பன்னீர் தெளிக்கிறோமில... ப்ளீஸ்... கொஞ்சம் தலை குனியுங்க...

வணக்கம் பங்காளீ! வாங்க, சவுக்கியங்களா? நம்ம வலைபதிவு பக்கம் வந்ததுக்கு நன்றீங்கோ...Get this Widget

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே! என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி! நண்பர்களே!

மனிதர்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் சிந்தனைகள், இங்கு சிதறிகிடக்கிறது. படித்து பார்த்து உங்கள் கருத்துக்களை இடவேண்டுகிறேன்!

தொடர்ந்து, இந்த வலைபதிவுக்கு உங்களின் ஆதரவை தாருங்கள்!!! நன்றி! தொடர்ந்து வருக!!!

இந்த நாள், உங்களுக்கு, இனிய நாளாக அமைவதாக!!!

பாசகார பங்காளி கூட்டமுங்க! நீங்களும் கூட வாறீகளா?

24-Sep-2010

உள் அமைதிக்கு உகந்த படிகள் - பாகம் 2

Peace Pilgrim - அமைதிப் பயணியை பற்றிய எல்லா பதிகளும் படிக்க இங்கே அழுத்தவும்

ஆன்மீக பாதையில் முன்னேறி செல்லும்போது, பல விதமான மனப் போராட்டங்கள், புயல்கள் எல்லாம் நேரும். முன்பே என் மனம் பக்குவபட்ட நிலையில் இருந்ததால், எனக்கு கொஞ்சம் தீவிரம் குறைந்ததாகவே அந்த புயல்கள் எல்லாம் இருந்தன. 

உங்களின் உள்ளமைதி எங்களுக்கும்
கிடைக்கட்டும் தாயே...


இந்த சுயநல நாட்டம் கொண்ட மனது மிக பயங்கரமான எதிரி. அது அதனுடைய கட்டுப்பாட்டை நிலைநிறுத்த பல விதமாக போராடுகிறது. அது பலவித வஞ்சக முறைகளில் தன்னை காத்துக்கொள்ளும் வழிகளில் இறங்குகிறது. அது உங்களின் பலவீனம் எது என்று அறிந்துக்கொண்டு, சரியான சந்தர்ப்பத்தில் உங்களை தாக்கும். இந்த வித தாக்குதல்களின் போது நாம் பொறுமையோடு இருந்து நம் ஆன்மாவின் குரலை கூர்ந்து கேட்கும் ஆற்றலை பெற வேண்டும்.

இந்த ஆன்மாவின் குரலுக்கு பல அற்புதமான பெயர்களை நமது மதபெரியவர்கள் இட்டு இருக்கிறார்கள். சிலர், the higher governing power, the inner light, or the indwelling Christ என்கிறார்கள். இயேசு பிரான், "The Kingdom of God is within you" என்று சொன்ன போது, அவர், இந்த ஆன்மாவின் குரலைப் பற்றித் தான் குறிப்பிடுகின்றார்.

நான் உள் அமைதிக்கு உகந்த படிகளைப் பற்றி கூறும்போது, அதனை ஒரு கட்டத்தினுள் வைத்தே பேசுகின்றேன். உள் அமைதிக்கு, எத்தனை படிகள் என்பது அறுதியானவை அல்ல. அவரவர் அனுபவத்திற்கு ஏற்ப படிகளின் எண்ணிக்கை மாறுபடலாம். அவற்றை சுறுக்கவோ விரிக்கவோ இயலும்.

உள்முக அமைதி நோக்கிய பார்வை தான், இதில் முக்கியம். அதை எந்த வரிசையில் அமைத்துக் கொள்ளுதல் என்பது அவரவர் விருப்பம். ஒருவருக்கு இசைவான முதற்படி இன்னொருவருக்கு, கடைசிபடியாகவும் இருக்கலாம். உங்களுக்கு எது இயல்பாகவும் எளிதாகவும் உள்ளதோ அந்த வரிசையில் அமைத்துக் கொள்ளலாம். படிப்படியாக நீங்கள் அமைதியை நோக்கி அடி எடுத்து வைப்பீர்களாயின் அது உங்களை மேலே உந்தி இட்டுச் செல்லும்.

இந்த விஷயத்தில், நாம் ஒருவருக்கொருவர் நமது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுவது நல்லது. யாரோ ஒருவர் உங்களை வழிநடத்திச் செல்வதாகப் பாவிக்காதீர்கள். உங்களுக்கு நீங்களே இந்த அமைதி யாத்திரையில் பங்கு பெறுவதாகப் பாவியுங்கள். உங்களிடம் இல்லாத ஒன்றை நான் உணர்த்தி, ஊக்குவிப்பதாக எண்ண வேண்டாம். அந்த விதமாக நாம் செய்யவும் முடியாது. அமைதி பணியில் நாம் நமது அனுபவங்களைப் பகிர்ந்துக் கொள்ளுவதன் மூலம் ஒருவரை ஒருவர் பரஸ்பரம் ஊக்குவிப்போம்.

முதலாவதாக, என்னை தயார்படுத்திக் கொள்ளுதளின் நான் கையாள வேண்டி இருந்தவைகளைப் பற்றிக் குறிப்பிட விரும்புகின்றேன்.

முதலாவது ஆயத்தம்:

வாழ்வு பற்றிய சரியான கண்ணோட்டம் கொள்வதே எனது முதலாவது ஆயத்தமாகும். எதிலும் பட்டுக்கொள்ளாமல் தப்பித்துச் செல்லும் மனப்பான்மையை கைவிடுக! என்பதே இதன் பொருளாகும்.

மேம்போக்காக வாழ்ந்து மேல் மட்டளவிலேயே வாழ்ந்திருப்பதைக் கைவிடுங்கள். இது போன்று பல்லாயிரக்கணக்கான மக்கள் மேம்போக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பின் எந்த ஒரு சுவடும் இல்லாமல் மறைந்தும் விடுகிறார்கள். அவர்கள் இத்தகு வாழ்வில் வெறும் நடைப் பிணங்களாகவே பூமியின் மீது வாழ்ந்து, எந்தவிதமான பாராட்டக்கூடிய குணங்கள் எதுவும் பெறாமலேயே வாழ்வை முடித்தும் கொள்கிறார்கள். அவர்கள் பரிதாபத்திற்கு உரியவர்கள்.

வாழ்வை நேருக்கு நேராக சந்திப்பதில் ஆர்வம் காட்டுங்கள். வாழ்வின் அடிமட்டத்திற்குச் செல்லுங்கள். அங்கு தான் வாழ்வின் பல்வேறு தன்மைகளும், உண்மை நிலைகளும் காணக்கிடைக்கின்றன. இப்பொழுது இங்கு நாம் செய்து கொண்டிருப்பது இவைகளே.

வாழ்வில் நமக்கு முன்வரும் சிக்கல்களைச் சரியான பார்வையில் காணும் மனப்பாங்கு இதில் உள்ளது. முழுக் காட்சியையும் நீங்கள் காண முடியுமேயானால், முழுக் கதையையும் நீங்கள் அறிய முடியுமேயானால், எந்த சிக்கலானாலும், ஏதோ ஒரு குறிக்கோள் இல்லாமல் வருவதில்லை என்பதையும், அவை நம்முடைய உள்முக வளர்ச்சிக்கு உதவாமல் இருப்பதில்லை என்பதையும் நீங்கள் உணர்வீர்கள். இதை உணரும் பொழுது சிக்கல் அனைத்தும் மாறுவேடத்தில் வந்த வாய்ப்புகளே என்பதை அறிவீர்கள்.

வாழ்வின் சிக்கல்களை சந்திக்காமல் இருந்தால், அவைகளால் அடித்துச் செல்லபடுபவர்களாகவும், மன அமைதி இல்லாதவர்களாகவும் இருப்பீர்கள். நம்மிடமிருக்கும் உயர்ந்த ஞானத்தின் தன்மைக்கு ஏற்ப சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதின் மூலமே உள்முக வளர்ச்சி அடைய முடிகிறது.

அடுத்து, உலகுக்கே பொதுவான சிக்கல்களை அனைவரும் ஒன்று சேர்ந்தே களைந்திடல் வேண்டும். உலக அமைதி, உலகளவில் போர் படைகளின் எண்ணிக்கையை குறைப்பது போன்ற பொதுபணிகளில் ஒருவர் தனக்குரிய பங்கைச் செலுத்தாமல் ஒதுங்கியிருப்பவர் உள் அமைதி பெறுவதில்லை. எனவே நாம் அனைவரும் இதுபோன்ற சிக்கல்களைக் கூடிச் சிந்திப்போம்; கூடிப்பேசுவோம்; கூடிச் செயல்பட்டு நல்வழி காணுவோம்.

உள்முகம் நோக்கிய பார்வையில் நீங்கள் மற்றொரு பேருண்மையை காண்பீர்கள். நீங்கள் தனிமைப்பட்டிருக்கவில்லை. பரந்த சிருஷ்டியின் அங்கம் என்பது புலனாகும். உங்களின் பிரச்சனை சமுதாயத்தின் பிரச்சனையுமாகிறது. அது கூட்டுறவை வளர்க்க உதவுகிறது. சமுதாய உறவு உருவாகிறது.


அமைதி தூதுவர் - புத்த பகவான்


பங்காளி! Peace Pilgrim இன்னமும் நமக்கு நிறைய சொல்ல இருக்காங்க... 

சொன்னது வரைக்கும், உங்களை எந்தவிதத்தில பாதிச்சதுன்னு சொல்லிட்டுப் போங்களேன் மக்கா!

6 மேதைங்க இதபத்தி என்ன சொன்னாங்கன்னா...:

Chitra said...

ம்ம்ம்ம்..... யோசிக்கிறேன்....

தியாவின் பேனா said...

சரி பார்க்கலாம்
நல்ல பகிர்வுக்கு நன்றி

ப்ரியமுடன் வசந்த் said...

//வாழ்வை நேருக்கு நேராக சந்திப்பதில் ஆர்வம் காட்டுங்கள்.//

yes I can Do..

என்னது நானு யாரா? said...

@Chitra

//ம்ம்ம்ம்..... யோசிக்கிறேன்//

எதைப் பற்றின்னு சொல்லுங்க சித்ரா!

என்னது நானு யாரா? said...

@தியாவின் பேனா

//சரி பார்க்கலாம்// உங்களின் வருகைக்கு நன்றி! தொடர்ந்து வாருங்கள்.

என்னது நானு யாரா? said...

@ப்ரியமுடன் வசந்த்

//வாழ்வை நேருக்கு நேராக சந்திப்பதில் ஆர்வம் காட்டுங்கள்.//

yes I can Do..//

மிகவும் மகிழ்ச்சி நண்பரே! என் வலைப்பக்கம் வருகைப்புரிந்ததற்கு நன்றி! தொடர்ந்து வரவேண்டும் என்றுக் கேட்டுக்கொள்கின்றேன்.

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

Post a Comment

பங்காளி! சரக்கு எப்படி? விக்குமா... விக்காதா...??? கொஞ்சம் சொல்லிட்டு போங்க!!!