இந்த லஷ்மி எங்கே போய் தொலைஞ்சான்னு தெரியலையே?
ஏன் மாமி? என்ன ஆச்சி? வீட்டில நுழையும் போதே ஒரே புலம்பலா இருக்கே?
வாடி அம்மா ரமா! வா! நீயே நியாத்தை சொல்லு! இப்போ மணி என்னா ஆறதுன்னு பாரு! காலை 11 மணி ஆகுதில்ல! இந்த ஆத்து மாட்டுபொண்ணு லஷ்மி இருக்காளோ இல்லையோ! ‘சித்த நாழி இருங்கோ மாமி! நான் கடைக்கு போயிட்டு வந்திடறேன்னு’ சொல்லிட்டு போனா! இன்னும் ஆளையே காணலை!
எனக்கானா 11 மணிக்கு காபி குடிக்கலைன்னா தலையே வெடிச்சிடும்னு நோக்கு தான் நல்லா தெரியுமே. சரி, நாமலே சமயகட்டுக்கில, காபி கலந்துக்கலாம்னா, நேக்கு வரவர சரியா கண்ணே தெரிய மாட்டேங்குறது!
![]() |
| அம்மணிகளா! காபியோட வில்லத்தனம் என்னான்னு தெரியாமா சிரிச்சிகிட்டு இருக்கீங்க... |
மாமி! சித்த இருங்கோ! உங்களுக்கு நான் காபி கலந்து எடுத்து வர்றேன்.
தேங்க்ஸ்டி ரமா! நீ நன்னா 100 வருஷம் சந்தோஷமா இருப்பே!
இந்தாங்கோ காபி! நீங்க என்ன சொன்னேள்? நான் 100 வருஷம் நல்லபடியா இருப்பேன்னு சொன்னேள் இல்லையா? அது பலிச்சிடும் மாமி!
ஏன்னா நான் கொஞ்ச நாளா, காபி, டீன்னு எதுவும் சாப்பிடறதில்லை பாத்துக்கோங்கோ!
நீங்களானா இப்படி அடிக்கடி காபி குடிச்சி உடம்பை கெடுத்துக்குறேள். அது குடிக்கிற காபியா இல்ல கடையில போடற xerox copy-யா மாமி? ஒன்னு பின்னால ஒன்னு உள்ளே தள்ளின்டே இருக்குறேளே? ஒரு நாளைக்கி எத்தனை முறை தான் காபி குடிப்பேள்? உங்க உடம்பு பாழாகுறது, உங்களுக்கு தெரியலையா மாமி?
என்ன ரமா சொல்ற? எனக்கு ஒன்னும் விளங்கமாட்டேங்குது! சித்த விளக்கி சொன்னா தேவலை!
சரி சொல்றேன் கேளுங்கோ மாமி! காபி, டீ குடிக்கறவா எல்லாம் என்ன சொல்றா, காபி, டீ குடிச்சா, உடனே ஒரு புத்துணர்ச்சி வருதுன்னு சொல்றாளா இல்லையோ?
அதெல்லாம் காபி டீல இருந்து வர்றதில்லை மாமி! எல்லாம் நம்ப உடம்பில ஏற்கனவே சேர்த்து வெச்சிருக்கிற சக்தியில இருந்து வர்றது. இந்த பாணம் எல்லாம் அந்த சக்தியை தூண்டி விட்டு ஏதோ ஒரிஜினலாவே சக்தியை கொடுக்குற மாதிரி ஆக்டிங்க் கொடுக்குது!
இந்த சேர்த்து வெச்சிருக்கிற சக்தி எதுக்குன்னா, நாம ஏதாவது நோய்வாய் படும்போது, அதை எதிர்த்து போராடுறதுக்காக ஒரு முன்யோசனையோடு நம்ப உடம்பு சேர்த்து வெச்சிருக்கு! நியாயமா அதற்காக தான் பயன்படுணும்.
அந்த இருப்பிலேயே கையை வெச்சா, இது ஏதோ விதை நெல்லை சமைச்சி சாப்பிட்டானாம் ஒரு புத்தி கெட்டவன். அந்த கதை மாதிரி தான் இதுவும்.
நாளடைவில, நரம்பு தளர்ச்சி நோய், சீக்கிரமா முதுமை வர்றது, வயித்தில அசிடிட்டியை கூட்டுறதுன்னு ஏகபட்ட நோய்ங்க செட் சேர்ந்து நம்பளை தாக்க வந்திடும் மாமி! காபிலேயும் டீலேயும், Caffine என்கிற நச்சுபொருளும், Tannin என்கிற நச்சுபொருளும் இருக்காம். அதுங்க நமக்கு பல நோய்ங்களை பிரசண்ட் பண்ணாம நம்ப கிட்ட இருந்து போகாது தெரிஞ்சிகோங்கோ மாமி!
நம்ப எதிர்த்த வீட்டு கோமளா இருக்கா இல்லையா மாமி! அவளுக்கு ஏதோ தூரத்து உறவாம், பேரு கூட உங்க மகன் பேரு தானாம் வசந்த்ன்னு பேரு. உறவுகாரன்னு ஒரு வலைபதிவு ஆரம்பிச்சி இயற்கை வாழ்வியல், இயற்கை மருத்துவம் எல்லாம் எழுதினு வர்றாறாம்.
(மாமி! நம்பளை பத்தி தான் சொல்லிட்டு இருக்காங்கோ! கவனமா கேளுங்க! நானும் அவங்க என்ன சொல்றாங்கன்னு கேக்குறேன்)
அதில பால் ஏன் குடிக்க கூடாதுன்னு எழுதி இருக்காரு. நானும் படிச்சேன். (நீங்க படிக்கலையா அப்போ இங்கே அழுத்துங்க ) அன்னையில இருந்து பாலோ, பாலில இருந்து கிடைக்கிற பொருட்களோ தொடறதில்லை. காபி, டீ குடிக்கறதையும் விட்டாச்சி! அவரு எழுதினதை எல்லாம் பிரண்டஅவுட் எடுத்து வெச்சிருக்கேன். உங்களுக்கு சாயங்காளமா கொண்டு வந்து கொடுக்கிறேன் மாமி! நிதானமா படிச்சி பாருங்கோ.
ரமா, நீ சொல்றது வாஸ்தவமா இருக்கும்னு தான் தோனுது. ஆனா இந்த பழக்கத்தை லேசில விட முடியாதுடி! இந்த பழக்கத்துக்கு அடிமையானவங்களை நிறைய பேரை பாத்திருக்கேன் என் அனுபத்தில. ஆவாள் எல்லாம் இதை விட்டு வெளியே வர்றதுக்கு ரொம்ப சிரமம்ன்னு சொல்றா தெரியுமோ?
மாமி! கொஞ்ச காலத்துக்கு முந்தி, நானும் நீங்க சொல்றவங்கள்ல ஒருத்தியா தான் இருந்தேன். இப்போ பாத்தேளா? காபி டீயை விட்டபின்னாடி நான் எவ்வளவு தெம்போடு இருக்கேன். ‘மனமிருந்தா மார்கம் உண்டுன்னு’ பெரியவா சும்மாவா சொல்லி இருக்கா?
உங்களுக்காக, காதி க்ராப்ட் கடையில இருந்து மூலைகை பாணம் பொடி வாங்கி வரசொல்றேன், என் ஆத்துகாரர்கிட்டே. காபி, டீக்கு பதிலா அந்த பொடியை சுடுதண்ணியில கலந்து சுவைக்கு வெல்லம் போட்டு குடிங்கோ மாமி! கொஞ்சம் கொஞ்சமா இந்த பழக்கத்தில இருந்து விடுபட்டிடலாம்.
என்னமோடி அம்மா! நீ சொல்றதால கேக்குறேன். நீ சொல்ற மாதிரியே செய்து தான் பார்ப்போமே! உடம்பு ஆரோகியம் முக்கியமான விஷயம் தானே?
மாமி! காபி குடிக்கிறதை விட்டுட்டாங்க! ரொம்ப நல்ல விஷயம்! நண்பர்களே! இப்போ உங்க கதை என்ன? எப்போ இந்த பழக்கத்தை விடறதா இருக்கீங்க?
சும்மா கீழே கருத்து பெட்டியில சொல்லிட்டு போங்க!

