பன்னீர் தெளிக்கிறோமில... ப்ளீஸ்... கொஞ்சம் தலை குனியுங்க...

வணக்கம் பங்காளீ! வாங்க, சவுக்கியங்களா? நம்ம வலைபதிவு பக்கம் வந்ததுக்கு நன்றீங்கோ...Get this Widget

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே! என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி! நண்பர்களே!

மனிதர்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் சிந்தனைகள், இங்கு சிதறிகிடக்கிறது. படித்து பார்த்து உங்கள் கருத்துக்களை இடவேண்டுகிறேன்!

தொடர்ந்து, இந்த வலைபதிவுக்கு உங்களின் ஆதரவை தாருங்கள்!!! நன்றி! தொடர்ந்து வருக!!!

இந்த நாள், உங்களுக்கு, இனிய நாளாக அமைவதாக!!!

பாசகார பங்காளி கூட்டமுங்க! நீங்களும் கூட வாறீகளா?

20 Aug 2010

பங்காளி! சாவி நம்ப கையிலங்க! அட நம்புங்க!!!

டாக்டர்களையும், மருத்துவணைகளையும் சுயநலமானவங்க, தயவுதாட்சன்யம் காட்டாதவங்கன்னு, மக்கள் நினைக்கிறாங்க. கடவுளா காட்சி தரவேண்டியவங்க இப்படி இரத்தம் குடிக்கிற கொசுவா மூட்டபூச்சியா இருக்காங்கலேன்னு மக்கள் நொந்துக்காத மேடைகளே இல்ல. ஏன்னா எல்லாரோட வீட்டிலேயும் நோய் என்கிற பயங்கரவாதியோட நிழல் படர்ந்திருக்கு. இது உண்மை தானே அப்பு!

அவங்களை சொல்லி என்ன ஆவ போகுது சொல்லு? உலகமே தனியார்மய பொருளாதர சுனாமில சிக்கிகிட்டு அள்ளல் படுது. ஒவ்வொருத்தனும் இன்னொருத்தனுடைய, தலை மேல காலை வச்சி கீழ அமுத்தி விட்டு, மேல போக பாக்கிறான். அது தான் நியாயம்னு வேற பெருமையா பேசறான், வெக்கமில்லாம.  

மக்களாகிய நாம் தான் நம்முடைய உடல்-மன ஆரோகியத்தை, காப்பாத்திக்க வழி என்னான்னு பாக்கனும். என்ன பங்காளி நான் சொல்றது சரிதானே?

இந்த இயற்கை மருத்துவத்தை விட்டா நம்ப ஆரோகியத்தை காப்பாத்த முடியாது. செலவு குறைஞ்ச, பக்க விளைவுகள் இல்லாத மருத்துவம், எல்லோருக்கும் ஏத்த மருத்துவம் எதுன்னு கேட்டா, அது  இந்த இயற்கை மருத்துவம் தான்னு, நம்ப காவல் தெயவம் ஐயனாரு மேல சத்தியம் செஞ்சி சொல்லுவேனுங்க.

சரி மக்கா! போன பதிவுக்கு முந்திய பதிவுல, இயற்கை மருத்துவத்தோட 2 முக்கிய விஷயங்களை பாத்தோம் இல்ல. இப்போ இங்க இன்னும் கொஞ்சம் பார்போம். அதை படிக்காதவங்க இங்க அழுத்துங்க! 

மூன்றாவது விஷயம்: நம்ப உடம்பே ஒரு டாக்டரு தாங்க! அதுக்கு ஏத்த படி நடந்துகிட்டா போதும். அதாவது நாம்ப எல்லாம் தப்பா நினைச்சுகிட்டு இருக்கோம். ஏதோ டாக்டர், 7, 8 வருஷம் படிச்சவரு! அவரு கைவெச்சு பாத்து மருந்து கொடுத்தாருன்னா, நம்ப நோய் தீர்ந்துடும்னு! ஆனா உண்மை என்னான்னா, நோயை தீர்கறது, நம்ப உடம்பு தான்.

கொடுக்கிற மருந்தை வேலை செய்ய வைக்கிறது, நம்ப உடம்புக்குள்ள இருக்கிற பிராண சக்தி தான். நீங்க என்ன சக்தி வாய்ந்த மருந்து கொடுத்தாலும், நமக்குள்ள இருக்கிற பிராண சக்தி தான் அதை வாங்கி நம்ப உடம்புக்கு ஏத்த ஊட்ட பொருளா மாத்துது.

ஒரு சின்ன விஷயம்! நீங்களே கொஞ்சம் யோசிச்சு பாருங்க அப்பு! சின்ன வயசில நோய் வந்தா எவ்வளவு சீக்கிரம் குணமாகுது. ஆனா வயசான உடனே அடிக்கடி நோய் வருது. வர்ற நோயும் சீக்கிரம் போக மாட்டேங்குது. இது ஏங்க மாப்பு?

சாவு படுக்கையில இருக்கிறவங்களுக்கு என்னா உசத்தியான ராஜவைத்தியம் செஞ்சாலும், அவரோட சாவுக்கு நேரம் குறிக்கபடுதே தவிர, வேற என்ன செய்ய முடியுது மனுஷனால? சாவுன்னு சொல்றோமே, அப்படின்னா என்னா தெரியுமாங்க?

பிராண சக்தி கொஞ்சம் கொஞ்சமா மங்கி, அது முழுசா மறைஞ்சு போன பின்னாடி நாம அதை சாவுன்னு சொல்றோம். அம்புட்டுதேன்.

இது தெரியுமா உங்களுக்கு? நம்ப பிராண சக்தியை சீக்கிரமா நாம்ப தான் அழிச்சிக்கிறோம். கோப படறோமா? மனபோராட்டங்களுக்கு ஆளாகிறோமா? அசைவ உணவு சாப்பிடறோமா? தண்ணி அடிக்கறது, சிகரெட் இப்படி வேண்டாத பழக்கத்தை தொடர்றோமா? இப்படி நம்ப உடம்புக்கு எதிரான செயல்கள் செய்யும் போது செல்போன் பேட்டரில இருந்து சார்ஜ் இறங்கிற மாதிரி பிராண சக்தியும் விர்ன்னு இறங்கும் அப்பு!

புதுசா பிராண சக்தியை நம்மால உண்டாக்க முடியாது. ஆனா அதனுடைய செலவை கட்டுபடுத்தி வெச்சா, ஜீவ சமாதி வரை கூட நாம முன்னேறி போக முடியும். என்னது ஜீவ சமாதியா? ஆளை விடுங்கன்னு சொல்றீங்களா? அட விடுங்க! அட்லீஸ்ட் 100 வருஷமாவுது எல்லா உறுப்புகளும் நல்ல நிலையில செயல்பட்டு, நல்ல நிலையில வாழ்ந்த பின்னாடி, சந்தோஷமாவே செத்து போவோமே! அதுக்கு வழி இருக்கே!

நோயில்லாம வாழ முடியும் அப்பு!

அப்படி சிலபல சூழ்நிலையால நோய் வந்தா கூட, நம்ப இயற்கை அன்னை கொடுத்திருக்கிற இயற்கை மருத்துவம் இருக்கே!

உங்களுக்கு எல்லாம் ஒரு அதிர்ச்சியான சேதி சொல்லட்ட? கொடுத்திருக்கிற லிங்க பிடியீங்க! படியிங்க!

என்ன படிச்சீங்களா? அமெரிக்காவில, இங்கலீஷ் வைத்தியம் தான் ஜனங்க சாவுறதுக்கு, கேன்சர், இருதய கோளாறுகள் விடவும் பெரிய காரணமா இருக்காம். மக்கா பாத்தியா இந்த அநியாயத்தை! இதை பத்தி இணையத்தில நிறைய இருக்கு. டைம் இருக்கும் போது படியீங்க அப்பு!

சரி டைம் ஆச்சு மக்கா! இன்னொரு முறை சந்திச்சு மீதிய பேசுவோம். நான் கிளம்புறதுக்கு முன்னாடி அதே விஷயம் தான் நியாபக படுத்த விரும்பறேன்.

கருத்து இடறத, ஓட்டு போடறத சொன்னேன் அப்பு!

அண்ணன்மாருங்களே! தம்பிமாருங்களே! அக்காமாருங்களே! தாய்மாருங்களே ஓட்டு போட மறக்காதீங்க.

நம்ப அண்ணன், அன்பின் சின்னம், பாசத்தின் வண்ணம், சூரியனின் பின்னம், நம் எல்லோருடைய எண்ணம்.

அவரை பெருவாரியான ஓட்டு வித்தியாசத்தில் ஜெயிக்க வைப்பது நம் அனைவரின் கடமை என்று தாழ்மையுடன் சொல்லிக்கொள்ள கடமைபட்டிருக்கிறேன்.

யாருப்பா தம்பி! குடிக்க சோடா சொல்லுப்பா! தொண்ட வறலுது.                     

23 மேதைங்க இதபத்தி என்ன சொன்னாங்கன்னா...:

செல்வா said...

//பிராண சக்தி கொஞ்சம் கொஞ்சமா மங்கி, அது முழுசா மறைஞ்சு போன பின்னாடி நாம அதை சாவுன்னு சொல்றோம்///
அதுவேணா அப்படித்தாங்க..
//நோயில்லாம வாழ முடியும் அப்பு!//
இது நல்லா இருக்கு ..

என்னது நானு யாரா? said...

@ப.செல்வக்குமார்: என்ன ஒரு வேகம் அப்பு! பதிவு போட்ட அரை மணி நேரத்துக்குள்ள ஆஜர். வெரி குட். Keep it up! உங்க பாராட்டுக்கு நன்றிப்பா!

ஏன் அப்பு! உங்க புது பதிவ எதுவும் கொஞ்ச நாளா காணல! மொக்கை இலக்கியவாதிங்க கோபிச்சுக்க போறாங்க! சீக்கிரம் ஏதாவது ஒரு மொக்கையை அரங்கேற்றுப்பா!

Madhavan Srinivasagopalan said...

நல்ல பல மருத்துவத் தகவல்களுக்கு நன்றிகள்.

நான் கூட, ஜுரம்னா மொதேனாலே டாக்குடருக்கிட்ட ஓட மாட்டேன்..
பாரசிடமால் கொடுப்பேன் (கொலந்தைக்குக் கூட).
2 - 3 நாளுக்கு மேலே கொறையலேன்ன டாக்குரடுக்கிட்டே போவேன்.

முக்கியமா, ஆண்டி-பயாடிக் மருந்த சாப்பிடுறத கொறச்சுக்கனும்னு படிச்சிருக்கேன்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

good

என்னது நானு யாரா? said...

@Madhavan: உங்க கருத்துக்கு நன்றீங்க!

///நான் கூட, ஜுரம்னா மொதேனாலே டாக்குடருக்கிட்ட ஓட மாட்டேன்..
பாரசிடமால் கொடுப்பேன் (கொலந்தைக்குக் கூட).
2 - 3 நாளுக்கு மேலே கொறையலேன்ன டாக்குரடுக்கிட்டே போவேன்.

முக்கியமா, ஆண்டி-பயாடிக் மருந்த சாப்பிடுறத கொறச்சுக்கனும்னு படிச்சிருக்கேன்.///

செயற்கையா எது கொடுத்தாலும் உடம்புக்கு ஆபத்துங்க. மருந்து மாத்திரை எல்லாம் கெமிகல்ஸ் தானே! http://uravukaaran.blogspot.com/2010/08/1.html இந்த லிங்கை Click செஞ்சி படியீங்க. உண்மை தெரியும். ஜுரத்துக்கு, தலைவலிக்கு, ஜலதோஷத்துக்கு எல்லாம் ஒரே மாதிரி சிகிச்சை தான்.

என்னது நானு யாரா? said...

@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா): உங்க வருகைக்கு நன்றி! வெறும் Goodன்னு சொல்லி முடிச்சிட்டீங்களே! நிறை குறைகளை சொல்லுங்க! நான் வளர்கிற எழுத்தாளர் இல்ல! எனக்கு விரிவான கருத்து பயனா இருக்கும் இல்ல!

தெய்வசுகந்தி said...

நல்லா எழுதறீங்க! நானும் கூட சளி காய்ச்சலுக்கெல்லாம் முடிஞ்ச வரை தானே சரியாகற மாதிரி பாத்துக்குவேன். குழந்தைகளுக்கு கூட சளிக்கு மருந்து தர மாட்டேன்.

என்னது நானு யாரா? said...

@தெய்வசுகந்தி:
///சளி காய்ச்சலுக்கெல்லாம் முடிஞ்ச வரை தானே சரியாகற மாதிரி பாத்துக்குவேன். குழந்தைகளுக்கு கூட சளிக்கு மருந்து தர மாட்டேன்.///

தெயவசுகந்தி! ஜுரம், சளி, தலைவலின்னு வரும்போது, ஜூஸ் ஃபாஸ்டிங்க் (Juice Fasting) இருக்க வேண்டும். அதை பத்தி பின்பு ஒரு பதிவு எழதறேன். இணையத்தில, நிறைய சங்கதிங்க இத பத்தி இருக்கு! தேடி படியீங்க!

உங்க கருத்துக்கு நன்றீங்க!

கருடன் said...

Very Good!!!

Chitra said...

It is good to take antibiotics only when needed and as needed. Good post! Thank you

Unknown said...

தாய்ப்பாலிலும் கெமிகல் கலந்துவிட்ட தலைமுறையில் வாழ்கிறோம் நாம்...

வரும்முன் காப்பதே நலம்..

என்னது நானு யாரா? said...

@TERROR-PANDIYAN(VAS): உங்க வருகைக்கு நன்றீங்க! உங்களுக்கு எது பிடிச்சது, எது பிடிக்கலன்னு ஓப்பனா தேங்கா உடைக்கிறப்பல சொல்லுங்க அண்ணாச்சி! இந்த Very Good பத்தாதுண்ணே, சொல்லிபுட்டேன்.

என்னது நானு யாரா? said...

@Chitra:
///It is good to take antibiotics only when needed and as needed. Good post! Thank you///

இல்லைங்க சித்ரா! நாம மருந்தில்லாமலே வாழமுடியும். மருந்தெல்லாம் உடம்புக்குள்ள சேந்துதான் விஷமாகுதுங்க! மருந்து, அதுவும் Chemical தான். இயற்கை வாழ்வியல்ன்னா Holistic Approach! இயற்கையோட எப்படி இணங்கி வாழறதுன்னு சொல்றது தான் இன்னைக்கு தேவையா இருக்கு!

நோயிலிருந்து விடுதலை வேண்டாமா? அப்படின்னா மருந்திலிருந்தும் கட்டாயம் விடுதலை பெறனுங்க!!!

என்னது நானு யாரா? said...

@கலாநேசன்: ///தாய்ப்பாலிலும் கெமிகல் கலந்துவிட்ட தலைமுறையில் வாழ்கிறோம் நாம்... வரும்முன் காப்பதே நலம்.. ///

ஆமாங்க! நாம இயற்கை வாழ்வியலுக்கு எவ்வளவு சீக்கிரம் திரும்பரோமோ அவ்வளவுக்கு நோயில்லாம வாழலாம். சின்ன சின்ன விஷயம் தானுங்க! காபி டீக்கு பதிலா நவதானிய கஞ்சி குடிக்கறது, இள்நீர், மோர் குடிக்கிறது, நம் உணவில பெரும்பாலும் Acid உணவை தவிக்கிறது. ஆசிடி உண்வுன்னா எண்ணையில் வறுத்து சாப்பிடற எல்லா உணவும்.

இதை பத்தி நிறைய இணையத்தில கொடுத்திருக்காங்க. தேடி படியீங்க!

Unknown said...

ரைட்டு, பிராண சக்திய பெருக்குறது பத்தி அடுத்த பதிவா ?

என்னது நானு யாரா? said...

@கே.ஆர்.பி.செந்தில்: அண்ணாச்சி! எந்த தலைப்பு பத்தி எதுவும் முன்கூட்டியே யோசிச்சி எழுதறதில்ல. அப்போதைக்கு என்னா தோணுதோ, அதை எழுதறேன். ஆனா கண்டிப்பா அது இயற்கை மருத்துவத்தை பத்தி தான் இருக்கும்.

எவ்வளவு பெரிய மகான் காந்தியடிகள். அவரே நம்ப நாட்டுக்கு இந்த மருத்துவம் தான் தேவைன்னு சொன்னவரு. அந்த இயற்கை மருத்துவத்தை பத்தின செய்தியத்தான் எல்லோருக்கும் தெரியபடுத்தனும்னு ஆசைங்க!

சௌந்தர் said...

நீங்க சொல்கிற செய்தி புதிய தகவலா இருக்கு நன்றி

என்னது நானு யாரா? said...

@சௌந்தர்: ஆமாங்க சௌந்தர். நம்ப உடம்பை பத்தி நிறைய பேர்களுக்கு சரியான புரிதல் இல்ல. அதனால தான் ஒவ்வொரு மாசமும் மருந்து மாத்திரை, டாகடர் ஃபீஸ்ன்னு 3000, 4000 ரூபா செலவுசெய்றாங்க!

இயற்கையோட இணைந்து வாழ்ந்தா, நமக்கு எந்த மருந்தும் தேவை படாது. நாம தான் நம் உடல் நலனை காக்கனுங்க. தொடர்ந்து நம்ப வலைபதிவ படிக்க வாங்கன்னு உங்களை அழைக்கிறேன்.

பனித்துளி சங்கர் said...

மருந்துகளையும் , மருத்துவனையும் உருவாக்கியதே இந்த இயற்கைதான் . ஆனால் இன்று மருத்துவர்கள் அதிகம் இருக்கிறார்கள் மருந்துகளும் அதிகம் இருக்கிறது . ஆனால் இயற்கை சுவர்களில் வரைந்து வைத்திருக்கும் ஓவியங்களில் மட்டும்தான் இளமை இழந்து காட்சி தருகிறது . சிறந்த பதிவு நன்றி

ப.கந்தசாமி said...

நல்லா எழுதறீங்க அப்பு, பூராத்தையும் சாவகாசமா படிக்கணும். நம்ம ஒடம்பு சொல்றதக்கேட்டா டாக்டர் கிட்ட போகவேண்டாம்கிறது ரொம்ப ரொம்ப உண்மை. என்ன வம்புன்னா, நாமதான் எவஞ்சொன்னாலும் கேக்கமாட்டோம்ல. என் வழி தனீனீனீனீ வழின்னுதானே போயி சாக்டைல உளுவோம் :)-

என்னது நானு யாரா? said...

@பனித்துளி சங்கர்:

///மருந்துகளையும் , மருத்துவனையும் உருவாக்கியதே இந்த இயற்கைதான் . ஆனால் இன்று மருத்துவர்கள் அதிகம் இருக்கிறார்கள் மருந்துகளும் அதிகம் இருக்கிறது . ஆனால் இயற்கை சுவர்களில் வரைந்து வைத்திருக்கும் ஓவியங்களில் மட்டும்தான் இளமை இழந்து காட்சி தருகிறது///

ஆஹா! கவிதையாக ஒரு கருத்தை தந்துவிட்டீர்களே! மிகவும் ரசித்தேன். உண்மையான வார்த்தைகள்!

உங்க வருகைக்கும், கருத்துக்கும், ஓட்டுக்கும் நன்றி!!! தொடர்ந்து ஆதரவு தரணும்னு கேட்டுகிறேன்.

என்னது நானு யாரா? said...

@DrPKandaswamyPhD: ஐயா! ரொம்ப நல்லா சொன்னீங்க!

///என்ன வம்புன்னா, நாமதான் எவஞ்சொன்னாலும் கேக்கமாட்டோம்ல. என் வழி தனீனீனீனீ வழின்னுதானே போயி சாக்டைல உளுவோம் :)- ///

அதுக்கு தான் கண்ணதாசன் "ஆடி அடங்கும் வாழ்க்கையடா! ஆறடி நிலமே சொந்தமடா" -ன்னு பாடிவெச்சாரு! உடம்புல பலம் வத்திபோனபின்னாடி தான் உடம்போட அருமை தெரியவருது!

கூப்பிட்டதும், பதிவ படிச்சு கருத்து சொன்னதுக்கு நன்றீங்க! உங்க ஆதரவு தொடர்ந்து தரணும்னு கேட்டுகிறேன்!

guna said...

"namadu udale namakku maruthuvar" author kumar


publisher kasthuri pathipagam, coimbatore

cell no 9245853039

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

Post a Comment

பங்காளி! சரக்கு எப்படி? விக்குமா... விக்காதா...??? கொஞ்சம் சொல்லிட்டு போங்க!!!