பன்னீர் தெளிக்கிறோமில... ப்ளீஸ்... கொஞ்சம் தலை குனியுங்க...

வணக்கம் பங்காளீ! வாங்க, சவுக்கியங்களா? நம்ம வலைபதிவு பக்கம் வந்ததுக்கு நன்றீங்கோ...Get this Widget

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே! என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி! நண்பர்களே!

மனிதர்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் சிந்தனைகள், இங்கு சிதறிகிடக்கிறது. படித்து பார்த்து உங்கள் கருத்துக்களை இடவேண்டுகிறேன்!

தொடர்ந்து, இந்த வலைபதிவுக்கு உங்களின் ஆதரவை தாருங்கள்!!! நன்றி! தொடர்ந்து வருக!!!

இந்த நாள், உங்களுக்கு, இனிய நாளாக அமைவதாக!!!

பாசகார பங்காளி கூட்டமுங்க! நீங்களும் கூட வாறீகளா?

13-Sep-2010

காபி குடிக்கலைன்னா கையும் ஓடமாட்டேங்குது காலும் ஓடமாட்டேங்குது!


இந்த லஷ்மி எங்கே போய் தொலைஞ்சான்னு தெரியலையே?

ஏன் மாமி? என்ன ஆச்சி? வீட்டில நுழையும் போதே ஒரே புலம்பலா இருக்கே?

வாடி அம்மா ரமா! வா! நீயே நியாத்தை சொல்லு! இப்போ மணி என்னா ஆறதுன்னு பாரு! காலை 11 மணி ஆகுதில்ல! இந்த ஆத்து மாட்டுபொண்ணு லஷ்மி இருக்காளோ இல்லையோ! சித்த நாழி இருங்கோ மாமி! நான் கடைக்கு போயிட்டு வந்திடறேன்னு சொல்லிட்டு போனா! இன்னும் ஆளையே காணலை!

எனக்கானா 11 மணிக்கு காபி குடிக்கலைன்னா தலையே வெடிச்சிடும்னு நோக்கு தான் நல்லா தெரியுமே. சரி, நாமலே சமயகட்டுக்கில, காபி கலந்துக்கலாம்னா, நேக்கு வரவர சரியா கண்ணே தெரிய மாட்டேங்குறது!

அம்மணிகளா! காபியோட வில்லத்தனம் என்னான்னு
தெரியாமா சிரிச்சிகிட்டு இருக்கீங்க...

மாமி! சித்த இருங்கோ! உங்களுக்கு நான் காபி கலந்து எடுத்து வர்றேன்.

தேங்க்ஸ்டி ரமா! நீ நன்னா 100 வருஷம் சந்தோஷமா இருப்பே!

இந்தாங்கோ காபி! நீங்க என்ன சொன்னேள்? நான் 100 வருஷம் நல்லபடியா இருப்பேன்னு சொன்னேள் இல்லையா? அது பலிச்சிடும் மாமி!

ஏன்னா நான் கொஞ்ச நாளா, காபி, டீன்னு எதுவும் சாப்பிடறதில்லை பாத்துக்கோங்கோ!

நீங்களானா இப்படி அடிக்கடி காபி குடிச்சி உடம்பை கெடுத்துக்குறேள். அது குடிக்கிற காபியா இல்ல கடையில போடற xerox copy-யா மாமி? ஒன்னு பின்னால ஒன்னு உள்ளே தள்ளின்டே இருக்குறேளே? ஒரு நாளைக்கி எத்தனை முறை தான் காபி குடிப்பேள்? உங்க உடம்பு பாழாகுறது, உங்களுக்கு தெரியலையா மாமி?  

என்ன ரமா சொல்ற? எனக்கு ஒன்னும் விளங்கமாட்டேங்குது! சித்த விளக்கி சொன்னா தேவலை!

சரி சொல்றேன் கேளுங்கோ மாமி! காபி, டீ குடிக்கறவா எல்லாம் என்ன சொல்றா, காபி, டீ குடிச்சா, உடனே ஒரு புத்துணர்ச்சி வருதுன்னு சொல்றாளா இல்லையோ?

அதெல்லாம் காபி டீல இருந்து வர்றதில்லை மாமி! எல்லாம் நம்ப உடம்பில ஏற்கனவே சேர்த்து வெச்சிருக்கிற சக்தியில இருந்து வர்றது. இந்த பாணம் எல்லாம் அந்த சக்தியை தூண்டி விட்டு ஏதோ ஒரிஜினலாவே சக்தியை கொடுக்குற மாதிரி ஆக்டிங்க் கொடுக்குது!

இந்த சேர்த்து வெச்சிருக்கிற சக்தி எதுக்குன்னா, நாம ஏதாவது நோய்வாய் படும்போது, அதை எதிர்த்து போராடுறதுக்காக ஒரு முன்யோசனையோடு நம்ப உடம்பு சேர்த்து வெச்சிருக்கு! நியாயமா அதற்காக தான் பயன்படுணும். 

அந்த இருப்பிலேயே கையை வெச்சா, இது ஏதோ விதை நெல்லை சமைச்சி சாப்பிட்டானாம் ஒரு புத்தி கெட்டவன். அந்த கதை மாதிரி தான் இதுவும்.

நாளடைவில, நரம்பு தளர்ச்சி நோய், சீக்கிரமா முதுமை வர்றது, வயித்தில அசிடிட்டியை கூட்டுறதுன்னு ஏகபட்ட நோய்ங்க செட் சேர்ந்து நம்பளை தாக்க வந்திடும் மாமி! காபிலேயும் டீலேயும், Caffine என்கிற நச்சுபொருளும், Tannin என்கிற நச்சுபொருளும் இருக்காம். அதுங்க நமக்கு பல நோய்ங்களை பிரசண்ட் பண்ணாம நம்ப கிட்ட இருந்து போகாது தெரிஞ்சிகோங்கோ மாமி!

நம்ப எதிர்த்த வீட்டு கோமளா இருக்கா இல்லையா மாமி! அவளுக்கு ஏதோ தூரத்து உறவாம், பேரு கூட உங்க மகன் பேரு தானாம் வசந்த்ன்னு பேரு. உறவுகாரன்னு ஒரு வலைபதிவு ஆரம்பிச்சி இயற்கை வாழ்வியல், இயற்கை மருத்துவம் எல்லாம் எழுதினு வர்றாறாம்.

(மாமி! நம்பளை பத்தி தான் சொல்லிட்டு இருக்காங்கோ! கவனமா கேளுங்க! நானும் அவங்க என்ன சொல்றாங்கன்னு கேக்குறேன்)

அதில பால் ஏன் குடிக்க கூடாதுன்னு எழுதி இருக்காரு. நானும் படிச்சேன். (நீங்க படிக்கலையா அப்போ இங்கே அழுத்துங்க ) அன்னையில இருந்து பாலோ, பாலில இருந்து கிடைக்கிற பொருட்களோ தொடறதில்லை. காபி, டீ குடிக்கறதையும் விட்டாச்சி! அவரு எழுதினதை எல்லாம் பிரண்டஅவுட் எடுத்து வெச்சிருக்கேன். உங்களுக்கு சாயங்காளமா கொண்டு வந்து கொடுக்கிறேன் மாமி! நிதானமா படிச்சி பாருங்கோ.

ரமா, நீ சொல்றது வாஸ்தவமா இருக்கும்னு தான் தோனுது. ஆனா இந்த பழக்கத்தை லேசில விட முடியாதுடி! இந்த பழக்கத்துக்கு அடிமையானவங்களை நிறைய பேரை பாத்திருக்கேன் என் அனுபத்தில. ஆவாள் எல்லாம் இதை விட்டு வெளியே வர்றதுக்கு ரொம்ப சிரமம்ன்னு சொல்றா தெரியுமோ?

மாமி! கொஞ்ச காலத்துக்கு முந்தி, நானும் நீங்க சொல்றவங்கள்ல ஒருத்தியா தான் இருந்தேன். இப்போ பாத்தேளா? காபி டீயை விட்டபின்னாடி நான் எவ்வளவு தெம்போடு இருக்கேன். மனமிருந்தா மார்கம் உண்டுன்னு பெரியவா சும்மாவா சொல்லி இருக்கா?

உங்களுக்காக, காதி க்ராப்ட் கடையில இருந்து மூலைகை பாணம் பொடி வாங்கி வரசொல்றேன், என் ஆத்துகாரர்கிட்டே. காபி, டீக்கு பதிலா அந்த பொடியை சுடுதண்ணியில கலந்து சுவைக்கு வெல்லம் போட்டு குடிங்கோ மாமி! கொஞ்சம் கொஞ்சமா இந்த பழக்கத்தில இருந்து விடுபட்டிடலாம்.    

என்னமோடி அம்மா! நீ சொல்றதால கேக்குறேன். நீ சொல்ற மாதிரியே செய்து தான் பார்ப்போமே! உடம்பு ஆரோகியம் முக்கியமான விஷயம் தானே?

மாமி! காபி குடிக்கிறதை விட்டுட்டாங்க! ரொம்ப நல்ல விஷயம்! நண்பர்களே! இப்போ உங்க கதை என்ன? எப்போ இந்த பழக்கத்தை விடறதா இருக்கீங்க?

சும்மா கீழே கருத்து பெட்டியில சொல்லிட்டு போங்க!

30 மேதைங்க இதபத்தி என்ன சொன்னாங்கன்னா...:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

என்னது காபி குடிக்க கூடாதா. அட போங்க பாஸ். காபி குடிக்கலைன்னா எனக்கு அது வராதே!!!

என்னது நானு யாரா? said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா):

//அட போங்க பாஸ். காபி குடிக்கலைன்னா எனக்கு அது வராதே!!!//

அதுக்கு தான் நான் நிறைய வழிகள் சொல்லிட்டேனே. படிக்கலையா நீங்க! நம்ப பதிவிகள்லேயே டாப்பா இருக்குறது அது தானே!

அதை படிங்க முதல்ல! "அது வரறதுக்கு" என்ன செய்யணும்னு எழுதி இருக்கேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

என்ன பாஸ் படிக்காமல கமென்ட் போட்டேன் என்ன இருந்தாலும்...அது இருந்தாத்தான் இது வரும். ஹிஹி

என்னது நானு யாரா? said...

@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா):

உங்க உடம்பை அப்படி பழக்கி வைச்சிருக்கீங்க ரமேஷ்! காபியோட பாதிப்புகள், கொஞ்சம் வயசான பின்னாடி தான் தெரிய வரும்.

வருமுன் காப்போம்ன்னு தானே எல்லோரும் பேசுறாங்க!

அந்த விழுப்புணர்ச்சியை ஏற்படுத்த தானே இதை எழுதினேன்.

பரவாயில்லை! சிறுக சிறுக அந்த பழக்கத்தில இருந்து மீண்டு வாங்க! உங்க உடல்நலத்தில உங்களை காட்டிலும் அதிகமா அக்கறை இருக்கிறதால சொல்றேன் நண்பா! யோசிங்க! யோசிச்சி நல்ல முடிவா எடுங்க!

நான், காபி டீ எல்லாம் குடிச்சி 20 வருஷத்துக்கு மேல ஆகுது! அதனால எதுவும் முடியாதுன்னு இல்லை!

Chitra said...

அந்த இருப்பிலேயே கையை வெச்சா, இது ஏதோ விதை நெல்லை சமைச்சி சாப்பிட்டானாம் ஒரு புத்தி கெட்டவன். அந்த கதை மாதிரி தான் இதுவும்.

...... அவ்வ்வ்வவ்...... இம்பூட்டு விவரம் தெரியாமத்தான்!

வெறும்பய said...

மிகவும் உபயோகமுள்ள பதிவு.... நல்ல வேளை நமக்கு இந்த காபி குடிக்கிற பழக்கமெல்லாம் இல்ல...

சிங்கக்குட்டி said...

இதுக்குதான் நாங்க எப்பவும் பார்லி தண்ணி மட்டும்தான் குடிக்கிறது (ஆனா அத போய் பீர்ன்னு ஏன் தப்பா சொல்றாங்க)

என்னது நானு யாரா? said...

@Chitra: சரியா சொன்னீங்க அக்கா! சரியான தகவல்கள் தெரியாமத் தான் நாம ஆரோகியம் இல்லாம திண்டாடுறோம்.

ஆனா இப்போ Internet வசதி பெறுக ஆரம்பிச்சி இருக்கிறதால எல்லோருக்கும் தகவல்களை எளிமையா சொல்ல முடியுது. பலருக்கும் பயனான விஷயங்களை பகிர்ந்துகொள்ள முடிகிறது.

என்னது நானு யாரா? said...

@வெறும்பய: உங்களுக்கு காபி குடிக்கிற பழக்கம் இல்லைன்னு கேள்விபட்டு ரொம்ப சந்தோஷம் பங்காளி!

@சிங்கக்குட்டி://இதுக்குதான் நாங்க எப்பவும் பார்லி தண்ணி மட்டும்தான் குடிக்கிறது (ஆனா அத போய் பீர்ன்னு ஏன் தப்பா சொல்றாங்க)//

என்னது பீரா! கதையே கெட்டது போங்க சிங்ககுட்டி! பீர் குடிச்ச பின்னாடி எப்படி வேட்டைக்கு போகும் இந்த சிங்ககுட்டி தெரியலையே?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

thanks

மங்குனி அமைசர் said...

நம்ப எதிர்த்த வீட்டு கோமளா இருக்கா இல்லையா மாமி! அவளுக்கு ஏதோ தூரத்து உறவாம்,////

எவ்ளோ தூரம் இருக்கும் , சுமார் ஒரு 500 கிலோ மீட்டர் இருக்குமா ?

சார் உங்க பதிவ எல்லாம் கரக்க்டா படிச்சிடுவேன் , ஆனா கமன்ட் போடுறது இல்லை ஏன்னா? நீங்க சீரியஸா நல்ல விஷயங்கள் சொல்லிகிட்டு இருக்கீங்க , அதைபோய் கலைத்தால் நல்லா இருக்காது , நமக்கு கலாயிக்காமல் கமன்ட் போடா தெரியாதுஅதான்

Kousalya said...

//மாமி! காபி குடிக்கிறதை விட்டுட்டாங்க! ரொம்ப நல்ல விஷயம்! நண்பர்களே! இப்போ உங்க கதை என்ன? எப்போ இந்த பழக்கத்தை விடறதா இருக்கீங்க?//

காபிக்கும் எனக்கும் தூரம் ஜாஸ்திதான்...நல்ல தகவல்கள் தொடர்ந்து சொல்றீங்க...நன்றி.

என்னது நானு யாரா? said...

@மங்குனி அமைசர்: அமைச்சரே உங்க ஃஃபீலிங்க்ஸ்சை புரிஞ்சிகிட்டேன்.

நம்ப பதிவுகளை தொடர்ந்து படிப்பதை கேட்டு சந்தோஷம்.

உங்க ஆதரவு தொடரணும்னு கேட்டுகிறேன்.

என்னது நானு யாரா? said...

@Kousalya:

தோழி! நீங்களும் காபி குடிக்கிறதில்லையா? கேட்கிறதுக்கு சந்தோஷமா இருக்கு!

தொடர்ந்து நம்ப கடைக்கு வாங்கன்னு உங்களை கூப்பிடறேன்.

ப.செல்வக்குமார் said...

நாம முயற்சி செய்தால் விட்டுடலாம் ..!! நானும் முன்பெல்லாம் டீ அதிகமா குடிப்பேன் ..!! இப்ப டீ குடிக்கிறதே கிடையாது ..!! காபி குடிக்கறதையும் விடப் போறேன் ..!!

என்னது நானு யாரா? said...

@ப.செல்வக்குமார்:

//இப்ப டீ குடிக்கிறதே கிடையாது ..!! காபி குடிக்கறதையும் விடப் போறேன் ..!!//

ரொம்ப நல்ல முடிவு எடுத்திருக்கீங்க செல்வா! உங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்!!!

dr suneel krishnan said...

எனக்கு காபி ,டீ பழக்கம் இல்லை .ஆனாலும் வெறுப்பு எல்லாம் இல்லை , எப்போதவாது நண்பர்களின் வீட்டுக்கு சென்றால் அருந்துவேன் , என் அனுபவம் சற்று மிகையாக தெரியலாம் எனக்கு சாயங்காலம் அல்லது இரவு காபி , டீ குடித்தால் தூக்கம் வராது , :) கல்லூரியில் பரீட்சை காலங்களில் பெரிதும் உதவும் :)

தமிழ் உதயம் said...

காபி, டீ எல்லாமே நாமா ஏற்படுத்திகிட்ட பழக்கம் தானே. தேவை இல்லனா மாத்திக்கலாம்.

rajan said...

Some studies have shown that coffee may reduce the risk of type 2 diabetes. After analyzing data on 120,000 people over an 18-year period (1), researchers at Harvard have concluded that drinking 1 to 3 cups of caffeinated coffee each day can reduce diabetes risk by several percentage points, compared with not drinking coffee at all.

என்னது நானு யாரா? said...

@dr suneel krishnan:

//என் அனுபவம் சற்று மிகையாக தெரியலாம் எனக்கு சாயங்காலம் அல்லது இரவு காபி , டீ குடித்தால் தூக்கம் வராது , :) கல்லூரியில் பரீட்சை காலங்களில் பெரிதும் உதவும் :)//

நண்பரே! இது எல்லோருக்கும் ஏற்படும் அனுபவம் தான். அந்த பாணங்கள் உடலின் நரம்பு மண்டலத்தை தூண்டி விடுகிறது. அதனால் தூக்கம் வராமல் சில மணி நேரம் விழிப்போடு இருக்கும்படி ஆகிறது.

மாணவர்கள், கதாசிரியர்கள், கம்ப்யூட்டர் பணியாளர்கள் என்று Desk Work செய்பவர்கள் தங்களின் தூக்கத்தை விரட்ட இந்த பாணங்களை தானே நாடுகின்றனர்.

அதற்கு விலையாக தங்களின் ஆரோகியத்தை கொடுக்கிறார்கள்.

என்னது நானு யாரா? said...

@தமிழ் உதயம்:

//காபி, டீ எல்லாமே நாமா ஏற்படுத்திகிட்ட பழக்கம் தானே. தேவை இல்லனா மாத்திக்கலாம்//

உண்மை தான் தலைவரே! நாம் மனது வைத்து, அந்த பழக்கத்தில் இருந்து வெளியே வருவது தான் நல்லது. ஆனால் அதற்கு அடிமையானோர் தான் அதிகம்.

ஆரோக்கியம் பாதிக்கும் முன்னர் அவர்களாகவே மாறினால் நல்லது!

என்னது நானு யாரா? said...

@rajan:

//Some studies have shown that coffee may reduce the risk of type 2 diabetes. After analyzing data on 120,000 people over an 18-year period (1)/

நண்பரே! உங்களின் கருத்துக்கு முதலில் நன்றி!

நீங்கள் சொல்லி இருப்பது புதிய தகவலாக உள்ளது. ஆனால் இயற்கை வாழ்வியல் முறை, செயற்கையான பாணங்கள் நம் உடம்பிற்கு கெடுதல் செய்கின்றன என்றே நம்புகின்றது. நானும் அதனை ஏற்றுகொள்கின்றேன்.

நானும், என்னை போன்ற இயற்கை வாழ்வியல் ஆர்வலர்களும் இதுபோன்ற பாணங்களை குடிப்பதில்லை. எந்த வித நோய் இல்லாமல் ஆரோகியமாக இருக்கின்றோம்.

ஏன் மற்றவர்களின் ஆராய்ச்சியை பற்றி கவலை படவேண்டும். நீங்களே சொந்தமாக ஆராய்ச்சி செய்து பார்க்கலாமே!

ஒரு 4 மாத காலம் காபி, டீ என்று செயற்கை பாணங்களை விட்டு இயற்கை பாணங்களை குடித்து 4 மாத காலம் கழித்து எது உங்களுக்கு ஏற்புள்ளதாக இருந்தது என்று அறிந்து கொள்ளலாமே!

இயற்கை வாழ்வியல் நோயிலிருந்து மனிதனை விடுவிக்கிறது, ஆரோகியத்தை கொடுக்கிறது. இது தான் என்னை போன்றோரின் அனுபவமாக உள்ளது.

Gayathri said...

haiyya enakku coffee kudikkum pazhakkameilla thapichchen

நாஞ்சில் பிரதாப் said...

என்னது காப்பி, டீ குடிக்காம இருக்கறதா... நெவர்....

இருங்க ஒரு டீ சாப்பிட்டு வந்தடறேன்...:)

என்னது நானு யாரா? said...

@Gayathri: நீங்க பாஸ் ஆயிட்டீங்க! வாழ்த்துக்கள்

@நாஞ்சில் பிரதாப்:

//என்னது காப்பி, டீ குடிக்காம இருக்கறதா... நெவர்....

இருங்க ஒரு டீ சாப்பிட்டு வந்தடறேன்...:)///

சரி தலைவரே! இப்போ காபி, டீ குடிச்சிக்கோங்கோ!

மாமிக்கு ஒரு நல்ல நேரம் வந்ததால விட்டுட்டாங்கோ! அதேபோல உங்களுக்கும் ஒரு நல்ல நேரம் வரும்போது விட்டா போகுது! என்ன நான் சொல்றது?

எஸ்.கே said...

பால் கலக்காத கருப்பு காபி டீ குடிக்கலாமா?(ஏன்னா இது நல்லதுன்னு அலோபதில சொல்றாங்க)

எனக்கு தெரிந்து காபி, டீ குடிப்பது போதைப் பழக்கம்போல் ஆகி விட்டது. ஏன் எதுக்குன்னே தெரியாம டைமுக்கு குடிக்கணும். மனசு வெச்சா விடலாம்.

இதற்கு மாற்று (நீராகரம்(காலையில்), பழச்சாறு(மதியம்), சூப்(மாலை)) சரியா?

தப்பா இருந்தா சொல்லுங்க நண்பரே!

கபீஷ் said...

ரொம்ப கஷ்டப்பட்டு காஃபி டீ குடிக்கறத சில மாசமா விட்டுருக்கேன். உங்க எல்லா இடுகைகளும் நல்லாருக்கு, உரையாடலை விட நேரடியா தகவல் சொல்றது தான் நல்லாருக்கு(கருத்து சொல்லுங்கனு கேட்டதால)

என்னது நானு யாரா? said...

@எஸ்.கே:

//பால் கலக்காத கருப்பு காபி டீ குடிக்கலாமா?(ஏன்னா இது நல்லதுன்னு அலோபதில சொல்றாங்க)//

நண்பரே! அலோபதியில எதைதான் சொல்லல! வைன், பீர் குடிச்சா கூட நல்லது, பால் குடிச்சா நல்லது, முட்டை சாப்பிட்டா நல்லது, மாமிசத்தை அளவா சாப்பிட்டா நல்லது... இப்படி பல ஆராய்ச்சி முடிகள்னு அடிக்கடி வெளியிட்டுகிட்டே தானே இருக்காங்க!

நாமலே நம்ப உடமை வைச்சி ஆராய்ச்சி செய்துகலாம். நான் அப்படி தான் செய்றேன். அதனால் Authentic -ஆ எது நல்லது எது கெட்டதுன்னு நாமலே முடிவு செய்துக்கலாம். ராஜன் அவர்களுக்கு கொடுத்திருக்கிற பதிலையும் சேர்த்து படியீங்க!

//இதற்கு மாற்று (நீராகரம்(காலையில்), பழச்சாறு(மதியம்), சூப்(மாலை)) சரியா?//

ரொம்ப சரியா சொல்லிட்டீங்க! அப்புறம் எதுக்கு டவுட் உங்களுக்கு? நீங்க சொல்றதை கடைபிடிச்சா ஆரோகியத்துக்கு நல்லது நண்பரே!

என்னது நானு யாரா? said...

@கபீஷ்:

//உரையாடலை விட நேரடியா தகவல் சொல்றது தான் நல்லாருக்கு(கருத்து சொல்லுங்கனு கேட்டதால)//

நன்றி கபீஷ்! உங்க கருத்தை கவனத்தில வைச்சிருப்பேன்.

Anonymous said...

Go Vegan... God bless...!

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

Post a Comment

பங்காளி! சரக்கு எப்படி? விக்குமா... விக்காதா...??? கொஞ்சம் சொல்லிட்டு போங்க!!!