பன்னீர் தெளிக்கிறோமில... ப்ளீஸ்... கொஞ்சம் தலை குனியுங்க...

வணக்கம் பங்காளீ! வாங்க, சவுக்கியங்களா? நம்ம வலைபதிவு பக்கம் வந்ததுக்கு நன்றீங்கோ...Get this Widget

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே! என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி! நண்பர்களே!

மனிதர்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் சிந்தனைகள், இங்கு சிதறிகிடக்கிறது. படித்து பார்த்து உங்கள் கருத்துக்களை இடவேண்டுகிறேன்!

தொடர்ந்து, இந்த வலைபதிவுக்கு உங்களின் ஆதரவை தாருங்கள்!!! நன்றி! தொடர்ந்து வருக!!!

இந்த நாள், உங்களுக்கு, இனிய நாளாக அமைவதாக!!!

பாசகார பங்காளி கூட்டமுங்க! நீங்களும் கூட வாறீகளா?

21-Sep-2010

அமைதியை நோக்கி போகலாமா அப்பு?


பங்காளி! ஒரு தியாக விளக்கை பத்தி சொல்றேன்! சீக்கிரம் வாயேன். அவங்க தியாகத்தை பத்தி தெரிஞ்சிகிட்டா, உனக்கு நல்லது நடக்குமோ என்னமோ? நல்லது நடந்தா சரிதானே? கவனமா கேளு அப்பு!

தியாக சுடர் விளக்கு
Peace Pilgrim - அமைதி பயணி


ஒரு பெண்மணி, 28 வருஷமா தன்னந்தனியா, நடை பயணமாகவே அமெரிக்கா நாடு முழுசும், 25,000 மைல்களுக்கும் மேல நடந்து, கேட்க விருப்ப படுகின்ற மக்கள் கிட்ட எல்லாம் உள்ளத்தில அமைதியை எப்படி வளர்த்துகிட்டு உலகத்து அமைதிக்காக, தங்களால முடிஞ்ச சேவையை எப்படி எல்லாம் செய்யலாம் என்கிறதை பத்தி இடைவிடாம பேசுவாங்க தெரியுமா?  

வழியில யாராவது அவங்களை பாத்து, உணவு கொடுத்தாங்கன்னா வாங்கிப்பாங்க, இல்லைன்னா பட்டினியாவே நடப்பாங்க. அதேப்போல யாராவது அவங்களை பாத்து, தங்க இடம் கொடுத்தா அவங்க வீட்டில இரவில தங்கிட்டு மறு நாள் மறுபடியும் அவங்களோட, அமைதி பயணத்தை தொடர்வாங்க.

அவங்க அமைதி பயணத்தினால பல ஆயிரம் பேர்களுக்கு தூண்டுதலா இருந்திருக்காங்க. அத்தனை பேர்களுடைய உள்ளத்திலேயும் ஒரு ஆழமான பாதிப்பை உண்டாக்கினாங்க.

எளிமையா, ஆனா அதே சமயம், ரொம்ப தீவிரமா இருக்கிற அவங்களோட செய்தி, இப்போ மனுஷங்களுக்கு உடனடி தேவையா இருக்குப்பா. அவங்களோட வார்தைங்க, உலகத்தோட எதிர்காலத்துக்கு ஒரு நம்பிக்கையும் புத்துணர்ச்சியும் கொடுக்குது பங்காளி!

உனக்கு ஒன்னு சொல்றேன் கேளேன்! இவங்க சொல்றதை கேட்டு, உலகத்தில இருக்கிறங்க அட்லீஸ்ட், குறஞ்சபட்சம் ஒரு 20% மக்கள், உள் அமைதியை வளர்த்துகிட்டாங்கன்னா இப்போ வெறும் கனவா இருக்கிற உலக அமைதி, நிஜமாலுமே நடைமுறை சாத்தியமா மாறும். என்ன அப்பு, நம்பமுடியலையா? நிஜம்தான்! அவங்களோட மெசேஜ் அந்த அளவுக்கு ஃபவர்ஃபுள்ப்பா!

பங்காளி! அவங்க நமக்கு ஒரு இயங்கும் உதாரணமாக வாழ்ந்து மறைஞ்சிருக்காங்க. அவங்க கடவுளோட அமைதி தூதுவரா உலகத்தில வாழ்ந்தாங்க.

இப்படி அமைதி யாத்திரை செய்றதுக்கு முன்னாடி, ஒரு 15 வருஷம் அவங்க தன்னை மனசளவுல தயார்படுத்திக்கிட்டு இருந்தாங்க தெரியுமா?

அவங்களோட அமைதி யாத்திரையை 1953 ஆம் வருஷம் ஜனவரி முதல் நாள்ல தொடங்கினாங்க. மனுஷ இனம் அமைதியோட பாதையை புரிஞ்சி, அதில நடக்கிற வரைக்கும், அவங்க நாடு முழுதும் அமைதிக்காக நடந்து திரியறதுன்னு, தனக்குத்தானே ஒரு சங்கல்பம் எடுத்துக்கிட்டாங்க.

அவங்க கால்சட்டை பாக்கட்டில அவங்களுக்கு தேவை படுகிற பொருட்கள் என்னனென்ன இருந்தது தெரியுமா? சொன்னா அப்படியே வாயடைச்சிப்போவே! ஒரு சீப்பு, ஒரு பல் துலக்கும் பிரஷ், ஒரு பேனா அப்புறம் சில கடிதங்க, இவ்வளவு தான் வைச்சிருந்தாங்க. பணம்னு சுத்தமா அவங்க கிட்ட எதுவும் இல்ல.

அவங்க சட்டையோட முன்பக்கம் அமைதிப் பயணி (Peace Pilgrim) என்ற எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தது. சட்டையோட பின்பக்கம் அமைதிக்காக 25,000 மைல் பாத யாத்திரை ("25,000 Miles for Peace") என்ற எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தன. மக்கள் கிட்ட தொடர்பு ஏற்படுத்திக்கொள்றதுக்காக இந்த ஏற்பாடு செஞ்சாங்க.  

1964 ல, 11 வருஷம் கழிச்சி, தன்னோட 25,000 மைல் இலக்கை அவங்க அடைஞ்சாங்க. பல ஆயிரம் பேர்களுக்கு அவங்கள பத்தி தெரிய வந்தது. பல டீவி நிகழ்ச்சிகள்ல, செய்தி தாள்கள்ல, பள்ளிகள்ல, கல்லூரிகள்ல, சேவை அமைப்புகள்ல இப்படி பல இடங்கள்ல அவங்களை கூப்பிட்டு பேச வைச்சாங்க.

அவங்க எப்பவுமே Peace Pilgrim என்கின்ற பேராலத் தான் அழைக்கப்பட்டாங்க. அவங்க உண்மையான பேரை விட இதுவே போதும்ன்னு சொல்லுவாங்க. அப்போ அமெரிக்கா நாடு, பல இடங்கள்ல சண்டை போட்டுகிட்டு இருந்தது. கொரியா போர், வியாட்நாம் போர், ரஷ்யாவோட பனிப்போர் இப்படி பல நெருக்கடிகள் நிறைஞ்சு இருந்திச்சு.

மனுஷன் இப்போ, ஒரு பக்கம் அணு ஆயுத அழிவு, மறுபக்கம் அமைதியின் பொற்காலம் என்று கூரான பாகத்தில நடக்கிறான்ன்னு அவங்க சொன்னாங்க.

அவங்க வாழ்ந்த காலம் முழுக்க உள் அமைதியை வளர்கிறதை பத்தியும் அதனால உலக அமைதையை கொண்டுவர்றதை பத்தியுமே பேசிக்கிட்டு இருந்தாங்க.

ஓய்வில்லாம் நடைபயணம் மூலமா அமெரிக்கா முழுதும், கனடா, மெக்சிகோல எல்லாம் சில பகுதிகளுக்கு அவங்க போய் அமைதிக்கான பிரச்சாரம் செய்தாங்க. அவங்களக்கு சாவு வர்ற நிமிஷம் வரைக்கும் அவங்க நடைப்பயணத்தை கை விடவே இல்லை.


அந்த 25,000 மைல்கள் அப்புறமா, அவங்க நடந்த தூரத்தை எல்லாம் அவங்க கணக்கு வைச்சிக்கவே இல்லை. நடை, நடை, ஓயாம நடை தான்!

திடீர்ன்னு ஒரு சாலை விபத்தில July 7, 1981 அன்னைக்கி இறந்து போனாங்க.

வாழ்க்கை முழுசும் மனித சமூகத்தோட அமைதிக்காகவே வாழ்ந்தாங்க. அவங்க சொன்ன விஷயங்களை வைச்சி சின்ன புத்தகம் My Spiritual Growing Up: My Steps Toward Inner Peace - இலவசமா மென்புத்தகமா வெளியிட்டிருக்காங்க, சில நல்ல இதயம் படைச்சவங்க. அந்த புத்தகத்தை தமிழ்படுத்தி உங்களுக்கு விருந்தா கொடுக்கணும்னு எனக்கு ஆசை.

பங்காளிகளே! அடுத்த பதிவில இருந்து, அந்த புத்தகதை பகுதி பகுதியா, உங்களுக்காக, மொழிமாற்றி எழுதறேன். நீங்கள் எல்லாம் உற்சாகமா வரவேற்பீங்க என்கின்ற நம்பிக்கையோடு. 

நாமளும் தான் கொஞ்சம் உள் அமைதியை வளர்த்துக்கலாமே. நீங்க என்ன சொல்றீங்க? 


உலக அமைதி வளருதோ இல்லையோ, குறைஞ்சபட்சம் எல்லோருடைய வீட்டிலேயும் தங்கமணி, ரங்கமணி சண்டையாவது இல்லாம இருக்கும் இல்ல! நான் சொல்றது சரிதானே அப்பாவி தங்கமணி அக்கா?


தங்கமணி ரங்கமணியோட சண்டைகளை பத்தி தெரியாதவங்க இதை அழுத்தி போய் பாருங்க   முடிஞ்சா அவங்களுக்கு நல்லா புத்திமதி சொல்லிட்டுவாங்க

26 மேதைங்க இதபத்தி என்ன சொன்னாங்கன்னா...:

prabhadamu said...

good post :)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நம்ம வைகோ கூட நடைப்பயணம் போனாரே. நடைப்பயணம் போக எந்த பைக் நல்லா இருக்கும் தல?

Madhavan said...

we do walking everyday atleast 30 minutes to 1 hour (in a car).

prabhadamu said...

நண்பா எனக்கு ஓட்டுப் பட்டை வைக்க தெரியலை. முன்பு இருந்த டெர்மிலேட்டில் இருந்தது. ஆனால் இதில் வைக்க தெரியலை. அதனால் விட்டுட்டேன். முடிந்தால் உதவுங்களேன்.என் தளத்தையும் நீங்கள் நான் பிந்தொடரும் வளைத்ததில் வைத்ததுக்கும் மிக்க நன்றி நண்பா.http://azhkadalkalangiyam.blogspot.com/2010/09/blog-post_9396.html?showComment=1284946784209#c5772923190778764808

prabhadamu said...

///நம்ம வைகோ கூட நடைப்பயணம் போனாரே. நடைப்பயணம் போக எந்த பைக் நல்லா இருக்கும் தல?///


:)

small ஆப்பு said...

உங்கள் பிறந்த தேதி 9 , 19 , 29 இவைகளில் ஏதேனும் ஒன்றா?(9 ல் முடிவதால் தவறாக புரிந்து கொள்ள வேண்டாம், பின்னூட்டத்தில் சொல்லுங்க பங்காளி)

ஆர்.கே.சதீஷ்குமார் said...

சூப்பர் நடை!

தமிழ் உதயம் said...

அமைதி வேண்டி ஆயிரம் பேர் போராடினாலும், பிராத்தித்தாலும், அந்த அமைதியை கெடுக்க ஒருவன் போதுமே.

தியாவின் பேனா said...

good super

Chitra said...

பங்காளிகளே! அடுத்த பதிவில இருந்து, அந்த புத்தகதை பகுதி பகுதியா, உங்களுக்காக, மொழிமாற்றி எழுதறேன். நீங்கள் எல்லாம் உற்சாகமா வரவேற்பீங்க என்கின்ற நம்பிக்கையோடு.

...Won't it be copyright violation?

எஸ்.கே said...

ரொம்ப நல்லாயிருக்கு நண்பா.
அப்புறம் அந்த புத்தகம் தமிழில் இருக்கிறதே நண்பா.

http://www.peacepilgrim.org/FoPP/htm/transheet.htm
http://www.peacepilgrim.org/pdf-files/Steps/TamilSteps.pdf

என்னது நானு யாரா? said...

@எஸ்.கே

//அப்புறம் அந்த புத்தகம் தமிழில் இருக்கிறதே நண்பா.//

ஆமாம் நண்பா! அதில் பல இடங்களில் கடனமான வார்தைகள் இருக்கின்றன. அதனால் எல்லோருக்கும் புரியும்படியான வார்தைகளை பயன்படுத்தி எழுதுகின்றேன். அவர்களின் ஆக்கத்தையும் துணைக்கு எடுத்துக்கொள்கின்றேன். நன்றி நண்பா!

என்னது நானு யாரா? said...

@Chitra

//Won't it be copyright violation?//

இல்லைங்க சித்ரா! அவங்களே தெளிவா என்ன சொல்லி இருக்காங்கன்னா "People working for peace, spiritual development and the growth of human awareness throughout the world have our
willing permission to reproduce material from this book."

அதனால எந்த மீறலும் இல்லைங்க. உங்க அக்கறையான கேள்விக்கு நன்றி சித்ரா!

என்னது நானு யாரா? said...

@prabhadamu

நன்றி நண்பா! Voting Widget இணைப்பது பற்றி என்னுடைய ஈமெயிலுக்கு மெயில் அனுப்புங்கள் நண்பா! அதற்கான வழிமுறைகளை சொல்கின்றேன்.

என்னது நானு யாரா? said...

@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)

//நம்ம வைகோ கூட நடைப்பயணம் போனாரே. நடைப்பயணம் போக எந்த பைக் நல்லா இருக்கும் தல?//

அவரைக் கிண்டல் செய்றீங்க இல்ல. நான் அவர்கிட்ட போய் சொல்லப்போறேன். அப்புறம் தெரியும் உங்க கதை என்ன ஆகப்போகுதுன்னு.

என்னது நானு யாரா? said...

@Madhavan

//we do walking everyday atleast 30 minutes to 1 hour (in a car).//

உங்க நகைசுவை உணர்வு அமோகம் போங்க அண்ணா!

என்னது நானு யாரா? said...

@small ஆப்பு

//உங்கள் பிறந்த தேதி 9 , 19 , 29 இவைகளில் ஏதேனும் ஒன்றா?(9 ல் முடிவதால் தவறாக புரிந்து கொள்ள வேண்டாம், பின்னூட்டத்தில் சொல்லுங்க பங்காளி)//

நண்பா! தனிப்பட்ட விஷயத்தை தனியான முறையில் பேசிக்கொள்ளலாமே. உங்களின் ஈமெயில் முகவரி என்ன? சொல்லுங்கள். அல்லது எனது ஈமெயில் விலாசத்திற்கு நீங்கள் மெயில் அனுப்புங்கள். நாம் பேசுவோம்.

என்னது நானு யாரா? said...

@ஆர்.கே.சதீஷ்குமார்

உங்க பாராட்டுக்கு நன்றி!

@தியாவின் பேனா: உங்க பாராட்டுக்கும் நன்றி!

small ஆப்பு said...

smallaappu@gmail.com

GSV said...

Nalla Pagirvu... !!!

dr suneel krishnan said...

இவரை பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறோம்

என்னது நானு யாரா? said...

@dr suneel krishnan

//இவரை பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறோம்//

நன்றி நண்பா! உங்களைப் போன்றோரின் ஆர்வம் தான் எனக்கு உந்து சக்தியாக இருக்கிறது.

@GSV: உங்க பாராட்டுக்கு நன்றி நண்பா!

ப.செல்வக்குமார் said...

//பங்காளிகளே! அடுத்த பதிவில இருந்து, அந்த புத்தகதை பகுதி பகுதியா, உங்களுக்காக, மொழிமாற்றி எழுதறேன். நீங்கள் எல்லாம் உற்சாகமா வரவேற்பீங்க என்கின்ற நம்பிக்கையோடு.//

நிச்சயமா வரவேற்கிறோம் , எழுதுங்கள் ..!

யாதவன் said...

அருமையான படைப்பு பின்னி பெடல் எடுதிடிங்க

அம்பிகா said...

நல்ல பகிர்வு. இப்போ நிறைய பேருக்கு இதுதான் தேவைப் படுது

சிநேகிதி said...

நல்ல பகிர்வு

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

Post a Comment

பங்காளி! சரக்கு எப்படி? விக்குமா... விக்காதா...??? கொஞ்சம் சொல்லிட்டு போங்க!!!