இந்த பகுதியின் முந்தைய பாகங்கள் படிக்க இங்கே அழுத்தவும்
தயார்படுத்திக்கி கொள்ளுதலின் இரண்டாவது கட்டம்:
![]() |
அனுவத்தை நமக்கு சொல்லிக்கொண்டிருக்கிறவங்க Peace Pilgrim - அமைதிப் பயணி |
அடுத்தப் படி, இப்பிரபஞ்சத்தை இயக்கும் விதிமுறைகளோடு நமது வாழ்வையும் இணைத்துக் கொள்வது என்பதாகும்.
இங்குள்ள உலகங்களும் அதில் வாழும் உயிரினங்களும் மட்டுமின்றி, அவைகளை ஆளும் விதிமுறைகளும் ஆண்டவனால் படைக்கப்பட்டவைகளே.
இயற்கை உலகிலும், மன இயல் உலகிலும் இயங்கி வரும் இந்த விதிமுறைகள் மனிதனது செயல்பாட்டையும் ஆண்டுவருகின்றன.
நாம் எந்த அளவிற்கு இந்த விதிமுறைகளை புரிந்துக்கொண்டு, நமது வாழ்வில் கடைப்பிடித்து வருகிறோமோ, அந்த அளவிற்கு நமது வாழ்வில் இசைவு வரும். எந்த அளவிற்கு இந்த விதிமுறைகளை நாம் மீறி வருகிறோமோ, அந்த அளவிற்கு நமக்கு நாமே சிக்கல்களை உருவாக்கி கொண்டவர்களாகிறோம்.
நாமே நமக்குரிய மோசமான பகைவர்கள். நமது அறியாமையினால் நாம் இசைந்த வாழ்விலிருந்து விலகியிருந்தால், அதனால் வரும் துன்பம் சிறிதளவேயாகும். ஆனால் நன்றாக தெரிந்திருந்தும் நமது அகந்தையால், விலகியிருந்தால் அதனால் வருவது பெருந்துன்பமாகும்.
நாம் படும் துன்பங்களே, நம்மை ஆண்டவனுக்கு, கீழ்படிதலுக்கு இட்டுச் செல்கின்றன. சில இயற்கை விதிகள் பிரபலமானவையாக இருந்தும், அவைகளை சரியாகப் புரிந்துக் கொள்ளாமலும், அவைகளை சரியாகப் கடைப்பிடிக்கப்படாமலும் இருக்கின்றன.
உதாரணத்திற்கு, தீயதை நன்மையினால் தான் வெல்ல முடியும் என்பது ஒன்று! இன்னொன்று, மற்றவர்களுக்கு தீங்கு செய்பவர்கள், தமக்கு தாமே ஆன்மீக ரிதியான துன்பங்களை விளைவித்துக் கொள்கிறார்கள். இந்த விதிகள் அத்தனை மனிதர்களுக்கும் பொதுவானவை. இவைகளை சரியாகப் பின்பற்றி வாழ்ந்தால் தான் உள் அமைதிக்கு வழிப் பிறக்கும்.
அதனால் நான், ஒரு இனிய திட்டத்தில் என்னை ஆழ்த்திக் கொண்டேன். அதாவது எவைகளை நான் நல்லவைகள் என்று நம்புகிறேனோ அவைகளின்படி வாழ்வது என்பதே அத்திட்டமாகும்.
அவைகளை எல்லாம் ஒரே நேரத்தில் கைக்கொண்டு என்னைக் குழப்பிக் கொள்ள நான் முயலவில்லை. மாறாக, நான் செய்து கொண்டிருக்கும் காரியம் சரியானதல்ல என்று நான் அறிந்தால், அக்காரியத்தை உடனடியாகக் கைவிட்டேன். தயங்கி தயங்கி, இந்த தீயக் காரியங்களை விடவேண்டுமா? இல்லை பரவாயில்லையா? என்றெல்லாம் சிந்தித்துக் கொண்டிருக்கவில்லை. சரியானது அல்ல என்று உள்மனதிற்கு தோன்றினால் அந்த செயலை அப்படியே விட்டுவிடுதலே எனக்கு எளிதாக இருந்தது.
மனம் பக்குவபட்டவுடனே, கெட்டதைக் கைவிடுவது எவ்வளவு எளிய செயலாக இருக்கிறது தெரியுமா? எதை செய்யவேண்டுமோ, அதை நான் செய்யாமல் இருப்பதை உணர்ந்தால், அதை நான் உடனடியாகச் செய்யத் தீவிரம் காட்டினேன். சிறிது காலத்திற்கு என் வாழ்வு இவ்வாறு கழிந்தது.
இதனால் எதை நான் நம்புகிறேனோ, அதன்படி என்னால் வாழ இப்பொழுது முடிகிறது. இல்லாவிட்டால் எனது வாழ்வு முற்றிலும் பொருளற்றதாகி இருக்கும். என்னுள்ளே இருக்கும் உன்னத ஆன்மீக ஒளிக்கு ஏற்ப நான் வாழ்ந்தபொழுது, மேலும் பல ஆன்மீக ஒளிகள் எனக்குப் புலப்பட்டதை நான் கண்டறிந்தேன். எனக்குப் புலப்பட்ட ஆன்மீக ஒளிக்குத் தக்கபடி வாழ்ந்து மேன்மேலும் புத்தொளி பெறுவதற்கு என்னை ஆயத்தப்படுத்திக் கொண்டேன்.
இயற்கையின் விதிகள் நம் அனைவருக்கும் பொதுவானவை. நாம் ஒன்றாகக் கூடிக் கலந்துரையாடி அவற்றைப் புரிந்துகொள்ள முடியும். அவ்வாறு கலந்துரையாடுவது எனது விருப்பம்.
![]() |
அமைதி தூதுவர் - மகாத்மா காந்தியடிகள் |
பங்காளி தோழர்களே தோழியர்களே! அமைதிப் பயணி, இன்னமும் நமக்கு நிறைய சொல்ல இருக்காங்க...
சொன்னது வரைக்கும், உங்களை எந்தவிதத்தில பாதிச்சதுன்னு சொல்லிட்டுப் போங்களேன் மக்கா!