பங்காளி! நம்ப பழக்கமே அப்படி ஆகிப் போச்சு! எங்கே நல்லது நடந்தாலும் நாலுப் பேருக்கு கூவி சொல்லணும்னு ஒரு உந்துதல் மனசுக்குள்ளே. உங்க எல்லோருக்கும் கூட இப்படி ஒரு உந்துதல் வர்றது உண்டுதானே? ஏன்னா நான் நார்மலா இல்லையான்னு ஒரு சின்ன டவுட்! அதுதான் உங்ககிட்ட ஓப்பனா கேட்டுபுட்டேன்.
எந்த பத்திரிக்கை, எந்த டீவி எதுவானாலும், கெட்ட செய்திகளுக்கு தான் ரொம்பவும் முக்கியத்துவம் தர்றாங்க. அது மனசை பாதிக்குது. அதை தேடி படிக்கிறக்கூட்டமும் இருக்கு! மஞ்சல் பத்திரிக்கை படிக்கிற கண்கள் காமாளைக் கண்களோ என்னமோ எனக்குத் தெரியல! ஆனா உறுதியா தெரிஞ்ச விஷயம், மஞ்சல் பத்திரிக்கை படிக்கிறவங்க மனசு காமாளை மனசு!
எதுக்கு கெட்டசெய்திகளை தேடி கண்டுபிடிச்சி, படிச்சுக்கிட்டு??!! நல்ல விஷயங்களை படிப்போமே! நல்ல விஷயங்களை சிந்திப்போமே! எதனை எப்போதும் நினைத்துக்கொண்டே இருக்கின்றாயோ, அதுப்போலவே ஆகின்றாய்ன்னு விவேகானந்தரும் சொல்லிட்டுப் போயிருக்காருங்க பங்காளி!
சரி! எனக்கு கடிதம் மூலம் வந்த நல்ல செய்தி உங்ககிட்ட பகிர்ந்துக்கலாம்னு ஆசை!
இயற்கை வாழ்வியல் முறையினை ருசிப் பார்க்க சந்தர்ப்பம்
நண்பர்களே! ஒவ்வொரு மாதமும் 3வது வெள்ளி, சனி, ஞாயிறு, ஆகிய 3 நாட்கள், இயற்கை முகாம் நடைப்பெறுதுங்க.
நடைப்பெறுகின்ற இடம்:- இயற்கை வாழ்வு நிலையம், குலசேகரப்பட்டிணம் வழி, திருச்செந்தூர், தூத்துக்குடி மாவட்டத்தில் நடைப்பெறுகிறது.
இந்த நவம்பர் மாதம் 19, 20, 21 நடைப்பெறுகின்றது. இம்முகாமில் இயற்கை வாழ்வு, இயற்கை உணவு, இயற்கை மருத்துவம், ஆன்மீகம், இயற்கை வேளான்மை ஆகிய பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
கட்டணம்: 500 ரூபாய் மட்டுமே. இதனை சேவையாக செய்துவர்றாங்க பெரியவர் திரு. மு.ஆ. அப்பன் அவர்கள்.
தவிர, 6 மாதக் கால இயற்கை மருத்துவ பட்டயக் கல்வி, Dip in Nature Food Theraphy (DNFT) அஞ்சல் வழியில் வழங்கப்படுகின்றது. இந்தப் படிப்பில் சேருவதற்கு வயது வரம்போ, கல்வித் தகுதியோ தேவையில்லை.
3 மாத்ததிற்கு 1 முறை யோகா, மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சை மற்றும் விழிப்புணர்வு 7 நாட்கள் முகாம் இங்கு நடைப்பெறுதுங்க. எல்லா விவரங்களுக்கும் கீழே இருக்கிற செல்பேசி எண்களில தொடர்புக் கொள்ளலாமுங்க
எண்கள்: +91-9944042986, +91-9380873645
இந்த எண்களுக்கு சொந்தக்காரர் இயற்கை உணவு நிபுணர்: திரு. மூ. ஆ. அப்பன் அவர்கள்
இவரு “இயற்கை உணவே நோய் தீர்க்கும் மருந்து” என்கின்ற புகழ்பெற்ற புத்தகத்தை எழுதி இருக்காருங்க. இவரு எல்லாவகையான நோய்களையும் இயற்கை மருத்துவ சிகிச்சை முறைகளைக் கொண்டே குணப்படுத்திவிடுறாருங்க.
இயற்கை வாழ்வியலில் முறைகளை பற்றி தெரிஞ்சுக்க, கடைப்பிடிக்க ஆசை இருக்கிறவங்க அவரைத் தொடர்புக் கொள்ளலாமுங்க.
அடுத்து நண்பர்களுக்கு சில இயற்கை வாழ்வியல் ஆர்வலர்களின் வலைப்பக்கங்களை அறிமுகப்படுத்துவதில் எனக்கு ஈடில்லாத மகிழ்ச்சி!
சகோதரி ரதிலோகநாதனோட இயற்கை உணவு என்கின்ற வலைப்பக்கம் பாருங்க! அதோட லிங்க் http://natures-food.blogspot.com/ தமிழிலேயும் ஆங்கிலத்திலேயும் எழுதி இருக்காங்க. ரொம்ப விரிவா இயற்கை உணவைப் பற்றி எழுதியிருக்காங்க
அடுத்து திரு சாமீ அழகப்பன் என்கின்ற நண்பரும் சித்தர்களைப் பற்றி எழுதி வருகிறாருங்க. அந்த வலைப்பக்கத்தோட லிங்க் http://machamuni.blogspot.com
பங்காளித் தோழர்களே! நல்ல விஷயங்களைப் படிப்போம்! நல்ல செயல்களை செய்வோம்! ஏன் மற்றவர்களை பற்றி தவறாக புனைவு என்கின்றப் பெயரில் எழுதி சம்பந்தப்பட்டவர்களின் மனங்களில வெறுப்பை ஏற்படுத்த வேண்டும். எழுத ஏதும் இல்லை என்றால் படிப்போம். வெறுமனே மகிழ்ந்திருப்போம். இந்த ஷனத்தில் நிலைத்திருப்போம். மனம் ஆனந்தத்தில் லயித்திருக்கட்டும்!
![]() | |
இவங்களைப் போலவே மகிழ்சியோடு இருப்போமே எப்பவுமே |
சிந்திச்சு நல்ல முடிவெடுங்க! பதிவுலகம் வெறுப்பு மண்டிக்கிடக்கும் ரணகளமாக இருக்குது. மனசு தாங்கல! அதனால உங்க முன்னாடிக் கொட்டிட்டேன்.எதுவும் அதிகபிரசங்கித்தனமா ஒண்ணும் சொல்லிடல இல்ல?
சரி வர்றேனுங்க பங்காளி நண்பர்களே!
![]() |
சிரிங்க சிரிச்சுக்கிட்டு இருங்க! இவனைப் போல கள்ளம் கபடம் இல்லாம சிரிச்சுக்கிட்டு இருங்க... |
இந்த பதிவு எல்லோர்கிட்டேயும் போய் சேறணும்னு நீங்க நினைச்சா, மறக்காம உங்க ஓட்டுகளை, கீழே இருக்கிற ஓட்டுப் பெட்டிகள்ல போடுங்க மக்கா! நீங்க எல்லோரும் தான் அன்பான பங்காளிங்க ஆச்சே! நான் சொல்லாமலே செய்றவங்க இல்லையா அப்பு?