பன்னீர் தெளிக்கிறோமில... ப்ளீஸ்... கொஞ்சம் தலை குனியுங்க...

வணக்கம் பங்காளீ! வாங்க, சவுக்கியங்களா? நம்ம வலைபதிவு பக்கம் வந்ததுக்கு நன்றீங்கோ...Get this Widget

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே! என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி! நண்பர்களே!

மனிதர்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் சிந்தனைகள், இங்கு சிதறிகிடக்கிறது. படித்து பார்த்து உங்கள் கருத்துக்களை இடவேண்டுகிறேன்!

தொடர்ந்து, இந்த வலைபதிவுக்கு உங்களின் ஆதரவை தாருங்கள்!!! நன்றி! தொடர்ந்து வருக!!!

இந்த நாள், உங்களுக்கு, இனிய நாளாக அமைவதாக!!!

பாசகார பங்காளி கூட்டமுங்க! நீங்களும் கூட வாறீகளா?

23-Aug-2010

உண்மை சொல்லனும்னா! நோய்யை பத்தின அறிவே சுத்தமா நமக்கு இல்ல!

ஆமாங்க பங்காளி! நோய் நமக்கு பகைவன்கிற பார்வை நம்ப எல்லோர் கிட்டேயும் பரவலா இருக்கா இல்லையா? அது தப்புங்க, நோய் நமக்கு பகைவன் இல்லீங்க! அது பகைவன் ரூபத்தில வேஷம் கட்டிட்டு வந்து நம்ப கிட்டேயே பூச்சாண்டி காட்டுது.

குறிப்பு: முன்னே எழுதிய பதிவுகளை கொஞ்சம் படிச்சிட்டு வாங்க பங்காளி! இயற்கை மருத்துவத்தில பரிச்சயம் இல்லன்னா, தலையும் புரியாது வாலும் புரியாது.

நம்ப உடம்புல எல்லாம் ரொம்ப சிம்பிள் மெகனிஸமுங்க. கடவுள் அப்படி தான் படைச்சாரு! இயற்கையில பார்க்கிற எல்லாமே சிம்பிள் தான். நாம தான் “பத்தினியை கைவிட்டு, வேசி பின்னாடி அலைஞ்ச கதையா இயற்கையை கைவிட்டு, முடிஞ்சா அதை சாவடிச்சுட்டு, செயற்கையை கொண்டாடுறோம்.

வினோத விந்தை மனுஷங்க நம்மை சுத்தியே, நிறைய பேரு இருக்காங்க. சிலரை பாத்திருக்கேன். நீங்களும் கூட பாத்திருக்கலாம்! உதாரணத்துக்கு ஒண்ணு சொல்றேனே! மிளகு பொங்கல்ல, மிளகு சேர்க்குறதே, அந்த உணவு நல்லபடியா ஜீரணம் ஆகணும்னு தான். ஆனா அதுங்களை முதல் வேலையா, தூர எடுத்து போட்டிட்டு, வெறும் பொங்கலை மட்டும், சாப்பிடறவங்க இருக்காங்க!

இவங்கெல்லாம் அதி புத்திசாலி கூட்டத்தை சேர்ந்தவங்க. Highly Sophisticated and disease proned!!!

இள்நீர், மோர், நல்ல தண்ணீ, இதெல்லாத்தையும் விட்டுவிட்டு, கோக், பெப்ஸின்னு குடிச்சு தாகத்தை தீத்துக்கராங்களாம். அந்த மாதிரி ஆஸிட் எல்லாம் கழிவறையை சுத்த படுத்த லாயக்குன்னு சொல்றாங்கப்ப, விஷயம் தெரிஞ்சவங்க. அதை வயித்து குள்ள ஊத்தலாமா? சொல்லு, நீயே சொல்லு பங்காளி!

இந்த மாதிரி விந்தை மனுஷங்களுக்கு, தங்களோட மோசமான பழக்கவழக்கங்களால, நோய் எல்லாம் ஆட்டோ பிடிச்சு, விலாசம் கண்டுபிடிச்சு, ரவுண்டு கட்டி அடிக்கும்னு ஒரு சாதரண அடிப்படை அறிவு கூட எதுவும் இல்ல.

ஊதர சங்க ஊதரேம்பா, உங்களுக்கு கெடுதல் நினைக்காத உங்க உறவுகாரன்ங்கிற முறையில. இந்த பங்காளி சொல்றதை கேட்டீங்கன்னா நோயில்லாம வாழலாம். உங்களுக்கு தெரிஞ்சவங்களுக்கும் இந்த விஷயமெல்லாம் சொல்லுங்க! அவங்க புத்தி நல்லா இருந்தாக்கா கண்டிப்பா எடுத்துப்பாங்க!

சரி போன பதிவோட தொடர்ச்சியை இப்போ பார்போம்மா?

இயற்கை மருத்துவத்த பத்தின முதல் மூனு விஷயங்கள், முந்திய பதிவுகளில் இருக்குங்க!

நாலாவது விஷயம்: நோயிக்கு அடிப்படை காரணம் எந்த ஒரு பேக்டீரியாவோ வைரஸோ இல்ல. இது நிறைய பேர்களுக்கு புது தகவலா இருக்கும்!

பேக்டீரியாவும் வைரஸும், நம்ப உடம்புல தேங்கி இருக்கிற கழிவு பொருள்ளத்தான், காம்பிளான் குடிக்காமலேயே கிடுகிடுன்னு வளரும். நம்ப உடம்புக்குள்ள தேங்கி நிக்கிற வெளியேற்றபடாத, கழிவு பொருள் தான் அதுங்களுக்கு டானிக்!!!

நடைபயிற்சி, யோகாசனம்னு எதுவும் செய்யலேன்னா, உணவில கவனம் செலுத்தலேன்னா, அதாவது நார் சத்து (Fibre Content) இல்லாம இருக்கிற உணவுகள, கொழுப்பு சத்து அதிகமா இருக்கிற உணவுகள, டேஸ்ட் நல்லா இருக்குன்னு, விடாம சாப்பிட்டு வந்தா, நம்ப குடல் சரியானபடி வேலை செய்யாது.

கழிவுகளை அகற்ற முடியாததால, சேர்கிற கழிவுகள் உடம்புக்குள்ளேயே தங்கிடும். கொஞ்சம் கொஞ்சமா சேர்ந்து கடைசியில இந்த கழிவுகள் ரத்த்த்திலேயும் கலந்திடும்.

பாத்தா எல்லாம் அழகாத்தான் இருக்குது! ஆனா வயித்துகுள்ள தள்ளினாத்தான்....
நார் சத்து இல்லாத உணவு எதுன்னு கேட்கறீங்க இல்ல? மைதாவில செய்த உணவு வகைங்க, (பரோட்டா, கேக், பன், பிஸ்கேட், பிரட், பீட்ஸா, பர்கர்...லிஸ்ட் ரொம்ப நீளம்!!!), பாலீஷ் பிடிக்கபட்ட வெள்ளை அரிசி, மாமிச, முட்டை வகையறாக்கள், ஸ்வீட்ஸ், சாக்லேட், சிப்ஸ் etc.., etc.., etc..,       

ரத்த்தில கலந்த பின்னாடி, இந்த கழிவு பொருட்கள், உடம்புல இருக்கிற எல்லா செல்லிலேயும் போய் தங்கிடும். இப்போ தான் நம்ப உடம்பு Hot Breeding Bed ஆ மாறிபோகுது. நம்ப உடல் To-Let போர்ட் மாட்டிகிட்டு எல்லா கிருமிங்களுக்கும், வாடகை எதுவும் வாங்காத தாரளமனசு கொண்ட வீட்டுகார்ரரா மாறி, குடிவற அனுமதிக்குது.

இதன் மூலமா நாம இப்ப புரிஞ்சுக்க வேண்டியது, வைரஸ், பேக்டீரியாவால நம்ப ஆரோகியம் கெடல. நம்ப ஆரோகியம் கெட்டபின்னாடி தான் வைரஸ் பேக்டீரியா எல்லாம் கூட்டனி அமைச்சுகிட்டு நம்ப விலாசம் தேடி வருதுங்க!

நீங்க மட்டும் இயற்கையோடு இணைந்த வாழ்க்கை வாழ்ந்தீங்கன்னா, நீங்க ஏதோ ஒரு சந்தர்பத்தில, அசுத்தமான தண்ணிய குடிக்க நேர்ந்தா கூட, அதனால உங்க உடம்புக்கு ஒரு கெடுதலும் வராதுங்க!

ஏன்னா, அந்த அசுத்த தண்ணி மூலமா நம்ப உடம்புக்குள்ள போற கிருமிகளை அழிச்சி வெளியே துரத்திற வேலைய நம்பு உடம்பே பாத்துக்கும், provided நீங்க உங்க உடம்பில எந்த ஒரு வெளியேற்ற படாத கழிவுகளும் இல்லாத மாதிரி பாத்துக்கணும், நல்ல பழக்கவழக்கங்களை கடைபிடிச்சு, நம்ப உடம்புகுள்ளே இயங்குகிற, ரத்தஓட்டம், காற்றோட்டம், பிராணவோட்டம் எல்லாம் சரியானபடி இருந்திச்சின்னா நோய் நம்ப பக்கம் வர்றதுக்கே பயப்படுங்க!   

இதை நம்ப குலதெய்வம் மகமாயி மேல சத்தியம் செஞ்சி சொல்றேனுங்க. நம்பறீங்க இல்ல! உங்களுக்கு கெடுதல் நினைக்கமாட்டேன் அப்பு! உங்க பங்காளியா வேற இருக்கேன்! உண்மையை தான் சொல்றேன்.

வரேனுங்க! கொஞ்ச வேலை இருக்குதுங்க! மறக்காம ஓட்டும் கருத்தும் இடுங்க!

கருத்து சொல்றவங்களுக்கு என் மனசுல எவ்வளவு மரியாதை தர்றேன்னு நீங்களே பாருங்க!     

32 மேதைங்க இதபத்தி என்ன சொன்னாங்கன்னா...:

சௌந்தர் said...

தூர எடுத்து போட்டிட்டு, வெறும் பொங்கலை மட்டும், சாப்பிடறவங்க இருக்காங்க///

நானும் அந்த அதி புத்திசாலி ஒருத்தன் எனக்கு தெரியும் அதில் மருத்துவ குணம் இருக்கு என்று இருந்தாலும் எடுத்து வைத்து விடுவேன் (:

என்னது நானு யாரா? said...

வணக்கம் சௌந்தர்! என்ன ஒரு வேகம்பா உங்களுக்கு! பதிவு போட்ட 10 நிமிஷத்திலேயே, கருத்து சொல்லிட்டீங்க!

///நானும் அந்த அதி புத்திசாலி ஒருத்தன் எனக்கு தெரியும் அதில் மருத்துவ குணம் இருக்கு என்று இருந்தாலும் எடுத்து வைத்து விடுவேன் (:///

ஏன்னு காரணம் சொல்லலியே, நீங்க! சரிபோகட்டும். அது நம்ப உடம்புல இருந்து கழிவுகளை வெளியேற்ற பயன்படுதுன்னு உண்மை இப்போ உங்களுக்கு தெரிஞ்சு போச்சில்ல. இனி மிளகோடு சேர்த்து பொங்கல் சாப்பிடுவீங்கன்னு நம்பறேன்!

அருண் பிரசாத் said...

ஹி ஹி ஹி நீங்க சொல்லுற பல விஷயங்கள செய்யதவன் நான்.

காய்கறினாலே ஓடி போய்டுவேன்

என்னது நானு யாரா? said...

வணக்கம் அருண்! நல்லா இருக்கீங்களா?

///காய்கறினாலே ஓடி போய்டுவேன்///

இப்பத்தான் விஷயம் புரிஞ்சிபோச்சில்ல! இனி உங்க உணவு பழக்கத்தை கொஞ்சம் கொஞ்சமா மாத்திக்குங்க! நோய் வந்தா அது போல நரகம் எதுவும் இல்ல. இது எல்லா நோயாளிகளுக்கும் அனுபவபூர்வமா தெரிஞ்ச உண்மை.

நண்பர் என்கின்ற உரிமையுடன்...

வெங்கட் நாகராஜ் said...

நல்ல கருத்துக்கள் பங்காளி! நம் முன்னோர்களின் ஒவ்வொரு உணவுப் பழக்கங்களிலும் காரணம் இருந்தது! நமக்குத் தான் புரியாமல் பீட்சா, பர்கர் போன்றவற்றை நாடிக்கொண்டு இருக்கிறோம்.

வெங்கட்.

Chitra said...

சார்லி சாப்ளின் மாதிரி இருக்கீங்களே, ஏதோ காமெடி பண்ணப் போறீங்க என்று நினைத்தால், இம்பூட்டு நல்ல விஷயங்களை சொல்றீகளே!!! நன்றி, மக்கா!

என்னது நானு யாரா? said...

@வெங்கட் நாகராஜ்:

உங்க கருத்துக்கு நன்றீங்க பங்காளி!

///நமக்குத் தான் புரியாமல் பீட்சா, பர்கர் போன்றவற்றை நாடிக்கொண்டு இருக்கிறோம்.///

சரியா சொன்னீங்க! காசு கொடுத்து, கண்டதை வாங்கி சாப்பிட்டு நம்ப உடம்ப நாமலே கெடுத்துகறது, சொந்த செலவில சூணியம் வெச்சிக்கிற மாதிரி தான்.

என்னது நானு யாரா? said...

@Chitra: யக்கா! நீங்க ரொம்ப நல்லவங்க! சார்லி சாப்ளின், காமெடியில மெசேஜும் கலந்து சொல்லுவாரு இல்ல! அந்த மெத்தடை தான் ஃபாலோ செய்யலாம்னு.

உங்க பதிவு! அப்பா சூப்பர்! கொஞ்ச நேரம் முன்னாடி பாத்து தான் பல்வலி வர்ற அளவு சிரிச்சேன்.

அருமை யக்கா!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இனிமேல் காய்கறி சாப்பிடுவேன் (நான் அம்பானி ஆவேன் மாதிரி காலைல மூணு மணிக்கு மொட்டை மாடில நின்னுகிட்டே சொன்னா நோய் தீருமா?)

என்னது நானு யாரா? said...

@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா): நண்பா! வயித்தல போடறது தான் கணக்கு! வாய்ல சொல்றது கணக்குல சேர்த்தி இல்ல!

ஆரோகியம் வேணும் இல்ல நமக்கு! அப்படியின்னா காய்கறி பழங்கள் சாப்பிடுங்க! பச்சை காய்கறீங்க, பழங்கள் ரொம்ப பெட்டர்!

guna said...

please read this book "namadu udale namakku maruthuvar" author kumar


publisher kasthuri pathipagam, coimbatore

cell no 9245853039

என்னது நானு யாரா? said...

புத்தகத்தை பத்தி சொன்னதுக்கு நன்றீங்க! நம்ப எழுத்து பத்தி என்ன நினைக்கறீங்கன்னு சொல்லுங்க! வருகைக்கு நன்றி!

நாய்க்குட்டி மனசு said...

பொங்கல்ல போடுற மிளகை தூரப் போடாம இருக்க ஒரு வழி சொல்றேன், முடிஞ்சா முயற்சி பண்ணுங்க.
வழக்கமா அரிசி வேகும் போதே மிளகை போடுவாங்க, அப்படிப் போடாம அரிசி பருப்பு மட்டும் வேக வைத்து கடைசியில் நெய்யில் சீரகம், மிளகை வறுத்து போட்டு பாருங்க, மிளகு முறு முறுனு 'என்னை மென்னு' னு சொல்லும்.

--

மங்குனி அமைசர் said...

நம்ப உடல் To-Let போர்ட் மாட்டிகிட்டு எல்லா கிருமிங்களுக்கும், வாடகை எதுவும் வாங்காத தாரளமனசு கொண்ட வீட்டுகார்ரரா மாறி, குடிவற அனுமதிக்குது.///

அப்ப "நோ வேகன்சி " போட்டா எந்த நோயும் வராதா சார் (சும்மா காமடிக்கு )

என்னது நானு யாரா? said...

@நாய்க்குட்டி மனசு: சமையல் டிப்ஸ் கொடுத்ததுக்கு நன்றீங்க! ஆனா அப்படி வறுத்து போட்டா, மிளகோட மருத்துவ குணம் கெட்டுபோகுமான்னு தெரியலையே!

அதைபத்தி தெரிஞ்சா சொல்லுங்க!

என்னது நானு யாரா? said...

@மங்குனி அமைசர்:
///அப்ப "நோ வேகன்சி " போட்டா எந்த நோயும் வராதா சார்///

அமைச்சரே! இங்கலீஷ் படிக்க தெரிஞ்ச கிருமீங்க வராது. ஆனா என்ன கொடுமைன்னா, நிறைய கிருமீங்களுக்கு தமிழ் மட்டும் தான் எழுத படிக்க தெரிஞ்சிருக்கு!

dheva said...

உறவுக்கார அப்பு...அம்புட்டு பதிவும் சூப்பரப்பு... நிஜமாவே அட்ராக்ட் பண்றீங்க..பாஸ்!

என்னது நானு யாரா? said...

@dheva: நீங்க வந்து, எல்லா பதிவுகளையும் படிச்சி பாத்து கருத்து சொன்னதுக்கு நன்றீங்க தேவா!

உங்கள் வருகையையும் ஆதரவையும் தொடர்ந்து எதிர்பார்கிறேன். வருவீங்க இல்ல பாங்காளி!

நீங்களும், கே.ஆர்.பி செந்தில் அவர்களும், பல பதிவு எழுத்தாளர்களை, அதுவும் புதியவர்களை ஊக்குவிப்பதை சந்தோஷமான விஷயமாக நினைக்கிறேன்.

எஸ்.கே said...

நீங்க சொன்னது ரொம்ப சரி! உடம்பு கழிவுப் பொருளை சரியா வெளியேற்ற முடியாததாலை கெட்டுப்போகுதுதான். இதுக்கு உணவுப் பழக்கம் மட்டும் காரணம் என்று சொல்ல முடியாது. ஆனால் 90% உணவுப் பழக்கம்தான் காரணம்.
இயற்கை மருத்துவம் பற்றி நல்லபடியாக சொல்றீங்க! உங்கள் பணி தொடரட்டும். என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

என்னது நானு யாரா? said...

@எஸ்.கே:
///இதுக்கு உணவுப் பழக்கம் மட்டும் காரணம் என்று சொல்ல முடியாது.///

வேற என்னென்ன காரணங்கள் இருக்குன்னு சொல்லி இருக்கலாமே நண்பரே! அவைகளை தெரிந்து கொள்ள பயனா இருந்திருக்குமே!

உங்களின் வாழ்த்துக்களுக்கும், பாரட்டுகளுக்கும் நன்றீங்க!

DrPKandaswamyPhD said...

கருத்துகள் ரொம்ப நல்லாயிருக்கு. என்ன கஷ்டம்னா நல்லதைச்சொன்னா யாருக்கும் கேக்க மனசில்ல. பாப்போம், பதிவு எப்படி போகுதுன்னு.

கமென்ட் போடறதுல word verification இல்லாம moderation மட்டும் இருந்திச்சுன்னா கொஞ்சம் சௌகரியமா இருக்கும்னு நான் நினைக்கிறேன். எதுக்கும் நாலு பேரக் கேட்டுட்டு மாத்துங்க.

எஸ்.கே said...

உணவுப் பழக்கம், மற்ற பழக்கங்கள்(குடி, புகை பிடித்ட்ஜல் போன்றவை), மரபியல் காரணிகள், மற்றும் சூழ்நிலை இது நான்கும்தான் ஒருத்தரோட உடல்நலத்தை தீர்மானிக்கிறது. இதில் மரபியல் காரணிகளை நம்மால மாற்ற முடியாது, சூழ்நிலையை ஓரளவுக்குத்தான் மாற்ற முடியும். அதனால மிச்சமிருக்கிற உணவுப் பழக்கம் மற்றும் மற்ற பழக்கங்களை சரியா கடைபிடிச்சா நம்ம உடல்நலம் எப்போதுமே நல்லா இருக்கும்.

என்னது நானு யாரா? said...

@DrPKandaswamyPhD: ///என்ன கஷ்டம்னா நல்லதைச்சொன்னா யாருக்கும் கேக்க மனசில்ல///

உண்மை தாங்க ஐயா! நோய் வந்த பின்னாடி கஷ்டபடற ஜனங்களோட எண்ணிக்கை தான் அதிகம். வரும் முன் காப்போம்ங்கிற சிந்தனை நிறைய பேர்களுக்கு இல்ல.

///கமென்ட் போடறதுல word verification இல்லாம moderation மட்டும் இருந்திச்சுன்னா கொஞ்சம் சௌகரியமா இருக்கும்னு நான் நினைக்கிறேன். எதுக்கும் நாலு பேரக் கேட்டுட்டு மாத்துங்க.///

Comment -ஐ, தூக்க கலகத்தில போட்டிருக்கீங்க போல தெரியுது! இது வேற எங்கேயோ போடவேண்டியதை, அட்ரஸ் மாத்தி இங்கே டெலிவரி செஞ்சிட்டீங்க ஐயா! என்ன அப்படி ஒரு அவசரம்! நம்ப பதிவு என்ன, எந்திரன் படம் பார்க்கிற மாதிரியா! சீக்கிரம் போகலேன்னா, டிகெட் கிடைக்காதுங்கிற போல. நல்ல தூக்கம் தெளிஞ்ச பின்னாடி நிதானமா Comment போட்டிருக்கலாமே!

என்னது நானு யாரா? said...

@எஸ்.கே: நன்றிங்க நண்பரே! மறுபடியும் வந்து உங்க முதல் கருத்தை விளங்க வெச்சதுக்கு! மக்களுக்கு நல்ல கருத்துக்கள் போய் சேரணும்ங்கிற உங்க தீவிர ஆர்வத்தை பாராட்டுறேன்.

சிங்கக்குட்டி said...

மிக நல்ல விசையங்ககள் கொண்ட ஒரு அருமையான பதிவு.

என்னது நானு யாரா? said...

@சிங்கக்குட்டி: தோழரே! உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து தரணும்னு கேட்டுகிறேன்!

philosophy prabhakaran said...

இதெல்லாம் படிச்ச கொஞ்சம் பயமா இருக்கு தல... ஆனா கண்டிப்பா உங்க சரக்கு விக்கும்...

என்னது நானு யாரா? said...

@philosophy prabhakaran: விஷயம் ஒன்னும் தெரியாம, குருட்டாம்போக்கில, "வெந்ததை தின்று, வேலை வந்தால் சாவலாம்ன்னு" காலத்தை கழிக்கிறதை, நினைச்சா தான் பயமா இருக்கும்.

நல்ல நீச்சல் பழகுனவங்களுக்கு, குளமென்னா கடலென்னா!

உண்மையை விளங்கி கொண்டு, உங்க கையில இருக்கிற சாவியை பயன்படுத்தனும்னு தாங்க, இதை சொல்ல வந்தேன்.

anatomist said...

dr. karthick
iam an anatomist,allopathic medicine name itself denotes allo = side effect, if v take the english medicine sure it will produce side effect, but no one believes that, no one want to do yoga and our tamil way of eating foods, even my parents telling me as loose,if i say that,

என்னது நானு யாரா? said...

Dr.Karthick!

நீங்க ஒரு ஆங்கில மருத்துவர். ஆனால் எப்படி அதனையே எதிர்கிறீர்கள் என்று தெரியவில்லையே. உங்கள் ஆன்மா அதற்கு எப்படி இடம் கொடுக்கிறது என்று சொல்லவும்?

//even my parents telling me as loose,if i say that//

நீங்கள் ஒரு இயற்கை மருத்துவராகவோ அல்லது ஆயுர்வேத மருத்துவராகவோ இருந்து நீங்கள் ஆங்கில மருத்துவ முறையை குறை சொன்னீர்கள் என்றால் அதை நம்புவார்கள்.

ஆனால் நீங்களோ ஆங்கில மருத்துவர். அதனால் தான் உங்களின் பெற்றோர்களே உங்களின் பேச்சுக்கு மதிப்பு கொடுக்க மாட்டென்கின்றனர்.

ThirumalaiBaabu said...

தவறா நினைக்க கூடாது ....
நெறைய பேருக்கு இந்த அடிப்படை விசயமே தெரியாம கண்ட பொருளை எல்லாம் தின்னு ...பாவம் மெசின் (அதான் வவுறு )...
உறவுக்கார அண்ணே ...என்ன வகை சாப்பாடு சாபிட்டா சரியானது , அதோட எத்தன வேளை , எப்போ எத சாபடருது நு சொன்னா நல்ல இருக்கும் ...

Anonymous said...

pangaali super pangaali. naanum oru 90% kidney failure noyali. but ippo recovery agudhu. iyarkai annai thantha gift pangaali.naan doctor pecha kettu irundha dialisys illa transplantation panni ayul poora noyaliya irundirupen.iraivan arulala nan suyama sindichi samachi saapidama ippo nalla irukken. please watch anatomictherapy.org. iraivan arulal ulagamellam iyarkai unavu paravattum. natpukkaaga
milkymani@yahoo.com

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

Post a Comment

பங்காளி! சரக்கு எப்படி? விக்குமா... விக்காதா...??? கொஞ்சம் சொல்லிட்டு போங்க!!!