![]() |
நான் தானுங்க உங்க உறவுக்காரன்! |
மனிதர்களை நேசிப்பவன்
மனிதம் ஒரு நாள், எல்லா துன்பங்களில் இருந்தும் விடுபடும் என்று நம்புகின்றவன்
காந்தியவாதி! எளிமை பற்றாளன்! வன்முறையின்றியே எல்லோரும் எல்லா வளங்களையும் பகிர்ந்து வாழவேண்டும் என்பது என் கனவு
எனக்கு உண்மை பேசுவது பிடிக்கும்
உண்மை பேசுபவர்களையும் பிடிக்கும்
அன்பை பகிர்ந்து கொண்டால், பூமியிலேயே சொர்கத்தை காணலாம் என உறுதியான ஒரு நம்பிக்கை வைத்திருப்பவன்
அடுத்தடுத்த தலைமுறை முன்னேறி சென்று, அமரத்துவம் அடையும் என்று கனவு காண்கின்றவன்
இயற்கை வாழ்வியல், இயற்கை மருத்துவம், இயற்கை வளம் காப்பது, கிராம பொருளாதரம், விபஸ்ஸனா தியானம் எல்லாவற்றை பற்றியும் சிந்தித்து, படித்து, பின் எல்லாவற்றையும் நடைமுறை படுத்திகொண்டிருப்பவன்.
ஒவ்வொரு மனிதனும், தன்னை யாரென்று அறிந்து, செம்மை படுத்தி கொண்டால் மட்டுமே, சமூகம் சீர்படும் என கருதி, என்னை சீர்படுத்திகொள்ளும் முயற்ச்சியில் ஈடுபட்டு கொண்டிருப்பவன்
அதற்காக சிந்தித்து கொண்டிருப்பவன். ஆக்கமான செயல்கள் செய்து கொண்டிருப்பவன்
அந்த செயல்களில், இந்த வலைபக்கமும் ஒன்று
நண்பர்களே! உங்களின் நேரத்தை என்னோடு பகிர்ந்தமைக்கு நன்றி!
தொடர்ந்து வாருங்கள்!!!
மனிதம் செழிக்க
ஆக்க பூர்வமான
சிந்தனைகளை
இங்கே பகிர்ந்துகொள்ளுவோம்!!!