பன்னீர் தெளிக்கிறோமில... ப்ளீஸ்... கொஞ்சம் தலை குனியுங்க...

வணக்கம் பங்காளீ! வாங்க, சவுக்கியங்களா? நம்ம வலைபதிவு பக்கம் வந்ததுக்கு நன்றீங்கோ...Get this Widget

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே! என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி! நண்பர்களே!

மனிதர்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் சிந்தனைகள், இங்கு சிதறிகிடக்கிறது. படித்து பார்த்து உங்கள் கருத்துக்களை இடவேண்டுகிறேன்!

தொடர்ந்து, இந்த வலைபதிவுக்கு உங்களின் ஆதரவை தாருங்கள்!!! நன்றி! தொடர்ந்து வருக!!!

இந்த நாள், உங்களுக்கு, இனிய நாளாக அமைவதாக!!!

பாசகார பங்காளி கூட்டமுங்க! நீங்களும் கூட வாறீகளா?

26 Aug 2010

பல சிக்கல் வேண்டாமுன்னா, மலசிக்கல போக்குங்க அப்பு!










மலசிக்கல் – முன்னனி நோய்கள்ல இதுவும் ஒன்னு பங்காளி! இது, இன்னைக்கு நம்ப நாகரீகத்தோட வளர்ச்சியை(!!!) காட்டுது அப்பு! வாழ்க்கையில இப்ப இருக்கிற அவசர கதி ஓட்டத்தில ஏதோ வெந்ததை தின்னு பசியை போக்கிகிட்டு ஓடிகிட்டிருக்கோம்.

சிலரு நாவுக்கு அடிமை ஆகி, டேஸ்டா இருக்குங்கிற காரணத்துக்காக வித விதமான அசைவ உணவா போட்டு தாக்கிறாங்க அப்பு! அசைவ உணவில நார் சத்து பேருக்கு கூட இல்லங்கிற உண்மையை, இவங்களுக்கு யாரும் சொல்லி தரல போல! 

உடல் உழைப்பு இல்லாம, நோகாம நோம்பு கும்புடறாங்க ஜனங்க. இன்றைய தேதியில எல்லா வேலைக்கும் மிஷினை கண்டுபிடிச்சாசி.

சிலர் தண்ணியே, போதுமான அளவு குடிக்கிறதில்ல. சொல்லபோனா சிலர் தண்ணியே குடிக்கறதில்ல. காபி, டீ, கோக், பெப்சின்னு குடிக்கிறாங்க அப்பு! 


இதுல இந்த பெண்களை பத்தி சொல்லவே வேண்டாம். அதுவும் படிக்கிற, வேலைக்கு போற பெண்கள், தண்ணி நிறைய குடிச்சா, அடிக்கடி கழிப்பறையை பயன்படுத்தனமேன்னு கூச்சப்பட்டுகிட்டு, சும்மா தொண்டயை நினைச்சிற அளவு மட்டும், தண்ணியை குடிக்கிறாங்க அப்பு! இந்த கொடுமையை எங்க போயி சொல்ல அப்பு!  

விளைவு மலசிக்கல். நாம சாப்பிட்ட உணவு 16-ல இருந்து 20 மணி நேரத்துகுள்ள ஜீரணமாகி, கழிவு பொருள், மலமா, மலக்குடல் வழியா வெளிவந்திடனும். அது தான் ஆரோகியத்தோட அறிகுறி. தினம் ஒரு முறையாவது மலத்தை கழிச்சடனுமப்பா! அப்படி வெளியேற்றபடாத மலம் தான் உடலுக்குள்ளேயே தங்கி கெட ஆரம்பிக்குது.

கெட்டு போகிற மலம் தான் இரத்திதில கலந்து, பல பல நோய்க்கும் மூல காரணம் ஆகுது. அதனால தான், இயற்கை மருத்துவ முறையில சொல்றாங்க நோய் ஒன்றே! பல அல்ல

இந்த நோய்க்கு நேரடி விளைவு என்ன தெரியுமா அப்பு? Piles Complaint (மூல வியாதி) அப்பு!

இதுக்கெல்லாம் தீர்வும் சொல்லிட்டு போங்க பங்காளி!

தீர்வா! சொல்றேன் கேட்டுகோங்க! இதில ஏதாவது ஒன்னோ இல்ல, எந்த காம்பினேஷன் ஒத்து வருதோ அதை Follow செய்யுங்க!







  காலையில எழுந்தவுடனே வெறும் வயித்தில 1 லிட்டர் தண்ணிய குடியீங்க. சுடுதண்ணியா இருந்தா பெட்டர். சிறுக சிறுக குடிச்சி பழகணும். முதலீலேயே 1 லிட்டர் குடிக்க முடியாது. குமட்டல் உணர்வு இருக்கும். குடிச்ச பின்னாடி ஒரு 20 நிமிஷம் வாக்கிங் போகணும். குடல் நல்லா வேலை செய்யும்.

பச்சை காய்கறி சேலட், முளைகட்டிய தானியம், பழங்கள் தோலோடு (உங்க வசதிக்கு ஏற்றபடி) தினமும் சாப்பிடுங்க. இது மலசிக்கல் இல்லாதவங்க கூட Follow செய்யனுங்க. மலசிக்கல் அதிகமாக இருக்கிறவங்க வாழைபழத்தை தோலோடு (நல்லா கவனிங்க! தோலோடு) சிறு சிறு துண்டுகளா வெட்டி, தேங்காய் துறுவல், கொஞ்சம் வெல்லம் கலந்து சாப்பிடுங்க. 2 நாளிலேயே நல்ல பலன் கிடைக்கும்.

உங்களுக்கு எல்லாம் தெரிஞ்ச விஷயம் தான். தண்ணிய அதிகமா குடியீங்க. 2-ல இருந்து 4 லிட்டர் தண்ணி ஒரு நாளைக்கு குடிக்கணும். பெண்களே! உங்களுக்கு தான்! தண்ணிய குடிக்க கூச்சபடாதீங்க.

நடங்கைய்யா மக்களே! என்னோட முதல் பதிவை கொஞ்சம் பாருங்க! யோகாசனத்தில, எளிமையான ஆசனங்கள் இருக்கு. (வேறு ஒரு பதிவுல விளக்கமா ஆசனங்களை பத்தி பாக்கலாமா பங்காளி?) அதுகளை செய்யலாம்.  

அடுத்து, திரிபலா சூரணம் பொடி இருக்கு. இரவில உணவு முடிச்ச 2 மணி கழிச்சி, சுடுதண்ணியில கலந்து சாப்பிடுங்க. இல்லைன்னா, கடுக்காய், அதோடு கூட நிலவாகை பொடி சமஅளவில கலந்தும் மேல சொன்ன விதமா சாப்பிடுங்க.

காபி, டீ வேண்டாங்க! கோக், பெப்ஸியும் வேண்டாங்க! இவையெல்லாம் ஆரோகியத்தை கெடுக்கிற பானங்க. மலசிக்கிலுக்கு காரணமா இருக்குங்க. இவைகளுக்கு மாற்று, துளசி, சுக்கு, தாமரை தண்டு பானங்கள் இருக்குங்க. எல்லாம் காதிகிராப்ட் கடைகள்ல, சித்த மருந்துகள் விக்கிற கடைகள்ல கிடைக்கும்.

மைதால செய்த பலகாரங்களை (Bakery Products) குறைவா சாப்பிடுங்க. அரிசி சாதத்தை குறைச்சுகோங்க. நார் சத்து அதிகமான கோதுமை, கேழ்வரகு, கம்பு, மக்காசோளம், சேத்துக்கோங்க. பச்சை வேர்கடலை ஒரு நைட் ஊறவெச்சி காலையில ஒரு பிடி அளவு சாப்பிடுங்க.  


எனிமா கேன் - நமக்கோ உற்ற நண்பன்! மலசிக்கலுக்கோ எதிரி!  









அடுத்து எனிமா கேன். படத்தில காட்டி இருக்கிறது தான் எனிமா கேன். கேன்னில தண்ணியை நிரப்பி, Tube-ல இருந்து, காற்றை வெளியேத்திட்டு, நாசிலை ஆசனவாயில் சொருகி, தண்ணீர் உள்ளே செல்லும்படி கேனை சிறிது உயரத்தில் பிடிக்கவும். நாசில் மேல தேங்காய் எண்ணெய் தடவினா எளிதில ஆசனவாயில நுழைக்க முடியும். பழக்கமாயிடிச்சின்னா இது தேவை இருக்காது!

தண்ணீர் உள்ளே சென்றபின், மலம் கழிக்கும் உணர்வு வரும். அப்படி வராதவங்க, சில தடவை, வயிற்றை உள்ளே இழுத்து வெளியே தள்ளவும். சிறிது நேரத்தில், மலம் கழிக்கும் உணர்வு வந்தவுடன் மலம் கழிக்கலாம்.  இது தாங்க அஹிம்சை எனிமா முறை.

இந்த பெயர் எதுக்குன்னா பங்காளி, நாம இந்த கேன்ல, வெறும் தண்ணிய தான் பயன்படுத்தறோம். அதனால ஒரு தீங்கும் இல்ல. மருத்துவமனையில சோப்பு நீர் பயன்படுத்தறாங்க. அது பெரிய ஹிம்சையா இருக்கும்.

எனிமா கேன் எல்லாத்துக்கும் வசதி. எங்காவது வெளியூர் பிராயாணம் போகும்போது, சாப்பிட, எங்கே பச்சை காய்கறி சேலட் கிடைக்கும்னு அலைய முடியாது. கிடைக்கிறத தான் சாப்பிட முடியும். மலம் கழிக்கணும் என்கின்ற உணர்வே வராது! அந்த சமயத்தில இதை பயன்படுத்தலாமுங்க

பஸ் பிரயாணம் செய்றதுக்கு முன்னாடி எனிமா Use செஞ்சி மலம் கழிச்சிட்டோம்னா, மனசுக்குள்ள ஒரு நிம்மதி. இனி ஒரு 12 மணி நேரத்துக்கு தொல்லை இருக்காது பாருங்க! எந்த இடத்துக்கும் உங்க பெட்டியில போட்டு எடுத்துன்னு போக முடியும். Very Portable!

இது எங்கே கிடைக்கும்னு கேக்கறீக? இது எல்லா காதிகிராப்ட் கடைகள்ல, இயற்கை மருத்துவமனைகள்ல, கிடைக்கும். விலையும் 50 ரூபாய் தான்.   

இன்னைக்கு இது போதும் இல்லையா பங்காளி! 


நண்பர்களே, நண்பிகளே! நோய் இல்லாம வாழலாங்க! நோய் நமக்கு வரவும் வேணாம், அதுக்காக கடன்பட்டு, அள்ளல்பட்டு, கஷ்டபட்டு, வருத்தபடவும் வேணாமுங்க!

நீங்க என்ன சொல்றீங்க! யோசிச்சி முடிவு பண்ணுங்க.

நான் புறப்படுறேனுங்க! நீங்க புறப்படுறதுக்கு முன்னாடி, ஓட்டு பெட்டியெல்லாம் லைனா இருக்கு பாருங்க! எல்லாதிலேயும் ஒரு ஓட்டு போடுட்டு போங்க அப்பு!
. 

கருத்து சொல்ல விருப்பம் இருக்கிறவங்க மேடைக்கு வரலாமுங்க!

    

44 மேதைங்க இதபத்தி என்ன சொன்னாங்கன்னா...:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நல்ல விஷயம் சொல்லிருக்க மக்கா. காலைல தண்ணி குடிடான்னா எவன் கேக்குறான். அது சரி காதி கிராப்ட் விளம்பரத்துக்கு எவ்ளோ காசு வாங்கினீங்க?

Anonymous said...

ரொம்ப பயனுள்ள பதிவு..
எனிமா பழகிவிட்டால் பிறகு விட முடியாது என்று சொல்கிறார்கள். தங்களின் கருத்து என்ன

நிகழ்காலத்தில்... said...

இனிமா குறித்த பகிர்வுக்கு மகிழ்கிறேன். இதோ இது சம்பந்தமான இன்னொரு சுட்டி..


http://arivhedeivam.blogspot.com/2010/07/blog-post_13.html

சௌந்தர் said...

எனிமா அறுவை சிகிச்சை முன் நாள் தருவார்கள் நீங்கள் கூறியது புதிய விசயம்

கருடன் said...

என்ன பங்காளி உன் கூட சேர்ந்தா நான் போலி டாக்டர் அகிடலாம் பேல.... கலக்காரிங்க....

என்னது நானு யாரா? said...

@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா): வாங்க பங்காளி! வாங்க!

///அது சரி காதி கிராப்ட் விளம்பரத்துக்கு எவ்ளோ காசு வாங்கினீங்க?///

நம்ப தாத்தா கடைங்க எல்லாம்! அதனால காசு எப்படி வாங்கறது சொல்லு? தாத்தா யாருன்னு கேக்கறீக! அட! அது நம்ப காந்தி தாத்தா தானுங்க!

அப்புறம் காசு கேட்டா மட்டும் அவரு கொடுப்பாரா என்ன? எல்லாத்தையும் அவரு கணக்குல (காந்தி கணக்குல!!) எழுத சொல்வாரு! அதனால ஓசியில தான் விளம்பரம் செய்தேனுங்க!

என்னது நானு யாரா? said...

பெயர் தெரியாத அன்பர்:

///எனிமா பழகிவிட்டால் பிறகு விட முடியாது என்று சொல்கிறார்கள். தங்களின் கருத்து என்ன///

வெறும் சமைச்ச உணவ மட்டும் சாப்பிட்டு கொண்டு இருந்தால், எனிமா பயன்படுத்துவதை தவிர்க்கவே முடியாது!

தினம் ஒரு வேலையாவது சமைக்காத பச்சை காய்கறி சேலட், பழங்கள், முளைவிட்ட தானியங்கள், நார்சத்து மிகுந்த கோதுமை, கம்பு, கேழ்வரகு, பச்சை வேற்கடலை (ஒரு நாள் தண்ணியில் ஊற வைத்தது) இப்படி சாப்பிட்டு கொண்டு, சிறிது உடற்பயிச்சி, நடைபயிற்ச்சி செய்தால் எனிமா பழக்கத்திற்கு யாரும் அடிமை ஆக மாட்டார்கள்.

வெளியூர் பிராயணத்தின் போது இது தேவைபடும்.

இந்த அளவு உணவிலும், உடற்பயிற்ச்சியிலும் அக்கறை காட்ட முடியாதபடி உங்களின் வாழ்க்கை ஓட்டம் இருந்தால், எனிமாவின் பயன்பாட்டை கைகொள்வதை தவிர வேறு வழி இல்லை!

என்னது நானு யாரா? said...

@நிகழ்காலத்தில்...:

நண்பரே! உங்களின் வலைபக்கத்தை அறிமுகம் செய்ததற்கு நன்றி! எனிமாவை பற்றிய பதிவு அருமை. மக்களுக்கு நல்ல நல்ல தகவல்களை அளிக்கும் அருமையான சேவை செய்கிறீர்கள்! வாழ்த்துக்கள்!

தொடர்ந்து என்னுடைய வலைபக்கத்துக்கு உங்களின் ஆதரவை கோருகிறேன்!

என்னது நானு யாரா? said...

@சௌந்தர்:

///எனிமா அறுவை சிகிச்சை முன் நாள் தருவார்கள் நீங்கள் கூறியது புதிய விசயம்///

உங்களுக்கு புதிய விஷயத்தை சொல்ல நேர்ந்ததுக்கு மகிழ்ச்சி நண்பா!

என்னது நானு யாரா? said...

@TERROR-PANDIYAN(VAS):

///என்ன பங்காளி உன் கூட சேர்ந்தா நான் போலி டாக்டர் அகிடலாம் பேல.... கலக்காரிங்க....///

பங்காளி! அதுக்கு உங்க பேரும், உங்க உருவமும் ஒத்து வராது. சாதுவா இருந்தாலே, மக்கள் வராம, ஈ ஓட்டுற டாக்டருங்க நிறைய பேரு இருக்காங்க நம்ம ஊருல! உங்க மாதிரி பயங்கிர உருவமும், பேரும் வெச்சிருந்தா, விளங்கிடும்!!!

'பரிவை' சே.குமார் said...

நல்ல தகவல் நண்பரே....

டீ சாப்பிட்டால்தான்... சிகரெட் குடித்தால் தான்... மலம் கழிக்க முடியும் என்பது போல் எனிமா பழகிவிட்டால் அது இருந்தால்தான் அப்படிங்கிற நிலமை வரும் என்பது பலரின் கருத்து. உங்கள் கருத்து என்ன?

ஜெயந்த் கிருஷ்ணா said...

நல்ல தகவல் நண்பரே...

Chitra said...

இதுலேயும் இத்தனை மேட்டர் ஆ?

என்னது நானு யாரா? said...

@சே.குமார்: நண்பரே! இதே கேள்வியை பெயர் தெரியாத அன்பர் ஒருவர் கேட்டு இருந்தார். அவருக்கு பதிலை மேலே அளித்திருக்கின்றேன். படித்து பார்த்து உங்களின் கருத்தை சொல்லுங்கள்

உங்களை போல சீனியர் பதிவு எழுத்தாளர்கள், என் வலைபக்கத்திற்கு தொடர்ந்து ஆதரவு தரவேண்டும் என கேட்டு கொள்கின்றேன்.

Thomas Ruban said...

பல புதிய தகவல்களையும் தெரிந்துகொண்டேன் பகிர்வுக்கு நன்றி.

என்னது நானு யாரா? said...

@வெறும்பய: உங்க பாராட்டுக்கு நன்றி தோழா!

@Chitra: அக்கா! நிறைய விஷயம் இருக்கு! பெண்கள் தண்ணி குடிக்காம இருக்கிறத பத்தி பெண்கள் எல்லோரும் என்ன நினைக்கிறீங்க? உங்க நண்பீங்க கிட்ட கேட்டு சொல்லுங்க!

என்னது நானு யாரா? said...

@Thomas Ruban: நண்பரே! நீங்க புதிய தகவல்களை அறிந்து கொள்ள நான் உதவி இருக்கிறேன் என நினைக்கையில் மகிழ்ச்சி! நன்றிகள், டன் டன்னாக..!!

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பயனுள்ள தகவல்கள் நண்பரே. பகிர்வுக்கு நன்றி!

வெங்கட்.

Ramesh said...

உபயோகமான தகவல் நண்பரே...இதே மேட்டரை அப்படியே..எங்க சித்தப்பா ஒருத்தரும் எந்த சொந்தக் காரங்க வந்தாலும் அடிக்கடி சொல்லுவாரு...எனிமா கேன எடுத்து விளக்குவாரு...ஆனா...எல்லா சொந்தமும் அதுக்கு பயந்துகிட்டே அந்த பக்கமே எட்டிப் பாக்க மாட்டாங்க. தெரிச்சு ஓடுவாங்க..நல்லது சொன்னா யாரு கேக்கறாங்க...அதை நீங்க பதிவாய் போட்டுருக்கறதுல மகிழ்ச்சியா இருக்கு நண்பரே...

பெசொவி said...

அந்தக் காலத்துப் பெரியவங்க எப்படி நோய் நொடி இல்லாம பல வருடங்கள் உயிரோடு இருந்திருக்காங்கன்னு இப்ப புரியுது,நல்லா விளக்கமா சொன்னீங்க, நன்றி!

என்னது நானு யாரா? said...

@வெங்கட் நாகராஜ்: உங்க பாராட்டுதலுக்கு நன்றி நண்பா!

@பிரியமுடன் ரமேஷ்:

///எல்லா சொந்தமும் அதுக்கு பயந்துகிட்டே அந்த பக்கமே எட்டிப் பாக்க மாட்டாங்க. தெரிச்சு ஓடுவாங்க..நல்லது சொன்னா யாரு கேக்கறாங்க.///

நல்லதுக்கு காலம் இல்ல. பட்டுதான் தெர்ஞ்சுக்கனும்னு இருந்தா என்னா நல்லது சொன்னாலும் மண்டையில ஏறாது. கருத்துக்கு நன்றிங்க!

@பெயர் சொல்ல விருப்பமில்லை:

///அந்தக் காலத்துப் பெரியவங்க எப்படி நோய் நொடி இல்லாம பல வருடங்கள் உயிரோடு இருந்திருக்காங்கன்னு இப்ப புரியுது///

ஆமாங்க அண்ணா! இயற்கையோடு இயந்து வாழ்ந்தா நோய்நொடி இல்லாம வாழலாம்னு பெரியவங்க கண்டுபிடிச்சி சொல்லிட்டு போனாங்க. ஆனா, நாம எல்லாத்தையும் மறந்துட்டோம்.

அதோட விளைவு தான் இதெல்லாம். நன்றீங்க!

RAJA RAJA RAJAN said...

பிரமாதம்... பிரமாதம்...!

எவ்வளவு விலை கொடுத்து காஸ்ட்லியா கார் வாங்கினாலும், புகை போக்கியை அடைத்து விட்டு வண்டி ஓட்ட முடியுமா...?
சரியான பதிவு... கலக்குங்க...

http://communicatorindia.blogspot.com/

அன்புடன் நான் said...

இப்பதான் உங்க வலைதளம் வருகிறேன்..... மிக பயனுள்ள பதிவுகள்.... தொடருங்க. நன்றி.

என்னது நானு யாரா? said...

@ராஜ ராஜ ராஜன்:

///எவ்வளவு விலை கொடுத்து காஸ்ட்லியா கார் வாங்கினாலும், புகை போக்கியை அடைத்து விட்டு வண்டி ஓட்ட முடியுமா...?
சரியான பதிவு... கலக்குங்க...///

நல்ல உதாரணம் நண்பரே! உங்க ஆதரவை தொடர்ந்து தேவை. நன்றி!

என்னது நானு யாரா? said...

@சி. கருணாகரசு: உங்க பாராட்டுகளுக்கு நன்றி நண்பா!

S.Lankeswaran said...

நல்ல பயனுள்ள தகவல். இன்றைய பெண்கள் தண்ணீர் குடிப்பது குறைவு தான். சிலர் அருகில் வந்தால் வாய்நாற்றம் குமட்டலாக வருகின்றது. உங்கள் பதிவை பார்த்தாலாவது திருந்தட்டும்.

Anonymous said...

இயற்கையை நேசிக்கும் உங்களுக்கு வாழ்த்துக்களும்
அன்பும்.
நன்றி
http://naturalfoodworld.wordpress.com

உண்மைத்தமிழன் said...

பதிவுலகத்திற்கு வருக, வருக என அன்போடு இரு கரம் கூப்பி வரவேற்கிறேன்..!

(ஏற்கெனவே வந்திட்டீங்கதான்.. ஆனா நான் இப்போதான் முதல் முறையா உங்களைப் பார்க்கிறேன். அதுனால முறைப்படியான வரவேற்பு இது)

என்னது நானு யாரா? said...

@ச.இலங்கேஸ்வரன்: படித்து பார்த்து கருத்து சொன்னதுக்கு நன்றிங்க!

///இன்றைய பெண்கள் தண்ணீர் குடிப்பது குறைவு தான். சிலர் அருகில் வந்தால் வாய்நாற்றம் குமட்டலாக வருகின்றது. உங்கள் பதிவை பார்த்தாலாவது திருந்தட்டும்.///

ஆமாம் அதனால பெரிய பெரிய சிக்கல்கள், நோய்கள்ல அவதிபடுறாங்க! எல்லோருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று தான் இதை எழுதுகிறேன். நன்றி!

தொடர்ந்து என் எழுத்துக்களை படித்து ஆதரவு தரவேண்டும் என்று கேட்டுகொள்கின்றேன்.

என்னது நானு யாரா? said...

@naturalfoodworld: உங்க அன்புக்கும், பாரட்டுகளுக்கும் நன்றிங்க

அதிகமான தகவல்களோடு இயற்கை மருத்துவத்தை பற்றி எழுதி இருக்கிறீர்கள். அதிகமான மக்களுக்கு இந்த தகவல்கள் போய் சேர வேண்டும் நண்பரே!

காந்தியடிகள் கண்ட ராமராஜியம் மலர நம்மால் ஆன முயற்ச்சிகளை நாம் தொடர்ந்து செய்து கொண்டிருப்போம்!

என்னது நானு யாரா? said...

@உண்மைத் தமிழன்:

///(ஏற்கெனவே வந்திட்டீங்கதான்.. ஆனா நான் இப்போதான் முதல் முறையா உங்களைப் பார்க்கிறேன். அதுனால முறைப்படியான வரவேற்பு இது)///

உங்க அன்பு உள்ளத்துக்கு என் நன்றிங்க! சீனியரான் நீங்க வந்து வாழ்த்தினது சந்தோஷம். தொடர்ந்து என் எழுத்துக்களை படித்து ஆதரவு தரவேண்டும் என்று கேட்டுகொள்கின்றேன்.

♥♪•வெற்றி - VETRI•♪♥ said...

இப்பதான் உங்க வலைதளம் வருகிறேன்..... மிக பயனுள்ள பதிவுகள்....!நானும் பதிவுலகத்துக்கு புதியவன்..!பங்காளி நம்ம பக்கத்தையும் வந்து பாருங்க...!
http://vetripages.blogspot.com/

Ashwin Ji said...

சரக்கும் முறுக்கா இருக்கு; நீங்களும் முறுக்கா தான் எழுதறீங்க.
வாழ்த்துக்கள். தங்களின் பதிவுகள் அனைத்தும் அருமை. உங்கள் அளவுக்கு எனக்கு எழுத வராது, என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன்.
--
'அன்பே சிவம்' அஷ்வின்ஜி
---------------------------------------------------
பிரபஞ்சத் துகளில் 'நான்' யார்?
----------------------------------------------------
வேதாந்த வைபவம் - www.vedantavaibhavam.blogspot.com
வாழி நலம் சூழ - www.frutarians.blogspot.com

என்னது நானு யாரா? said...

@♥♪•வெற்றி - VETRI•♪: உங்க பாராட்டுகளுக்கு நன்றி பங்காளி! உங்க வலைபக்கத்தை கட்டாயம் பாக்கிறேன்! இதோ கிளம்பிட்டேன்!!!

என்னது நானு யாரா? said...

@frutarians:

//சரக்கும் முறுக்கா இருக்கு; நீங்களும் முறுக்கா தான் எழுதறீங்க.
வாழ்த்துக்கள்.//

வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றிங்க! சீனியரான் நீங்க வந்து வாழ்த்தினது சந்தோஷம். தொடர்ந்து என் எழுத்துக்களை படித்து ஆதரவு தரவேண்டும் என்று கேட்டுகொள்கின்றேன்.

priyamudanprabu said...

இப்ப இருக்கிற அவசர கதி ஓட்டத்தில ஏதோ வெந்ததை தின்னு பசியை போக்கிகிட்டு ஓடிகிட்டிருக்கோம்.
///
ஆமாம் பங்காளி , தனிய வேற இருக்கோம சரியாய் சமைக்கிறது கூட இல்ல

priyamudanprabu said...

நிறைய பதிவுகளை படித்தேன்
தொடருங்கள்
மின்னஞ்சலில் எனக்கு வரும் படி செய்துவிட்டேன் மீதியை அப்புறம் படிக்கலாம்
(அலுவலகத்தில் வேலையும் செய்யனுமில்லையா)

என்னது நானு யாரா? said...

@பிரியமுடன் பிரபு: நண்பரே! உங்க வருகைக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி! தொடர்ந்து படிங்க! நோயில்லாம வாழலாம்!

Thangavel Manickam said...

இரவு படுக்கச் செல்லும் முன் பப்பாளி நன்கு பழுத்தது நான்கு துண்டுகள் சாப்பிடவும். வயிறு க்ளீனாகி விடும்.

என்னது நானு யாரா? said...

@தங்கவேல் மாணிக்கம்:

//இரவு படுக்கச் செல்லும் முன் பப்பாளி நன்கு பழுத்தது நான்கு துண்டுகள் சாப்பிடவும். வயிறு க்ளீனாகி விடும்.//

இதுவும் நல்ல தகவல்தான். தகவல் தந்தமைக்கு நன்றி நண்பரே! ஆனால் சமைத்த உணவு சாப்பிட்ட பின் குறைஞ்சது 2 மணி நேரம் கழிந்த பின் தான் பழங்களை சாப்பிட வேண்டும் என்பதனையும் தெரிவித்து கொள்கிறேன்.

Anonymous said...

மோரோ, தயிரோ ஏதானாலும் ஒரு கிளாஸ் நீர்க்க கரைச்சுகுக்குங்க கொஞ்சம் உப்புப் போட்டு கலக்கிகீங்க.
அப்பிடியே மட மடன்னு குடிச்சுக்கிங்க.
காப்புறம் பாருங்க இந்த செமியாக்குணம் மலச்சிக்கல் எல்லாம் காத தூரம் ஓடிப்போயிடுங்க.

என்னது நானு யாரா? said...

@ஆர்.கே.சதீஷ்குமார்: பாராட்டுக்கு நன்றி!

@Anonymous:

//மோரோ, தயிரோ ஏதானாலும் ஒரு கிளாஸ் நீர்க்க கரைச்சுகுக்குங்க கொஞ்சம் உப்புப் போட்டு கலக்கிகீங்க.
அப்பிடியே மட மடன்னு குடிச்சுக்கிங்க.
காப்புறம் பாருங்க இந்த செமியாக்குணம் மலச்சிக்கல்//

அதிகமான தகவலுக்கு நன்றி! ஆனால் அது அஜீரணத்திற்கு தானே நண்பரே! தினமும் ஏற்படும் மலசிக்கலுக்கு நார் சத்து மிகவும் அவசியம் நண்பரே!

Maheswari said...

nallaa irukku ellaame

sukumar said...

very super ,ple..add..more information with doctor guide.
-sukumar-

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

Post a Comment

பங்காளி! சரக்கு எப்படி? விக்குமா... விக்காதா...??? கொஞ்சம் சொல்லிட்டு போங்க!!!