பாசக்கார பங்காளிகளே! எல்லோருமே சௌகியங்களா? போன பதிவுல கடிச்சிட்டுப் போனேனே. யாருக்கெல்லாம் காயம்பட்டதோ அவங்களுக்கு காயமெல்லாம் ஆறிடிச்சா? ஆறாதவங்க யாருன்னு சொல்லுங்க. அவங்களுக்கு இயற்கை வைத்திய சிகிச்சை முறையை சொல்றேன். உங்க காயமெல்லாம் மாயமா மறைஞ்சுடும். அப்பத்தானே திரும்ப கடிக்க வசதியா இருக்கும்!
உங்களை கடிச்சிட்டுப் போன கையோட நான் ஜெய்பூருக்கு தியானம் செய்யப் போயிட்டேன். இன்னைக்கித்தான் திரும்பிவந்தேன். திரும்பி வந்துப் பார்த்தா ஒரு சந்தோஷ செய்தி. உங்களோட பகிர்ந்திருக்கிறதில என்னோட சந்தோஷம் இரட்டிப்பாகுது. அது என்னான்னு பாருங்க!
நன்றி
from ulavu .com
to n.vasanthakumar@gmail.com
date 10 October 2010 16:23
subject: உலவின் வாழ்த்துக்கள்
mailed-by: gmail.com
வணக்கம்,
தங்களை ஆகஸ்ட் - 2010 ற்கான சிறப்பு பதிவராக தேர்ந்தேடுத்துள்ளோம். உங்கள் பதிவுகள் மிக அருமை, அனைத்து பதிவுகளும் பயனுள்ள பதிவுகள். உங்களுக்கான பரிசு புத்தகங்கள் அனுப்புவதற்கான முகவரியை இந்த மின்அஞ்சலுக்கு அனுப்பிவைக்கவும், அத்துடன் உங்கள் சமிபத்திய புகைபடமும் அனுப்பவும்
நன்றி
அன்புள்ள சரண்
(உலவு.காம்)
(உலவு.காம்)
இதுக்கெல்லாம் உங்களோட ஊக்கமும் உற்சாகமும் தான் Secret of The success.
அதனால டன் டன்னாக தேங்க்ஸோ தேங்கஸ்ங்கோ.... எல்லோரும் என்னாலும் எல்லா வளமும் நலமும் பெற்று நீடுழி பல்லாண்டு வாழ்கவென மனசார வாழ்த்தறேனுங்க உங்க பாசக்கார உறவுக்காரன்.
இப்போ ஜெய்பூரு அழகு உங்க கண்களுக்காக!
அமிர் கோட்டைங்க! பல சினிமாக்கள்ல படம் பிடிக்கப்பட்டதுங்க. நம்ப தமிழ் படம் காதல் கோட்டையிலக் கூட வந்திருக்குதுங்க.
எம்மாம்பெரிய கோட்டை தெரியுமா? அதில எத்தனை எத்தனை அறைங்க! அப்பப்பா...!
கோட்டையை சுத்திப்பாக்குறதுக்கு ஆரம்பிச்சா நம்ப காலுங்கதான் கெஞ்ச ஆரம்பிச்சிடும். கால்வலி எடுத்துக்குற அளவு பெரிய கோட்டை! அதுவும் மலைமேல கட்டி இருக்காங்க! எல்லா வசதிகளோட!
கோட்டையோட முகப்பு வாசலுங்க. பார்க்கவே ரொம்ப அழகா இருக்கில்லா!
இதில தான் கோட்டையில இருக்கிறவங்களுக்கு சமையலாம்பா! எம்மாபெரிசு....!!!
எத்தனைப்பேரு அந்த காடாயில, எத்தனைப் பேருக்கு சமைச்சு, எத்தனைப் பேரு அதை சாப்பிட்டு எப்படியெல்லாம் வாழ்ந்திருந்தாங்கன்னு நினைச்சுப்பாக்கவே மலைப்பா இருக்கில்ல! என்ன இருந்தாலும் சாப்பாட்டு விஷயத்தில நம்ப இந்தியர்களை அடிச்சிக்க யாராலேயும் முடியாது அப்பு! என்ன சொல்றீக நீங்க?
அந்த காலத்து போர் விரன் - ஒரு மாடல். ஜெய்பூர் ம்யூசியத்தில வைச்சிருக்காங்க. உடையெல்லாம் இரும்புக் கவசம்! தலையில இரும்புத் தொப்பி! இதையெல்லாம் தூக்கிச் சுமந்துக்கிட்டு எப்படி போருக்குப் போனாங்களோ தெரியல!
இது ஜல் மகாலுங்க! அப்படின்னா தண்ணிக்குள்ள இருக்கிற கோட்டைன்னு அர்த்தமுங்க!
பெரிய ஏரி! அதுக்கு நடுவில தண்ணியில ஒருக் கோட்டை!
மொத்தம் 7 அடுக்கு கட்டிடமுங்க! அதில 4 அடுக்கு தண்ணிக்குள்ள! நினைச்சுப் பாருங்க எப்படி இருக்கும்னு! அப்படி ஒரு கட்டிடத்தில வாழறதை நினைச்சிப் பார்க்கவே ஆச்சரியமா இருக்கில்ல! இது எதுக்குன்னா கேட்கறீங்க? எல்லாம் வெயில் கொடுமையை சமாளிக்கத்தான் இந்த கோட்டை! ராஜாவோட குடும்பம் வெய்யில்ல இருந்து தப்பிக்க இயற்கை ஏசிக் கொண்ட கட்டிட்டம்!
ம்ம்ம்... எப்படியெல்லாம் உட்கார்ந்து யோசிச்சிருக்காங்கப்பா...!!!
கலர்கலரா உடையில நம்ப ராஜஸ்தானி பாம்பாட்டிங்க! பார்க்கவே ஜோரா இருக்காங்க இல்ல! அவங்களை வெளிநாட்டுக்காரங்க ஆர்வமா படம்பிடிச்சிட்டுப் போறாங்க! ஒரு வெளிநாட்டுக்காரரு என்ன சந்தோஷமா படம்பிடிக்கிறாரு பாருங்க!
அட நம்புங்க பங்காளி! இதுவும் ஜெய்பூரே தான்! அங்கேயும் பச்சை பசுமையா பார்க்கெல்லாம் இருக்குப்பா! என்ன ஒன்னு யாரும் மத்தியான நேரத்தில போகமுடியாது. அந்த அளவு வெயில் வாட்டி நம்பளை ப்ரட் டோஸ்டாக்க்கிடும் மக்கா!
இது ஹவா மகால்! அப்படின்னா காத்து மாளிகை! மன்னர்கள் மாலை நேரத்தில காத்து வாங்குறதுக்கு ஒரு மாளிகை! சாயந்திர நேரத்தில சும்மா சில்லுன்னு காத்து வீசுது! அதை அனுபவிக்க ஒரு மாளிகை! கட்டிடடக் கலையைப் பாருங்க! எவ்வளவு ரம்மியமா இருக்கில்ல!
இது யாரா? இது, உங்க உறவுக்காரனே தான். மொட்டை தலையோட ரொம்ப அழகா அம்சமா இருக்கேன் இல்ல!!!??? யாருக்கும் மயக்கம் ஏதும் வரலியே? ரொம்ப சந்தோஷம்.
நான் இல்லாத சமயத்தில நிறைய நிறைய எழுதி குவிச்சிட்டீங்க போல இருக்கு! எல்லாத்தையும் படிக்க ரொம்ப ஆசை! சந்தோஷ சுமையா ஏத்துக்கிட்டு உங்க பதிவுகளைப் படிக்கிறேன். கரும்புத்தின்ன கூலியாக் கேட்கப்போறேன்.
அப்புறம் ஜெய்பூரில கலந்துக்கிட்ட தியானத்தைப் பத்தி அடுத்தப் பதிவுல சொல்றேன்பா பங்காளி!
அதுவரை உங்களிடமிருந்து வணக்கம் கூறி விடைப் பெறுவது
உங்கள் உறவுக்காரன்...உறவுக்காரன்...உறவுக்காரன்.
35 மேதைங்க இதபத்தி என்ன சொன்னாங்கன்னா...:
Welcome back. Super photos. Start kummi
@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)
எப்படி இருக்கீங்கப்பா சிரிப்புப் போலிசு! இன்னமும் Match making படலம் தானா இல்ல Match Fixing ஆகிடிச்சா? சொல்லுங்க! சௌக்கியம் தானே?
ஆஹா வாழ்த்துகள்!
மொட்டைத்தலை படம்தான் இருக்குறதுலயே கொள்ளை அழகு!
எனக்கும் அந்தபோர்வீரன் போலவே மீசை வைக்கிறதுக்கு ரொம்ப நாள் ஆசை ஆனா இன்னும் நிறைவேறவே இல்லை!
@ப்ரியமுடன் வசந்த்
வாங்க தலை வாங்க! உங்களுக்கு மொட்டை தலைப் பிடிச்சிருக்கா! ரொம்ப சந்தோஷம். உங்க வாழ்த்துக்களுக்கு நன்றி தலை!
welcome back... Pangali... Nice pics.
நல்லா சாப்பிடுங்க பங்காளி ... ரொம்ப எளச்சு போன மாதிரி இருக்கு
அருமை நண்பரே,
”தங்களை ஆகஸ்ட் - 2010 ற்கான சிறப்பு பதிவராக தேர்ந்தேடுத்துள்ளோம். உங்கள் பதிவுகள் மிக அருமை, அனைத்து பதிவுகளும் பயனுள்ள பதிவுகள். உங்களுக்கான பரிசு புத்தகங்கள் அனுப்புவதற்கான முகவரியை இந்த மின்அஞ்சலுக்கு அனுப்பிவைக்கவும், அத்துடன் உங்கள் சமிபத்திய புகைபடமும் அனுப்பவும்”
வாழ்த்துக்கள்...
இன்னும் பல விருதுகளையும் பரிசுகளையும் வாங்க வாழ்த்துக்கள்
புகைப்படத்தொகுப்பு அழகாக உள்ளது
உங்கள் பணி மென்மேலும் சிறக்க வேண்டும்
நான் புதிதாக வலைத்தளம் எழுத ஆரம்பித்துள்ளேன்
நேரமிருந்தால் நம்ம தளத்திற்கும் வருகை புரிந்து உங்கள் கருத்துகளை பதிவுசெய்யுமாறு பணிவன்புடன் அழைக்கிறேன்
http://urssimbu.blogspot.com
நன்றி
என்றும் நட்புடன்
மாணவன்
பிரமாதம் பங்காளீ. அப்படியே மெட்ராசுலந்து எப்படிப் போவுறதுன்னும் சொல்லியிருக்கலாம்ல? போனா எந்தப் பங்காளி வீட்ல தங்குறது, இல்ல ஓட்டலா, என்ன விவரம்னு சொல்லிப்போடலாம்ல?
வாழ்த்துக்கள் பங்காளி.
படங்கள் அருமை.
தொடர்ந்து கலக்குங்க...
welcome back.
I was in Jaipur last week of Dec 2006.. got those memories....
congrats for the best pathivar of Aug.
continue.
வாழ்த்துக்கள். நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்கள் பதிவு. ஜெய்ப்பூர் படங்கள் அருமை. எனக்கு நான் சென்றதன் நினைவு வந்தது.
வெங்கட்.
ரெம்ப சுறுசுறுப்பா தினம் ஒரு பதிவு போட்டுட்டு இருந்தீங்க. காணோமேன்னு தேடினேன். வந்துட்டிங்க.
வருக சகோ.... படங்கள் மிக அருமை....செலவில்லாமல் சுத்தி பார்த்தது போல் இருந்தது....!!
hi motta boss,
potos r nice!
welcome and congrajulation
வாழ்த்துக்கள் வசந்த்....
ஹை.. நானும் போன வருடம் போயிருந்தேன், படிச்சுட்டு கமெண்ட் போடறேன்.
நண்பரே எப்படி இருக்கிறீர்கள்? பயணம் நன்றாக அமைந்ததா?
படங்கள் அருமை! சிறந்த பதிவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்துக்கள்!
ஜெய்ப்பூரில் பசுமை - இது எனக்கு புதுசு பங்காளி.
ஃபோட்டாஸ் அருமை.5 வருடங்கள் முன்னால் தீபாவளி அன்று நான் ஜெய்பூர் போனேன்.நகரமே ஜொலித்தது.
மிகவும் அழகு. உங்கள் படைப்பு வாழ்த்துக்கள்.
அடடா!எங்கூருக்கா வந்துட்டுப் போனீங்க???சொல்லவேயில்லை!
pangaali welcome back
வாங்க பங்காளி, நல்லா இருக்கீங்களா? பயணம் எல்லாம் சவுகர்யமா இருந்துச்சா? வாங்க வந்து ஜோதில ஐக்கியமாகுங்க! (உங்களுக்கு டாகுடர் விஜய் படத்துல ஒரு வில்லன் ரோலுக்கு சொல்லி வெக்கிறேன்!)
அப்புறம் உலவின் சிறந்த பதிவாளரானதுக்கு வாழ்த்துக்கள் நண்பா...! மேலும் மேலும் கலக்குங்க!
நீங்க ரொம்ப தெளிவா எழுதறீங்க. படிகர்துக்கு நல்லா இருக்கு .
நீங்க http://zeole.com/chennai க்கு வந்து ஒரு முறை எழுதணும் ...
zeole.com என்னோட ஒரு முயற்சி தான் ... அதுல ஒவ்வொரு country/city ஆக தனித்தனியாக arrange செய்து இருக்கோம்.
zeole.com/chennai ல , ஒரு 100 readers வருவாங்க . உங்க எழுத்து பல வாசகர்கள் பார்க்க வைப்பு உள்ளது.
ழ்த்துக்கள் வசந்த் "உலவு" பரிசுக்கு... சில வருஷம் முன்ன காலேஜ்ல இருந்து ட்ரிப் போனோம் ஜெய்பூர் டெல்லி எல்லாம்... அதை ஞாபகபடுத்திடீங்க படம் எல்லாம் போட்டு... சூப்பர்
Welcome back
ஜெய்ப்பூர் அருமை. நான் பத்து நாட்கள் ஊர் சுற்றியுள்ளேன். பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்.
வாங்க வாங்க. நல்லா ஊர் சுத்திட்டு வந்து இருக்கிங்க
மிக நல்ல படங்கள் !பாராட்டுக்கள்!!
சிறந்த பதிவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்துக்கள்
வாழ்த்து சொன்ன நண்பர்கள் அனைவருக்கும் நன்றி! ஜெய்பூர் எப்படி இருக்குது? அருமையா இருக்குதில்ல!
உங்க அனைவருக்கும் ரொம்ப நன்றிங்க!!! உங்க அனைவருடைய ஆதரவையும் எதிர்பார்த்து நிற்கின்றேன். தியானம் பற்றிய பதிவுகளைத் தொடராக இடலாம் என்று எண்ணியுள்ளேன். படித்துப் பாருங்க! உங்களுக்குக் கண்டிப்பாக பிடிக்கும்!
அட...நாந்தான் நாலு நாள் லேட்டா?ரொம்ப நாள் கழிச்சி வந்திருக்கீங்க சவுரியமா பங்காளி
புள்ளை புடிக்கிற சாமியாராட்டம் மொட்டை அடிச்சிட்டு கண்ணை உருட்டி பார்த்துட்டு பக்கத்துல பைய வெச்சிருக்காரே அது யாரு பங்காளி நம்ம சொந்தங்களா(சும்மா தமாசு)
தியானம் பற்றிய பதிவுகளைத் தொடராக இடலாம் என்று எண்ணியுள்ளேன். படித்துப் பாருங்க! உங்களுக்குக் கண்டிப்பாக பிடிக்கும்//
அட..என்ன கேட்டுகிட்டு எதை எழுதினாலும் நீங்கதான் சுவையா எழுது வீங்களே..(உங்க ஸ்டைல் எனக்கும் தொத்திகிச்சி)
பங்காளி சரக்கு நல்ல சரக்கு,
நம்ம திரு ஆனையப்பன்,அவர்கள் தற்போது காலில் அடிபட்டு வைத்தியம் பார்த்துக் கொண்டிருக்கிறார்,முடிந்தால் ஒரு வார்த்தை விசாரிங்க.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
Post a Comment
பங்காளி! சரக்கு எப்படி? விக்குமா... விக்காதா...??? கொஞ்சம் சொல்லிட்டு போங்க!!!