போன பதிவுல ஏன் மனுஷன் மாமிசபட்சினி இல்லைன்னு பாத்தோம் இல்ல. இப்போ அதோனோட தொடர்ச்சியா மாமிச உணவு ஏன் நமக்கு சரியில்லைன்னு பார்க்க போறோம்.
முதல் பாகத்தை படிக்கணுமா? அப்போ இங்கே அழுத்துங்க
பங்காளி நீயே சொல்லு, விலங்குகளை கொன்னுதான் நம்ப உடலை வளர்கணுமா? அப்படி ஒரு வாழ்க்கை தான் நாம வாழணுமா? நீ என்னா சொல்றே அதைபத்தி?
![]() |
பார்க்கவே கஷ்டமா இருக்கில்ல! இவ்வளவு கோராமைக்கு அப்புறமும் அதுங்களை சாப்பிடணுமா பங்காளி? |
இந்த ஆடு மாடுங்களை அறுக்கிற இடங்களுக்கு போனவங்களுக்கு தெரியும், எவ்வளவு கோராமையா அந்த இடம் இருக்கும்னு. இந்த அப்பாவி ஜீவன்கள் மேல வன்கொடுமைகளை உபயோகிச்சி, அதுங்கெல்லாம் வலியால துடி துடிக்க சாகடிக்கிறதை பாத்தோம்னா எந்த கல்நெஞ்சுகாரனும் மனசு இரங்கிடுவான். அப்புறம் ஜென்மத்துக்கும் அசைவ உணவு சாப்பிடற ஆசையே வராது! அப்படியும் ஆசை வந்தா, அவங்களை பத்தி என்ன சொல்ல?
இப்படி இந்த கொடுமைகளை செய்து தான் நம்ப வயித்தை நிறப்பணுமா, நம்ப நாக்கு ஆசைபடுதேன்னு அதுக்கு தீனி போடணுமா? சிந்திச்சி பாரு பங்காளி!
இப்பெல்லாம் பெரிய பெரிய பண்ணைகள்ல நிறைய எண்ணிக்கையில ஆடு, மாடு கோழின்னு வளர்கிறாங்க. அதுங்களுக்கு ஆரோகியமான சூழ்நிலையை அமைச்சி கொடுக்க படுறதில்ல. அதனால பல நோய்களால தாக்கபடுதுங்க. இதை பத்தி எல்லாம் சரியா சோதிக்காம, அப்படி சோதிச்சாலும் அதை கண்டுக்காம விடபடுது.
அதனால அந்த நோய்ங்க எல்லாம் அந்த விலங்குகளை சாப்பிடற மனுஷங்களுக்கு போய் சேர்கிற வாய்ப்பு இருக்கு! வெட்டுபடறதுக்கு முன்னே, விலங்குகளுக்கு, பயம், பதட்டம், பயங்கரமான கோபம்னு பல உணர்ச்சிகள் அதுங்க உள்ளுக்குள்ளே ஓடிட்டே இருக்கும். இதெல்லாம், அவைகளிருந்து கிடைக்கும் மாமிசத்தை விஷ தன்மை அடைய செய்யுது. இப்படி மனுஷனுக்குள்ளே போகிற மாமிச உணவு அவனுக்கு பல நோய்களை இலவசமா சப்ளை செய்யுது.
என்ன பங்காளி ஒரே யோசனையா பூடிச்சா? இப்பவாவது யோசனை பண்ணு! மூளையை யூஸ் பண்ணாம வைச்சி என்னத்தை சாதிக்க போற?
என்ன பங்காளி ஒரே யோசனையா பூடிச்சா? இப்பவாவது யோசனை பண்ணு! மூளையை யூஸ் பண்ணாம வைச்சி என்னத்தை சாதிக்க போற?
பறவை காய்ச்சல், பன்றி காய்ச்சல், Mad Cow Disease –ன்னு (இதுக்கு தமிழ்ல என்ன அப்பு?) பல நோய்கள் விலங்குகளிருந்து மனுஷனுக்கு சமீபத்தில தான் வந்தது இல்லையா? அதனால அதை பத்தி மறந்திருக்க மாட்டீங்கன்னு நினைக்கிறேன். இது எதுக்கு? இதுக்கு பேரு தான் நாகரீகமா? விலை கொடுத்து இந்த மாதிரி புதுசு புதுசா நோய்ங்களை ஏன் வாங்கிகணும்? யோசி பங்காளி! நல்லா யோசி!
இன்றைய காலகட்டத்தில, கேன்சர், இதய நோய்கள், உடல் எடை அதிகரித்தல், அல்சர், உயர் இரத்த அழுத்தம், சர்கரை வியாதின்னு மனித இனத்தையே பயமுறுத்துகிற நோய்ங்க எல்லாம் வேகமா பரவிகிட்டு இருக்கு. இதுக்கெல்லாம் மூலகாரணங்கள்ல ஒன்னா அசைவம் சாப்பிடறது இருக்குங்கிறதை யாரும் மறுக்க முடியாது.
அதிகமான மாமிச கொழுப்பை நம்ப உடம்பினால சமாளிக்க முடியாம போகுது. இதனால இதய வால்வுகள் எல்லாம் அடைபட்டு கடைசியில மாரடைப்பு வந்து நிரந்திரமா ஓய்வு எடுக்க போய் விடுகிறான் மனுஷன். அதுவும் பல அவஸ்தைகள் பட்டு முடிவா தான் அந்த ஓய்வு கிடைக்குது!
கோலன் கேன்ஸர், மலக்குடல் கேன்ஸர், மார்பு புற்றுநோய், கர்பபை புற்றுநோய் இதெல்லாம் மாமிச சாப்பிடறவங்களுகே அதிகமா வருதாம்பா! சைவம் அதிகமா சாப்பிடுகிற ஜப்பான்காரங்க, இந்திய நாட்டுகாரங்களுக்கு எல்லாம் அதிகமா வர்றதில்லையாம்.
இப்போ உனக்கு ஒரு கேள்வி வருமே மனசில. ஏன் அசைவம் சாப்பிடறவங்களுக்கு அதிகமா நோய் வருதுன்னு. அதுக்கு ஆன்சர் என்னான்னா, மனுஷனோட குடல், தாவிரபட்சினிய போல நீளமா இருக்கு. மாமிசத்தில இருக்கிற எல்லா நச்சு தன்மையும் உடம்புக்குள்ளாற உரிஞ்சபட்டு நம்ப உடம்புல மெயின் பார்ட்ஸ் எல்லாம் டேமேஜ் ஆகி போகுது.
அது மட்டும் இல்ல அப்பு! இந்த விலங்குகளுக்கு பல விதமான மருந்துங்க, Tranquilizers, ஹார்மோன்கள், ஆண்டிபயடிக்ஸ் எல்லாம் கொடுக்க படுது. இது எல்லாம் மாமிசம் மூலமா மனுஷனுக்கு ட்ரான்ஸ்பர் ஆகுது. இதில என்ன கொடுமைன்னா, இதை பத்தி பேக்கேஜ் மேல எதுவும் சொல்ல தேவையில்லைன்னு அமெரிக்கா போன்ற நாடுகள்ல சட்டமே இருக்காம்.
ஒரு பெரிய லிஸ்ட்டே இருக்கு! என்னென்ன நோய்ங்க வருதுன்னு கொஞ்சம் கேளு! Epilepsy, Ulcerative Colitis, Appendicitis, Cartinoma of Colon and rectum, Rheumatoid Arthritism, Gout, Atherosclerosis (பங்காளி மன்னிச்சிக்கோ! இதுக்கெல்லாம் தமிழ்ல என்ன பேருன்னு தெரியல), கிட்னி சம்பந்தபட்ட நோய்ங்க, எல்லாவித கேன்சருங்க, குடல் அழுகல், நோய் எதிர்ப்பு சக்தி குறையறது, தோல் வியாதிகள், மரு, பரு போல பல நோய்ங்க வருது.
ஒற்றை தலைவலி, பெண்களுக்கு மாதவிடாய் சம்பந்தபட்ட நோய்ங்க எல்லாம் கூட அசைவ உணவு சாப்பிடறவங்களுக்கு ரொம்ப ரொம்ப அதிகமா வருது. ஆட்டுகறி கிலோ 300 ரூபாய்ன்னு சொல்றாங்க. அது தப்பு! அதுக்கு நாம கொடுக்கிற விலை நம்மோட அரோக்கியம்.
இவ்வளவு விலை கொடுத்து அந்த அப்பாவி ஜீவன்களோட உயிரை எடுத்து அதுங்க மாமிசத்தை சாப்பிடணுமா? அந்த ஜீவன்களின் சுடுகாடா நம்ப வயித்தை மாத்திக்கிட்டோமே! இது எந்த மாதிரி நாகரீகம்ப்பா! கொஞ்சம் தயவு செஞ்சி எண்ணி பாருப்பா பங்காளி!
இவ்வளவு விலை கொடுத்து அந்த அப்பாவி ஜீவன்களோட உயிரை எடுத்து அதுங்க மாமிசத்தை சாப்பிடணுமா? அந்த ஜீவன்களின் சுடுகாடா நம்ப வயித்தை மாத்திக்கிட்டோமே! இது எந்த மாதிரி நாகரீகம்ப்பா! கொஞ்சம் தயவு செஞ்சி எண்ணி பாருப்பா பங்காளி!
நீ மட்டும் திருந்திட்டேன்னா, அதுங்க எல்லாம், வாயில்லங்கிறதால, மனசால வாழ்த்தும்.
இன்னும் கொஞ்சம் விஷயம் இருக்கு! அடுத்த முறை அவைகளை பற்றி பேசலாம். என்ன சொல்ற பங்காளி?
இதனுடைய கடைசி பகுதியை படிக்கணுமா? அப்போ இங்கே அழுத்துங்க
இதனுடைய கடைசி பகுதியை படிக்கணுமா? அப்போ இங்கே அழுத்துங்க
உங்க உணவு பழக்கத்தால ஏற்பட்ட நன்மை தீமைகள் என்னென்னனு உங்க கருத்தை சொன்னீங்கன்னா எல்லோருக்கும் பயனா இருக்கும் இல்ல!
அதனால எல்லோருமே கருத்தை சொல்லிட்டு தான் போகணும்.
57 மேதைங்க இதபத்தி என்ன சொன்னாங்கன்னா...:
பால் சாப்பிட கூடாது, டீ, காபி சாப்பிடக் கூடாது, அசைவம் சாப்பிட கூடாது, தண்ணி அடிக்க கூடாது., என்கிற உங்களது பதிவுகள் அருமை. நானும் ஒரு முடிவுக்கு வந்துட்டேன். இனிமே உங்க ப்ளாக் பக்கம் வரக்கூடாதுன்னு. ரொம்ப பயமுறுத்துறீங்க.(சும்மா தமாசுக்கு)
rpt.....
இரண்டு பதிவையும் படித்தேன் பங்காளி !!! இப்பயே 80 % Veg , 20 %Non veg தான் சாப்பிடுறேன். குறைத்து கொள்ள முயற்சிசெய்கிறேன்...வாழ்த்துக்கள்
@GSV:
//இரண்டு பதிவையும் படித்தேன் பங்காளி !!! இப்பயே 80 % Veg , 20 %Non veg தான் சாப்பிடுறேன். குறைத்து கொள்ள முயற்சிசெய்கிறேன்...வாழ்த்துக்கள்//
பங்காளி! நல்ல முடிவைத் தான் எடுத்திருக்கீங்க! உங்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!
சைவ உணவு பொருட்களும், இன்று மருந்தடிக்காமல் கிடைக்கா! அவைகளின் வழியேவும், ரசாயனங்களை உட்கொண்டு, நமது உடலை பாழ்படுத்தி வருகிறோம்!
ஜீவகாருன்யத்தின் அடிப்படையிலும், ஜீரண வசதிக்காகவும், வயது ஏற எற, அசைவ உணவுகளிடம் இருந்து சிறிது, சிறிதாக விடுபடுவோம்!
அசைவப் பிரியர்கள், பழக்கத்தை கைவிட முடியாவிடின், மீனை மட்டும் தொடர்ந்து கொண்டு, மற்றதை கை விடலாம்!
அண்ணே, இனிமே பிரியாணி சாப்பிடணுமுன்னு தோணும்போதெல்லாம் கொஞ்சம் பயமாத்தான் இருக்கும் போலிருக்கு! இம்புட்டு வியாதி வருமா?
அடிச்சுத் தூள் கிளப்புங்க!
மிகவும் அருமையான பதிவு.
ச்ளி,ஜலதோஷம்,தலைவலி பற்றி கொஞ்சம் எழுதுங்களேன்.
90% மக்கள் இதனால் தான் அவதிபடுகிறார்கள்.
//பன்னீர் தெளிக்கிறோமில... ப்ளீஸ்... கொஞ்சம் தலை குனியுங்க...
தினமும் உங்க் பன்னீரீல் நனைந்து எனக்கும் ஜலதோஷம்.
பங்காளி நல்ல பதிவு.அடுத்த பாகத்தையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்..
பங்காளி நம்ம மக்கள் ஒரு வழி பண்ணாம விட மாட்டீங்க போலிருக்கே....
நீங்க சொல்ற எல்லா தகவலும் ரொம்ப பயனுள்ளதா இருக்கு... இதை நம்ம மக்கள் கொஞ்சம் கொஞ்சமா முயற்சி செஞ்சு பாத்தாதே மருத்துவமனைகளே தேவைப்படாது என்று நினைக்கிறேன்..
தொடரட்டும் உங்கள் நலப்பணி... வாழ்த்துக்கள்..
பங்காளி சிங்கம் மாதிரி பல்லூ, நகம் வளர என்ன செய்யனும்??
@ரம்மி:
//சைவ உணவு பொருட்களும், இன்று மருந்தடிக்காமல் கிடைக்கா! அவைகளின் வழியேவும், ரசாயனங்களை உட்கொண்டு, நமது உடலை பாழ்படுத்தி வருகிறோம்!//
நீங்க சொன்னது சரிதான் நண்பா! ஆனா சைவத்தை விட அசைவ உணவு அதிக டேஞ்சர்! அதுதானே புதுசு புதுசா தினுசு துனுசா பல நோய்ங்க நம்மை தாக்குது.
//அசைவப் பிரியர்கள், பழக்கத்தை கைவிட முடியாவிடின், மீனை மட்டும் தொடர்ந்து கொண்டு, மற்றதை கை விடலாம்!//
இதுவும் சரிதான்.ஆனால் மீனை குழம்பு வைத்து சாப்பிட சொல்லுங்க. Fish fry-ன்னு இறங்கினா ஆபத்து தான்.
@சேட்டைக்காரன்:
//இனிமே பிரியாணி சாப்பிடணுமுன்னு தோணும்போதெல்லாம் கொஞ்சம் பயமாத்தான் இருக்கும் போலிருக்கு! இம்புட்டு வியாதி வருமா?//
விஷயத்தை புரிஞ்சிகிட்டீங்க இல்ல சேட்டைகாரரே! ரொம்ப மகிழ்ச்சி!
@சரவணக்குமார்:
நண்பா! இனி உங்கமேல கொஞ்சமா பன்னீர் தெளிக்கிறேன். போதுமா?
//சளி,ஜலதோஷம்,தலைவலி பற்றி கொஞ்சம் எழுதுங்களேன்.
90% மக்கள் இதனால் தான் அவதிபடுகிறார்கள்.//
நண்பரே! அதைபற்றி தான் முன்பே எழுதி இருக்கிறேன். நீங்க படிக்கவில்லையா? மேலேயே, பன்னீர் சொம்புக்கு பக்கத்திலேயே இருக்கு பாருங்க!
"இயற்கை மருத்துவத்தை பத்தி ஒன்னும் தெரியாதா? கீழே இருக்கிற பதிவுகளை முதல்ல படிச்சிடுங்க! ப்ளிஸ்!!!"
இப்படி இருக்கிற இடத்தில அதைப் பற்றியும் ரொம்ப தெளிவா எழுதி இருக்கேன். முதல்ல அதை படிங்க நண்பரே!
நீங்க சொல்றது பயனுள்ளதா இருக்கு தொடருங்கள்
@ஆர்.கே.சதீஷ்குமார்:
@வெறும்பய
@சௌந்தர்
//நீங்க சொல்ற எல்லா தகவலும் ரொம்ப பயனுள்ளதா இருக்கு... இதை நம்ம மக்கள் கொஞ்சம் கொஞ்சமா முயற்சி செஞ்சு பாத்தாதே மருத்துவமனைகளே தேவைப்படாது என்று நினைக்கிறேன்..//
உண்மை தான் நண்பரே! உங்களோட பாராட்டுகளையும் தலைவணங்கி ஏத்துக்கிறேன். நன்றி நண்பர்களே
@TERROR-PANDIYAN(VAS):
//பங்காளி சிங்கம் மாதிரி பல்லூ, நகம் வளர என்ன செய்யனும்??//
டெரர் பங்காளி! நீங்க ரொம்ப லேட் பண்ணிட்டீங்களே! ஒவ்வொரு குழந்தை பிறக்கும்போதும், நீ என்ன ஆகணும்னு கடவுள் கேட்பாராம். அப்போ ஒன்னு ஒன்னு ஒரு விதமா சொல்லுமாம்.
நீங்க பிறக்குறதுக்கு முன்னாடி, உங்களையும் கேட்டிருப்பாரு கடவுளு! அப்போ chance-ஐ மிஸ் பண்ணிட்டீங்களே பங்காளி!
இனி அடுத்த ஜென்மம் வர்ற வரைக்கும் வெயிட் பண்ண வேண்டியது தான். வேற வழியே இல்ல...
தன் சதையை வளர்க்க பிற ஜீவன்களின் சதையை புசிக்க வேண்டி இருப்பது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றுதான். அதை உண்பதால் ஏற்படும் ஆரோக்கிய கேட்டை எண்ணியாவது இனி நாம் அதை கைவிட வேண்டும்.
மிக சிறந்த பகிர்வு கொடுத்தமைக்கு நன்றி நண்பரே.
நல்ல பகிர்வு பங்காளி
ஆனா நான் ஏற்கனவே சைவங்க பங்காளி
நீங்க சொன்ன மாதிரி 6வது படிக்கும்போது என்னோட கிளாஸ்க்கு எதிரிலேயே ஆட்டுக்கறிக்கடை இருந்தது. அதுல வெட்டற ஆட்டோட நிலையப் பாத்து பாத்து அப்பவே என்ன மாத்திகிட்டேன்
இருந்தாலும் அத ஞாபகப்படுத்தினதுக்கு தேங்க்ஸ் பங்காளி
//நண்பரே! அதைபற்றி தான் முன்பே எழுதி இருக்கிறேன். நீங்க படிக்கவில்லையா? மேலேயே, பன்னீர் சொம்புக்கு பக்கத்திலேயே இருக்கு பாருங்க!
ஆமாம்,பார்த்தேன்.மிக்க நன்றி,உங்கள் எழுத்து நடைக்கு ரசிகன் ஆகிவிட்டேன்.
நம்ம ஊரு குப்பனுக்கும், சுப்பனுக்கும் புரிகிற மாதிரி எளிமையாக எழுதியுள்ளீர்கள்.
அப்பு.. எனக்கு இந்த பதிவு தேவையே இல்லீங்கோ..
கவலைப் படாதீங்க.. நா பிறந்தது முதல் அசைசம் சாப்பிட்டதில்லீங்கோ.. இனிமே சாப்பிடவும் மாட்டேங்கோ..
அதான் அப்படி சொன்னேன்..
தொடர்ந்து எழுதுங்கள்.. பலபேருக்கு உபயோகமா இருக்கும்..
சம்மந்தி நீங்க சொல்றது சரிதான். நாங்கள்ளா ஆடு, கோழி சாமிக்கே கொடுக்கறவங்களாச்சே. நிறுத்த சொன்னா எப்படி முடியும்?
எல்லாரும் பங்காளின்னாங்க. நான் என்ன சொல்றதுன்னு யோசிச்சேன் சம்மந்தி நல்லாயிருந்துச்சு. பங்காளின்னா அண்ணன் தம்பி, சம்மந்தின்னா அக்கா தம்பி அல்லது அண்ணன் தங்கை.
அடுத்ததில் விரிவாக பேசுவோம்.
தாவரங்கள் உங்களுக்காக விளைகின்றன,பழுக்கின்றன என்று எப்படி முடிவு செய்தீர்கள்.
உணவு உற்பத்தியின் வயது என்ன? மனித சமூகத்தின் வயது என்ன?
கற்பிதங்களை முன்னிறுத்துவதை தவிர இடுகையில் வேறு ஒன்றுமில்லை.
நம்ம வீட்டுப் பக்கம் தல காட்டுனதுக்கு நன்றி. நான் Vegeterianதான்.ஆனால் என்னால் கடைபிடிக்க முடியவில்லை என் தொழில் அப்படி.தினமும் வாடிக்கையாளர்களுக்கு செல்லும் ஒவ்வொரு உணவையும் ஒரு மேசைக் கரண்டி ருசித்து சரிபார்த்து அனுப்பியே...!!! நாளொன்றுக்கு குறைந்தது 100க்கு மேல்...
@Kousalya:
//தன் சதையை வளர்க்க பிற ஜீவன்களின் சதையை புசிக்க வேண்டி இருப்பது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றுதான். அதை உண்பதால் ஏற்படும் ஆரோக்கிய கேட்டை எண்ணியாவது இனி நாம் அதை கைவிட வேண்டும்.//
பதிவின் மூல கருத்தை விளங்கி கொண்டதற்கு நன்றி தோழி!
VELU.G:
//நீங்க சொன்ன மாதிரி 6வது படிக்கும்போது என்னோட கிளாஸ்க்கு எதிரிலேயே ஆட்டுக்கறிக்கடை இருந்தது. அதுல வெட்டற ஆட்டோட நிலையப் பாத்து பாத்து அப்பவே என்ன மாத்திகிட்டேன்//
ஓ.. அப்படியா? கேட்கவே ரொம்ப சந்தோஷமா இருக்குது நண்பரே! உங்க அனுபவத்தை பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி!
ஒரு முடிவுல தான் இருக்கீங்க.... பேசாம ஒரு பட்டியல் போட்டு குடுத்துடுங்க எதை மட்டும் சாப்பிடனும்னு. அது பெட்டர்.....
நல்ல பதிவு
@சரவணக்குமார்:
//ஆமாம்,பார்த்தேன்.மிக்க நன்றி,உங்கள் எழுத்து நடைக்கு ரசிகன் ஆகிவிட்டேன்.
நம்ம ஊரு குப்பனுக்கும், சுப்பனுக்கும் புரிகிற மாதிரி எளிமையாக எழுதியுள்ளீர்கள்.//
பதிவுலகில் காலடி எடுத்து வைத்து ஒரு மாதத்திற்குள் எனக்கு அருமையான நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள். ஓ அந்த ஆண்டவனுக்கு மிகுந்த நன்றிகளை சொல்ல கடமைபட்டிருக்கின்றேன். உங்களுக்கும் நன்றிகள் சரவணக்குமார். நான் பாக்கியசாலி!
@Madhavan: அண்ணாச்சி! உங்க ஆதரவையும், ஊக்கத்தையும் தொடர்ந்து கொடுத்து உற்சாகப்படுத்தறீங்க!
ரொம்ப சந்தோஷம். உங்களை மாதிரி நல்ல மனம் படைத்தோர் எனக்கு ஆதரவா இருக்கும்போது எனக்கு ஒரு பயமும் இல்லை. அந்த இறைவனுக்கு நன்றி!
Americanized way of nonveg eating is getting popular in India. This leads to many new deseases in India. If you are interested on this watch the documentary "Food Inc". This details how the food we are getting in markets is processed.
This is the same case for vegetarian too. Tomoto is DNA altered (mixed with frog DNA). So that the freshness in tomoto lasts longer than the natural one. Now just tell, whether this tomoto is a veg item or non veg item?
Please write a blog about the DNA altered vegetables too.
@ஜெயந்தி:
//எல்லாரும் பங்காளின்னாங்க. நான் என்ன சொல்றதுன்னு யோசிச்சேன் சம்மந்தி நல்லாயிருந்துச்சு. பங்காளின்னா அண்ணன் தம்பி, சம்மந்தின்னா அக்கா தம்பி அல்லது அண்ணன் தங்கை.//
உறவு முறை சொல்லி கொடுத்த ஜெயந்தி அக்கா! நீங்க வாழ்க!
//நாங்கள்ளா ஆடு, கோழி சாமிக்கே கொடுக்கறவங்களாச்சே. நிறுத்த சொன்னா எப்படி முடியும்?//
அக்கா! புத்தி இல்லாத நேரத்தில மனுஷன் தப்பு செய்திடறான். ஆனா அவனுக்கு நல்ல புத்தி வந்த உடனே அவனே திருந்திடறான்.
எல்லா சாமிகளும் கருணையின் வடிவாதானே இருக்காங்க. அப்படிபட்ட சாமிகள் ஆடு, கோழிகளை பலியிட சொல்லுமா?
இன்னைக்கி மனுஷன் புத்தி கெட்டு போய் அப்படி தப்பு செய்றான். அவன் நல்லபடியா திருந்தட்டும்னு கடவுள்கிட்ட வேண்டிக்கொள்ளலாம். என்ன அக்கா நான் சொல்றது?
hi co brother or buddie ,(pangaali in english)thanks for translating my thanglish comment in pure tamil.i am a vegetarian.but used to eat fish even that has become allergic to me nowadays .bcos i dont get fresh fish the frozen fish doesnt agree with my systems.people who travel via vyasarpadi bridge or old 42 bus route perambur will never in their life eat beef .what youve said is right.recent years antisocial behaviors have increased every where
.and what youve said about ulcerative colitis is very worst of all .in severe cases anus rectum is stitched forever .the person has to clean their own faeces that is stored in a smaal bag thats attached to their body .if you goto google can find details about this.pangaali i wanted to write in tamil i dont have that facility.(a friend 40 yr lady was operated for this i personally know how she suffered she used to eat beef every day)only now i noticed that i could translate by myself.shall try next time.
Sorry. Small correction. It is genetically modified potato (with frog DNA).
For more information,
http://www.scidev.net/en/news/gm-potato-uses-frog-gene-to-resist-pathogens.html
@எஸ்.கே: //அடுத்ததில் விரிவாக பேசுவோம்.//
உங்களின் கருத்துக்காக காத்திருக்கேன் நண்பரே! கடைசி பாகத்தை நாளை வெளியிடுகின்றேன். படித்து பார்த்து உங்களின் கருத்தை சொல்லுங்கள்.
@Anonymous://தாவரங்கள் உங்களுக்காக விளைகின்றன,பழுக்கின்றன என்று எப்படி முடிவு செய்தீர்கள்.//
பெயர் சொல்ல விரும்பாத நண்பரே! உங்களுக்கு, முதலில் என்னுடைய வணக்கங்களையும், நன்றிகளையும் தெரிவித்து கொள்கின்றேன்.
ஆமாம்! மனிதன் தாவிரங்களை உண்ணும்படியாகத் தான் படைக்கபட்டிருக்கின்றான். இந்த கட்டுரையின் முதல் பாகத்தை படித்தீர்களா நண்பரே?
//உணவு உற்பத்தியின் வயது என்ன? மனித சமூகத்தின் வயது என்ன?//
உணவு உற்பத்தி மிகவும் தாமதமாகவே தோன்றிய ஒரு விஷயம். மனிதன் குரங்கிலிருந்து வந்ததை பற்றி சொல்லி இருக்கின்றேன். தாவிர பட்சினியாக இருந்தவன், சிறுக சிறுக மாமிசபட்சினியாக மாறிவிட்டான். அது தான் நான் சொல்லி இருப்பது.
ஆரோக்கியமான கருத்து மோதல்களுக்கு நன்றி நண்பரே!
@Chef.Palani Murugan, LiBa's Restaurant:
// நான் Vegeterianதான்.ஆனால் என்னால் கடைபிடிக்க முடியவில்லை என் தொழில் அப்படி.தினமும் வாடிக்கையாளர்களுக்கு செல்லும் ஒவ்வொரு உணவையும் ஒரு மேசைக் கரண்டி ருசித்து சரிபார்த்து அனுப்பியே...!!! நாளொன்றுக்கு குறைந்தது 100க்கு மேல்..//
என்ன செய்வது செஃப் பங்காளி! உங்களின் தொழில் அப்படி! என்னால் நன்றாக புரிந்து கொள்ள முடிகிறது. அடிக்கடி உபவாசம் இருந்து உங்களின் ஆரோக்கியத்தை காத்துக்கொள்ளுங்கள்.
தொழிலோடு சேர்ந்து ஆரோக்கியமும் முக்கியம் அல்லவா?
mnb
@அருண் பிரசாத்:
//ஒரு முடிவுல தான் இருக்கீங்க.... பேசாம ஒரு பட்டியல் போட்டு குடுத்துடுங்க எதை மட்டும் சாப்பிடனும்னு. அது பெட்டர்.....//
அருண்! இது வரை எழுதியதை எல்லாம் படிச்சி இருக்கீங்க! உங்களுக்கே தெரிஞ்சிருக்கும், எது எது சாப்பிட்டா நல்லது, எது எது சாப்பிட்டா கெட்டதுன்னு.
புரியலைன்னா இன்னொரு முறை என்னுடைய பழைய பதிவுகளை கொஞ்சம் படிச்சிடுங்க அருண்!
@Sridhar:
//Americanized way of nonveg eating is getting popular in India. This leads to many new deseases in India.//
உங்களோட வருத்தத்தை பதிவு செய்ததற்கு நன்றி நண்பரே!
//This is the same case for vegetarian too. Tomoto is DNA altered (mixed with frog DNA). So that the freshness in tomoto lasts longer than the natural one. Now just tell, whether this tomoto is a veg item or non veg item?//
//Sorry. Small correction. It is genetically modified potato (with frog DNA).//
நண்பரே! எனக்கு இது புதிய தகவல். தகவல் தந்ததற்கு நன்றி! இப்படி சைவ உணவிலேயும் அசைவம் கலக்குறாங்களா? இது என்ன ஒரு நாகரீகமோ? பின்னே மனிதனுக்கு ஆரோக்கியம் இல்லாம ஏன் போகாது?
//Please write a blog about the DNA altered vegetables too.//
கண்டிப்பா, இதைபற்றி அதிகமாக படித்து தெரிந்து கொண்டு ஒரு பதிவினை இடுகின்றேன் நண்பரே!
// இதனால இதய வால்வுகள் எல்லாம் அடைபட்டு கடைசியில மாரடைப்பு வந்து நிரந்திரமா ஓய்வு எடுக்க போய் விடுகிறான் மனுஷன்.//
மாரடைப்புக்கு கூட காரணமா அமையுதா ..?
அட கொடுமையே .. இத்தன நோய்கள் வருதா ..? நானும் முடிஞ்ச அளவுக்கு குறைச்சுக்கிறேன் ..!!
வீட்டுல நாய் வளர்க்கிறவர்கள் நாய்காவது அசைவம் வாங்கிப் போடலாமா கூடாதா ? நாயே வளர்க்கப்படாதா ?
@Anonymous: உங்களின் பேரு என்ன பங்காளி! தெரிந்து கொள்ள ஆவல்.
//what youve said about ulcerative colitis is very worst of all .in severe cases anus rectum is stitched forever .the person has to clean their own faeces that is stored in a smaal bag thats attached to their body .if you goto google can find details about this//
//(a friend 40 yr lady was operated for this i personally know how she suffered she used to eat beef every day)//
பங்காளி! உங்களின் அனுபவங்களை விரிவாக பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி! நீங்கள் மலக்குடல் ஆபரேஷனை பற்றி சொன்ன தகவல்கள் புதிய தகவல்களாக இருக்கின்றது. மிக்க நன்றி!
நீங்கள் இங்கு கொடுத்திருக்கும் தகவல்கள், இதை படிப்போருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகின்றேன்.
//வீட்டுல நாய் வளர்க்கிறவர்கள் நாய்காவது அசைவம் வாங்கிப் போடலாமா கூடாதா ? நாயே வளர்க்கப்படாதா ? //
புலியே வளத்தாலும், அத சைவ உணவு சாப்பிடுரமாதிரி செய்ஞ்சுடுங்க.. (குட்டி முதல் அப்படி பழகினால், அது கூட மாமிசம் வாடை தெரியாம வளர்ந்துடும்..)
@ப.செல்வக்குமார்:
//மாரடைப்புக்கு கூட காரணமா அமையுதா ..? அட கொடுமையே .. இத்தன நோய்கள் வருதா ..? நானும் முடிஞ்ச அளவுக்கு குறைச்சுக்கிறேன் ..!!//
நன்றி செல்வா! இப்பத்தான் அண்ணனுக்கு ஏத்த தம்பியா இருக்க. நோய்நொடி இல்லாம சௌக்கியமா 100 வருஷம் வாழணும்னு வாழ்த்தறேன் உன்னை செல்வா!!!
@கோவி.கண்ணன்:
//வீட்டுல நாய் வளர்க்கிறவர்கள் நாய்காவது அசைவம் வாங்கிப் போடலாமா கூடாதா ? நாயே வளர்க்கப்படாதா ?//
அண்ணாச்சி! நாய் மாமிசபட்சினி தானே! அதுக்கு தாராளமா வாங்கி போடுங்க. ஜீவகாரண்யம் பார்க்கிறவங்க, நாய்க்கும் சைவ உணவு வைச்சிட்டு போங்களேன். நாய் என்ன, 'நான் சாப்பிடமாட்டேன்னு' அடம்பிடிக்க போகுதா என்ன?
@Madhavan:
//புலியே வளத்தாலும், அத சைவ உணவு சாப்பிடுரமாதிரி செய்ஞ்சுடுங்க.. (குட்டி முதல் அப்படி பழகினால், அது கூட மாமிசம் வாடை தெரியாம வளர்ந்துடும்..)//
அருமை அண்ணாச்சி! நான் பதிலை சொல்றதுக்கு முன்னாடியே நண்பருக்கு நீங்க பதிலை சொல்லிட்டீங்களே! உங்க பதில் ரொம்ப நல்லா இருக்குது அண்ணாச்சி!
ennadhu naan yaara .i am nirmala (anonymous)
i think its better to give my name while commenting as anonymous.like nature medicine could you give the details ,effects of microwave cooking also.some say its not good to use microwave .
உங்கள் பதிவை http://thatstamil.oneindia.in/ என்ற வலையில் bookmarks/blog option-ல் இணைக்கவும்.
இது மேலும் நம்மை போன்ற பங்காளிகள் படிக்க உதவியாக இருக்கும்.
@Anonymous
நிர்மலா மைக்ரோவேவ் சமையலை பற்றி எழுத சொல்லி இருக்கிறீர்கள். கண்டிப்பாக எழுதுகின்றேன்.
நன்றி தோழி!
@சரவணக்குமார்
நண்பரே! நீங்கள் சொன்னது போன்று அந்த வலைதளத்திலும் இணைத்து விட்டேன்.
உங்களின் தகவலால் பலருக்கும் நன்மை விளையும் என்று நம்புகின்றேன். நன்றி நண்பரே!
சொல்றேன்னு தப்பா நினைக்க வேணாம். ரொம்ப நாளா உங்க பதிவுகள் படிக்கிறேன்.
அனைத்து உணவுகளிலும் நல்லதும் கெட்டதும் இருக்கு.அத சாப்பிட்டா இந்த நோய் வரும்...இத சாப்பிட்டா அந்த நோய் வரும்-ன்னு கேட்டு கேட்டு சலிச்சுப் போச்சு...தினமும் சோறு சாப்பிட்டாலும் பிரச்சனைன்னு கேள்விப்பட்டேன்.
பால், எண்ணை, வெண்ணை, உப்பு, தேங்காய், மிளகாய், வெந்தயம் இன்னும் என்னென்ன சமையலுக்கு பயன்படுத்துரோமோ எல்லாமே உடம்புக்கு கெடுதல் தான்...அப்போ எதத் தான் திங்கிறது??? சைவம் மட்டும் என்ன உடம்புக்கு ரொம்ப நல்லதா? இல்ல காய்கறி தான் நல்லதா?? ரொம்ப உத்துப் பார்த்தா எல்லாமே கெட்டதுதான்..அப்போ எதத் தான் சாப்பிடுரது????
தலைப்பே டெர்ரரா அதத் திங்காத இதத் திங்காதன்னு வைக்கிறது ரொம்ப பேரை பயமுறுத்தும் பாஸ்...கொஞ்சம் பேரு இதே பொழப்பா திரியுரானுங்க...
மக்களே உங்களுக்கு புடிச்சத பயப்படாமா சாப்பிடுங்க...அது ஜீரணிக்கிரதுக்கு கொஞ்சம் வேலை செய்ய்ங்க அது போதும்...என்னைக்கிருந்தாலும் சாவு நிச்சயம், வாழும் போது, சந்தோசமா வாழுங்க, முடிஞ்சா அடுத்தவனுக்கு கொஞ்சம் உதவி பண்ணுங்க...
@Phantom Mohan
முதலில் உங்களின் வருகைக்கும், கருத்துகும் நன்றி சொல்றேன் பாஸ்!
//தலைப்பே டெர்ரரா அதத் திங்காத இதத் திங்காதன்னு வைக்கிறது ரொம்ப பேரை பயமுறுத்தும் பாஸ்...கொஞ்சம் பேரு இதே பொழப்பா திரியுரானுங்க...//
உங்களுக்கு எது சரின்னு படுதோ அதை செய்யுங்க!
இது ஜனநாயக நாடு!
பிடிச்சதை செய்ய உரிமை தரபட்டுள்ள நாடு!
உங்க ஆரோக்கியத்தில உங்களுக்கு அக்கறை வரும் காலம் வரும் இல்லையா? அது வரை நான் காத்திருக்க தயார்!
பங்காளி சாப்பிடற சாப்பாட்டுக்கு செரிமாணம் ஆகற மாதிரி ஏதாவது வேலை செய்யனும்....அத விட்டுட்டு ..கொழூப்பு சேருதுன்னா? நீ சோம்பேறின்னு தெரியுது...இதுக்கு 50+ மேதைங்க ஆமாம் சாமி போட்டு பின்னுட்டம் வேற.....?! சரி...தாவரத்துக்கு உயிர் இல்லைன்னு யாரா பங்காளி உனக்கு சொன்னா? மூளைய இப்பவாச்சும் நீ பயன்படுத்த பாரு...!!
@கெட்டவன்
//சாப்பிடற சாப்பாட்டுக்கு செரிமாணம் ஆகற மாதிரி ஏதாவது வேலை செய்யனும்....அத விட்டுட்டு ..கொழூப்பு சேருதுன்னா?//
நீங்க சொல்றது சரிதான் நண்பரே! இன்னைக்கி, மனுஷங்க சாப்பிடறாங்களே தவிர உடல் உழைப்பு இல்ல. அதனால தான் பல நோய்கள் வர்றது.
//தாவரத்துக்கு உயிர் இல்லைன்னு யாரா பங்காளி உனக்கு சொன்னா?//
அதுங்களுக்கு உயிர் இருக்குங்கிற விஷயம் எனக்கு முன்பே தெரியும் பங்காளி!
ஒய் பங்காளி மீனுக்கு மட்டும் உயிர் கிடையாதாக்கும்!!!!!
Appo pangali, Udal valimai pera enna athaavathu,
Thasaigal matrum narambugal murukkera enna saapiduvathu?
பழப்பிரியர்களுக்கு பரம்பரை நோய்கள் கூட குணமாகும்.
சைவப் பிரியர்களுக்கு அவ்வப்போது வரக்கூடிய நோய்கள் கூட வராது.
ஆனால், அசைவப் பிரியர்களுக்கு பரம்பரை நோய் உட்பட அவ்வப்போது வரக்கூடிய நோய்களும் வரும்.
வாயே நோய்வாய்ப்படுதலுக்கு மூலக்காரணம் என்பதால்தான், நம் முன்னோர்கள் நோய்வாய் என்று நோயோடு வாயையும் சேர்த்து சொன்னார்கள்.
இதற்கு மேலும் மாமிசம் தின்னாமல் இருக்க முடியவில்லையா? தயவு செய்து எங்களுக்காக நிறுத்தாதீர்கள். தாராளமாக சாப்பிடுங்கள்.
ஆனால், நோய் வந்தால், கால்நடை மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்று பாருங்கள். ஒருவேளை குணமாகலாம்.
You finally found the best spot to compare and purchase Invicta Grand Diver [url=http://invicta-grand-diver.pkak.com/] Invicta Grand DiverWatches.[/url]
In our site you can compare the prices from high quality shops.
You can find full details and description of our Invicta Grand Diver Watches.
Here you'll be able to buy the right [url=http://invicta-grand-diver.pkak.com/] Invicta Grand Diver watches[/url] that fits your needs and budget, and most important, those you wish to have.
Great and that i have a neat present: Who To Contact For House Renovation residential renovation contractors
Post a Comment
பங்காளி! சரக்கு எப்படி? விக்குமா... விக்காதா...??? கொஞ்சம் சொல்லிட்டு போங்க!!!