உங்களுக்கு மேல சொன்ன நோய்ங்கெல்லாம்,
“என்ன மாமு! மாமுல் கொடுக்க மாட்டேங்கிறியாமேன்னு” மாமுலா வந்து உங்கள மிரட்டிட்டு போகிற கேஸா நீங்க?
அப்போ சரியான இடத்ததுக்கு தான் வந்திருக்கீங்க! மேல படியீங்க!
கண்டதை படிச்சா பண்டிதன் ஆவான்; சரி கண்டதை தின்னா??? நோயாளி ஆவான்னு, சொல்லி தரணுமா இல்லையா?
‘ஆமா! சொல்லி தந்தா மட்டும் நீங்கெல்லாம் அப்படியே கேட்டு நடந்திட போறீங்களாக்கும்!’ அப்படின்னு பெரியவங்க சொல்றது காதில விழுதில்ல
சரி விஷயம் இதுதான்! நம்ப உடம்புகுள்ள அசுத்தம் பல ரூபங்கள்ல போய் சேருது. உணவு மூலமா, சுவாசிக்கிற காத்து மூலமா, குடிக்கிற தண்ணி, சாப்பிடற மருந்து மாத்திரை மூலமான்னு. உடம்புக்கு அஸ்திவாரமா இருக்கிற செல்லுல எல்லாம் கூட போய் நச்சு தன்மையோடு அசுத்தம் தங்கிடுது பங்காளி!
ஒரு அளவுக்கு மேல உடம்புனால தாங்கமுடியாம போகுது. நோயோட ரூபத்தில வெளிபடுது. அதனால தான் நமக்கு அடிக்கடி தலைவலி, காய்ச்சல், சளி, இருமல், தோல்வியாதி, கட்டி, இப்படி நோயா வந்து பேயா ஆட்டுது (என்ன ரைமிங்க் இல்ல!! கைதட்டுங்கப்பா!!!)
சரி, அடுத்து என்ன நடக்குது? டாக்டர் கிட்ட போய் மொழி பணம் அழுவுறோம். அவர் குடுக்கிற மருந்து மாத்திரை எல்லாம் சாப்பிட்டு, உடம்பு தேறுதுன்னு ஆறுதல் படறோம்! படறோமா இல்லையா?
ஆனா டேஞ்சரே அங்க தான் இருக்குது! மருந்து மாத்திரை எல்லாம் சாப்பிட்டு வைக்கிறோமா! 4,5 நாள்ல சோர்வா எழுந்து நடமாடுவோம். நோய் போச்சான்னா? போச்சு....!!!
ஆனா... நோய் போகல. (வரும்... ஆனா வராது! வடிவேலு டயலாக் ஞாபகம் வருதா பங்காளி)
நோய் வர்ரதுக்கு காரணமான அந்த நச்சு பொருட்கள் எல்லாம் உடம்பு உள்ளேயே தங்கி கிடக்கே தவிற வெளியே போகல! இதை கம்ப்யூட்டர் பாஷயில சொல்லனும்னா Anti Virus Software, Firewall எல்லாத்தையும் Inactive பண்ணின மாதிரி தான். வைரஸ் எல்லாம் உள்ளேயே இருக்குங்கிற மாதிரி தான். வெறும் Symtoms போச்சே தவிர நோய் போகல
இப்படியே ஒவ்வொரு முறையும் சின்ன சின்ன நோய்களுக்கும் மருந்து மாத்திரைன்னு முழுங்கிகிட்டு இருந்தா, அது உடம்போட நோய் எதிர்கிற தன்மையை திரும்ப திரும்ப, மண்டை மேல அடிக்கிற மாதிரி அடிச்சினே இருக்கிற மாதிரி தான் அப்பு!.
One Fine Day நம்மகிட்ட வைத்தியர் சொல்லுவாரு - உனக்கு இதய கோளாறு, பிளட் கேன்சர், வயித்தில அல்சர், Brain Tumour, Liver Damage, Kidney Damage-ன்னு. நாமலும் அவங்க சொல்றதுக்கு எல்லாம் தலை ஆட்டுவோம். ஆபரேஷன் செய்யனும்னு சொல்லி, நம்ப உடம்ப, பிறந்த நாள் கேக் வெட்ற மாதிரி அறுத்து கூறு போடுவாங்க.
நான் சொல்றேன்! இதெல்லாம் வேலைக்கு ஆகாது பங்காளி! சின்ன பசங்க பொம்மைய உடைசிட்டு பெரியவங்க கிட்ட வந்து அதை சரி ஆக்கி கொடுங்கன்னு கெஞ்சுவாங்க. பெரியவங்களும் அதை சரியாக்குறதுக்கு எவ்வளவோ ட்ரை செய்வாங்க. நாம இந்த ஸீனை பல இடங்கள்ல பாத்திருக்கோமில்ல?
ஆனா அதை சரியாக்க முடியாது. அதுக்கு காரணம் என்ன பங்காளி? அந்த பொம்மை உருவான சூழ்நிலை வேற, அங்கே அதுக்கேத்த மாதிரி பல மெஷின்கள் இருந்திச்சு! சின்ன சின்ன பாகங்களை கூட அழகா சேர்த்து பொம்மை ரூபமா வெளியே அனுப்புறாங்க. ஆனா, உடைஞ்சி போன பொம்மையை சரியாக்க, பெரியவங்க கிட்ட மிஞ்சி போனா, ஸ்பேனர், ஸ்க்ரு டிரைவர்ன்னு தான் இருக்கும்!!!
அதனால தான், அந்த உடைஞ்ச பொம்மையை ஒன்னாக்க முடியாம போகுது. அதே கதை தான் இங்கேயும் நடக்குது
![]() |
பணம் மட்டும் இருந்தா ஆரோகியம் வந்திடுமா அப்பு! |
கடவுள், சின்ன செல்லுக்குள்ளயே, உயரை வெச்சி அதை வளர்த்து வளர்த்து ஒரு முழு மனுஷனா மாத்துறாரு. அதனுடைய ரகசியம் தெரியாம, நானும் கடவுளோட வேலையை செய்றேன்னு சொல்லி மனுஷன் இறங்கினா வேலைக்காகுமா?
சிம்பிள் சல்யூஷன் - வயித்த காலியா போடுங்க; ஜாலியா இருங்க!!! அம்புட்டுதேன் அப்பு!
இதை நாகரீகமா, உபவாசம்ன்னு சொல்லுவாங்க! என்னது வயித்துக்கு லீவு கொடுக்கனுமா? அதுவும் நோயில படுத்திருக்கும்போது!
என்ன பங்காளி! அதிர்ச்சியை, அதிகமாத்தான் காட்டுற! இதுவரைக்கும் எத்தனை விஷயம் சொல்லி இருக்கேன். திரும்ப திரும்ப நோய் வர்ரதுக்கு மூல காரணமே உடம்புக்குள்ள சேர்ற நச்சிகழிவு தான்னு, ஏன் மறந்து போற நீ?
உபவாசம் இருந்து எந்த டாக்டரையும் பாக்காம, நோய தீத்துக்கிற வழிய பாரு பங்காளி! அது தான் உனக்கு Safe!
உபவாசம், உளர் உபவாசம் (Dry Fasting) நீர் உபவாசம் ( Water Fasting) சாறு உபவாசம் (Juice Fasting) -ன்னு மூனு வகை இருக்கு அப்பு!
Dry Fasting-ன்னா, தண்ணிய கூட குடிக்காம உபவாசம் இருக்கிறது. அது வேண்டாம் நமக்கு
Water Fasting -ன்னா, தண்ணி மட்டுமே குடிச்சிட்டு உபவாசம் இருக்கிறது
Juice Fasting -ன்னா, அதே தான் பங்காளி, வெறும் ஜூஸ் குடிச்சிட்டு உபவாசம் இருக்கிறது.
மேல சொன்ன நோய் எதுவாச்சும் வந்ததின்னா, நீங்க கம்முனு இருந்திடுங்க! நோய் உங்களை விட்டு போய், நீங்க ஜம்முன்னு ஆயிடுவீங்க! (அட திரும்பவும் ரைமிங்க பாரு, அப்பு!)
நீர் உபவாசம் 1ல இருந்து 3 நாள் வரை Safe-ஆ வீட்டிலேயே இருக்கலாம். ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை தண்ணி குடிச்சிட்டு இருக்கணும். தினம் 2 இல்ல 3 முறை எனிமா எடுத்துகணும். வேலை எதுவும் செய்ய கூடாது. காலாற மெதுவா நடக்கலாம்.
ஆசன பயிற்ச்சி, பிரணயாமம் எல்லாம் மெதுவா செய்யலாம். தியானம் தெரிஞ்சவங்க தியானம் செய்யலாம். பிரார்த்தனை செய்யலாம். மத்த நேரத்தில நல்லா ஓய்வு எடுத்துகணும். நோய் வர்ரதே, உடம்புக்கு, நல்லபடியா நாம ஓய்வு கொடுக்காத காரணத்தினால தான்.
வயிறு காலியா இருக்கிறதால இப்போ உடம்பு House Cleaning, கம்ப்யூட்டர் பாஷயில சொல்லனும்னா Registry Clean up & Virus Scanning செய்ய தொடங்கும்.
உடம்பும் மனசும் நல்லா தெளிவா, ஆரோகிய பாதைக்கு திரும்பறதை நீங்க எல்லாம் அனுபவ பூர்வமா உணரலாமுங்க பங்காளி!
![]() |
பார்க்கும் போதே ஜூஸ் உபவாசம் ஆரம்பிச்சிடலாம்னு தோனுதில்ல |
சாறு உபவாசம்ன்னா அரை எலுமிச்சை பழ சாறில 2 இல்ல 3 தம்ளர் தண்ணி கலந்து குடிக்கிறது. இனிப்பு சுவைக்கு கொஞ்சமா தேன் சேத்துகலாம்.
ஆரஞ்சு, திராட்சை, அண்ணாசி, பப்பாளின்னு கூட பழச்சாறு குடிச்சி உபவாசம் இருக்கலாமுங்க.
உபவாசத்தை முடிக்கிற விதம் ரொம்ப முக்கியம் பங்காளி!
உபவாசத்தை முடிக்கும் போது, ஜூஸ், அப்புறம் கனிஞ்ச பழங்கள், அடுத்து இயற்கை உணவு (பச்சை காய்கறி சேலட், பழங்கள் சேலட்) அடுத்து புளி, காரம், உப்பு குறைவா இருக்கிற சமைச்ச உணவு சாப்பிடறதுன்னு படிபடியா முடிக்கனும்
இதனுடைய பயன்கள் அதிகம் பங்காளி! எல்லா நோய்ங்களும் சீக்கிரம் குணமாகுது, உடல் எடை குறையுது, ஊளைச் சதை, தொந்தி குறையுது, எல்லா செல்களும், நச்சி கழிவுகளை நீக்கி புத்துணர்ச்சி அடையுது. மனசு அமைதி ஆகி சாத்வீக குணம் மேலோங்குது.
மொத்ததில யானை பலம் உடம்புக்குள்ள சேந்திடும் (எறும்பு பலம் இருக்கிறப்பவே நம்பல யாராலேயும் சமாளிக்க முடியல..இன்னும் யானை பலம் வந்தா அம்புட்டுதேன்)
(உண்மையை அப்படியே ஒப்புகிறதில, காந்தி தாத்தாக்கு அடுத்து நீங்க தான் பங்காளி)
சரி ரைட்டு! மேட்டரு முடிஞ்சது! வர்ரேன் பங்காளி!
ஓட்டு போட மறந்திடாதிங்க! மக்களே! அது ரொம்ப முக்கியம். அப்ப தானே உங்கள மாதிரி நிறைய பங்காளிங்க கிடைப்பாங்க!
கருத்து ஏதாச்சும் இருக்கா அப்பு! தயங்காம சொல்லிட்டு போங்க!
யாருப்பா தம்பி அங்க, கூட்டத்து மத்தியில மைக்க பாஸ் பண்ணுபா!!!