடியாது. எனதுடலின் செல்கள், உணவுக்குழாய், எண்ணங்கள் எல்லாம் மாறி விட்டதை உணர்கிறேன். எனவே உடலுக்கு – ஆன்மீக உடலுக்கு ஒத்துக் கொள்ளாத உணவோ, குடியோ, போதைப் பொருட்களோ எதுவானாலும் எனது உடல் ஏற்றுக் கொள்ளாத சூழ்நிலை உருவாகி விட்டது.

இறைவனுக்கு, இறையுணவாகிய இயற்கையுணவிற்கு நன்றி! எனது குடிபழக்கம் அதுவாக என்னை விட்டுச் சென்று இன்றுடன் 53 நாட்கள் ஆகிவிட்டன.

10 நாட்களுக்கு முன் ஒரு விபத்து நடந்துவிட்டது. 15அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தேன். இடது காலில் மூட்டுக்குக் கீழே வலியாக இருந்தது.

2 நாட்கள் கழித்து இடது கால் அரையில் வீக்கம் (நெறிகட்டு) ஏற்பட்டது. அதிகாலை 4 மணியிலிருந்து பயங்கரக் குளிர் காய்ச்சல். போர்வை எடுத்து மூடிக் கொண்டேன். என்னால் நிற்கக் கூட முடியவில்லை. பின்பு, டாக்டர் கூறியபடி 4 முறை அஹிம்சை எனிமா எடுத்து கொண்டு (அஹிம்சை எனிமாவை பற்றி தெரியாதவர்கள் இங்கே அழுத்தவும்) எல்லா கழிவுகளையும் வெளியேற்றினேன்.

பின் 6 தம்ளர் தண்ணீர் அருந்தினேன். உடனே பாதி சுகம் தெரிந்தது. பிறகு காலை 5 மணிக்கு பச்சைத் தண்ணீரில் குளித்தேன். காய்ச்சல் 102 டிகிரி இருந்தது. என்ன தான் நடக்கிறது என்று பார்த்து விடுவோமே! ஒன்று காய்ச்சல் குணமாகி நான் புதிய தெம்புடன் இருக்க வேண்டும், அல்லது எது நடப்பினும் பரவாயில்லை என்று நம்பிக்கையுடன் செயல்பட்டேன். என்ன ஆச்சரியம்! 6 மணிக்கு காய்ச்சல் ஓடிவிட்டது. புது உற்சாகம்! புது தெம்பு! என்ன ஒரு அற்புதமான மருத்துவம்! அதோடு சேர்ந்து தலைவலியும் இருந்தது. அதுவும் பறந்து விட்டது.

எனக்கு ஏற்பட்ட புண்களை கூட தேங்காய் எண்ணெய், புற்றுமண், எலுமிச்சை தோல் வைத்து தேய்த்து வெயிலில் காய்ந்து, இயற்கை மருத்துவம் முறையில் குணமாக்கி கொள்கின்றேன். புண்களை கூட வெறும் இயற்கை மருத்துவம் மூலமே குணமாக்கி கொள்ளும் தைரியம் எனக்கு கிடைத்துவிட்டது

செலவில்லாமல் நோய்களை குணமாக்கி கொள்கிறேன். மிகுந்த விவேகம் கிடைத்து வருகிறது. ஆனந்தத்திற்கு அளவே இல்லை. மொத்தத்தில் விவேகானந்தர் வேண்டிய இளைஞர்களை உருவாக்க இறையுணவாகிய இயற்கையுணவு மிகுந்த பங்கு வகிக்கப் போகிறது.

‘எனது இளைஞர்கள் இரும்பைப் போன்ற தசைகளையும் உருக்கு போன்ற நரம்புகளையும் இடியோசை கேட்டு அஞ்சாத மனவலிமையையும் பெற்று எதற்கும் துணிந்த ஆண்மையிளம் சிங்கங்களாகத் திகழ வேண்டும் என்று கேட்டாரே!

அப்படிபட்ட துடிப்பு மிக்க புதுயுக இளைஞர்களை உருவாக்க இயற்கையுணவால் முடியும். எல்லாம் ஒன்று! காணுகின்ற எல்லாம் இறைவனே என்னும் எண்ணமும், எல்லா உயிரிடத்தும் அன்பு காட்டுங்கள் என்று வள்ளலாரின் கண்டுபிடிப்புகளும், எல்லோரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள்தான் என்ற எண்ணமும் வலுப்பெற இயற்கையுணவே தேவை.

எல்லோருள்ளும் இருப்பது ஒரு ஆன்மா தான். எல்லோரும் ஒன்று தான். ஆன்மாவை இணையுங்கள். அதை இணைப்பது இயற்கையுணவு தான்.

மதங்களால் முடியாததை, கட்சிகளால் முடியாததை, சாதிகளால் முடியாததை, வெறும் வார்த்தைகளால், பாட்டுக்களால், நூல்களால் முடியாததை “இயற்கையுணவு செய்யும். 

குறிப்பு: இந்த அனுபவ மடல் இயற்கை உணவே நோய் தீர்க்கும் மருந்து என்கின்ற புத்தகத்தில் இருந்து எடுத்தாளபட்டிருக்கிறது. இதன் ஆசிரியர். திரு. மூ.ஆ. அப்பன் அவர்கள். புத்தக பதிப்பாளர் - இந்து பப்ளிகேஷன்ஸ், சென்னை

இந்த அனுபவ மடலை எழுதியவர்: 

திரு. பி.எம்.என். பாலகிருஷ்ணன். M.Sc., B.Ed.,
உயிரியல் ஆசிரியர்,
காரப்பேட்டை நாடார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,
தெற்கு காட்டன் ரோடு, தூத்துக்குடி - 1  

நண்பர்களே! இவரின் அனுபவத்தை பற்றிய உங்களின் கருத்து என்ன? சொல்லிட்டு போங்களேன்.

ஓட்டு போட்டு போனீங்கன்னா, பலருக்கும் இந்த தகவல் சென்று அடைய பயனா இருக்கும்!