பன்னீர் தெளிக்கிறோமில... ப்ளீஸ்... கொஞ்சம் தலை குனியுங்க...

வணக்கம் பங்காளீ! வாங்க, சவுக்கியங்களா? நம்ம வலைபதிவு பக்கம் வந்ததுக்கு நன்றீங்கோ...Get this Widget

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே! என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி! நண்பர்களே!

மனிதர்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் சிந்தனைகள், இங்கு சிதறிகிடக்கிறது. படித்து பார்த்து உங்கள் கருத்துக்களை இடவேண்டுகிறேன்!

தொடர்ந்து, இந்த வலைபதிவுக்கு உங்களின் ஆதரவை தாருங்கள்!!! நன்றி! தொடர்ந்து வருக!!!

இந்த நாள், உங்களுக்கு, இனிய நாளாக அமைவதாக!!!

பாசகார பங்காளி கூட்டமுங்க! நீங்களும் கூட வாறீகளா?

01-Sep-2010

பழ சேலட் ரெடி! சாப்பிட வாறீகளா! இது இயற்கை உணவுங்க!!

“உணவே மருந்து! இது தானுங்க, இயற்கை மருத்துவ சிகிச்சையோட மந்திர சொல்லே! அதனால நாம இயற்கை உணவை பத்தியும் தெரிஞ்சுக்ணும் என்கிறதால சில இயற்கை உணவு ரெஸிபிகளை எப்பவெல்லாம் நேரம் கிடைக்குதோ அப்போ நானு சொல்றேனுங்க. சரியா அப்பு?

நான் சொல்ல போற ரெஸிபிகள் எல்லாமே அடுப்பில்லா சமையலுங்க! என்னாது அடுப்பில்லாம சமையலான்னு ஆச்சரியப்படுறீங்களா? உண்மை தாங்க, போன முறையே சொன்னேன் இல்ல, சமைக்கும் போது, என்னா ஆகுதுன்னா... காய்கறி, தானியங்களில் இருக்கிற இயற்கையான ஊட்ட சத்து உருமாறி நச்சு தன்மை, அதனோட கலந்து விடுதுங்க.

சரி, இத கொஞ்சம் கேளுங்க!

அடுப்பில்லா சமையலுங்க! இது ஆரோகிய சமையலுங்க!
ஆம்பள பொம்பள, யாரும் செய்யலாம்
இது ரொம்ப ஈஸிங்க!
இது அடுப்பில்லா சமையலுங்க! இது  ஆரோகிய சமையலுங்க!

(என்ன அப்பு! பாட்டாவே படிச்சிபுட்ட! சும்மா அசத்தற நீ!! நல்ல மூடில இருக்கீங்க போல)

(சரி சரி! அடுப்பில்லாத சமையலாமே! யாராவது, பெட்ரொலிய துறை மந்திரிக்கு சீக்கிரம் சொல்லுங்கங்கப்பா! அவரு ரொம்ப சந்தோஷபடுவாரு! பின்ன, சமையல் காஸ் சிலிண்டருக்கு, மானியத்தை குறைக்க முடியாம கஷ்டபடறாரு இல்ல!)

சரி விஷயத்துக்கு வருவோம்! இன்னைக்கு பார்க்க போறது பழ சேலட்
பார்க்கும் போதே நாக்கில எச்சில் ஊறுது இல்ல...
சமையல் சமாச்சாரமான்னு ஏன் ஒதுங்கிபோறீங்க மாப்பு! தங்கச்சிக்கு உடம்பு சரியில்லாம போகும்போது நீங்க, நான் சொல்லி தர்ற ரெஸிபிய செஞ்சி அசத்தலாம் இல்ல! எல்லாமே ரொம்ப ஈஸி. அடுப்பில்லாத சமையல் என்கிறதால கைய சுட்டுபீங்க என்கிற பயமும் இருக்காது!

பொம்பளங்க எல்லாம் என்னமா சமைச்சி அசத்துறாங்க! நீங்க ஆம்பள சிங்கம்! இதை ரொம்ப ஈஸியா கத்துகலாம். என்ன மாப்பு! இப்போ இண்டிரஸ்ட் வந்திடுச்சி இல்ல?

சரி நல்லா கவனீங்க! ஒரு 5 பேருக்கு போதுமான படி ரெஸிபி சொல்றேன்

ஆப்பிள், வாழைபழம், திராட்சை, பேரீட்சை, மாம்பழம், பப்பாளி, சப்போட்டா, ஆரஞ்சு, மாதுளை, கொய்யா

இப்படி வகைக்கு 100 கிராம் எடுத்துக்கலாம். இல்லைன்னா மொத்தம் சேர்த்து 1 கிலோ வர்ற மாதிரி எடுத்துக்கோங்க.
தேன் இல்ல வெல்லம் – 100 முதல் 200 கிராம்
முந்திரிப்பருப்பு        - 50 கிராம்
ஏலக்காய் தூள்        - கொஞ்சமா
தேங்காய் திருகல்     - பாதி கைபிடி அளவு

தயாரிக்கிற முறைங்க:
ஆப்பிள், கொய்யா பேரீட்சை, மாம்பழம், பப்பாளி, சப்போட்டா போல சன்னமா தோல் இருக்கிற பழங்களை தோல் நீக்க தேவையில்லை.

பழங்களை நல்லா கழுவிட்டபின்னாடி, சின்ன சின்ன துண்டுகளா வெட்டி கொட்டைகளை நீக்கிடனுங்க. பப்பாளியை தோல் சீவி, விதைங்களை எடுத்த பின்னாடி சின்ன சின்ன துண்டுகளா வெட்டிகோங்க. வாழைபழத்தை கூட தோலை உரிச்சி பழத்தை சின்ன சின்ன துண்டுகளா வெட்டிகோங்க. உங்களுக்கே தெரியும்! மாதுளை பழத்தில இருந்து வெறும் முத்துக்களை மட்டும் எடுத்துகோங்க

வெட்டிய எல்லாப் பழங்களையும் கலந்து அதன் கூட தேன் இல்லன்னா வெல்லத்தூள், முந்திரி, ஏலக்காய்தூள், தேங்காய் திருகல் எல்லாத்தையும் சேர்த்து கலறி விட்டா பழ சேலட் ரெடி! (தலைப்புக்கு சம்பந்தமில்லாம எழதறேன்னு யாரும் சொல்லிட கூடாதில்ல! அதனால தான் தலைப்பு, மேட்டரில வந்திருச்சின்னு காண்பிக்க Bold செய்திருக்கேனுங்க) 

ஆஸ்துமா, சளித்தொல்லை, சர்கரை நோய் இருக்கிறவங்க நல்லா உபவாசம் இருந்து நோய் கட்டுபாட்டுக்கு வந்தபின்னாடி இந்த பழ சேலட்டை சாப்பிடலாமுங்க

அடிக்கடி இந்த மாதிரி செஞ்சி சாப்பிட்டீங்கன்னா, மலசிக்கல், குடல்புண், பசியின்மை எல்லாம் சரியாகுங்க. தொந்தி தொப்பை ஆசாமிங்க சாப்பிட்டா அவங்க தொப்பை குறையும், மூலச்சூடு, சிறுநீர் எரிச்சல் எல்லாமும் கூட சரியாகுங்க.

(இது சாப்பாட்டுக்கு முன்னவா இல்லை பின்னாடி சாப்பிடணுமா? சொல்லலீயே?)

பங்காளி இது தான் சாப்பாடே! கண்டிப்பா ஒரு வேலை சாப்பட்டை, இப்படி தான் இயற்கை உணவா சாப்பிடணும் தினமும். தெரிஞ்சுதா?)

தொடர்ந்து இந்த பழ கலவையை சாப்பிட்டு வந்தீங்கன்னா, கண் பார்வை நல்லா மேம்படுங்க. மூட்டுவலி, வாயு தொல்லை எல்லாமும் கூட குணம் ஆகுமுங்க.

இதில கவனிக்க வேண்டிய விஷயம் என்னான்னா...

இயற்கை உணவு தயாரித்த கொஞ்ச நேரத்திலயே சாப்பிடுங்க
பழங்களை, வெட்டிய பின்னாடி கழுவ கூடாது, வெட்டுறதுக்கு முன்னாடியே நல்லா கழுவிக்கணுமுங்க.

நல்லா மென்னு சாப்பிடனுங்க. ஜீரணம் செயல்பாடு வாயிலிருந்தே ஆரம்பிக்கிறதாமே! உங்களுக்கு தெரியுமா?

இந்த மாதிரி இயற்கை உணவில, Chemical Essence, Colour Powder, Ice எல்லாம் சேர்காதீங்க!

எப்படி ரெஸிபி பிடிச்சிருக்கா மாப்பு! என்னமோ பயந்தியே! இதை ஈஸியா செய்யலாம் இல்லை! தங்கச்சிக்கும் சொல்லி கொடு! அவ ரொம்ப சந்தோஷ படுவா! நம்ப அண்ணனுக்கு இவ்வளவு அறிவான்னு!

சரி வெளியில கொஞ்சம் ஜோலி இருக்கு! வர்ட்டா மாப்பு!

நீங்க ரெண்டு பேரும் நல்லபடியா சந்தோஷமா இருங்க! இந்த மச்சினனுக்கு அது போதும்!

இதை படிக்கிற அத்தனை பேர்களும், நல்லபடியா நோய்நொடி எதுவும் இல்லாம, சவுக்கியமா சந்தோஷமா இருக்கணும்னு அந்த ஆண்டவனை பிரார்திக்கிறேன்.

38 மேதைங்க இதபத்தி என்ன சொன்னாங்கன்னா...:

Ananthi said...

பழ சாலட் தெரியும்.. அதுல இம்புட்டு மேட்டர் இருக்கறது நீங்க சொல்லித்தான் தெரிது.. ஹ்ம்ம் சூப்பர்..
செஞ்சி சாப்பிட்டா போச்சு.. பகிர்வுக்கு நன்றி... :)

என்னது நானு யாரா? said...

@Ananthi: நன்றி ஆனந்தி! மத்த பதிவுகளை கூட படிங்க! ரொம்ப பயனா இருக்கும்.

இயற்கை முறையில வாழ்ந்தா! நோயில்லாம வாழலாமுங்க!

வெறும்பய said...

எலேய் மக்கா... இம்புட்டு மட்டர் வச்சிருக்க..நெசமாலுமே நீ நம்ம உறவுக்காரன் தாம்ல...

Jey said...

ம்ம்ம், பழங்கள கலந்து கட்டிடலாம்....:)

என்னது நானு யாரா? said...

@வெறும்பய:

//எலேய் மக்கா... இம்புட்டு மட்டர் வச்சிருக்க..நெசமாலுமே நீ நம்ம உறவுக்காரன் தாம்ல...//

நன்றி பங்காளி! உங்கள போல உறவுகாரங்க இருக்கிறதால தான் நம்பி எழுத வந்திருக்கேன். உங்க பாசத்துக்கு நன்றி!

என்னது நானு யாரா? said...

@Jey:

//ம்ம்ம், பழங்கள கலந்து கட்டிடலாம்....:)//

அப்படி போடு அறிவாளை!

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பகிர்வு நண்பரே. தில்லியில் பொதுவாக தேன்/வெல்லம், முந்திரி பருப்பு, ஏலக்காய், தேங்காய் துருவல் இல்லாம, வெறும் பழங்களை நறுக்கி தட்டில் போட்டு, ”ஃப்ரூட் சாட்” என்று கிடைக்கும். மேலே சொன்ன பொருட்களையும் சேர்த்தால் நன்றாகத் தான் இருக்கும். செஞ்சுட வேண்டியதுதான். பகிர்வுக்கு நன்றி.

சௌந்தர் said...

பழம் சாப்பிடுவதில் என்ன கஷ்டம் சாப்பிட்டா போச்சி

Chitra said...

We make fruit salad for dessert often. :-)
Nice post.

என்னது நானு யாரா? said...

@வெங்கட் நாகராஜ்: செய்து சாப்பிட்டு விட்டு சொல்லுங்க! முடிஞ்சா எனக்கும் பார்சல் அனுப்பி வைங்க்!

@சௌந்தர்: வருகைக்கு நன்றி!

@Chitra: நகைசுவை திலகமே! எங்கள் அன்பு அக்காவே வாங்க! தங்கள் வருகை நல்வரவு ஆகுக!

சைவகொத்துப்பரோட்டா said...

டேங்க்ஸ் பங்காளி :))

எஸ்.கே said...

பழ சாலட் ரொம்ப நல்லதுங்க. ஒரு வித்தியாசமான் டேஸ்ட் + ஊட்டச்சத்து. சில பேரு இத பிரிட்ஜ்ஜில் வைத்து சாப்பிடுறாங்க அது தப்புதானுங்களே!

Chef.Palani Murugan, LiBa's Restaurant said...

"இந்த மாதிரி இயற்கை உணவில, Chemical Essence, Colour Powder, Ice எல்லாம் சேர்காதீங்க!"

நாம‌ எதையுமே சேர்க்கிற‌தில்லீங்கோ. எல்லாம் ப‌ழ‌த்துலே சேர்த்து வ‌ருதுங்கோ.வாழ்த்துக்க‌ள்... (எந்த‌ உற‌வுமுறையில‌ கூப்பிடுற‌துன்னு தெரிய‌லியே)

பிரியமுடன் பிரபு said...

நல்லது மாப்பு (உறவுகரன்னு சொன்னிகளே)
காலை உணவா பழம் சேர்த்துகலாம?
என்ன தினமும் ஒரு அப்பில் / கொய்யா சாப்பிடுகிறேன் காலையில்

சத்ரியன் said...

//இது சாப்பாட்டுக்கு முன்னவா இல்லை பின்னாடி சாப்பிடணுமா? சொல்லலீயே?)

பங்காளி இது தான் சாப்பாடே!//

மாப்பு... இங்கதான் வெச்சிட்ட நீ ஆப்பு.

சூப்பருப்பு!

ப.செல்வக்குமார் said...

//(என்ன அப்பு! பாட்டாவே படிச்சிபுட்ட! சும்மா அசத்தற நீ!! நல்ல மூடில இருக்கீங்க போல)///
பாட்டு மாதிரி எழுதினா அப்படித்தான படிச்சாகணும் ..
//என்ன மாப்பு! இப்போ இண்டிரஸ்ட் வந்திடுச்சி இல்ல//
வந்துடுச்சு .. சொல்லுங்க ..
///பங்காளி இது தான் சாப்பாடே! கண்டிப்பா ஒரு வேலை சாப்பட்டை, இப்படி தான் இயற்கை உணவா சாப்பிடணும் தினமும். தெரிஞ்சுதா?)
///
ஆனா ஆப்பிள் வெலை அதிகமா இருக்கே ...
நல்லா இருக்குங்க.. இது நாமா ஈசியா பண்ணிடலாம்...

என்னது நானு யாரா? said...

@சைவகொத்துப்பரோட்டா: //டேங்க்ஸ் பங்காளி :))//

உங்க டேங்க்ஸ்க்கு என் மறு டேங்க்ஸ் பங்காளி :))

எஸ்.கே //சில பேரு இத பிரிட்ஜ்ஜில் வைத்து சாப்பிடுறாங்க அது தப்புதானுங்களே!//

ஆமாம் நண்பரே! இயற்கை உணவை செயத உடனே சாப்பிடுவதே நல்லது.

@Chef.Palani Murugan, LiBa's Restaurant:

//Chemical Essence, Colour Powder, Ice எல்லாம் ப‌ழ‌த்துலே சேர்த்து வ‌ருதுங்கோ//

//(எந்த‌ உற‌வுமுறையில‌ கூப்பிடுற‌துன்னு தெரிய‌லியே)//

நான் உங்களுக்கு பிரியான உறவுகாரன்! உங்களுக்கு எந்த உறவு முறை பிடிக்குதோ அதை வைத்து கூப்பிடலாம்.

உடலில் புகும் நச்சுதன்மையை போக்கி கொள்வதற்காக நாம் நீர் உபவாசம் இருக்க வேணுங்க நண்பரே! வேற வழி இல்ல.

@பிரியமுடன் பிரபு: //காலை உணவா பழம் சேர்த்துகலாம?//

எடுத்துகலாமே. பழம், பச்சை காய்கறி சேலட், ஊற வைத்த நிலக்கடளை என்று உங்களின் பசி மற்றும் சக்தியின் தேவையை பொறுத்து எடுத்துகொள்ளுங்கள்.

என்னது நானு யாரா? said...

@சத்ரியன்: //பங்காளி இது தான் சாப்பாடே!//

மாப்பு... இங்கதான் வெச்சிட்ட நீ ஆப்பு.//

மாப்பு! உங்க உடம்பு நல்லா இருக்கணும்னு தான் சொல்றேன். நீங்க நோயில படுத்தா தங்கச்சி மனசு என்னா கஷ்டபடும்! நினைச்சி பாருங்க.

@ப.செல்வக்குமார்://ஆனா ஆப்பிள் வெலை அதிகமா இருக்கே ...//

செல்வா! இதில எந்த கட்டுபாடும் இல்ல. எந்த பழம் விலை குறைவா இருக்கோ, அதை பயன்படுத்திகலாம். செய்து சாப்பிட்டு பாரு!

தமிழ் நாடன் said...

பழ சாலட் அருமை பங்காளி! கலந்து கட்டிடுவோம்!

prabhadamu said...

அருமை அருமை :)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

தினமும் ஒரு பலாபழம் சாப்பிடலாமா?

என்னது நானு யாரா? said...

@தமிழ் நாடன்
@prabhadamu

உங்க பாராட்டுக்களுக்கு நன்றி!

@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா):

//தினமும் ஒரு பலாபழம் சாப்பிடலாமா?//

யானை பசியாப்பா அப்பு உங்களுக்கு? பார்த்து பலாபழத்தை அதிகமா சாப்பிட்டா சூட்டை கொடுத்திடும்!

Jayadeva said...

அழகான அறிவுரை சொன்ன மச்சானுக்கு நன்றிகள். ஒரு சந்தேகம், ஒவ்வொரு பழமும் வெவ்வேறு புளிப்புத் தனமையுடைதாக இருக்கும் ஆகையால் அவற்றை ஜீரண உறுப்புகள் வெவ்வேறு விதமாக டீல் பண்ணும் என்றும், ஆகையால் அவற்றை தனித் தனியாகத்தான் உன்ன வேண்டும் [அதாவது ஒருவேளைக்கு ஏதாவது ஒரு கனிவகைதான் உன்ன வேண்டும்] என்றும் சொல்கிறார்களே? உண்மையா?

♥♪•வெற்றி - VETRI•♪♥ said...

பங்காளி..! பழ சேலட் நல்லா இருக்கும் போல செய்து சாப்பிட்டு சொல்கிறேன்..!
த‌ங்கள் வருகைக்காக எனது பக்கங்கள் காத்திருக்கிறது..!
அன்புடன்,
வெற்றி
http://vetripages.blogspot.com

Jayadeva said...

//பப்பாளி, சப்போட்டா போல சன்னமா தோல் இருக்கிற பழங்களை தோல் நீக்க தேவையில்லை// பப்பாளித் தோல் ரொம்ப கசக்குமே?

என்னது நானு யாரா? said...

@Jayadeva:

//ஒரு சந்தேகம், ஒவ்வொரு பழமும் வெவ்வேறு புளிப்புத் தனமையுடைதாக இருக்கும் ஆகையால் அவற்றை ஜீரண உறுப்புகள் வெவ்வேறு விதமாக டீல் பண்ணும் என்றும், ஆகையால் அவற்றை தனித் தனியாகத்தான் உன்ன வேண்டும் [அதாவது ஒருவேளைக்கு ஏதாவது ஒரு கனிவகைதான் உன்ன வேண்டும்] என்றும் சொல்கிறார்களே? உண்மையா?//

நண்பரே! உண்மைதான் நீங்கள் சொல்வது. அப்படியும் ஒரு theory இருக்கிறது. அதற்கு பெயர் Mono diet. ஆனால் என் அனுபவத்தில பார்த்தது என்ன வென்றால் இப்படி பல பழங்களை ஒன்றாக Mix செய்து சாப்பிடும்போது எந்த பிரச்சனைகள் ஏற்படுவதில்ல.

எல்லா இயற்கை நல்வாழ்வு முகாம்கள், மருத்துவமனைகள் என்று எல்லா இடங்களில் இந்த மாதிரி கலந்து கொடுக்கும் முறையை தான் பின்பற்றுகிறார்கள்.

உங்க பாராட்டுகளுக்கு நன்றி!

என்னது நானு யாரா? said...

உங்க பாராட்டுகளுக்கும் நன்றி வெற்றி!

@Jayadeva: பங்காளி! நீங்க நான் எழுதியதை சரியா பாக்கல போல. ஆப்பிள், சப்போட்டான்னு எழுதி இருக்கேன். பப்பாளியை தோல் சீவி தான் சாப்பிடமுடியும். அதனுடைய தோல் ரொம்ப கசப்பா இருக்கும்.

தமிழ் உதயம் said...

செஞ்சு பார்த்து, சாப்பிட்டு பார்த்து இன்னொரு பின்னூட்டம் போடுறேன்.

என்னது நானு யாரா? said...

@தமிழ் உதயம்: //சாப்பிட்டு பார்த்து இன்னொரு பின்னூட்டம் போடுறேன்.//

கண்டிப்பா சொல்லுங்க. நம்ப எல்லா பங்காளிங்களுக்கும் பயனா இருக்கும்

Anonymous said...

பழ சாலட் அருமை பங்காளி!

உலகத்துல எந்த ஊருக்கு போனாலும் கிடைக்கிற உணவு என்கிற முறையில ரொம்ப பிடிக்கும்.

G.S.V

Anonymous said...

அது சரி "சாலட்" எப்படி தமிழாக்கம் பண்ணலாம் ?

SIVASAKTHI SELVARAJU said...

தம்பி தங்கமான யோசனை தான். அத்தோடு இதையும் சேர்த்துக் கொள்ளவும்.
சமைக்காத காய், பழங்களை சாப்பிட, காலை, அல்லது மாலை நேரமே உகந்தது. ஏனெனில் சமைத்த உணவு ஜீரணிக்க 4 மணி நேரம் ஆகும். சமைக்காத உணவு இரண்டு மணி நேரத்தில் ஜீரணம் ஆகும். ஆகவே சமைக்காத உணவை சாப்பிட்டு இரண்டு மணி நேரம் சென்ற பிறகுதான் சமைத்த உணவை சாப்பிட வேண்டும் அப்பு

SIVASAKTHI SELVARAJU said...

பழ சேலட் ...பழக் கலவை என்றே கூரலாமே

என்னது நானு யாரா? said...

@Anonymous: பெயர் சொல்ல விரும்பாத நண்பர்கள் வாழ்த்தியதற்கு நன்றி!

@SIVASAKTHI SELVARAJU:

//ஆகவே சமைக்காத உணவை சாப்பிட்டு இரண்டு மணி நேரம் சென்ற பிறகுதான் சமைத்த உணவை சாப்பிட வேண்டும் அப்பு//

ரொம்ப சரியா சொன்னீங்க! கண்டிப்பா ஜனங்க இந்த முறையை கடைபிடிப்பாங்கன்னு நம்பறேன்.

//பழ சேலட் ...பழக் கலவை என்றே கூரலாமே//

ஆமாம்! சரியான தமிழ் வார்தை அது தான் என்று நினைக்கின்றேன்

உங்களின் வருகைக்கு நன்றி! தொடர்ந்து வாருங்கள் அண்ணா!

cheena (சீனா) said...

அன்பின் பங்காளி

பழக் கலவை அருமை - செய்முறை எளிமை - சாப்பிடலாமே ! யாராவது செஞ்சு கொடுத்தாங்கன்னா .....

முயற்சிப்போம்
நல்வாழ்த்துகள் பங்காளி
நட்புடன் சீனா

என்னது நானு யாரா? said...

@cheena (சீனா)

//பழக் கலவை அருமை - செய்முறை எளிமை - சாப்பிடலாமே ! யாராவது செஞ்சு கொடுத்தாங்கன்னா .//

அதற்கென்ன ஐயா! நீங்க நம்ப வீட்டு வாங்க ஐயா! நான் உங்களுக்கு செஞ்சுக் கொடுக்கிறேன். எப்போ வர்றீங்க சொல்லுங்க ஐயா! நான் காத்துக்கிட்டிருப்பேன். நன்றி ஐயா!

உங்களோட வலைசரத்தில என்னோட பதிவுகளை அறிமுகம் செய்றதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி ஐயா!

Anonymous said...

இப்ப விற்பனைச் செய்கிற பெரும்பாலானப் பழங்களில் அவை கெடாமலிருக்க Preservative சேர்க்கிறார்கள்.இது உடம்புக்கு கெடுதல் செய்பவை.இவற்றை நீக்குவது எப்படி? மேலும் பழங்கள் பழுப்பதற்கும் இராசயனம் சேர்க்கிறார்கள்.உதாரணம் acetylene gas செலுத்தி வாழைப்பழத்தை விரைவில் பழக்க வைக்கிறார்கள்.இயற்கை உரத்தில் விளைந்தப் பழங்கள்(organic foods)எங்கு கிடைக்கும்.

Sanskii said...

நன்றி பங்காளி. தோல் உரிக்க முடியாத பழ்ங்களை (திராட்சை, கொய்யா, ப்ள்ம்ஸ், ஆப்பிள், சப்போட்டா, பியர், ஸ்ட்ராபெரி முதலானவை) வினிகரில்(தண்ணீர் சேர்த்துக்கோள்ளவும்) கழுவி எடுக்க, பூச்சி மருந்துகள் நீங்கும் என்று படித்தாக நினைவு.

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

Post a Comment

பங்காளி! சரக்கு எப்படி? விக்குமா... விக்காதா...??? கொஞ்சம் சொல்லிட்டு போங்க!!!