ஒரு ஊர்ல சீனுவும் பானுவும் ஃப்ரெண்ட்ஸாம். ஒருத்தரை ஒருத்தர் ரத்தம் வந்து ஆஸ்பிட்டல்ல அட்மிட் பண்ற அளவுக்குக் கடிச்சிப்பாங்களாம். நீங்களே பாருங்க பங்காளி! எப்படியெல்லாம் கடிச்சிக் குதறி எடுக்குறாங்கன்னு...
![]() |
அம்மணிக்கு தைரியம் ஜாஸ்திங்கோ... கடிச்சிக் குதறினாலும் சிரிக்கிறதைப் பாருங்க |
பானு: ம்...ம்..ம் ஒண்ணும் தெரியலையே! நீயே சொல்லிடு சீனு!
சீனு: அவன் யூஸ் பண்ணது.....
கட்டஎறும்பு. என்ன காதுல இருந்து ரத்தம் வருது. ரொம்ப கடிச்சிட்டேனோ?
பானு: ஆமாம் கடித் தாங்கல! சரி நான் ஒண்ணு கேட்கிறேன். அதுக்குப் பதில் சொல்லேன் பார்க்கலாம். மார்க் ஷீட்டுக்கும், பெட்ஷீட்டுக்கும் என்ன வித்தியாசம் சொல்லு?
சீனு: ம்ம்ம்ஹும்... தெரியலை பானு. நீயே சொல்லிடுப் ப்ளீஸ்!
பானு: சரி சொல்றேன் கேளு! மார்க் ஷீட்டில் மார்க் இல்லன்னா கவலைப் படுவாங்க. ஆனா பெட்ஷீட்டில மார்க் இருந்தா தான் கவலைப் படுவாங்க. எப்படி? ராணி அம்மா கலக்கிட்டேன் இல்ல?
சீனு: கலக்கலா? கடியா கடிச்சிப்புட்டு கலக்கல்னா சொல்றே!!!???
சரி! இதுக்கு பதிலை சொல்லுப் பார்க்கலாம்! ஒருத்தனுக்கு நீச்சல் தெரியாதாம். அவன் ஆத்தைக் கடக்கும் போது போட்ல இருந்து எப்படியோ தவறி தண்ணிக்குள்ள விழுந்திட்டானாம். அவன் உடம்பு எல்லாம் மூழ்கிப் போச்சி. ஆனா தலைமட்டும் தான் மேல தெரியுதாம். எப்படி சொல்லு?
பானு: ம்...ம்.. ஆங்! கண்டுபிடிச்சிட்டேன். அவன் சரியான மரமண்ட. விடை சரியா? ஏன்னா மரம் தான் தண்ணியில முழுகாதே!
சீனு: அட! நீயும் என்னைப்போல புத்திசாலியா மாறிட்டு வர்றியே. பரவாயில்லையே! சரி! ரூபா நோட்டில காந்தி ஏன் சிரிக்கிறாரு?
பானு: அட! இதுக்கூட தெரியாதா உனக்கு? அவரு அழுதா, ருபா நோட்டு நினைஞ்சுடும் இல்ல. எப்படி நம்ப ஆன்சர்?
சீனு: சரி! இதெல்லாம் கரைக்டாதான் சொல்லிட்டே. இந்த கேள்விக்கு சரியா பதில் சொல்லுப் பார்ப்போம். ஒருத்தன் காட்டில தன்னந்தனியா மாட்டிக்கிட்டான். வழி மறந்துப்போச்சு. திடீர்ன்னு பார்த்தா ஒரு சிங்கம் எங்கிருந்தோ மறைஞ்சி வந்து, அவன் மேல பாய்ஞ்சது. ஆனா, கொஞ்ச நேரம் பொருத்து அது முகம் சுளிச்சிக்கிட்டே அவனை விட்டு ஓடியேப் போச்சு. அது ஏன்னு சொல்லுப் பார்ப்போம்.
பானு: ம்...ம்..ம் ஒன்னும் தெரியலையே! நீயே சொல்லிடு சீனு!
சீனு: விடை தெரியலையா? அவன் சரியான மாங்கா மடையன். ஒரே புளிப்பு! வாயில வைக்கவே முடியல. சிங்கம் அவனோட முகத்தைக் கடிச்சதுமே நாக்குல சுர்றுன்னு புளிப்பு பட்ட உடனே அது ரொம்ப டென்ஷன் ஆயிடிச்சாம். அதனால தான் அப்படி ஒரு ஓட்டமா ஓடிப் போச்சாம் அந்த அறிவுக்கெட்ட சிங்கம்.
பானு: ஹையோ! ஹையோ! யாராவது என்னைக் காப்பாத்துங்களேன். இந்த சீனுவோட கடி தாங்க முடியலையே! ஆண்டவா ஏன் இந்த சீனுவை எனக்கு ஃப்ரெண்டா படைச்சே. நான் என்ன பாவம் செய்தேன்? எனக்கேன் இவ்வளவுப் பெரிய தண்டனை?
நான் சும்மா சொன்னேன் சீனு! கடி சூப்பர் கடி தான் சீனு! என் அளவுக்கு இல்லைன்னாலும் ஓரளவுக்கு நீயும் புத்திசாலி தான்னு ஒத்துக்கறேன்.
ஒரு வீட்டில, ஒரு அம்மா பொண்ணு பேசிக்கிறாங்க. என்னான்னு நீங்களே கேளுங்க...
வாணி: அம்மா! ஊருக்குப் போறேன். எந்த ட்ரஸ் எடுத்துக்கட்டும்?
வேணி: அட்ரஸ் எடுத்துக்கமா. (இனி வருவதை சிவாஜி குரலில் படிக்கவும்) மத்த ட்ரஸ் இல்லைன்னா கூட ஊரல போய் வாங்கிக்கலாம். ஆனா அட்ரஸ் இல்லைன்னா எங்கப் போய் வாங்குவ?
பழக்கடையில் என்ன காமெடி நடக்குதுன்னு நீங்களே பாருங்களேன்...
பழம் வாங்க வந்தவர்: ஏம்பா! ஆரஞ்சுப் பழம் இருக்காப்பா?
பழம் கடைக்காரர்: இல்லைங்க
பழம் வாங்க வந்தவர்: சரி! பப்பாளிப் பழம் இருக்காப்பா?
பழம் கடைக்காரர்: அதுவும் இல்லைங்க
பழம் வாங்க வந்தவர்: சரி! செர்ரிப் பழம் இருக்காப்பா?
பழம் கடைக்காரர்: அதெல்லாம் நம்ப கிட்ட இல்லைங்க
பழம் வாங்க வந்தவர்: என்ன நீங்க எதைக்கேட்டாலும் இல்லை இல்லைன்னு சொல்றீங்க. சரி! அட்லீஸ்ட் ஞானப்பழமாவது இருக்கா இல்லையா?
பழம் கடைக்காரர்: என்னது ஞானப்பழமா? எங்கிருந்து சாரு வர்றீங்க? கீழ்பாக்கமா?
பழம் வாங்க வந்தவர்: அமாம்பா எப்படி கரைக்ட்டா கண்டுபிடிச்சே?
பழம் கடைக்காரர்: ஆமா இதைக் கண்டுப்பிடிக்க விஞ்ஞானி அப்துல் கலாமா வருவாரு! கடைவைக்கிறதுக்கு முன்னாடி நானும் கூடக் கொஞ்ச நாள் அங்கே தானுங்க இருந்தேன். அங்கிருந்து தப்பிச்சி வந்த கேஸா நீங்க. இங்கேயே இருங்க! அவங்களுக்கு ஃபோன் செஞ்சு உங்களைக் கூட்டிட்டுப் போகச் சொல்றேன்.
ஒரு மொக்கை தத்துவம்:
ஒரு சில விஷயங்கள் மட்டும் மாறாதுங்க. கல்யாணத்துக்கு முன்னாடி மிஸ்ஸானாலும் மிஸ்ட் கால் தான். கல்யாணத்துக்கு பின்னாடி மிஸ்ஸானாலும் மிஸ்ட் கால் தான்.
கல்யாணம் ஆயிடிச்சேன்னு அதை யாரும் மிஸஸ்ட் கால்னு சொல்ல மாட்டாங்க.
பங்காளி! எப்படியோ ஆசை தீர உங்களை கடிச்சிட்டேன். பதிலுக்கு நீங்களும் என்னைக் கடிக்கலாமே தவிர அடிக்கக் கூடாது. சொல்லிட்டேன் டீலா??? நோ டீலா...???
ரொம்ப கடிச்சிட்டேன்னு கோபப்பட்டு ஓட்டுப் போடாம போயிடாதீங்க! உங்க கோபத்தைக் காட்டத்தான் கருத்துப் பெட்டி இருக்கே மக்கா!
குறிப்பு: அப்புறம் ஒரு விஷயம் இந்த மாசம் 8 ஆம் தேதியில இருந்து 24 ஆம் தேதி வரைக்கும் தியான முகாமில கலந்துக்கொள்ள ஜெய்பூர் கிளம்பறேன். அதனால கடைக்கு லீவு விட்டுட்டேன். என்னால கடையை திறக்க முடியாது. நீங்க யாராவது கடைக்குள்ள வரணும்னு நினைச்சா தாராளமா எப்போதும் போல வாங்க. ஆனா எதாவது கேள்விகள் இருந்தா 24 ஆம் தேதி அன்னைக்கு பதில் சொல்றேன். வர்டா மாப்பு!