நான் ஒரு குடிக்காரனாக இருந்தேன்
எதற்கோ குடிக்க ஆரம்பித்தேன். விட முடியவில்லை. தொடர்ந்து குடித்தேன். பின் குடிப்பதிலேயே ஆராய்ச்சி செய்வோம் என்று ஆராய்ந்தேன். குடியை மட்டும் என்னால் விடமுடியவில்லை.
![]() |
| மூச்சி முட்டற அளவு குடிச்சா எப்படி மக்கா...!!! லிவர் போனா பரவாயில்லையா??? |
எந்த முயற்ச்சி செய்தும் குடிபழக்கம் தொடர்ந்தது. என்னுடைய புண்ணியபலன் தான் என்று நினைக்கின்றேன். எனக்கு இயற்கை வாழ்வியல், இயற்கை மருத்துவத்தின் அறிமுகம் கிடைத்தது.
என்ன ஒரு ஆச்சரியம் பாருங்கள்! இயற்கையுணவு சாப்பிட ஆரம்பித்த 43ஆவது நாளிலிருந்து குடிப்பழக்கம் தன்னாலே போய்விட்டது. இனி, என்னால் குடிக்கவே முடியாது. எனதுடலின் செல்கள், உணவுக்குழாய், எண்ணங்கள் எல்லாம் மாறி விட்டதை உணர்கிறேன். எனவே உடலுக்கு – ஆன்மீக உடலுக்கு ஒத்துக் கொள்ளாத உணவோ, குடியோ, போதைப் பொருட்களோ எதுவானாலும் எனது உடல் ஏற்றுக் கொள்ளாத சூழ்நிலை உருவாகி விட்டது.
என்ன ஒரு ஆச்சரியம் பாருங்கள்! இயற்கையுணவு சாப்பிட ஆரம்பித்த 43ஆவது நாளிலிருந்து குடிப்பழக்கம் தன்னாலே போய்விட்டது. இனி, என்னால் குடிக்கவே முடியாது. எனதுடலின் செல்கள், உணவுக்குழாய், எண்ணங்கள் எல்லாம் மாறி விட்டதை உணர்கிறேன். எனவே உடலுக்கு – ஆன்மீக உடலுக்கு ஒத்துக் கொள்ளாத உணவோ, குடியோ, போதைப் பொருட்களோ எதுவானாலும் எனது உடல் ஏற்றுக் கொள்ளாத சூழ்நிலை உருவாகி விட்டது.
இறைவனுக்கு, இறையுணவாகிய இயற்கையுணவிற்கு நன்றி! எனது குடிபழக்கம் அதுவாக என்னை விட்டுச் சென்று இன்றுடன் 53 நாட்கள் ஆகிவிட்டன.
10 நாட்களுக்கு முன் ஒரு விபத்து நடந்துவிட்டது. 15அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தேன். இடது காலில் மூட்டுக்குக் கீழே வலியாக இருந்தது.
2 நாட்கள் கழித்து இடது கால் அரையில் வீக்கம் (நெறிகட்டு) ஏற்பட்டது. அதிகாலை 4 மணியிலிருந்து பயங்கரக் குளிர் காய்ச்சல். போர்வை எடுத்து மூடிக் கொண்டேன். என்னால் நிற்கக் கூட முடியவில்லை. பின்பு, டாக்டர் கூறியபடி 4 முறை அஹிம்சை எனிமா எடுத்து கொண்டு (அஹிம்சை எனிமாவை பற்றி தெரியாதவர்கள் இங்கே அழுத்தவும்) எல்லா கழிவுகளையும் வெளியேற்றினேன்.
பின் 6 தம்ளர் தண்ணீர் அருந்தினேன். உடனே பாதி சுகம் தெரிந்தது. பிறகு காலை 5 மணிக்கு பச்சைத் தண்ணீரில் குளித்தேன். காய்ச்சல் 102 டிகிரி இருந்தது. என்ன தான் நடக்கிறது என்று பார்த்து விடுவோமே! ஒன்று காய்ச்சல் குணமாகி நான் புதிய தெம்புடன் இருக்க வேண்டும், அல்லது எது நடப்பினும் பரவாயில்லை என்று நம்பிக்கையுடன் செயல்பட்டேன். என்ன ஆச்சரியம்! 6 மணிக்கு காய்ச்சல் ஓடிவிட்டது. புது உற்சாகம்! புது தெம்பு! என்ன ஒரு அற்புதமான மருத்துவம்! அதோடு சேர்ந்து தலைவலியும் இருந்தது. அதுவும் பறந்து விட்டது.
எனக்கு ஏற்பட்ட புண்களை கூட தேங்காய் எண்ணெய், புற்றுமண், எலுமிச்சை தோல் வைத்து தேய்த்து வெயிலில் காய்ந்து, இயற்கை மருத்துவம் முறையில் குணமாக்கி கொள்கின்றேன். புண்களை கூட வெறும் இயற்கை மருத்துவம் மூலமே குணமாக்கி கொள்ளும் தைரியம் எனக்கு கிடைத்துவிட்டது
செலவில்லாமல் நோய்களை குணமாக்கி கொள்கிறேன். மிகுந்த விவேகம் கிடைத்து வருகிறது. ஆனந்தத்திற்கு அளவே இல்லை. மொத்தத்தில் விவேகானந்தர் வேண்டிய இளைஞர்களை உருவாக்க இறையுணவாகிய இயற்கையுணவு மிகுந்த பங்கு வகிக்கப் போகிறது.
‘எனது இளைஞர்கள் இரும்பைப் போன்ற தசைகளையும் உருக்கு போன்ற நரம்புகளையும் இடியோசை கேட்டு அஞ்சாத மனவலிமையையும் பெற்று எதற்கும் துணிந்த ஆண்மையிளம் சிங்கங்களாகத் திகழ வேண்டும்’ என்று கேட்டாரே!
அப்படிபட்ட துடிப்பு மிக்க புதுயுக இளைஞர்களை உருவாக்க இயற்கையுணவால் முடியும். எல்லாம் ஒன்று! காணுகின்ற எல்லாம் இறைவனே என்னும் எண்ணமும், எல்லா உயிரிடத்தும் அன்பு காட்டுங்கள் என்று வள்ளலாரின் கண்டுபிடிப்புகளும், எல்லோரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள்தான் என்ற எண்ணமும் வலுப்பெற இயற்கையுணவே தேவை.
எல்லோருள்ளும் இருப்பது ஒரு ஆன்மா தான். எல்லோரும் ஒன்று தான். ஆன்மாவை இணையுங்கள். அதை இணைப்பது இயற்கையுணவு தான்.
மதங்களால் முடியாததை, கட்சிகளால் முடியாததை, சாதிகளால் முடியாததை, வெறும் வார்த்தைகளால், பாட்டுக்களால், நூல்களால் முடியாததை “இயற்கையுணவு” செய்யும்.
குறிப்பு: இந்த அனுபவ மடல் “இயற்கை உணவே நோய் தீர்க்கும் மருந்து” என்கின்ற புத்தகத்தில் இருந்து எடுத்தாளபட்டிருக்கிறது. இதன் ஆசிரியர். திரு. மூ.ஆ. அப்பன் அவர்கள். புத்தக பதிப்பாளர் - இந்து பப்ளிகேஷன்ஸ், சென்னை
இந்த அனுபவ மடலை எழுதியவர்:
திரு. பி.எம்.என். பாலகிருஷ்ணன். M.Sc., B.Ed.,
உயிரியல் ஆசிரியர்,
காரப்பேட்டை நாடார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,
தெற்கு காட்டன் ரோடு, தூத்துக்குடி - 1
நண்பர்களே! இவரின் அனுபவத்தை பற்றிய உங்களின் கருத்து என்ன? சொல்லிட்டு போங்களேன்.
ஓட்டு போட்டு போனீங்கன்னா, பலருக்கும் இந்த தகவல் சென்று அடைய பயனா இருக்கும்!
