பன்னீர் தெளிக்கிறோமில... ப்ளீஸ்... கொஞ்சம் தலை குனியுங்க...

வணக்கம் பங்காளீ! வாங்க, சவுக்கியங்களா? நம்ம வலைபதிவு பக்கம் வந்ததுக்கு நன்றீங்கோ...Get this Widget

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே! என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி! நண்பர்களே!

மனிதர்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் சிந்தனைகள், இங்கு சிதறிகிடக்கிறது. படித்து பார்த்து உங்கள் கருத்துக்களை இடவேண்டுகிறேன்!

தொடர்ந்து, இந்த வலைபதிவுக்கு உங்களின் ஆதரவை தாருங்கள்!!! நன்றி! தொடர்ந்து வருக!!!

இந்த நாள், உங்களுக்கு, இனிய நாளாக அமைவதாக!!!

பாசகார பங்காளி கூட்டமுங்க! நீங்களும் கூட வாறீகளா?

04-Sep-2010

அப்பாடி! மாதவிடாய் பிரச்சனையில் இருந்து விடுதலை கிடைச்சதுங்க!

இந்த பெண்மணிக்கு மாதவிடாய் பிரச்சனை மட்டும் இல்லீங்க. தினம் உயிரை வாங்க துடிக்கும் எமன்கள் போல பல பிரச்சனைகள் இருந்த்துங்க. மிகவும் பரிதாபத்திற்குறியவங்க! இந்த பெண்மணி என்ன சொல்றாங்கன்னு நீங்களே கொஞ்சம் கவனமா கேளுங்க! பயனா இருக்கும்.
ஆங்கில மருத்துவம் மனிதர்களை கொல்லுதுங்க... :-(
நீங்க, சாகிற வரை கஷ்டபட்டு தான் ஆகணும். வேற வழி இல்லை. உங்க வலியை குறைக்கணும்னா Weight Tracition சிகிச்சையை தான் எடுத்துக்கணும். 2 மாசம் பெட்ல இருக்கணும். ஆனா இது நிரந்திர தீர்வு இல்ல. Pain Killers -ஐ உங்க வாழ்நாள் முழுசும் எடுத்துக்க வேண்டி இருக்கும்.

இது தான் என்னோட தீராத முதுகுவலிக்கு Specialist டாக்டர் சொன்னது. என்னோட முதுகு தண்டுல, Disc Dislocation ஆயிடிச்சின்னு x-ray ரிபோட் காண்பிச்சதுங்க. டாக்டர்ஸ் மட்டும் இல்லேங்க, ஜோசியகாரங்களும் நான் சீக்கிரம் செத்திடுவேன்னு தான் ஜோசியம் சொன்னாங்க.

கடவுள் தான் என்னை காப்பாத்தினாருங்க! எல்லாமே கடவுள் செயல்தான்னு சொல்லணும்! கொஞ்ச நாள் கழிச்சி, திருநெல்வேலி, சிவசைலத்தில இருக்கிற நல்வாழ்வு ஆசிரமத்தை பத்தி விவரம் கிடைச்சது.   

மனுஷனோட மனசு, உடம்பு இந்த ரெண்டிலேயும் வர்ற பிர்ச்சனைக்கெல்லாம் காரணம் சமைச்ச உணவு தான். சமைச்ச உணவை தவிர்திடுங்க! இயற்கையோடு இசைந்து வாழுங்க! வெறும் பழங்களும், கொட்டைகளும் தான் மனுஷனோட உணவு. அது தான் ஈடில்லா ஆனந்தத்தை கொடுக்குமுங்க.

அவை உங்க உடம்புல இருக்கிற நோய்ங்களை போக்கிறது மட்டும் இல்லைங்க, உங்க முழு உடம்புக்கும், புத்துணர்ச்சி கொடுத்து, சந்தோஷத்தையும் ஆரோகியத்தையும் கொடுக்குதுங்க! இதுதான் ஆசிரமத்தை நிறுவிய திரு. M. இராமகிருஷ்ணன் அவர்கள் எனக்கு சொன்னதுங்க.

1983 மார்ச் மாசம் எனக்கு Tubal Pregnancy-க்காக, முதல் ஆபரேஷன் நடந்தது. Fallopian Tube-ல ஒன்னு வெடிச்சிடுச்சி. 45 நாள் கருவோட அந்த ட்யூபை வெட்டி எடுத்திட்டாங்க.

அடுத்த ஆபரேஷன்ல என்னோட mother fallopian tube-ஐ எடுத்திட்டாங்க. மூனாவது ஆபரேஷன்ல கற்பபையில கட்டி இருந்ததாலே, கற்பபையையே எடுத்தாங்க. கடைசியா நடந்த ஆபரேஷன்ல அபண்டசைடீஸ்சை வெட்டி எடுத்தாங்க.

என்னோட உடம்பில இருந்து, நாலு பாகங்களையும் எடுத்து போட்டுட்டாங்க. இதற்காக, இயற்கை எனக்கு கடுமையா தண்டனைகளை அடுகடுக்கா கொடுத்ததுங்க! மூனு வருஷமா என்னை, தொடர்ந்து இருமல், சளின்னு படாதபாடு படுத்தி எடுத்ததுங்க. இங்கலீஷ் மருந்துகளோட பக்க விளைவுகள் வேற, ஒரு பக்கம், உயிரை வாங்கிடிச்சி! கடைசியா என்னை கடுமையான தீராத முதுகுவலியோடு படுத்த படுக்கையில தள்ளிடிச்சி. என்னால சரியா சுவாசிக்க முடியல, சுலபமா, நிக்கவோ, நடக்கவோ, உட்காரவோ, இல்ல படுக்கவோ முடியாதுங்க. தொடர்ந்து 24 மணிநேரமும் வலி இருக்குமுங்க. அது ஒரு நரகமுங்க. அந்த கொடுமை யாருக்குமே வரகூடாதுங்க!

இந்த மாதிரி சந்தர்பத்தில தான் நான் இயற்கை மருத்துவ சிகிச்சையை ஆரம்பிச்சேனுங்க. உபவாசம் இருக்க ஆரம்பிச்சேன். அப்போ வாந்தியை எடுக்க வெச்சி எல்லா நச்சுக்களையும் வெளியே தள்ளினேனுங்க. வாந்தி வருகிற போது, அந்த இங்கலீஷ் மருந்துகளோட நெடி அடிக்கும் பாருங்க! அவை எல்லாம் வெளியில வர்றபோ என்னால ஈஸியா அவைகளை அடையாளம் காண முடிஞ்சதுங்க.

ஒரு பத்து நாள்ல கொஞ்சம் தேறிவந்தேன். இருமலும் சளியும் முழுசா என்னை விட்டு போயிடிச்சீங்க. 20 நாள்ல என்னோட முதுகுவலியும் சரியாச்சுங்க. உபவாசம், பழஉணவு, அடுத்து, சூரியஒளி குளியல், (sunbath) கூடவே குளிர்ந்த தண்ணியில குளியல்ன்னு, தொடர்ந்து சிகிச்சை முறைகளை எடுத்துகிட்டேன். வேற எந்த சிகிச்சையும் எடுத்துக்கல.

இப்போ தான் ஆர்வமா இயற்கை வாழ்வியல் முறையை பத்தி படிக்க ஆரம்பிச்சேனுங்க. மாமிச புரதம் (Animal Protein) - அது, முட்டை, மாமிசம், பால்ன்னு எந்த வகையை சேர்ந்ததாக இருந்தாலும் மனிதனுக்கு ஏற்றது இல்லைங்க. மனிதனோட ஜீரண உறுப்புகளும், சுரப்பிகளும் அவைகளை ஜீரணிக்க கூடிய வகையில அமைக்கபடவில்லைன்னு தெரிஞ்சிகிட்டேனுங்க.

நான் கடந்த 5 வருஷமா, கொட்டைகளையும், பழங்களையும் உணவா எடுத்திட்டு வர்றேனுங்க. இப்போ உடல்நலன் நல்லபடியா தேறி வருது. உடல் எடையும் என் பழைய அளவுக்கு கூடி இருக்கு. என்னுடைய கூந்தல், நகம், பற்கள், தோல் எல்லாம் கூட நல்லவிதமா மேம்பட்டிருக்கு! என்னுடைய குணத்திலேயும் மாற்றம் வந்திருக்குங்க. நீங்க, சொன்னா நம்பமாட்டீங்க! கோபம் குறைஞ்சிருக்கு, சாந்தம் கூடி இருக்கு!

உங்களுக்கு ஒரு விஷயம் ஆச்சரியம் தர்றதா இருக்கலாம். மாத விலக்கு என்பது செயற்கையானதுங்க. பழங்கள் சாப்பிடுபவர்களுக்கு மாதவிலக்கு என்பது சுத்தமா கொஞ்சம் கூட வர்றதில்லைங்க. முதலில் எனக்கு மாதவிலக்கினால் பல பிரச்சனைகள் இருந்ததுங்க. வயிற்றுவலி, வெள்ளைபடுதல், அதிக இரத்தபோக்கு, கால்வலி, குடைச்சல்ன்னு பல உபாதைங்க தாளமுடியாத அளவில இருக்கும். ஆனால் இப்போ பாருங்க, மாதவிலக்குன்னு ஒன்னு சுத்தமா இல்லவே இல்லைங்க.

இந்த புதிருக்கான விடையை சொல்றேன் கேளுங்க! இயற்கை அன்னை கர்ப்பபையை, இனபெருக்கத்திற்கு மட்டுமே படைத்தாளுங்க. ஆனால் மனிதர்களில் மட்டும் தான், கழிவுகளை வெளியேற்றுகிற வேலையையும் அது சேர்த்து செய்கிற மாதிரி நிலைமை ஆச்சுங்க. வருங்கால சந்ததியினரை, விஷங்களில் இருந்து காப்பாத்துறது இயற்கையோட நோக்கமுங்க.

அதனால, மாதம் ஒரு முறை, மாதவிலக்கு என்கின்ற செயலின் மூலம் உடம்பை சுத்தம் செய்து, கட்டாயமா, கழிவு நீக்கலை செய்யுதுங்க. 

இந்த மாதவிலக்கு இல்லாத ஆச்சரியம் எனக்கு மட்டும் இல்லைங்க, பல நாட்டை சேர்ந்த Fruitarians-களின் (பழங்களை உணவாக கொள்வோர்)  விஷயத்திலும் கூட இது நிறுபணம் ஆகி இருக்குதுங்க. 


அந்த அம்மாவுக்கு தான் கருப்பையையே நீக்கிட்டாங்களே. அப்புறமா ஏன் அவங்களுக்கு மாதவிலக்கு வரப்போகுதுன்னு உங்களுக்கு சந்தேகம் வரலாம். கருபபை இருக்கிறவங்களுக்கும் மாதவிலக்கு இல்லாத அதிசயம் நடக்குதுங்க! அந்த சந்தேகத்தை போக்கிகணும்னா இங்கே போய் படிச்சி பாருங்க அப்பு!


மாமிசபுரதம் உண்போருக்கு, உடம்பில, நச்சு பொருள் அதிகம் இருக்கிறதாலே, மாதவிலக்கு சமயத்தில, இரத்த போக்கும், துர்வாடையும் அதிகமாக ஏற்படுதுங்க. அது வயிறு, கால்களில் அதிகளவில, வலியை ஏற்படுத்துதுங்க. இயற்கை உணவாளர்களுக்கு இந்த பிரச்சனை, சிறிது வீரியம் குறைந்ச அளவில இருக்கும். ஆனால் பழ உணவாளர்களுக்கு இந்த பிரச்சனை கொஞ்சம் கூட இல்லைங்க.

மாதவிலக்கு தான் இல்லையே தவிர, கருமுட்டை உற்பத்தி (ovulation) எல்லாம், எல்லா பெண்களுக்கும் நடக்கிற மாதிரியே இயல்பா இருக்கும். அதில் எந்த பிரச்சனையும் இருக்காது. மலட்டு தனத்தினால் அவதிபடும் தம்பதியினருக்கு பழ உணவு பழக்கத்தால் குழந்தை பேரு கிடைக்குதுங்க. இதனை Denmark-ஐ சேர்ந்த Dr. Nolfi நிருபித்து உள்ளார்.

எல்லோரும் இயற்கை உணவுக்கு மாறணும்னு கேட்டுகொள்கிறேனுங்க!

குறிப்பு: இந்த அனுபவ மடல் இயற்கை உணவே நோய் தீர்க்கும் மருந்து என்கின்ற புத்தகத்தில் இருந்து எடுத்தாளபட்டிருக்கிறது. இதன் ஆசிரியர். திரு. மூ.ஆ. அப்பன் அவர்கள். புத்தக பதிப்பாளர் - இந்து பப்ளிகேஷன்ஸ், சென்னை

இந்த மடலை எழுதிய பெண்மணி திருமதி. R. பாமா அவர்கள், லால்குடி, திருச்சியை சேர்ந்தவர்கள்.   

நண்பர்களே! இவரின் அனுபவத்தை பற்றிய உங்களின் கருத்து என்ன? சொல்லிட்டு போங்களேன்.
          

03-Sep-2010

பால் சரியான உணவு இல்லைங்க. வேண்டாங்க ப்ளீஸ்... பாகம் 2

பால் எவ்வளவு கெடுதல் செய்யுதுன்னு நாம, முதல் பாகத்தில கொஞ்ச விஷயங்களை பாத்தோமில்ல! இப்போ அதனுடைய தொடர்ச்சி...

இதனுடைய முதல் பாகம் படிக்க இங்கே அழுத்தவும்!

வாங்க பேசலாம் வாங்க! வந்து குந்தணும் நீங்க!
பங்காளி கூட்டங்க நாம! பன்புள்ள கூட்டங்க நாம!
நல்லதை சிந்திப்பது நம்ப வழக்கம்
நல்லதை செய்றதும் நம்ப பழக்கம்!

வாங்க பேசலாம் வாங்க! பங்காளிகளே! வாங்க பேசலாம் வாங்க!

எல்லோரும் வந்திட்ட மாதிரி இருக்கு. அப்போ கச்சேரிய ஆரம்பிச்சிட வேண்டியது தானே பங்காளி?

பால் நம்ப உடல் ஆரோகியத்துக்கு எப்படி கெடுதலா இருக்குன்னு பாத்தோமில்லையா?
பாலை தொடர்ந்து சாப்பிட்டா...அப்புறம் போகணும் இங்கே...
இதில அடுத்த விஷயம் என்னான்னா, இதை கேட்டால் நிறைய பேர்களுக்கு ஷாக்கிங்கா கூட இருக்கும். உங்களுக்கு எப்படி இருந்ததுன்னு அப்புறமா சொல்லுங்க!   

பங்காளி! எல்லோரும் பாலை பத்தி என்னா நினைச்சிருக்காங்கன்னா, பால் ஒரு சைவ உணவு(!!!) அது கடவுளுக்கும் ஏத்ததுன்னு தப்பா நினைச்சிருக்காங்க. நான் சொல்றேன்! பால் சைவத்தை சேர்ந்ததே கிடையாது தெரியுமா? மாட்டு மாமிசத்தில எந்த விதமான, செல்கள், மூலகூறுகள் அமைப்பு இருக்குமோ, எல்லாமுமே பாலில அப்படியே xerox copy போட்ட மாதிரி, அச்சு அசல் அப்படியே இருக்காம். மாமிசம் சாப்பிடறதும், இந்த பால் குடிக்கிறதும் ஒன்னுதானாம். ஒரு பிராணியோட, ரத்தம், ஹார்மோன்கள் மூலமா கிடைக்கிற பால் எப்படி பங்காளி சைவ உணவா இருக்க முடியும்? நல்ல Logic இல்ல!

இது இயற்கை தானே! மாட்டு உடம்புல இருந்து வர்ற பாலு, மாட்டோட மாமிச தன்மையில தானே இருக்கும். (அடடா! நீங்களும் என் அளவுக்கு அறிவாளியா மாறிகிட்டு இருக்கீங்களே! Great தான் போங்க!)   

இதை தெரிஞ்சு தான் ஜெயினர்கள் பாலை தொடமாட்டாங்க, தெரியுமா உங்களுக்கு?

இப்போ சொல்லுங்க! சுத்த ஆச்சாரமானவங்க,  சைவத்தை கடைபிடிக்கிறதை தங்களோட உயிரை விட மேலா நினைக்கிறவங்க இந்த தப்பை செய்யலாமா? கடவுளுக்கு அபிஷேகம் செய்றேன்னு சொல்லி அசைவ பொருளான பாலில அபிஷேகம் செய்யலாமா?

அதுமட்டும் இல்ல! பால் ஒரு சாத்வீக உணவு இல்ல. காம இச்சையை தூண்டி மனசை அலைபாய செய்யுது. இப்போ புரிஞ்சிருக்கும் இல்ல ஏன் முதல் இரவு சீன்ல எல்லா பெண்களும் பால் சொம்போடு முதலிரவு அறைக்குள்ள போறாங்கன்னு?

புரிஞ்சுதா பங்காளி! ஆன்மீக சாதகம் செய்றவங்க இந்த பாலை தொடாம இருக்கிறதே ரொம்ப நல்லது!

ரொம்ப முக்கியமான விஷயம் ஒன்னை சொல்ல மறந்திட்டேனே! இயற்கை சிகிச்சை மருத்துவமனைகள்ல, சளி, இருமல், மூக்கடைப்பு, ஆஸ்துமா, வீஸிங், ஈஸ்மோபீலியா போல பல வியாதிங்களால பாதிக்கபட்டவங்களுக்கு பால் இல்லாத பச்சை காய்கறிங்க, பழங்கள்ன்னு இயற்கை உணவுகளை தான் 1 வாரம், பத்து நாள்ன்னு தருவாங்க. அப்போ பாக்கணுமே அதிசயத்தை! எவ்வளவு சீக்கிரம் அவங்க குணம் ஆகுறாங்க என்கிறதை அவங்களாலேயே நம்ப முடியாது!

பங்காளி! சளி, ஆஸ்துமா போல கபம் சம்பந்தபட்ட நோய்ங்களுக்கும் பாலுக்கும் கெட்டியான ஜென்ம பந்தமுங்க! பாலு இந்த நோய்களுக்கெல்லாம் சூப்பர் சப்போர்ட்டுங்க. இவங்க கூட்டனியே பெரிய வெற்றி கூட்டனிங்க! உலகத்திலேயே, தொகுதி உடன்படிக்கைகள்ல சண்டை வராத கூட்டனி இவங்களுடையது மட்டும் தானுங்க.

என்னோட அப்பாவுக்கு அதிகமா கபம் கட்டும். அடிக்கடி இருமல், சளி, அஜீரணம், வாயு தொல்லைன்னு அவரை பாடாபடுத்திடும். இந்த இயற்கை மருத்துவ முறையை தெரிஞ்ச பின்னாடி அவரு பாலை பயன்படுத்தமாட்டாரு.

இப்போ அந்த நோய்ங்க எல்லாம் இருந்த இடமே தெரியல. உங்களுக்கோ இல்ல உங்களுக்கு தெரிஞ்சவங்க யாருக்காவது கபம் சம்பந்தமா நோய்கள் இருந்தா, பால் பயன்படுத்தறதை நிறுத்தி பாருங்க. ஒரு 1 வாரத்திலேயே உடம்புல எந்த மாதிரி மாற்றம் தெரியுதுன்னு அப்புறமா எனக்கு ஈமெயில் அனுப்புங்க!

கடைசி பாயிண்ட் ஒன்னு இருக்கு, சொல்றேன் கேளுங்க! பால் ஆரோகியத்துக்கு முக்கியமானதுன்னு நினைக்கிற மக்கள்னால, நாட்டில மாடுங்களோட எண்ணிக்கை பெருகிடிச்சிங்க! செயற்கையா மாடுங்களோட எண்ணிக்கையை அதிகம் படுத்தறாங்க, அதனால எந்த மாதிரி விளைவுகள் விளையும்ங்கிறதை பத்தி, கவலை படாம!

ஒரு மாடு, 20 மனுஷங்க சாப்பிடற அளவுக்கு தீனியை திண்ணும் தெரியுமா?

மாடுங்களோட தேவைக்காக, தானியம் விளைய வேண்டிய நிலமெல்லாம் புல் விளையற நிலமா காட்சி தருது. மாடுங்களால தாவரவினங்கள், காடுங்க எல்லாம் ரொம்ப சீக்கிரம் அழிஞ்சிட்டு வருது. நீரோட தேவையும் அதிகமாகி நீர் ஆதாரங்கள் எல்லாம் சீக்கிரம் வறண்டு போகுற சூழ்நிலை ஏற்பட்டு இருக்கு.

பாலு சரியில்லைன்னு சொல்றீங்க! சரி, பாலுக்கு சம்மா சத்தை கொடுக்கிற மாற்று என்னான்னு சொல்லனுமா இல்லையா?

அதுக்கு மாற்று, தேங்காயை தண்ணி சேர்த்து அரைச்சி, வடிகட்டி எடுக்கிற தேங்காய் பாலை பயண்படுத்தலாம். இது மாட்டுபாலை விட சத்து நிறைந்சது. சுவைக்கு தேன், வெல்லம், பேரிச்சை சாறு சேர்க்கலாம். உடம்புக்கு நல்ல நோய் எதிர்ப்பு சக்தியை தருமுங்க.

இதை சாப்பிட்டு வந்தா, ஆஸ்துமா, சளி, இருமல் எல்லாம் போயிந்தே, போயேபோச்சு, சோலிகாச்சு, கதம் ஹோகயா!

இதே போல முளைவிட்ட தானியங்களை, வெயில்ல நல்லா காயவெச்ச பின்னாடி அரைச்சி வைச்சிகலாம். தேவையான சமயத்தில 1 டம்லர் தண்ணியில 1 ஸ்பூன் மாவை போட்டு கரைச்சி சூடு பண்ணி சாப்பிடலாம். சுவைக்கு மேல சொன்ன ஐட்டங்கள்ல ஏதாவதை சேர்த்துகலாம். காபி டீக்கு அடிமையானவர்கள், இதையே காபி, டீக்கு மாற்றாக எடுத்துகொள்ளலாம். சுக்கு பாணமோ அல்லது மூலிகை பாணமோ எடுத்துகொள்ளலாம் (நாட்டு மருந்து கடைகளிலும், காதிகிராப்ட் கடைகளிலும் கிடைக்கிறது)

கால்ஷியம பற்றாகுறை வந்திடுமேன்னு பயப்படுறவங்களுக்கு ஒரு விஷயம் சொல்றேனுங்க. நீங்க சைவ உணவு முறையை Follow செய்றவங்களா இருந்தா, கீரைகள், பச்சைகாய்கறி சேலட், தானியங்கள்ல, பழங்கள்ல, பாதம், முந்திரி போல இருக்கும் கொட்டைகள்ல நமக்கு வேண்டிய சத்து கிடைக்கிறது.

அசைவம் சாப்பிடறவங்களா இருந்தா நீங்க மீனை சாப்பிடலாம்.

உங்களை யோசனை செய்ய வெச்சிட்டேன்னு நினைக்கிறேன். அது போதுங்க எனக்கு!

யோசிங்க நண்பர்களே யோசிங்க! யோசிச்சி நல்ல முடிவா எடுங்க! நீங்க எல்லாம் நம்ப உறவுகாரங்க இல்ல! அப்போ நல்ல முடிவா தான் எடுப்பீங்கன்னு நம்பறேன். 

02-Sep-2010

ஏன் பால் சரியான உணவு இல்லைன்னு சொல்றேன்னா...

பால் நமக்கு சரியான உணவு இல்லை மக்களே! ஒரு பதிவில, பாலை பத்தி ஒரு கருத்தை சொன்னேன். அந்த பதிவை படிக்கணுமா? இங்கே அழுத்துங்க!

நான் எழுதினதை படிச்சபின்னாடி, பின்னூட்டத்திலும், ஈமெயிலும் இது ஏன்னு? கேட்டு எழுதிபோட்டாங்க நம்ப கூட்டாளிங்க! அவங்களுக்கும், இதோ! இப்போ படிக்க வந்திருக்கிற உங்களுக்கும் என்ன சொல்ல வர்றேன்னா...

அதுங்க எல்லாம் என்ன பாவம் செஞ்சதுங்க.... எப்பவுமே நின்னபடியே இருக்கிற மாதிரி வெச்சிட்டானே இந்த பாழா போன மனுஷன். 

 பால் வேண்டாங்க மக்களே! உங்க ஆரோகியத்தை பெரிசா மதிக்கறீங்களா இல்லையா? அப்போ இந்த உறவுகாரன் பேச்சை கேளுங்க! கேப்பீங்க இல்ல? நான் பொய் சொல்லி பழக்கம் இல்லைன்னு உங்களுக்கே நல்லா தெரியும் தானே?

சரி கதையெல்லாம் விட வேணாம். விஷயத்துக்கு வாங்க பங்காளி!

சரி! சரி! வந்திட்டேன். அதுக்காக இப்படி அதட்டணுமா? நான், கைபுள்ளைக்கு பக்கத்து வீட்டுகாரன்னு முதல்லிலேயே சொல்லி இருக்கேன் இல்ல. கொஞ்ச பயந்தபுள்ளைங்க நானு! நிசமா! உம்ம்ம்ம்ம்ம்....

சரி, விஷயம் இதுதானுங்க. எல்லோரும் என்ன சொல்றாங்க? பால் ஒரு பரிபூரண உணவு, கொறஞ்ச காசுக்கு, நிறைஞ்ச சத்தை கொடுக்கிற உணவுன்னு சொல்றாங்களா இல்லையா? இதில படிச்ச டாக்டருங்க கூட அடக்கம் இல்லயா பங்காளி!

ஆனா உண்மை என்னான்னா, இன்னைக்கி இருக்கிற சூழ்நிலையில பாலும், பாலில இருந்து கிடைக்கிற தயிரு, வெண்ணெய், நெய் எல்லாம் சாப்பிட்டி வந்தீங்கன்னா, நோய்ங்க எல்லாம் க்யூகட்டி, உள்ளே நுழையறதுக்கு, நான் தான் முந்தி இல்ல, இல்ல, நான்தான் முந்தின்னு உங்க வீட்டு வாசல்ல குடுமிபிடி சண்டை போடறதை பாக்கலாம்.

இதுக்கு காரணங்கள் என்னவா இருக்கும்ன்னு ஒரே ரோசனையா இருக்கா? அதுங்களையும் சொல்லி போடறேன். கவனமா கேட்டுகோங்க!

முதல்ல இத யோசியீங்க! மாட்டோட பால் மனுஷனுக்கு ஆகுமா? கன்னுகுட்டியோட உடலு சீக்கிரம் வளரணும்னு, கன்னுகுட்டிக்கு ஏத்தபடி அதிக புரத சத்து (protein) கொழுப்பு சத்து இருக்கிற மாதிரி மாட்டு பாலை இயற்கை டிசைன் செய்து கொடுத்து அனுப்பினா, அந்த பாலை, சிசுவா இருக்கிற கன்னுகுட்டியை, குடிக்க விடாம இந்த பாழாபோன மனுஷன் அதை பிடுங்கி குடிக்கிறான். இது எவ்வளவு பெரிய பாவ செயல் இல்ல!

அடுத்து என்னா விஷயம்ன்னா யானை திங்கறதை பூணை திங்க முடியுமா சொல்லுங்க?

மாட்டோடு மனுஷனை ஒப்பிட்டு பாத்தோம்னா, மனுஷனோட உடம்பு வளர்ச்சியோ குறைவு; ஆனா மூளை வளர்ச்சி ரொம்ப அதிகம். மனுஷன் தன்னோட மூளை வளர்ச்சியை ஊக்கபடுத்திற உணவா சாப்பிடனுமா? இல்ல மாடு மாதிரி உடம்பு வளர்கிற உணவை சாப்பிடனுமா? மாடு ரெண்டே வருஷத்தில பெரிய சைஸ் ஆயிடும். ஆனா மனுஷன், அப்படியா சொல்லுங்க?

இப்போ எல்லா இடத்திலும் பாக்கிறது; கண்ணை உறுத்திற விஷயம், நீங்க கூட பாத்திருக்க முடியும்; குண்டு குண்டா குழந்தைங்க! பாக்கிறதுக்கே சகிக்கில. என்ன கொடுமைங்க இது சரவணன்! எந்த மாதிரி ஒரு பரிதாபமான சூழ்நிலைங்க இது பங்காளி!

இன்னைக்கு நம்ப குழந்தைங்க மத்தியில Childhood obeseity ரொம்ப அதிமா பரவி இருக்கு. இந்த ஒவ்வாத குண்டு தன்மையால, என்ன என்ன நோய்ங்களுக்கும் ஆளாகுதுங்க இந்த குழந்தைங்க! ச்சீ! பாவம் இல்ல!

இதய கோளாறுங்கிறான், கிட்னி கெட்டுபோச்சுன்னு சொல்றான், லிவர் டேமேஜ்ன்னு சொல்றான், கண்பார்வை சரியில்லைங்கிறான். ஏனுங்க பங்காளி இந்த மாதிரி நோய்ங்க எல்லாம், இப்போ நம்ப குழந்தைங்க வரை வந்தாச்சே! உடலு ஆரோகியம் இல்லன்னா, என்னா பணவசதி இருந்து என்னா லாபம் சொல்லுங்க? இதை பத்தி எப்பவாச்சும் யோசிச்சீங்களா?

வேறென்ன? இதெல்லாம், அதிகமா புரதசத்து, கொழுப்புசத்து இருக்கிற உணவா சாப்பிடறதால வந்த விணைங்க. ஐஸ்கிரிம், சாகலேட், பிஸ்கேட்டுன்னு கேக்குன்னு கண்டதை சாப்பிட வேண்டியது.

இந்த டீவிகாரங்களை கல்லாலேயே அடிக்கணும்பா! கவர்ச்சியா விளம்பரம் போட்டு பசங்களை மயக்கி போடுறானுங்க! அவங்களும் பின்விளைவுகளை பத்தி கவலை படாம, விளம்பரத்தில வர்ற பொருட்களை வாங்கி தின்னு உடம்பை கெடுத்துக்க வேண்டியது.

அணைகட்டை உடைச்சிட்டு போகிற வெள்ளத்தை போல ஒரு அளவுக்கு மேல அதிகமான புரதசத்தை, கொழுப்பை நம்ப உடல்ல இருக்கிற உறுப்புகளால ஜீரணிக்க முடியாம போகுது. இப்படி சரியா ஜீரணிக்க படாத உணவை வெளியேத்தறதுக்கு நம்ப கழிவு மண்டல உறுப்புகள் சிரம படுதுங்க.

அதுங்களுக்கெல்லாம் வாய்ன்னு ஒன்னு இருந்தா ஓன்னு ஒப்பாரி வெச்சி அழுவும். என்னை விட்டுடு ராசா! என்னால முடியல ராசான்னு கதறி அழுதிருக்கும்.

இன்னைக்கி சூழ்நிலையில, அதுங்கெல்லாம், மௌனமா புலம்பறதை கேக்கிற நிலைமையிலா இருக்கான் மனுஷன்?

அப்படியே வெள்யேற்றபடாம backlog ஆகி, ஜீரணிக்க படாத உணவு பொருள் எல்லாம் உடம்புக்குள்ளேயே தங்கிவிடுது. மத்ததெல்லாம் தான் உங்களுக்கே தெரியுமே பங்காளி! இதுங்க தான் நோய் வர்றதுக்கு காரணம்ன்னு பல முறை நானும் சொல்லிட்டேன்; நீங்களும் அதை கேட்டுட்டீங்க!பால்ல செய்ற கலப்படம் பத்தி கேட்டாலே மனசு பகீர்ரெங்குது! பால்ல யூரியா கலக்கறான், மாடுங்களுக்கு, பால் அதிகமா சுரக்குறணும் என்கிறதுக்காக, மாட்டுக்கு ஹார்மோன் ஊசி போடறான். இதெல்லாம் மனுஷனோட பணவெறியை தானே காட்டுது!

இப்போ சொல்லுங்க! உடல் ஆரோகியத்துக்கு கேடு விளைவிக்கிற பொருளை, அது சுத்தமில்லாதது, நச்சு தன்மை உள்ளதுன்னு தெரிஞ்ச பின்னாடியும் அதை பயன்படுத்த தோணுமா?

இந்த விஷயத்தை பத்தி, மீதியை அடுத்த முறை சொல்றேன். சொன்ன விஷயங்களை ஜீரணிக்கவே உங்களுக்கு டைம் எடுக்கும் இல்லையா மக்களே? உங்களை யோசனை செய்ய வெச்சிட்டேன்னு நினைக்கிறேன். அது போதுங்க எனக்கு! உடம்பையும் மனசையும் பத்திரமா பாத்துகோங்க!  வாரேனுங்க!


நண்பர்களே! இதன் தொடர்ச்சியை படிக்க இங்கே அழுத்தவும்

01-Sep-2010

பழ சேலட் ரெடி! சாப்பிட வாறீகளா! இது இயற்கை உணவுங்க!!

“உணவே மருந்து! இது தானுங்க, இயற்கை மருத்துவ சிகிச்சையோட மந்திர சொல்லே! அதனால நாம இயற்கை உணவை பத்தியும் தெரிஞ்சுக்ணும் என்கிறதால சில இயற்கை உணவு ரெஸிபிகளை எப்பவெல்லாம் நேரம் கிடைக்குதோ அப்போ நானு சொல்றேனுங்க. சரியா அப்பு?

நான் சொல்ல போற ரெஸிபிகள் எல்லாமே அடுப்பில்லா சமையலுங்க! என்னாது அடுப்பில்லாம சமையலான்னு ஆச்சரியப்படுறீங்களா? உண்மை தாங்க, போன முறையே சொன்னேன் இல்ல, சமைக்கும் போது, என்னா ஆகுதுன்னா... காய்கறி, தானியங்களில் இருக்கிற இயற்கையான ஊட்ட சத்து உருமாறி நச்சு தன்மை, அதனோட கலந்து விடுதுங்க.

சரி, இத கொஞ்சம் கேளுங்க!

அடுப்பில்லா சமையலுங்க! இது ஆரோகிய சமையலுங்க!
ஆம்பள பொம்பள, யாரும் செய்யலாம்
இது ரொம்ப ஈஸிங்க!
இது அடுப்பில்லா சமையலுங்க! இது  ஆரோகிய சமையலுங்க!

(என்ன அப்பு! பாட்டாவே படிச்சிபுட்ட! சும்மா அசத்தற நீ!! நல்ல மூடில இருக்கீங்க போல)

(சரி சரி! அடுப்பில்லாத சமையலாமே! யாராவது, பெட்ரொலிய துறை மந்திரிக்கு சீக்கிரம் சொல்லுங்கங்கப்பா! அவரு ரொம்ப சந்தோஷபடுவாரு! பின்ன, சமையல் காஸ் சிலிண்டருக்கு, மானியத்தை குறைக்க முடியாம கஷ்டபடறாரு இல்ல!)

சரி விஷயத்துக்கு வருவோம்! இன்னைக்கு பார்க்க போறது பழ சேலட்
பார்க்கும் போதே நாக்கில எச்சில் ஊறுது இல்ல...
சமையல் சமாச்சாரமான்னு ஏன் ஒதுங்கிபோறீங்க மாப்பு! தங்கச்சிக்கு உடம்பு சரியில்லாம போகும்போது நீங்க, நான் சொல்லி தர்ற ரெஸிபிய செஞ்சி அசத்தலாம் இல்ல! எல்லாமே ரொம்ப ஈஸி. அடுப்பில்லாத சமையல் என்கிறதால கைய சுட்டுபீங்க என்கிற பயமும் இருக்காது!

பொம்பளங்க எல்லாம் என்னமா சமைச்சி அசத்துறாங்க! நீங்க ஆம்பள சிங்கம்! இதை ரொம்ப ஈஸியா கத்துகலாம். என்ன மாப்பு! இப்போ இண்டிரஸ்ட் வந்திடுச்சி இல்ல?

சரி நல்லா கவனீங்க! ஒரு 5 பேருக்கு போதுமான படி ரெஸிபி சொல்றேன்

ஆப்பிள், வாழைபழம், திராட்சை, பேரீட்சை, மாம்பழம், பப்பாளி, சப்போட்டா, ஆரஞ்சு, மாதுளை, கொய்யா

இப்படி வகைக்கு 100 கிராம் எடுத்துக்கலாம். இல்லைன்னா மொத்தம் சேர்த்து 1 கிலோ வர்ற மாதிரி எடுத்துக்கோங்க.
தேன் இல்ல வெல்லம் – 100 முதல் 200 கிராம்
முந்திரிப்பருப்பு        - 50 கிராம்
ஏலக்காய் தூள்        - கொஞ்சமா
தேங்காய் திருகல்     - பாதி கைபிடி அளவு

தயாரிக்கிற முறைங்க:
ஆப்பிள், கொய்யா பேரீட்சை, மாம்பழம், பப்பாளி, சப்போட்டா போல சன்னமா தோல் இருக்கிற பழங்களை தோல் நீக்க தேவையில்லை.

பழங்களை நல்லா கழுவிட்டபின்னாடி, சின்ன சின்ன துண்டுகளா வெட்டி கொட்டைகளை நீக்கிடனுங்க. பப்பாளியை தோல் சீவி, விதைங்களை எடுத்த பின்னாடி சின்ன சின்ன துண்டுகளா வெட்டிகோங்க. வாழைபழத்தை கூட தோலை உரிச்சி பழத்தை சின்ன சின்ன துண்டுகளா வெட்டிகோங்க. உங்களுக்கே தெரியும்! மாதுளை பழத்தில இருந்து வெறும் முத்துக்களை மட்டும் எடுத்துகோங்க

வெட்டிய எல்லாப் பழங்களையும் கலந்து அதன் கூட தேன் இல்லன்னா வெல்லத்தூள், முந்திரி, ஏலக்காய்தூள், தேங்காய் திருகல் எல்லாத்தையும் சேர்த்து கலறி விட்டா பழ சேலட் ரெடி! (தலைப்புக்கு சம்பந்தமில்லாம எழதறேன்னு யாரும் சொல்லிட கூடாதில்ல! அதனால தான் தலைப்பு, மேட்டரில வந்திருச்சின்னு காண்பிக்க Bold செய்திருக்கேனுங்க) 

ஆஸ்துமா, சளித்தொல்லை, சர்கரை நோய் இருக்கிறவங்க நல்லா உபவாசம் இருந்து நோய் கட்டுபாட்டுக்கு வந்தபின்னாடி இந்த பழ சேலட்டை சாப்பிடலாமுங்க

அடிக்கடி இந்த மாதிரி செஞ்சி சாப்பிட்டீங்கன்னா, மலசிக்கல், குடல்புண், பசியின்மை எல்லாம் சரியாகுங்க. தொந்தி தொப்பை ஆசாமிங்க சாப்பிட்டா அவங்க தொப்பை குறையும், மூலச்சூடு, சிறுநீர் எரிச்சல் எல்லாமும் கூட சரியாகுங்க.

(இது சாப்பாட்டுக்கு முன்னவா இல்லை பின்னாடி சாப்பிடணுமா? சொல்லலீயே?)

பங்காளி இது தான் சாப்பாடே! கண்டிப்பா ஒரு வேலை சாப்பட்டை, இப்படி தான் இயற்கை உணவா சாப்பிடணும் தினமும். தெரிஞ்சுதா?)

தொடர்ந்து இந்த பழ கலவையை சாப்பிட்டு வந்தீங்கன்னா, கண் பார்வை நல்லா மேம்படுங்க. மூட்டுவலி, வாயு தொல்லை எல்லாமும் கூட குணம் ஆகுமுங்க.

இதில கவனிக்க வேண்டிய விஷயம் என்னான்னா...

இயற்கை உணவு தயாரித்த கொஞ்ச நேரத்திலயே சாப்பிடுங்க
பழங்களை, வெட்டிய பின்னாடி கழுவ கூடாது, வெட்டுறதுக்கு முன்னாடியே நல்லா கழுவிக்கணுமுங்க.

நல்லா மென்னு சாப்பிடனுங்க. ஜீரணம் செயல்பாடு வாயிலிருந்தே ஆரம்பிக்கிறதாமே! உங்களுக்கு தெரியுமா?

இந்த மாதிரி இயற்கை உணவில, Chemical Essence, Colour Powder, Ice எல்லாம் சேர்காதீங்க!

எப்படி ரெஸிபி பிடிச்சிருக்கா மாப்பு! என்னமோ பயந்தியே! இதை ஈஸியா செய்யலாம் இல்லை! தங்கச்சிக்கும் சொல்லி கொடு! அவ ரொம்ப சந்தோஷ படுவா! நம்ப அண்ணனுக்கு இவ்வளவு அறிவான்னு!

சரி வெளியில கொஞ்சம் ஜோலி இருக்கு! வர்ட்டா மாப்பு!

நீங்க ரெண்டு பேரும் நல்லபடியா சந்தோஷமா இருங்க! இந்த மச்சினனுக்கு அது போதும்!

இதை படிக்கிற அத்தனை பேர்களும், நல்லபடியா நோய்நொடி எதுவும் இல்லாம, சவுக்கியமா சந்தோஷமா இருக்கணும்னு அந்த ஆண்டவனை பிரார்திக்கிறேன்.

30-Aug-2010

எப்போதும் சோர்வு! இயற்கை மருத்துவத்தில், இதற்கு உண்டா தீர்வு?

சோர்வுக்கு இயற்கை மருத்துவத்தில் என்ன தீர்வு என்று கேட்டு ஒரு நண்பர் ஈமெயில் எழுதி அனுப்பி இருந்தார். அதனை உங்கள் பார்வைக்கு தருகின்றேன் அப்பு!
அம்மணி சோர்வில தூங்கறாங்க அப்பு! டிஸ்டர்ப் செய்யாதீங்க!

நண்பரே! தங்கள் வலைபதிவு ஒன்றில், சோர்வை ஒழிக்க உபவாசம் நல்லது என்று விரிவாக எழுதி உள்ளீர்கள். 

இவ்வாறு பசியுடன் இருக்க மேலும் சோர்வு அடையாதா?

எனக்கு ஆபீசில் மதிய வேளையில் சோர்வு பிடித்து தள்ளும். தூக்கம் வருகிறது. 

மேலும் எதாவது மீட்டிங் என்று போனால் அதில் மனம் ஒட்டாவிட்டால், சோர்வும், தூக்கமும் தள்ளுகிறது. 

நான் சிறு யோகா, ஓடுவது போன்றவை செய்து பார்த்தேன் ஒன்றும் பலனில்லை?
ஏதேனும் வழி உண்டா?

இந்த தூக்கத்தை பற்றி தங்கள் மருத்துவம் என்ன சொல்கிறது என்று ஒரு பதிவு போட்டால் என் போன்றோருக்கு உதவியாக இருக்கும். 
-------------------------------------------------------------

அவருக்கு ஈமெயிலில் பதில் அனுப்பினேன். மற்றவர்களும் பயன் அடையட்டும் என்று என் பதிலை இங்கே கொடுக்கின்றேன்.

நண்பரே! சோர்வை பற்றி கேட்டிருக்கிறீர்கள்! எல்லா நேரங்களிலும், வெறும் சமைத்த உணவை மட்டுமே சாப்பிட்டு கொண்டு வந்தால் கண்டிப்பாக சோர்வு உடலில் வரும். சமைக்கும் போது, காய்கறி, தானியங்களில் இருக்கும் இயற்கையான ஊட்ட சத்து உருமாறி நச்சு தன்மை அத்துடன் கலந்து விடுகிறது. 

உதாரணத்திற்கு சொல்வதானால் தேங்காயை அப்படியே பச்சையாக சாப்பிட்டால் எந்த கெடுதலும் இல்லை. அதுவே அதனை சமையலில் சேர்க்கும் போது உடலுக்கு கேடு விளைவிக்கும் கெட்ட கொளஸ்ட்ராலாக மாறுகிறது.

சமைத்த உணவை ஜீரணிக்க, ஜீரண உறுப்புகள் படாத பாடு படுகின்றன. அதனால் நச்சு உடலிலேயே தங்கி, உயிர்சக்தியை மழுங்கடிக்க செய்கிறது. இதற்கு தான் வாரம் ஒருமுறையாகிலும், உபவாசம் இருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள், இயற்கை மருத்துவர்கள். எல்லா வித நோய்களும், நம் உடலில் அதிகமாக நச்சுக்கள் சேரும் போது தான் வருகிறது.

நோய் ஒன்றே தான் பல அல்ல! உடலில் வேண்டாத கழிவு பொருட்கள் தங்கி கெட்டு போக ஆரம்பித்து, அது எல்லா இடங்களுக்கும் இரத்தம் மூலம் பரவி ஆங்காங்கே தங்கி விடுகின்றது. இந்த கருத்தை நாம் நன்கு விளங்கி கொள்ள வேண்டும்.   

வயிறு நிரம்ப சமைத்த உணவு சாப்பிட்டுவிட்டு அலுவலக பணியில் கவனம் செலுத்த முடியாது. உயிர் சக்தி எல்லாம், உணவை ஜீரணம் செய்வதற்காக செலவு ஆகிறது. அதனால் மூளைக்கு செல்ல வேண்டிய சக்தி தடைபடுகிறது. மூளை செயல்பட அதிகமான உயிர் சக்தி தேவைபடுகிறது.

நீங்கள் ஒரு நாளில் ஒரு வேலையாவது பச்சை காய்கறி சேலட், பழங்கள், முளைகட்டிய தானியங்கள், தேங்காய் பச்சையாக, இப்படி சமைக்காத இயற்கை உணவை சாப்பிட வேண்டும். பாலும் தயிரும் மந்தத்தை ஏற்படுத்தும் உணவு பொருட்கள். அவைகளை ஜீரணிக்க உடல் என்ன பாடுபடுகிறது என்று அதனை கேட்டால் தான் தெரியும். இதில் கலப்படம் வேறு!

மதியம் வயிறு முட்டும்படி அதிகமாக சாப்பிடாதீர்கள். 11 மணிக்கு, பிறகு 4 மணிக்கு ஏதாவது பழங்கள் சாப்பிடவும். அப்போது வயிற்றை கிள்ளும் பசி என்பது இருக்காது. 

உடலில் கழிவுகள் தேங்கா வண்ணம் பார்த்துகொள்ளவும். காபி, டீ எல்லாம் உடலில் கழிவுகளை சேர்க்க தான் பயன்படுகிறது. மூலிகை பாணங்கள் (சித்த மருந்து கடைகள் மற்றும் காதி கிராப்ட் கடைகளில் கிடைக்கிறது) இளநீர் நல்லது. மலசிக்கலை போக்க தினமும் எனிமா எடுத்துகொள்ளலாம். என் பதிவில் இதை பற்றி தெளிவாக எழுதி இருக்கிறேன். படித்து பார்க்கவும். 

மதியம் சாப்பிட்ட பின் சிறிது தூரம் பாதி வேகமாக நடந்துவிட்டு வாருங்கள். இரத்த ஓட்டத்திற்கு அது பயன்படும். உடம்பு சுறுசுறுப்பு அடையும்.

என் வலைபக்கத்தை தொடர்ந்து படித்து கொண்டு வாருங்கள்! உங்களுக்கு இயற்கை மருத்துவத்தின் தத்துவங்கள் புரிய ஆரம்பிக்கும்! நோய் என்று ஏதும் இல்லை நண்பரே! இயற்கைக்கு மாறுபட்டு செய்கை புரியும் போதே நோயாக வெளிபடுகிறது!

இயற்கை முறைபடி தான் எல்லா ஜீவராசிகளும் வாழ்கின்றன. மனிதன் மட்டும் தான் இயற்கையை எதிர்த்து வாழ்கின்றான். எந்த விலங்காகிலும் பல் விளக்குவது உண்டா? ஆனால் அவைகளுக்கு பல் சம்பந்தபட்ட நோய்கள் ஏதாகிலும் வருவதுண்டா?

இயற்கை முறைபடி வாழ்வோம்! மருத்துவர்களை, மருந்துகளை, மருத்துவமனைகளை தவிர்ப்போம்!

இந்த பதிவு அதிகமானோரை படிக்க செய்ய உங்களிடம் தான் சாவி உள்ளது (ஓட்டு போடறதை சொன்னேன் அப்பு!)

மறக்காம ஓட்டு போடுங்க! இது சம்பந்தமா கருத்து சொல்றவங்களையும் வரவேற்கின்றேன். மறுபடியும் சந்திப்போம்! வாழ்க வளமுடன்!!

29-Aug-2010

வாழையிலை குளியலாமே! என்னான்னு பாத்திட்டு வரலாம், வாங்க!!!

வாழையிலை குளியல் - இதுவும் கூட இயற்கை மருத்துவத்தில ஒரு வினோத சிகிச்சை முறை தானுங்க!  Very Effective!

வாங்க அம்மணி! வாங்க ஐயா! வாங்க பங்காளி! கூட்டாளி பசங்களா, எல்லோரும் வாங்க! எல்லோரும் வந்தாச்சா? இன்னைக்கு,  இயற்கை மருத்துவ சிகிச்சை முறையில இந்த வாழை யிலை குளியல் சிகிச்சை முறையை பத்தி தெரிஞ்சிக்க போறோம்.

தொழுநோய், சோரியாசிஸ், வெண்குஷ்டம் போல, எந்த தோல் வியாதி இருந்தாலும், அதிகமா குண்டான ஆளுங்களும், ஊளை சதை ஆசாமிங்களும் இந்த சிகிச்சை செய்யலாமுங்க!நல்லா சூரிய ஒளி படும்படியான ஒரு இடத்தில மத்தியானம் நேரத்தில, ஒரு பாயை விரிச்சி பெரிய சைஸ் வாழையிலைகளை பரப்பணும். வாழையிலை மேல நோயாளி படுக்கணும்.

உணவு சாப்பிட்டு, குறைஞ்சபட்சம் 4 மணிநேரம் இடைவெளி இருக்கணும். இந்த சிகிச்சைக்கு முன்னாடி, வயிறு நிறைய தண்ணி குடிக்கணும். இது ரொம்ப முக்கியம்! தலைக்கு வேட்டி துணியை தண்ணியில நினைச்சி கட்டிகணும். தலைக்குள்ள தானே மூளை இருக்கு! அது சூடாகாம இருக்கிறதுக்காக இப்படி செய்யனும்பா! இதை செய்யறதுக்கு மறக்காதீங்க!

(அப்போ! மூளை இல்லாத ஆசாமிங்க இந்த மாதிரி கட்டிக்க வேணாமுன்னு சொல்றீகளா?)

(யாருப்பா அது? ஊடால சௌண்டு குடுக்குறது? நல்ல விஷயம் சொல்லும் போது கவனமா கேட்டுகோங்க அப்பு! உங்க கிண்டல் கேலியை அப்புறமா வெச்சிகலாம்! நானும் வந்து கலந்துகிறேன்)

சரி விஷயத்துக்கு வருவோம்!      

இலை மேல முதுகு தரையில படும்படி நல்லா மல்லாக்கா படுக்க வைச்சபிறகு, நோயாளியோட உடம்பு முழுக்க மூடுகிற மாதிரி வாழையிலைகளை கொண்டு மூடி விடணும். இலையோட உள்பகுதி, அதாவது நாம சாப்பிட பயன்படுத்திற பகுதி, அவரோட உடம்புல படும்படி இலையை வைச்சி வாழை நாரால கட்டிடனும்.
                                             நன்றி: http://naturalfoodworld.wordpress.com/

படத்தை பாருங்க! ஏதோ மார்சரில போட்ட பிணம் கணக்கா இருக்கில்ல. மூச்சி விடறதுக்காக சின்ன ஓட்டை மட்டும் போட்டு, அப்படியே அவரை ஒரு அரை மணி நேரம் இருக்கிற மாதிரி விட்டுடணும்.

சொல்ல மறந்திட்டேனே! அவரு உள்ளாடையில மட்டும் தான் இருக்கணும்பா! பக்கத்திலேயே அவரை கண்காணிக்க ஒருத்தரு இருக்கணும்.

அரை மணி ஆயிட்ட பிறகு, கட்டுகளை எல்லாம் அவிழ்த்து, அவரை ரிலீஸ் பண்ணிடனும் தெரிஞ்சகோங்க? (முன்னே பின்ன ஏதாவது, அவரு மேல கோபம் இருந்தா, இதுதான் பழி தீத்துக்க சரியான நேரம்ன்னு, சொல்லி அவரை டீல்ல விட்டுடாதீங்க அப்பு! அது ரொம்ப தப்பு! ஆமா சொல்லிபுட்டேன்!)

அவரை எழுப்பி பாத்தோம்னா, அந்த இலையெல்லாம் தண்ணியா இருக்கும். அந்த அளவுக்கு அவரு உடம்புல இருந்து கெட்ட நீர் வெளிபட்டு இருக்குமுங்க. அவரு உடம்பு கூட, வேத்து கொட்டி, ஏதோ குளிச்சிட்டு வந்தவக மாதிரி இருப்பாரு.

அவரு ஒரு அரை மணிநேரம் நிழல்ல ஓய்வு எடுத்த பின்னாடி பச்சை தண்ணியில குளிக்கணும்.

இந்த யூஸ் செய்த இலைகளை ஆடு மாடுகளுக்கு திங்க கொடுத்திடாதீக! சரியா? அதுல எல்லாம் நச்சு தன்மை இருக்குமுங்க! எல்லாத்தையும் பூமில குழி தோண்டி புதைச்சிடுங்க!

இந்த சிகிச்சை செய்யும் போது யாருக்காவது நெஞ்சு படபடப்பு, அசௌகிரியம் ஏதாச்சும் இருந்ததுன்னு சொன்னா, உடனே அவரை கட்டுயெல்லாம் அவிழ்த்து ரிலீஸ் பண்ணிடுங்க! லேட் பண்ணிட கூடாது.

வாழையிலை வெய்யில்ல படும்போது Photosynthesis, தமிழ்ல அதுக்கு என்னன்னு சொல்லுவாங்க அப்பு? தெரியலியா? எனக்கும் தெரியல, இருங்க! போய் Dictionary -ஐ பாத்துட்டு சொல்றேன்.

ஆங்.. அதுக்கு பேரு ஒளிசேர்க்கையாம்பா! இந்த ஒளிசேர்க்கை நிகழ்ச்சி நடக்கும்போது, Chlorophyll, அதாம்பா பச்சையம்! அது, நம்ப உடம்புல புகுந்து நம்ப உடம்போட நோய் எதிர்க்கிற தன்மையை வலுபடுத்துது. இந்த சிகிச்சை முறையை நோயாளிங்க தான் இல்ல, ஆரோகியமா இருக்கிறவங்களும் மாசத்தில ஒரு முறை செய்யலாமுங்க.

நம்ப தோல்ல இருக்கிற துவாரமெல்லாம் திறக்கபட்டு, கெட்ட நீரெல்லாம் வெளியே போன பின்னாடி, நோயாவது நொடியாவது. நாம ஆரோகியமா வாழ, எந்த டாக்டரும் வேணாம் , கண்டக்டரும் வேணாம்! ஆமாம்! நூறு வயசு வாழறதுக்கு இது க்யாரண்டியான வழிமுறைங்க!

(எதுக்கு நமக்கு நூறு வயசு? எந்திரன்ல ரஜினியும், ஐஸ்சும், நடிச்சத பாத்த பின்னாடி, வாழ்க்கை முடிஞ்சிட்டா கூட பரவாயில்ல, சந்தோஷம் தான்னு சொல்றவங்களா நீங்க?

(அப்போ நீங்க காத்திருங்க! இன்னும் ஒரு மாசத்தில படம் ரிலீஸ் ஆகுதாம்பா)

சரி நீங்க இவ்வளவு தூரம் வந்ததுக்கு நன்றீங்க! நான் எழுதறது எப்படி இருக்குன்னு ஒரு வார்த்தை சொல்லிட்டு போங்க!

இந்த பதிவு பிடிச்சிருந்தா ஓட்டு போட்டு பிரபலமாக்குங்க! உங்க நல்ல செய்கையால மத்தவங்களுக்கும் இந்த தகவல் போய் சேருமில்ல!

சரி அடுத்த தடவை சந்திக்கலாம்! மறக்காம, ஊர்ல இருக்கிற நம்ப சொந்த பந்தங்களை கேட்டதா சொல்லுங்க! வாரேனுங்க!