பன்னீர் தெளிக்கிறோமில... ப்ளீஸ்... கொஞ்சம் தலை குனியுங்க...

வணக்கம் பங்காளீ! வாங்க, சவுக்கியங்களா? நம்ம வலைபதிவு பக்கம் வந்ததுக்கு நன்றீங்கோ...Get this Widget

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே! என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி! நண்பர்களே!

மனிதர்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் சிந்தனைகள், இங்கு சிதறிகிடக்கிறது. படித்து பார்த்து உங்கள் கருத்துக்களை இடவேண்டுகிறேன்!

தொடர்ந்து, இந்த வலைபதிவுக்கு உங்களின் ஆதரவை தாருங்கள்!!! நன்றி! தொடர்ந்து வருக!!!

இந்த நாள், உங்களுக்கு, இனிய நாளாக அமைவதாக!!!

பாசகார பங்காளி கூட்டமுங்க! நீங்களும் கூட வாறீகளா?

22-Sep-2010

உள் அமைதிக்கு உகந்த படிகள் - பாகம் 1


நான் உலகத்தை நோக்கிய போது, என்ன ஒரு கொடுமை! ஐயோ! மக்கள் சமூகத்திலே எவ்வளவு வறுமை! என்னிடம் இவ்வளவு அதிகமான பொருட்கள் இருக்கின்றனவே! ஆனால் ஒன்றும் இல்லாமல் அதிகமான என் சகோதர சகோதரிகள் பட்டினி கிடக்கின்றனரே என்று பலநாட்களாக, மனம் வேதனைப் பட்டுக்கொண்டிருந்தது.

வணங்குகிறோம் தாயே!


எப்படியும் இந்த வேதனைக்கு ஒரு தீர்வு கண்டாக வேண்டும். இந்த இயலாமை நிலையின் காரணமாகவும், ஒரு தீவிரமான தேடுதல் காரணமாகவும், கடைசியில் ஒரு வழி கிடைத்தது. நான் மரங்கள் அடர்ந்து இருந்த ஒரு ஒதுக்குப்புறப் பகுதியில் இரவு முழுதும் மனச்சஞ்சலத்துடன் நடந்துக்கொண்டிருந்தேன். வானத்திலே நிலா குளுமையான ஒளி வீசிக்கொண்டிருந்தது. நான் தரையில், மண்டியிட்டு கடவுளை நோக்கி, பிராத்தனை செய்தேன்.

பிராத்தனையின் ஊடே, என் வாழ்க்கையை பிறருக்கு சேவை செய்வதற்காகவே அர்பணிப்பதென்று ஒரு தீர்கமான தெளிவு கிடைத்தது. அந்த முடிவு முழுமையானதாகவும், தீவிரமானதாகவும், இச்சை இன்மை என்பதன் சுவடு சிறிதும் இல்லாததுமாக உணர்ந்தேன்.

கர்தாவே! தயவு செய்து என்னைப் பயன்படுத்திக் கொள்! என்று இறைவனிடம் வேண்டினேன். அப்போது ஒரு ஆழ்ந்த அமைதி என்னுள் குடிக்கொண்டது. இப்போது உங்களுக்கு சொல்ல விரும்புவது என்னவென்றால், அந்த நொடியில் மனம் முழுமையாக மாற்றம் கண்டது. அதிலிருந்து பின்வாங்குதல் என்பது இனி இருக்காது. இனி சுயநல வாழ்க்கைக்கு திரும்பிப் போகவே முடியாது.

அந்த நொடியில் இருந்து என்னுடைய வாழ்வின் இரண்டாவது கட்டத்தில் நுழைந்தேன். என்னால் என்ன முடியுமோ அவைகளை இல்லாதவர்களுக்கு கொடுக்க ஆரம்பித்தேன். நான் அதிசயமான ஒரு உலகத்தினுள் நுழைந்தேன் என்றே சொல்லலாம். அன்றிலிருந்து என்னுடைய வாழ்வு அர்த்தமுள்ளதாக ஆனது. நான் கடவுளின் ஆசியோடு நல்ல உடல் மன ஆரோக்கியத்தை பெற்று வாழ்ந்து வருகிறேன்.

இப்போது எனது உடல் வளமும் உறுதியாகியுள்ளது. அன்று முதல் இன்றுவரை பல்வேறு சிரமங்களுக்கு இடையிலும் எனது உடல் நலம் எந்த வகையிலும் பாதிக்கவில்லை. தலைவலியோ, காய்ச்சலோ, வலியோ இதுவரை தலைகாட்ட வில்லை. இதிலிருந்து நான் அறிந்தது என்னவெனில், உடல் நோய்க்கு முதல் காரணம் உள்ளத்தின் நோய்தான் என்றும், உள்ளத்தின் அமைதியே, உடல் நலத்துக்கு அடிப்படை ஆதாரம் என்பதாகும்.

அன்று முதல் எனது பணி அமைதிப் பணியாயிற்று. நாடுகளிடையே அமைதி, ஜாதி மதங்களிடையே அமைதி, இனங்களிடையே அமைதி, தனிமனிதர்களிடையே அமைதி, இவற்றுக்கெல்லாம் அடிப்படையான உள்ளத்தில் நிலவும் உள்அமைதி ஏற்பட, என்னாலானதைச் செய்வது என்று ஒரு இலட்சியத்தை கடைப்பிடிக்கின்றேன். 


ஆனால், முழுமையாக வாழ்வை அமைதிப் பணிக்காக ஒப்படைப்பதென்கின்ற மனதில் எழும் விருப்பத்திற்கும், நடைமுறையில் வாழ்ந்துவந்த வாழ்க்கைக்கும், பெரிய கடல் அளவு வித்தியாசம் இருக்கிறது என்று அனுபவப் பூர்வமாகக் கண்டேன். முழுமையான ஒரு அமைதி பயணியாக மாறுவதற்கு சிலபல தயாரிப்புக்கள் தேவையாக இருந்தன. இந்த அமைதி பணிக்காக, என்னைத் தயார் செய்ய எனக்கு 15 ஆண்டு காலம் பிடித்தது.

மனோ தத்துவ அறிஞர்கள் இன்று குறிப்பிடும் நான், எனது என்ற அகந்தை (Ego) மற்றும் மனசாட்சி (Conscience) என்பவற்றைப் புரிந்து கொள்ள எனக்கு வாய்ப்புக் கிட்டியது. இதனையே நான், சுயநல நாட்டம் மற்றும் ஆன்மீக நாட்டம் அல்லது கடவுளை மையபடுத்திய நாட்டம் என்று சொல்வேன்.

இந்த இரண்டும் இரு வேறு முரண்பட்ட வெவ்வேறு கண்ணோட்டமுடையவை என்பதும் தெரிய வந்தது. இந்த சுயநல நாட்டம், எப்போதும் தன்னுடைய சுகத்தை பற்றி மட்டுமே சிந்திக்கும் தன்மை கொண்டது. அது பிரபஞ்சம் முழுமையும் தன்னை மைய படுத்தியே சுற்ற வேண்டும் என்று எண்ணுகிறது.

ஆனால் நம்முடைய ஆன்மீக நாட்டமோ, முழுமனித சமூகத்தையே ஒரு உடலாக கொண்டு, தன்னை அந்த உடலின் சிறுக் கூறாக - ஒரு செல்லாக நினைக்கிறது. நீங்கள் உயர்ந்த நாட்டமான ஆன்மீக நாட்டத்தை வளர்த்துக்கொண்டால் உங்களிலும், மற்றவர்களிலும் இசைவை காண்பீர்கள்.

உடல், மனம், உண்ர்ச்சிகள் எல்லாம் கருவிகள் தாம். இவைகளை ஆன்மீக நாட்டம் கொண்ட மனது இயக்கும் போது போராட்டங்கள் வருவதில்லை. உள் அமைதி குடிக்கொள்கிறது. ஆனால் சுயநல மனது இயக்கும் போது போராட்டங்களே வாழ்க்கை என்று ஆகிறது.
அமைதியின் தூதுவர் -இயேசு பிரான்

ஆன்மீக நாட்டம் நம்முள் மிகுதியாகும் வரை கட்டுபாடுகள் மூலம் மனதை அடக்கலாம். நாம் வேண்டாம் என்று நினைத்தும் சில பல காரியங்களில் ஈடுபடுகின்றோம் என்றால் நமக்கு சுயக்கட்டுப்பாடு குறைவாக இருக்கிறது என்று அர்த்தம். நான் அதற்கு ஆன்மீக பாதையில் முன்னேறி செல்வதே சரியான தீர்வென்பேன். அது வரை சுயக்கட்டுப்பாடு தான் சிறந்த வழி!


பங்காளி! இன்னமும் நமக்கு நிறைய சொல்ல இருக்காங்க... 

சொன்னது வரைக்கும், உங்களை எந்தவிதத்தில பாதிச்சதுன்னு சொல்லிட்டுப் போங்களேன் மக்கா!

25 மேதைங்க இதபத்தி என்ன சொன்னாங்கன்னா...:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நல்ல பதிவு,. ஆனா ஒரு டவுட்.

கன்னட ஆர்பாட்டம் நடக்கும் போது அமைதியா எப்படி இருக்குறது?

எஸ்.கே said...

உங்களுடன் நாங்களும் பயணிப்போம்!

எஸ்.கே said...

மனம் அமைதியாக இல்லையென்றால் உடலும் கெட்டு விடும்.

Chitra said...

இதிலிருந்து நான் அறிந்தது என்னவெனில், உடல் நோய்க்கு முதல் காரணம் உள்ளத்தின் நோய்தான் என்றும், உள்ளத்தின் அமைதியே, உடல் நலத்துக்கு அடிப்படை ஆதாரம் என்பதாகும்.


....... Most of the cases, yes. There are few diseases that you inherit too. :-(

தமிழ் உதயம் said...

நல்ல முறையில் எங்களை அழைத்து போகிறிர்கள

கே.ஆர்.பி.செந்தில் said...

நாம் எவ்வளவு உணர்ச்சி வசபட்டாலும் நடப்பதே நடக்கும்.. அதனால் மன அமைதி முக்கியம்...

Padmanaban said...

http://alaigal-bala.blogspot.com/2010/09/blog-post_20.html . I hope u have read this. Expecting a "EHIR Pathivu" from you.

DrPKandaswamyPhD said...

ஆஜர் போட்டுக்கிறேன். வேற ஒண்ணும் சொல்லத் தோணவில்லை.

ப.செல்வக்குமார் said...

/// தலைவலியோ, காய்ச்சலோ, வலியோ இதுவரை தலைகாட்ட வில்லை//

நம்பவே முடியலைங்க ..!! ஒரு வேளை நல்லது செய்யனும்னு முடிவெடுத்ததால இருக்குமோ ..?!?

ப.செல்வக்குமார் said...

// பங்காளி! இன்னமும் நமக்கு நிறைய சொல்ல இருக்காங்க... //
சொல்லட்டும் நல்ல விஷயம் தானே ..!!

சிங்கக்குட்டி said...

:-).

venkat said...

அர்த்தமுள்ள பதிவு
வாழ்த்துக்கள்

அன்புடன் மலிக்கா said...

//இதிலிருந்து நான் அறிந்தது என்னவெனில், உடல் நோய்க்கு முதல் காரணம் உள்ளத்தின் நோய்தான் என்றும், உள்ளத்தின் அமைதியே, உடல் நலத்துக்கு அடிப்படை ஆதாரம் என்பதாகும்//

இதை நானும் ஆமோதிக்கிறேன்.

நல்ல பதிவு.

தொடர்ந்து எழுதுங்கள் அதான் உறவுக்காரனா ஆயாச்சில்ல.அடிச்சி தூள் கிளப்புங்க நல்ல விசயங்களை பகிர்வதில்..

மோகன்ஜி said...

சுவாரஸ்யமா எழுதியிருக்கிங்க.. நேரம் கிடைக்கும் போது உங்க மற்ற பதிவுகளையும் பாக்கறேங்க. வாழ்த்துக்கள்

என்னது நானு யாரா? said...

@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)

//கன்னட ஆர்பாட்டம் நடக்கும் போது அமைதியா எப்படி இருக்குறது?//

உள்ளத்தில அமைதி இருந்தாதான் நாம எந்த காரியத்தையும் பதட்டம் இல்லாம செய்ய முடியும். காந்தித் தாத்தா தான் நமக்கு உதாரணமா இருந்தாரு இல்ல?

என்னது நானு யாரா? said...

@எஸ்.கே

//மனம் அமைதியாக இல்லையென்றால் உடலும் கெட்டு விடும்.//

சரியா புரிஞ்சிருக்கீங்க நண்பா! உங்க ஆதரவுக்கு நன்றி!

என்னது நானு யாரா? said...

@Chitra

//Most of the cases, yes. There are few diseases that you inherit too. :-(//

ஆமாம் டீச்சரம்மா! நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்.

என்னது நானு யாரா? said...

@தமிழ் உதயம்

//நல்ல முறையில் எங்களை அழைத்து போகிறிர்கள//

மூன்றாம் உலக போர் வர்றதுக்கான சாதியங்கள் நிறைய இருக்கு இப்போ உலகத்தில. தனி மனிதன் கிட்ட அமைதி இல்லைன்னா அது எப்போ வேணும்னாலும் வரலாம். அதை தடுக்கத் தான் என்னால் ஆன சிறு முயற்சி.

உங்க ஆதரவை கொடுக்குறதுக்கு ரொம்ப நன்றி!

என்னது நானு யாரா? said...

@கே.ஆர்.பி.செந்தில்

//நாம் எவ்வளவு உணர்ச்சி வசபட்டாலும் நடப்பதே நடக்கும்.. அதனால் மன அமைதி முக்கியம்.//

ஆமாம் அண்ணாச்சி! உள்ளத்தில அமைதி இருந்தாதான் நாம எந்த காரியத்தையும் பதட்டம் இல்லாம செய்ய முடியும். உங்க கருத்து முற்றிலும் சரி தான் அண்ணாச்சி!

என்னது நானு யாரா? said...

@Padmanaban

//I hope u have read this. Expecting a "EHIR Pathivu" from you.//

அந்த பதிவை படித்து, அவர் கேட்டிருக்கின்ற கேள்விகளுக்கும், பின்னூட்டத்தில் பதில்களை சொல்லி இருக்கின்றேன். இனி அதற்கு எதிர் பதிவு இடவேண்டிய அவசியம் இல்லை. இல்லையா நண்பரே?

என்னது நானு யாரா? said...

@DrPKandaswamyPhD

//ஆஜர் போட்டுக்கிறேன். வேற ஒண்ணும் சொல்லத் தோணவில்லை.//

உங்க ஆஜரை ஏத்துக்கிறேன். வெளிப்படையா சொல்லியிருக்கீங்க. எனக்கு பிடிச்சிருக்கு. எப்போ உங்களுக்கு ஏதாவது கருத்து சொல்ல வருதோ அப்போ சொல்லிடுங்க. அது எல்லோருக்கும் பயனா இருக்கிறதுக்கு வாய்ப்பு இருக்கு இல்லையா ஐயா?

என்னது நானு யாரா? said...

@ப.செல்வக்குமார்

///// தலைவலியோ, காய்ச்சலோ, வலியோ இதுவரை தலைகாட்ட வில்லை//

நம்பவே முடியலைங்க ..!! ஒரு வேளை நல்லது செய்யனும்னு முடிவெடுத்ததால இருக்குமோ ..?!//

ஆமாம் தம்பி! மத்தவங்களுக்கு சேவை செய்யணும்னு நோக்கத்தில இறங்கிட்டப் போதும். நமக்கு உடம்புக்குள்ளாற யானை பலம் வந்திடும் தெரியுமா?

என்னது நானு யாரா? said...

@venkat

நன்றி வெங்கட்

நன்றி சிங்ககுட்டி

நன்றி மோகன்ஜி

@அன்புடன் மலிக்கா:

//தொடர்ந்து எழுதுங்கள் அதான் உறவுக்காரனா ஆயாச்சில்ல.அடிச்சி தூள் கிளப்புங்க நல்ல விசயங்களை பகிர்வதில்.//

ஆமாம் சம்பந்தி! உங்க ஊக்கத்துக்கு நன்றிங்க!

sweatha said...

வரி செலுத்தும் உங்கள் உரிமைகள் மீட்க ..
வரிகளாக்கி எழுதுங்கள் உங்கள் மனசாட்சியை .. ஜீஜிக்ஸ்.காமில்


சிறந்த எழுத்துக்கு ஒவ்வொரு வாரமும் Rs 500 பெறுங்கள்.
சமுதாய ஆர்வலர்களின் உலக மேடை www.jeejix.com .
பரிசு பெற்ற பதிவுகள் காண http://www.jeejix.com/Post/SubCategory?SCID=163

ப்ரியமுடன் வசந்த் said...

தொடரட்டும் ...

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

Post a Comment

பங்காளி! சரக்கு எப்படி? விக்குமா... விக்காதா...??? கொஞ்சம் சொல்லிட்டு போங்க!!!