பன்னீர் தெளிக்கிறோமில... ப்ளீஸ்... கொஞ்சம் தலை குனியுங்க...

வணக்கம் பங்காளீ! வாங்க, சவுக்கியங்களா? நம்ம வலைபதிவு பக்கம் வந்ததுக்கு நன்றீங்கோ...Get this Widget

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே! என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி! நண்பர்களே!

மனிதர்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் சிந்தனைகள், இங்கு சிதறிகிடக்கிறது. படித்து பார்த்து உங்கள் கருத்துக்களை இடவேண்டுகிறேன்!

தொடர்ந்து, இந்த வலைபதிவுக்கு உங்களின் ஆதரவை தாருங்கள்!!! நன்றி! தொடர்ந்து வருக!!!

இந்த நாள், உங்களுக்கு, இனிய நாளாக அமைவதாக!!!

பாசகார பங்காளி கூட்டமுங்க! நீங்களும் கூட வாறீகளா?

11-Dec-2010

கோயில் கட்டுங்கப்பா இந்த ஆளுக்கு, அப்பு!

என்ன..!!! என்ன.. மேட்டருன்னு கேட்கறீங்களா கண்ணு...???

கீழே இருக்கிறத படிச்சிப் பாருங்க... உங்களுக்கே புரிப்படும்...


பெங்காளிகாரர் ஒருத்தரு செய்த நல்ல காரியம் என்னான்னு படிச்சுப்பாருங்க...

ஞாபகம் வருதே.. ஞாபகம் வருதே...உன்னில் பயணித்தது
ஞாபகம் வருதே...

Okhil Babu's letter to the Railway Department

"I am arrive by passenger train Ahmedpur station and my belly is too much swelling with jackfruit. I am therefore went to privy. Just I doing the nuisance that guard making whistle blow for train to go off and I am running with 'lotah' in one hand and dhoti' in the next when I am fall over and expose all my shocking to man and female women on plateform. I am got leaved at Ahmedpur station.

This too much bad, if passenger go to make dung that dam guard not wait
train five minutes for him. I am therefore pray your honour to make big fine on that guard for public sake. Otherwise I am making big report to papers."

Okhil Chandra Sen wrote this letter to the Sahibganj divisional railway
office in 1909. 


இது நான் பெங்களூர் ரெயில்வே ஸ்டேஷன்ல இருக்கும்போது வெயிட்டிங்க் ஹாலில ஒட்டப்பட்ட மேட்டரு...

இந்த புண்ணியவான் மட்டும் 100 வருஷத்துக்கு முன்னாடி இப்படி கம்ப்ளைண்ட் லெட்டர் எழுதலைன்னா ட்ரைன்ல போறவங்க கதி எல்லாம் என்ன ஆகி இருக்கும் யோசிச்சிப் பாருங்க. ஏன்னா...??? இந்த நல்லவரு செஞ்ச காரியத்தினால தான் எல்லா ட்ரைன்லேயும் டாய்லெட்களை முதல் முறையா  அமைச்சாங்களாம்.

இந்த புண்ணியவானோட குடும்பம் நல்லா இருக்கட்டும்னு வாழ்த்தலாம் இல்லையா மக்கா???
----------------------------------------------------------------------

அப்புறம் உங்க கிட்ட மனம் திறந்து ஒண்ணு இரண்டு வார்த்தைங்க பேசணும் பங்காளி தோழர்களே, தோழிகளே.

என்னைப் பத்தி சில விஷயங்களை உங்களோட பகிர்ந்துக்கலாம்னு நினைக்கிறேன். என் மனசு உலகியல் வாழ்க்கையில நிலைக்கொள்ள மாட்டேங்குது. எப்போதும் ஒரு தேடுதலோடு தவித்துக்கொண்டிருக்கிறது. துறவை நாடிக்கொண்டிருக்கிறது. சின்ன வயசில இருந்தே தேடுதல் ஆரம்பிச்சிடுச்சு... மத்தவங்கப் போல இயல்பா உலகியல் வாழ்க்கையில - இல்லறத்தில ஒட்டி வாழ முடியல. இப்போ விபஸ்ஸனா தியானம் பயிற்சி செய்துக்கிட்டு இருக்கேன்.

இந்த மாசம் 15ம் தேதி மலேசியா கிளம்பி அங்கே புகழ் பெற்ற புத்த துறவி Ajahn Brahm என்கிறவர் நடத்துகின்ற 10 நாள் தியான முகாமில கலந்துக்கிறேன். டிசம்பர் 28 ஆம் தேதி திரும்பி வருகின்றேன். அப்புறம் ஜனவரி மாசம் மத்தியல இருந்து, 3 அல்லது 4 மாச காலத்துக்கு நேபாளத்தில தீவிர தியான பயிற்சியில ஈடுபடறேன்.

விட்டு விடுதலை ஆகி நிற்பாய் இந்த
சிட்டுக் குருவியைப் போலன்னு பாரதி பாடல் எனக்குள்ள ஒலிச்சுக்கிட்டே இருக்கு...

திரும்பவும் பழைய வேகத்தோடு பதிவுகளை எழுதுவேனா இல்லையான்னு எனக்கு தெரியாது. முழுமையான துறவி ஆகிவிட விருப்பம்.

எனக்கு திருமணம் ஆகவில்லை. வயது 37 ஆகிறது. பெற்றோர்களின் வற்புறுத்தல்கள் இருந்தபோதும் திருமண பந்தத்தில் நுழைய மனம் விரும்பவில்லை. அந்த எல்லாம் வல்ல இயற்கை என்னை எந்த வழியில் நடத்தி செல்கிறதோ தெரியவில்லை. கூடிய விரைவில் துறவியாகி பரந்து விரிந்துகிடக்கும் மக்கள் கூட்டத்திற்கு என்னாலான சேவைகளை செய்ய விருப்பம்.

முழுமையான துறவி ஆகும்வரை, சந்தர்ப்பம் கிடைக்கும் போது எல்லாம், நண்பர்கள் உங்களோட பதிவுகளை படிக்க விருப்பம். அதேப்போல மனசு விரும்புமானால் சிறு எண்ணிக்கையில பதிவுகளை எழுதவும் விருப்பம்.

மலேசியா சென்றுவிட்டு வந்தவுடன் மலேசியா பயண அனுபவங்களை எழுதறேன்.

நீங்கள் என்மீது பொழிகின்ற உங்களின் அன்பும் பாசமும் என் கண்களில் அனிச்சையாக கண்ணீரை பெருக்குகின்றது.

உங்கள் அனைவருக்கும்
என் மனத்தின் ஆழத்திலிருந்து,
உயிரின் மூலத்திலிருந்து,
என நன்றிகளையும் வாழ்த்துக்களையும்
தெரியபடுத்திக் கொள்கின்றேன்.

உங்களின் நினைவுகள் என் மனதில் நிழலாடிக்கொண்டிருக்கும் என்பது மட்டும் உண்மை...

இப்படிக்கு
உங்க அன்பு உறவுக்காரன்
வசந்த் 

53 மேதைங்க இதபத்தி என்ன சொன்னாங்கன்னா...:

ரஹீம் கஸ்ஸாலி said...

வடை

நிகழ்காலத்தில்... said...

பாராட்டுகிறேன்..

நாங்கெல்லாம் திருமணம் பண்ணிட்டு இப்ப துறவு போலாமின்னு யோசிக்கிறோம். :)))))))))))))))

Unknown said...

அட என்னங்க நீங்க அவரே துறவியாக போறேங்கறாரு, இப்பபோய் வடைங்கறீங்களே, அப்புறம் பங்காளி உங்க மனசுக்கு என்ன சரின்னு படுதோ அத செய்யுங்க, ஆனா பிளாக் எழுதறத நிறுத்தாதீங்க,உங்களோட அனுபவங்கள எங்களோட பகிர்ந்துக்குங்க, இறைவனின் ஆசி எப்பவும் உங்களுக்கு உண்டு, நன்றி.

ப.கந்தசாமி said...

பதிவுலகம் உங்களை இப்படிப் பண்ணிப்போட்டுதே என்கிற வருத்தம் என்னை வாட்டுகிறது. எல்லோரும் பதிவுலகத்திற்கு வந்து ஒரு வருசம் கழிச்சுத்தான் இந்த நிலைக்கு வருவாங்க. நீங்க என்னடான்னா அஞ்சு மாசத்திலயே துறவு வாங்கறேங்கறீங்க. பரவாயில்ல, நல்ல முன்னேற்றம்தான். ஆகவே பதிவுலகத்தினாலயும் ஞானம் பெறலாம்னு தெரியுது.

தமிழ் உதயம் said...

நீங்கள் கற்றதை எங்களுக்கு சொல்லுங்கள். உங்கள் பயணம் தொடரட்டும்.

Chitra said...

பெற்றோர்களின் வற்புறுத்தல்கள் இருந்தபோதும் திருமண பந்தத்தில் நுழைய மனம் விரும்பவில்லை. அந்த எல்லாம் வல்ல இயற்கை என்னை எந்த வழியில் நடத்தி செல்கிறதோ தெரியவில்லை. கூடிய விரைவில் துறவியாகி பரந்து விரிந்துகிடக்கும் மக்கள் கூட்டத்திற்கு என்னாலான சேவைகளை செய்ய விருப்பம்.

......துறவி ஆனாலும், பதிவுகளை தொடருங்கள். உங்கள் கருத்துக்களை - குறிப்புகளை பகிர்ந்து கொள்ள நல்ல வழி.
சரியான பாதையில், சரியான முடிவு எடுத்து வெற்றியுடன் பயணிக்க வாழ்த்துக்கள்!

Unknown said...

பதிவு ரொம்ப நல்லா இருக்கு...
உஙக பிறந்த நாள், நேரம், இடம் அனுப்புங்க.
ஜாதகம் கணிச்சு பார்போம்.
உஙகளுக்கு துறவு யோகம் இருக்கன்னு
என் மெயில் : glomoinc@gmail.com

தமிழ்வாசி பிரகாஷ் said...

துரவியாகிற எண்ணத்த கொஞ்சம் மாத்த முடியுமான்னு யோசிங்க..

puduvaisiva said...

"பெற்றோர்களின் வற்புறுத்தல்கள் இருந்தபோதும் திருமண பந்தத்தில் நுழைய மனம் விரும்பவில்லை"

http://www.youtube.com/watch?v=y6siMElVT8k&feature=player_embedded

எஸ்.கே said...

நண்பரே! குறுகிய காலத்தில் எங்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நீங்கள்!

துறவி ஆனாலும், பதிவுகளை தொடருங்கள். உங்கள் கருத்துக்களை - குறிப்புகளை பகிர்ந்து கொள்ள நல்ல வழி.
சரியான பாதையில், சரியான முடிவு எடுத்து வெற்றியுடன் பயணிக்க வாழ்த்துக்கள்!
இதேயே நானும் விரும்புகிறேன்!

மாணவன் said...

உங்கள் பொன்னான பணி தொடர்ந்து சிறக்க வேண்டும் நண்பரே.....

RAVINDRAN said...

வாழ்க்கை வாழ்வதர்காகமட்டுமெ கடமையைய் புர‌க்கனிக்க கூடாடது .

MACHAMUNI BLOGSPOT said...

அன்புள்ள திரு வசந்த குமார் அவர்களே,
இயற்கைக்கு மாறானது துறவு.துறவு மேற்கொண்ட அவ்வையே 'இல்லறமல்லது நல்லறமல்ல'என்று கூறியிருக்கிறார்.இயற்கையாக இருக்கும் எந்த உயிரும் துறவு மேற்கொள்வது இல்லை.எனில் நாம் மட்டும் ஏன்! மு.ஆ.அப்பன் துறவு இயற்கைக்கு மாறானது என்கிறார்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்

செல்வா said...

கண்டிப்பா எழுதுங்க அண்ணா .!
துறவறத்த நீங்க விரும்பினா அதுலயே போங்க அண்ணா ..!!
உங்க லட்சியம் வெற்றியடைய வாழ்த்துகிறேன் ..௧!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

துறவறம் எனபது உங்கள் தனிப்பட்ட முடிவு. அதற்காக எழுததுவதை நிறுத்த வேண்டாமே?

cheena (சீனா) said...

பங்காளி - துறவறம் மேற்கொள்வது பங்காளியின் தனிப்பட்ட விருப்பம். ஆற அமரச் சிந்த்தித்து செயல் படுக ! நல்வாழ்த்துகள்

ராவணன் said...

நானும் உங்களைப் போல் துறவிதான்...ஜஸ்ட் இரண்டே மனைவிகள்..அப்புறம்.......

அப்புறம்....சில காதலிகள் மட்டுமே!

நீங்கதான் பாஸ் எனக்குப் பாஸ்....நம்ம எல்லாம் ஒன்னு பாஸ்.நாமெல்லாம் துறவி பாஸ். உங்களை மலேசியாவில் பார்க்கின்றேன் பாஸ்.

பாஸ், நாம சில நேரத்தில் உண்மைகூட பேசலாம் பாஸ்....

எண்ணங்கள் 13189034291840215795 said...

. மத்தவங்கப் போல இயல்பா உலகியல் வாழ்க்கையில - இல்லறத்தில ஒட்டி வாழ முடியல.//

இல்லறம் னா?..

உங்க பயணம் உங்க எண்ணம்.. நாங்க சொல்வதற்கில்லை..

எல்லாமே அனுபவம்..

எதுவானாலும் சிறக்க வாழ்த்துகள்..

குறையொன்றுமில்லை. said...

உங்களுக்கு என்னவிருப்பமோ அதை தீர யோசித்து
மனசாட்சிப்படி செய்யவும். வாழ்த்துக்கள்.

Anonymous said...

துறவியாகுங்கள்...ஆனால் நித்தியானந்தா, பிரேமானந்தா, சங்கராச்சாரிகள் மாதிரி
பொண்ணுங்களை துறந்து பார்க்காதீங்க....
ஒரு விவேகானந்தர் மாதிரி மதத்திற்கும், நாட்டுக்கும் வழி காட்டுங்கள்..

சி.பி.செந்தில்குமார் said...

வாழ்த்துக்கள்

என்னது நானு யாரா? said...

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கங்கள்!

வாழ்க்கையின் உண்மையான பொருள் என்ன என்று அறிந்துக்கொள்ளவே என்னுடைய மனம் சதா சர்வ காலமும் துடித்துக்கொண்டிருக்கிறது.

உயர்ந்த மனித பிறவி நமக்கு வாய்த்திருக்கிறதென்றால், அதைப் பயன்படுத்தி ஏதோ ஒரு உன்னததை அடைய வேண்டும் என்றே எல்லா மதங்களும் சொல்லிக்கொண்டிருக்கின்றன. நானும் அது சரியென்றே நம்புகின்றேன்.

அதனால் சாதாரண வாழ்க்கையில் இருந்து விலகி, வாழ்க்கையின் சூஷ்ஷமத்தை படித்துக்கொள்ளும் ஆவலில் தான் துறவு மேற்கொள்ள விரும்புகின்றேன்.

துறவு நிலையில் சமூகத்திற்கு தேவையான சேவைகளை செய்யும் வாய்ப்பும் கிடைக்கும். புத்த மதத்தில் துறவு என்பது புனிதமான ஒரு செயல். மன விகாரங்களை கடந்து சென்று வாழ்க்கையின் இறுதி இலட்சியத்தை அடைகின்ற வழி. பிறவிப் பயனான ஞானத்தை அடைந்து பிறப்பு இறப்பு சுழற்சி சக்கரத்திலிருந்து விடுபடுகின்ற ஒரு சிறந்த காரியம்.

இயற்கை அந்த உயர்ந்த வழியினை எனக்கு அருளுமானால் அந்த வழி சென்று வாழ்க்கையின் இறுதி இலட்சியத்தை அடைந்து பிறருக்கும் பயன்படும்படியான வாழ்க்கையை வாழ விருப்பம்.

எல்லாம் அந்த மகா சக்தி வாய்ந்த இயற்கை விட்ட வழியில் பயணித்துக்கொண்டிருக்கின்றோம்.

காலம் கனியட்டும் என்று காத்திருக்கின்றேன். உங்களின் வாழ்த்துக்களை வேண்டி நிற்கின்றேன்.

மிக்க அன்புடன்
உங்க உறவுக்காரன்
வசந்த்

Madhavan Srinivasagopalan said...

உங்கள் தனிப்பட்ட விருப்பத்திற்கு நான் தடை செய்ய விருப்பமில்லை.

ஆனால், நாம் போற்றும் இந்து மதத்தில், துறவறம் செய்வதற்கு, முதலில் இல்லறம் பூண்டு, கடமைகளை நிறைவேற்றி விட்டு பின்னர் துறவு பூணுவதே நல்லது எனச் சொல்கிறார்கள். அதற்கு காரணம் இருப்பதாக நான் நினைக்கிறேன். உலகத்தில் இருக்கும் அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது 'சேர்க்கை' என்பது. அது உங்கள் வாழ்வில் குறுக்கிடாது என்பதில் நீங்கள் எந்தளவு உறுதியாக இருக்கிறீர்கள் என்பதை பொறுத்தது, உங்க இல்லறம்ற, துறவு வாழ்க்கை.

உங்கள் பெற்றோர், தங்கள் கடைமையை செய்ய விரும்புகிறார்கள். அதுவும் சரிதான். ஆனால் அதே சமத்தில், உங்கள் நிலையில் இருப்போரை உங்கள் விருப்பமின்றி இல்லற வாழ்க்கையில் ஈடுபடச் செய்து இருவர் வாழ்க்கையில் இடையூறு செய்வதும் கூடாது.

இது முள் மேல் சேலை விழுந்தது போல.. கவனமாக கையால வேண்டும்.

உங்களுக்கு இதில் குழப்பம் இருந்தால், கவுன்சலிங் செய்யும் உளவு மருத்துவரை அணுகுவதில் தவறு இல்லை.

குறுகிய காலத்தில் நீங்கள் எழுதியவைகள் மிகவும் பயனளிப்பதாக உள்ளது.. எழுதுவதை நிறுத்தினால், எங்களைப் போன்ற பலருக்கு அது இழப்புதான்.

Unknown said...

வாழ்த்துக்கள் வசந்த்..

Unknown said...

//உங்களுக்கு என்னவிருப்பமோ அதை தீர யோசித்து
மனசாட்சிப்படி செய்யவும். வாழ்த்துக்கள். //

curesure Mohamad said...

நண்பரே நலமா ..
உங்கள் கட்டுரைகள் மிக்க அருமை ..
உங்கள் பணி தொடரட்டும்
உங்களிடம் ஒரு விண்ணப்பம் ..
நான் ஒரு மருத்துவ போரம் ஆரம்பித்துள்ளேன் ..அதன் முகவரி ..www.ayurvedamaruthuvam.foruta.net
நீங்கள் இந்த போரத்தில் இணைந்து உங்கள் கட்டுரைகளை -உங்கள் தள முகவரியுடன் இணைத்து எழுதி மக்கள் பயன் பெற செய்யலாமே ?

Anonymous said...

உங்கள் அனுபவங்களை அடிக்கடி எழுதி வந்தால் பல மாறுபட்ட செய்திகளை தகவல்களை அறிந்து கொள்ளும் வாய்ப்பாக அமையும்...அதுதானே பிளாக்?துறவி ஆவது உங்கள் முடிவு..ஆனால் பதிவிடுவதை நிறுத்த வேண்டும்...உங்கள் ஸ்வாரஸ்யமான எழுத்தை தொடருங்கள்

Anonymous said...

முதலில் இல்லறம் பூண்டு, கடமைகளை நிறைவேற்றி விட்டு பின்னர் துறவு பூணுவதே நல்லது எனச் சொல்கிறார்கள்//
ஆம்..அதற்கு பல மகான்களே உதாரண புருசர்களாக இருக்கிறார்கள்..ராகவேந்திரர் போன்று..களவும் கற்று மற என்பது போல எதையும் முழுதாய் அனுபவித்து அதை உதறுவதே சிறந்த துறவறம்..தாம்பத்தியத்தையும் நீங்கள் துய்த்து துறக்க வேண்டும்...திருமணம் செய்யாமல் துறவி ஆவதை விட..ஏதேனும் கைவிடப்பட்ட பெண்ணிற்கு வாழ்வு கொடுப்பது துறவறத்தை விட மேலானதோ என்னமோ..உங்கள் வாழ்க்கையை நான் கைடு பண்ணுவது தப்புதான்..ஒரு ஐடியாதான்...தவறாக எண்ன வேண்டாம்.

Unknown said...

என்ன சொல்வதென்று தெரியவில்லை. அறிவுரை செய்பவன் எப்போதுமே அதன்படி நடப்பதில்லை என்பதால் உங்கள் விருப்பம் உங்களுக்கு உண்மையான திருப்தி அளிக்குமானால் அப்படியே செய்யுங்கள்(உதவி - சாருவாகா எனும் தத்துவத்திலிருந்து)

tamil blogs said...

அருமையானப் பதிவு. உங்கள் பதிவுகளை எங்களுடன் பகிர்ந்துக்கொள்ளுங்கள் http://tamilblogs.corank.com/

THOPPITHOPPI said...
This comment has been removed by the author.
THOPPITHOPPI said...

உங்களது எழுத்துக்களை பாத்தபோதே நான் எதிர்ப்பார்த்தேன் நீங்கள் துறவறம் போவிர்கள் என்று சில மாதங்களுக்கு முன்பு கூட உங்கள் பிறந்த தேதியை கேட்டிருந்தேன். 9,19,29 இந்த தேதியில் பிறந்தவர்கள் ஆன்மிகம்(தியானம்)த்தில் கவனம் செலுத்தினால் வாழ்க்கை முழுவதும் அதிலேயே போய்விடும். இது இந்த பிறவிக்கானது இல்லை போன பிறவியில் விடுப்பட்ட தேடல்.

நீங்கள் எதிர்ப்பார்ப்பதை அடைய எனது வாழ்த்துக்கள்

Sairam said...

ஏமாதிபுட்டிங்கலே ஐய்யா ஜோரா
சாய்நாத் மகாராஜிக்கு ஜே

சிவகுமாரன் said...

இரண்டாயிரத்து பத்தாண்டு கழிந்தது.
இனியதொரு புத்தாண்டு பிறந்தது.
மகிழ்வான முத்தாண்டாய்
மனங்களின் ஒத்தாண்டாய்
வளங்களின் சத்தாண்டாய்
வாய்மையில் சுத்தாண்டாய் மொத்தத்தில்
வெத்தாண்டாய் இல்லாமல்
வெற்றிக்கு வித்தாண்டாய்
விளங்கட்டும் புத்தாண்டு.

வெட்டிப்பேச்சு said...

உங்கள் முடிவுக்கு எனது மரியாதைகள்..

ஆனால் இது சற்றே மற்றெல்லாக் கோணங்களிலும் ஆராயவேண்டிய ஒன்று என்றே தோன்றுகிறது.. அவசரப்படவேண்டாம். தீர யோசியுங்கள்.இது கூட மணம் புரிய சரியான வயதுதான். உங்களது பெற்றோரின் மனவேதனையை உணர முடியவில்லையா உங்களால்.

கடவுள் உங்களுக்கு நல்ல வழி காட்டுவாராக.

ADMIN said...

உறுதியாக வாழ்த்தலாம்.. !

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

வணக்கம் தோழரே .. அற்புதமான சேவைகளை செய்துவிட்டு எங்கே தங்களை காணோம் ?

இன்றுதான் இத் தளத்தை பார்க்கும வாய்ப்பு கைவரப் பெற்றேன். அற்புதமான செய்திகள்..

வாழ்த்துக்கள்.

ஓய்விருந்தால்,

http://sivaayasivaa.blogspot.com

வாங்க தோழரே...

palane said...

அருமையான பதிவு .

vimalanperali said...

வணக்கம் நண்பரே,நலம்தானா?முதலில் கல்யாணம் பண்ணுங்கள்.துறவரம்,மற்றதெல்லாம் பற்றிய யோசனைகள் காணாமல் போய்விடும்.நன்றி,வணக்கம்.

Thozhirkalam Channel said...

உங்கள் பதிவுகளை எங்களுடன் இணையுங்கள். உங்கள் ஒவ்வொரு பதிவிற்கும் பிடியுங்கள் பணத்தை..
மின்னஞ்சல் பதிவு முறையில்....

Malathi said...

this site is very very realistic and i want to follow your release

krishna said...

Please continue your Postings. We are all waiting for you.

திண்டுக்கல் தனபாலன் said...

வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_26.html) சென்று பார்க்கவும்...

தொடர்ந்து எழுதவும்... நன்றி...

சிவஹரி said...

இனிய நற்வணக்கங்களுடன் சிவஹரி,

தங்களின் வலைப்பூவினை நான் இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திடும் பாக்கியம் கிட்டியிருக்கின்றது என்பதை அக மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்றேன்.

மேலும் அறிய: http://blogintamil.blogspot.com/2012/10/blog-post_26.html

Dino LA said...

நல்லபகிர்வு...

Anonymous said...

உங்க தேடல் நிஜமானதுன்னா, ஒருவேளை அது இங்க நிறைவடையலாம்.

www.paranjothi.org

சும்மா முயற்சி பண்ணித்தான் பாருங்க பங்காளி.

அன்புடன்,
செ.சீனிவாசன்.

Ramesh DGI said...

Great article with excellent idea! I appreciate your post. Thanks so much and let keep on sharing your stuffs.Tamil News

Ramesh DGI said...

Thank you for post and your blog. My friend showed me your blog and I have been reading it ever since.
Ayurveda
Ayurveda Resorts
Ayurveda Kovalam
Ayurveda Trivandrum
Ayurveda Kerala
Ayurveda India
Ayurveda Resorts in Kovalam
Ayurveda Resorts in Kerala
Kerala Ayurveda Resort
Resorts in Kovalam
Ayurvedic Resort
Accommodation in Kovalam
Budget resort in Trivandrum
Yoga & Meditation
Ayurveda Treatments
Ayurveda Treatments in Kovalam
Ayurveda Wellness in Kovalam
Ayurveda Wellness in Trivandrum

Vignesh said...

hank you for post and your blog. My friend showed me your blog and I have been reading it ever since.
Chennai best Tax Consultant
ESI & PF Consultant in Chennai
GST Consultant in Bangalore
GST Consultant in Chennai
GST Consultant in TNagar
GST Filing Consultants in Chennai
GST Monthly returns Consultant in Chennai
GST Tax Auditor in Chennai
GST Tax Auditors in Chennai
GST Tax Consultant in Bangalore

Vignesh said...

hank you for post and your blog. My friend showed me your blog and I have been reading it ever since.
Chennai best Tax Consultant
ESI & PF Consultant in Chennai
GST Consultant in Bangalore
GST Consultant in Chennai
GST Consultant in TNagar
GST Filing Consultants in Chennai
GST Monthly returns Consultant in Chennai
GST Tax Auditor in Chennai
GST Tax Auditors in Chennai
GST Tax Consultant in Bangalore

Vignesh said...

Thank you for post and your blog. My friend showed me your blog and I have been reading it ever since.
Workplace Spoken English training centre
Workplace Spoken English training institutes
Workplace Business English training institute
Workplace English training for corporates
Workplace soft skills training institutes
English training for Workplace
Business English training for Workplace
Spoken English training for Business Organizations
Corporate language classes

Vignesh said...

I would highly appreciate if you guide me through this. Thanks for the article…
Shree Padma Nrityam Academy
SPNAPA
Padma Subrahmanyam
Bala Devi
Bala Devi Chandrashekar
Bharata Natyam
BharataNatyam Classes
Bharatanatyam Teachers
Indian Classical Dance
BharataNatyam Schools in Princeton
BharataNatyam Schools in New Jersey
BharataNatyam Schools in Livingston
BharataNatyam Schools in Edison
BharataNatyam
Guru for Bala Devi
Indian Dance Guru
Indian Classical Dance Guru
BharataNatyam Guru
Bharatanatyam Teacher

Vignesh said...

Hii, This is Great Post !
Thanks for sharing with us!!!!
I would highly appreciate if you guide me through this.
Thanks for the article…
Best Digital Marketing Agency in Chennai
Best SEO Services in Chennai
seo specialist companies in chennai
Brand makers in chennai
Expert logo designers of chennai
Best seo analytics in chennai
leading digital marketing agencies in chennai
Best SEO Services in Chennai

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

Post a Comment

பங்காளி! சரக்கு எப்படி? விக்குமா... விக்காதா...??? கொஞ்சம் சொல்லிட்டு போங்க!!!