பன்னீர் தெளிக்கிறோமில... ப்ளீஸ்... கொஞ்சம் தலை குனியுங்க...

வணக்கம் பங்காளீ! வாங்க, சவுக்கியங்களா? நம்ம வலைபதிவு பக்கம் வந்ததுக்கு நன்றீங்கோ...Get this Widget

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே! என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி! நண்பர்களே!

மனிதர்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் சிந்தனைகள், இங்கு சிதறிகிடக்கிறது. படித்து பார்த்து உங்கள் கருத்துக்களை இடவேண்டுகிறேன்!

தொடர்ந்து, இந்த வலைபதிவுக்கு உங்களின் ஆதரவை தாருங்கள்!!! நன்றி! தொடர்ந்து வருக!!!

இந்த நாள், உங்களுக்கு, இனிய நாளாக அமைவதாக!!!

பாசகார பங்காளி கூட்டமுங்க! நீங்களும் கூட வாறீகளா?

16 Sept 2010

அசைவம் ஏன் டேஞ்சர்ன்னு தெரிஞ்சதில்ல பங்காளி?



போன ரெண்டு பதிவுகள்ல ஏன் மனுஷனுக்கு மாமிசம் ஏத்த உணவு இல்லைன்னு பாத்தோம் இல்ல. இப்போ அதோனோட தொடர்ச்சியை பார்க்க போறோம்.

முதல் பாகத்தை படிக்கணுமா? அப்போ இங்கே அழுத்துங்க!

2வது பாகத்தை படிக்கணுமா? அப்போ இங்கே அழுத்துங்க!

ச்ச்சி... பாவம் இல்ல! இவங்கெல்லாம் மனுஷங்களா?  

சரி பங்காளி! ஒரு விஷயம் கேட்கிறேன், எங்கே பதில சொல்லு பார்க்கலாம்!

மாமிச உணவு சாப்பிடறது பொருளாதார ரீதியா சரியான ஒரு விஷயமா? 

பரவாயில்ல! கொஞ்ச நேரம் எடுத்து யோசி பங்காளி!

ஏதாவது யோசனை வந்ததா? இல்லையா? சரி விடு! எப்பவும் போல நானே இதுக்கும் பதிலை சொல்லிடறேனே!

அமெரிக்காவில எடுத்த ஒரு கணக்கு பத்தி கேளேன்! அந்த நாட்டில இருக்கிற மாமிசத்துக்காக வளர்க்கபடுகிற மாடுங்க, பன்னிங்க, செம்மறியாடுங்க, கோழிங்க எல்லாம் அந்த நாட்டு ஜனதொகை சாப்பிடறத விட 5 மடங்கு அதிகமா தானியங்களையும், சோயா பீன்ஸ்சையும் சாப்பிடுதாம்.

மனுஷனுக்கு ஏன் தான் இப்படி கொலை செய்ற புத்தி வருதோ?
ஆறாவது அறிவு உள்ளவன்னு வேற சொல்லிக்கிறான்!

ஒரு ஏக்கர் நிலத்தில புல்லை வளர்த்து அதை மாடுங்களுக்கு கொடுத்தா கடைசியில கிடைக்கிறது என்ன தெரியுமா? வெறும் 165 பவுண்ட் மாட்டுகறி மட்டும் தான்! அதே ஒரு ஏக்கரில 20,000 பவுண்ட் உருளைகிழங்கு நமக்கு விளைச்சலா பெற முடியும்னு சொல்றாங்க அப்பு! பாத்தியா இந்த அநியாயத்தை!

அமெரிக்கர்கள் மட்டும் அவங்க சாப்பிடற மாமிச அளவில் வெறும் 10% குறைச்சிட்டாலே, உலகத்தில வருஷத்துக்கு உணவில்லாம சாகிற 60 மில்லியன் மனுஷங்களோட பட்டினியை திர்த்திட முடியுமாம்.

கற்பனை பண்ணி பாரு! இன்னும் வர்ற காலத்தில ஜனதொகை கூடுமே தவிர குறைய போறதில்ல. இப்படி அநியாயமா உணவு தானியங்களை விளைவிச்சி விலங்குகளுக்கு கொடுத்து, அதுங்களை சாகடிச்சி, அதில இருந்து கிடைக்கிற மாமிசத்தை எல்லா ஜனதொகைக்கும் கொடுக்க முடியுமா? அது எல்லோருக்கும் பத்தும்படி இருக்குமா? இப்பவே உணவில்லாம பல நாடுகள்ல சாவுறாங்க! இதை பத்தி என்ன நினைக்கிற நீ?

ஏழை நாடுகள்ல ஒரு மனுஷன், ஒரு வருஷத்துக்கு, சராசரியா 400 பவுண்ட் தானியங்களை சாப்பிடறான். அதே பணக்கார நாடுகள்ல 2000 பவுண்ட சாப்பிடறான். என்ன புரியலையா? அதாவது 90% தானியங்களை முதல்ல ஆடு மாடுங்களுக்கு கொடுத்து, பின்னாடி அதுங்களோட கறியை சாப்பிடறான்னு அப்படி சொன்னேன். எப்படி எல்லாம் வேஸ்ட் பண்றாங்க பாரு!

அடுத்த விஷயம், நம்ப சுற்றுபுற சூழல் எப்படி பாதிப்பு அடையுது பாரு!     

விலங்குகளை அறுத்து கூறு போடற இடங்களிலே இருந்து எல்லாம் நச்சுதன்மையோடு கழிவுநீர் வெளியே விடபடுது. அதெல்லாம் ஆறுகள்ல போய் கலக்குது. இதில கொடுமையான விஷயம் என்னான்னா, குடியிருப்புகள்ல இருந்து வெளிபடுகிற கழிவுநீரை விட 10 மடங்கு அதிக நச்சுதன்மையா இருக்காம், இந்த பண்ணைகள்ல இருந்து வர்ற கழிவுநீர்ல.

ஏழைநாடுகள்ல காடுங்க அழிக்கபடுறது பெரிய பிரச்சனையா இருக்கு அப்பு! உதாரணத்துக்கு, இந்தியாவில இன்றைய சூழலில, வெறும் 18% காடு மாத்திரம் தான் இருக்கு! குறைஞ்சபட்சம் 33% காடு இருந்தா தான் நல்லா மழைவளம் இருக்கும்.


காடுங்க அழியறதில முக்கிய காரணம், இந்த கால்நடைங்களை வளர்கிறது தான்னு, சொல்றாங்க விஷயம் தெரிஞ்சவங்க! இதனால் புல் செடிங்க எல்லாம் இல்லாம மழைநீரை தடுக்க முடியாம வெள்ள பெருக்கு அடிக்கடி ஏற்படுது

இன்னொரு கணக்கு சொல்றேன் பாரு! உனக்கு மயக்கமே கூட வரலாம்!


ஒரு பவுண்ட் கோதுமையை விளைவிக்க 60 பவுண்ட தண்ணி இருந்தா போதும். ஆனா அதே ஒரு பவுண்ட் மாமிசத்தை பெற கிட்டதட்ட 6000 பவுண்ட் தண்ணி தேவைபடுதாம். தண்ணிக்காக மூன்றாம் உலக போரே வரலாம்னு சொல்றாங்க! இவங்க என்னடான்னா இப்படி வேஸ்ட் பண்றாங்களேன்னு தோணுதா பங்காளி? 


நீ நல்ல மனுஷன் இல்ல அதனால உனக்கு அப்படிபட்ட நல்ல சிந்தனை தான் தோணும்!

எல்லா மதங்களும் அன்பா இரு! அஹிம்சையை கைகொள்ன்னு சொல்லுது. நாம சகமனுஷங்க கிட்ட அன்பா இருக்கணும்னா, நாம எல்லோருமே சைவம் சாப்பிடறவங்களா தான் இருக்க முடியும். என்ன நான் சொலறது ஏத்துகிற இல்ல?

எல்லோருக்கும் தாத்தா - வள்ளுவர் தாத்தா என்ன சொல்றாரு பாரு!

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்

அர்த்தம் புரியுதா? அதாவது நாம எந்த விலங்கையும் உணவுக்காக கொல்லாம விட்டோம்னா அதுங்க எல்லாம் கையெடுத்து நம்மை கும்பிடுமாம்பா

உனக்கு பெரிய மனுஷங்க நட்பு வேணும்னு சொன்னே இல்ல. அப்போ உடனே சைவமா மாறு! யாரெல்லாம் உனக்கு நண்பர்களா ஆகுறாங்க பாரு! இங்கே ஒரு லிஸ்ட் இருக்கு படிக்கிறேன் கேளு!

Pythogoras, Socrates, Plato, Clement of Alexandria, King Ashoka, Leonardo Da Vinci, Montaigne, King Akbar, John Milton, Sir Issac Newton, Voltaire, Benjamin Franklin, Shelly, Ralph Waldo Emerson, Henry David Thoreau, Leo Tolstoy, George Bernard shaw, Rabindranath Tagore, Albert Schweitzer, Albert Einstein.

கடைசியா இந்த லிஸ்ட்ல இருக்கிறது, நம்ப அன்புக்கு உகந்த, பொக்கை வாய் தெரிகிற மாதிரி சிரிக்கிற நம்ப காந்தி தாத்தா

நண்பர்களே! மூனு பாகங்களையும் பற்றி உங்க கருத்து என்ன? எத்தனை பேரு சைவமா மாறி அப்பாவி ஜீவன்கள் கிட்ட இருந்து தேங்கஸ்சை வாங்கிக்க போறீங்க!  

அட சும்மா மனம் விட்டு சொல்லிட்டு போங்க! நாங்களும் தெரிஞ்சுப்போம் இல்ல, நீங்க என்ன நினைக்கறீங்கன்னு!

69 மேதைங்க இதபத்தி என்ன சொன்னாங்கன்னா...:

prabhadamu said...

////உங்களை பின்பற்ற வேண்டும் எனின் Follower Widget இல்லாமல் எப்படி உங்களை பின் தொடர்வது? Follwer Widget-ஐ இணைத்திடுங்கள் நண்பரே! ////

நன்றி நண்பா என் தளத்தில் படித்து பதில் அளித்ததுக்கும், உங்கள் கருத்தை சொன்னதுக்கும் மிக்க நன்றி நண்பா.


என் தளத்தில் Follower Widget வரவேஇல்லை. எனக்கு சோதனை முயற்ச்சி மட்டும் இன்னும் கான்பிக்கிறது. அதனால் என்ன செய்வது என்று தெரியலை.


நீங்கள் உங்கள் தளத்தில் Follower Widget என் தளத்தை இணைக்க விரும்பினால் டாஷ்போடில் ADD என்று இருக்கும் இடத்தை கிளிக் செய்து,


அதில் என்னுடைய URL இணைத்து NEXT என்று கிளிக் செய்து SAVE செய்தால் என் தளம் நீங்கள் பின் தொடரும் தளத்தில் இணைந்து விடும்.


இதுப்போல் தான் நான் ஒருசில தளத்தை இணைத்து உள்ளேன்.


விருப்பம் இருந்தால் முயற்ச்சித்து பாருங்கள்.... நன்றி நண்பா.

நிகழ்காலத்தில்... said...

நல்லாத்தான் இருக்கு., ஆனா என்னோட நண்பர் ஒருத்தர் சொன்னார். இப்படி நாம ஆட்டையும் மாட்டையும் கொன்னு போடலன்னா, அதுக வளர்ந்து பெருகி நாம வாழ இடம் இல்லாம பண்ணிப்போடும்,

பூரா உணாவுதானிய பயிரையெல்லாம் மேஞ்சி தின்னுபோடும். அதுனாலதான் கொல்லறோம் அப்படின்னு..:)))

ஜெயந்த் கிருஷ்ணா said...

நல்ல பதிவு பங்காளி...

Anonymous said...

nice

Chitra said...

Present Sir!

தமிழ் உதயம் said...

காலகாலமாக பலர் சொன்னதை நீங்கள் சொல்லி இருக்கிறீர்கள். டாக்டர்கள் சாப்பிடாதே என்று சொன்னால் தான் நம்மவர்கள் கேட்பார்கள்.

Madhavan Srinivasagopalan said...

//நிகழ்காலத்தில்... said... "நல்லாத்தான் இருக்கு., ஆனா என்னோட நண்பர் ஒருத்தர் சொன்னார். இப்படி நாம ஆட்டையும் மாட்டையும் கொன்னு போடலன்னா, அதுக வளர்ந்து பெருகி நாம வாழ இடம் இல்லாம பண்ணிப்போடும்," //

நல்லா காமெடியா இருக்கு சார் நீங்க சொல்லுறது..
மக்கள்தொகை கூடத்தான் பெருகிகிட்டே வருது.. அதுக்காக, மனுஷங்களை எல்லாம் _____________?

//நாம சகமனுஷங்க கிட்ட அன்பா இருக்கணும்னா, நாம எல்லோருமே சைவம் சாப்பிடறவங்களா தான் இருக்க முடியும்.//

ரீபீட்டோய் .. எங்கப்பா சொல்லுவாரு, 'மாமிசம் சாப்பிட்டா, மிருக குணம் வரும்" அப்படீன்னு..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சரி இதை உயர்மட்ட கமிட்டியில் கேட்டுவிட்டு சைவத்துக்கு மாறுகிறேன் .

என்னது நானு யாரா? said...

@prabhadamu

நீங்க சொன்ன மாதிரியே முயற்ச்சி செய்கிறேன் நண்பா! நன்றி!

என்னது நானு யாரா? said...

@நிகழ்காலத்தில்...

//பூரா உணாவுதானிய பயிரையெல்லாம் மேஞ்சி தின்னுபோடும். அதுனாலதான் கொல்லறோம் அப்படின்னு..:))//

இதை நகைசுவைக்கு தான் சொன்னீங்க இல்லையா நண்பரே! உண்மையில கதை ரிவர்ஸ்ல போகுது!

நாம கொன்னு திங்கறதுக்கு தான் அவைகளை அதிகமா இனபெருக்கம் செய்ய வைக்கிறோம். இந்த விளக்கம் மத்தவங்களுக்காக நண்பரே!

என்னது நானு யாரா? said...

@Chitra

//Present Sir!//

சித்ரா அவர்களே! ஸ்கூல்ல படிக்கிற மாதிரி கனவு கண்டீங்களா? இதுக்கு தான் தூக்க கலக்கத்தில எழுந்து கம்ப்யூட்டர் முன்னாடி உட்காரகூடாதுன்னு சொல்றது!

என்னது நானு யாரா? said...

@தமிழ் உதயம்

//டாக்டர்கள் சாப்பிடாதே என்று சொன்னால் தான் நம்மவர்கள் கேட்பார்கள்//

நல்ல பாயிண்ட் சொன்னீங்க! அடிப்பட்ட பின்னாடி தானே புத்தி வருது மனுஷனுக்கு

சட்டி சுட்டதடா! புத்தி கெட்டதடான்னு கவிஞர் பாடியிருக்காரில்ல!

என்னது நானு யாரா? said...

@Madhavan

அண்ணாச்சி அவரு "நிகழ்காலத்தில்" தமாசா சொன்னதுங்க! அவருக்கும் விஷயம் எல்லாம் நல்லா தெரியும். அதனால தான் சும்மா காமெடியா சொல்லிட்டாரு.

//எங்கப்பா சொல்லுவாரு, 'மாமிசம் சாப்பிட்டா, மிருக குணம் வரும்" அப்படீன்னு.//

நல்ல ஒரு அப்பாகிட்ட நீங்க வளர்ந்திருக்கீங்க! கேட்கவே சந்தோஷமா இருக்குது அண்ணாச்சி!

என்னது நானு யாரா? said...

@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)

//உயர்மட்ட கமிட்டியில் கேட்டுவிட்டு சைவத்துக்கு மாறுகிறேன்//

இப்படி சொல்லி தப்பிக்கலாம்னு பாக்கறீங்களா ரமேஷ்? உயர்மட்ட கமிட்டிகளோட செயல் வேகம் தான் எல்லோருக்கும் தெரிஞ்ச சங்கதியாச்சே!

அருண் பிரசாத் said...

உள்ளேன் அய்யா!

சீனு said...

அட!

http://jeeno.blogspot.com/2007/01/blog-post.html
http://jeeno.blogspot.com/2004/07/blog-post.html

என்னது நானு யாரா? said...

@அருண் பிரசாத்

சித்ரா தான் அப்படின்னு நினைச்சேன், நீங்களுமா அருண்?

Chittoor Murugesan said...

பாஸ் !
கழுகு வலைச்சரத்துல வெளியான வல்லரசு கனவுகளை படிச்சு கமெண்ட் போட்டிருந்திங்க. அந்த திட்ட சுருக்கத்தையாச்சும் பத்து பேருக்கு ஷேர் பண்ணலாமே

என்னது நானு யாரா? said...

@சீனு

உங்க கமெண்டை பார்த்து, இப்படி எல்லாம் இரண்டு எழுத்தில கமெண்ட் போட முடியுமான்னு நினைச்சேன்.

அதற்கு அர்த்தம், நீங்க கொடுத்திருக்கிற லிங்கில போய் பார்த்தப்போ புரிஞ்சது.

அதிகமான தகவல்களை நன்றாக கொடுத்திருக்கீங்க நண்பா! உங்க பகிர்விற்கு வாழ்த்துக்கள் நண்பா!

Chef.Palani Murugan, said...

பொதுவா வார்த்தைக‌ளுக்கு முன்னால் 'அ' சேர்த்தாலே தீங்குதான், நீதி-அநீதி,த‌ர்ம‌ம்-அத‌ர்ம‌ம், சைவ‌ம்-அசைவ‌ம்...ஹிஹி.. ந‌ல்லாயிருக்கா

எஸ்.கே said...

உலகம் முழுவதும் அசைவமாக பல உணவுகளை சாப்பிடுகிறார். இதில் நான்கு கால் பிராணி உணவுகளை நாம் முழுமையாக தவிர்த்தே விடலாம். ஏனெனில் அதில் கிடைக்கும் சத்துக்கள் பெருமளவில் வேறு பல பொருட்களில் கிடைக்கின்றன. மேலும் இதனால் கிடைக்கும் தீமைகளும் நோய்களும் கொஞ்சம் அதிகம்தான். பல வித பறவைகளையும் சாப்பிடுகின்றனர். இதையும் மேற்சொன்ன காரணத்தால் தள்ளிவிடலாம்.

கடல் உணவுகள் ஓரளவு உடலுக்கு நல்லதுதான் என நினைக்கிறேன். ஆனால் இதைக் கூட ஓரளவு கட்டுப்பாட்டாக உண்ண வேண்டும். அசைவத்தை கைவிட முடியாதவர்கள் இதை முயற்சிக்கலாம்.

மனிதன் அசைவத்தை எப்போது சாப்பிட ஆரம்பித்தான்? முதலில் சைவ உணவை சாப்பிட ஆரம்பித்த மனிதன் அப்போது விவசாயம் என்ற ஒன்று இல்லாத காரணத்தால், தாவர பற்றாக்குறை காரணமாக அசைவம் உண்ண ஆரம்பித்தான். ஆனால் தற்போது அப்படியில்லையே.

அசைவ உணவிலிருக்கும் பல சத்துக்கள் சைவ உணவுகளிலேயே கிடைக்கின்றன. இன்னும் கேட்டால் சில சத்துக்கள் சைவ உணவில் மட்டுமே கிடைக்கின்றன. உதாரணமாக ஒன்று சொல்கிறேன். லியூசின் என்னும் சத்து விலங்குகளில் சுரப்பதில்லை. சோயாபீன்ஸில் மட்டுமே கிடைக்கின்றது. இது கேன்சரை கட்டுப்படுத்தும் ஒரு சத்து.

ஆனால் நண்பா, சிறு வயதிலிருந்து அசைவத்தை சாப்பிட்டு வருபவர்களுக்கு உடனடியாக அந்த பழக்கத்தை விடுவது கடினம்தான். ஆனால் முயற்சி செய்தால் முடியாததில்லை. இன்றைய காலகட்டத்தில் பலர் சைவ உணவிற்கு ஆதரவளிக்கிறார்கள். நிச்சயம் இது முடியக் கூடியதுதான்.

மீண்டும் ஒரு சிறந்த பதிவு அளித்த தங்களுக்கு வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!

சீனு said...

நன்றி உறவு(க்)காரன்.

//கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்//

இந்த ஒரு குறள் போதும், நம் மனசாட்சியை உலுக்கியெடுக்க. எனக்கு பிடித்த குறள்களில் ஒன்று.

பருப்பு (a) Phantom Mohan said...

போன பதிவில் நான் போட்ட கமெண்ட்ட நீங்க தப்பா எடுத்துக்கிட்ட மாதிரி தெரியுது..!

ஓரளவுக்கு ஆரோக்கியத்தோட வாழ்வதற்க்கு எனக்கு தெரிஞ்சு ஒரு யோசனை சொல்றேன்.

அசைவம் வேண்டாம், Hybrid, Frozen, செயற்கை உரம் போட்டு வளர்த்த காய்கள், பீடி கத்திரிக்காய், Wills உருளைக்கிழங்கு, Malboro வெண்டைக்காய்...இது எதுவும் வேண்டாம்.

ஒரு 10 ஏக்கர் நிலம் வாங்கி, நமக்கு தேவையான எல்லாத்தையும் நாமே விதைச்சு, அதுக்கு இயற்கை உரம் போட்டு, விறகு அடுப்புல, மண்பானையில் சமைச்சு சாப்பிடனும்.

வீட்டுல கேபிள் கனெக்சன் கட் பண்ணுங்க, ஃப்ரிட்ஜ், வாஷிங் மிஷின், ஏசி தூக்கி குப்பைல போடுங்க...கார் வித்துடுங்க, ஒரு பைக், ரெண்டு சைக்கிள் போதும். நீங்க போக வேண்டிய தூரம் 4 கி.மீ என்றால் நடந்து போங்க, 10 கி.மீ-க்குள்ள என்றால் சைக்கிள்ள போங்க, அதுக்கு மேல மட்டுமே பைக் யுஸ் பண்ணுங்க...கொஞ்சம் உடற்பயிற்சி, கொஞ்சம் யோகா, கொஞ்சம் உதவி நீண்ட நாள் வாழலாம்!!!!


இதுல என்ன ஒரு கொடுமைன்னா...இவ்வளவு வக்கனையா பேசுற நானே இத பண்ண மாட்டேன், இதுல அடுத்தவன் பண்ணுவான்னு எதிர்பார்ப்பது...

விஜய் படத்துக்கு அடிச்சு புடிச்சு டிக்கட் வாங்கி ஒப்பனிங் சோ பார்த்திட்டு வந்து, இவன் திருந்த மாட்டாண்டா-ன்னு பொலம்புவது மாதிரி.

என்னது நானு யாரா? said...

@Chef.Palani Murugan, LiBa's Restaurant

//பொதுவா வார்த்தைக‌ளுக்கு முன்னால் 'அ' சேர்த்தாலே தீங்குதான், நீதி-அநீதி,த‌ர்ம‌ம்-அத‌ர்ம‌ம், சைவ‌ம்-அசைவ‌ம்...ஹிஹி.. ந‌ல்லாயிருக்கா//

கலக்கிட்டீங்க போங்க செஃப் பங்காளி! நல்ல புத்திசாலித்தனமான கமெண்ட்

என்னது நானு யாரா? said...

@எஸ்.கே

நண்பரே! நீங்க சொன்ன மாதிரி எல்லா பகுதிகளையும் படித்த பின் ஒரு நல்ல கருத்து தொகுப்பை அளித்திருக்கிறீர்கள். உங்களின் கருத்துக்கள் மக்களுக்கு கூடுதலான தகவல்களை தரும் வகையில் இருக்கின்றன.

உங்களின் அக்கறையை பாராட்டாமல் இருக்க முடியாது. என்னை இத்தனை வாழ்த்துக்கள் சொல்லி வாழ்த்திவிட்டீர்கள். உங்களின் வெள்ளை உள்ளத்தை காட்டுவதாக இருக்கிறது. நன்றி! நன்றி! நன்றி நண்பரே!

என்னது நானு யாரா? said...

@சீனு

////கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்//

இந்த ஒரு குறள் போதும், நம் மனசாட்சியை உலுக்கியெடுக்க. எனக்கு பிடித்த குறள்களில் ஒன்று.//

சரியாக சொன்னீர்கள் நண்பா! உங்களை போன்றோர் கொடுக்கும் ஊக்கம் எனக்கு மிகவும் மகிழ்ச்சியை தருகிறது. மிக்க நன்றி நண்பரே!

என்னது நானு யாரா? said...

@Phantom Mohan

உண்மை தான் நண்பரே! இன்றைய காலகட்டத்தில் மனுஷனுக்கு அதிகமான நெருக்கடிகள் இருக்கின்றன. நம் கைக்குள் என்ன அடங்குமோ, நம் சக்தியால் எது சாத்தியபடுமோ அந்த வழியை பின்பற்றி ஆரோக்கியமாக வாழவேண்டியது தான். வேறு வழி இருப்பதாக எனக்கு படவில்லை.

கருடன் said...

@Phantom Mohan
//விஜய் படத்துக்கு அடிச்சு புடிச்சு டிக்கட் வாங்கி ஒப்பனிங் சோ பார்த்திட்டு வந்து, இவன் திருந்த மாட்டாண்டா-ன்னு பொலம்புவது மாதிரி//

என்னயா ஒரே கோவமா இருக்க?? வீட்டு அம்மாகூட சண்டையா??

செல்வா said...

ஐயோ ..அந்த மாட்ட அப்படி போட்டு அருக்குறாங்க .. பாக்குறக்கே பயமா இருக்கு ,,

செல்வா said...

//அமெரிக்கர்கள் மட்டும் அவங்க சாப்பிடற மாமிச அளவில் வெறும் 10% குறைச்சிட்டாலே, உலகத்தில வருஷத்துக்கு உணவில்லாம சாகிற 60 மில்லியன் மனுஷங்களோட பட்டினியை திர்த்திட முடியுமாம்.
//

உண்மையாவா ..? நம்பவே முடியல ..?!?

Anonymous said...

hi pangaali,
ich bin da (i am present)
people who see these pictures never in their life go to meat section in markets.
keep it up .have a great day.nirmala.

சீனு said...

http://2.bp.blogspot.com/_i0SW9tJ0Ca4/TJIQaMNZ6QI/AAAAAAAAAzQ/5RjYgmkcmAM/s1600/16_09_2008_015_002.jpg

muba said...

உறவுகாரருக்கு வணக்கம்,

இரண்டவது நாளாக உங்களது ப்ளாக்-யை பார்க்க சந்தர்பம் கிடைத்தது, இந்த பதிவின் விமர்சனமாக நான் கொடுக்கும் இந்த இணையதளத்தின் பக்கத்தை படிக்கவும், நீங்கள் மட்டும் அல்ல இந்த ப்ளாக்-யை பார்பவர்கள் அனைவரும் பார்க்க படிக்க.
http://ottrumai.net/IslamicQA/7-EatingNonVeg.htm

muba

muba said...

Do you think this is the first time you and others seeing this picture of animals, if see no one eat non-veg???

what is this nirmala.

analys and comment. we cant tolally avoid non-veg

see my comment down.

muba

muba said...

உறவுகாரருக்கு வணக்கம்,
இந்த இனைய பக்கத்தையும் பார்க்குமாறு உங்களையும் இங்கு வருபவரையும் கேட்டுக்கொள்கிறேன்

http://ottrumai.net/IslamicQA/8-Slaughtering.ஹதம்

muba

மொக்கராசா said...

மூபா அவர்களுக்கு

உல்கத்தில் எந்த டாக்டர்-வது உங்கள் உடம்புக்கு முடியாமல் இருக்கும் போது non-veg, சாப்பிட சொன்னது உண்டா??

all doctors ask to take soft foods only (idly,dosa,fresh veg and leaves even if in foreign they ask to take veg salad/bread only)

sorry நண்பரே இந்த பதிவில் மதத்திற்கு இடமில்லை.

whatever explained in this blog it is for our peaceful/healthy life only.

it is depends upon your view whether you are taking/following or not

sorry sir என்னுடைய வார்த்தை உங்கள் மனதை புண் படுத்தியிருந்தால்

என்னது நானு யாரா? said...

@TERROR-PANDIYAN(VAS): பதிவை பற்றி கருத்து சொல்லாமல் நண்பரோட என்ன பேச்சி பங்காளி?

@ப.செல்வக்குமார்: இப்போ உணமை புரிஞ்சதா? இனி முடிவு உன் கையில

@Nirmala://people who see these pictures never in their life go to meat section in markets.//

உண்மை தான் நிர்மலா! உங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் சொல்லுங்கள். நன்றி!

Anonymous said...

dear brother muba .you have asked me to analyse and comment .thanks .i shouldve thought about everyother religion brothers sisters and their feelings.very sorry if my comment had wounded your feelings.my father had taught me to respect others feelings.i didnt mean to hurt any body .manniyungal sagodhara.unmaiyaga naan indha maadhiri pictures parthadhillai.

என்னது நானு யாரா? said...

@சீனு

நன்றி நண்பா! நீங்கள் இட்டு சென்ற லிங்கில் சென்று பார்த்தேன். விலங்குகளின் பண்ணைகளினால் எவ்வாறு புவி வெப்பமாவது அதிகரித்துள்ளது என்று தெளிவாக சொல்லி இருக்கிறார்கள்.

உங்களின் லிங்க் பலருக்கும் நிச்சயமாக பயன்படும்!

தெய்வசுகந்தி said...

உள்ளேன் அய்யா!!!
நான் 10 வயசுலயே அசைவம் சாப்பிடறத நிறுத்திட்டேன்!

என்னது நானு யாரா? said...

@muba

நண்பர் முபா! நீங்கள் இட்டு சென்ற லிங்கில் சென்று பார்த்தேன். முஸ்லீம்களின் நம்பிக்கையை பற்றி எழுதபட்டிருக்கிறது

நண்பர் சரவணக்குமார் நான் சொல்ல வந்த கருத்தை சொல்லிவிட்டார். அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்!

இங்கே இருக்கும் எல்லா பதிவுகளும் மனிதர்களின் உடல் மன ஆரோக்கியத்தை பற்றி சிந்திக்கும் பதிவுகள் தாமே. இதில் மத நம்பிக்கைகளுக்கு எந்த இடமும் இல்லை.

மனிதனின் சிந்தனைகள் உயர்ந்து தெய்வ நிலை அடையும் வழி சைவ உணவை பின்பற்றுவது தான் என்று என்னை போன்ற இயற்கை வாழ்வியலார் திடமாக நம்புகின்றோம்.

இப்போது அறிவியல் ஆராய்ச்சிகளும் எங்களின் நம்பிக்கைகளுக்கு துணை வருகின்றன.

உடல் நலன் கெடுப்பதில், அசைவ உணவு, மது, புகை என்று பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றை எல்லாம் தள்ளுங்கள்! ஆரோக்கியமாக இருங்கள் என்று சொல்லுகின்றேன்.

உங்களின் மத நம்பிக்கைகளை பற்றி நான் ஒன்றும் சொல்லவில்லை நண்பரே! உங்களுக்கு உங்களின் மத நம்பிக்கைகளை கடைப்பிடிப்பதில் முழு சுதந்திரம் இருக்கிறது.

முழுக்க முழுக்க ஆரோக்கியம், ஜீவகாருண்யம், சக மனிதர்கள் மீது அன்பு என்று தான் இந்த பதிவுகளில் சொல்லி இருக்கின்றேன்.

உங்களின் ஆரோக்கியமான கருத்து பரிமாற்றத்திற்கு நன்றி நண்பரே!

என்னது நானு யாரா? said...

@சரவணக்குமார்

நண்பரே! உங்களுக்கு Special Thanks சொல்லணும். நண்பர் மூபா அவர்களுக்கு நான் பதில் சொல்லும் முன்னே, நீங்கள் எனக்காக பதில் சொல்லிவிட்டீர்கள்.

என் எழுத்துக்களின் உள்ள நோக்கத்தை சரியாக புரிந்துக்கொண்டிருக்கிறீர்கள். அதற்காக நன்றிகள் பல! பல!

இங்கு எந்த மதத்தின் நம்பிக்களையும் பற்றி எதுவும் சொல்லபடவில்லை என்று தெளிவு படுத்தியுள்ளீர்கள். ஆரோக்கியமாக வாழ்வது, சகமனிதர்களுடன் அன்பை பரிமாறிக்கொண்டு வாழ்தல், ஆன்மீக சிந்தனைகளுடன் வாழ்தல் இயற்கை வாழ்வியல் சிந்தனைகள் கொண்டு சுற்றுபுறங்களையும் பாதுகாத்தபடி வாழ்தல்.

இவையெல்லாம் தான் நம்முடைய நோக்கங்கள். மறுபடியும் நன்றிகளை சொல்லிகொள்கின்றேன்.

என்னது நானு யாரா? said...

@தெய்வசுகந்தி

//நான் 10 வயசுலயே அசைவம் சாப்பிடறத நிறுத்திட்டேன்!//

ரொம்ப நல்ல விஷயம் செய்திருக்கிறீர்கள் தோழி! ஆரோக்கியமாக நீங்களும் உங்களின் குடும்பத்தாரும் சௌக்கியமாக இருப்பீர்கள்!

GSV said...

முதல்ல அந்த இரண்டு போடோவையும் எடும் பங்காளி... என்ன மாதிரி சின்ன பசங்க எல்லாம் வந்து பயந்துட போறாங்க.

Muruganandan M.K. said...

விரிவான தகவல்களுடன் சுவையான பதிவு. நன்றாக இருக்கிறது.

GoodJob said...

@Madhavan//நல்லா காமெடியா இருக்கு சார் நீங்க சொல்லுறது..
மக்கள்தொகை கூடத்தான் பெருகிகிட்டே வருது.. அதுக்காக, மனுஷங்களை எல்லாம் _____________?// பங்காளி நம்ம மனுச இனம் தோன்றத்துக்கு முன்னமே ஆடு மாடு...எல்லாம் இருந்துச்சி...அதுங்க இடத்தைத்தான் இப்ப மனுசன் அடைச்சிக்கிட்டு இருக்கான்....

என்னது நானு யாரா? said...

@GSV

//முதல்ல அந்த இரண்டு போடோவையும் எடும் பங்காளி... என்ன மாதிரி சின்ன பசங்க எல்லாம் வந்து பயந்துட போறாங்க.//

அண்ணா, நீங்க, உங்களை சின்ன பையன்னு, சொன்னதை நம்பிட்டேன்னா :-))

என்னது நானு யாரா? said...

@Dr.எம்.கே.முருகானந்தன்

உங்க வருகைக்கும், கருத்துக்கும் நன்றி நணபரே!

@கெட்டவன்:

//பங்காளி நம்ம மனுச இனம் தோன்றத்துக்கு முன்னமே ஆடு மாடு...எல்லாம் இருந்துச்சி...அதுங்க இடத்தைத்தான் இப்ப மனுசன் அடைச்சிக்கிட்டு இருக்கான்.//

உங்க கருத்தை ஏற்கிறேன் நண்பரே!

ப.கந்தசாமி said...

ஐம்பதாவது மேதையாகிய நான் சொல்வது என்னவென்றால் எனக்கு இந்த மேதைப்பட்டம் வேண்டாம்!

ப.கந்தசாமி said...

நல்ல தகவல்களைத் திரட்டியுள்ளீர்கள்.

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

வாவ்.. படங்களுடன்...நீங்க இவ்ளோ சொன்ன பிறகு... கண்டிப்பா யாராச்சும் வெஜிடேரியன் ஆக வாய்ப்பு இருக்குங்க.. நல்ல தகவல்கள்... படத்த பாத்தாலே...கொடுமையா இருக்கு...

என்னது நானு யாரா? said...

@DrPKandaswamyPhD

//ஐம்பதாவது மேதையாகிய நான் சொல்வது என்னவென்றால் எனக்கு இந்த மேதைப்பட்டம் வேண்டாம்!//

உங்க பேரில DrPKandaswamyPhD -ன்னு இருக்கே. நீங்க மறுத்திட்டா ஆச்சா? நாங்க, நீங்க வேணாம்னு சொன்னா கூட கொடுப்போமில!

உங்க பாராட்டுக்கு நன்றி ஐயா!

சிவராம்குமார் said...

என்னத்தை சொல்ல.... அங்கங்கே நல்லா மசாலா தடவி தொங்க விட்டுருக்கிரான்களே அதெல்லாம் நமக்கு கொடுக்கிற ஆப்பா! நாக்கை கண்ட்ரோல் பண்ண முடியலியே!!!!

என்னது நானு யாரா? said...

@Chittoor.S.Murugesan

வணக்கம் நண்பரே!

//பாஸ் !
கழுகு வலைச்சரத்துல வெளியான வல்லரசு கனவுகளை படிச்சு கமெண்ட் போட்டிருந்திங்க. அந்த திட்ட சுருக்கத்தையாச்சும் பத்து பேருக்கு ஷேர் பண்ணலாமே//

உங்களின் கருத்துக்கு மிக்க நன்றி! என்னுடைய எண்ணம், மனிதன் உடல் நலமும் மன நலமும் கொண்டு ஆன்மீக சிந்தனைகளை பெற்றால் தான் நாடு நன்றாக இருக்க முடியும். என்னுடைய வலைபக்கத்தில் "என்னை பற்றி இங்கே" என்று இருக்கும் பக்கத்தில் சென்று பாருங்கள். அதில் நான் தெளிவாக இதை பற்றி சொல்லி இருக்கின்றேன்.

இப்போது இருக்கும் சூழ்நிலையில் இன்னொரு முறை காந்தியே வந்தாலும், நாட்டுக்கு, அதிகமாய் நன்மை ஒன்றும் விளையாது என்றே எண்ணுகின்றேன்.

தொடர்ந்து என் வலைபக்கத்திற்கு வாருங்கள்! இயற்கை வாழிவியல், இயற்கை மருத்துவம், ஆன்மீக சிந்தனைகளை பற்றிய பதிவுகளை இடுகின்றேன். உங்களுக்கும், உங்களை போன்ற உங்களின் நண்பர்களுக்கும் பயணாக இருக்கும்.

நன்றி நண்பா!

என்னது நானு யாரா? said...

@Ananthi

//கண்டிப்பா யாராச்சும் வெஜிடேரியன் ஆக வாய்ப்பு இருக்குங்க.. நல்ல தகவல்கள்... படத்த பாத்தாலே...கொடுமையா இருக்கு.//

நானும் அந்த நம்பிக்கையில தான் இருக்கேன் ஆனந்தி!

@சிவராம்குமார்:

//அங்கங்கே நல்லா மசாலா தடவி தொங்க விட்டுருக்கிரான்களே அதெல்லாம் நமக்கு கொடுக்கிற ஆப்பா! நாக்கை கண்ட்ரோல் பண்ண முடியலியே!!//

உண்மையை ஒத்துக்கிட்டீங்களே! இதுவே உங்க மாற்றத்துக்கு ஒரு முதல் படி தான் நணபரே!

சௌந்தர் said...

எல்லா மதங்களும் அன்பா இரு! அஹிம்சையை கைகொள்ன்னு சொல்லுது. நாம சகமனுஷங்க கிட்ட அன்பா இருக்கணும்னா////

ரொம்ப சரியா சொன்னிங்க மாற முயற்சி செய்றோம் அந்த படங்களை பார்க்கவே முடியலை

Tirupurvalu said...

vasanth neega thappa sollaringa .Maadu panai vachu erukara edathula eppadi polution problem vaarum.Unga point non- veg not a foodukarathai othukaren but don't try to give wrong messages .Cattle 1,2 ellam natural fertilizer to agriculture field.If you need more details check natural fertilizers website.

என்னது நானு யாரா? said...

@Tirupurvalu

நண்பரே! நீங்கள் தங்கலீஷில் எழுதியதை தமிழில் கொடுத்திருக்கின்றேன்.

//வசந்த்! நீங்க தப்பா சொல்றீங்க .மாட்டு பன்னை வச்சி இருக்கிற எடதுல எப்படி Polution Problem வரும்.உங்க பாயின்ட் non-veg, not a food -என்கிறதை ஒத்துக்கிறேன். But don't try to give wrong messages. Cattle urine, and shit are all natural fertilizer to agriculture fields. If you need more details, check natural fertilizers websites.//

நண்பரே! என்னுடைய தவறை சுட்டி காட்டியதற்கு நன்றி! அது பண்ணகள் என்று தவறாக எழுதிவிட்டேன். பண்ணைகளுக்கு பதிலாக விலங்குகளை அறுக்கும் கூடங்கள் என்று மாற்றி படிக்குமாறு கேட்டு கொள்கின்றேன்.

மீண்டும் உங்களின் அக்கறைக்காக நன்றி!

என்னது நானு யாரா? said...

@சௌந்தர்

//ரொம்ப சரியா சொன்னிங்க மாற முயற்சி செய்றோம் அந்த படங்களை பார்க்கவே முடியலை//

மாற முயற்சி செய்கிறோம்..ஆஹா! ஆஹா! அருமை அருமை. நன்றி சௌந்தர்! கடவுள் உங்களுக்கு எல்லா ஆசிர்வாதங்களையும் அள்ளி கொடுப்பாராக!

கிறுக்கன் said...

அருமையான பகிர்வு நண்பா! உங்கள் வலை தலத்துக்கு நான் புதியவன்...முட்டை சைவமா அசைவமா? அதில் தாவரங்களில் இல்லாத சத்துக்கள் அல்லது பல தாவரங்களில் உள்ள சத்துக்கள் ஒரு முட்டையில் உள்ளதாக கூறுகிறார்கள்...உங்கள் கருத்து என்ன?இதை பற்றி நீங்கள் முன்பே உங்கள் பதிவில் விவாதித்திருந்தால் அறியா கிறுக்கனை மன்னியுங்கள்...

என்னது நானு யாரா? said...

@கிறுக்கன்

//முட்டை சைவமா அசைவமா? அதில் தாவரங்களில் இல்லாத சத்துக்கள் அல்லது பல தாவரங்களில் உள்ள சத்துக்கள் ஒரு முட்டையில் உள்ளதாக கூறுகிறார்கள்//

நண்பரே! இன்று மனிதனின் ஆரோக்கியத்தை பற்றி சிந்திப்பதை காட்டிலும் பணம் சம்பாதிப்பதே முக்கியமான ஒரு விஷயமாக இருக்கிறது.

http://johnny-ong.blogspot.com/2006/11/kfc-real-chicken.html

இந்த லிங்கில் சென்று பாருங்கள் கொடுமையை!

இறக்கை இல்லாத கோழிகளை செயற்கையாக உற்பத்தி செய்து உணவுக் கூடங்களுக்கு அனுப்புகிறார்களாம். முட்டை மாத்திரம் எம்மாத்திரம். அதிலும் பல விதமான ஹார்மோன்கள், மருந்துகள், இரசாயண உணவுகள் எல்லாம் கோழிகளுக்கு தீவினத்தோடு கலந்து கொடுக்கப்படுகின்றன.

என் கருத்து முழுதுமாக இந்த உணவுகளிலிருந்து தள்ளி நிற்பதே! இல்லாவிட்டாலும் மிகவும் குறைவாக வாரத்திற்கு ஒரு முறை என்று உண்ணலாம். வீட்டு கோழி முட்டை கிடைத்தால் உண்ணலாம் தவறில்லை. ஆனால் நம் சக்தியின் தேவைக்கு தகுந்த மாதிரி சாப்பிட்டுக் கொள்ளலாம்.

நண்பரே மன்னிப்பெல்லாம் என்ன! பெரிய வார்த்தைகளை பயன்படுத்துக்கின்றீர்!

கிறுக்கன் said...

@என்னது நானு யாரா?
நண்பரே நான் இதை முன்பே பார்த்திருக்கிறேன் எனக்கு தெரிந்து இது 1998 களிலேயே வெளியான நிரூபிக்க படாத Hoax

Anonymous said...

படங்கயே பதற வைக்குது..

அப்படியே நம்ம பக்கமும் வாங்கப்பு..

என்னது நானு யாரா? said...

@கிறுக்கன்

நண்பரே! அந்த கட்டுரையில் கீழே இருக்கும் லிங்கை ஆதாரமாக கொடுத்திருக்கிறார்கள்

http://www.newscientist.com/article/dn2307

New scientist என்பது நம்பகத்தன்மை கொண்ட ஒரு அறிவியல் பத்திரிக்கை தானே நண்பா?

எது எப்படியோ பணம் காசுக்காக பலவற்றையும் செய்ய துணிந்து விட்டனர் மனிதர்கள். நம் கண்ணுக்கு முன்னே வளரும் கோழிகளிலிருந்து கிடைக்கும் முட்டைகளை அளவுடன் சாப்பிட்டால் பிரச்சனை இல்லை.

இல்லையென்றால் யார் தான் நம்முடைய ஆரோக்கியத்திற்கு பொறுப்பு ஏற்றுக்கொள்ளப் போகிறார்கள்?

skm said...

நண்பர்களே, இந்தப் பதிவில் உள்ள படங்களையே பார்க்க முடியவில்லை என்று சொல்லுகின்றீர்களே. GOOGLE வீடியோ- EARTHLINGS ன்னு ஒரு டாக்கு மெண்டரி இருக்கு. அதை தயவு செய்து பாருங்கள். இதைப் பார்த்தல் அடுத்த நாளே நீங்கள் சைவத்திருக்கு மாறி விடுவீர்கள். இது எல்லோரும் பார்க்க வேண்டிய டாக்கு மெண்டரி.

என்னது நானு யாரா? said...

@skm

நண்பரே! உங்களின் அக்கறைக்கு நன்றி தெரிவித்துக்கொள்ளுகின்றேன். கண்டிப்பாக நேரம் இருக்கும் போது பார்க்கின்றேன்.

உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி!

நிகழ்காலத்தில்... said...

இது ஒரு பகிர்வு :)

அண்ணாமலை..!! said...

நானும் இந்த விசயத்துல உங்க ஃபாலோயர் தாங்க!

Abarna said...

ஹாய் நண்பா...
நான் ரொம்ப நாள் முன்னாலேயே சைவத்துக்கு மாறிட்டேன். உங்க ப்ளாக் ரொம்ப நல்லாருக்கு..

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

Post a Comment

பங்காளி! சரக்கு எப்படி? விக்குமா... விக்காதா...??? கொஞ்சம் சொல்லிட்டு போங்க!!!