சோர்வுக்கு இயற்கை மருத்துவத்தில் என்ன தீர்வு என்று கேட்டு ஒரு நண்பர் ஈமெயில் எழுதி அனுப்பி இருந்தார். அதனை உங்கள் பார்வைக்கு தருகின்றேன் அப்பு!
![]() |
அம்மணி சோர்வில தூங்கறாங்க அப்பு! டிஸ்டர்ப் செய்யாதீங்க! |
நண்பரே! தங்கள் வலைபதிவு ஒன்றில், சோர்வை ஒழிக்க உபவாசம் நல்லது என்று விரிவாக எழுதி உள்ளீர்கள்.
இவ்வாறு பசியுடன் இருக்க மேலும் சோர்வு அடையாதா?
எனக்கு ஆபீசில் மதிய வேளையில் சோர்வு பிடித்து தள்ளும். தூக்கம் வருகிறது.
மேலும் எதாவது மீட்டிங் என்று போனால் அதில் மனம் ஒட்டாவிட்டால், சோர்வும், தூக்கமும் தள்ளுகிறது.
நான் சிறு யோகா, ஓடுவது போன்றவை செய்து பார்த்தேன் ஒன்றும் பலனில்லை?
ஏதேனும் வழி உண்டா?
இந்த தூக்கத்தை பற்றி தங்கள் மருத்துவம் என்ன சொல்கிறது என்று ஒரு பதிவு போட்டால் என் போன்றோருக்கு உதவியாக இருக்கும்.
-------------------------------------------------------------
அவருக்கு ஈமெயிலில் பதில் அனுப்பினேன். மற்றவர்களும் பயன் அடையட்டும் என்று என் பதிலை இங்கே கொடுக்கின்றேன்.
நண்பரே! சோர்வை பற்றி கேட்டிருக்கிறீர்கள்! எல்லா நேரங்களிலும், வெறும் சமைத்த உணவை மட்டுமே சாப்பிட்டு கொண்டு வந்தால் கண்டிப்பாக சோர்வு உடலில் வரும். சமைக்கும் போது, காய்கறி, தானியங்களில் இருக்கும் இயற்கையான ஊட்ட சத்து உருமாறி நச்சு தன்மை அத்துடன் கலந்து விடுகிறது.
உதாரணத்திற்கு சொல்வதானால் தேங்காயை அப்படியே பச்சையாக சாப்பிட்டால் எந்த கெடுதலும் இல்லை. அதுவே அதனை சமையலில் சேர்க்கும் போது உடலுக்கு கேடு விளைவிக்கும் கெட்ட கொளஸ்ட்ராலாக மாறுகிறது.
சமைத்த உணவை ஜீரணிக்க, ஜீரண உறுப்புகள் படாத பாடு படுகின்றன. அதனால் நச்சு உடலிலேயே தங்கி, உயிர்சக்தியை மழுங்கடிக்க செய்கிறது. இதற்கு தான் வாரம் ஒருமுறையாகிலும், உபவாசம் இருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள், இயற்கை மருத்துவர்கள். எல்லா வித நோய்களும், நம் உடலில் அதிகமாக நச்சுக்கள் சேரும் போது தான் வருகிறது.
நோய் ஒன்றே தான் பல அல்ல! உடலில் வேண்டாத கழிவு பொருட்கள் தங்கி கெட்டு போக ஆரம்பித்து, அது எல்லா இடங்களுக்கும் இரத்தம் மூலம் பரவி ஆங்காங்கே தங்கி விடுகின்றது. இந்த கருத்தை நாம் நன்கு விளங்கி கொள்ள வேண்டும்.
வயிறு நிரம்ப சமைத்த உணவு சாப்பிட்டுவிட்டு அலுவலக பணியில் கவனம் செலுத்த முடியாது. உயிர் சக்தி எல்லாம், உணவை ஜீரணம் செய்வதற்காக செலவு ஆகிறது. அதனால் மூளைக்கு செல்ல வேண்டிய சக்தி தடைபடுகிறது. மூளை செயல்பட அதிகமான உயிர் சக்தி தேவைபடுகிறது.
நீங்கள் ஒரு நாளில் ஒரு வேலையாவது பச்சை காய்கறி சேலட், பழங்கள், முளைகட்டிய தானியங்கள், தேங்காய் பச்சையாக, இப்படி சமைக்காத இயற்கை உணவை சாப்பிட வேண்டும். பாலும் தயிரும் மந்தத்தை ஏற்படுத்தும் உணவு பொருட்கள். அவைகளை ஜீரணிக்க உடல் என்ன பாடுபடுகிறது என்று அதனை கேட்டால் தான் தெரியும். இதில் கலப்படம் வேறு!
மதியம் வயிறு முட்டும்படி அதிகமாக சாப்பிடாதீர்கள். 11 மணிக்கு, பிறகு 4 மணிக்கு ஏதாவது பழங்கள் சாப்பிடவும். அப்போது வயிற்றை கிள்ளும் பசி என்பது இருக்காது.
உடலில் கழிவுகள் தேங்கா வண்ணம் பார்த்துகொள்ளவும். காபி, டீ எல்லாம் உடலில் கழிவுகளை சேர்க்க தான் பயன்படுகிறது. மூலிகை பாணங்கள் (சித்த மருந்து கடைகள் மற்றும் காதி கிராப்ட் கடைகளில் கிடைக்கிறது) இளநீர் நல்லது. மலசிக்கலை போக்க தினமும் எனிமா எடுத்துகொள்ளலாம். என் பதிவில் இதை பற்றி தெளிவாக எழுதி இருக்கிறேன். படித்து பார்க்கவும்.
மதியம் சாப்பிட்ட பின் சிறிது தூரம் பாதி வேகமாக நடந்துவிட்டு வாருங்கள். இரத்த ஓட்டத்திற்கு அது பயன்படும். உடம்பு சுறுசுறுப்பு அடையும்.
என் வலைபக்கத்தை தொடர்ந்து படித்து கொண்டு வாருங்கள்! உங்களுக்கு இயற்கை மருத்துவத்தின் தத்துவங்கள் புரிய ஆரம்பிக்கும்! நோய் என்று ஏதும் இல்லை நண்பரே! இயற்கைக்கு மாறுபட்டு செய்கை புரியும் போதே நோயாக வெளிபடுகிறது!
இயற்கை முறைபடி தான் எல்லா ஜீவராசிகளும் வாழ்கின்றன. மனிதன் மட்டும் தான் இயற்கையை எதிர்த்து வாழ்கின்றான். எந்த விலங்காகிலும் பல் விளக்குவது உண்டா? ஆனால் அவைகளுக்கு பல் சம்பந்தபட்ட நோய்கள் ஏதாகிலும் வருவதுண்டா?
இயற்கை முறைபடி வாழ்வோம்! மருத்துவர்களை, மருந்துகளை, மருத்துவமனைகளை தவிர்ப்போம்!
இந்த பதிவு அதிகமானோரை படிக்க செய்ய உங்களிடம் தான் சாவி உள்ளது (ஓட்டு போடறதை சொன்னேன் அப்பு!)
மறக்காம ஓட்டு போடுங்க! இது சம்பந்தமா கருத்து சொல்றவங்களையும் வரவேற்கின்றேன். மறுபடியும் சந்திப்போம்! வாழ்க வளமுடன்!!
43 மேதைங்க இதபத்தி என்ன சொன்னாங்கன்னா...:
எனக்கு தூக்கமா வருது. அப்புறமா கமென்ட் போடுறேன். ஓகே வா பங்காளி..
@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா): சரி பங்காளி! மேல சொன்ன விஷயங்களை படிச்சீங்க இல்ல! அதை Follow செய்யுங்க!
சோர்வு போய் சும்மா ஜம்முன்னு ஆயீடுவிங்க!
நண்பரே உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை. என் தளத்தில் வந்து பதில் இட்டதுக்கு மிக்க நன்றி நண்பா. இதில் இருந்து நல்ல கருத்தை நான் என் தளத்தில் இட உங்கள் அனுமதி கிடைக்குமா நண்பா.
அனுமதி அளிப்பதாக இருந்தால் நீங்கள் என் தளத்தில் வந்து பதில் அளிக்க முடியுமா பிலீஸ்.
அனுமதி அளித்தால் நான் மிகவும் மகிழ்வேன்.
**********************
////பங்காளி! சரக்கு எப்படி? விக்குமா... விக்காதா...??? /////
????????
///கொஞ்சம் சொல்லிட்டு போங்க!!!/////
super :)
பதிவு super
நல்லாருக்கு :)
ஆமா கமெண்ட் போடுறதலே நான் மேதைங்க லிஸ்ட்ல சேர்ந்துடுவேனா? இது ஈஸியா இருக்கே.. :)
@prabhadamu:
//இதில் இருந்து நல்ல கருத்தை நான் என் தளத்தில் இட உங்கள் அனுமதி கிடைக்குமா நண்பா.
அனுமதி அளிப்பதாக இருந்தால் நீங்கள் என் தளத்தில் வந்து பதில் அளிக்க முடியுமா பிலீஸ்.
அனுமதி அளித்தால் நான் மிகவும் மகிழ்வேன்.//
நீங்கள் உங்களின் வலைபக்கத்தில் நான் எழுதியவற்றை, தயங்காமல் வெளியிடலாம். இவை, அனைத்தும் மக்கள் எல்லோரும் படித்து, பயன் அடையவேண்டும் என்கின்ற சிந்தைனையிலேயே எழுதபடுபவை. என் வலைபக்க முகவரியை சேர்த்து எழுதினால் சந்தோஷம் அடைவேன்.
நன்றி நண்பரே!
@Mãstän:
//ஆமா கமெண்ட் போடுறதலே நான் மேதைங்க லிஸ்ட்ல சேர்ந்துடுவேனா? இது ஈஸியா இருக்கே.. :)//
இது ரொம்ப ஈஸியான வழியா இருக்கு இல்ல, நண்பா?
பழம், காய் சாப்பிடுனமா? எனக்கு அதுலாம் பிடிக்காதே....
பயனுள்ள தகவல்கள்.... சின்ன வயசுல ஒரு வேளை மட்டும் கொஞ்சமா அரிசி உணவும் மற்ற நேரங்களில் முற்றிலுமாக பச்சை மற்றும் வேக வைத்த காய்கறிகளையும்,முளைவிட்ட பயறுவகைகளையும் ஒரு மாதம் வரையிலும் சாப்பிட்ட அனுபவம் இருக்கு. அப்போ நான் 6 ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். என் தந்தை கட்டாயப்படுத்தி சாப்பிட வைத்தார்கள்.
பயனுள்ள தகவல்கள்....
@அருண் பிரசாத்:
//பழம், காய் சாப்பிடுனமா? எனக்கு அதுலாம் பிடிக்காதே....//
காய்கறிங்க, பழங்க எல்லாம் சாப்பிடணும் அருண். இல்லன்னா டாக்டர் அங்கில் கிட்ட சொல்லி ஊசி போட சொல்லுவேன்! நீ சமத்து இல்ல!
@ஜீவன்பென்னி:
//என் தந்தை கட்டாயப்படுத்தி சாப்பிட வைத்தார்கள்.//
நண்பரே! உங்களுக்கு ஒரு சிறந்த தந்தை கிடைத்திருக்காங்க! எத்தனை பேருக்கு இந்த மாதிரி நல்ல தந்தை கிடைக்குது சொல்லுங்க?
நல்லா விளக்கமா, எளிமையா சொல்றீங்க... தொடருங்க...:)
பாலும் தயிரும் மந்தத்தை ஏற்படுத்தும் உணவு பொருட்கள். அவைகளை ஜீரணிக்க உடல் என்ன பாடுபடுகிறது என்று அதனை கேட்டால் தான் தெரியும்.
.... I heard that the active bacteria in curd is very helpful for digestion and is good for us. mmmm...உங்கள் தகவல் வித்தியாசமாக இருக்கிறது.... :-)
இதை படிக்கும்போது எனக்கு ஒன்று ஞாபகம் வந்தது. சிலருக்கு இரவில் சாப்பிட்ட உடனே தூங்கிவிடும் பழக்கம் உள்ளது கொஞ்சம் நடந்து விட்டு படுக்க சொன்னால் கேட்க மாட்டர்கள் அது உடல்நலத்திற்கு கெடுதல்தானே!
@Jey: உங்களின் பாராட்டுகளுக்கு நன்றி!
@Chitra://.... I heard that the active bacteria in curd is very helpful for digestion and is good for us.//
பால் மற்றும் பாலினால் கிடைக்கும் பொருட்கள் ஏன் நமக்கு சரியான உணவு பொருட்கள் இல்லைன்னு ஒரு பதிவை விளக்கமா எழுதிகிறேன் அக்கா!
உங்க வருகைக்கு நன்றி!
@எஸ்.கே:
//கொஞ்சம் நடந்து விட்டு படுக்க சொன்னால் கேட்க மாட்டர்கள் அது உடல்நலத்திற்கு கெடுதல்தானே!//
கண்டிப்பாக நண்பரே! சாப்பிட்டு ஒரு 2 மணி நேரம் ஆகிலும் கடந்த பின்னாடி தான் தூங்க போகனும். இல்லைன்னா ஜீரணம் நடப்பது பாதிக்கும்.
உங்க வருகைக்கு நன்றி!
from Anbarasan L
to Vasanth
date 30 August 2010 19:11
subject Re: Hi
mailed-by gmail.com
Signed by gmail.com
hide details 19:11 (1 hour ago)
சோர்வை பற்றிய உங்கள் பதிவு அருமை.
(நண்பருக்கு எதனாலோ, பின்னூட்டம் இடுவதில் சிக்கல் இருந்திருக்கு. அதனால என்னுடைய ஈமெயிலுக்கு அனுப்பினார்)
சரி சரி தெனமும் எனக்கு ரெண்டு கிலோ காய்கனி சப்ளை பண்ணிடுங்க...சரியா?
தங்களது வலைப் பதிவை தற்செயலாக படிக்க நேர்ந்ததையிட்டு மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன். பயனுள்ள பல தகவல்களை தந்தமைக்கு மிகுந்த நன்றிகள் ஐயா.
உங்களது அனைத்து தகவலும் அருமை... நேரில் சொன்னது போல இருக்கிறது... தகவல் நிறைய சேகரிச்சு சொல்லி இருக்கறீங்க.... இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன்...
@விந்தைமனிதன்:
//சரி சரி தெனமும் எனக்கு ரெண்டு கிலோ காய்கனி சப்ளை பண்ணிடுங்க...சரியா?//
அதுக்கு என்ன அனுப்பிட்டா போச்சு! நான் வேணாம்னு சொன்னா கூட நீங்க, மாசம் 10,000 ருபாய்க்கு செக்க்கு அனுப்பாமலா இருக்க போறீக அண்ணாச்சி?
@Rubana: படித்து பார்த்து பாராட்டு தெரிவிக்கறீங்க. தோழியே! நன்றி! தொடர்ந்து இந்த வலைபக்கம் நீங்க வரணும்னு கேட்டு கொள்கிறேன்.
நிறைய விஷயங்களை பகிர்ந்துகொள்ளலாம்! வாறீகளா?
@சங்கவி: நன்றி நண்பரே! ஒரே எண்ண அலைகள் கொண்டுள்ளோம். உங்களோட வலைபக்கத்திலும் நல்ல நல்ல மருத்துவ தகவல்களை சொல்றீங்க!
தொடர்ந்து இந்த வலைபக்கம் நீங்க வரணும்னு கேட்டு கொள்கிறேன்.
நிறைய விஷயங்களை பகிர்ந்துகொள்ளலாம்! வருவீங்க இல்ல?
இந்த பதிவு அதிகமானோரை படிக்க செய்ய உங்களிடம் தான் சாவி உள்ளது (ஓட்டு போடறதை சொன்னேன் அப்பு!)
படித்தவுடன் சற்று கோபம் வந்தாலும் இது போன்ற விசயங்களுக்கு தேவைத்தான். சரக்கு விற்காதா? யார் சொன்னது? பயபுள்ளைங்க படித்து முடித்து அப்படியே நகர்ந்து போயிடுவாங்க, கவுரத ஒன்னு ஒவ்வொருவருக்கும் இருக்குல்ல.
கூகுள் பஸ்ஸில் இணைத்துள்ள சுந்தருக்கு நன்றி.
இது போல நிறைய எழுங்க பங்காளி(சரிதானே?)
@ஜோதிஜி:
//படித்தவுடன் சற்று கோபம் வந்தாலும் இது போன்ற விசயங்களுக்கு தேவைத்தான். சரக்கு விற்காதா? யார் சொன்னது? பயபுள்ளைங்க படித்து முடித்து அப்படியே நகர்ந்து போயிடுவாங்க//
எதார்த்தாமாக நடக்கின்ற விஷயங்களை சொல்லி இருக்கிறீர்கள். நல்ல பயனுள்ள விஷயங்கள் கண்டிப்பாக ஏதோ ஒரு தருணத்தில் மேலே வந்து தான் ஆகும்.
ஓட்டு போடும் நல்ல நண்பர்களும் இங்கே இருக்கிறார்கள். அதனால் மகிழ்ச்சி!
தொடர்ந்து இந்த வலைபக்கம் நீங்க வரணும்னு கேட்டு கொள்கிறேன்.
நிறைய விஷயங்களை பகிர்ந்துகொள்ளலாம்! வருவீங்க இல்லையா நண்பரே?
இப்பதான் உங்க பதிவை பார்த்தேன். மிகவும் பயனுள்ள தகவல்களை கொடுக்கிறீர்கள். இன்றைக்கு நாம் இயற்கையை விட்டு ரொம்ப தூரம் போய்க்கிட்டு இருக்கோம். உங்களைப் போன்றவர்களின் கருத்துக்கள்தான் எங்களைப்போன்றவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றன. பங்காளி ..பங்காளி என்று விளிப்பது என் கல்லூரி நாட்களை நினைவுபடுத்துகிறது. மற்றவர்கள் மச்சான் மாம்ஸீன்னு பேசும்போது நாங்கள் மட்டும் பங்காளின்னுதான் பேசிக்கொள்வோம். எனக்கு அதுலதான் ஒட்டுதல் அதிகமா தெரியும். இன்னும் பல நல்ல தகவல்களை எதிர்ப்பார்க்கிறோம். தொடரட்டும் உங்கள் சேவை.
@தமிழ் நாடன்:
//பங்காளி ..பங்காளி என்று விளிப்பது என் கல்லூரி நாட்களை நினைவுபடுத்துகிறது. மற்றவர்கள் மச்சான் மாம்ஸீன்னு பேசும்போது நாங்கள் மட்டும் பங்காளின்னுதான் பேசிக்கொள்வோம். எனக்கு அதுலதான் ஒட்டுதல் அதிகமா தெரியும்//
உங்களுக்கு சந்தோஷத்தை ஏற்படுத்தியதாக சொல்றீங்க! எனக்கு மகிழ்ச்சி!
சிரிப்போடு, சிந்தனையை தூண்டும் விஷயங்கள் மக்களை எளிதில் சென்று சேரும் என்பதாலே இந்த நடையில எழுதுகின்றேன்.
உங்க பாராட்டுக்களுக்கு நன்றீங்க! தொடர்ந்து இந்த வலைபக்கம் நீங்க வரணும்னு கேட்டு கொள்கிறேன்.
தேங்காயை அப்படியே பச்சையாக சாப்பிட்டால் எந்த கெடுதலும் இல்லை. அதுவே அதனை சமையலில் சேர்க்கும் போது உடலுக்கு கேடு விளைவிக்கும் கெட்ட கொளஸ்ட்ராலாக மாறுகிறது.
புதுசா இருக்குப்பா நீங்க சொல்றது
@sakthi:
//புதுசா இருக்குப்பா நீங்க சொல்றது//
தொடர்ந்து வாங்க! நிறைய புது விஷயங்களை பகிர்ந்துகொள்ளலாம்.
உங்க வருகைக்கு நன்றி!
“காண்டாமிருகமும் பேபி சோப்பும்” இந்த கதைக்கு வாழ்த்து சொல்ல வந்தா இங்க நாலு நல்ல விஷயம் தெரிஞ்சுகிட்டேன் "mind " ல வச்சுகிறேன். Anyways கதை ரொம்ப நல்ல இருந்தது.நிறைய கதையும் எழுதனும்முனு கேட்டுகிறேன்.
கதைய படிக்க இந்த பக்கம் போங்க http://funaroundus.blogspot.com/2010/08/blog-post_19.html
நம்ம ரமேஷ் ரொம்ப நல்லவருக்கு முடி கொட்டுறத கேள்வி பட்டேன்.. கொட்டுறது குறையிரதுக்கும் , கொட்டினது வளரதுக்கும் எதாவது இயற்க்கை வைத்தியம் இருந்தா சொல்லுங்க. :)
//தேங்காயை அப்படியே பச்சையாக சாப்பிட்டால் எந்த கெடுதலும் இல்லை. அதுவே அதனை சமையலில் சேர்க்கும் போது உடலுக்கு கேடு விளைவிக்கும் கெட்ட கொளஸ்ட்ராலாக மாறுகிறது//
பச்சை தேங்காய் துறுவலை, உணவு சமைத்த பின் ஆறிய பின் மேலே தூவி சாப்பிடலாம்! அப்போது எந்த கெடுதலும் இல்லை
@GSV: கதை பற்றிய உங்க பாராட்டுகளுக்கு நன்றி நண்பரே! கதை எழுதவும் எண்ணி இருக்கின்றேன்.
//முடி கொட்டுறத கேள்வி பட்டேன்.. கொட்டுறது குறையிரதுக்கும் , கொட்டினது வளரதுக்கும் எதாவது இயற்க்கை வைத்தியம் இருந்தா சொல்லுங்க//
இது வரை சொல்லி இருக்கிற இயற்கை மருத்துவ முறைகளை கடைபிடித்தல் தான் வழி! அத்துடன் சித்த மருத்துவத்தில் மூலிகை மருந்துகளையும் எடுத்துகொள்ளலாம்
நல்ல பதிவு பங்காளி!! உங்கள் சேவை தொடரட்டும்.
@அருண்
//பழம், காய் சாப்பிடுனமா? எனக்கு அதுலாம் பிடிக்காதே.... //
என் மாப்பு நான் வேனும்னா கொஞ்சம் புன்னாக்கு, கழனிதண்ணி அனுப்பி வைக்கவா?? ஒரு விஷயம் சொன்னா செய்யரது கிடையாது. ராஸ்கள்!!
@GSV
//நம்ம ரமேஷ் ரொம்ப நல்லவருக்கு முடி கொட்டுறத கேள்வி பட்டேன்.. கொட்டுறது குறையிரதுக்கும் , கொட்டினது வளரதுக்கும் எதாவது இயற்க்கை வைத்தியம் இருந்தா சொல்லுங்க. :) //
மூளை கம்மியா இருந்தா முடி கொட்டும் சொல்றது உண்மையா பங்காளி?
@TERROR-PANDIYAN(VAS):
//என் மாப்பு நான் வேனும்னா கொஞ்சம் புன்னாக்கு, கழனிதண்ணி அனுப்பி வைக்கவா?? ஒரு விஷயம் சொன்னா செய்யரது கிடையாது. ராஸ்கள்!!//
பங்காளி! குழந்தயை போய் ஏன் திட்டறீங்க? பயந்திட போறான். நான் தான், 'டாக்டர் அங்கில் கிட்ட சொல்லி ஊசி போட சொல்லுவேன்ன்னு பயமுறுத்தி வெச்சிருக்கேன் இல்ல!
பார்ப்போம்! அப்படியும் சாப்பிடலன்னா வீட்டுக்கு பூச்சாண்டியா வந்து பயம் காண்பிச்சிட்டு போங்க!
//மூளை கம்மியா இருந்தா முடி கொட்டும் சொல்றது உண்மையா பங்காளி?//
அப்படி சொல்லிட முடியாது டெரர்! ஆட்டை பாருங்க! நம்பளை மனுஷன் வளர்கிறதே வெட்டுறதுக்கு தான்னு தெரியாமா இருக்கு! ஆனா அதன் உடம்பை பாருங்க எவ்வளவு முடி!!!
அடிகடி இந்த சோம்பல் வந்து பதிவு எழுத முடியலை இனி இவர் சொன்னது போல செய்து பார்க்கவேண்டியது தான் நன்றி அப்பு....அப்படியே எங்க வீட்டுக்கு பழங்கள் பார்சல் செய்து அனுப்புங்கள்
@சௌந்தர்: நன்றி சௌந்தர்!
//அப்படியே எங்க வீட்டுக்கு பழங்கள் பார்சல் செய்து அனுப்புங்கள்//
மரத்தில இப்பத்தான் பூவும் பிஞ்சும் விட்டிருக்குது. நல்லா பழுத்த பின்னாடி உங்களுக்கு கொரியர் சர்வீஸ்ல அனுப்பி வைக்கிறேன். ஆனா என்ன சொன்னாலும் நீங்க கேட்கமாட்டீங்க. பழங்களுக்கான பணத்தை என் அகொண்டுல போடாம இருக்க மாட்டீங்க.
இது தான் சௌந்தர் உங்க கிட்ட எனக்கு பிடிக்காத கெட்ட பழக்கமே!
பயனுள்ள பல தகவல்களை தந்தமைக்கு மிகுந்த நன்றிகள்
தங்களது வலைப்பூ சூப்பர்.அனைவரும் ஒருநாள் தங்களது வழியில் வந்துதான் ஆக வேண்டியே தீருவார்கள்.தங்களது தளத்தை எனது வலைப் பூவில் இணைத்துள்ளேன்.எனது வலைப்பூ தளம் இதோ
http://machamuni.blogspot.com/
பாருங்க அபிப்பிராயம் சொல்லுங்க.
நன்றி
சாமீ அழகப்பன்
@பிரியமுடன் பிரபு:
@MACHAMUNI BLOGSPOT:
பாராட்டுகளை தந்த அன்பு உள்ளங்களுக்கு நன்றிங்க!
@MACHAMUNI BLOGSPOT:
//தங்களது தளத்தை எனது வலைப் பூவில் இணைத்துள்ளேன்.//
உங்களது வலைபக்கத்தை பார்வையிட்டேன். அக்குபஞ்சர், சித்த மருத்துவம் என்று பல பயனுள்ள பகுதிகள் இருக்கின்றன.
என் வலைபக்கத்திற்கு இணைப்பு தந்தமைக்கு நன்றி! இதன் மூலம் பலருக்கு தகவல்கள் சென்று சேர உதவி இருக்கிறீர்கள். மிக்க நன்றி!
நல்லா சொன்னீங்க....... நம்மாளுக நிறைய தின்னுட்டு...... பாவம் உடம்பு மேல பழியை போடுறது..... குறைவா சாப்பிட்டா....... நிறைவா வாழலாம்...... நீங்க சொல்றதபார்த்தா...... இனி மருதுவமனையே தேவையில்ல போலிருக்கு..... பாவம் லட்சங்கள் போட்டு மருதுவம் படித்த மருதுவர்களின் கதி.....அதோ கதி தான் போல?????
good
Post a Comment
பங்காளி! சரக்கு எப்படி? விக்குமா... விக்காதா...??? கொஞ்சம் சொல்லிட்டு போங்க!!!