பன்னீர் தெளிக்கிறோமில... ப்ளீஸ்... கொஞ்சம் தலை குனியுங்க...

வணக்கம் பங்காளீ! வாங்க, சவுக்கியங்களா? நம்ம வலைபதிவு பக்கம் வந்ததுக்கு நன்றீங்கோ...Get this Widget

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே! என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி! நண்பர்களே!

மனிதர்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் சிந்தனைகள், இங்கு சிதறிகிடக்கிறது. படித்து பார்த்து உங்கள் கருத்துக்களை இடவேண்டுகிறேன்!

தொடர்ந்து, இந்த வலைபதிவுக்கு உங்களின் ஆதரவை தாருங்கள்!!! நன்றி! தொடர்ந்து வருக!!!

இந்த நாள், உங்களுக்கு, இனிய நாளாக அமைவதாக!!!

பாசகார பங்காளி கூட்டமுங்க! நீங்களும் கூட வாறீகளா?

3 Sept 2010

பால் சரியான உணவு இல்லைங்க. வேண்டாங்க ப்ளீஸ்... பாகம் 2

பால் எவ்வளவு கெடுதல் செய்யுதுன்னு நாம, முதல் பாகத்தில கொஞ்ச விஷயங்களை பாத்தோமில்ல! இப்போ அதனுடைய தொடர்ச்சி...

இதனுடைய முதல் பாகம் படிக்க இங்கே அழுத்தவும்!

வாங்க பேசலாம் வாங்க! வந்து குந்தணும் நீங்க!
பங்காளி கூட்டங்க நாம! பன்புள்ள கூட்டங்க நாம!
நல்லதை சிந்திப்பது நம்ப வழக்கம்
நல்லதை செய்றதும் நம்ப பழக்கம்!

வாங்க பேசலாம் வாங்க! பங்காளிகளே! வாங்க பேசலாம் வாங்க!

எல்லோரும் வந்திட்ட மாதிரி இருக்கு. அப்போ கச்சேரிய ஆரம்பிச்சிட வேண்டியது தானே பங்காளி?

பால் நம்ப உடல் ஆரோகியத்துக்கு எப்படி கெடுதலா இருக்குன்னு பாத்தோமில்லையா?
பாலை தொடர்ந்து சாப்பிட்டா...அப்புறம் போகணும் இங்கே...
இதில அடுத்த விஷயம் என்னான்னா, இதை கேட்டால் நிறைய பேர்களுக்கு ஷாக்கிங்கா கூட இருக்கும். உங்களுக்கு எப்படி இருந்ததுன்னு அப்புறமா சொல்லுங்க!   

பங்காளி! எல்லோரும் பாலை பத்தி என்னா நினைச்சிருக்காங்கன்னா, பால் ஒரு சைவ உணவு(!!!) அது கடவுளுக்கும் ஏத்ததுன்னு தப்பா நினைச்சிருக்காங்க. நான் சொல்றேன்! பால் சைவத்தை சேர்ந்ததே கிடையாது தெரியுமா? மாட்டு மாமிசத்தில எந்த விதமான, செல்கள், மூலகூறுகள் அமைப்பு இருக்குமோ, எல்லாமுமே பாலில அப்படியே xerox copy போட்ட மாதிரி, அச்சு அசல் அப்படியே இருக்காம். மாமிசம் சாப்பிடறதும், இந்த பால் குடிக்கிறதும் ஒன்னுதானாம். ஒரு பிராணியோட, ரத்தம், ஹார்மோன்கள் மூலமா கிடைக்கிற பால் எப்படி பங்காளி சைவ உணவா இருக்க முடியும்? நல்ல Logic இல்ல!

இது இயற்கை தானே! மாட்டு உடம்புல இருந்து வர்ற பாலு, மாட்டோட மாமிச தன்மையில தானே இருக்கும். (அடடா! நீங்களும் என் அளவுக்கு அறிவாளியா மாறிகிட்டு இருக்கீங்களே! Great தான் போங்க!)   

இதை தெரிஞ்சு தான் ஜெயினர்கள் பாலை தொடமாட்டாங்க, தெரியுமா உங்களுக்கு?

இப்போ சொல்லுங்க! சுத்த ஆச்சாரமானவங்க,  சைவத்தை கடைபிடிக்கிறதை தங்களோட உயிரை விட மேலா நினைக்கிறவங்க இந்த தப்பை செய்யலாமா? கடவுளுக்கு அபிஷேகம் செய்றேன்னு சொல்லி அசைவ பொருளான பாலில அபிஷேகம் செய்யலாமா?

அதுமட்டும் இல்ல! பால் ஒரு சாத்வீக உணவு இல்ல. காம இச்சையை தூண்டி மனசை அலைபாய செய்யுது. இப்போ புரிஞ்சிருக்கும் இல்ல ஏன் முதல் இரவு சீன்ல எல்லா பெண்களும் பால் சொம்போடு முதலிரவு அறைக்குள்ள போறாங்கன்னு?

புரிஞ்சுதா பங்காளி! ஆன்மீக சாதகம் செய்றவங்க இந்த பாலை தொடாம இருக்கிறதே ரொம்ப நல்லது!

ரொம்ப முக்கியமான விஷயம் ஒன்னை சொல்ல மறந்திட்டேனே! இயற்கை சிகிச்சை மருத்துவமனைகள்ல, சளி, இருமல், மூக்கடைப்பு, ஆஸ்துமா, வீஸிங், ஈஸ்மோபீலியா போல பல வியாதிங்களால பாதிக்கபட்டவங்களுக்கு பால் இல்லாத பச்சை காய்கறிங்க, பழங்கள்ன்னு இயற்கை உணவுகளை தான் 1 வாரம், பத்து நாள்ன்னு தருவாங்க. அப்போ பாக்கணுமே அதிசயத்தை! எவ்வளவு சீக்கிரம் அவங்க குணம் ஆகுறாங்க என்கிறதை அவங்களாலேயே நம்ப முடியாது!

பங்காளி! சளி, ஆஸ்துமா போல கபம் சம்பந்தபட்ட நோய்ங்களுக்கும் பாலுக்கும் கெட்டியான ஜென்ம பந்தமுங்க! பாலு இந்த நோய்களுக்கெல்லாம் சூப்பர் சப்போர்ட்டுங்க. இவங்க கூட்டனியே பெரிய வெற்றி கூட்டனிங்க! உலகத்திலேயே, தொகுதி உடன்படிக்கைகள்ல சண்டை வராத கூட்டனி இவங்களுடையது மட்டும் தானுங்க.

என்னோட அப்பாவுக்கு அதிகமா கபம் கட்டும். அடிக்கடி இருமல், சளி, அஜீரணம், வாயு தொல்லைன்னு அவரை பாடாபடுத்திடும். இந்த இயற்கை மருத்துவ முறையை தெரிஞ்ச பின்னாடி அவரு பாலை பயன்படுத்தமாட்டாரு.

இப்போ அந்த நோய்ங்க எல்லாம் இருந்த இடமே தெரியல. உங்களுக்கோ இல்ல உங்களுக்கு தெரிஞ்சவங்க யாருக்காவது கபம் சம்பந்தமா நோய்கள் இருந்தா, பால் பயன்படுத்தறதை நிறுத்தி பாருங்க. ஒரு 1 வாரத்திலேயே உடம்புல எந்த மாதிரி மாற்றம் தெரியுதுன்னு அப்புறமா எனக்கு ஈமெயில் அனுப்புங்க!

கடைசி பாயிண்ட் ஒன்னு இருக்கு, சொல்றேன் கேளுங்க! பால் ஆரோகியத்துக்கு முக்கியமானதுன்னு நினைக்கிற மக்கள்னால, நாட்டில மாடுங்களோட எண்ணிக்கை பெருகிடிச்சிங்க! செயற்கையா மாடுங்களோட எண்ணிக்கையை அதிகம் படுத்தறாங்க, அதனால எந்த மாதிரி விளைவுகள் விளையும்ங்கிறதை பத்தி, கவலை படாம!

ஒரு மாடு, 20 மனுஷங்க சாப்பிடற அளவுக்கு தீனியை திண்ணும் தெரியுமா?

மாடுங்களோட தேவைக்காக, தானியம் விளைய வேண்டிய நிலமெல்லாம் புல் விளையற நிலமா காட்சி தருது. மாடுங்களால தாவரவினங்கள், காடுங்க எல்லாம் ரொம்ப சீக்கிரம் அழிஞ்சிட்டு வருது. நீரோட தேவையும் அதிகமாகி நீர் ஆதாரங்கள் எல்லாம் சீக்கிரம் வறண்டு போகுற சூழ்நிலை ஏற்பட்டு இருக்கு.

பாலு சரியில்லைன்னு சொல்றீங்க! சரி, பாலுக்கு சம்மா சத்தை கொடுக்கிற மாற்று என்னான்னு சொல்லனுமா இல்லையா?

அதுக்கு மாற்று, தேங்காயை தண்ணி சேர்த்து அரைச்சி, வடிகட்டி எடுக்கிற தேங்காய் பாலை பயண்படுத்தலாம். இது மாட்டுபாலை விட சத்து நிறைந்சது. சுவைக்கு தேன், வெல்லம், பேரிச்சை சாறு சேர்க்கலாம். உடம்புக்கு நல்ல நோய் எதிர்ப்பு சக்தியை தருமுங்க.

இதை சாப்பிட்டு வந்தா, ஆஸ்துமா, சளி, இருமல் எல்லாம் போயிந்தே, போயேபோச்சு, சோலிகாச்சு, கதம் ஹோகயா!

இதே போல முளைவிட்ட தானியங்களை, வெயில்ல நல்லா காயவெச்ச பின்னாடி அரைச்சி வைச்சிகலாம். தேவையான சமயத்தில 1 டம்லர் தண்ணியில 1 ஸ்பூன் மாவை போட்டு கரைச்சி சூடு பண்ணி சாப்பிடலாம். சுவைக்கு மேல சொன்ன ஐட்டங்கள்ல ஏதாவதை சேர்த்துகலாம். காபி டீக்கு அடிமையானவர்கள், இதையே காபி, டீக்கு மாற்றாக எடுத்துகொள்ளலாம். சுக்கு பாணமோ அல்லது மூலிகை பாணமோ எடுத்துகொள்ளலாம் (நாட்டு மருந்து கடைகளிலும், காதிகிராப்ட் கடைகளிலும் கிடைக்கிறது)

கால்ஷியம பற்றாகுறை வந்திடுமேன்னு பயப்படுறவங்களுக்கு ஒரு விஷயம் சொல்றேனுங்க. நீங்க சைவ உணவு முறையை Follow செய்றவங்களா இருந்தா, கீரைகள், பச்சைகாய்கறி சேலட், தானியங்கள்ல, பழங்கள்ல, பாதம், முந்திரி போல இருக்கும் கொட்டைகள்ல நமக்கு வேண்டிய சத்து கிடைக்கிறது.

அசைவம் சாப்பிடறவங்களா இருந்தா நீங்க மீனை சாப்பிடலாம்.

உங்களை யோசனை செய்ய வெச்சிட்டேன்னு நினைக்கிறேன். அது போதுங்க எனக்கு!

யோசிங்க நண்பர்களே யோசிங்க! யோசிச்சி நல்ல முடிவா எடுங்க! நீங்க எல்லாம் நம்ப உறவுகாரங்க இல்ல! அப்போ நல்ல முடிவா தான் எடுப்பீங்கன்னு நம்பறேன். 

44 மேதைங்க இதபத்தி என்ன சொன்னாங்கன்னா...:

ஜெயந்த் கிருஷ்ணா said...

இதில இவ்வளவு விஷயம் இருக்கா.. பகிர்ந்தமைக்கு நன்றி பங்காளி...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

sorry for the english typing. good news for all. kalakkunga pankaali...

ramalingam said...

பங்கை அளிப்பவன் பங்காளி. பகிர்ந்து அளிப்பவன் பகிராளி. முட்டையாவது சாப்பிடலாமா கூடாதா என்று விளக்கவும்.

என்னது நானு யாரா? said...

@வெறும்பய: உங்க பாராட்டுக்கு நன்றி நண்பரே!

@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா): பங்காளி! உங்க பாராட்டுக்கு நன்றி. இந்த விஷ்யங்களை தேவைபடுறவங்களுக்கு சொல்லுங்க!

குறைஞ்சபச்சம் கபம் சம்பந்த பட்ட நோய்களால கஷ்டபடற ஜனங்களுக்கு இந்த விவரம் தெரிய வந்தா எவ்வளவு சந்தோஷ படுவாங்க!

Chitra said...

அசைவம் சாப்பிடறவங்களா இருந்தா நீங்க மீனை சாப்பிடலாம்.


.....மீனு தப்பிச்சுடுச்சு...... ஓகே! என்சாய்.......!!!

என்னது நானு யாரா? said...

@ramalingam:

//பங்கை அளிப்பவன் பங்காளி. பகிர்ந்து அளிப்பவன் பகிராளி.//

பங்காளி! சூப்பரு! நீங்களும் பாட்டாவே படிச்சிட்டீங்களா? நல்லா இருக்கு

//முட்டையாவது சாப்பிடலாமா கூடாதா என்று விளக்கவும்.//

என் கருத்து என்னான்னா, தாவர உணவு தான் நோய் தராத உணவு. ஆனா மனுஷன் டேஸ்ட்டுக்கு அடிமையாகிட்டானே! அதனால அந்த அடிமை தனத்தில இருந்து ஆன்மீக பாதைவழியா வெளியே வருகிற வரைக்கும் அவன் நாக்குக்கும் கொஞ்சம் டேஸ்ட் ரூபமா தீனி போடட்டுமே!

கறி, மீன், முட்டை, நண்டு, இறால்ன்னு உங்க டேஸ்ட்டுக்கு என்ன பிடிக்குமோ சாப்பிடுங்க. ஆனால் அதெல்லாம் ஆரோகியம் இல்லாத உணவுன்னு தெரிஞ்சிகோங்க.

அளவா வெச்சிக்கோங்க! ஆன்மீக பாதையில் நடக்கிற கால்த்திலேயோ, இல்லன்னா நோய்ங்க வந்து டாக்டர் சொல்றாருன்னு கட்டாயத்தின் பேரிலேயோ அவைகளை விடவேண்டி வரும். அப்போ அவைகளை தவிர்த்து விடுங்கள். ஆனால் அவ்வளவு தூரம் போகணுமான்னு பாத்துக்கோங்க.

உங்க ஆரோகியம் அது உங்க உரிமை!
நீங்க அனுபவிக்க நினைப்பது உங்க சுதந்திரம்!
எது எதனை வெல்லுமோ, அதன்படி தான் நீங்க நடப்பீங்க!
இதில அந்த கடவுளே சொன்னா கூட உங்களாலே தடுத்து நிறுத்த முடியாது.

என்னது நானு யாரா? said...

@Chitra:

//.....மீனு தப்பிச்சுடுச்சு...... ஓகே! என்சாய்.......!!!//

ஓகே என்ஜாய்! நானும் சியர்ஸ் சொல்றேன் அக்கா!

ஆனா ராமலிங்கம் கேள்விக்கு கொடுத்திருக்கிற பதிலையும் படிச்சிடுங்க. அப்புறம் ஏன் தம்பி எனக்கு இதை முதல்லேயே சொல்லலன்னு நீங்க கோபபட கூடாது பாருங்க...

Kousalya Raj said...

இன்றுதான் உங்கள் தளம் வருகிறேன். வித்தியாசமான தகவல்கள் ஆனால் பயனுள்ளவைகள். நீங்க இங்கே குறிப்பிட்டுள்ள முளைவிட்ட தானியங்கள் சேர்த்து அரைத்த சத்துமாவு தான் எங்கள் வீட்டில் எப்போதும்... அதனுடன் இன்னும் 18 வகைகள் சேர்க்கப்பட்டு அரைத்து வைத்து இருக்கிறேன். காபி, டீ, ஹார்லிக்ஸ், பூஸ்ட் இந்த மாதிரி எதுவும் வீட்டில் கிடையாது. எனக்கு தெரிந்தவர்களுக்கும் இதன் அவசியத்தை சொல்லி வருகிறேன்.

உங்கள் பதிவுகள் பாராட்ட படகூடியவை. வாழ்த்துக்கள்.

Chef.Palani Murugan, said...

ஐரோப்பா நாடுக‌ளில் இய‌ற்கை உண‌வு,வேக‌வைத்த‌ உண‌வுக‌ளுக்கென‌ த‌னி Restaurant இருக்கு. இங்கு BIOல் வ‌ள‌ர்க்க‌ப்ப‌ட்ட‌ வேக‌வைக்காத‌ ப‌ச்சைக் காய்க‌றிக‌ள்,ம‌ற்றும் ப‌ழ‌ங்க‌ளில் செய்த‌ உண‌வுக‌ள்,ம‌ற்றும் நீராவியில் வேக‌வைத்த‌ உண‌வுவ‌கைக‌ள் ம‌ட்டும் த‌ர‌ப்ப‌டும்.ஆனால் விலை ச‌ற்று அதிக‌ம். அதேபோல் ந‌ம்வூரில் செய்ய‌வேண்டுமென‌ எனக்கு ரொம்ப‌ நாளா எண்ண‌முண்டு.தொழில்தானே ஓடுமோ ஓடாதோன்னு அப்பப்ப‌ கிட‌ப்பில் போட்டுவேன்.உங்க‌ளைப் போன்றோர் இருக்கையில் மீண்டும் அந்த‌ எண்ண‌ம் த‌லைதூக்குகிற‌து.அத‌ற்கு உங்க‌ளிட‌மிருந்து த‌க‌வ‌ல் தேவைப‌டுமே.

என்னது நானு யாரா? said...

@Kousalya:

//முளைவிட்ட தானியங்கள் சேர்த்து அரைத்த சத்துமாவு தான் எங்கள் வீட்டில் எப்போதும்... அதனுடன் இன்னும் 18 வகைகள் சேர்க்கப்பட்டு அரைத்து வைத்து இருக்கிறேன். காபி, டீ, ஹார்லிக்ஸ், பூஸ்ட் இந்த மாதிரி எதுவும் வீட்டில் கிடையாது. எனக்கு தெரிந்தவர்களுக்கும் இதன் அவசியத்தை சொல்லி வருகிறேன்.//

உங்க குடும்ப உறுப்பினர்களோட உடல்நலத்தில அக்கறை எடுத்துகிற நல்ல ஒரு புத்துசாலி பெண்ணா இருக்கீங்க!

உங்க வருக்கைக்கும் வாழ்த்துக்கும் நன்றி தோழி! உங்க ஆதரவை என் எழுத்துக்களுக்கு தொடர்ந்து தரணும்னு கேட்டுகொள்கிறேனுங்க!

என்னது நானு யாரா? said...

@Chef.Palani Murugan, LiBa's Restaurant:

//உங்க‌ளைப் போன்றோர் இருக்கையில் மீண்டும் அந்த‌ எண்ண‌ம் த‌லைதூக்குகிற‌து.அத‌ற்கு உங்க‌ளிட‌மிருந்து த‌க‌வ‌ல் தேவைப‌டுமே.//

எந்த விதத்திலே நான் உதவமுடியும்னு சொல்லி ஒரு ஈமெயில் அனுப்புங்க Chef. எனக்கு தெரிஞ்ச தகவல்களை கண்டிப்பா சொல்றேன்.

என்னது நானு யாரா? said...

அருண் பிரசாத்:

//ரைட்டு!//

ரைட்ட்! ரைட்ட்...!! வண்டி எடுக்கலாம்பா!

செல்வா said...

/// ரத்தம், ஹார்மோன்கள் மூலமா கிடைக்கிற பால் எப்படி பங்காளி சைவ உணவா இருக்க முடியும்? நல்ல Logic இல்ல!//
செம லாஜிக் போங்க .!!

செல்வா said...

/// பாலு சரியில்லைன்னு சொல்றீங்க! சரி, பாலுக்கு சம்மா சத்தை கொடுக்கிற மாற்று என்னான்னு சொல்லனுமா இல்லையா? //
சொல்லுங்க சொல்லுங்க ..!!

செல்வா said...

நல்ல பல விசயங்கள சொல்லி உண்மையிலேயே யோசிக்க வச்சிட்டீங்க ..

என்னது நானு யாரா? said...

@ப.செல்வக்குமார்: செல்வா! யோசிக்க ஆரம்பிச்சிட்ட! இனி நீயே, அதுக்கு தடையா இருந்தாலும் அதை கேட்க மாட்டே!

உன்னை பத்தி தான் தெரியுமே தம்பி! வாழ்க நீ! யோசிக்கும் புலியே! வாழ்க நீ பல்லாண்டு!

பெசொவி said...

உங்க வாதம் இருக்கட்டும், இந்தப் சுட்டில(http://milk.procon.org/view.answers.php?questionID=1317) ரெண்டு பக்கமும் சொல்லி குழப்புறாங்களே, நீங்க கொஞ்சம் தெளிய வையுங்களேன்!

என்னது நானு யாரா? said...

@பெயர் சொல்ல விருப்பமில்லை:

நீங்க கொடுத்த லிங்கில போய் பார்த்தே. டாக்டர்களே எதிர் எதிரா நின்னு அடிச்சிக்கும்போது, அதை பத்தி நான் என்ன கருத்து சொல்ல முடியும்?

இங்கே என் அனுபத்திலே பார்த்த விஷயங்களை தானே எழுதி இருக்கிறேன். உங்களுக்கும் இதை பற்றிய உண்மை தெரியவேண்டுமானால், ஆஸ்துமா போல நாள்பட்ட, கபம் சம்பந்தபட்ட நோயாளிகளிடம், பாலில்லா உண்வை கொடுத்து, எவ்வளவு சீக்கிரம் நோய் குணமாகிறது என்று சோதனை இட்டு பார்த்து கொள்ளவேண்டியது தான்.

இயற்கை மருத்துவத்தை பொறுத்த வரை எல்லாம் இயற்கை தன்மையோடு ஒத்திருப்பது தான்.

பஞ்சபூதங்களான, நிலம், நீர், காற்று, நெறுப்பு, ஆகாயம், இந்த அமைப்பு அண்டத்தில் மட்டும் அல்ல, பிண்டத்திலும் இருக்கிறது.

நம் உடம்பில் காற்றோட்டம், இரத்த ஓட்டம், வெப்பஓட்டம், உயிரோட்டம் என்று நான்கு ஓட்டங்கள் இருக்கிறது. இந்த ஓட்டங்களுக்கு தடை ஏற்படுமானால் நோய் வருகிறது.

இன்று கிடைக்கும் பால் பல நச்சு பொருட்களின் காக்டைலாகத் தானே இருக்கிறது. பின் நோய் வராமல் என்ன செய்யும்.

எதனையும் உண்டபின் 2 மணி நேரத்தில் ஜீரணிக்கும் தன்மையில் மனிதனின் வேலை அமைப்பு அமைய வேண்டும். ஆனால் இன்று மனிதன் உண்ணும் உணவு 2 மணி நேரத்தில் ஜீரணிக்க படுகிறதா?

ஒன்று, அவனின் உடல் உழைப்பு அற்ற நிலை, மற்றொன்று, கலோரி அதிகமான உணவு. இந்த இரு காரணங்களே அவனுக்கு நோய் வருவதற்கு மிக முக்கிய காரணங்களாக இருக்கின்றன.

இந்த யதார்த உண்மையினை புரிந்து கொண்டாலே நோய் வருவதும், ஆரோகியமாக இருப்பதும் நம் கைகளில் தான் என்று தெரிந்து கொள்ளலாமே நண்பரே!

Anonymous said...

ஆன்மீகத்துல சைவ அசைவம் எப்படி பிரிச்சி பார்கிறாங்கன்னா ,அது வேறு விதமா.
எந்த ஒரு உணவு ,அடுத்த உயிர்க்கு துன்பம் தராம கிடைக்குதோ அது சைவம் .

அந்த வகையில் பாலும் சைவம்தான் . தாவரங்களும் சைவம்தான்,தாவரங்களுக்கு உயிர் உண்டு. அதை வெட்டியோ இல்லை வேரோடு புடிங்கியோதான் நாம் சாப்பிடறோம் . ஆனால் அதற்கு துன்பம் இல்லை. எப்படி தலை மயிராய் வெட்டினால் நமக்கு வலிபதில்லையோ அதே போல் தாவரங்களும் செல் அமைப்பு கொண்டவை. அதற்கு வலிபதில்லை.

பாலும் அளவோடு உண்டால் நல்ல உணவே.
சைவத்திலும் பல உணவு உண்டு . அதையே சாத்வீக,தாமச,ரஜோ என மூன்று பிரிவுகளை வைத்துள்ளனர்.

தாமச உணவு எல்லாமே புளித்து போற உணவுகள். இதை உண்டால் சோம்பேறித்தனம் வளரும்.நாம் உண்ணும் உணவில் பல இவகை சேர்ந்தது.

ரஜோ வகை காரம் சார்ந்தது . உணர்வையும் எழுச்சியையும் கூட்ட கூடியது

Riyas said...

தேங்காய் பால் உடலுக்கு சிறந்ததா...பங்காளி

எஸ்.கே said...

இன்றைய பதிவு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு சார். ஏன்னா இதில் நீங்க நிறைய மருத்துவரீதியா சொல்லியிருக்கீங்க. நிச்சயமாக இதை ஆங்கில மருத்துவர்களே ஒத்துக்கலாம். அவர்களே கூட, பாலில்லாத கருப்பு காபி, டீயைதான் சாப்பிட சொல்றாங்க. வாழ்த்துக்கள்

rajan said...

பால் இல்லா தேனீர் , குழம்பி முலிகை பானம் தானே

vinthaimanithan said...

செல்லாது செல்லாது... பால் உற்பத்தியாளர் சங்கத்துல போயி சொல்றேன் மொதல்ல!

தெய்வசுகந்தி said...

//இது இயற்கை தானே! மாட்டு உடம்புல இருந்து வர்ற பாலு, மாட்டோட மாமிச தன்மையில தானே இருக்கும்//
அதானே!

/// பாலு சரியில்லைன்னு சொல்றீங்க! சரி, பாலுக்கு சம்மா சத்தை கொடுக்கிற மாற்று என்னான்னு சொல்லனுமா இல்லையா? //

சொல்லுங்க!!

என்னது நானு யாரா? said...

@Anonymous: பெயர் சொல்ல் விரும்பாத நண்பரே!

//எந்த ஒரு உணவு ,அடுத்த உயிர்க்கு துன்பம் தராம கிடைக்குதோ அது சைவம் .//

பால் கன்றுகுட்டியின் உரிமை இல்லையா? அதன் பசிக்கு பாலை கொடுக்காமல், நாம் அதனை அபகரித்து குடிப்பது வன்முறை தானே! இது அடுத்த உயிருக்கு துன்பம் தரும் செய்கை தானே?

//பாலும் அளவோடு உண்டால் நல்ல உணவே.//

இன்று கிடைக்கும் பல உணவு பண்டங்களில் பாலையும் சேர்த்து தானே செய்யபடுகிறது. ஐஸ்கிரிம், இனிப்புக்கள், பிஸ்கேட்ஸ், சாக்லேட்டுக்கள், பல வித பாணங்கள் என்று எல்லாவற்றிலும் தானே பாலை கலக்குகிறார்கள்.

இதையெல்லாம் விரும்பி உண்ணும் மனிதர்களுக்கு அளவும், முறையும் எங்கே தெரிகிறது?

காம இச்சையை தூண்டும் உணவை நாம் அதிகமாக உணவில் சேர்க்க நேர்வது, நல்லதாக படவில்லையே நண்பரே!

என்னது நானு யாரா? said...

@Riyas:

//தேங்காய் பால் உடலுக்கு சிறந்ததா...பங்காளி//

அது நம் உடம்புக்கு மிகுந்த நன்மைகளை செய்யுதுங்க பங்காளி! அல்சர், கேன்சர், தோல்வியாதின்னு பல வித வியாதிகளாலே அவதிபடுகிறவங்க, இதை கட்டாயம் எடுத்துக்கலாம்.

சர்கரை நோய் உள்ளவங்க, இயற்கை மருத்து முறையை கடைபிடிச்சி, நோயின் வீரியத்தை குறைத்த பின்னாடி அளவோடு எடுத்துகொள்ளலாம்.

என்னது நானு யாரா? said...

@எஸ்.கே:

//இதை ஆங்கில மருத்துவர்களே ஒத்துக்கலாம். அவர்களே கூட, பாலில்லாத கருப்பு காபி, டீயைதான் சாப்பிட சொல்றாங்க.//

உங்க கருத்துக்கு நன்றி நண்பரே!

என்னது நானு யாரா? said...

@rajan:

//பால் இல்லா தேனீர் , குழம்பி முலிகை பானம் தானே//

நண்பரே, டீ, காபியை பற்றி சொல்லவில்லை. நான் சொன்னது, தேங்காய் பால், முளை கட்டிய தானியங்களின் அரைத்த மாவு பாணம், துளசி பொடி பாணம், சுக்கு பாணம், தாமரை தண்டு பாணம் முதலியவைகளை பற்றி.

என்னது நானு யாரா? said...

@விந்தைமனிதன்:

//செல்லாது செல்லாது... பால் உற்பத்தியாளர் சங்கத்துல போயி சொல்றேன் மொதல்ல!//

சொல்லுங்க! முதல்ல அந்த நல்ல காரியம் செய்யுங்க! உங்களுக்கு புண்ணியமா போகும். இந்த விஷயங்களை எல்லாம் பத்தி நல்லா எடுத்து சொல்லுங்க. அப்பவாவது கலப்படம் இல்லாத நல்ல தரமான பாலை கொடுக்குறாங்களா பார்ப்போம்! :-)

என்னது நானு யாரா? said...

@தெய்வசுகந்தி:

பதிவிலேயே, தேங்காய்பால், முளை கட்டிய தானியங்களின் அரைத்த மாவு பாணம், கீரை, பச்சைகாய்கறிகள், பழங்கள், கொட்டைகள் மற்றும் மூலிகை பாணங்களை பற்றி சொல்லி இருக்கிறேனே தோழி!

ஹுஸைனம்மா said...

பால் கபத்தைத் தூண்டும் என்பது அறிந்த செய்தி. உண்மை. அதன் தொடர் உணவுகளான தயிர், மோர் பற்றி எதுவுமே சொல்லவில்லையே? பாலே வேண்டாம் எனும்போது, இவையும் வேண்டாம் என்கிறீர்களா?

அசைவம் சாப்பிடுபவர்கள், பாலின் அசைவத் தன்மை பொருட்படுத்தாமல் அருந்த விரும்பலாம் அல்லவா? எனில், இயற்கை காய்கறிகளைப் போல, “இயற்கை பால்” - அதாவது மாட்டிற்கு கலப்பட உனவுகளோ, மருந்துகளோ கொடுக்காமல் இயறகை உணவுகள் மட்டும் கொடுத்து கிடைக்கும் பாலை அருந்தலாமா? அதில் ஆபத்து குறைவா?

மேலும், அஜீரணத்திற்கு, வயிற்றுக் கோளாறுகளுக்கு தயிரும், உடல் சூட்டைத் தணிக்க மோரும் பரிந்துரைக்கப்படுகின்றனவே, அவற்றிற்கு மாற்று என்ன?

மன்னிக்கவும், எனக்கும் இயற்கை முறைகளில் ஆர்வம் அதிகம். எனவேதான் கேள்விகள் அதிகம் கேட்கிறேன்.

என்னது நானு யாரா? said...

@ஹுஸைனம்மா: உங்கள் வருகைக்கும் கேள்விகளுக்கும் நன்றி தோழி! சரியான கேள்விகள் தான் சரியான பதில்கள் கிடைக்க உதவுகின்றன. அதனால் கேள்விகளை கேட்பதற்கு ஏன் மன்னிப்பு கேட்கிறீர்கள் தோழி?

நீங்கள் கேள்வி கேட்பதனால், நீங்கள் மட்டும் இல்லை, அதற்கு பதில்களை யோசனை செய்யும் போது, நானும் தெளிவு அடைகின்றேன். இந்த கேள்வி - பதில்களை படிக்கும் மற்ற அன்பர்களும் தெளிவு அடைவார்கள் என்பது உறுதி!

சரி இப்போது உங்களின் கேள்விகளுக்கு என் பதில்கள்:

//அதன் தொடர் உணவுகளான தயிர், மோர் பற்றி எதுவுமே சொல்லவில்லையே? பாலே வேண்டாம் எனும்போது, இவையும் வேண்டாம் என்கிறீர்களா?//

உடல் சூட்டை குறைப்பதற்கு நீர்மோர் பயன்படுத்தலாம் provided அது உண்மையாகவே நீராக இருக்கும் பட்சத்தில்.

நீர்மோரில் 90% நீர் தான் இருக்கிறது. மற்ற பால் பொருட்கள் யாவும் கெடுதல் தான் செய்கின்றன.

//“இயற்கை பால்” - அதாவது மாட்டிற்கு கலப்பட உனவுகளோ, மருந்துகளோ கொடுக்காமல் இயறகை உணவுகள் மட்டும் கொடுத்து கிடைக்கும் பாலை அருந்தலாமா? அதில் ஆபத்து குறைவா?//

இப்படி ஆரோகிய சூழ்நிலையில் வளரும் மாட்டின் பாலை குடிக்கலாமே! என்ன தவறு இருக்க முடியும்? ஆனால் மனிதனின் உழைப்பு குறைந்து விட்டதை கவனிக்க வேண்டியது அவசியம் ஆகிறது இல்லையா தோழி?

அன்றைய மனிதனுக்கும் இன்றைய மனிதனுக்கும் அது தானே பெரிய வித்தியாசமாக இருக்கிறது. உடல் உழைப்பு குறைந்து விட்டது இல்லையா? இதனை கருத்தில் கொண்டு, பால் பொருட்களை அளவுடன் பயன்படுத்தினால், (அதுவும் நீங்கள் சொன்ன முறையில் கிடைக்கும் பால்) ஒரு கேடும் வந்திவிடாது என்று நானும் நம்புகின்றேன்.

பால் குடிக்கும் கன்று இருக்குமானால், அதற்கு போதிய அளவு பாலை கொடுத்து விட்டு மீதியை தான் எடுத்து கொள்ளவேண்டும். அது தானே தர்மம்? இதை பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் தோழி?

//மேலும், அஜீரணத்திற்கு, வயிற்றுக் கோளாறுகளுக்கு தயிரும்//

அஜீரணம் ஏற்படுகிறது என்றாலே அவன் இயற்கையோடு இசைந்து வாழவில்லை என்று தான் அர்த்தம். நோய்களுக்கு அடைகலம் கொடுக்க முடிவு செய்து விட்டான் என்று தான் அர்த்தம்.

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்.


இது தானே நம் தாத்தா வள்ளுவனின் வாக்கு! இதற்கு அர்த்தம் பசி இருந்தால் தான், உணவு தட்டிற்கு முன் உட்கார வேண்டும் என்பது தானே தோழி?

அஜீரணத்தை போக்க, இஞ்சி, சுக்கு, மிளகு என்று எத்தனையோ பொருட்கள் இருக்கின்றனவே தோழி. ஆனால் பசி இல்லாமல் போனால் வெறும் வயிற்றுடன் இருப்பது தான் நல்லது.

உங்களின் சிந்தனைகளை பகிர்ந்து கொள்ளவும். நோய் இல்லாத நாகரீகம் காண, நம்மால் ஆனதை செய்வோம்!!!

Thangavel Manickam said...

உடலுக்கு தேவையற்ற உணவு பால் என்பதை நான் என் அனுபவத்தில் உணர்ந்து கொண்டேன். உங்கள் பதிவு உண்மையானது. வாழ்த்துக்கள்.

சிறியவன் said...

மிக நல்ல விஷயங்களைத் தருகின்றீர்கள். நன்றி. மிக அருமையான தளம். வாழ்த்துக்கள்.

Anonymous said...

அடங்கப்பா...இத்தன நாளா உங்கள சந்திக்காம இருந்திட்டனே பங்காளி..நிறைய விசயம் தெரிஞ்சுகிட்டேன்..ஊருக்கு போயி நீங்க எல்லா பயலுக கிட்டியும் சொல்றேன்..புத்தி வருதான்னு பாப்பம்

என்னது நானு யாரா? said...

@தங்கவேல் மாணிக்கம்:
@சிறியவன்:
@ஆர்.கே.சதீஷ்குமார்:

பாராட்டிய உங்கள் அனைவருக்கும் என் நன்றிகள்!

@@ஆர்.கே.சதீஷ்குமார்:

//ஊருக்கு போயி நீங்க எல்லா பயலுக கிட்டியும் சொல்றேன்..புத்தி வருதான்னு பாப்பம்//

நல்லது பங்காளி! நல்ல விஷயம் நிறைய பேருக்கு தெரிய செய்றது நல்லது தானே! செய்யுங்க பங்காளி!

அணில் said...

இயற்கை உணவின் மகத்துவம் பற்றி “உடலின் மொழி” புத்தகத்தில் படித்திருக்கின்றேன். அதில் பாலின் தீமையைக் குறித்து படித்தபோது சட்டென ஏற்றுக்கொள்வதில் சிறு தயக்கம், மீண்டும் அதே கருத்தை படிக்க நேரும்போது கொஞ்ச காலத்துக்கு விலகியிருக்கலாமென முடிவெடுத்துள்ளேன். மனுசனுக்கு சைவம் நல்லது அசைவம் கெட்டதுன்னு சொல்றதில எனக்கு உடன்பாடில்ல. எதுவாயிருந்தாலும் ஆரோக்கியமானதா சாப்பிடனும். காலத்திற்கேற்றாற் போல் உடல் தன்னைத்தானே தகவமைத்துக் கொள்ளும். இந்த காலத்தில் நாம் தினுமும் உண்கிற காய்கறிகள், நெல் எல்லாம் இயற்கை முறையில் விளைவித்ததா? இது பணத்தை நோக்கிய உலகம். இதில் பால் மட்டுமென்ன விதிவிலக்கா? நல்ல கருத்துகளை அதிக மக்களிடம் கொண்டு செல்வதற்கு நன்றியுடன் வாழ்த்துகள்.

அணில் said...

//காம இச்சையை தூண்டும் உணவை நாம் அதிகமாக உணவில் சேர்க்க நேர்வது, நல்லதாக படவில்லையே நண்பரே!

வன்மையாகக் கண்டிக்கிறேன். இது லொள்ளை, அது லொள்ளை என்றால் எதையுமே சாப்பிட முடியாது.

என்னது நானு யாரா? said...

ந.ர.செ. ராஜ்குமார்: உங்கள் முதல் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி நண்பரே!

//மனுசனுக்கு சைவம் நல்லது அசைவம் கெட்டதுன்னு சொல்றதில எனக்கு உடன்பாடில்ல.//

விரைவில அசைவம் எப்படி நம்முடைய ஆரோகியத்திற்கு கெடுதல்ன்னு சொல்லிபோடுறேனுங்க..

//இந்த காலத்தில் நாம் தினுமும் உண்கிற காய்கறிகள், நெல் எல்லாம் இயற்கை முறையில் விளைவித்ததா?//

இல்லை தான் நண்பர்ரே! ஆனாலும் அசைவம், இந்த சைவ உணவை காட்டிலும் பல மடங்கு கேடு விளைவிக்குதுங்க... நன்றிங்க...

Anonymous said...

"மாடுங்களோட தேவைக்காக, தானியம் விளைய வேண்டிய நிலமெல்லாம் புல் விளையற நிலமா காட்சி தருது. மாடுங்களால தாவரவினங்கள், காடுங்க எல்லாம் ரொம்ப சீக்கிரம் அழிஞ்சிட்டு வருது. நீரோட தேவையும் அதிகமாகி நீர் ஆதாரங்கள் எல்லாம் சீக்கிரம் வறண்டு போகுற சூழ்நிலை ஏற்பட்டு இருக்கு."

Totally foolish Blog ....Stupid find out the fact before you write something.

என்னது நானு யாரா? said...

@Anonymous

//Totally foolish Blog ....Stupid find out the fact before you write something.//

உங்க கருத்துக்கு நன்றி தலைவரே!

Gayathri said...

aaha appo thayir more lamum sapda koodatha..paal venam ana more?

Sanskii said...

அருமை! அருமை !! என்ன இவரும் என்ற பங்காளியா? ஒரே சந்தோசமா இருக்கப்பா!

Anonymous said...

நீங்க சொல்றது தாய் பாலுக்கும் பொருந்துமா?

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

Post a Comment

பங்காளி! சரக்கு எப்படி? விக்குமா... விக்காதா...??? கொஞ்சம் சொல்லிட்டு போங்க!!!