பன்னீர் தெளிக்கிறோமில... ப்ளீஸ்... கொஞ்சம் தலை குனியுங்க...

வணக்கம் பங்காளீ! வாங்க, சவுக்கியங்களா? நம்ம வலைபதிவு பக்கம் வந்ததுக்கு நன்றீங்கோ...Get this Widget

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே! என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி! நண்பர்களே!

மனிதர்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் சிந்தனைகள், இங்கு சிதறிகிடக்கிறது. படித்து பார்த்து உங்கள் கருத்துக்களை இடவேண்டுகிறேன்!

தொடர்ந்து, இந்த வலைபதிவுக்கு உங்களின் ஆதரவை தாருங்கள்!!! நன்றி! தொடர்ந்து வருக!!!

இந்த நாள், உங்களுக்கு, இனிய நாளாக அமைவதாக!!!

பாசகார பங்காளி கூட்டமுங்க! நீங்களும் கூட வாறீகளா?

12-Sept-2010

இயற்கை மருத்துவம் குடியை கூட மறக்கடிக்குமா? ஆச்சரியம்தான்!

நான் ஒரு குடிக்காரனாக இருந்தேன்

எதற்கோ குடிக்க ஆரம்பித்தேன். விட முடியவில்லை. தொடர்ந்து குடித்தேன். பின் குடிப்பதிலேயே ஆராய்ச்சி செய்வோம் என்று ஆராய்ந்தேன். குடியை மட்டும் என்னால் விடமுடியவில்லை.

மூச்சி முட்டற அளவு குடிச்சா எப்படி மக்கா...!!!
லிவர் போனா பரவாயில்லையா???

எந்த முயற்ச்சி செய்தும் குடிபழக்கம் தொடர்ந்தது. என்னுடைய புண்ணியபலன் தான் என்று நினைக்கின்றேன். எனக்கு இயற்கை வாழ்வியல், இயற்கை மருத்துவத்தின் அறிமுகம் கிடைத்தது. 


என்ன ஒரு ஆச்சரியம் பாருங்கள்! இயற்கையுணவு சாப்பிட ஆரம்பித்த 43ஆவது நாளிலிருந்து குடிப்பழக்கம் தன்னாலே போய்விட்டது. இனி, என்னால் குடிக்கவே முடியாது. எனதுடலின் செல்கள், உணவுக்குழாய், எண்ணங்கள் எல்லாம் மாறி விட்டதை உணர்கிறேன். எனவே உடலுக்கு – ஆன்மீக உடலுக்கு ஒத்துக் கொள்ளாத உணவோ, குடியோ, போதைப் பொருட்களோ எதுவானாலும் எனது உடல் ஏற்றுக் கொள்ளாத சூழ்நிலை உருவாகி விட்டது.

இறைவனுக்கு, இறையுணவாகிய இயற்கையுணவிற்கு நன்றி! எனது குடிபழக்கம் அதுவாக என்னை விட்டுச் சென்று இன்றுடன் 53 நாட்கள் ஆகிவிட்டன.

10 நாட்களுக்கு முன் ஒரு விபத்து நடந்துவிட்டது. 15அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தேன். இடது காலில் மூட்டுக்குக் கீழே வலியாக இருந்தது.

2 நாட்கள் கழித்து இடது கால் அரையில் வீக்கம் (நெறிகட்டு) ஏற்பட்டது. அதிகாலை 4 மணியிலிருந்து பயங்கரக் குளிர் காய்ச்சல். போர்வை எடுத்து மூடிக் கொண்டேன். என்னால் நிற்கக் கூட முடியவில்லை. பின்பு, டாக்டர் கூறியபடி 4 முறை அஹிம்சை எனிமா எடுத்து கொண்டு (அஹிம்சை எனிமாவை பற்றி தெரியாதவர்கள் இங்கே அழுத்தவும்) எல்லா கழிவுகளையும் வெளியேற்றினேன்.

பின் 6 தம்ளர் தண்ணீர் அருந்தினேன். உடனே பாதி சுகம் தெரிந்தது. பிறகு காலை 5 மணிக்கு பச்சைத் தண்ணீரில் குளித்தேன். காய்ச்சல் 102 டிகிரி இருந்தது. என்ன தான் நடக்கிறது என்று பார்த்து விடுவோமே! ஒன்று காய்ச்சல் குணமாகி நான் புதிய தெம்புடன் இருக்க வேண்டும், அல்லது எது நடப்பினும் பரவாயில்லை என்று நம்பிக்கையுடன் செயல்பட்டேன். என்ன ஆச்சரியம்! 6 மணிக்கு காய்ச்சல் ஓடிவிட்டது. புது உற்சாகம்! புது தெம்பு! என்ன ஒரு அற்புதமான மருத்துவம்! அதோடு சேர்ந்து தலைவலியும் இருந்தது. அதுவும் பறந்து விட்டது.

எனக்கு ஏற்பட்ட புண்களை கூட தேங்காய் எண்ணெய், புற்றுமண், எலுமிச்சை தோல் வைத்து தேய்த்து வெயிலில் காய்ந்து, இயற்கை மருத்துவம் முறையில் குணமாக்கி கொள்கின்றேன். புண்களை கூட வெறும் இயற்கை மருத்துவம் மூலமே குணமாக்கி கொள்ளும் தைரியம் எனக்கு கிடைத்துவிட்டது

செலவில்லாமல் நோய்களை குணமாக்கி கொள்கிறேன். மிகுந்த விவேகம் கிடைத்து வருகிறது. ஆனந்தத்திற்கு அளவே இல்லை. மொத்தத்தில் விவேகானந்தர் வேண்டிய இளைஞர்களை உருவாக்க இறையுணவாகிய இயற்கையுணவு மிகுந்த பங்கு வகிக்கப் போகிறது.

‘எனது இளைஞர்கள் இரும்பைப் போன்ற தசைகளையும் உருக்கு போன்ற நரம்புகளையும் இடியோசை கேட்டு அஞ்சாத மனவலிமையையும் பெற்று எதற்கும் துணிந்த ஆண்மையிளம் சிங்கங்களாகத் திகழ வேண்டும் என்று கேட்டாரே!

அப்படிபட்ட துடிப்பு மிக்க புதுயுக இளைஞர்களை உருவாக்க இயற்கையுணவால் முடியும். எல்லாம் ஒன்று! காணுகின்ற எல்லாம் இறைவனே என்னும் எண்ணமும், எல்லா உயிரிடத்தும் அன்பு காட்டுங்கள் என்று வள்ளலாரின் கண்டுபிடிப்புகளும், எல்லோரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள்தான் என்ற எண்ணமும் வலுப்பெற இயற்கையுணவே தேவை.

எல்லோருள்ளும் இருப்பது ஒரு ஆன்மா தான். எல்லோரும் ஒன்று தான். ஆன்மாவை இணையுங்கள். அதை இணைப்பது இயற்கையுணவு தான்.

மதங்களால் முடியாததை, கட்சிகளால் முடியாததை, சாதிகளால் முடியாததை, வெறும் வார்த்தைகளால், பாட்டுக்களால், நூல்களால் முடியாததை “இயற்கையுணவு செய்யும். 

குறிப்பு: இந்த அனுபவ மடல் இயற்கை உணவே நோய் தீர்க்கும் மருந்து என்கின்ற புத்தகத்தில் இருந்து எடுத்தாளபட்டிருக்கிறது. இதன் ஆசிரியர். திரு. மூ.ஆ. அப்பன் அவர்கள். புத்தக பதிப்பாளர் - இந்து பப்ளிகேஷன்ஸ், சென்னை

இந்த அனுபவ மடலை எழுதியவர்: 

திரு. பி.எம்.என். பாலகிருஷ்ணன். M.Sc., B.Ed.,
உயிரியல் ஆசிரியர்,
காரப்பேட்டை நாடார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,
தெற்கு காட்டன் ரோடு, தூத்துக்குடி - 1  

நண்பர்களே! இவரின் அனுபவத்தை பற்றிய உங்களின் கருத்து என்ன? சொல்லிட்டு போங்களேன்.

ஓட்டு போட்டு போனீங்கன்னா, பலருக்கும் இந்த தகவல் சென்று அடைய பயனா இருக்கும்! 
          

16 மேதைங்க இதபத்தி என்ன சொன்னாங்கன்னா...:

எஸ்.கே said...

இது மிகவும் தேவையான பதிவு. பலரின் உடல்நிலை கெடுவதற்கு முக்கிய காரணம் புகை பிடித்தலும் மது பழக்கமும்.

ஆனால் இந்த பழக்கத்தை விடவும், அதன் பாதிப்பை குணப்படுத்திக் கொள்ளவும் குடிப்பவரின் ஒத்துழைப்பு வேண்டும்.

தமிழ் உதயம் said...

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு.மருந்தே உணவு... உணவே மருந்து... என்பது சரியான ஒன்று தான்.

dheva said...

நல்ல பயனுள்ள கட்டுரைகளை தொடர்ந்து கொடுக்குறீங்க.... பாராட்டுக்கள் தம்பி....!

என்னது நானு யாரா? said...

@எஸ்.கே:

//ஆனால் இந்த பழக்கத்தை விடவும், அதன் பாதிப்பை குணப்படுத்திக் கொள்ளவும் குடிப்பவரின் ஒத்துழைப்பு வேண்டும்.//

நண்பரே மிகவும் சரியாக சொன்னீர்கள். குடிபழக்கத்திற்கு அடிமையானவர்களின் பூரண ஒத்துழைப்பு அவசியம். அப்போது தான் அவர்களுக்கு முழுமையான விடுதலை கிடைக்கும்.

நன்றி நண்பரே!

என்னது நானு யாரா? said...

@தமிழ் உதயம்

//மனம் இருந்தால் மார்க்கம் உண்டு.மருந்தே உணவு... உணவே மருந்து... என்பது சரியான ஒன்று தான்.//

ஒத்த கருத்து உள்ளோர் கூடும்போது தான் எவ்வளவு ஆனந்தம்! உங்களின் கருத்தை அப்படியே ஏற்று கொள்கின்றேன். நன்றி நண்பரே!

என்னது நானு யாரா? said...

@dheva: தேவா! உங்க வருகை எனக்கு மிக மிக சந்தோஷத்தை கொடுக்குது.

உங்க பாராட்டு அதைவிட அதிகமா சந்தோஷத்தை கொடுக்குது.

உங்களை போல இருக்கிற நண்பர்கள் கொடுக்கிற ஊக்கமும் உறசாகமும் தான் எனக்கு ஊட்ட சத்தா அமையுது.

நன்றி தேவா! உங்க வருகை தொடரணும்னு கேட்டுகிறேன்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இப்பதான் என் நண்பனுக்கு அட்வைஸ் பண்ணினேன். இப்ப இத படிக்க சொல்றேன். நன்றி..

என்னது நானு யாரா? said...

@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா):

நாலு பேருக்கு நல்லது செய்ய கிளம்பிட்டீங்க போல இருக்கு. ரொம்ப நல்ல விஷயம் செய்யுங்க. உங்க சேவைக்கு என்னுடைய பாராட்டுக்கள்

ஜெயந்த் கிருஷ்ணா said...

நல்ல பயனுள்ள பதிவு... என் நண்பர்களுக்கு இதை அனுப்பி வைக்கிறேன்...

suneel krishnan said...

குடி பழக்கம் இன்று அரசு ஆதரவில் பிரமதாமாக கொண்டாட படுகிறது .நல்ல பதிவு .வாழ்த்துக்கள் நீங்கள் காந்தியவாதி மற்றும் இயற்க்கை மருத்துவத்தில் நாட்டம் உள்ளவர் என்பதால் இந்த சுட்டியை காணுங்கள் , எழுத்தளார் ஜெய மோகன் எழுதி இருக்கிறார் ..http://www.jeyamohan.in/?p=8138 இதில் இயற்கை மருத்துவத்தின் பால் காந்தியாரின் பார்வை பதிவு செய்து இருக்கிறார்கள்

என்னது நானு யாரா? said...

@வெறும்பய:

//என் நண்பர்களுக்கு இதை அனுப்பி வைக்கிறேன்..//

நல்ல விஷயம் தான் நண்பரே! நல்லா செய்யுங்க! நல்லது அவங்களுக்கும் தெரிவிக்கிறது நல்லது தானே!

என்னது நானு யாரா? said...

@dr suneel krishnan:

நண்பரே! நீங்கள் கொடுத்த லிங்கில் சென்று படித்து பார்த்தேன். அருமையாக ஜெயமோகன் அவர்கள், காந்திய சிந்தனைகளைப் பற்றி எழுதி இருக்கிறார். அவருடைய அஹிம்சா வழிமுறையை எப்படி இயற்கை மருத்துவத்தில் இருந்து பெற்றார் என்று விளக்கமாக எழுதி இருக்கிறார்.

படிக்க படிக்க ஆச்சரியமாக இருந்தது. நீங்கள் அந்த கட்டுரையை சுட்டி காட்டியமைக்கு நன்றி நணபரே!

மது, மாது, சூது, வாது இல்லாத சமூகம் தான் நாகரீகம் அடைந்த சமூகமாக இருக்கும். அதற்காக நம்மால் முடிந்ததை செய்வோம் நண்பரே! நன்றிகள் பல!! பல!!

Chitra said...

மிகவும் அருமையான பதிவு. இயற்கை உணவு முறையில், குடி பழக்கத்துக்கு அடிமையானவர்கள், விடுதலை ஆகி வர முடியும் என்பது நல்ல விஷயம்தானே.

என்னது நானு யாரா? said...

@Chitra:

சித்ரா அக்கா நன்றி! இந்த விஷயத்தை பத்தி எல்லோருக்கும் தெரியபடுத்தணும்னு தான் இதை எழுதிட்டு வரேன்.

நீங்களும் உங்களுக்கு தெரிஞ்சவங்களுக்கு இதை பத்தி எல்லாம் சொல்லணும்னு கேட்டுகிறேன்.

வெங்கட் நாகராஜ் said...

குடியை மறக்க இயற்கை மருத்துவம். நிறைய நண்பர்களுக்குத் தேவையான ஒரு பகிர்வு. நன்றி நண்பரே.

CS. Mohan Kumar said...

வலை சரத்தில் இன்று உங்களின் இந்த பதிவு குறித்து எழுதி உள்ளேன். இயலும் போது வாசிக்கவும்

http://blogintamil.blogspot.com/2010/09/blog-post_19.html

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

Post a Comment

பங்காளி! சரக்கு எப்படி? விக்குமா... விக்காதா...??? கொஞ்சம் சொல்லிட்டு போங்க!!!