பன்னீர் தெளிக்கிறோமில... ப்ளீஸ்... கொஞ்சம் தலை குனியுங்க...

வணக்கம் பங்காளீ! வாங்க, சவுக்கியங்களா? நம்ம வலைபதிவு பக்கம் வந்ததுக்கு நன்றீங்கோ...Get this Widget

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே! என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி! நண்பர்களே!

மனிதர்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் சிந்தனைகள், இங்கு சிதறிகிடக்கிறது. படித்து பார்த்து உங்கள் கருத்துக்களை இடவேண்டுகிறேன்!

தொடர்ந்து, இந்த வலைபதிவுக்கு உங்களின் ஆதரவை தாருங்கள்!!! நன்றி! தொடர்ந்து வருக!!!

இந்த நாள், உங்களுக்கு, இனிய நாளாக அமைவதாக!!!

பாசகார பங்காளி கூட்டமுங்க! நீங்களும் கூட வாறீகளா?

20 Sept 2010

பங்காளி! நான் சொல்றதை செய்தா மன நிம்மதி Guarantee!


பங்காளி! உனக்கே மனசே சரியில்லைன்னு ஃபோன் செய்த இல்லை. அதுக்கு சில பல காரணங்கள் இருக்குப்பா! நான் சொல்ற விஷயத்தை நல்லா கவனி! அப்புறம் யோசிச்சி நல்ல முடிவா எடு, என்ன?


முதல்ல நாம பார்க்க போறது உடலையும் மனசையும் எப்படி லேசா வைச்சுக்க முடியும்னு தான். அதற்கு பேரு Simple Living!
தமிழ்ல இதை எளிய வாழ்க்கை இல்லைன்னா இயற்கை வாழ்வியல்ன்னு சொல்லலாம்! 

நம்ப தேவையை ஒட்டியே பொருட்களை பயன்படுத்துறது. சரியா பங்காளி? தேவைக்கு மிஞ்சி எதையும் சேர்த்துகறதில்ல; எதையும் வீனாக்குறதில்லை; முடிஞ்ச வரைக்கும் நம்ப சுற்று சூழலை பாதிக்காத வகையில, ஆன்மீக சிந்தனையோடு, ஆரோக்கியத்தை பேணி காக்கிற வகையில வாழ்றது. இந்த சிந்தனை நிறைய பேர்களுக்கு புதுசா இருக்கலாம்!

ஏன்னா இன்னைக்கி பொருட்கள் நுகர்ச்சி என்கிறது, வெறி லெவல்ல எங்கேயோ போயிட்டு இருக்கு! எங்க போய் முட்டிகிட்டு மோதிகிட்டு மண்டை உடைபட்டி நிக்குமோ நம்ப நாகரீகம் தெரியலைப்பா! 

நம்ப காந்தி தாத்தா சொன்னது, உலகத்தில எல்லோருடைய தேவைக்கும் போதுமானபடி பொருட்கள் இருக்கு, ஆனா எல்லோருடைய பேராசைக்கு தகுந்த மாதிரி தான் பொருட்கள் இல்லைன்னு சொன்னாரு.

நம்ப ஆசையை அளவோட வைச்சிக்கிட்டா நோ டென்ஷன்மா கண்ணு! வள்ளுவர் தாத்தா என்ன சொல்றாரு பாரு!

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்

விளக்கம் புரியுது இல்ல? அதாவது எந்த எந்த பொருட்கள்ல இருந்து விலகி இருக்கிறோமோ, அந்த அந்த பொருட்கள் மூலமா வர்ற டென்ஷன் இல்லைன்னு சொல்றாரு.

நீ ஒரு விஷயத்தை நல்லா கவனிச்சி பாத்தா தெரியும்! நம்ப கிட்ட அதிகமா பொருட்கள் சேர சேர, அதுங்களை பராமரிக்கறதுக்கு, அதிகமா செலவு செய்ய வேண்டி இருக்குது. அதனால பல டென்ஷன், மனசுல குழப்பம், ஒரு ஏமாற்றம், பயம்! இதெல்லாம் தேவை தானா?

பாலைய்யா பாடுவாரு இல்ல, பாமா விஜயம் என்கிற படத்தில

வரவு எட்டணா செலவு பத்தணா
அதிகம் ரெண்டனா கடைசியில் துந்தனா துந்தனா துந்தனா 
நிலைமைக்கு மேலே நினைப்பு வந்தால், நிம்மதி இருக்காது, அய்யா நிம்மதி இருக்காது
அளவுக்கு மேலே ஆசையும் வந்தால், உள்ளதும் நிலைக்காது, அம்மா உள்ளதும் நிலைக்காது 

தமாஷாவே உண்மையை எளிமையா
சொல்லிட்டாரு இல்ல... பங்காளி?

எப்படி சிம்பிளா அழகா புரிய வைச்சிட்டாரு பாத்தியா? யோசிச்சி பாரு! நம்ப வாழ்க்கையும் அந்த மாதிரி போகுதா? இல்ல, நல்ல மாதிரி தான் போகுதான்னு! 


உன் பிரச்சனைக்கு காரணம் அளவுக்கு மேல ஆசைப் படறது தான். போதும் என்கின்ற மனமே பொன் செய்யும் மருந்துன்னு சும்மாவா சொல்லிவைச்சாங்க நம்ப பெரியவங்க.

நான் சொல்றதை யோசிச்சிப் பாத்தா, உனக்கே உண்மை புரியும்! எந்த டீவியில படம் பாத்தாலும் பாடாவதி படமாத்தான் பாக்கபோறோம். ஆனா டீவியை விக்க விளம்பரம் செய்றவன், டீவியில படம் பாக்கணும்னா, அதுக்கு LCD TV வாங்குங்கிறான், இல்லை LED TV வாங்குங்கிறான், இல்லை PLASMA TV வாங்குங்கிறான், இல்லை! இல்லை! Latest Technology - 3D TV வாங்குங்கிறான். 

புத்தி உள்ளவங்க சிந்திச்சி செயல்படணும் இல்லையா? எது வீனான ஆடம்பர செலவுன்னு சிந்திச்சி, எது தேவையில்லாத பொருள்ன்னு யோசிக்கணுமா இல்லையா? ஆனா அப்படித் தான் செய்றோமா? பக்கத்து வீட்டுக்காரன், எதிர்த்த வீட்டுக்காரன் ஏதேதோ வாங்கறான்னு, நாமலும் அதையே வாங்கறோம். Peer Pressure என்கிற பேரில, Office-ல லோன் போட்டாவது, பொருட்களா வாங்கி குவிக்கிறோம். 

பங்காளி! எதையும் வீனாக்க கூடாது! ஒவ்வொரு பொருளையும் அதன் முழுமையான பயன்பாட்டினை உபயோகிச்சே ஆகணும். வேஸ்ட் பண்ண நினைசான்னா, வேஸ்ட் ஆகி போயிடுவான் மனுஷன்!

காந்தி தாத்தைவை பத்தி உனக்கு தெரியுமா? அவரு எதையும் வேஸ்ட் செய்யவே மாட்டாரு! டர்ன்னு கிழிச்சி எறிகிற காலண்டர் ஷீட் பின்னாடி கூட வேஸ்ட் பண்ணாம, அவரு சின்ன சின்ன குறிப்புக்கள், அன்றைய தேதியில யாரை பார்கணும், என்ன செய்யனும்னு லிஸ்ட் எல்லாம் அதில எழுதி வைப்பாரு.

ஒரு முறை, அவருடைய ஆசிரமத்தில ஒருத்தரு ஒரு சின்ன குட்டியூண்டு பென்சிலை தொலைச்சிட்டாங்களாம். அவங்களை இவரு தொலைச்சி எடுத்திட்டாராம் தெரியுமா? அந்த குட்டியூண்டு பென்சிலை தேடி கண்டுபிடிச்சி அவர்கிட்ட கொடுக்கிற வரைக்கும் விடைலையாம் நம்ப தாத்தா!

இந்த ஆஸரமத்தில தான் காந்தி தாத்தா, சின்ன பென்சில்
துண்டை தேட வச்சாரு! சமர்மதி ஆஸ்ரம் 

எப்படி இருக்கு பாத்தீயா கதை! உனக்கு இதை கேக்கும்போது ஆச்சரியத்தை தருதோ இல்ல சிரிப்பை தருதோ எனக்கு தெரியல. ஆனா எதையும் வேஸ்ட் பண்ண கூடாதுன்னு ஒரு கொள்கை பிடிப்போடு இருந்தாரு பாரு! அதை நாம பாராட்டியே ஆகணும். அந்த கொள்கை தான் அவரை மஹாத்மாவா மாத்தி இருக்குதுங்கிறேன்.

நீ, நானு எல்லாம் மஹாத்மாவா மாற முடியலைன்னா, போகுது விடு! அதுக்கு நிறைய விஷயம் செய்யணும். ஆனா குறைஞ்சபட்சம் ஒரு நல்ல ஆத்மாவா இருக்க ட்ரை பண்ணலாம் இல்ல! உனக்கும் டென்ஷன் இல்லாம, ஊருக்கும் டென்ஷன் இல்லாம, நாம வாழ்ற பூமிக்கும் டென்ஷன் இல்லாம, நாம வாழ்ந்து முடிச்சிட்டா, அது தானே சந்தோஷம்!

ஒவ்வொரு பொருளை தயாரிக்கிறதுக்கும் இயற்கை வளங்களை அழிச்சித் தான் தயாரிக்க படுது. அதனால இயற்கை அன்னையை முடிஞ்ச வரை டிஸ்டர்ப் பண்ணாம இருந்தா அந்த அன்னை எப்பவுமே சிரிச்சி சிங்காரிச்சி அழகா இருப்பாங்க! நம்பளையும் சிரிக்க வைச்சி சிங்காரிச்சி அழுகு பார்ப்பாங்க!

அவங்களை டிஸ்டர்ப் செய்தோம்னா, அவங்க பத்ரகாளியா மாறி, அவங்க கோபத்தை நம்ப மேலேயே திருப்பிடுவாங்க! அந்த கோபத்தை தாங்கிற சக்தி யாருக்கு இருக்கு சொல்லு பங்காளி? 

இன்னைக்கி கதை அது தானே நடந்திட்டு இருக்கு! சரியானபடி மழை பொழிய மாட்டெங்குது, பொழிஞ்சா வெள்ளக்காடா ஆக்குது ஊரையெல்லாம். வெய்யில் கொடுமையோ நம்பளை சுட்டு எரிக்குது. ரோட்டிலேயே முட்டை ஆம்லேட் போடற அளவுல, நம்பை மண்டையை காய வைக்குது. அதை பத்தி ஒரு அக்கா நல்லா காமெடியா சொல்லி இருக்காங்க பங்காளி. அதை படிக்கணும்னா இது வழியா ஏறி போப்பா!

எந்த பொருளை பயன்படுத்தும் போதும் கவனிக்க வேண்டிய விஷயங்கள்:

Re Duce
Re Use
Re Cycle  

விஷயம் சொல்றது புரியுதா?

பொருட்களோட பயன்பாட்டை குறைச்சுக்கோ!
முடிஞ்ச வரை அவைகளை மறுமறுபடியும் பயன்படுத்து!
அவைகளை மறு சுழற்ச்சி செஞ்சி மறுபடியும், பயன்பட்டுக்கு கொண்டு வா!

இதை எத்தனை பேரு கேக்கிற மனநிலையில இருக்காங்க பங்காளி? இன்னைக்கு மாசம் பொறந்தா 2 செட் புது ட்ரஸ் எடுக்குறாங்க, 3 மாசத்துல்ல ஒரு செல்ஃபோன் வாங்குறாங்க, 2 வருஷத்தில ஒரு முறை காரு பைக்க்னு வாங்கறாங்க, கட்டின பொண்டாட்டி புருஷனை அப்படி ஈஸ்யா மாத்தமுடியலைன்னு நிறைய பேரு தவிக்கிறதா கேள்வி.  

எப்பவுமே புதுசு புதுசா, தினுசு தினுசா, பார்க்கணும், திங்கணும், ட்ரஸ் பண்ணனும்னு நினைக்கிறது ஒரு மனநோய் தெரியுமா? அதோட பேரு Maglomania. இன்னைக்கி அந்த வியாதி, பலபேருக்கு இருக்கும் போல

எனக்கு எப்பவுமே Simple and Sweet தான் Best Policy பங்காளி! என்னை பத்தி சொல்லி இருக்கேனே என்னை பற்றி இங்கேன்னு ஒரு தனி பக்கத்திலே. அதிலே வேணா போய் படிச்சி பாரு. நான் எப்படி பட்டவன்னு உனக்கு நல்லா தெரிய வரும்.

இந்த எளிய வாழ்க்கை வாழறதை பத்தி நிறைய பேசலாம். டாபிக் புடிச்சிருக்கான்னு ஒரு வார்தை சொல்லிட்டு போங்க மக்கா! சந்தோஷபடுவேன். 

19 Sept 2010

மனுஷன் தெய்வம் ஆகலாம் தெரியுமா? மெய்யாலுமா?

மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்
வாரி வாரி வழங்கும் போது வள்ளல் ஆகலாம்
வாழைப் போல தன்னை தந்து தியாகி ஆகலாம்
உருகியோடும் மெழுகைப் போன்று ஒளியும் வீசலாம்

பாட்டு அருமை இல்ல பங்காளி! கண்ணதாசனுடைய வைர வரிகள்! சரி மனிதன் தெய்வமாக முடியுமா? மத்தவங்களுக்கு, தன்கிட்ட இருக்கிறதை எல்லாம் கொடுத்துட்டு ஓட்டாண்டியா இருக்கிறது தான் தெய்வ நிலையா?

அது விரும்ப படுகிற நிலை தானா? அப்படி தப்பி தவறி யாராவது இருந்திட்டா அவனுக்கு இனா வானா பட்டம் தானே கொடுப்பாங்க. அது என்ன இனா வானான்னு கேட்கிறியா? அது ஒன்னும் இல்ல அது இளிச்ச வாயன்னு அர்த்தமாம்.

உனக்கு என்ன தோணுது பங்காளி?

எனக்கு தோணுறதை சொல்றேன்! முடிவில அது சரியா இல்லையான்னு நீ சொல்லு! மனுஷன் தனிபட்டவன் கிடையாது.

மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
உண்மைதான் தாயே! உங்களை பார்த்திட்டோம் இல்லையா?

மிஞ்சி மிஞ்சி போனா ஒரு 100 வருஷம் வாழ்வானா அவன்? ஆனா அதுக்குள்ளாற அவன் போடற ஆட்டம் இருக்கே! அவன் ஈகோ, பார்க்கிற எல்லாத்தையும் தன்னோட கட்டுபாட்டுக்கு கீழே கொண்டு வரணும்னு நினைக்குது. அவனை ஒரு கருவியாக்கி எல்லாத்தையும் எப்படியோ எல்லா பொருளையும் புகழையும் அடைய துடிக்குது.

ரஜினி சொன்ன மாதிரி என் வழி தனிவழின்னோ இல்ல என் வழி குறுக்கு வழின்னோ ஏதோ ஒரு வழியில அவனை ஓட ஓட விரட்டி மூச்சி கூட விடமுடியாத இறுக்கத்தை உண்டாக்குது. குறிக்கோள் மனசுல இருக்கிற ஆசைகளை நிறைவேத்திகிடணும்.

அவன் சக்திக்கும் மிஞ்சி அவனுடைய ஈகோ - மனசு, பெரிய பெரிய கோட்டைகளை ஆகாசத்தில கட்டுது. அந்த ஆகாச கோட்டைகளை அடைஞ்சி ஆள துடிக்குது. அந்த ஆகாச கோட்டைங்களுக்கு வழியை அடைய பூமில தேடிட்டு இருக்கான். இருட்டுல தொலச்சிட்டு வெளிச்சத்தில தேடினானாம் முள்ளா நசிருதின். அதை போல மனுஷன் பூமியில, எதை தேடி அடைஞ்சாலும், அதை அடைகிற வரையில இருக்கிற ருசி, அதை அடைஞ்ச பின்னாடி கண்ணாபிண்ணான்னு நம்ப ஷேர் மார்கெட் மாதிரி ஒரேயடியா டவுனாகி, பின்னாடி டல்லாகி போகுது.

இதுவும் வேணும் இன்னமும் வேணும்னு ஓடறான் ஓடறான் வாழ்க்கையோட எல்லைக்கே ஓடறான். எதை அடைஞ்சாலும் திருப்தி இல்ல! எந்த இடத்திலும் நிம்மதி இல்ல. ஓடி ஓடி கலைச்சி போறான். கடைசியில ஊரார் பார்த்திருக்க, உற்றார் அழுதிருக்க, ஐஸ் பாக்ஸ்சே சௌகரியமான இடம்னு அதில போய் படுத்துக்கிறான்.

இவன் வாழ்க்கை கணக்கில, இவனுடைய கணக்கு எல்லாமுமே நஷ்ட கணக்கு தான். ஏன் இந்த ஓட்டம்? அவன் சாதிச்சது தான் என்ன? உங்களுக்கு அலெக்ஸாண்டர் கதை தெரிஞ்சிருக்கும் இல்லையா? 

வெறுங்கையை வீசிட்டு போனாயே மூடனே!
உன்னால் எத்தனை எத்தனை உயிர்பலிகள்... 

அவன் சாகுறதுக்கு முன்னாடி அவனோட ஆளுங்க கிட்ட சொன்னானாம். நான் செத்த பின்னாடி என்னை சுடுகாட்டுக்கு தூக்கிட்டு போகும்போது என்னோட இரண்டு கைகளையும் வெளியே தெரிகிற மாதிரி வைங்க!

அப்பத்தான் இந்த மனுஷங்களுக்கு தெரியும், இவ்வளவு பெரிய ராஜா, ஓடி ஓடி உலகம் மொத்ததையும் தன்னோட கட்டுபாட்டுக்கு கீழே கொண்டுவரணும்னு நினைச்சி, நிறைய நாடுகளா புடிச்சான். கடைசியில ஒன்னுமே கொண்டுபோகாம வெறுங்கையோடவே போறான்னு.

எவ்வளவு பெரிய உண்மை. ஆனா எவ்வளவு லேட்டா தெரிஞ்சிகிட்டான் Alexander the Great! அவனுக்கு இந்த உண்மை மரண படுக்கையில தானே தெரிய வருது! அதுவே அவன் சீக்கிரம் இதை தெரிஞ்சி இருந்தான்னா எவ்வளவு நல்லா இருந்திருக்கும்!

அதனால எத்தனை எத்தனை பாதிப்புக்கள், உயிர் இழப்புக்கள். அதை எல்லாம் அவனால ஈடு செய்ய முடிஞ்சதா? இல்ல யாராவது அவனுடைய சட்டை காலரை பிடிச்சி கேள்வி கேட்கும்போது, பதில் சொல்ற நிலைமையில தான் அவன் இருந்தானா?

மனிஷனோட பேராசை, இன்னைக்கும் அதே தானே செய்ய வைக்குது. யாரு எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை நான் சௌகரியமா வாழணும். அது தானே பிரதான நோக்கமே இன்னைக்கி எல்லா மனுஷங்க கிட்டேயும் இருக்கு.

யாராவது கவனிக்கும்போது சட்டத்தையும், சமூகத்தையும் மதிக்கிறவன், யாரும் கவனிக்கல நம்பளைன்னு தெரிஞ்சவுடனே அவனுடைய மிருக குணம் வெளிபடுதே. எல்லா சட்ட விரோத செயல்களையும் செய்ய ரெடியா இருக்கானே.

உதாரணத்துக்கு ட்ராஃபிக் போலிஸ் இருந்தா, ஒழுங்கா சிக்னலை மதிச்சி வண்டியை ஓட்டுகிறவன், போலிஸ் இல்லைன்னு தெரிஞ்சவுடனே சிக்னல், ரெட்ல இருந்தாலும் நிக்காம ஓட்டிட்டு போறானே! இந்த கேடு கெட்ட புத்தியை என்னன்னு சொல்லுறது.

அவனுக்கு ஒரு நியாயம்! ஊருக்கு ஒரு நியாயம்! ஊருக்கு தாண்டி உபதேசம் உனக்கில்லைன்னு சொன்னானாம் ஒரு தன்நலக்கார பையன்!

இப்படி சின்ன சின்ன தப்புக்கள் செய்யாதவங்க யாரு? எல்லோருமே ஏதோ ஒரு வகையில தப்பு செய்றோமே என்னை உள்பட! அது சின்னதா பெருசான்னு இல்ல பேச்சு! செய்றோமா இல்லையான்னு தான் பேச்சு!

தப்பை செய்றது மட்டுமில்லாம, செய்கிற தப்பை எல்லாத்தையும் நியாயப்படுத்திடறோம்! அப்புறம் மத்தவங்க யாரும் சரியில்லைன்னு குத்தம் சொல்றோம். இந்த நாடு உருபாடாது, இந்த உலகம் உருபடாது, எதுவும் சரியா வராது, இந்த புலம்பல்களை கேட்டு கேட்டு சலித்து போகலையா நமக்கு? இந்த நிலை மாற வேணாமா?

Charity begins at home-ன்னு சொல்லுவாங்க இல்ல! அதனால மாற்றம் எதுவா இருந்தாலும் அது நம்ப கிட்ட இருந்து தான் ஆரம்பிக்க முடியும். ஊரை மாத்த புறப்படறதுக்கு முன்னாடி முதல்ல நம்பளை மாத்திகிட வேணும் இல்லையா?

இதை பத்தி எல்லாம் யோசிச்சி இருக்கிங்களா நண்பர்களே? கண்டிப்பா மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம். அதற்கான அத்தாட்சி தான் பதிவில இருக்கிற தியாக சுடர் விளக்கு அன்னை தெரேசா அவங்க.

நீங்க எது எது உங்க தனிபட்ட குணம்ன்னு நினைக்கறீங்க. உங்களுடைய நேர்மையான தருணங்கள். அல்லது அதிலிருந்து சறுக்கிய தருணங்கள். மனம் விட்டு சொல்லிட்டு போங்களேன்.

ஒரு புதிய நாகரீகத்தை நோக்கி நம்முடைய பயணம் ஆரம்பிக்க போகிறோம். நீங்க எல்லோரும் கூட வந்தா ரொம்ப சந்தோஷ படுவேன். வருவீக இல்ல?

18 Sept 2010

அடுப்பில்லா சமையல் - வெஜிடபுள் அவல் மிக்ஸ் சாதம்

ஹலோ யாரு பேசறது, மாப்பிளயா? நான் தான்பா உன்னோட மச்சான் பேசறேன். எப்படி இருக்கீங்க எல்லோரும்? வீட்டில எல்லோருமே சௌக்கியம் தானே?

தங்கச்சி, குழந்த ரமா எல்லோருமே நல்லா இருக்காங்க இல்ல?

மச்சான்! அட இப்பத்தான் உன்னை நினைச்சிட்டு இருந்தேன். என்னமோ இங்கலீஷ்ல ஒரு பழமொழி சொல்லுவாங்களே ஆங்...Talk of the Devil - and the Devil appears! அதுப்போல இல்ல இருக்கு!  நினைச்சவுடனேயே நீயே ஃபோன் செய்றியே. இங்க எல்லோரும் நல்லத்தான் இருக்கோம்.

மாப்பிள! என்னை இங்கலீஷ்ல என்னனென்னமோ சொல்லி பாராட்டுறீக! ரொம்ப நன்றி! எனக்கு இங்கலீசில, சிங்கிள் பீசும் தெரியலைன்னா கூட உங்க நல்ல மனசு பத்தி தான் தெரியுமே?

(அட அக்க..மக்க.. நான் இவனை பிசாசுன்னு கலாய்கிறேன்.. அதை புரிஞ்சிக்காத மாதிரியே நடிக்கிறதை பாரு! நெஞ்சழுத்தம் புடிச்ச பய!)

என்ன மாப்பு! சைலண்ட் அயிட்ட! என்ன யோசிக்கிற!

மச்சான்! அது ஒன்னுமில்ல! ஏதோ யோசனையில இருந்திட்டேன். சரி அதை விடு! நீ சொல்லி கொடுத்த அடுப்பில்லா சமையல் ரெஸிபிகளோட மகிமையை பத்தி தெரியுமா! இப்ப ஐயாவோட மவுசு ரொம்ப ஏறிபோச்சி! உன் தங்கச்சிக் கூட என்னை பெருமையா பாக்குறான்னா பாறேன்.

மச்சான்! வேற எதாவது அடுப்பில்லாத சமையல் ரெஸிபி இருந்தா சொல்லேன். இப்போ அடிக்கடி வீட்டில பழ சேலட், பேரிச்சை முந்திரி லட்டு எல்லாம் செய்ஞ்சி சாப்பிடறோம். எல்லோருமே நல்லா இருக்குன்னு சொல்றாங்க! (ஹைலைட் செய்த ரெஸிப்பி எல்லாம் "அடுப்பில்லா சமையல்" லேபில்ல இருக்குதுங்க)

என் மவுஸை தக்கவைச்சிறேன்ப்பா! சீக்கிரம் ஏதாவது ஒரு நல்ல ரெஸ்பியை சொல்லு!

சரி வேற ஒரு ரெஸிபியா....ம்ம்ம்ம் யோசிக்கிறேன்ப்பா... சரி சொல்றேன். பேப்பரு எடுத்து எழுதிக்கோ!


இந்த ரெஸிபியோட பேரு வெஜிடபுள் அவல் மிக்ஸ் சாதம்

5 ஆளுங்களுக்கு தேவையானதை சொல்றேன்! நோட் பண்ணிக்கோ!

அவல்               - 500 கிராம்
தேங்காய் துருவல்    - 2 மூடிகள்

காய்கறிகள்:   
பெரிய வெங்காயம்    - 2 
காரட்                - 2
தக்காளி              - 2
வெள்ளரி             - 1
எலுமிச்சை           - 3
இஞ்சி                - 25 கிராம்
கோஸ்               - 100 கிராம்
மிளகுத்தூள், சீரகத்தூள் - கொஞ்சமாக
கொத்தமல்லிதழை
கருவேப்பிலை        - கொஞ்சமாக
குடைமிளகாய்        - 1
உப்பு                 - சுவைக்கு ஏற்றபடி. கொஞ்சம் குறைவா இருந்தா கூட தப்பில்லை மாப்பு!

தயாரிக்கிற முறையை சொல்றேன் பாரு! கவனமா நோட் பண்ணிக்கோ!

அவலை சுத்தம் செய்து கல்லெல்லாம் நீக்கிட்டு, தண்ணியில கழுவி, அப்புறமா நல்ல தண்ணியில ஒரு 10 நிமிஷம் ஊற வைப்பா!


வெங்காயத்தை தோல் நீக்கிட்டு, பொடியா நறுக்கிக்கோ! காரட், தக்காளி, கோஸ், குடமிளகாய் எல்லாத்தையும் கழுவிட்ட பின்னாடி சின்ன சின்ன பீஸா வெட்டு! இஞ்சியை தோல் சீவிட்டு, அதையும் சின்னதா வெட்டிக்கோ! கொத்தமல்லி தழை, கருவேப்பில்லை எல்லாத்தையும் கூட முதல்ல கழுவிட்டு சின்ன சின்னதா வெட்டிக்கோ! எலுமிச்சை பழத்தை பிழிஞ்சி சாறு எடுத்துக்கோ!

ஊறவைச்ச அவல் இருக்கில்ல? அத்தோட இந்த வெட்டிய காய்கறிங்க, தேங்காய் திருகல், இஞ்சி, கொத்தமல்லித் தழை போட்டபின்னாடி, மிளகுதூள், சீரகத்தூள், உப்பு, எலுமிச்சை சாறு எல்லாம் சேர்த்து கிளறிவிட்டா, உன்னோட வெஜிடபுள் அவல் மிக்ஸ் சாதம் ரெடி!

இதை சர்கரை வியாதி காரங்களும் இந்த உணவை தாராளமா சாப்பிடலாம். சமைச்ச சாதத்துக்கு பதிலா ஒரு வேலை இதையே முழுசா எடுத்துக்கலாம். இதுக்கு சைட் டிஷ்-ஆ தேங்காய் சட்டினி, வேற்கடலை சட்டினி ஏதாவது செய்துக்கலாம்

High BP ஆளுங்களும், மலச்சிக்கல் ஆளுங்களும், உடல் பருமனால அவதிபடுறவங்களும், அல்சர், அசிடிட்டி பிராப்ளம் இருக்கிறவங்களும், மூட்டுவலி ஜீரண கோளாறு இருக்கிறவங்க, வயிற்று வலி ஆளுங்களும் அடிக்கடி இந்த அடுப்பில்லா ஆரோக்கிய உணவை சாப்பிட்டு வந்தா, அவங்க நோயிலிருந்து எல்லாம் சீக்கிரம் விடுதலை பெறலாம் மாப்பு!

ரொம்ப நன்றி மச்சான்! இப்பவே செய்து பார்திடறேன். அடுப்பில்லாம சமையல் ரெஸிபிக்களை சும்மா ஃபிங்கர் டிப்ஸ்லேயே வைச்சிருக்கீங்க போல! ஆரோக்கியத்துக்கு குறைஞ்ச பட்சம் ஒரு வேலையாவது சமைக்காத உணவு தான் பெட்டர்ன்னு என்னோட அனுபவத்தில தெரிஞ்சிகிட்டேன்

ஆமாம் மாப்பிள! எனக்கு கூட நண்பர்கள் ஈமெயில் மூலமா, ஃபோன் மூலமா, சமைக்காத உணவை சாப்பிட்டு ஆரோக்கியமா இருக்கிறதா சொல்றாங்க! சரி பேங்கில ஒரு வேலை இருக்கு! அப்புறமா பேசறேன்

நண்பர்களே! உங்க இயற்கை உணவு அனுபவங்கள் இருந்தா பகிர்ந்துக்கோங்க! அது மத்தவங்களுக்கும் பயனா இருக்கும் இல்ல! என்ன நான் சொல்லுறது? 

இயற்கை வாழ்வியல், இயற்கை மருத்துவ பதிவுகளை எல்லோரும் தொடர்ந்து படிச்சிட்டு வர்றீங்க! எனக்கு மகிழ்ச்சியா இருக்கு! இதிலே எதை எதை Follow செய்றீங்கன்னு சொன்னீங்கன்னா சந்தோஷப்படுவேன்.

16 Sept 2010

அசைவம் ஏன் டேஞ்சர்ன்னு தெரிஞ்சதில்ல பங்காளி?



போன ரெண்டு பதிவுகள்ல ஏன் மனுஷனுக்கு மாமிசம் ஏத்த உணவு இல்லைன்னு பாத்தோம் இல்ல. இப்போ அதோனோட தொடர்ச்சியை பார்க்க போறோம்.

முதல் பாகத்தை படிக்கணுமா? அப்போ இங்கே அழுத்துங்க!

2வது பாகத்தை படிக்கணுமா? அப்போ இங்கே அழுத்துங்க!

ச்ச்சி... பாவம் இல்ல! இவங்கெல்லாம் மனுஷங்களா?  

சரி பங்காளி! ஒரு விஷயம் கேட்கிறேன், எங்கே பதில சொல்லு பார்க்கலாம்!

மாமிச உணவு சாப்பிடறது பொருளாதார ரீதியா சரியான ஒரு விஷயமா? 

பரவாயில்ல! கொஞ்ச நேரம் எடுத்து யோசி பங்காளி!

ஏதாவது யோசனை வந்ததா? இல்லையா? சரி விடு! எப்பவும் போல நானே இதுக்கும் பதிலை சொல்லிடறேனே!

அமெரிக்காவில எடுத்த ஒரு கணக்கு பத்தி கேளேன்! அந்த நாட்டில இருக்கிற மாமிசத்துக்காக வளர்க்கபடுகிற மாடுங்க, பன்னிங்க, செம்மறியாடுங்க, கோழிங்க எல்லாம் அந்த நாட்டு ஜனதொகை சாப்பிடறத விட 5 மடங்கு அதிகமா தானியங்களையும், சோயா பீன்ஸ்சையும் சாப்பிடுதாம்.

மனுஷனுக்கு ஏன் தான் இப்படி கொலை செய்ற புத்தி வருதோ?
ஆறாவது அறிவு உள்ளவன்னு வேற சொல்லிக்கிறான்!

ஒரு ஏக்கர் நிலத்தில புல்லை வளர்த்து அதை மாடுங்களுக்கு கொடுத்தா கடைசியில கிடைக்கிறது என்ன தெரியுமா? வெறும் 165 பவுண்ட் மாட்டுகறி மட்டும் தான்! அதே ஒரு ஏக்கரில 20,000 பவுண்ட் உருளைகிழங்கு நமக்கு விளைச்சலா பெற முடியும்னு சொல்றாங்க அப்பு! பாத்தியா இந்த அநியாயத்தை!

அமெரிக்கர்கள் மட்டும் அவங்க சாப்பிடற மாமிச அளவில் வெறும் 10% குறைச்சிட்டாலே, உலகத்தில வருஷத்துக்கு உணவில்லாம சாகிற 60 மில்லியன் மனுஷங்களோட பட்டினியை திர்த்திட முடியுமாம்.

கற்பனை பண்ணி பாரு! இன்னும் வர்ற காலத்தில ஜனதொகை கூடுமே தவிர குறைய போறதில்ல. இப்படி அநியாயமா உணவு தானியங்களை விளைவிச்சி விலங்குகளுக்கு கொடுத்து, அதுங்களை சாகடிச்சி, அதில இருந்து கிடைக்கிற மாமிசத்தை எல்லா ஜனதொகைக்கும் கொடுக்க முடியுமா? அது எல்லோருக்கும் பத்தும்படி இருக்குமா? இப்பவே உணவில்லாம பல நாடுகள்ல சாவுறாங்க! இதை பத்தி என்ன நினைக்கிற நீ?

ஏழை நாடுகள்ல ஒரு மனுஷன், ஒரு வருஷத்துக்கு, சராசரியா 400 பவுண்ட் தானியங்களை சாப்பிடறான். அதே பணக்கார நாடுகள்ல 2000 பவுண்ட சாப்பிடறான். என்ன புரியலையா? அதாவது 90% தானியங்களை முதல்ல ஆடு மாடுங்களுக்கு கொடுத்து, பின்னாடி அதுங்களோட கறியை சாப்பிடறான்னு அப்படி சொன்னேன். எப்படி எல்லாம் வேஸ்ட் பண்றாங்க பாரு!

அடுத்த விஷயம், நம்ப சுற்றுபுற சூழல் எப்படி பாதிப்பு அடையுது பாரு!     

விலங்குகளை அறுத்து கூறு போடற இடங்களிலே இருந்து எல்லாம் நச்சுதன்மையோடு கழிவுநீர் வெளியே விடபடுது. அதெல்லாம் ஆறுகள்ல போய் கலக்குது. இதில கொடுமையான விஷயம் என்னான்னா, குடியிருப்புகள்ல இருந்து வெளிபடுகிற கழிவுநீரை விட 10 மடங்கு அதிக நச்சுதன்மையா இருக்காம், இந்த பண்ணைகள்ல இருந்து வர்ற கழிவுநீர்ல.

ஏழைநாடுகள்ல காடுங்க அழிக்கபடுறது பெரிய பிரச்சனையா இருக்கு அப்பு! உதாரணத்துக்கு, இந்தியாவில இன்றைய சூழலில, வெறும் 18% காடு மாத்திரம் தான் இருக்கு! குறைஞ்சபட்சம் 33% காடு இருந்தா தான் நல்லா மழைவளம் இருக்கும்.


காடுங்க அழியறதில முக்கிய காரணம், இந்த கால்நடைங்களை வளர்கிறது தான்னு, சொல்றாங்க விஷயம் தெரிஞ்சவங்க! இதனால் புல் செடிங்க எல்லாம் இல்லாம மழைநீரை தடுக்க முடியாம வெள்ள பெருக்கு அடிக்கடி ஏற்படுது

இன்னொரு கணக்கு சொல்றேன் பாரு! உனக்கு மயக்கமே கூட வரலாம்!


ஒரு பவுண்ட் கோதுமையை விளைவிக்க 60 பவுண்ட தண்ணி இருந்தா போதும். ஆனா அதே ஒரு பவுண்ட் மாமிசத்தை பெற கிட்டதட்ட 6000 பவுண்ட் தண்ணி தேவைபடுதாம். தண்ணிக்காக மூன்றாம் உலக போரே வரலாம்னு சொல்றாங்க! இவங்க என்னடான்னா இப்படி வேஸ்ட் பண்றாங்களேன்னு தோணுதா பங்காளி? 


நீ நல்ல மனுஷன் இல்ல அதனால உனக்கு அப்படிபட்ட நல்ல சிந்தனை தான் தோணும்!

எல்லா மதங்களும் அன்பா இரு! அஹிம்சையை கைகொள்ன்னு சொல்லுது. நாம சகமனுஷங்க கிட்ட அன்பா இருக்கணும்னா, நாம எல்லோருமே சைவம் சாப்பிடறவங்களா தான் இருக்க முடியும். என்ன நான் சொலறது ஏத்துகிற இல்ல?

எல்லோருக்கும் தாத்தா - வள்ளுவர் தாத்தா என்ன சொல்றாரு பாரு!

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்

அர்த்தம் புரியுதா? அதாவது நாம எந்த விலங்கையும் உணவுக்காக கொல்லாம விட்டோம்னா அதுங்க எல்லாம் கையெடுத்து நம்மை கும்பிடுமாம்பா

உனக்கு பெரிய மனுஷங்க நட்பு வேணும்னு சொன்னே இல்ல. அப்போ உடனே சைவமா மாறு! யாரெல்லாம் உனக்கு நண்பர்களா ஆகுறாங்க பாரு! இங்கே ஒரு லிஸ்ட் இருக்கு படிக்கிறேன் கேளு!

Pythogoras, Socrates, Plato, Clement of Alexandria, King Ashoka, Leonardo Da Vinci, Montaigne, King Akbar, John Milton, Sir Issac Newton, Voltaire, Benjamin Franklin, Shelly, Ralph Waldo Emerson, Henry David Thoreau, Leo Tolstoy, George Bernard shaw, Rabindranath Tagore, Albert Schweitzer, Albert Einstein.

கடைசியா இந்த லிஸ்ட்ல இருக்கிறது, நம்ப அன்புக்கு உகந்த, பொக்கை வாய் தெரிகிற மாதிரி சிரிக்கிற நம்ப காந்தி தாத்தா

நண்பர்களே! மூனு பாகங்களையும் பற்றி உங்க கருத்து என்ன? எத்தனை பேரு சைவமா மாறி அப்பாவி ஜீவன்கள் கிட்ட இருந்து தேங்கஸ்சை வாங்கிக்க போறீங்க!  

அட சும்மா மனம் விட்டு சொல்லிட்டு போங்க! நாங்களும் தெரிஞ்சுப்போம் இல்ல, நீங்க என்ன நினைக்கறீங்கன்னு!