பன்னீர் தெளிக்கிறோமில... ப்ளீஸ்... கொஞ்சம் தலை குனியுங்க...

வணக்கம் பங்காளீ! வாங்க, சவுக்கியங்களா? நம்ம வலைபதிவு பக்கம் வந்ததுக்கு நன்றீங்கோ...Get this Widget

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே! என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி! நண்பர்களே!

மனிதர்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் சிந்தனைகள், இங்கு சிதறிகிடக்கிறது. படித்து பார்த்து உங்கள் கருத்துக்களை இடவேண்டுகிறேன்!

தொடர்ந்து, இந்த வலைபதிவுக்கு உங்களின் ஆதரவை தாருங்கள்!!! நன்றி! தொடர்ந்து வருக!!!

இந்த நாள், உங்களுக்கு, இனிய நாளாக அமைவதாக!!!

பாசகார பங்காளி கூட்டமுங்க! நீங்களும் கூட வாறீகளா?

2 Nov 2010

வாழ்க்கை எல்லாம் போராட்டமா???

பங்காளி! மனுஷனுக்கு மட்டும் ஏன் இத்தனை பாரம்? மனுஷ மனசு, வாழ்க்கை சுழலில சிக்கி, சுத்தி சுத்தி எதையோ தேடி தேடிக் வாழ்க்கை முழுசும் அலுத்து, என்னடா இது வாழ்க்கையின்னு எப்போவாவது ஒருதரமாவது தோன்றி இருக்கா உங்களுக்கு?

காலம் எல்லாம் வாழ்க்கையில போராட்டம் தானா
பங்காளி?

எதைத்தேடி எதை அடைஞ்சோம்? மறுபடி மறுபடி என்னென்னமோ தேடி நம்ப வாழ்க்கையில இதுக் கிடைச்சா சந்தோஷம், அதுக் கிடைச்சா சந்தோஷம்ன்னு நினைச்சு எதன் எதன் பின்னோ ஓடி ஓடி வாழ்க்கை கனவாய் காணல்நீராய், வெற்று சுரைக்காய்கூடாய் இப்படிதானா வாழ்க்கை? இவ்வளவுதானா வாழ்க்கை?

சின்ன சின்ன உயிர், சின்ன சின்ன அறிவுங்க மட்டுமே உள்ள ஜீவராசிகள் எல்லாமும் சந்தோஷமாகத்தானே இருக்குதுங்க.

இறக்கும் வரை இறக்கமுடியாத சுமைகள்!
மனுஷனுக்கு ஏன் சலிப்பு வராதா?
எத்தனை எத்தனை பாரங்கள்!

ஏன் மனுஷனோட வாழ்க்கை மட்டும் இவ்வளவு நெருக்கடியில் சிக்கி இருக்குதுன்னு  எப்போவாவது சிந்திச்சி இருக்கோமா?  

இப்படி எல்லாம் பங்காளி நீங்க சிந்திக்கிறதுண்டுன்னு சொன்னீங்கன்னா நீங்க ஞானம் அடைகிற பாதையில நடக்கறீங்கன்னு அர்த்தம்.

விட்டு விடுதலை யாகிநிற் பாயிந்தச்
சிட்டுக் குருவியைப் போலே

எட்டுத் திசையும் பறந்து திரிகுவை
ஏறியக் காற்றில் விரைவொடு நீந்துவை
மட்டுப் படாதெங்கும் கொட்டிக் கிடக்குமிவ்
வானொளி யென்னும் மதுவின் சுவையுண்டு

மேல சொன்னது பாரதியோட ஞான வார்த்தைகள். இதைப் போல விட்டு விடுதலையாகி சிட்டுக்குருவியைப் போலவே நாம் மகிழ்ந்திருக்க வேண்டாமா?

மனுஷனும் இந்த ப்ரபஞ்சத்தின் ஒருத் துண்டுதானே? அவனுக்கு மட்டும் இன்பம் கொடுக்காமல் நடந்துச்சென்றுவிடுமா இந்த ப்ரபஞ்சம். ஆனால் நடைமுறையில் பார்ப்பது என்ன பங்காளி?

உலகத்தில பைத்தியக்காரன்க அதிகமா ஆகிட்டிருக்காங்க. அதிக அதிகமாய் படிக்க படிக்க, வாழ்க்கையிலேயே நடிக்க ஆரம்பிச்சிட்டோம். தற்கொலைகள் எத்தனை எத்தனை! 7 வயசு பிஞ்சுகள் எல்லாம் கூட தற்கொலை செய்து செத்து மடியுதுன்னு செய்திக்கேட்டு பதராம இருக்க முடியலையே பங்காளி! மனசு நிறைய நிறைய வாழ்க்கை வெறுத்து கனக்குதே!

ஐயோ! என் மாந்தர் இனமே! உனக்கு வந்த இந்த இழி நிலையை அந்த எட்டுக்கால் பூச்சியும், வண்ணத்துப்பூச்சியும் கேலி செய்து சிரிச்சி பேசிக்கிட்டு இருந்துச்சே நேத்து, அந்த அந்திசாயும் நேரத்தில, அதோ அந்த மாமரத்து கிளை மேல உட்கார்ந்துக்கிட்டு. நீங்க அதைக் கேட்கவில்லையா? நான் கேட்டேனே பங்காளி! நீங்க எப்படி மிஸ்பண்ணீங்க. ஒருவேலை காதில ஹெட்ஃபோன் மாட்டிகிட்டு FM ரேடியோ கேட்டிட்டு இருந்தீங்களோ என்னமோ?   

வாழ்வோமே பங்காளி ஏகாந்தமாய், எல்லா கட்டுக்களையும் அறுத்து எறிந்துவிட்டு முடியுமானால் முழுவதையும் எரித்துவிட்டு. அதுக்குத்தான் வழியிருக்குன்னு சொல்ல வந்தேன் பங்காளி!

உடல் சார்ந்த வாழ்க்கை வாழும் வரைக்கும் நமக்கு விடுதலைக் கிடைக்காது. என்ன வேணும்னாலும் சாப்பிடுங்க, என்ன வேணும்னாலும் செய்யுங்க, என்ன வேணும்னாலும் உடுத்துங்க, எங்க வேணும்னாலும் போங்க, எல்லாம் வெறும் நிலைத்து செல்லாத அனுபவங்களே!

ஒரு அனுபவம் முடிஞ்சப்பின்னாடி அந்த அனுபவத்தை விட வேறு எதாவது புதுசா, சொகுசா பலபல தினுசா கிடைக்குமான்னுத் தான் மனசு ஏங்குது. அதனாலத் தாங்க பங்காளி இத்தனை குழப்பங்களும், போராட்டங்களும்.

வாழ்க்கையை முழுசா ஏத்துக்கப் பழகணும் பங்காளி! துன்பங்கள் தவிர்க்கபட வேண்டியவை அல்ல தெரியுமா பங்காளி? அவைகளைக் கடந்து செல்ல வேண்டும் என்றே உங்களுக்கு பாடம் நடத்த வருகின்றன. ஒருத் துன்பத்தை மகிழ்ச்சியா கடக்க ஆரம்பிச்சிட்டா உங்க வாழ்க்கையில ஒருப்படி முன்னேறி செல்றீங்கன்னு அர்த்தமுங்க.

உண்மையை சொல்லப் போனா வாழ்க்கையில, உலகத்தில இன்பமும் இல்லை துன்பமும் இல்லை. எல்லாம் மனசுப் போடுகிற கணக்குத்தான். சின்ன வயசுல சேத்தில விளையாடுறது, மழையில நினைஞ்சு கூத்தடிக்குறது சந்தோஷ அனுபவம். ஆனா வளர்ந்தப்பின்னாடி அதுவே பிடிக்காம வெறுக்கப்படுகின்ற அனுபவமா போகுதில்ல.

வாழ்க்கையில வெறுப்பு வர்றது சகஜமான ஒரு விஷயமா போச்சு! என்ன செய்ய நெருக்கடி நிறைஞ்ச காலத்தில வாழறோமே! அந்த மாதிரி மனசு சஞ்சலத்தில மாட்டிக்கிட்டா எப்படி சமாளிக்கிறதுன்னு கேட்டுக்றீங்க இல்ல பங்காளி?

ஒருச் சின்ன தியானம் சொல்லிக்கொடுக்கிறேன். எப்பவெல்லாம் உங்க மனசு சஞ்சலப்படுதோ அப்போ தனியா ஒரு இடத்திலப்போய் யாரும் உங்களை தொந்தரவு செய்ய முடியாத ஒரு அறையில் போய் உட்காருங்க. சாதரனமா உட்காருங்க, முதுகை, நேராகவும், தளர்வாகவும் வைச்சு, கண்களை மூடி உங்க மூச்சுக்காத்தை கவனியுங்க. உள்ளேப்போகிற மூச்சு, வெளியேபோகிற மூச்சு, நீங்க எதனையும் கட்டுப்படுத்தாதீங்க. இயல்பாய் வருகிற போகிற மூச்சுக்காத்தை கவனியுங்க. போதும்.

உங்க மூச்சுக்காத்தை கவனிக்க முடியாம மனசு எங்கெங்கோ அலைப்பாயும். கண்டுக்காதீங்க! மறுபடியும் மூச்சுக்காத்தை கவனியுங்க. ஒரு அரை மணிநேரம் இப்படி செய்தா உங்க சஞ்சலம் நீங்கறதை பார்க்கமுடியும்.

மனசு கவலையில்லாம எப்போதுமே லேசா இருந்தா எவ்வளவு நல்லாஇருக்கும். அனுபவிச்சிப் பாருங்க!

இன்னமும் தியானத்தைப் பத்தி, ஆன்மீகப்பாதை எப்படி நம் வாழ்க்கையில மகிழ்ச்சியைக் கொண்டுவரும் என்கிறதைப் பத்தி எல்லாம் பேசுவோமே! கையைப் பிடிச்சுக்கிட்டு கூடவே வந்தா சந்தோஷம்.




இந்த பதிவு எல்லோர்கிட்டேயும் போய் சேறணும்னு நீங்க நினைச்சா, மறக்காம உங்க ஓட்டுகளை, கீழே இருக்கிற ஓட்டுப் பெட்டிகள்ல போடுங்க மக்கா! நீங்க எல்லோரும் தான் அன்பான பங்காளிங்க ஆச்சே! நான் சொல்லாமலே செய்றவங்க இல்லையா அப்பு?