பன்னீர் தெளிக்கிறோமில... ப்ளீஸ்... கொஞ்சம் தலை குனியுங்க...

வணக்கம் பங்காளீ! வாங்க, சவுக்கியங்களா? நம்ம வலைபதிவு பக்கம் வந்ததுக்கு நன்றீங்கோ...Get this Widget

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே! என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி! நண்பர்களே!

மனிதர்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் சிந்தனைகள், இங்கு சிதறிகிடக்கிறது. படித்து பார்த்து உங்கள் கருத்துக்களை இடவேண்டுகிறேன்!

தொடர்ந்து, இந்த வலைபதிவுக்கு உங்களின் ஆதரவை தாருங்கள்!!! நன்றி! தொடர்ந்து வருக!!!

இந்த நாள், உங்களுக்கு, இனிய நாளாக அமைவதாக!!!

பாசகார பங்காளி கூட்டமுங்க! நீங்களும் கூட வாறீகளா?

27 Aug 2010

குளியலோ குளியல்! மண் குளியல் சிகிச்சை! வாறீகளா?

இயற்கை மருத்துவ முறையில, இன்னுமொரு விநோத சிகிச்சை முறைங்க அப்பு இந்த மண்குளியல் சிகிச்சை.


உடல்ல இருந்து அதிகமான உஷனத்தை நீக்கறதுக்கு இது பயன்படுதுங்க. குறிப்பா சரும நோய்கள் எதுவா இருந்தாலும் இந்த சிகிச்சை முறையை செய்யலாமுங்க!

மத்தியானம் உச்சி வெயில்ல, புத்து மண், இல்லன்னா, பசையுள்ள செம்மண்ணு, இல்லன்னா களி மண்ணை எடுத்து, நீரில நல்லா குழைச்சி, உடல் முழுக்க பூசிகொள்ளுவாங்க. இந்த சிகிச்சியின் போது, உள்ளாடை மட்டும் தான் போட்டிருப்பாங்க. 


அரைமணி நேரம் வெய்யில்ல இருப்பாங்க. காத்து பட்டு ஆறும்போது சும்மா ஜிலுஜிலுன்னு இருக்கும் பாருங்க!  (ஜில்லுன்னு ஒரு காதல் கணக்கா!) கொஞ்ச நேரம் ஆனபின்னாடி மண் காய காய, தோலை பிடிச்சி இழுக்கும் பாருங்க! அதுவும் கூட ஒரு அனுபவம் தான் பங்காளி!

பிற்பாடு நிழலில கொஞ்ச நேரம் இருந்துட்டு, பச்சை தண்ணியில போய் குளிப்பாங்க. நல்ல சுகமா இருக்குமுங்க! உடல்ல இருக்கிற கெட்ட நீர் எல்லாம் இந்த மண்குளியல் சிகிச்சையினால உறிஞ்சி வெளியேற்றப்படுதுங்க. அதனால மனசும் உடலும் லேசாயிடும்.

ஆஹா! அந்த குளிமை! அந்த ஆனந்தம்!! அதை அனுபவிச்சி பாத்தாதான் தெரியும்! வாய்ப்பு இருக்கிறவங்க செஞ்சி பாருங்க!  

சரி என்ன கேட்டீங்க? மண்ணில வேற என்ன மாதிரி சிகிச்சை முறைகள் இருக்குன்னு தெரியனுமுங்களா, அப்பு?

அதையும் சொல்லிடறேன். கவனமா கேட்டுகோங்க ராசா! (பங்காளி பயலுகளுக்கு தான் என்ன ஒரு ஆர்வம்பா!!!)

ஈரமண் பட்டி (Wet Mud Pack), போடுவாங்க. அதாவது, மலச்சிக்கல், காய்ச்சல், தலைவலி ஏற்படும்போது, ஒரு வேட்டி துணியில ஈர மண்ணை வைச்சி ஒரு அகலமான பெல்ட் போல - பட்டியாக்கி, நெத்தி, அடிவயிறு, தொப்புள் மேலேயும் இடுவாங்க. நல்லா சில்லுன்னு இருக்கும். ஒரு அரை மணி கழிச்சி எடுத்திடலாம். நல்ல பலன் கொடுக்கும்.


இப்படி மண் இல்லாம கூட வெறும் துணியை, தண்ணியில நினைச்சி கூட போடுவாங்க. இதுக்கு பேரு ஈர துணிப் பட்டி (Wet Cloth Pack). மேல சொன்ன காரணங்களுக்காக இதை பயன்படுத்தலாமுங்க! அதே போல பலனும் கொடுக்குமுங்க!

சரி இப்போ Celebration Time! 
எதுக்கா? பங்காளி! பதிவு எழுத ஆரம்பிச்சி 2 வாரத்துக்குள்ள 51 Followers சேர்ந்திருக்காங்க.

இது மகிழ்ச்சி அளிக்கிற விஷயம் தானே நமக்கு!!! JJJ

நானும் உறுப்படியா ஏதோ உங்களுக்கு நன்மை அளிக்கிற விதமா பதிவு எழுதறேன்னு நினைக்கிறேன். நான் சொல்றது சரிதானே?  நீங்க காட்டுற ஆதரவை பாக்கும்போது கண் ரெண்டும் ஈரம் ஆகுதுங்க! (சந்தோஷத்திலங்க!!!)

இது வரை என் எழுத்துக்களை படிச்சி ஊக்குவிச்சவங்களுக்கும், இனி மேல படிக்க வர்றவங்களுக்கும் டன் கணக்கா நன்றிங்கோ! நன்றி நன்றி நன்றீங்கோ!!!

நீங்க எல்லோரும், எல்லா வளமும் நலமும் பெற்று, சிறப்பா வாழனும்னு அந்த ஆண்டவன்கிட்ட பிராத்தனை செய்றேனுங்க!

மகிழ்ச்சியோட இருங்க! வாரனுங்க!!!

36 மேதைங்க இதபத்தி என்ன சொன்னாங்கன்னா...:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

1st

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பங்காளி டெரர் மாதிரி தலையெல்லாம் களிமண் உள்ளவங்க என்ன பண்ணனும்?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

51-க்கு வாழ்த்துக்கள்...

அப்படியே நம்ம பக்கம் வாங்க..

http://sirippupolice.blogspot.com/2010/08/blog-post_27.html

என்னது நானு யாரா? said...

@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா): நன்றி பங்காளி! இதோ உங்களை பாக்கத்தான் வந்து கொண்டே இருக்கேன்.

///பங்காளி டெரர் மாதிரி தலையெல்லாம் களிமண் உள்ளவங்க என்ன பண்ணனும்?///

அப்போ வெளியே தேட வேணாம்பா! தேவையானப்ப தலையில இருந்தே use செய்துகலம்!

ஜெயந்த் கிருஷ்ணா said...

எலேய் மக்கா நல்லதாம்ல இருக்கு...

செல்வா said...

///பிற்பாடு நிழலில கொஞ்ச நேரம் இருந்துட்டு, பச்சை தண்ணியில போய் குளிப்பாங்க. நல்ல சுகமா இருக்குமுங்க!///
எங்க ஊரிலும் மாரியம்மன் பொங்கலின் போது சேத்து வேஷம் போடறது அப்படின்னு ஒரு வழக்கம் இருக்கு. அதுக்கு இப்படித்தான் நாங்கள் செய்வோம் ..!!

செல்வா said...

//நானும் உறுப்படியா ஏதோ உங்களுக்கு நன்மை அளிக்கிற விதமா பதிவு எழுதறேன்னு நினைக்கிறேன். நான் சொல்றது சரிதானே?//
நிஜமாவே நல்ல விசயங்கள் தாங்க ..தொடருங்க ..

சத்ரியன் said...

இதுவும் நல்லாத்தான் கீது.

பங்காளி நான் ஒரு முடிவுக்கு வந்துட்டேன்.இனிமே உங்க வூட்டுக்கு அடிக்கடி வந்து பாத்தே ஆகறதுன்ற முடிவுக்கு வந்துட்டேன்.

பெசொவி said...

உறவுக்காரன் கடை சரக்கு நல்லாதாம்ல இருக்கு..............அப்புறம் 52-வது வாடிக்கையாளர் சேர்ந்திருக்காரு, உங்களுக்கும் அவருக்கும் வாழ்த்துகள்!

Chitra said...

2 weeks = 50 + followers. Super!!!
Congrats!

Riyas said...

மிக அருமையா இருக்கு 50 க்கு வாழ்த்துக்கள்

சௌந்தர் said...

இந்த போட்டோவில் இருக்கும் டாகடர் நீங்க தானே

சௌந்தர் said...

நாம குழந்தைய மண்ணில் விளையாட கூடாது சொல்வோம் அதுக்கு தான் நாமே இருக்கோம்

DREAMER said...

சுவாரஸ்யமான தகவல்... பகிர்வுக்கு நன்றி!

-
DREAMER

கருடன் said...

பங்காளி!! ரொம்ப நல்ல விஷயாம் சொல்லி இருக்கிங்க (பராட்டி பாரட்டி வாய் வலிக்குது...)

கருடன் said...

@ரமேஷ்
// 1st //

படிச்ச புள்ளதான நீ. ஹாஸ்பிட்டல்ல முன்னாடி வந்து நிக்கர... இங்க வடை கிடைக்காது. ஊசிதான்..


//பங்காளி டெரர் மாதிரி தலையெல்லாம் களிமண் உள்ளவங்க என்ன பண்ணனும்?//

பாம்பின் கால் பாம்பு அறியும்! என் கஷ்டம் உன்க்குதான் புரியும்...

மனோ சாமிநாதன் said...

இயற்கை வைத்திய சிகிச்சை முறைகளை நன்றாக எழுதியிருக்கிறீர்கள்! வாழ்த்துக்கள்!!
கோவை RK இயற்கை வைத்திய சிகிச்சை நிலையம் அடிக்கடி சென்று இதையெல்லாம் ரசித்து அனுபவிப்பவள் நான். அந்த வைத்திய முறைகளை மிக அழகாக எழுதியிருக்கிறீர்கள்!!

கருடன் said...

//அப்போ வெளியே தேட வேணாம்பா! தேவையானப்ப தலையில இருந்தே use செய்துகலம்! //

பங்காளி நீங்க நிறயா நல்ல விஷ்யாம் சொல்லிங்க.. அதனால உங்கள சும்மா விடரேன்.... கிர்ர்ர்ர்ர்ர் :))))))

ப.கந்தசாமி said...

சரக்கு ரொம்ப நல்லா இருக்கு. பேக்கிங்க்க கொஞ்சம் முன்னேத்தணும். அதாவது மொழியை. எழுத்துத் தவறுகள் நெருடலாக இருக்கிறது. தவிர்க்க முயலுங்கள்.

Unknown said...

51-க்கு வாழ்த்துக்கள்...

Unknown said...

54-க்கு வாழ்த்துக்கள்...

என்னது நானு யாரா? said...

வாழ்த்து சொல்லி சென்று இருக்கும் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றீங்க மெகா டன் கணக்கில!

இனி வாழ்த்து சொல்ல வர்றவங்களுக்கும் நன்றீங்க!

என்னது நானு யாரா? said...

@ப.செல்வக்குமார்: ///எங்க ஊரிலும் மாரியம்மன் பொங்கலின் போது சேத்து வேஷம் போடறது அப்படின்னு ஒரு வழக்கம் இருக்கு. அதுக்கு இப்படித்தான் நாங்கள் செய்வோம் ..!!///

ருசிகரமான தகவல் இது செல்வா! அது கூட இயற்கை மருத்துவ முறைக்காகத்தானோ என்னவோ?

என்னது நானு யாரா? said...

@சௌந்தர்:///நாம குழந்தைய மண்ணில் விளையாட கூடாது சொல்வோம் அதுக்கு தான் நாமே இருக்கோம்///

கிராமங்களில வளர்ற குழந்தைங்க இன்னமும் எந்த ஒரு கட்டுபாடும் இல்லாம சந்தோஷமாத்தானே வளர்றாங்க சௌந்தர். நம்ப நகரத்தில என்ன செய்றது? எல்லா இடத்திலேயும் அசுத்தம் நிறைஞ்சி இருக்க்றதால, பெற்றோர்கள், அப்படி சொல்றாங்களோ என்னமோ?

என்னது நானு யாரா? said...

@மனோ சாமிநாதன்: உங்கள போல சீனியர் பதிவாளர் என்னை பாரட்டியதுக்கு ரொம்ப நன்றீங்க!

///கோவை RK இயற்கை வைத்திய சிகிச்சை நிலையம் அடிக்கடி சென்று இதையெல்லாம் ரசித்து அனுபவிப்பவள் நான்.///

உங்க அனுபவத்தை பகிர்ந்து கொண்டதுக்கு மகிழ்ச்சிங்க! இந்த தகவல்கள் நிறைய பேர்களுக்கு செல்லணும்னு தான் என் ஆசைங்க! தொடர்ந்து ஆதரவு தரணும்னு கேட்டுகிறேன்.

என்னது நானு யாரா? said...

@DrPKandaswamyPhD: ஐயா! உங்க கருத்துக்கு மிக்க நன்றிங்க!

///அதாவது மொழியை. எழுத்துத் தவறுகள் நெருடலாக இருக்கிறது. தவிர்க்க முயலுங்கள்.///

நல்லா எழுத்து தமிழில எழுதுவேணுங்க! மக்களுக்கு பேச்சு தமிழில இந்த இயற்கை மருத்துவத்தை நகைசுவையோடு சொல்றது தான் என் நோக்கமுங்க! அதனால அப்படி தோணுது உங்களுக்கு!

தொடர்ந்து என் வலைபக்கம் வந்து உங்க ஆதரவ தரணும்னு கேட்டுகிறேனுங்க ஐயா!

சாந்தி மாரியப்பன் said...

சின்னப்புள்ளைங்க மண்ணுல விளையாடுனா திட்டுவோம். அதுவே, பெரியவங்க விளையாடுனா மட்பேக்.. என்னப்பா இது :-)))))

அப்புறம் விக்குமா.. விக்காதா???ன்னு சந்தேகம் கேக்கிறதை விட்டுட்டு, விக்கினா தண்ணி குடிங்க :-))))))

Anonymous said...

Hey Man,

You spoil writing your articles with your comedy. Your give importance to comedy rather than concentrating on the matter. Write it in a proper way. Your way of writing is irritating to the readers, because we are the judges to weigh your way of writing, don't be adamant.

என்னது நானு யாரா? said...

@அமைதிச்சாரல்:

///சின்னப்புள்ளைங்க மண்ணுல விளையாடுனா திட்டுவோம். அதுவே, பெரியவங்க விளையாடுனா மட்பேக்.. என்னப்பா இது :-)))))///

எல்லாம் விந்தையா இருக்கில்லையா நண்பா! தொடர்ந்து என் வலைபக்கம் வந்து படியீங்க! விந்தையான விஷயங்கள நிறைய சொல்றேன்.

என்னது நானு யாரா? said...

@Anonymous: பெயரி சொல்ல விருமாத நண்பா! உங்க கருத்துக்கு நன்றி!

///You spoil writing your articles with your comedy. Your give importance to comedy rather than concentrating on the matter.///

நண்பா! மருத்துவம்னு சொன்னாலே, அது ஆங்கில மருத்துவ முறை தான்னு ஆகி போயிற்று! இயற்கை மருத்துவத்தை எல்லோருக்கும் தெரியபடுத்துகிற நோக்கத்தில தான் நான் எழுத வந்தது.

///Your way of writing is irritating to the readers///

நகைசுவையை மக்கள் ரசிக்கிறார்கள் நண்பா! கருத்தோடு நகைசுவை சேர்க்கும் போது, படிப்பது அவர்களுக்கு அளுப்பாக இருக்காது. எனக்கும் இது இயற்கையான ஒரு எழுத்து பாணி!

மக்கள், எல்லோரும் பக்கத்தில் இருந்து தம்மிடம் ஒருவர் ஒரு விஷயத்தை சொல்லும் போது இப்போது எழுதுகின்றேனே, இந்த நடையிலா பேசிகொள்கின்றனர்? எது இயலபாக வழக்கில் இருக்கிறதோ அந்த பேச்சுத்தமிழ் நடையில் எழுதுவது என்ன தவறு நண்பா?

கருடன் said...

@என்னது நானு யாரா? said...
//@Anonymous: பெயரி சொல்ல விருமாத நண்பா! உங்க கருத்துக்கு நன்றி!//

நகைசுவையை மக்கள் ரசிக்காமலா 2 வாரத்துல 54 Followers?? நண்பரே சொல்லி இருக்காரு because we are the judges to weigh your way of writing அப்படினு... ஒரு நீதிபதி சொல்ரேன் நீங்க இப்படியே எழுதுங்க. அனனி அண்னாச்சிக்கு மறுபடி சந்தேகம் வந்தா நம்ம வீட்டுக்கு சொல்லி விடுங்க. அட நீங்க போங்க பங்காளி...

என்னது நானு யாரா? said...

@TERROR-PANDIYAN(VAS):

///நகைசுவையை மக்கள் ரசிக்காமலா 2 வாரத்துல 54 Followers?? நண்பரே சொல்லி இருக்காரு because we are the judges to weigh your way of writing அப்படினு... ஒரு நீதிபதி சொல்ரேன் நீங்க இப்படியே எழுதுங்க.///

டெரர் தோழா! நன்றிங்க! உங்க போல இருக்கிறவங்க கொடுக்கிற ஊக்கம் எனக்கு அளவில்லாத ஆனந்தம் கொடுக்குது! ரொம்ப சந்தோஷங்க!

பெயர் சொல்ல விரும்பாதவர் சொன்னது, அவரின் சொந்த கருத்து. எல்லோருடைய கருத்தையும் அனுமதிக்கலாம். என்ன கெட்டு போகபோவுது?

சரிதானே பங்காளி?

சௌந்தர் said...

சௌந்தர் said...
இந்த போட்டோவில் இருக்கும் டாகடர் நீங்க தானே

என்னது நானு யாரா? said...

@சௌந்தர்:

//இந்த போட்டோவில் இருக்கும் டாகடர் நீங்க தானே//

டாக்டரா! நானா? இன்னும் ஸ்கூல் படிப்பே முடிக்காத யூத்துங்க நானு! (எப்படி நம்ப Build-up?) இதெல்லாம் ஒரு புழைப்பாய்யா!!!

யாரு அங்க மொனகுறது?

cheena (சீனா) said...

அன்பின் வசந்த்

இயற்கை மருத்துவ முறைகள் பற்றிய தொடர் இடுகைகள் சிறப்பாக இருக்கின்றன. பயன் தரும் இடுகைகள் - தேவைப்படும் போது பயன் படுத்துவார்கள்

நல்வாழ்த்துகள் வசந்த்
நட்புடன் சீனா

என்னது நானு யாரா? said...

@cheena (சீனா):
//இயற்கை மருத்துவ முறைகள் பற்றிய தொடர் இடுகைகள் சிறப்பாக இருக்கின்றன. பயன் தரும் இடுகைகள் - தேவைப்படும் போது பயன்படுத்துவார்கள்//

ஆமாம் நண்பரே! அந்த நோக்கத்தில் தான் இவைகளை பதிவில் ஏற்றி இருக்கின்றேன்.

உங்களின் தொடர்ந்த ஆதரவை என் எழுத்துக்களுக்கு தரவேண்டும் என கோருகிறேன்.

நன்றி!

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

Post a Comment

பங்காளி! சரக்கு எப்படி? விக்குமா... விக்காதா...??? கொஞ்சம் சொல்லிட்டு போங்க!!!