பன்னீர் தெளிக்கிறோமில... ப்ளீஸ்... கொஞ்சம் தலை குனியுங்க...

வணக்கம் பங்காளீ! வாங்க, சவுக்கியங்களா? நம்ம வலைபதிவு பக்கம் வந்ததுக்கு நன்றீங்கோ...Get this Widget

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே! என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி! நண்பர்களே!

மனிதர்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் சிந்தனைகள், இங்கு சிதறிகிடக்கிறது. படித்து பார்த்து உங்கள் கருத்துக்களை இடவேண்டுகிறேன்!

தொடர்ந்து, இந்த வலைபதிவுக்கு உங்களின் ஆதரவை தாருங்கள்!!! நன்றி! தொடர்ந்து வருக!!!

இந்த நாள், உங்களுக்கு, இனிய நாளாக அமைவதாக!!!

பாசகார பங்காளி கூட்டமுங்க! நீங்களும் கூட வாறீகளா?

13-Aug-2010

சிங்கம் ஒன்று புறப்பட்டதே...!!!

வணக்கமுங்கோ!
சிங்கம் ஒன்று புறப்பட்டதே...!!!
நானும் களத்தில குதிச்சிட்டேன். எத்தனை நாள் தான், தூரத்திலேயே நின்னு வேடிக்கை பார்கிறது சொல்லுங்கோநீங்க எல்லாம் என்னமா, சிலம்பாட்டம், சதிராட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், குஷ்புவாட்டம், நமிதாவாட்டம் ஆடறீங்க! பார்கவே ரொம்ப வேடிக்கையாவும் இருக்கு, சந்தோஷமாவும் இருக்கு.

நீங்க போட்டற ஆட்டத்தை பார்க்க பார்க்க எனக்கும் ஆசை ஏறிடிச்சுங்கோ. நானும் கூட சிலம்பு சுத்த ஆசைபடறேன். இப்பத்தான் களத்துக்குள்ள வர்றேன். நீங்க எனக்கு, எல்லா விஷயத்தை பத்தியும் கத்துதருவீங்க இல்ல? நான் எல்லாம் கைபுள்ளைக்கு பக்கத்து வீடுங்கோ.  இப்போ என்ன பத்தி ஒரு கணக்குக்கு வந்திருப்பீங்கன்னு நினைக்கிறேன். என்ன பத்தி நானே சொல்றேனே. அது தான் சரியா இருக்கும்.

நான், ஸ்டார்டீங்கு ஸ்லோன்னாலும் போக போக ஸ்பீடு ஸ்டடியா போவேனுங்க. நேர் ரூட்டில சீரான வேகத்தில யார் மேலேயும் இடிச்சிடாம வண்டி ஓட்ட ஆசை. அதனால உங்கள நம்பி காரியத்தில இறங்கலாம்ன்னு வந்திருக்கேன். உங்கள நம்பலாம் இல்ல அப்பு?

என்னமோ யோசிகிற மாதிரி இருக்கே? என்னாடா இவன், இவன் தேர்ற கேசா? இல்ல வெண்கல பாத்திர கடையில யானையாட்டம், எல்லாத்தையும் உருட்டி உடைச்சு போடற கேசான்னு யோசிக்கறீங்களா? சே... சே... நான் அப்படி பட்டவன் இல்லேங்கோ. ஏதோ என் புத்திக்கு எட்டுகிற விஷயங்களை உங்களோட பகிர்ந்துகனும்னு ஆசை. அம்புட்டுதான். 

நாமல்லாம் ஒண்ணுக்குள்ள ஒண்ணு. உங்கள ஆட்டத்தில சேர்க்க மாட்டோமான்னு கேக்றீங்களா? ரொம்ப சந்தோஷமுங்க! சரி விஷயத்துக்கு வர்ரேன். எதைபத்தி பேசறது இப்போ? நாட்டுல  எவ்வளவோ நடக்குது. அரசியல் கட்சிங்க மாநாடு நடக்குது, ஊர்வலம், பேரணி நடக்குது, ஊழல் நடக்குது, அராஜாகம் நடக்குது, நாட்டில அநியாயம் பஞ்சமில்லாம நடக்குது, இதுவெல்லாம் எதுவும் இல்லன்னா பந்த் நடக்குது. ரோட்டில சகஜமா ஆடு மாடெல்லாம் நடக்குது, என்னன்மோ நடக்குது,எல்லாத்தையும் பத்தியும் பேசத்தான் ஆசை. முதல்ல என்னத்த பத்தி பேச... கொஞ்சம் இருங்க யோசிக்கிறேன். 

ஆங்... சரி! முதல்ல இதுபத்தி பேசறேன்.

நடப்பதெல்லாம் நன்மைக்கே...!!!

பெரியவங்க சும்மாவா சொல்லி இருக்காங்க. நடப்பதெல்லாம் நன்மைக்கேன்னு. அவங்க சொன்னதென்னமோ ஒரு அர்தத்தில. அதுக்கூட சரிதான். வாழ்க்கையில நல்லது நடந்தாலும் கெட்டது நடந்தாலும் அத பொறுமையா கொஞ்சம் காலம் கழிச்சு பார்தோம்னா அதன் முடிவு நல்லதாவே முடிஞ்சிருக்கும்.

ஆனா நாம இப்போ பார்க்க போறது, தினமும் நடக்கிற நடை பயிற்சி பத்தி தாங்க.

ஆமாங்க நாம ஆரோகியமாவும் சுறுசுறுப்பாகவும் இருக்க தினமும் கட்டாயம் மேற்கொள்ள வேண்டிய பயிற்சி நடைபயிற்சிங்க. படுத்தால் பாயும் பகையாகும்; நடந்தால் நாடெல்லாம் உறவாகும். இப்படி எங்க கிராமத்து பக்கம் சொல்லுவாங்க பெரிசுங்க. சரி, நடக்கிறதால என்ன பயன்னு யோசிக்கிறீங்களா? திறந்த வெளியில உலாவி வர்றதால உடல் உறுதி பெறுதுங்க, உள்ளம் தூய்மையும் அமைதியும் அடையுதுங்க, ஆரோக்கியம் கிடைக்குதுங்க. ஒரு புத்துணர்ச்சு உடல் முழுசும் பாயறத, நீங்க அனுபவ பூர்வமா தெரிஞ்சுகலாமுங்க.

சரி, இதுக்கு என்னன்ன முறைகளை கையாளனும்னு யோசிக்கறாப்புள இருக்கு? ரொம்ப சிம்பிள் விஷயம் தான். அதாவது, சூரிய உதயத்தில நடந்தால் ரொம்ப சிறப்பானது. முடியாதவங்க, மாலையிலோ, இரவு உணவுக்கு பிறகோ நடக்கலாம். 

ஜனநடமாட்டம் மிகுதியாயுள்ள இடங்கள், வாகன போக்குவரத்து அதிகமா உள்ள சாலைகள் இதற்கு ஏற்றதில்லீங்க. சுத்தம் அவசியம்; சத்தம் கூடாது. நம் ஆரோகியத்தின் தன்மை, உடற்சக்தி இவைகளுக்கு ஏற்ற அளவில் நடைவேகம் இருக்கனுமுங்க. இறுக்கமான ஆடைகள் இல்லாம, தளர்வான ஆடைகள் உடுத்தி நடைபயிற்சி மேற்கொள்றது நல்லதுங்க. 

சரி எவ்வளவு நேரம் நடக்கலாம். குறைந்த அளவு 20 நிமிஷம். நேரம் உள்ளவங்க 1 மணி நேரம் வரை கூட நடக்கலாம். 

"Walk a Mile after every Meal" இது இங்கலீஷ்காரன் சொன்னதுங்கோ. அவனுக்கு கூட நடக்கிறதில இருக்கிற நன்மை தெரிஞ்சிருக்கு   பாருங்கோ! 

இப்போ நம்ப ஜனங்களுக்கு வர்ற நோய்களை எல்லாம் பார்த்தோமுன்னா அதாங்க, சக்கரை வியாதி, இருதய நோயுங்க, உயர் இரத்த அழுத்தம் எல்லாம் நம்ப உடம்புக்கு சரியான வேலை தர்றாததால வர்றதுங்க. நடை பயிற்சி நம் உடல்ல இருக்கிற எல்லா உறுப்புகளுக்கும் நல்லா வேலை கொடுத்து, எல்லா உறுப்புகளுக்கும் வளைந்து கொடுக்கிற தன்மை கொடுக்குது.

எங்க அப்பாவுக்கு 61 வயசுங்க. அவருக்கு சர்கரை அளவு 272 இருந்ததுங்க. இப்போ கொஞ்ச காலமா நடை பயிற்சி மேற்கொள்றாருங்கோ. நடக்க ஆரம்பிச்சு ஒரு மாசத்துல அது 135 ஆ குறைஞ்சிடிச்சுங்கோ. கைகாசு செலவழியாத உறுப்படியான வழியுங்க. பாசகார பசங்களாச்சேன்னு உங்க கிட்ட இந்த விஷயத்தை போட்டு வைச்சேன்.

என்ன அப்பு... இன்றிலிருந்து நடக்க ஆரம்பிப்பீங்க இல்ல?

சரி கிளம்பறேன் அப்பு... படிச்சி பாத்து சும்மா போயிடாதீங்க. நீங்க உங்க பொன்னான வாக்குகளை இந்த பதிவுக்கு போட்டீங்கன்னா, இந்த பதிவு பிரபளமாகி பலருக்கும் இந்த சங்கதி போய் சேரும். என்ன செய்வீங்களா அப்பு? 


  

19 மேதைங்க இதபத்தி என்ன சொன்னாங்கன்னா...:

கக்கு - மாணிக்கம் said...

வருக, வருக,வளர்க.

என்னது நானு யாரா? said...

கக்கு - மாணிக்கம் அவர்களே! உங்க வாழ்த்துக்கு நன்றீங்கோ! பதிவ படிச்சீங்களா அத பத்தி எதாவது உங்க கருத்து இருந்தா சொல்லுங்க. என் வளர்சிக்கு பயனா இருக்கும்.

நன்றி

கே.ஆர்.பி.செந்தில் said...

வாங்க பங்காளி ... நாமளும் நடக்குற ஆளுதான், இது மட்டும் இல்லாம நேரம் கெடைக்குற போதெலாம் டிரெக்கிங் போவோம் ...

ப.செல்வக்குமார் said...

///நான் எல்லாம் கைபுள்ளைக்கு பக்கத்து வீடுங்கோ. ///
வாங்க வாங்க ..!! அது சரி கைப்புள்ளை வீட்டுக்கு இடது புறமா வலது புறமா ..? ஏன்னா நானும் அதுக்கு பக்கத்துல தான் இருக்கேன் ..!! அப்புறம் நடக்கறதெல்லாம் நன்மைக்கேன்னு சொல்லி ஆரம்பத்திலேயே நடக்க சொல்லிட்டீங்க ..!!

என்னது நானு யாரா? said...

> கே.ஆர்.பி.செந்தில்: நன்றி தல! உங்க பதிவு எல்லாம் சூப்பரப்பூ! நீங்கெல்லாம் எனக்கு முன்னோடியா இருக்கறது எனக்கு சந்தோஷயங்க!

என்னது நானு யாரா? said...

> ப.செல்வக்குமார்: அதுவா பங்காளி, நம்ப வீடு, வடக்கில இருந்து தெற்கு போகும் போது, கைப்புள்ளை வீட்டுக்கு இடது புறமா வருமுங்க. அதே நீங்க, தெற்கில இருந்து வடக்கு நோக்கி போகும் போது, நம்ப வீடு கைப்புள்ளை வீட்டுக்கு வலப்பக்கம் வருமுங்க. ஒரு முறை கட்டாயம் நம்ப வீட்டுக்கு வரணும். கைப்புள்ளை கூட சேர்ந்து அந்த மூணு சக்கர சைக்கிள் விளையாட்டு விளையாடலாம். எப்போ வர்றீங்க பாஸ்?

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

கிட்டத்தட்ட என்னோட பேரு வச்சிருக்கீங்க, நல்லா எழுதுங்க, நம்ம ப்ளாக் பக்கமும் வந்து போங்க! (இந்த மாதிரி பல ப்ளாக் போய் கமெண்ட் போடறதுதான் நம்ம ப்ளாக் பத்தி தெரிய வைக்கிற முதல் டெக்னிக்!)

ப.செல்வக்குமார் said...

//பெயர் சொல்ல விருப்பமில்லை said...//
VKS காரங்க இங்கயும் வந்திட்டாங்க ..!!

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

இன்ட்லில ஓட்டு போட்டுட்டேன் (இப்டி சொல்லி நம்ம பதிவுகளுக்கும் வோட்டு வாங்கறது ஒரு ஐடியா!)

வெறும்பய said...

வாங்கப்பு... சௌக்கியமா....

வெறும்பய said...

அறிமுகமே கலக்கல்.... சும்மா பூந்து விளையாடுங்க.... உங்கள் பின்னால் நாங்கள் உறுதுணையாய் இருப்போம்...

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

நானும் உங்க followers லிஸ்ட்ல சேர்ந்துட்டேன். (ஹி....ஹி.....நன்றியெல்லாம் எதுக்குங்க? இதெல்லாம் ஒருத்தருக்கு ஒருத்தர் பதிலுக்குப்பதில் செய்யறதுதான?)

என்னது நானு யாரா? said...

> பெயர் சொல்ல விருப்பமில்லை: என்ன்மோ ஒரு flowல அப்படி ஒரு பெயர் அமைஞ்சு போச்சு. உங்க வாழ்த்துக்கு நன்றிங்க. ஒரு சகோதரனா இருந்து நல்லா தொழில் நுணுக்கங்களை கத்து தர்றீங்க. ரொம்ப ரொம்ப நன்றீங்க. உங்க பெயரை காப்பாத்தற மாதிரி நடந்துகறேன்.

என்னது நானு யாரா? said...

>வெறும்பய: உங்க வாழ்த்துக்கும் ஊக்கத்துக்கும் நன்றீங்கண்ணா!!! நீங்கல்லாம் நம்ப பக்கம் இருக்கீங்க என்ற தைரியத்தில தான் களத்தில சிலம்பு சுத்த வந்திருக்கேன்.

Dr.ராம் said...

வாங்க.. வாங்க..வந்து கலக்குங்க...

என்னது நானு யாரா? said...

> Dr.ராம்: வணக்கமுங்க! உங்க வாழ்த்துக்கு நன்றி! உங்க வலைபதிவ பார்த்தேன். மருத்துவத்தை பத்தி குறிப்பா மாற்று மருத்துவத்தை பத்தி நிறைய எழுதுங்க. மருத்துவம் இன்னைக்கு கருணையே இல்லாத வியாபாரம் ஆகிட்டு இருக்கு. இத பத்தி எல்லாம் நிறைய எழுதுங்க.

cheena (சீனா) said...

அன்பின் வசந்த்

அழகான துவக்கம் - நடைப்பயிற்சியினைப் பற்றிய இடுகை. எழுதப்பட்ட விதம் படிக்கத் தூண்டும். பலர் பின் தொடர்கிறார்கள். மூன்று வார காலத்திலெயே கலக்கறீங்க . வாழ்க வளமுடன்

நல்வாழ்த்துகள் வசந்த்
நட்புடன் சீனா

என்னது நானு யாரா? said...

@cheena (சீனா): வாழ்க வளமுடன் நண்பரே!
உங்களின் பாராட்டுக்கள் என்னை மன மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது!

உங்களின் தொடர்ந்த ஆதரவை என் எழுத்துக்களுக்கு தரவேண்டும் என கோருகிறேன்.

நன்றி!

Anonymous said...

நல்ல இருக்கு உங்க செய்தி........

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

Post a Comment

பங்காளி! சரக்கு எப்படி? விக்குமா... விக்காதா...??? கொஞ்சம் சொல்லிட்டு போங்க!!!