பன்னீர் தெளிக்கிறோமில... ப்ளீஸ்... கொஞ்சம் தலை குனியுங்க...

வணக்கம் பங்காளீ! வாங்க, சவுக்கியங்களா? நம்ம வலைபதிவு பக்கம் வந்ததுக்கு நன்றீங்கோ...Get this Widget

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே! என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி! நண்பர்களே!

மனிதர்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் சிந்தனைகள், இங்கு சிதறிகிடக்கிறது. படித்து பார்த்து உங்கள் கருத்துக்களை இடவேண்டுகிறேன்!

தொடர்ந்து, இந்த வலைபதிவுக்கு உங்களின் ஆதரவை தாருங்கள்!!! நன்றி! தொடர்ந்து வருக!!!

இந்த நாள், உங்களுக்கு, இனிய நாளாக அமைவதாக!!!

பாசகார பங்காளி கூட்டமுங்க! நீங்களும் கூட வாறீகளா?

14-Sep-2010

நோய்ங்க வேணாமுன்னா... அசைவம் வேணாமுங்க!!!இன்னிக்கி உலகத்தில, சைவ உணவை விட அசைவ உணவத்தான் அதிகமான பேரு விரும்புறாங்க. அதனால நோய்ங்க எல்லாம் அதிகமா இருக்கிறதில ஒரு அச்சரியமும் இல்லை இல்லையா பங்காளி!

உங்களுக்கு எல்லாம் ஒரு விஷயம் சொன்னா Shocking-ஆ இருக்கும். மனுஷனை, கடவுள் அசைவம் சாப்பிடற மாதிரி படைக்கபடல. இதை கேட்டு எல்லோரும் ஷாக் ஆயிட்டீங்களா? காரணம் என்னான்னு சொல்றேன் கேளுங்க. அப்போ உண்மை என்னான்னு விளங்கும்.

இப்படி மனுஷனால வெறும் பற்களையும் நகங்களையும்
வெச்சி வேட்டையாடவே முடியாது... யோசிச்சி பாருங்க!

மனுஷனோட பற்களோட அமைப்பு, தாடை, வயிற்றின் அமைப்பு, குடலின் நீளம் எல்லாம் தாவரஉண்ணி (Herbivorous) விலங்குகளோட அதிகமா ஒத்துபோகுதே தவிர, மாமிசபட்சனிகளோடு கொஞ்சம்கூட ஒத்துபோகல. இந்த பாகங்கள் எல்லாம் மாமிசபட்சினி (Carnivorous) விலங்குகளுக்கு வேற விதமா இருக்கு!

மாமிசபட்சினிகளோட பற்கள் ஒரு விலங்கை பிடிச்சி சாவடிச்சி, அதனோட மாமிசத்தை பிடிச்சி இழுத்து திங்கிற மாதிரி அமைக்க பட்டிருக்கு. (Incisor பற்கள் – கூரிய நீண்ட பற்கள்) மனுஷனால அவனுடைய பற்களும் சரி, விரல் நகங்களும் சரி, அவைகளை மட்டுமே பயன்படுத்தி, வேற ஆயுதம் எதுவும் பயன்படுத்தாம மாமிசபட்சினிகளை போல, எந்த ஒரு விலங்கையும் சாவடிக்கவே முடியாது. மாமிசத்தையும் கடிச்சி, பிடிச்சி இழுத்து பச்சையா சாப்பிடவே முடியாது. (அது எந்த மாதிரி கொடுமையா இருக்கும்னு யோசிச்சி பாருங்க)

மனுஷனுக்கு தாவரபட்சினிகள போல உணவுகுழாய் ரொம்ப பெரிசா இருக்கும். அதனால தாவர உணவு, இந்த குழாய் வழியா பயணபட்டு மலக்குடலை அடையறதுக்கு, பல மணிநேரம் எடுத்துக்கொள்ளும். தாவிர உணவு அவ்வளவு சீக்கிரம் அழுகாது என்கிறதால இந்த உணவோட நீண்ட பயணத்தினால மனுஷனுக்கோ, தாவரபட்சினிகளுக்கோ பிரச்சனை ஏதும் இல்ல.

ஆனா மாமிசபட்சினிகளுக்கு அப்படி இல்ல. அதுங்களோட உணவு குழாய், அளவில சின்னது. அதுங்க சாப்பிடறது மாமிசம் என்கிறதால, அவையெல்லாம் சீக்கிரம் ஜீரணிக்கபட்டு வெளியே தள்ளபட்டுவிடணும்னு தான் இயற்கை அப்படி படைச்சிருக்கு. தாவிர உணவோடு ஒப்பிட்டு பாத்தா மாமிச உணவு சீக்கிரம் அழுகும்னு நமக்கு எல்லாம் தெரிஞ்சது தானே பங்காளி! உணவு ஜீரணம் ஆகும்போதே அழுகினா அது உடம்புக்கு டேஞ்சர்ன்னு தான் இந்த மாதிரி சின்ன அளவுல உணவுகுழாய் அமைப்பு. புரிஞ்சுதா பங்காளி?

அறிவியல் ஆராய்ச்சி செய்றவங்க, மனுஷங்க முதன்முதல்ல தாவிரங்களை மட்டும் தான் உணவா உண்டு வந்திருக்காங்கன்னு ஆராய்ச்சி செஞ்சி கண்டுபிடிச்சிருக்காங்க. அவனுடைய உடல், மன அமைப்பு இயற்கையா அப்படி தான் இருக்கு.

மாமிசபட்சிகள் கோபமாவும் ஆக்ரோஷமாகவும் இருக்கிறதை நாம பாத்திருக்கோம் இல்ல. ஆனா தாவிரபட்சிகள் சாந்தமா இருக்கிறதும் நமக்கு தெரியும். மனுஷனோட இயல்பும் இயற்கையா சாந்தகுணம் தான். நாம தான் மாமிச உணவா சாப்பிட்டு சாப்பிட்டு, ‘உள்ளே மிருகம் தூங்குது..வேணாம் அதை தட்டி எழுப்பாதேன்னு டயலாக் பேசிட்டு இருக்கோம்.

சரி ஒரு கேள்வி கேட்கிறேன் பங்காளி! அதுக்கு பதிலை சொல்லு! உணவோட நோக்கம் தான் என்ன?

பதில் தெரியலையா! சரி நானே சொல்லிடறேன். உணவோட நோக்கம் சும்மா வயித்தை நிறப்பறதோ, இல்லன்னா நாக்கோட ஆசையை தீர்கறதோ இல்ல. அதோட உண்மையான நோக்கம் உடலுக்கு ஆரோகியம் கொடுத்து மனுஷனோட மனசையும், குணத்தையும் நல்ல விதமா வளர செய்றது தான்.

உனக்கு ஒன்னு தெரியுமா? உணவு தான் மனுஷனோட குணத்துக்கு அடிப்படை. அதனால, உணவுல, நம்ப நோக்கம் எப்படி இருக்கணும்னா, நம்மோட உடலுக்கும், மனசுக்கும் ஆரோகியம் கொடுத்து, ஆன்மீக தன்மையை நமக்குள்ள வரவழைச்சி, அன்பை, இரக்கத்தை, அமைதியை, அஹிம்சையை, நோக்கி நம்மை வழிநடத்துறமாதிரி இருக்கணும் அப்பு!


அன்பின் வடிவமான இயேசு பெருமான் சொல்றதை கேளுங்க! Man shall not live by bread alone, but by every word that proceedth out of the mouth of God   

இந்த வாக்கியத்தோட அர்த்தம் சாப்பிடறதுக்காக வாழாதே! சாப்பாட்டு ராமானா இருக்காதே! வாழறதுக்காக சாப்பிடுன்னு சொல்றாரு! அதுவும் தெய்வீகமான வாழ்வு வாழ சொல்றாரு! அவரு சொல்றது சரி தானே?


இது சம்பந்தமா இன்னும் கொஞ்சம் விஷயம் இருக்கு (இன்னமும் 2 பகுதிகள்) நாளையும், நாளை மறுநாளும் இதை பத்தி அவைகளை பற்றி பேசலாம். நீங்க எல்லோரும் கண்டிப்பா வந்திடுங்க! வருவீங்க இல்ல?

உங்க உணவு விஷயத்தால ஏற்பட்ட நன்மை தீமைகள் என்னென்னனு உங்க கருத்தை சொன்னீங்கன்னா எல்லோருக்கும் பயனா இருக்கும் இல்ல! 

அதனால எல்லோருமே கருத்தை சொல்லிட்டு தான் போகணும்.


இதனுடைய அடுத்த பகுதியை படிக்கணுமா அப்போ இங்கே அழுத்துங்க

50 மேதைங்க இதபத்தி என்ன சொன்னாங்கன்னா...:

அன்புடன் மலிக்கா said...

என்ன முழிக்கறீக!! எந்த வகையிலன்னு கேக்கறீங்களா...? எல்லாம் பங்காளி வகையிலத்தான். உங்ககிட்ட இருக்கிறத என்னோட பகிர்ந்துகோங்க. நான் என்கிட்ட இருக்கிறத உங்களோட பகிர்ந்துகிறேன். அப்போ நாம பங்காளிங்க தானே. என்ன ரைட்டா...?//


ரைட்டோ ரைட்டு. நாங்களும் வந்துட்டுப்போன தடம் வேணுமுல்ல.
http://niroodai.blogspot.com/

Anonymous said...

please go through latest reserch and health survey by world leading health institutes.vegeterian is not 100% safe,also its old concept and myth having veg food is healthier life.
now a days nonveg food strongly recommend by health experts.especially for childrens to grow stronger muscles and bones.

என்னது நானு யாரா? said...

@அன்புடன் மலிக்கா:

//ரைட்டோ ரைட்டு. நாங்களும் வந்துட்டுப்போன தடம் வேணுமுல்ல.//

தடம் பிடிச்சி வந்து பார்த்தேனுங்க, படிச்சேனுங்க, ரசிச்சி சிரிச்சேனுங்க! வணக்கமுங்க!

என்னது நானு யாரா? said...

@Anonymous:

பெயர் சொல்ல விரும்பாத நண்பரே! உங்களின் கருத்துக்கு நன்றி!

//egeterian is not 100% safe,also its old concept and myth having veg food is healthier life.
now a days nonveg food strongly recommend by health experts.especially for childrens to grow stronger muscles and bones.//

ஆங்கில மருத்துவ ஆராய்ச்சி பல விஷயங்களை சொல்லிபோடுதுங்க! அது தப்பா இல்லையான்னு கூட தெரியமாட்டேங்குதுங்க.

அலோபதி முறையில பல ஆராய்ச்சிகளை செஞ்சி பல கருத்துக்களை வெளியிடறாங்க!

வைன், பீர் குடிச்சா கூட நல்லது, பால் குடிச்சா நல்லது, முட்டை சாப்பிட்டா நல்லது, மாமிசத்தை அளவா சாப்பிட்டா நல்லது சாக்கலேட்டு சாப்பிட்டா நல்லது... இப்படி பல ஆராய்ச்சி முடிகள்னு அடிக்கடி வெளியிட்டுகிட்டே இருக்காங்க! இதெல்லாம் உண்மை தானா? சரியானது தானான்னு யாரும் கேட்கிற மாதிரி தெரியலைங்க...

நாமலே நம்ப உடமை வைச்சி ஆராய்ச்சி செய்துகலாம். நான் அப்படி தான் செய்றேனுங்க. அதனால் Authentic -ஆ எது நல்லது எது கெட்டதுன்னு நாமலே முடிவு செய்துக்கலாம். இயற்கை வாழ்வியல் ஆர்வலர்கள் எல்லோருமே அப்பிடி தானுங்க...

தங்கள் மேலேயே ஆராய்ச்சிகளை செய்து அனுபவ பூர்வமா முடிவுகளை எடுப்பாங்க..

நானும், என்னை போன்ற இயற்கை வாழ்வியல் ஆர்வலர்களும் நோய் இல்லாம ஆரோகியமா இருக்கிறோமுங்க.

அசைவம் சாப்பிடறதில்லை, பாலும் பால் பொருட்களும் சாப்பிடறதில்லை, காபி, டீ குடிக்கறதில்லை, அதிகமா மசாலா சேர்த்த உணவுகளை சாப்பிடறதில்லை. Refined Foods, Processed foods சாப்பிடறதில்லை.

சைவ உணவு, பச்சைகாய்கறி, பழங்கள் குறைஞ்ச பட்சம் தினமும் ஒரு வேலையாவது சாப்பிடறோம்.

வாரத்திற்கு ஒரு நாளாவது உடம்க்கு உபவாசம் மூலம் ஓய்வு கொடுக்கிறோம். Alkaline Foods அதிகமாய் சேர்த்து கொள்கின்றோம், Acidic Foods மிகவும் குறைவாகவே உண்கின்றோம்.

நோய்நொடி இல்லாம இருக்கிறோம்! நீங்களும் ட்ரை பண்ணலாமே நண்பரே!

Anonymous said...

குரங்கிலிருந்து மனிதனாக பரிணாமித்த பரிணாம வளர்ச்சிப் பாதையில் மனித மூளையின் வளர்ச்சிக்கு மாமிச உணவுமுறைதான் பங்களிப்பு செய்துள்ளது. வரலாற்றையும், அறிவியலையும் சரியாகப் படிக்கவும் புரளி கிளப்ப வேண்டாம். மற்றபடி மனிதனாக இன்றுள்ள நாமது உடல் கூறுகளும், உணவு முறையும் பல ஆயிரம் வருட பரிணாம வளர்ச்சிக்கு பிறகு ஏற்பட்டவை. எனவே, விலங்குகளுக்கும், மனிதனுக்கு வறட்டுத்தனமாக உடற்கூறியல் ஒப்புமை செய்வது அபத்தம். இந்த அபத்தத்தைத்தான் பால் விசயத்திலும் நீங்கள் செய்தீர்கள்.

ரம்மி said...

சைவமோ/ அசைவமோ ... செய்யும் வேலைக்கு எற்றவாரே, தேர்வு செய்து கொள்ள வேண்டும்! கடின வகை உடல் உழைப்புக்கு, அசைவம் கட்டாயம் தேவை! அலுவலக வகை வேலைகளுக்கு கஞ்சியே போதும்!

ரம்மி said...

அசைவம் கட்டாயம் எனில், வேக வைத்த கோழி, மீன், முட்டையின் வெள்ளைக் கரு.. இவைகள் மிகச் சிறந்தவை! எளிதில் ஜீரணிக்க முடிந்தவை!

என்னது நானு யாரா? said...

@Anonymous:

பெயர் சொல்ல விரும்பாத நண்பரே! நீங்கள் முதலில் வந்த நபரா அல்லது வேறு ஒருவரா என்று தெரியவில்லை. நீங்கள் இப்போது தான் வருகின்றீர்கள் என்றால் என்னுடைய வணக்கங்களும், நன்றிகளும். சரி விவாதத்திற்கு வருவோம்!

//குரங்கிலிருந்து மனிதனாக பரிணாமித்த பரிணாம வளர்ச்சிப் பாதையில் மனித மூளையின் வளர்ச்சிக்கு மாமிச உணவுமுறைதான் பங்களிப்பு செய்துள்ளது//

ஆமாம்! பல பல நோய்களை இலவசமாய் கொடுத்து பெரிய பங்களிப்பை செய்துள்ளது. நானும் ஏற்றுக்கொள்கின்றேன், உங்களின் கூற்றை!

//வரலாற்றையும், அறிவியலையும் சரியாகப் படிக்கவும் புரளி கிளப்ப வேண்டாம்.//

http://harekrishna.com/col/books/VEG

Sample-க்கு ஒன்று! இந்த வலைதளத்தில் சென்று படித்துபாருங்கள். புரளி எதனையும் கிளப்ப வில்லை.

//விலங்குகளுக்கும், மனிதனுக்கு வறட்டுத்தனமாக உடற்கூறியல் ஒப்புமை செய்வது அபத்தம்.//

நமது உடல்கூறுகள் மாமிசபட்சினிகளுடன் ஒத்துபோகவேயில்லை என்பது தான் உண்மை. அது தாவரபட்சினிகளுடன் தான் ஒத்துபோகிறது

http://www.celestialhealing.net/physicalveg3.htm

மேலே கொடுத்திருக்கும் லிங்கில் சென்று பாருங்கள் நண்பரே! நான் சொன்னதை விட அதிகமான தகவல்கள் கிடைக்கின்றன 

//இந்த அபத்தத்தைத்தான் பால் விசயத்திலும் நீங்கள் செய்தீர்கள்.//

நான் சொன்ன கருத்துக்கள் அத்தனைக்கும் ஆதாரம் இல்லாமல் சொல்லவில்லை. நீங்கள் எது என்று குறிப்பிட்டு சொன்னீர்கள் என்றால் அதனை பற்றி தெரிந்து கொள்ள எனக்கும் பயனாக இருக்கும்.

கருத்துக்கும், ஆரோகியமான விவாதத்திற்கும் நன்றி நண்பரே!

என்னது நானு யாரா? said...

@ரம்மி:

//சைவமோ/ அசைவமோ ... செய்யும் வேலைக்கு எற்றவாரே, தேர்வு செய்து கொள்ள வேண்டும்! கடின வகை உடல் உழைப்புக்கு, அசைவம் கட்டாயம் தேவை! அலுவலக வகை வேலைகளுக்கு கஞ்சியே போதும்!//

சரிதான் நண்பரே! உங்கள் கருத்து முற்றிலும் உண்மை. நோய்களால் அவதிபடுவோர் சரியானபடி கடின உடல்உழைப்பு அற்றோரே! ஆனால் வேறு சில விஷயங்களும் இதில் கவனிக்க வேண்டி உள்ளது.

அது இனி வருகின்ற பகுதிகளில் இருக்கின்றன.

//அசைவம் கட்டாயம் எனில், வேக வைத்த கோழி, மீன், முட்டையின் வெள்ளைக் கரு.. இவைகள் மிகச் சிறந்தவை! எளிதில் ஜீரணிக்க முடிந்தவை!

இவைபற்றியும் வருகின்ற பகுதிகளை நீங்கள் படித்த பின் உங்களின் கருத்தை அறிந்து கொள்ள ஆவல்.

Madhavan said...

மிருக மாமிசம் சாப்பிடுவதும், மனுஷ மாமிசம் சாப்பிடுவதும் ஒண்ணுதான்னு நா நெனைக்கிறேன்..
காய் கனி சாப்பிடுகிறீர்களே.... அதுவும் ஒரு உயிருலேருந்து வருதுன்னு சொல்லுறீங்களா....
'ஒரு உயிருலேருந்து வருது' ஆமா.. ஆனா. அதுவே உசுரு கெடையாது..

பங்காளி சொன்னா மாதிரி.. ஆரோக்கியமா நீண்ட நாளு நல்ல குணங்களோட வாழனும்னா.. அசைவ உணவு சாப்பிட வேண்டாம்னு நா கூட நெனைக்கிறேன்.

பங்காளி.. நீங்க போலந்து கட்டுங்க.. ஆமா..

Chitra said...

அன்பின் வடிவமான இயேசு பெருமான் சொல்றதை கேளுங்க! “Man shall not live by bread alone, but by every word that proceedth out of the mouth of God”

இந்த வாக்கியத்தோட அர்த்தம் சாப்பிடறதுக்காக வாழாதே! சாப்பாட்டு ராமானா இருக்காதே! வாழறதுக்காக சாப்பிடுன்னு சொல்றாரு! அதுவும் தெய்வீகமான வாழ்வு வாழ சொல்றாரு! அவரு சொல்றது சரி தானே?


......புது விளக்கமாக தெரியுது... புரிஞ்ச மாதிரியும் இருக்குது..... புரியாத மாதிரியும் இருக்குது..... ம்ம்ம்ம்.....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பால் சாப்பிட கூடாது, டீ, காபி சாப்பிடக் கூடாது, அசைவம் சாப்பிட கூடாது, தண்ணி அடிக்க கூடாது., என்கிற உங்களது பதிவுகள் அருமை. நானும் ஒரு முடிவுக்கு வந்துட்டேன். இனிமே உங்க ப்ளாக் பக்கம் வரக்கூடாதுன்னு. ரொம்ப பயமுறுத்துறீங்க.(சும்மா தமாசுக்கு)

அருமையான தகவல்கள் பங்காளி..

தமிழ் உதயம் said...

மனிதர்களை அசைவ உணவு உண்பதில், எது சரி எது தவறு, எது ஆரோக்கியம், எது ஆரோக்கியமற்றது என்று சொல்லி, சாப்பிடுபவர்களை ஏற்று கொள்ள் செய்வது சிரமமே. அசைவம் என்பது மிருகங்களின் புண் என்றார் ஒருவர். ஏற்று கொள்பவர்கள் ஏற்று கொள்ளலாம். ஏற்று கொள்ள வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை.

எஸ்.கே said...

அடுத்த பதிவையும் படிச்சிட்டு என் கருத்தை சொல்றேன் நண்பரே!

என்னது நானு யாரா? said...

@Chitra:

//புது விளக்கமாக தெரியுது... புரிஞ்ச மாதிரியும் இருக்குது..... புரியாத மாதிரியும் இருக்குது..... ம்ம்ம்//

அக்கா! என்ன இப்படி சொல்லிபோட்டீங்க! உங்களுக்கு எல்லாம் தெரியும்! நீங்க, அறிஞர் அண்ணாவுக்கு அடுத்து அறிஞர் அக்கான்னு இல்ல நினைச்சேன்.

என் நினைப்புல மண்ணை போட்டுட்டீங்களே!

என்னது நானு யாரா? said...

@Madhavan:

//பங்காளி சொன்னா மாதிரி.. ஆரோக்கியமா நீண்ட நாளு நல்ல குணங்களோட வாழனும்னா.. அசைவ உணவு சாப்பிட வேண்டாம்னு நா கூட நெனைக்கிறேன்.

பங்காளி.. நீங்க போலந்து கட்டுங்க.. ஆமா.//

ஆஹா ஆஹா!! இந்த ஊக்கமும் உற்சாகமும் கொடுக்க ஆளு இருக்கும் போது நமக்கென்ன கவலை. தலைவரே! நன்றி தலைவரே!

என்னது நானு யாரா? said...

@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா):

//நானும் ஒரு முடிவுக்கு வந்துட்டேன். இனிமே உங்க ப்ளாக் பக்கம் வரக்கூடாதுன்னு. ரொம்ப பயமுறுத்துறீங்க.(சும்மா தமாசுக்கு)//

அதுதானே பார்த்தேன்! நீங்க மட்டும் வராம இருந்த நீங்க ட்யூட்டி பார்க்கிற போலிஸ் ஸ்டேஷன் வாசல்லையே உட்கார்ந்து தர்ணா போராட்டம் செய்ய மாட்டேன். என்ன சிரிப்பு போலிசு பயந்திட்டீங்க இல்ல?

என்னது நானு யாரா? said...

@தமிழ் உதயம்:

//ஏற்று கொள்பவர்கள் ஏற்று கொள்ளலாம். ஏற்று கொள்ள வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை.//

நண்பரே! என் கருத்தை முழுக்க முழுக்க பிரதிபலிக்குது உங்க கருத்து!

எதுவும் கட்டாயம் இல்லையே இந்த ஜனநாயக நாட்டிலே. நோய் வராம பார்த்துக்கோங்கன்னு ஒரு தாயன்போடு சொல்றோம். அதை ஏத்துக்கிற மனபக்குவம் இருந்தா அவங்களுக்கு நல்லது.

அப்படி இல்லாதவங்களை என்ன செய்ய முடியும். அவர்களால, மருத்துவமனைகளுக்கும், டாக்டர்களுக்கும், மருந்து கம்பெனிகாரங்களுக்கும் நல்லதுன்னு சும்மா இருந்திட வேண்டியது தான்.

என்னது நானு யாரா? said...

@எஸ்.கே:

//அடுத்த பதிவையும் படிச்சிட்டு என் கருத்தை சொல்றேன் நண்பரே!//

இன்னமும் ரெண்டு பாகங்கள் இருக்கு தலைவரே! பொருமையாகவே எல்லா பாகங்களையும் படிச்ச பின்னாடி, உங்க கருத்து சொல்லுங்க! நான் ஆவலா காத்திருக்கேன்.

ப.செல்வக்குமார் said...

மாமிசத்துல இவ்ளோ பிரச்சினை இருக்கா ..?
கேள்விப்பட்டிருக்கேன். ஆனாலும் உடனடியா நிறுத்தறது சிரமம் .
அப்படியே கொஞ்சம் கொஞ்சமா நிறுத்தின பழகிடலாம் ..!!

Anonymous said...

pangaali en mudhal vankkam.
ninga solvadhu kooda unmaidhan. mc,kfc and other fast foods are the main reasons for over weight and early puberty in many underaged kids.
veetile cook pannalam enru vadhiduvorukku (anonymous)chicken size konjam note paningala .yosinga .oru kalathil leghorn sappitom,nattu kozhi sappitom .anaal ippo ellame changed. naan pangaliyai muttrilumaga support seygiren.my personal experience .non veg samaikkumbothu romba stress irukkum .pure veg samaikkumbothu .santhoshamaga irukkum.

சரவணக்குமார் said...

என்னங்க இப்படி 'குண்டை' தூக்கி என் நடு மண்டையில் போட்டுட்டங்க!!!
அண்ணாத்தே என்னால் non-veg இல்லாம உயிர் வாழ முடியுமான்னு தெரியவில்லை.
try -பண்ணி பாக்குறேன் non-veg சாப்பிடாம இருக்க.
எதாவது நல்லது நடந்தா உங்களுக்கு 'கோவில்' கட்டுறேன் அண்ணாத்தே

என்னது நானு யாரா? said...

குறிப்பு: மேலே இருக்கும் கருத்து தங்க்லீஷில் இருப்பதை தமிழில் மாற்றி கொடுக்கின்றேன், உங்களின் வசதிக்காக!

பங்காளி என் முதல் வணக்கம்.

நீங்க சொல்வது கூட உண்மைதான். மெக்ரென்ண்ட், kFC, and other Fast Foods are the main reasons for over weight and early puberty in many underaged kids.

வீட்டிலே குக் பண்ணலாம் என்று வாதிட்டவருக்கு (Anonymous) சிக்கன் சைஸ் கொஞ்சம் நோட் பண்ணீங்களா? யோசிங்க! ஒரு காலத்தில் லேக்ஹார்ன், சாப்பிட்டோம், நாட்டு கோழி சாப்பிட்டோம், ஆனால் இப்போ எல்லாமே Changed. நான் பங்காளியை முற்றிலுமாக support செய்கிறேன்.

My personal experience, non-veg சமைக்கும்போது ரொம்ப stress இருக்கும். Pure veg சமைக்கும்போது சந்தோஷமாக இருக்கும்.

என்னது நானு யாரா? said...

@ப.செல்வக்குமார்:

//அப்படியே கொஞ்சம் கொஞ்சமா நிறுத்தின பழகிடலாம் ..!!//

செல்வா! இந்த மன தைரியத்தை பாராட்டுகின்றேன்.

என்னது நானு யாரா? said...

@சரவணக்குமார்: உங்களின் முதல் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி!

//try -பண்ணி பாக்குறேன் non-veg சாப்பிடாம இருக்க.//

செல்வா தம்பி சொன்னதை படிச்சீங்க இல்ல? அதே தான் உங்களுக்கும் சிறுக சிறுக முயற்ச்சி செய்து குறைச்சிடுங்க. உங்க ஆரோக்கியம் முக்கியம் இல்லையா சரவணக்குமார்?

எனக்கு கோயில் எல்லாம் கட்டவேண்டாம். சிம்பிளாக நன்றி சொல்லுங்க போதும்!

Sridhar said...

This is totally a wrong perception. How do you expect people living near arctic circle eat veg. food? Check the average life expectancy chart from the link below. I lived in Korea South for some time. They eat non. veg food for all three times in a day but check their life expectancy. I read that french people eat more red meat than any other country people. The life expectancy in france is 78 years.

http://geography.about.com/library/weekly/aa042000b.htm

என்னது நானு யாரா? said...

@Anonymous:

//My personal experience, non-veg சமைக்கும்போது ரொம்ப stress இருக்கும். Pure veg சமைக்கும்போது சந்தோஷமாக இருக்கும்//

உங்க கருத்துக்கும், என் கருத்தை ஆதரிப்பதற்க்கும் நன்றிகள் பல பல

சரவணக்குமார் said...

@சரவணக்குமார்: உங்களின் முதல் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி!
//சிறுக சிறுக முயற்ச்சி செய்து குறைச்சிடுங்க

இல்ல பங்காளி இது 2nd time i am voting /commenting
என்ன பண்ண 6 அடி மனிதனை 2 அடி நாக்கு காலம்காலமாக அடிமை படுத்தியுள்ளது

என்னது நானு யாரா? said...

@Sridhar:

உங்க வருகைக்கும் கருத்துக்கும் முதலில் என்னுடைய நன்றிகள்!

//How do you expect people living near arctic circle eat veg. food?//

அவர்களுக்கு ஏற்ற உணவு அசைவ உணவு தான். ஒப்புகொள்கிறேன். இயற்கையை எதிர்த்து சண்டை செய்து கொண்டு வாழபவர்கள். அவர்களுக்கு தேவையான சக்தி அசைவ உணவு தான் கொடுக்க முடியும். அவர்களின் உடம்புகளில் அதற்கு ஏற்ற வகையில் Adoptations இருக்கும்.

நீங்கள் கொடுத்த லிங்கில் சென்று பார்த்தேன். நாம் ஆரோகியத்தை பற்றி பேசிக்கொண்டு இருக்கிறோம் இல்லையா? average life expectancies பற்றி அல்லவே?

அதேபோன்று சில மனித குழுக்களை பற்றியும் பேசவில்லை. நாம் General Population-ஐ பற்றி தானே பேசிகொண்டு இருக்கிறோம்.

இன்னமும் 2 பகுதிகளை வெளி இடுகின்றேன். தயவு செய்து அவைகளையும் படியுங்கள். உங்களின் கருத்துக்களை உரிமையோடு சொல்லுங்கள்.

என்னது நானு யாரா? said...

@சரவணக்குமார்: ஓ இது உங்களின் விஜயம் இரண்டாவது முறையா! தவறாக எண்ணி விட்டேன். மன்னித்து விடுங்கள்.

ஆமாம்! 2 அங்குல நாக்கு தான் நம்மை ஆட்டிபடைக்கிறது. முதலில் சிறிது, இல்லை இல்லை பெரிய அளவிலேயே கஷ்டமாக இருக்கும். ஆனால் எல்லாமுமே மனபழக்கம் என்பதால் நாளடைவில் சரியாக வந்துவிடும்.

சரியான முடிவு எடுங்கள் சரவணக்குமார்! ப்ளீஸ்!

Nathimoolam said...

அப்பு ரொம்பவே நல்லா கொடுத்துள்ளீங்கப்பு..
நல்ல விசயம், நல்லசெய்தி
ஆதி

hamaragana said...

அன்புடன் நண்பருக்கு வணக்கம் சைவ உணவு பழக்கம் எவ்வளவு நல்லது என்பது உண்பவர்களுக்கே தெரியும்.நமது நாடு சீதோஷ்ண நிலைக்கு சைவ உணவே சிறந்தது. தற்காலத்தில் அசைவ உணவு எங்கு பார்த்தாலும் பரோட்டா கடை!!! மைதா மாவினால் தாயார் செய்த ரொட்டி +அசைவம் சீரணம் ஆகா அதிக நேரம் உழைக்க வேண்டும்குடல்உறுப்புகள் !!!அது போக எந்த உணவு உண்கிறார்களோ அதற்கு தகுந்தார் போலதான் மனம் செயல்படும் நன்றாக அசைவ உணவு உண்டால் என்ன மக்கு புடிசாப்ல இருக்கு..??? என்று சொல்லும் நபர்களைதான் பார்த்திருக்கிறேன் !!!யாரும் அசைவ உணவு உண்டு நான் சுறு சுறுப்பாக இருக்கிறேன் என்று சொன்னதில்லை.. !!! என அனுபவத்தில்....இதெல்லாம் விட கொடுமை காலை தனது சிறு வயது குழைந்தைகளுடன் கறிக்கடைக்கு சென்று நல்லஆடுபார்த்து அருகிலே இருந்து வெட்டி பார்சல் செய்து வீட்டில் காலை முதல் மறுநாள் காலை வரை சுடு படுத்தி உண்ணும் பழக்கம் .. அதை உண்ணும் அந்த குழந்தை எப்படி ஈவு இரக்கம் இருக்கும் சதை!! ரத்தம்!!!! வெட்டுவது!!!!! அதற்க்கு மிகவும் எளிதானது!!!!!.மருத்துவர்கள் 40 வயதுக்கு மேல் அசைவம் உண்ணாதீர்கள்!!!!!! சாத்வீக உணவு பழக்கம் இருக்கும் முன் காலத்தில் குற்றங்கள் மிக குறைவு.ஆனால் தற்போது தினசரி இல் கொலை கற்பழிப்பு கள்ள காதல் இல்லாத நாள் இல்லை !!!! ஒரு ஜீவனை ஹிம்சை செய்து அதனை உண்டு இந்த உடம்பை வளர்க வேண்டுமா????ஒரு உயிர் செடி அதில் வரும் காய்கள் எடுக்கும் போது அந்த செடி அழுவதில்லை கதறுவதில்லை!!!!!.உணருங்கள் நண்பர்களே வாருங்கள் சைவத்திற்கு.

கபீஷ் said...

நல்லாருக்கு :)

Ananthi said...

நல்லா இருக்குங்க.. சொல்லும் விதம் நல்லா இருக்கு..

அடுத்த பதிவிற்கு வருகிறேன்..

விந்தைமனிதன் said...

யோவ் அநியாயமா வரலாறை மாத்தி எழுதாதீரும்! மனுஷ இனமே மாமிசபட்சினியா வளந்த இனம்தான். வேட்டைச் சமூகத்துல இருந்துதான் விவசாயச் சமூகம் பிறந்தது. இது எல்லா சமூகவியல், வரலாற்றாசிரியர்களாலும் நிறுவப்பட்ட உண்மை. இன்னிக்கும் மனுஷன் வாயில கடைவாய்ப் பல்லுக்கு முன்னாடி இருக்குற கோரைப்பற்களோட பயன் மாமிசத்தைக் கிழித்து உண்பதற்குத் தான். தாவரபட்சிணிகள் எதுக்கும் கோரைப்பல் இருக்காது.

சைவம் பத்திய உங்கள் கருத்துக்களுக்குள் நான் விவாதிக்க வரவில்லை. ஆனா எப்பவும் வரலாற்றுத் தகவல்களை மாத்தி எழுதிவிடாது இருங்கள்.

இளந்தென்றல் said...

மிகவும் பயனுள்ள தகவல்கள். பணி தொடரட்டும்,பிறருக்கு பயன் அளிக்கட்டும்.
வாழ்த்துக்கள்

என்னது நானு யாரா? said...

Nathimoolam
கபீஷ்
Ananthi
இளந்தென்றல்

பாரட்டிய உங்க அனைவருக்கும் நன்றிங்க! தொடர்ந்து நம்ப கடைக்கு வாங்க!

என்னது நானு யாரா? said...

@hamaragana:

//ஒரு ஜீவனை ஹிம்சை செய்து அதனை உண்டு இந்த உடம்பை வளர்க வேண்டுமா????ஒரு உயிர் செடி அதில் வரும் காய்கள் எடுக்கும் போது அந்த செடி அழுவதில்லை கதறுவதில்லை!!!!!.உணருங்கள் நண்பர்களே வாருங்கள் சைவத்திற்கு.//

வெளுத்து வாங்கிட்டீங்க தல! உங்க கருத்து எல்லாமே அருமை நண்பரே! உங்களின் வார்த்தகள் என்னை உற்சாகபடுத்துகிறது. நன்றி நண்பரே!

என்னது நானு யாரா? said...

@விந்தைமனிதன்:

//வரலாறை மாத்தி எழுதாதீரும்! மனுஷ இனமே மாமிசபட்சினியா வளந்த இனம்தான். வேட்டைச் சமூகத்துல இருந்துதான் விவசாயச் சமூகம் பிறந்தது//

அண்ணே! நான் குரங்கில இருந்து மனுஷன் வந்த காலத்தை பத்தி சொல்லிட்டு இருக்கேன். இன்னைக்கும் குரங்கு இனம் தாவரங்களை சாப்பிடுகிற மிருகம் தானே அண்ணே?

மேலே இன்னொரு நண்பருக்கு சொன்ன பதில்ல ஒரு லிங்க்கை கொடுத்திருக்கேன். அதை படிச்சிடுங்க! உங்களுக்கு புண்ணியமா போகும்!

உங்க வசதிக்காக மறுபடியும் இங்கே ஒட்டிட்டேன்.
http://www.celestialhealing.net/physicalveg3.htm
படிச்சி பாருங்க! அப்புறம் உங்க கருத்தை சொல்லுங்க!

Chitra said...

அறிஞர் அண்ணா..... இமய மலை..... நான் பரங்கி மலைக்கு பக்கத்துல இருக்கிற ரோடுல இருக்கிற ஸ்பீட் பிரேக்கர்னு வேணா வச்சுக்கலாம்!

என்னது நானு யாரா? said...

@Chitra:

//அறிஞர் அண்ணா..... இமய மலை..... நான் பரங்கி மலைக்கு பக்கத்துல இருக்கிற ரோடுல இருக்கிற ஸ்பீட் பிரேக்கர்னு வேணா வச்சுக்கலாம்!//

உங்க தன்னடக்கம் என்னை புல்லரிக்க வைக்குது! ஏன் உங்களை நீங்களே குறைச்சி மதிப்பிடறீங்க! அது உண்மையாளுமே உங்களை பாராட்டி சொன்ன வார்த்தைகள் தான்!

அதனால தயங்காமல் ஏற்றுக்கொள்ளுங்கள் என் பாராட்டை ப்ளீஸ்!

தமிழ் "தீ" விரவாதி வேனு said...

மாமிசம் வேணாம்னு சரக்கு கொஞ்சம் அடித்து விட்டு சொல்லுங்க, பார்க்றேன் ! பீர் அடிச்சாலும் , அளவா பண்ணா , எப்பவும் சந்தோசமா இருக்காலம் !

என்னது நானு யாரா? said...

@தமிழ் "தீ" விரவாதி வேனு

பேரே பயங்கரமா இருக்கே நண்பா!

மது, மாது, மாமிசம் எதுவுமே வேண்டாம். உடலும் மனசும் ஆரோக்கியமா இருக்கும். உயர்ந்த நிலை அடைய புலன் அடக்கம் தான் சிறந்த வழி என்று கண்டுபிடித்து சொன்னது நம் முன்னோர்கள் தானே?

hamaragana said...

அன்புடன் நண்பருக்கு வணக்கம் இன்று நமது முதல் அமைச்சர் அறிவிப்பு !!!!வாரத்தில் ஐந்து நாள் முட்டை??
எனது உறவு மாமா சிறு வயதில் இப்படி அவிச்ச முட்டை சாப்பிட்டு தற்போது வயது 58 ஐயோ வாய்வு !!!அங்கே குத்துதே !!!குடையுதே !!
என்று அல்லாடி கொண்டிருக்கிறார். ஆஹா நமது மக்களை வரும் காலத்தில் மர மண்டைகளாக ஆகிவிட வேண்டும் என்று தீவிரமாக
இருக்கின்றனர். வாழ்க அவர்களின் செமையான பணி ??

என்னது நானு யாரா? said...

@hamaragana

சரியாக சொன்னீர்கள் நண்பரே! மக்களுக்கு சரியானபடி தகவல்கள் கிடைக்கப் பெற்று, அவர்கள் சிந்தித்து செயல்படுவார்கள் ஆனால் இந்த மாதிரி கொடுமைகள் நடக்காது! நன்றி நண்பரே!

கெட்டவன் said...

எனக்கு நீ சொல்லறதுல உடன்பாடு இல்லடா பங்காளி...மனுசனோட முதல் தொழில் என்ன தெரியுமா பங்காளி...வேட்டையாடறதுதான்...வேட்டையாடினா விலங்கை சாப்பிட்டுதான் உயிர் வாழ்ந்தான்..புல் பூண்டு கூட சாப்பிட்டான் ஆனா மனுசன் மாமிசம் சாப்பிட கூடதுன்னு சொல்லற்து டூ மச்

என்னது நானு யாரா? said...

@கெட்டவன்

மேலே நண்பர் விந்தைமனிதனுக்கு சொல்லிய பதிலில் ஒரு லிங்க் இருக்கு நண்பரே! அதை படியீங்க. உங்களுக்கு உங்க கேள்விக்கு பதில் கிடைக்கும்.

உங்க வருகைக்கும், கருத்துக்கும் நன்றி!

என்னது நானு யாரா? said...

@Anonymous:

ha, I am going to try out my thought, your post bring me some good ideas, it's truly amazing, thanks.

- Norman

நன்றி நண்பரே! உங்களின் முயற்சிக்கு என்னுடைய வாழ்த்துக்கள். தொடர்ந்து படிக்க வாருங்கள்.

சீனு said...

http://jeeno.blogspot.com/2007/01/blog-post.html

sun said...

அருமையான பதிவுகள் நன்றி

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

Post a Comment

பங்காளி! சரக்கு எப்படி? விக்குமா... விக்காதா...??? கொஞ்சம் சொல்லிட்டு போங்க!!!