பன்னீர் தெளிக்கிறோமில... ப்ளீஸ்... கொஞ்சம் தலை குனியுங்க...

வணக்கம் பங்காளீ! வாங்க, சவுக்கியங்களா? நம்ம வலைபதிவு பக்கம் வந்ததுக்கு நன்றீங்கோ...Get this Widget

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே! என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி! நண்பர்களே!

மனிதர்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் சிந்தனைகள், இங்கு சிதறிகிடக்கிறது. படித்து பார்த்து உங்கள் கருத்துக்களை இடவேண்டுகிறேன்!

தொடர்ந்து, இந்த வலைபதிவுக்கு உங்களின் ஆதரவை தாருங்கள்!!! நன்றி! தொடர்ந்து வருக!!!

இந்த நாள், உங்களுக்கு, இனிய நாளாக அமைவதாக!!!

பாசகார பங்காளி கூட்டமுங்க! நீங்களும் கூட வாறீகளா?

10 Nov 2010

ஊருக்கு நல்லது சொல்வேன்!

பங்காளி! நம்ப பழக்கமே அப்படி ஆகிப் போச்சு! எங்கே நல்லது நடந்தாலும் நாலுப் பேருக்கு கூவி சொல்லணும்னு ஒரு உந்துதல் மனசுக்குள்ளே. உங்க எல்லோருக்கும் கூட இப்படி ஒரு உந்துதல் வர்றது உண்டுதானே? ஏன்னா நான் நார்மலா இல்லையான்னு ஒரு சின்ன டவுட்! அதுதான் உங்ககிட்ட ஓப்பனா கேட்டுபுட்டேன்.

எந்த பத்திரிக்கை, எந்த டீவி எதுவானாலும், கெட்ட செய்திகளுக்கு தான் ரொம்பவும் முக்கியத்துவம் தர்றாங்க. அது மனசை பாதிக்குது. அதை தேடி படிக்கிறக்கூட்டமும் இருக்கு! மஞ்சல் பத்திரிக்கை படிக்கிற கண்கள் காமாளைக் கண்களோ என்னமோ எனக்குத் தெரியல! ஆனா உறுதியா தெரிஞ்ச விஷயம், மஞ்சல் பத்திரிக்கை படிக்கிறவங்க மனசு காமாளை மனசு!

எதுக்கு கெட்டசெய்திகளை தேடி கண்டுபிடிச்சி, படிச்சுக்கிட்டு??!! நல்ல விஷயங்களை படிப்போமே! நல்ல விஷயங்களை சிந்திப்போமே! எதனை எப்போதும் நினைத்துக்கொண்டே இருக்கின்றாயோ, அதுப்போலவே ஆகின்றாய்ன்னு விவேகானந்தரும் சொல்லிட்டுப் போயிருக்காருங்க பங்காளி!

சரி! எனக்கு கடிதம் மூலம் வந்த நல்ல செய்தி உங்ககிட்ட பகிர்ந்துக்கலாம்னு ஆசை!

இயற்கை வாழ்வியல் முறையினை ருசிப் பார்க்க சந்தர்ப்பம்  

நண்பர்களே! ஒவ்வொரு மாதமும் 3வது வெள்ளி, சனி, ஞாயிறு, ஆகிய 3 நாட்கள், இயற்கை முகாம் நடைப்பெறுதுங்க.

நடைப்பெறுகின்ற இடம்:- இயற்கை வாழ்வு நிலையம், குலசேகரப்பட்டிணம் வழி, திருச்செந்தூர், தூத்துக்குடி மாவட்டத்தில் நடைப்பெறுகிறது

இந்த நவம்பர் மாதம் 19, 20, 21 நடைப்பெறுகின்றது. இம்முகாமில் இயற்கை வாழ்வு, இயற்கை உணவு, இயற்கை மருத்துவம், ஆன்மீகம், இயற்கை வேளான்மை ஆகிய பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

கட்டணம்: 500 ரூபாய் மட்டுமே. இதனை சேவையாக செய்துவர்றாங்க பெரியவர் திரு. மு.. அப்பன் அவர்கள்.

தவிர, 6 மாதக் கால இயற்கை மருத்துவ பட்டயக் கல்வி, Dip in Nature Food Theraphy (DNFT) அஞ்சல் வழியில் வழங்கப்படுகின்றது. இந்தப் படிப்பில் சேருவதற்கு வயது வரம்போ, கல்வித் தகுதியோ தேவையில்லை.

3 மாத்ததிற்கு 1 முறை யோகா, மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சை மற்றும் விழிப்புணர்வு 7 நாட்கள் முகாம் இங்கு நடைப்பெறுதுங்க. எல்லா விவரங்களுக்கும் கீழே இருக்கிற செல்பேசி எண்களில தொடர்புக் கொள்ளலாமுங்க

எண்கள்: +91-9944042986, +91-9380873645

இந்த எண்களுக்கு சொந்தக்காரர் இயற்கை உணவு நிபுணர்: திரு. மூ. . அப்பன் அவர்கள்

இவரு இயற்கை உணவே நோய் தீர்க்கும் மருந்துஎன்கின்ற புகழ்பெற்ற புத்தகத்தை எழுதி இருக்காருங்க. இவரு எல்லாவகையான நோய்களையும் இயற்கை மருத்துவ சிகிச்சை முறைகளைக் கொண்டே குணப்படுத்திவிடுறாருங்க.

இயற்கை வாழ்வியலில் முறைகளை பற்றி தெரிஞ்சுக்க, கடைப்பிடிக்க ஆசை இருக்கிறவங்க அவரைத் தொடர்புக் கொள்ளலாமுங்க.  

அடுத்து நண்பர்களுக்கு சில இயற்கை வாழ்வியல் ஆர்வலர்களின் வலைப்பக்கங்களை அறிமுகப்படுத்துவதில் எனக்கு ஈடில்லாத மகிழ்ச்சி!

சகோதரி ரதிலோகநாதனோட இயற்கை உணவு என்கின்ற வலைப்பக்கம் பாருங்க! அதோட லிங்க் http://natures-food.blogspot.com/ தமிழிலேயும் ஆங்கிலத்திலேயும் எழுதி இருக்காங்க. ரொம்ப விரிவா இயற்கை உணவைப் பற்றி எழுதியிருக்காங்க

அடுத்து திரு அஸ்வின்ஜி என்கின்ற நண்பர் எழுதி வரும் வலைப்பக்கம் http://frutarians.blogspot.com/

அடுத்து திரு சாமீ அழகப்பன் என்கின்ற நண்பரும் சித்தர்களைப் பற்றி எழுதி வருகிறாருங்க. அந்த வலைப்பக்கத்தோட லிங்க் http://machamuni.blogspot.com

பங்காளித் தோழர்களே! நல்ல விஷயங்களைப் படிப்போம்! நல்ல செயல்களை செய்வோம்! ஏன் மற்றவர்களை பற்றி தவறாக புனைவு என்கின்றப் பெயரில் எழுதி சம்பந்தப்பட்டவர்களின் மனங்களில வெறுப்பை ஏற்படுத்த வேண்டும். எழுத ஏதும் இல்லை என்றால் படிப்போம். வெறுமனே மகிழ்ந்திருப்போம். இந்த ஷனத்தில் நிலைத்திருப்போம். மனம் ஆனந்தத்தில் லயித்திருக்கட்டும்!

இவங்களைப் போலவே மகிழ்சியோடு இருப்போமே
எப்பவுமே



சிந்திச்சு நல்ல முடிவெடுங்க! பதிவுலகம் வெறுப்பு மண்டிக்கிடக்கும் ரணகளமாக இருக்குது. மனசு தாங்கல! அதனால உங்க முன்னாடிக் கொட்டிட்டேன்.எதுவும் அதிகபிரசங்கித்தனமா ஒண்ணும் சொல்லிடல இல்ல?

சரி வர்றேனுங்க பங்காளி நண்பர்களே!


சிரிங்க சிரிச்சுக்கிட்டு இருங்க! இவனைப் போல கள்ளம்
கபடம் இல்லாம சிரிச்சுக்கிட்டு இருங்க...


இந்த பதிவு எல்லோர்கிட்டேயும் போய் சேறணும்னு நீங்க நினைச்சா, மறக்காம உங்க ஓட்டுகளை, கீழே இருக்கிற ஓட்டுப் பெட்டிகள்ல போடுங்க மக்கா! நீங்க எல்லோரும் தான் அன்பான பங்காளிங்க ஆச்சே! நான் சொல்லாமலே செய்றவங்க இல்லையா அப்பு?

20 மேதைங்க இதபத்தி என்ன சொன்னாங்கன்னா...:

Ravi kumar Karunanithi said...

good post

THOPPITHOPPI said...

பயனுள்ள தகவல் நன்றி

செல்வா said...

//இயற்கை வாழ்வு நிலையம்,குலசேகரப்பட்டிணம் வழி, திருச்செந்தூர், தூத்துக்குடி மாவட்டத்தில்நடைப்பெறுகிறது. //

ஓ , தூத்துக்குடில நடக்குதா ..? கலந்துக்க முடியாது இருந்தாலும் அவுங்களோட வலைத்தள முகவரில போய் இன்னும் நிறைய செய்திகள் தெரிஞ்சிக்கலாம்னு நினைக்கிறேன் .. நன்றி அண்ணா .

எஸ்.கே said...

நல்ல தகவல் நன்றி!

தமிழ் உதயம் said...

தேவை உங்கள் சேவை.

நிகழ்காலத்தில்... said...

அறிமுகங்களுக்கு நன்றி பங்காளி

அருண் பிரசாத் said...

ரைட்டு! பதிவுலகம் எப்படி போனா நமக்கு என்ன?

நம்ம வேலைல நாம சரியா இருப்போம்

ஜெயந்த் கிருஷ்ணா said...

நல்ல பயனுள்ள தகவல்..

Unknown said...

அலுவலக வேலைகளால் என்னால் இந்த முறை கலந்து கொள்ள இயலாது.. எதிர்காலங்களில் கண்டிப்பாக கலந்து கொள்வேன்...

அன்புடன் மலிக்கா said...

நல்ல தகவல்கள் நிறைய தந்திருக்கீங்க பங்காளி.

பாசக்கார புள்ளய கொஞ்ச நாளாக்காணோம்..

Chitra said...

Thank you for passing on the useful information.

Philosophy Prabhakaran said...

உருப்படியான தகவல்... ஓட்டு போடா இத்தனை நிரலிகளா... நான் வழக்கமா போடுற ரெண்டுல மட்டும்தான் போட்டிருக்கேன்...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நார்மலான ஆள் தாங்க :)
நல்ல விசயத்தை தொடர்ந்து எழுதுங்க..

Anonymous said...

தகவலுக்கு நன்றி நண்பரே ..கலந்துக்க ஆசையா இருக்கு பார்ப்போம்

NaSo said...

தகவலுக்கு நன்றி பங்காளி!

Prabu M said...

வணக்கம் பங்காளி :)
உங்க ஏரியாவுக்கு இன்னிக்குதான் முதல் விசிட்...
நல்ல விஷயம்... என்னை மாதிரி ஆளுங்க ஊரவிட்டு கொள்ளத் தூரத்தில இருக்கோம் அதுனால பொறுப்பா பங்கேற்று அதன் ஹைலைட்ஸைப் பதிவுல எங்களுடன் பகிர்ந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் :)

http://machamuni.blogspot.com/ said...

ஐயா, உங்கள் வலைப்பூவில் இருந்து வந்து என் வலைப்பூவை பலர் பார்வையிட்டுவிட்டு போயிருக்கிறார்கள் எனபதை FEEDJIT GADGET வழியாகத் தெரிந்து கொண்டேன்.ஒரு நான்கைந்து நாட்கள் நான் ஊரில் இல்லை.எனவேதான் தாமதமாக பதில் எழுதுகின்றேன்.எனது வலைப் பூவிற்கு இணைப்பு கொடுத்தற்கு மிக்க நன்றி.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்.

vimalanperali said...

வணக்கம் பங்காளி.நல்லதை நாலு பேருக்கு கூவிச் சொல்லுற,சொல்லணும்னு நினைக்கிற உங்க மனசு தங்கம் பங்காளி.

♔ℜockzs ℜajesℌ♔™ said...

நான் இதுவரை என்னோடைய எந்த பதிவையும் வந்து படியுங்கள் என்று யாரையும் அழைத்தது இல்லை . ஆனால் என்னுடைய , சாதி = எய்ட்ஸ் (part- 1) பதிவை படிக்க தாழ்மையுடன் அழைக்கிறேன் . நேரம் இருந்தால் வாருங்கள் நண்பரே .

http://rockzsrajesh.blogspot.com/2010/11/1.html

பணிவுடன் ,
ராக்ஸ் . . . .

Free Traffic said...

www.classiindia.com Top India Classified website . Post One Time & get Life time Traffic.

New Classified Website Launch in India - Tamil nadu

No Need Registration . One time post your Articles Get Life time
Traffic. i.e No expired your ads life long it will in our website.
Don't Miss the opportunity.
Visit Here -------> www.classiindia.com

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

Post a Comment

பங்காளி! சரக்கு எப்படி? விக்குமா... விக்காதா...??? கொஞ்சம் சொல்லிட்டு போங்க!!!