பன்னீர் தெளிக்கிறோமில... ப்ளீஸ்... கொஞ்சம் தலை குனியுங்க...

வணக்கம் பங்காளீ! வாங்க, சவுக்கியங்களா? நம்ம வலைபதிவு பக்கம் வந்ததுக்கு நன்றீங்கோ...Get this Widget

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே! என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி! நண்பர்களே!

மனிதர்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் சிந்தனைகள், இங்கு சிதறிகிடக்கிறது. படித்து பார்த்து உங்கள் கருத்துக்களை இடவேண்டுகிறேன்!

தொடர்ந்து, இந்த வலைபதிவுக்கு உங்களின் ஆதரவை தாருங்கள்!!! நன்றி! தொடர்ந்து வருக!!!

இந்த நாள், உங்களுக்கு, இனிய நாளாக அமைவதாக!!!

பாசகார பங்காளி கூட்டமுங்க! நீங்களும் கூட வாறீகளா?

18 Sept 2010

அடுப்பில்லா சமையல் - வெஜிடபுள் அவல் மிக்ஸ் சாதம்

ஹலோ யாரு பேசறது, மாப்பிளயா? நான் தான்பா உன்னோட மச்சான் பேசறேன். எப்படி இருக்கீங்க எல்லோரும்? வீட்டில எல்லோருமே சௌக்கியம் தானே?

தங்கச்சி, குழந்த ரமா எல்லோருமே நல்லா இருக்காங்க இல்ல?

மச்சான்! அட இப்பத்தான் உன்னை நினைச்சிட்டு இருந்தேன். என்னமோ இங்கலீஷ்ல ஒரு பழமொழி சொல்லுவாங்களே ஆங்...Talk of the Devil - and the Devil appears! அதுப்போல இல்ல இருக்கு!  நினைச்சவுடனேயே நீயே ஃபோன் செய்றியே. இங்க எல்லோரும் நல்லத்தான் இருக்கோம்.

மாப்பிள! என்னை இங்கலீஷ்ல என்னனென்னமோ சொல்லி பாராட்டுறீக! ரொம்ப நன்றி! எனக்கு இங்கலீசில, சிங்கிள் பீசும் தெரியலைன்னா கூட உங்க நல்ல மனசு பத்தி தான் தெரியுமே?

(அட அக்க..மக்க.. நான் இவனை பிசாசுன்னு கலாய்கிறேன்.. அதை புரிஞ்சிக்காத மாதிரியே நடிக்கிறதை பாரு! நெஞ்சழுத்தம் புடிச்ச பய!)

என்ன மாப்பு! சைலண்ட் அயிட்ட! என்ன யோசிக்கிற!

மச்சான்! அது ஒன்னுமில்ல! ஏதோ யோசனையில இருந்திட்டேன். சரி அதை விடு! நீ சொல்லி கொடுத்த அடுப்பில்லா சமையல் ரெஸிபிகளோட மகிமையை பத்தி தெரியுமா! இப்ப ஐயாவோட மவுசு ரொம்ப ஏறிபோச்சி! உன் தங்கச்சிக் கூட என்னை பெருமையா பாக்குறான்னா பாறேன்.

மச்சான்! வேற எதாவது அடுப்பில்லாத சமையல் ரெஸிபி இருந்தா சொல்லேன். இப்போ அடிக்கடி வீட்டில பழ சேலட், பேரிச்சை முந்திரி லட்டு எல்லாம் செய்ஞ்சி சாப்பிடறோம். எல்லோருமே நல்லா இருக்குன்னு சொல்றாங்க! (ஹைலைட் செய்த ரெஸிப்பி எல்லாம் "அடுப்பில்லா சமையல்" லேபில்ல இருக்குதுங்க)

என் மவுஸை தக்கவைச்சிறேன்ப்பா! சீக்கிரம் ஏதாவது ஒரு நல்ல ரெஸ்பியை சொல்லு!

சரி வேற ஒரு ரெஸிபியா....ம்ம்ம்ம் யோசிக்கிறேன்ப்பா... சரி சொல்றேன். பேப்பரு எடுத்து எழுதிக்கோ!


இந்த ரெஸிபியோட பேரு வெஜிடபுள் அவல் மிக்ஸ் சாதம்

5 ஆளுங்களுக்கு தேவையானதை சொல்றேன்! நோட் பண்ணிக்கோ!

அவல்               - 500 கிராம்
தேங்காய் துருவல்    - 2 மூடிகள்

காய்கறிகள்:   
பெரிய வெங்காயம்    - 2 
காரட்                - 2
தக்காளி              - 2
வெள்ளரி             - 1
எலுமிச்சை           - 3
இஞ்சி                - 25 கிராம்
கோஸ்               - 100 கிராம்
மிளகுத்தூள், சீரகத்தூள் - கொஞ்சமாக
கொத்தமல்லிதழை
கருவேப்பிலை        - கொஞ்சமாக
குடைமிளகாய்        - 1
உப்பு                 - சுவைக்கு ஏற்றபடி. கொஞ்சம் குறைவா இருந்தா கூட தப்பில்லை மாப்பு!

தயாரிக்கிற முறையை சொல்றேன் பாரு! கவனமா நோட் பண்ணிக்கோ!

அவலை சுத்தம் செய்து கல்லெல்லாம் நீக்கிட்டு, தண்ணியில கழுவி, அப்புறமா நல்ல தண்ணியில ஒரு 10 நிமிஷம் ஊற வைப்பா!


வெங்காயத்தை தோல் நீக்கிட்டு, பொடியா நறுக்கிக்கோ! காரட், தக்காளி, கோஸ், குடமிளகாய் எல்லாத்தையும் கழுவிட்ட பின்னாடி சின்ன சின்ன பீஸா வெட்டு! இஞ்சியை தோல் சீவிட்டு, அதையும் சின்னதா வெட்டிக்கோ! கொத்தமல்லி தழை, கருவேப்பில்லை எல்லாத்தையும் கூட முதல்ல கழுவிட்டு சின்ன சின்னதா வெட்டிக்கோ! எலுமிச்சை பழத்தை பிழிஞ்சி சாறு எடுத்துக்கோ!

ஊறவைச்ச அவல் இருக்கில்ல? அத்தோட இந்த வெட்டிய காய்கறிங்க, தேங்காய் திருகல், இஞ்சி, கொத்தமல்லித் தழை போட்டபின்னாடி, மிளகுதூள், சீரகத்தூள், உப்பு, எலுமிச்சை சாறு எல்லாம் சேர்த்து கிளறிவிட்டா, உன்னோட வெஜிடபுள் அவல் மிக்ஸ் சாதம் ரெடி!

இதை சர்கரை வியாதி காரங்களும் இந்த உணவை தாராளமா சாப்பிடலாம். சமைச்ச சாதத்துக்கு பதிலா ஒரு வேலை இதையே முழுசா எடுத்துக்கலாம். இதுக்கு சைட் டிஷ்-ஆ தேங்காய் சட்டினி, வேற்கடலை சட்டினி ஏதாவது செய்துக்கலாம்

High BP ஆளுங்களும், மலச்சிக்கல் ஆளுங்களும், உடல் பருமனால அவதிபடுறவங்களும், அல்சர், அசிடிட்டி பிராப்ளம் இருக்கிறவங்களும், மூட்டுவலி ஜீரண கோளாறு இருக்கிறவங்க, வயிற்று வலி ஆளுங்களும் அடிக்கடி இந்த அடுப்பில்லா ஆரோக்கிய உணவை சாப்பிட்டு வந்தா, அவங்க நோயிலிருந்து எல்லாம் சீக்கிரம் விடுதலை பெறலாம் மாப்பு!

ரொம்ப நன்றி மச்சான்! இப்பவே செய்து பார்திடறேன். அடுப்பில்லாம சமையல் ரெஸிபிக்களை சும்மா ஃபிங்கர் டிப்ஸ்லேயே வைச்சிருக்கீங்க போல! ஆரோக்கியத்துக்கு குறைஞ்ச பட்சம் ஒரு வேலையாவது சமைக்காத உணவு தான் பெட்டர்ன்னு என்னோட அனுபவத்தில தெரிஞ்சிகிட்டேன்

ஆமாம் மாப்பிள! எனக்கு கூட நண்பர்கள் ஈமெயில் மூலமா, ஃபோன் மூலமா, சமைக்காத உணவை சாப்பிட்டு ஆரோக்கியமா இருக்கிறதா சொல்றாங்க! சரி பேங்கில ஒரு வேலை இருக்கு! அப்புறமா பேசறேன்

நண்பர்களே! உங்க இயற்கை உணவு அனுபவங்கள் இருந்தா பகிர்ந்துக்கோங்க! அது மத்தவங்களுக்கும் பயனா இருக்கும் இல்ல! என்ன நான் சொல்லுறது? 

இயற்கை வாழ்வியல், இயற்கை மருத்துவ பதிவுகளை எல்லோரும் தொடர்ந்து படிச்சிட்டு வர்றீங்க! எனக்கு மகிழ்ச்சியா இருக்கு! இதிலே எதை எதை Follow செய்றீங்கன்னு சொன்னீங்கன்னா சந்தோஷப்படுவேன்.

33 மேதைங்க இதபத்தி என்ன சொன்னாங்கன்னா...:

Unknown said...

பங்காளி...இன்னிக்கு அவல் புலாவ்தான் பிரேக்பாஸ்ட்.

என்னது நானு யாரா? said...

@கலாநேசன்

//பங்காளி...இன்னிக்கு அவல் புலாவ்தான் பிரேக்பாஸ்ட்//

வணக்கம் பங்காளி! நல்லதுங்க! இங்கே கொடுத்திருக்கிற மாதிரி அடுப்பில்லாம சமைச்சிப் பார்த்து சொல்லுங்க!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஓகே. நன்றி. அம்மா ஊர்ல இல்லை. நான் ட்ரை பண்ணி பாக்குறேன்

சௌந்தர் said...

நல்ல டிப்ஸ் எல்லோரும் அவல் பிரியாணி சாபிடுங்கள்

ஜெயந்த் கிருஷ்ணா said...

கலக்கிட்ட பங்காளி... இன்னைக்கே செஞ்சிட வேண்டியது தான்...

Chitra said...

இந்த ரெசிபி நல்லா இருக்குது..... பகிர்வுக்கு நன்றி.

GSV said...

இந்த ரெசிபிய ஒரு 15 வருசத்துக்கு முன்னாடி சாப்பிட்டு இருக்கேன், ஆனா இதே போல ஸ்வீட் ரெசிபி ஒன்னு பண்ணுவாங்க அதுதான் பிடிக்கும்.

தமிழ் உதயம் said...

அவசியம் செய்யணும் சார். ஒரு நல்ல பகிர்வு.

எஸ்.கே said...

ரொம்ப நல்லாயிருக்கு! ஒருநாள் பானகம் பற்றி சொல்லுங்க!

செல்வா said...

அவுல்ல இப்படி கூட பண்ணலாமா ..?
முயற்சிக்கலாம்..!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஆஹா...படிக்கவே அருமையா இருக்கு அடுப்பில்லா சமையல், இந்த மாதிரி ஐட்டம் நெறைய போடுங்க, நமக்கு ரொம்ப யூஸ் ஆகும்!

என்னது நானு யாரா? said...

@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)

//நான் ட்ரை பண்ணி பாக்குறேன்//

சரி ரமேஷ்! செய்து பார்த்து சொல்லுங்க!

@சௌந்தர்: நன்றி! வீட்டில செய்து பாருங்க

@வெறும்பய: நன்றி! செய்து பார்த்தப் பின்னாடி ரிசல்ட் சொல்லுங்க

@Chitra: அப்பாடா! எங்கே நீங்க Present Sir சொல்லிட்டு போவீங்களோன்னு பயந்திட்டு இருந்தேன். நீங்களும் வீட்டிலே ட்ரை செய்யுங்க!

என்னது நானு யாரா? said...

@GSV

//இதே போல ஸ்வீட் ரெசிபி ஒன்னு பண்ணுவாங்க அதுதான் பிடிக்கும்//

அப்படியா பங்காளி! அதையும் அடுத்த தடவை சொல்லி போடறேன்.

@தமிழ் உதயம்: நன்றி நண்பரே!

@எஸ்.கே: //ஒருநாள் பானகம் பற்றி சொல்லுங்க!//

இந்த ரேஞ்ச்ல போனா அப்புறம் சுடுதண்ணி எப்படி செய்யணும்னு கேட்பீங்க போல இருக்கே பங்காளி!

என்னது நானு யாரா? said...

@ப.செல்வக்குமார்

//அவுல்ல இப்படி கூட பண்ணலாமா ..?
முயற்சிக்கலாம்..!!//

செய்து பார்த்து சொல்லுங்க செல்வா!

என்னது நானு யாரா? said...

@பன்னிக்குட்டி ராம்சாமி

//இந்த மாதிரி ஐட்டம் நெறைய போடுங்க, நமக்கு ரொம்ப யூஸ் ஆகும்!//

நன்றிங்க சாரே! கண்டிப்பா நிறைய எழுதறேன். எல்லோருக்குமே இயற்கை வாழ்வியல், இயற்கை உணவு, இயற்கை மருத்துவம் பற்றி தகவல்களை சொல்றது தானே நம்ப நோக்கமே!

ப.கந்தசாமி said...

ரொம்ப நல்ல ரெசிபி. வயத்துக்கு இடைஞ்சல் பண்ணாத உணவு.

கருடன் said...

படிக்கும்போதே சாப்பிடனும் போல இருக்கு... இந்த் காஞ்சிபோன துபாய்லா யாரு நமக்கு செஞ்சி தருவா.... அவ்வ்வ்வ்வ்

Anonymous said...

hi pangaali.
i am present
i 've read the recipe
shall try it tomorrow
could you post the sweet recipe asap.
nirmala

தெய்வசுகந்தி said...

நல்ல ரெசிபி!!

ப்ரியமுடன் வசந்த் said...

வசந்த் நான் வாழைப்ப்ழமும் அவலும் சக்கரையும் குழைத்து சாப்ட்ருக்கேன் இதென்ன புது ரகமா?

சொல்லிக்கொடுக்கிற ஸ்டைல் ஹாஸ்யமா இருக்கு குட்...

என்னது நானு யாரா? said...

@DrPKandaswamyPhD

//வயத்துக்கு இடைஞ்சல் பண்ணாத உணவு.//

ஐயா! சரியா சொல்லிப் போட்டீங்க நீங்க!

@TERROR-PANDIYAN(VAS):

//இந்த் காஞ்சிபோன துபாய்லா யாரு நமக்கு செஞ்சி தருவா.//

தன் கை தனகுதவின்னு கேள்விபட்டதில்லையா பங்காளி?

@Nirmala: //could you post the sweet recipe asap.//

சீக்கிரமே எழுதறேன் தோழி! நன்றி

என்னது நானு யாரா? said...

@தெய்வசுகந்தி

நன்றி தோழியாரே!

@ப்ரியமுடன் வசந்த்: அட! அட! நம்ப கடைப் பக்கம் வந்திட்டுப் போனீங்களா?

ரெசிபியை வீட்டில செஞ்சிப் பாத்து சொல்லுங்க

cheena (சீனா) said...

அன்பின் பங்காளி

செஞ்சு பாப்ப்போம் - சாப்பிட்டுப் பாப்போம் - எப்படி இருக்கும்னு தெரில - அவல் ஓக்கெ - பச்சைக் காய்கறி - நோ அடுப்பு - ம்ம்ம்ம் - டிரை பண்ணுவோம்

நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா

settaikkaran said...

ட்ரை பண்ணிற வேண்டியது தான். :-)

Srikala B said...

அடுப்பில்லா சமயலுக்கு அவள் சிறந்தது.அதிலும் கைக்குத்தல் அவல் (சிவப்பு அவல்) இப்போது எல்லா கடைகளிலும் கிடைக்கிறது.
உங்கள் பதிவு மிகவும் அருமை.
பேல் எனப்படும் அரிசிப் பொறியிலும் ,துருவிய கைகளோ, நறுக்கிய பழங்களோ ,பாதம் ,கடலை போன்ற வகைகளோ போட்டு அடுப்பில்லா உணவு செய்யலாம்

Unknown said...

உங்களுடைய பதிவுகள் அனைத்தையும் நான் சேமித்துக் கொண்டிருக்கிறேன்.. இந்த பதிவுகளில் கூறியுள்ளபடி சாப்பிடப் போகிறேன் ...

என்னது நானு யாரா? said...

@cheena (சீனா)

//அவல் ஓக்கெ - பச்சைக் காய்கறி - நோ அடுப்பு - ம்ம்ம்ம் - டிரை பண்ணுவோம்//

அண்ணா ட்ரை செய்தப்பின்னாடி சொல்லுங்க

உங்க வருகைக்கு நன்றி அண்ணா!

என்னது நானு யாரா? said...

@சேட்டைக்காரன்

தயங்காம ட்ரை செய்யுங்க சேட்டை!

@கே.ஆர்.பி.செந்தில்:

//இந்த பதிவுகளில் கூறியுள்ளபடி சாப்பிடப் போகிறேன்//

சாப்பிட்ட பின்னாடி உங்க அனுபவத்தை சொல்லுங்க அண்ணாச்சி!

என்னது நானு யாரா? said...

@Kala BN

உங்க சமையல் குறிப்புக்கு நன்றிங்க கலா!

தொடர்ந்து வந்து உங்க ஆதரவை கொடுங்க!

r.sivakumar,hubli said...

அட காஸ் விக்கற விலைல இது நல்ல யொசனையா இரூகெ பங்காளி

Unknown said...

விஷயம் நல்லாருக்கு! இதுபோலே வேறெதாவது இருந்தா கொஞ்சம் எனக்கு மின்னஞ்சல் அனுப்புங்களேன்.. ursenix@gmail.com

ganesan said...

பயனுள்ள தகவல்களுக்கு நன்றிங்க.

விசு அய்யர் said...

ம்ம்.....

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

Post a Comment

பங்காளி! சரக்கு எப்படி? விக்குமா... விக்காதா...??? கொஞ்சம் சொல்லிட்டு போங்க!!!