பன்னீர் தெளிக்கிறோமில... ப்ளீஸ்... கொஞ்சம் தலை குனியுங்க...

வணக்கம் பங்காளீ! வாங்க, சவுக்கியங்களா? நம்ம வலைபதிவு பக்கம் வந்ததுக்கு நன்றீங்கோ...Get this Widget

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே! என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி! நண்பர்களே!

மனிதர்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் சிந்தனைகள், இங்கு சிதறிகிடக்கிறது. படித்து பார்த்து உங்கள் கருத்துக்களை இடவேண்டுகிறேன்!

தொடர்ந்து, இந்த வலைபதிவுக்கு உங்களின் ஆதரவை தாருங்கள்!!! நன்றி! தொடர்ந்து வருக!!!

இந்த நாள், உங்களுக்கு, இனிய நாளாக அமைவதாக!!!

பாசகார பங்காளி கூட்டமுங்க! நீங்களும் கூட வாறீகளா?

8 Nov 2010

உன்னை அறிந்தால்… நீ உன்னை அறிந்தால்

உன்னை அறிந்தால்… நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்…
உயர்ந்தாலும்… தாழ்ந்தாலும்… தலை வணங்காமல்
நீ வாழலாம்

பங்காளி! பாட்டுன்னு சொன்னா நம்ப மனசுக்கு உற்சாகம் தர்றதா இருக்கணும். அந்த வகையில கண்ணதாசனோட எளிய நடை சினிமா பாடல்களை யாரால மிஞ்சிட முடியும்? சொல்லுங்க பங்காளி!

என்ன ஆழமான வரிகள்! வாழ்க்கை தத்துவத்தையே சொல்லிடுதே இந்த பாட்டு! எனக்கு ரொம்ப பிடிச்ச பாடல்கள்ல இதுவும் ஒண்ணு! உங்களுக்கு எப்படி பங்காளி, உங்களுக்கும் ரொம்ப பிடிச்சப் பாடலா இது? பதிலை கருத்துப்பெட்டியில சொல்லிப்போடுங்க!

இப்ப பாருங்க! Know Thyself-ன்னு சொன்னாங்க! ஆனா மனுஷனுக்கு எப்பவுமே மத்தவங்களைப் பத்தி அறிந்துக்கொள்கிறதில இருக்கிற ஆர்வம், தன்னைப் பற்றி அறிந்துக்கொள்கிறதில இல்லையே!

என்ன என்னமோ ஆராய்ச்சி எல்லாம் செய்றான்! வான சாஸ்திரம் படிச்சி வானத்தை ஆராய்ச்சி செய்றான், கடலில புதைந்து கிடக்கிற மர்மங்களை ஆராய்ச்சி செய்றான், எரிமலைகள்ல, பனிபிரதேசங்கள்ல போய் படாதபாடு பட்டு பல பல ஆராய்ச்சிகள் செஞ்சு இயற்கையை - பிரபஞ்சத்தை அறிஞ்சுக்கணும்னு துடிக்கிறான். அதனால பலப்பல பயனும் அடையறான்.


வானத்தை ஆராயத் தெரிஞ்சவனுக்கு,
மனத்தை ஆராயத் தெரியணும் இல்ல...


மனித நாகரீகம் பல பல விஷயங்களை சாதிச்சி கற்பனைக்கே எட்டாத அறிவியலோட உசரத்திற்கே போய்விட்டதுன்னு தான் சொல்லணும். அதனோட பயன்களை எல்லோருமே தான் நிதர்சனமா அனுபவிக்கிறோமே. இது ஒருப் பக்கம் மகிழ்ச்சித் தான். ஆனா வேறு விதத்தில மனுஷ நாகரீகம் கெட்டுபோய்கிட்டே இருக்கு! அது வருத்தம் தர்றதா இருக்கு.

பாருங்க பங்காளி! மனுஷன் தனக்குள்ள மூழ்கி, உள்ளே புதைந்து கிடக்கிற மர்ம முடிச்சுகளை அவிழ்க்க மறந்துட்டான். மனுஷன் அனுபவிக்கும் எல்லா இன்பதுன்பங்களுக்கு மனம் தான் காரணம் என்கின்ற விஷயத்தை புரிஞ்சுக்கிட்டா, நரகத்திலேயும் இன்பத்தை அனுபவிக்க முடியும். அதை தெரிஞ்சுக்கொள்ளாததாலே சொர்கத்திலே கூட நரகத்தை உண்டுபண்ணுகிட்டேயிருக்கான். 


நரகத்தைக்கூட சொர்கமாக மாத்தமுடியும் என்கின்ற இரகசியத்தையும் உணர மறுக்கிறான். அதனால கையில இருக்கிறது விலை உயர்ந்த இரத்தினக்கற்கள் என்கின்ற சிந்தனையில்லாம கண்ணாடி கற்கள்னு நினைச்சுக்கிட்டு தூர விட்டு எறிகிறான். சராசரி மனுஷனோட வாழ்க்கையை பத்தி தான் சொல்றேன் பங்காளி!

கொப்பளிக்கிற கோபம்! அதுவும் யார் மேல? தன்னோட உயிரா இருக்கிற நெருங்கியவங்க மேலேயே! பெத்த தாய் மேலே, கட்டிக்கிட்ட தாரத்து மேல, தந்தை மேல, சகோதர சகோதரிகள் மேல, பெத்த பிள்ளைங்க மேல. இப்படி கோபமா வார்த்தைகளை கொட்டி என்னத்தை வாரிக்கிட்டான் சொல்லுங்க!

அடுத்து பாருங்க! பேராசை படுகுழியில மூழ்குறான். அது அவனை கடனில சிக்க வைச்சு அள்ளல்படுத்தி கடைசியில அவனோட வாழ்க்கையையே குடிச்சிடுது.

இப்படியே பொறாமை, வெறுப்பு, அகம்பாவம், தாழ்வுமனப்பான்மை, பயம், அளவுக்கடந்த காம இச்சை, கருமித்தனம், வக்கிர எண்ணம் மத்தவங்களை துன்பப்படுத்திப்பாக்குறது, மிகுந்த சுயநலப்பற்றுன்னு பல பல தீய குணங்களில சிக்கி சின்னாபின்னமாகிறான். என்னமோ அடையணும்னு எண்ணி எப்பவுமே மனநிம்மதியே இல்லாத பேயாட்டம், நாயோட்டம் ஓடிக்கிட்டே இருக்கான். முடிவில மண்டையைப் போடறான்.


நம்ப முன்னோர்களைப் போல புத்திசாலிங்களை எங்கேயும் காணமுடியாது பங்காளி! இந்த துன்பங்களில இருந்து வெளியில வரணும்னா தன்னையே முழுசா அறிஞ்சிக்கணும். மனசுக்குள்ளல தான் எல்லா பாதிப்புகளும் உண்டாகுது, அவைகளை நீர்த்துப்போக செய்து கரைச்சுட்டோம்னா இந்த பாதிப்புகளில இருந்து தப்பிச்சுக்கொள்ளலாம்னு கண்டுபிடிச்சாங்க. உள்ளம் அமைதியோடு இருக்கிற இரகசியத்தை கண்டு உணர்ந்தாங்க. அதை மத்தவங்களுக்கும் சொல்லிக் கொடுத்தாங்க. அது தான் தியான பயிற்சியா பரிணாமம் அடைஞ்சது.

அம்மணி! பரவாயில்லையே தியானம் சூப்பரா செய்றீங்க!



பங்காளி! நான் இப்போ சொல்லப் போறது விபஸ்ஸனா தியான பயிற்சியைப் பத்தி தான். ஒரு பத்து நாள் அமைதியான - எந்த ஒருத் தொந்தரவும் இல்லாம, வெளியுலகத் தொடர்புன்னு எதுவும் வைச்சுக்க முடியாத ஒரு இடத்தில தியானம் கத்துக்கிறதைப் பத்தி என்ன நினைக்கறீங்க?

வேறு எந்த ஒரு வேலையிலேயும் ஈடுபடாம, முழுக்க முழுக்க மௌனம் கடைப்பிடிச்சிட்டு, எழுதறதோ, படிக்கிறதோ, யாருக்கிட்டேயும் பேசறதோ இல்லாம, பத்து நாளும் மௌனம் கடைப்பிடிச்சிட்டு தியானம் மாத்திரம் செய்துக்கிட்டு இருந்தா நமக்குள்ள ஒரு மாற்றம் உண்டாகிறதை உணர முடியும்.

நாடு முழுக்க விபஸ்ஸனா தியான மையங்கள் இருக்கு. http://www.dhamma.org/ என்கின்ற வெப்தளத்தில எல்லா விவரங்களும் இருக்கு. சென்னையிலக் கூட பல்லாவரத்தில இருந்து 7 கிலோமீட்டர் தூரத்தில திருமுடிவாக்கம் என்கின்ற அமைதியான இடத்தில விபஸ்ஸனா தியானம் சொல்லிக் கொடுக்குறாங்க.




இது தான் சென்னையில இருக்கிற 
விபஸ்ஸனா தியான மையம்


இதில ஹைலைட்டான விஷயம் என்னான்னு கேட்டீங்கன்னா இந்த தியானம் சொல்லிக் கொடுக்க எந்த வித கட்டணம்னு ஒண்ணும் கிடையாது. முழுக்க முழுக்க தானத்தினாலத் தான் நடக்குது. பயிற்சி முடிஞ்சுப் போகிறபோது நீங்க, தூய்மையான மனநிலையோடு உங்களால எவ்வளவு பணம் கொடுக்க முடியுமோ அதை மன நிறைவோடு வாங்கிக்கிறாங்க. அதாவது நீங்க பயிற்சியில கலந்துக்கொள்ள உங்களுக்கு முன்னால கலந்துக்கிட்டவங்க தானம் கொடுத்திருக்காங்க. அதேப்போல எனக்கு கிடைத்த மன அமைதி, மனத்தூய்மை இனி வர இருக்கிற மாணவர்களுக்கு கிடைக்கட்டும் என்று தூய மனசோடு நீங்க, உங்க வசதிக்கு என்ன கொடுக்கமுடியுமோ அந்த தொகையை கொடுங்க. அவங்க சந்தோஷமா வாங்கிப்பாங்க.

நேரம் வாய்க்கப்பெற்றவர்கள் கண்டிப்பாக தியானத்தில கலந்துக்கோங்க. கண்டிப்பா உங்க மனசில இருக்கிற விகாரங்களிலில இருந்து வெளிப்பட்டு மன அமைதியையும் சந்தோஷத்தையும் அனுபவிப்பீங்க. 

நான் கிளம்பறதுக்கு முன்னாடி உங்க பார்வைக்கு ஒரு வீடியோவை தர்றதில சந்தோஷம். இது திஹார் ஜெயிலில கிரண்பேடியினால விபஸ்ஸனா தியானத்தை அறிமுகம் செஞ்சப்பின்னாடி சிறைவாசிகள் கிட்ட எந்தவிதமான மாற்றம் வந்ததுன்னு சொல்லுகிற வீடியோ! பார்க்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கும். நேரம் இருக்கும்போது பாருங்க! ஒரு சமயம் இந்த வீடியோ வேலை செய்யலைன்னா இந்த லிங்கில சென்று பார்க்கலாம்



தியானம் இப்போ எல்லோருமே கத்துக்க ஆரம்பிச்சிருக்காங்க. நிறையப்பேரு வர்றாங்க. முக்கியமா வெளிநாட்டு ஆளுங்க வர்றாங்க!

இதெல்லாம் பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு! பூமி சொர்கபுரியாக மாற வாய்ப்பு இருக்கு! என்னோட கூட இருந்ததுக்கு ரொம்ப நன்றீங்க! கட்டாயம் தியானம் கத்துக்கோங்க! மனக்கவலை, சஞ்சலம் இல்லாம வாழுங்க!

இந்த பதிவு எல்லோர்கிட்டேயும் போய் சேறணும்னு நீங்க நினைச்சா, மறக்காம உங்க ஓட்டுகளை, கீழே இருக்கிற ஓட்டுப் பெட்டிகள்ல போடுங்க மக்கா! நீங்க எல்லோரும் தான் அன்பான பங்காளிங்க ஆச்சே! நான் சொல்லாமலே செய்றவங்க இல்லையா அப்பு?

23 மேதைங்க இதபத்தி என்ன சொன்னாங்கன்னா...:

பெசொவி said...

Nallaa solliyirukkeenga................konjam perisaana pathivaa irukku!

என்னது நானு யாரா? said...

@பெயர் சொல்ல விருப்பமில்லை

ரொம்ப நன்றிங்க தல! தீபாவளி எல்லாம் எப்படிப் போச்சு! இங்கே தனியா பெங்களூரில இருக்கேன். ஊர் திரும்பியதும் உங்க கிட்டப் பேசலாம்னு இருக்கேன். நன்றீங்க தலைவரே!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நல்லா இருக்கு பங்காளி, எங்கள மாதிரி வெளிநாட்டு வாசிகளுக்கு நீங்களே இதெல்லாம் சொல்லித்தரலாமே! (போன பதிவு மாதிரி!)

Unknown said...

தியானம் பற்றி அழகான தொகுப்பு.. இதனை பற்றி நன்றாக தெரிந்தும் ஏனோ இன்னும் தொடர்ந்து என்னால் செய்யமுடியவில்லை:-((

Kousalya Raj said...

தியானம் செய்வது எப்படின்னு தெரிஞ்சும் செய்வதற்கே ஒரு சோர்வு வருகிறது அதற்கு என்ன பண்றது சகோ.....?!! ஆனால் தியானம் என்பது நம் மனதை ஒரு நிலை படுத்தும் ஒரு நல்ல வழி என்பதை நினைத்தாவது செய்வதற்கு முயல வேண்டும்....

நல்ல பகிர்வு சகோ...நன்றி.

சி.பி.செந்தில்குமார் said...

பதிவு சூப்பர்.தியானம் செய்யனும்னா மனசை ஒரு முகப்படுத்தனும்.நீங்க போட்ட ஸ்டில்லை பார்த்தா....

சி.பி.செந்தில்குமார் said...

என்னைக்கவர்ந்த வரிகள்>>>


மனுஷனுக்கு எப்பவுமே மத்தவங்களைப் பத்தி அறிந்துக்கொள்கிறதில இருக்கிற ஆர்வம், தன்னைப் பற்றி அறிந்துக்கொள்கிறதில இல்லையே!

>>>


சூப்பர்.

Chitra said...

பங்காளி! நான் இப்போ சொல்லப் போறது விபஸ்ஸனா தியான பயிற்சியைப் பத்தி தான். ஒரு பத்து நாள் அமைதியான - எந்த ஒருத் தொந்தரவும் இல்லாம, வெளியுலகத் தொடர்புன்னு எதுவும் வைச்சுக்க முடியாத ஒரு இடத்தில தியானம் கத்துக்கிறதைப் பத்தி என்ன நினைக்கறீங்க?


....இமயமலை பயணங்களின் காரணம் புரிகிறதே.... :-)

அருமையான பதிவுங்க.... தியானம் செய்வதின் அவசியத்தை பற்றி நல்லா எழுதி இருக்கீங்க.

எஸ்.கே said...

அழகான சிறப்பான பதிவு! தியானம் இன்றைய கால கட்டத்தில் மிகவும் அவசியமானது! நன்றி!

என்னது நானு யாரா? said...

@பன்னிக்குட்டி ராம்சாமி

//நல்லா இருக்கு பங்காளி, எங்கள மாதிரி வெளிநாட்டு வாசிகளுக்கு நீங்களே இதெல்லாம் சொல்லித்தரலாமே! (போன பதிவு மாதிரி!)//

அப்படி முடியாதே பன்னிக்குட்டி சார்! முடிஞ்சிருந்தா சொல்லி தர்றதில என்ன குறை! போன பதிவுல சொன்னது ஒரு முதலுதவி சிகிச்சை மாதிரி! அதனால சொல்லி தர முடிஞ்சது! இது பத்து நாள் எந்த ஒரு வெளியுலகத் தொந்தரவுகள் ஏதும் இல்லாம கத்துக்க வேண்டிய தியான முறை!

நீங்க இந்தியா வந்தப்பிறகு கத்துக்கலாம்! இல்ல உங்க இடத்திற்குப் பக்கத்தில எங்க இருக்குன்னுப் பாத்து அங்கேப் போயும் கத்துக்கலாம். மன மிருந்தால் மார்க்கமுண்டுன்னு சொல்றாங்க இல்ல!

என்னது நானு யாரா? said...

@சிநேகிதி

//தியானம் பற்றி அழகான தொகுப்பு.. இதனை பற்றி நன்றாக தெரிந்தும் ஏனோ இன்னும் தொடர்ந்து என்னால் செய்யமுடியவில்லை//

சகோ! அது ஒரு அசுயையாக இருக்கும் முதலில! தியானம் கைவர ஆரம்பிச்சுட்டா அப்புறம் சூப்பரா செய்ய ஆரம்பிச்சிடுவீங்க! அதோட ருசி உங்களை அதன் பக்கத்தில இழுத்திட்டுப் போயுடும். அதனால முதலில கொஞ்சம் கஷ்டமா இருந்தாலும் நேரம் ஒதுக்கிப் பழகுங்க! நாளாக நாளாக சரியாகப்போயுடும்!

என்னது நானு யாரா? said...

@Kousalya

//தியானம் செய்வது எப்படின்னு தெரிஞ்சும் செய்வதற்கே ஒரு சோர்வு வருகிறது அதற்கு என்ன பண்றது சகோ.....?!! ஆனால் தியானம் என்பது நம் மனதை ஒரு நிலை படுத்தும் ஒரு நல்ல வழி என்பதை நினைத்தாவது செய்வதற்கு முயல வேண்டும்//

நீங்களே கேள்வியும் கேட்டுட்டு பதிலும் நீங்களே சொல்லிட்டீங்க! என் வேலை மிச்சம்! நன்றி சகோ!

என்னது நானு யாரா? said...

@சி.பி.செந்தில்குமார்

//பதிவு சூப்பர்.தியானம் செய்யனும்னா மனசை ஒரு முகப்படுத்தனும்.நீங்க போட்ட ஸ்டில்லை பார்த்தா.//

மனசுப் பக்குவபடுறதுக்கு முன்னால தான் மனசு சஞ்சலப்படுறது, பொண்ணுங்களை பாத்து அலைப்பாயுறது எல்லாம். தியானத்தினால மனசு பக்குவபட்டப்பின்னாடி மனசு அமைதி ஆகிடும்! எந்த ஒரு பாதிப்பும் இருக்காது!

என்னது நானு யாரா? said...

@Chitra

சித்ரா! உங்க கெட்டப்பை மாத்திக்கிட்டே இருக்கீங்களே ஏன்? அமெரிக்காவிலக் கூட தியான மையங்கள் இருக்கு. நேரம் இருக்கும் போது பத்து நாட்கள் தியான பயிற்ச்சிகளில கலந்துக்கோங்க! மனசு லேசா வைச்சுக்கிற கலையை கத்துக்கலாம்.

என்னது நானு யாரா? said...

@எஸ்.கே

//அழகான சிறப்பான பதிவு! தியானம் இன்றைய கால கட்டத்தில் மிகவும் அவசியமானது!//

சரியா சொன்னீங்க! உங்க கருத்துக்கு ரொம்ப நன்றீங்க!

என்னது நானு யாரா? said...

எல்லா நண்பர்களுக்கும்! நேரம் கருதி நான் கொடுத்த வீடியோவை யாரும் பார்க்கலைன்னு நினைக்கிறேன். அதுக் கொஞ்ச பெரிய வீடியோ தான் 52 நிமிஷங்கள் ஓடுது. ஆனா எப்போ ஓய்வான நேரம் கிடைக்குதோ கண்டிப்பாக இந்த வீடியோவைப் பாருங்க! மிஸ் பண்ணிடாதீங்க! உங்களுக்கு Inspiration-ஆக இருக்கும். அதுக்கு நான் Guarantee!

Unknown said...

தியானப்பயிற்சி இருந்தும் தொடர்ந்து செய்ய முடிவதில்லை.

பயனுள்ள பதிவு.

Madhavan Srinivasagopalan said...

த்யானத்தப் பத்தி கேள்விப் பட்டத்தோட சரி.. இன்னும் டிரை பண்ண ஆரம்பிக்கல.... பாக்கலாம்.. கண்டிப்பா நல்ல விஷயம் தான்.

என்னது நானு யாரா? said...

@கலாநேசன்

@கலாநேசன்

//தியானப்பயிற்சி இருந்தும் தொடர்ந்து செய்ய முடிவதில்லை.//

ஏதோ விட்டக்குறை தொட்டகுறையாகவாவது செய்கிறீர்கள் இல்லையா நண்பரே? முடிந்த போது செய்து வாருங்கள்! கண்டிப்பாக பலன் கிடைக்கும்!

என்னது நானு யாரா? said...

@Madhavan

//த்யானத்தப் பத்தி கேள்விப் பட்டத்தோட சரி.. இன்னும் டிரை பண்ண ஆரம்பிக்கல.... பாக்கலாம்.. கண்டிப்பா நல்ல விஷயம் தான்.//

பயிற்சி செய்துப்பாருங்க! மனசு அமைதியாவதை அனுபவப்பூர்வமாக உணர முடியும்!

என்னது நானு யாரா? said...

@Madhavan

//த்யானத்தப் பத்தி கேள்விப் பட்டத்தோட சரி.. இன்னும் டிரை பண்ண ஆரம்பிக்கல.... பாக்கலாம்.. கண்டிப்பா நல்ல விஷயம் தான்.//

பயிற்சி செய்துப்பாருங்க! மனசு அமைதியாவதை அனுபவப்பூர்வமாக உணர முடியும் நண்பரே?

அருண் பிரசாத் said...

தியானம் செய்யனும்னுதான் விருப்பம்... ஆனா ஏதோ சோம்பேறித்தனம் தடுக்குது

என்னது நானு யாரா? said...

@அருண் பிரசாத்

//தியானம் செய்யனும்னுதான் விருப்பம்... ஆனா ஏதோ சோம்பேறித்தனம் தடுக்குது//

மனசு பக்குவபடப்பட அமைதியை நோக்கி அதுவாகவே சென்றுவிடும். அதுவரை பொறுமையாக இருக்கலாம். தப்பில்ல அருண்!

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

Post a Comment

பங்காளி! சரக்கு எப்படி? விக்குமா... விக்காதா...??? கொஞ்சம் சொல்லிட்டு போங்க!!!