பன்னீர் தெளிக்கிறோமில... ப்ளீஸ்... கொஞ்சம் தலை குனியுங்க...

வணக்கம் பங்காளீ! வாங்க, சவுக்கியங்களா? நம்ம வலைபதிவு பக்கம் வந்ததுக்கு நன்றீங்கோ...Get this Widget

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே! என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி! நண்பர்களே!

மனிதர்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் சிந்தனைகள், இங்கு சிதறிகிடக்கிறது. படித்து பார்த்து உங்கள் கருத்துக்களை இடவேண்டுகிறேன்!

தொடர்ந்து, இந்த வலைபதிவுக்கு உங்களின் ஆதரவை தாருங்கள்!!! நன்றி! தொடர்ந்து வருக!!!

இந்த நாள், உங்களுக்கு, இனிய நாளாக அமைவதாக!!!

பாசகார பங்காளி கூட்டமுங்க! நீங்களும் கூட வாறீகளா?

19-Aug-2010

என்னது! ஆபரேஷன் இல்லாம மூளை கட்டி குணமாகுதா?....!!!!
மூளை கட்டி, எந்த ஒரு ஆபரேஷனும் இல்லாம குணமாச்சு, இயற்கை மருத்துவத்திலன்னு சொன்னேன் இல்ல அப்பு போன பதிவுல.

அந்த உண்மை சம்பவம் இதோ:

எனக்கு தாய்மாமா ஒருத்தர் வாணியம்பாடியில Shoe companyல சூப்பர்வைசரா வேலை பாத்தாருங்க. ஒன்றரை வருஷம் முன்னாடி அவர் வேலை செய்ற கம்பனில ஒருநாள் மயக்கமா அப்படியே தரையில சாஞ்சிட்டாரு. உடனே கிட்ட இருக்கிற மருத்துவமணைக்கு தூக்கிட்டு போனாங்க.

அங்க முதலுதவி மட்டும் செயதபின்னாடி வேலூருக்கு போக சொன்னாங்க. அவருக்கு ரெண்டு வருஷமா, அடிக்கடி தலை வலி  வர்றது வழக்கமுங்க. அதை அவர் பெருசா எடுத்துகல. தலை வலி வரும்போதெல்லாம் Paracetamol  மாத்திரைகளை சாப்பிட்டு வந்திருக்கிறாரு.

வேலூர் மருத்துவமணை, Scan எடுத்து வர சொல்லி சென்னைக்கு அனுப்பினாங்க.

Scan எடுத்து பாத்தப்பத்தான் தெரிஞ்சது, அவருக்கு மூளையில கட்டி இருக்குன்னு. அதுவும் 8.2 செண்டி மீட்டரு நீளம். நம்ப நடுவிரல் அளவு கட்டிங்க. கொஞ்சம் கற்பனை செய்து பாருங்க. கட்டி வேற முத்தின நிலையில எப்ப வேணுமின்னாலும் வெடிக்கலாமுங்கற நிலையில இருந்திச்சு.

இங்கலீஷ் டாக்டரெல்லாம் என்ன சொன்னாங்கன்னா, உடனே ஆபரேஷன் செஞ்சு கட்டிய எடுக்கலன்னா எந்த நிமிஷத்திலேயும், கட்டி வெடிக்கிற அபாயம் இருக்கு, கட்டி வெடிச்சதுன்னா, அது உயிருக்கே கூட ஆபத்துன்னாங்க. அப்படி இல்லன்னா உடம்புல ஒரு பகுதி செயல்படாம போக வாய்ப்பு இருக்குன்னாங்க. 

ஆபரேஷனுக்கு குறைஞ்சபச்சம் மூனு லட்சம் செலவு ஆகுமுன்னாங்க. கட்டி மூளையில இருக்கிறதால, அத வேரோட எடுக்கவும் முடியாதாமா. சும்மா மேலாக்கா அறுத்து எடுப்பாங்கலாம். அந்த கட்டி மறுபடியும் வளர்றாம இருக்கிறதுக்கோ, இல்ல வேறு இடத்தில பரவாம செய்றதுக்கோ எந்த கேரண்டியும் தர முடியாதுன்னுட்டாங்க. அப்படி மறுபடியும் வளர்ந்தா திரும்பவும் ஆபரேஷன் செய்யனும்னாங்க. (இதபார்றா! அப்ப எதுக்கு 3 லட்சம்

மாமா குடும்பம் ஏழை குடும்பம். அவ்வளவு பணத்துக்கு எங்கே போறது. இருக்கிற வீட்டை விற்க துணிஞ்சிட்டாங்க. வேற வழி தெரியாம, சாவு கலையோட அவங்க வீடு இருந்திச்சுங்க

இப்ப தாங்க, கதையில ஹிரோ என்ட்ரீ! யாருப்பா அது, ஹிரோ யாருன்னு கேட்கறது? அது நான் தான்னு வேற சொல்லனுமாக்கும்!

நானு, இயற்கை மருத்துவத்தை பத்தி M.Phil ஆராய்ச்சு செய்திருக்கேங்க. மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில Peace Making and Gandhian Thought என்கின்ற M. Phil பாட பிரிவில படிக்கும் போது தான் அந்த  வாய்ப்பு கிடைச்சுதுங்க. (அப்பாடி நம்பளை பத்தி பெருமையா பேச  எப்படியோ ஒரு சந்தர்ப்பம்).

காந்திஜி அவர் வாழ்க்கை முழுதும் இயற்கை மருத்துவத்தை தான் Follow செய்தாருங்க. உங்க எல்லோருக்கும் தெரிஞ்ச சேதி அவர் பச்சை வேர்கடலை அப்புறம் ஆட்டு பால் குடிச்சாருன்னு தானே? அவர் இயற்கை உணவு, இயற்கை மருத்தும்ன்னு, தன் உடம்பு மேலேயே ஆராய்ச்சி செஞ்சவரு. அவரை பத்தி நிறைய இருக்கு பங்காளி! பேசுவோமே அப்புறமா!

இப்ப கதைக்கு வருவோம். எங்க விட்டேன்? மாமா குடும்பம் வழி தெரியாம கலங்கிட்டு இருந்திச்சா, நான் போன் போட்டு அவங்களை சென்னைக்கு வரவழைச்சேன். இதுக்கு முன்னாடியே என் ஆராய்ச்சுக்காக நான் போன AVG Nature Cure Hospitalக்கு போன் போட்டு டாக்டர் கிட்ட இது விஷயமா பேசி தெரிஞ்சுகிட்டேன். பங்காளி! இந்த ஹாஸ்பிட்டல், சென்னை அரும்பாக்கத்தில இருக்குது.

அங்க கூட்டிட்டு போய் காட்டினா, ஸ்கேன் ரிபோட்டெல்லாம் பாத்துட்டு டாக்டர், கட்டி முத்திபோய் தான் இருக்குது, ஹாஸ்பிட்டல்ல உள்நோயாளியா சேருங்க! முயற்ச்சி செஞ்சிபாக்கலாம்னு சொன்னாரு.

முதல்ல, எங்க மாமா குடும்பத்தில யாருக்கும் நம்பிக்க வரலே. அவங்க மேல தப்பில்ல. மருத்துவம்ன்னா அது இங்கலீஷ் மருத்துவம்ன்னு ஆயிடிச்சு. எப்படியோ அவரை வற்புறுத்தி சேத்தாச்சு.

அப்புறம் என்ன! அவருக்கு ரெண்டு மாசம் இயற்கை மருத்துவ ட்ரீட்மெண்ட். ட்ரீட்மெண்ட் எல்லாம் விநோதமா இருக்கும். மண் குளியல், வாழையிலை குளியல், சூரிய குளியல், அஹிம்சை எனிமா, மசாஜ், நீராவி குளியல், காந்த சிகிச்சை. சமைக்காத பச்சை காய்கறீங்க, பழங்கள் உணவு, இப்படி பல விதமா இருக்கும்.

இதை எல்லாம் பத்தி புரியாதவங்களுக்காக, இந்த சிகிச்சை முறைகளை விளக்கி ஒரு பதிவு போடறேன்.

கொஞ்சம் கொஞ்சம் தேறி வந்தாரு. அந்த ரெண்டு மாசத்தில அபாய கட்டத்தில இருந்து மீண்டு வந்தாரு.

வெரும் எழுத்தா இருந்தா போர் அடிக்கும் இல்ல அப்பு! அதுக்குதான் இது 
வீட்டுக்கு வந்த பின்னாடியும் ஒரு 4 மாசம், இதே சிகிச்சை முறை தொடர்ந்தாரு. ஆச்சரியம் என்னானா, எந்த ஒரு ஆபரேஷன் இல்லாம கட்டி கரைய ஆரம்பிச்சிடுச்சு. இப்ப ரொம்ப நார்மலா வேலைக்கு போறாரு.

இதில ஹைலைட்டான விஷயம். அவருக்கு ஆன மொத்த மருத்துவ செலவும் 20,000 ரூபாய் தான். இங்கலீஷ் மருத்துவர்கள் சொன்ன 3 லட்சத்தில இது 7 சதவீதம் கூட இல்ல. கட்டி திரும்பவும் வளருமோன்னு பயம் இல்ல.          

இந்த நல்ல விஷயத்தை தெரிய படுத்தறது பங்காளி உங்க கிட்ட தான் இருக்கு! போன பதிவ பிரபளமாக்கினதுக்கு உங்க எல்லோருக்கும் நன்றி சொல்லிக்கிறேனுங்க.

உங்க கருத்து மிகவும் முக்கியம்! உங்க ஓட்டு - அதுவும் கூட முக்கியம் தான்!  

ஓட்டு போட்டுடுங்க! இல்லன்னா.... 


அழுதுடுவேன்
(என்ன எழுத்து தெரியலியா? கண்டுபிடிச்சவங்க, சும்மா இருங்கப்பா மானம் போயிடப்போது!)  

நன்றிங்க! வரேனுங்க!

31 மேதைங்க இதபத்தி என்ன சொன்னாங்கன்னா...:

அருண் பிரசாத் said...

நல்ல தகவல், ரிஸ்க் எடுக்கத்தான் பயம்

என்னது நானு யாரா? said...

@அருண் பிரசாத்: முதல்ல வந்து கருத்து தெரிவித்து ஓட்டும் போட்ட நமது அண்ணன் 52வது வட்ட செயலாளர் அருண் பிரசாத் அவர்களுக்கு இந்த கதராடையை பொன்னாடையாக போர்த்துகிறேன்.

அண்ணே! உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமாண்ணே!அமெரிக்காவில ஜனங்க அதிகமா எதனால சாவுறாங்கன்னு. இந்த லிங்க புடிங்க! படிங்க http://www.wanderings.net/notebook/Main/LeadingCauseOfDeathMedicalTreatment

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அருமையான பதிவு சேலம் சித்த வைத்தியர் அவர்களே...

என்னது நானு யாரா? said...

@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா): என்னங்க பண்றது. நம் நாட்டு ஏழை பாழைங்க சரியான மருத்துவ வசதி இல்லாம திண்டாடுறாங்க. நல்ல தகவல்கள் அவங்களுக்கு போய் சேருவதில்ல. உங்கள போல இருக்கிற பெரிய மனுஷங்களுக்கு சொல்லிவெச்சா, நீங்க உங்களுக்கு தெரிஞ்சவங்களுக்கு சொல்வீங்க இல்ல! அதனால தான் எழுதினேனுங்க.

உங்க பாராட்டுக்கு நன்றீங்க!

புருனோ Bruno said...

தற்சமயம் எடுத்த ஸ்கேனில் கட்டி எந்த அளவு இருக்கிறது

என்னது நானு யாரா? said...

@புருனோ Bruno: 14 மாதங்களுக்கு முன்பு ஸ்கேன் எடுத்த போது, கட்டி 7 செ.மீட்டராக குறைந்து இருந்தது. அதற்கு பிறகு அவரால் ஸ்கேன் எடுக்கும் பண வசதி இல்லை அவருக்கு. இப்போது மிகவும் இயல்பாக வேலைக்கு சென்று வருகிறார். எல்லா வேலைகளும் செய்கிறார். தலைவலி வருவதில்லை. அதனால் ஸ்கேன் தேவையில்லை என்று அவரும், அவரின் குடும்பத்தாரும் விட்டுவிட்டனர்.

காவேரி கணேஷ் said...

பதிவின் கருத்து என்னமோ நல்லா தான் இருக்கு, ஆனா சீரியசான மேட்டர காமெடி பதிவு மாதிரி எழுதியிருக்கிறது ரொம்ப வருத்தமா இருக்கு.

சனிகிழமை கேபிள் சங்கரின் புத்தக வெளியீட்டிற்கு வருவீர்களா?
இதை பற்றி பேசவேண்டும்

கே.ஆர்.பி.செந்தில் said...

//இதை எல்லாம் பத்தி புரியாதவங்களுக்காக, இந்த சிகிச்சை முறைகளை விளக்கி ஒரு பதிவு போடறேன்.//

அவசியம் எழுதுங்க...

என்னது நானு யாரா? said...

@காவேரி கணேஷ்: வருகைக்கும், உங்க கருத்துக்கும் நன்றி! இந்த நடை கொஞ்சம் எனக்கு ஏதோ கதை சொல்கிற மாதிரி இயல்பா இருக்கிறதால, இந்த நடையை கடைபிடிக்கிறேன்.

சனிகிழமை கேபிள் அண்ணனின் புத்தக வெளியீட்டு விழாவிற்கு வரவேண்டும் என்று தான் இருக்கிறேன். உங்களை போன்ற மூத்த பதிவு எழுத்தாளர்களை சந்திக்கிறது சந்தோஷமான விஷயம் தானே!

என்னது நானு யாரா? said...

@கே.ஆர்.பி.செந்தில்: உங்கள மாதிரி தேனி போல சுறுசுறுப்பான பதிவு எழுத்தாளர பாத்ததில்ல. தினம் தினம் ஒரு பதிவு எழுதறீங்க. உங்களுக்கு எப்படி தான் நேரம் கிடைக்குதோ! கொஞ்சம் சொல்லுங்களேன்!

நீங்க கேட்டுகொண்டபடியே இயற்கை மருத்துவ சிகிச்சை முறைகளை பத்தி கட்டாயம் எழுதறேன் அண்ணா!

Gayathri said...

mika mika arumayana usefulaana padhivu...kandippaga angu sendru parkiren...mikka nandri....

Nenga anupuna andha super kadhaiyay publish senjuten...kandippa paarunga

mikka nandri...

vazhthukkal

ஆட்டையாம்பட்டி அம்பி said...

அமெரிக்காவிற்கு வாரீகளா? நீங்கள் செய்யுமம் வைத்தியத்திர்க்கு இங்கு குறைந்தது $100,000 செலவு ஆகும். அதாவது 50 லட்சம் ரூபாய். அரை கோடி. அதுவும் guarantee கிடையாது. திரும்பவும் அந்த நோய் தாக்கலாம்.


உங்களை நான் sponsor செய்கிறேன்...உங்களுக்கு தோராயமாக மாதத்திற்கு $ 50,000 கிடைக்கும், செலவு போக. அதாவது வருடத்திற்கு மூன்று கோடி இந்திய ரூபாய் கிடைக்கும்.

நீங்கள் இங்கு வந்து இந்த வெள்ளக் கார டாக்டருக்கு பாடம் கற்பிக்க வேண்டும்...வரீங்களா?

என்னது நானு யாரா? said...

@Gayathri: உங்க வருகைக்கும், கருத்துக்கும் நன்றீங்க. நம்ப எல்லோருக்கும் ஏத்த மருத்துவ முறை, இயற்கை மருத்துவ முறைதாங்க. பக்க விளைவுகள் ஏதும் இல்லாதது. செலவு மிகவும் குறைந்த மருத்துவ முறைங்க. இது நிறைய பேர் தெரியாமலே இருக்காங்க. அதனால தான் இந்த விஷயத்தை சொல்ல வந்தேன்.

நான் கேட்டுகொண்ட மாதிரியே நான் அனுப்பிய குழந்தைங்க கதையை உங்க பதிவுல போட்டதுக்கு நன்றீங்க. என் பெயரும், வலைபதிவு லிங்கும் கூட கொடுத்திருக்கீங்க. மிகவும் மகிழ்ச்சிங்க!

சௌந்தர் said...

ரொம்ப நல்ல விசயம் டாக்டர் நம்ம உடம்பை ஒரு வழி (வலி) பண்ணி பணம் வாங்கி கொள்வார்கள் இயற்கை வைத்தியம் சரியான சந்தோசம்

என்னது நானு யாரா? said...

@ஆட்டையாம்பட்டி அம்பி: உங்க வருகைக்கும், கருத்துக்கும் நன்றீங்க! இயற்கை மருத்துவ முறையும் MBBS போல 5 வருஷ படிப்புங்க. அதுக்கு பேரு BNYS(Bachelor of Naturopathy and Yogic Science). அந்த படிப்பு படிச்சு பட்டம் வாங்கி இருந்தா தான் டாக்டாரா தொழில் செய்ய முடியும். இப்போ இந்த படிப்பு சொல்லி கொடுக்கிற காலேஜ் சில இடங்கள்ல இருக்கு. நான் அந்த படிப்பு படித்த டாக்டர் இல்ல. பதிவிலேயே சொன்னது போல நான் என்னுடைய M.Phil படிப்புக்கான ஆராயிச்சுக்கு இயற்கை மருத்துவத்தை Topicஆ தேர்ந்தெடுத்தேன்.

என் ஆராயிச்சுக்கு பல இயற்கை மருத்துவர்களை சந்தித்து, பல புத்தக்ங்களை படித்து பெற்ற அனுபவங்களே என்னை எழுத தூண்டியது.

என்னது நானு யாரா? said...

@சௌந்தர்: நான் கூப்பிட்ட அழைப்பை ஏற்று வந்ததுக்கு நன்றீங்க! மக்கள் அறியாமையில இருக்காங்க. காந்தியடிகள், இந்த மக்களுக்காக தான் பாடுபட்டாரு. நம்ப நாட்டுக்கு ஏற்ற மருத்துவ முறை எதுன்னா அது இயற்கை மருத்துவம் தான்னு கண்டுபிடிச்சாரு. அவரே தன்னையும் தன் குடும்பத்தாரையும் இயற்கை மருத்துவ முறைக்கு சோதனைக்கு உள்ளாக்கிட்டாரு.

அதை பத்தி எல்லாம் எழுதறேன். ஒவ்வொரு பதிவுக்கும் உங்க ஆதரவு தேவை! ஆதரவு தருவீங்க இல்ல?

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

நல்லாத்தான் சொல்லுறாங்க...............பாசக்கார பயலுகப்பா! நல்லா இருங்கப்பு!

TERROR-PANDIYAN(VAS) said...

அப்பு ரொம்ப நாளா தேடி இப்பொதான் உங்க வீட்ட கண்டு பிடிச்சேன்... நல்லா எழுதி இருக்கிங்க... வாழ்த்துகள்...

வெங்கட் said...

அருமையான பதிவு..

ஆமா இயற்கை வைத்தியத்துல
தைராய்டுக்கு கூட Treatment இருக்கா..??

என்னது நானு யாரா? said...

@பெயர் சொல்ல விருப்பமில்லை: அண்ணே! உங்க வருகைக்கும், கருத்துக்கும் நன்றீங்கண்ணா!

என்னது நானு யாரா? said...

@TERROR-PANDIYAN(VAS): ஆமாங்க அப்பு! சிங்கார சென்னையில வீட்டு விலாசம் தேடுறது லேசுபட்ட காரியம் இல்ல. எப்படியோ! தேடி கண்டுபிடிச்சு சேந்தியே! அதுவே சந்தோஷமப்பு!

உங்க பாராட்டுகளுக்கு நன்றீங்க அப்பு!

என்னது நானு யாரா? said...

@வெங்கட்: வா தல! வா இப்பவாச்சும் வரணும்னு தோனிச்சே! ஆக்கி வெச்ச பலகாரம் எல்லாம் ஆறி போய் கிடக்குதுப்பா!

தல! இயற்கை மருத்துவத்தில பொறுத்த மட்டில. இந்த நோய் அந்த நோய் எல்லாம் கிடையாது. நோய் ஒன்றே! உடல்ல தேங்கி நிக்கிற கழிவுகள் தான் நோயா வெளிபடுது. அதை போக்கிற மருத்துவ முறை தான் இது. என்னோட மற்ற பதிவுகளை படிச்சீங்கன்னா, இது என்னான்னு புரிய ஆரம்பிக்கும்.

எதுன்னாலும் தைரியமா இறங்கலாம். ஏன் எயிட்ஸ்ன்னு சொல்லி பயமுறுத்திற வியாதிய கூட அதனுடைய வீரியத்தை குறைச்சு மட்டு படுத்த முடியும். சிம்பிள் Equation தான். தேங்கி நிக்கிற கழிவு = நோய். நோய் - தேங்கி நிக்கிற கழிவு = ஆரோகியம். அவ்வளவு தான் தல.

உங்க பாராட்டுகளுக்கு நன்றி பாஸ்!

புருனோ Bruno said...

நீங்கள் முதலில் எழுதியது

//Scan எடுத்து பாத்தப்பத்தான் தெரிஞ்சது, அவருக்கு மூளையில கட்டி இருக்குன்னு. அதுவும் 8.2 செண்டி மீட்டரு நீளம்.//

தற்சமயம் எழுதுவது

//14 மாதங்களுக்கு முன்பு ஸ்கேன் எடுத்த போது, கட்டி 7 செ.மீட்டராக குறைந்து இருந்தது. //

ஆக 1.2 செ.மீட்டர் நீளம் குறைந்து உள்ளது. அகலம் கூடியுள்ளதா என்று தெரியவில்லை

சரி

கட்டி என்று எப்படி முடிவு செய்தார்கள் என்று தெரிந்து கொள்ள ஆவல்

என்னது நானு யாரா? said...

@புருனோ Bruno: நண்பரே! இயற்கை மருத்துவ சிகிச்சை அவர் தொடங்கும் முன், அவர் எடுத்த ஸ்கேன் ரிபோட் காட்டியது தான் 8.2 செ.மீட்டர். இயற்கை மருத்துவ சிகிச்சை ஆரம்பித்து 4 மாதங்கள் கழிந்த பின் எடுத்த ஸ்கேன் ரிபோட் தான் 7 செ.மீட்டர்.

அதற்கு பின், வேறு ஸ்கேன் இது வரை அவர் எடுக்க வில்லை. பண வசதி இல்லாமையே அதற்கு காரணம்.

முளை கட்டி என்று, ஸ்கேன் ரிபோட் காட்டபட்ட, வேலூர் CMC மருத்துவமணை டாக்டர்கள் தான் தெரியபடுத்தினர். அதன் பின் தான் இயற்கை மருத்துவத்தை நாடினர். அவர்களும் அந்த ரிபோட்டை பார்த்து உறுதி செய்தனர்.

அலைகள் பாலா said...

திரும்ப ஸ்கேன் செஞ்சு கட்டி எப்படி இருக்குன்னு உறுதி படுத்தி ஒரு பதிவு போடுங்க பாஸ்..

என்னது நானு யாரா? said...

@அலைகள் பாலா: படித்து பார்த்து கருத்தை சொன்னதற்கு நன்றி நண்பரே!

//திரும்ப ஸ்கேன் செஞ்சு கட்டி எப்படி இருக்குன்னு உறுதி படுத்தி ஒரு பதிவு போடுங்க பாஸ்..//

அந்த எண்ணம் இருக்கு. பார்க்கலாம். அவர் குடும்பம் நடத்தவே, நாங்கள் ஒவ்வொரு மாதமும் உதவும் நிலையில் அவர் இருக்கிறார்.

ஸ்கேன் எடுக்க எப்படியும் 2000 ரூபாய் ஆகும்! கூடிய சீக்கிரத்தில் எந்த வழியிலேனும் பணம் திரட்டி ஸ்கேன் எடுக்க முயற்ச்சி செய்கிறேன்.

Anonymous said...

நீங்கள் ஆசன ஆண்டியப்பன் நடத்தும் கல்லூரியில் அல்லது Madras University சேர்ந்து ஒரு வருடம் PGDyn Courseல் சேர்ந்து, படித்து முடித்த பின் மருத்துவராக பயிற்சி செய்யலாம்.

என்னது நானு யாரா? said...

@Anonymous:

//நீங்கள் ஆசன ஆண்டியப்பன் நடத்தும் கல்லூரியில் அல்லது Madras University சேர்ந்து ஒரு வருடம் PGDyn Courseல் சேர்ந்து, படித்து முடித்த பின் மருத்துவராக பயிற்சி செய்யலாம்.//

பெயர் சொல்ல விரும்பாத நண்பரே! உங்களின் ஆலோசனைக்கு நன்றி!

எனக்கு இப்போது தியானத்தின் மீது நாட்டம் செல்வதால், படித்து, இயற்கை மருத்துவர் ஆக வேண்டும் என்கின்ற நாட்டம் என்னிடம் இல்லை.

Anonymous said...

very good

Anonymous said...

அருமையான பதிவு..

R Krishna said...

Thanks

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

Post a Comment

பங்காளி! சரக்கு எப்படி? விக்குமா... விக்காதா...??? கொஞ்சம் சொல்லிட்டு போங்க!!!