என்ன..!!! என்ன.. மேட்டருன்னு கேட்கறீங்களா கண்ணு...???
கீழே இருக்கிறத படிச்சிப் பாருங்க... உங்களுக்கே புரிப்படும்...
பெங்காளிகாரர் ஒருத்தரு செய்த நல்ல காரியம் என்னான்னு படிச்சுப்பாருங்க...
ஞாபகம் வருதே.. ஞாபகம் வருதே...உன்னில் பயணித்தது ஞாபகம் வருதே... |
Okhil Babu's letter to the Railway Department
"I am arrive by passenger train Ahmedpur station and my belly is too much swelling with jackfruit. I am therefore went to privy. Just I doing the nuisance that guard making whistle blow for train to go off and I am running with 'lotah' in one hand and dhoti' in the next when I am fall over and expose all my shocking to man and female women on plateform. I am got leaved at Ahmedpur station.
This too much bad, if passenger go to make dung that dam guard not wait train five minutes for him. I am therefore pray your honour to make big fine on that guard for public sake. Otherwise I am making big report to papers."
Okhil Chandra Sen wrote this letter to the Sahibganj divisional railway office in 1909.
இது நான் பெங்களூர் ரெயில்வே ஸ்டேஷன்ல இருக்கும்போது வெயிட்டிங்க் ஹாலில ஒட்டப்பட்ட மேட்டரு...
இந்த புண்ணியவான் மட்டும் 100 வருஷத்துக்கு முன்னாடி இப்படி கம்ப்ளைண்ட் லெட்டர் எழுதலைன்னா ட்ரைன்ல போறவங்க கதி எல்லாம் என்ன ஆகி இருக்கும் யோசிச்சிப் பாருங்க. ஏன்னா...??? இந்த நல்லவரு செஞ்ச காரியத்தினால தான் எல்லா ட்ரைன்லேயும் டாய்லெட்களை முதல் முறையா அமைச்சாங்களாம்.
இந்த புண்ணியவானோட குடும்பம் நல்லா இருக்கட்டும்னு வாழ்த்தலாம் இல்லையா மக்கா???
----------------------------------------------------------------------
அப்புறம் உங்க கிட்ட மனம் திறந்து ஒண்ணு இரண்டு வார்த்தைங்க பேசணும் பங்காளி தோழர்களே, தோழிகளே.
என்னைப் பத்தி சில விஷயங்களை உங்களோட பகிர்ந்துக்கலாம்னு நினைக்கிறேன். என் மனசு உலகியல் வாழ்க்கையில நிலைக்கொள்ள மாட்டேங்குது. எப்போதும் ஒரு தேடுதலோடு தவித்துக்கொண்டிருக்கிறது. துறவை நாடிக்கொண்டிருக்கிறது. சின்ன வயசில இருந்தே தேடுதல் ஆரம்பிச்சிடுச்சு... மத்தவங்கப் போல இயல்பா உலகியல் வாழ்க்கையில - இல்லறத்தில ஒட்டி வாழ முடியல. இப்போ விபஸ்ஸனா தியானம் பயிற்சி செய்துக்கிட்டு இருக்கேன்.
இந்த மாசம் 15ம் தேதி மலேசியா கிளம்பி அங்கே புகழ் பெற்ற புத்த துறவி Ajahn Brahm என்கிறவர் நடத்துகின்ற 10 நாள் தியான முகாமில கலந்துக்கிறேன். டிசம்பர் 28 ஆம் தேதி திரும்பி வருகின்றேன். அப்புறம் ஜனவரி மாசம் மத்தியல இருந்து, 3 அல்லது 4 மாச காலத்துக்கு நேபாளத்தில தீவிர தியான பயிற்சியில ஈடுபடறேன்.
விட்டு விடுதலை ஆகி நிற்பாய் –இந்த
சிட்டுக் குருவியைப் போலன்னு பாரதி பாடல் எனக்குள்ள ஒலிச்சுக்கிட்டே இருக்கு...
திரும்பவும் பழைய வேகத்தோடு பதிவுகளை எழுதுவேனா இல்லையான்னு எனக்கு தெரியாது. முழுமையான துறவி ஆகிவிட விருப்பம்.
எனக்கு திருமணம் ஆகவில்லை. வயது 37 ஆகிறது. பெற்றோர்களின் வற்புறுத்தல்கள் இருந்தபோதும் திருமண பந்தத்தில் நுழைய மனம் விரும்பவில்லை. அந்த எல்லாம் வல்ல இயற்கை என்னை எந்த வழியில் நடத்தி செல்கிறதோ தெரியவில்லை. கூடிய விரைவில் துறவியாகி பரந்து விரிந்துகிடக்கும் மக்கள் கூட்டத்திற்கு என்னாலான சேவைகளை செய்ய விருப்பம்.
முழுமையான துறவி ஆகும்வரை, சந்தர்ப்பம் கிடைக்கும் போது எல்லாம், நண்பர்கள் உங்களோட பதிவுகளை படிக்க விருப்பம். அதேப்போல மனசு விரும்புமானால் சிறு எண்ணிக்கையில பதிவுகளை எழுதவும் விருப்பம்.
மலேசியா சென்றுவிட்டு வந்தவுடன் மலேசியா பயண அனுபவங்களை எழுதறேன்.
நீங்கள் என்மீது பொழிகின்ற உங்களின் அன்பும் பாசமும் என் கண்களில் அனிச்சையாக கண்ணீரை பெருக்குகின்றது.
உங்கள் அனைவருக்கும்
என் மனத்தின் ஆழத்திலிருந்து,
உயிரின் மூலத்திலிருந்து,
என நன்றிகளையும் வாழ்த்துக்களையும்
தெரியபடுத்திக் கொள்கின்றேன்.
உங்களின் நினைவுகள் என் மனதில் நிழலாடிக்கொண்டிருக்கும் என்பது மட்டும் உண்மை...
இப்படிக்கு
உங்க அன்பு உறவுக்காரன்
வசந்த்