பன்னீர் தெளிக்கிறோமில... ப்ளீஸ்... கொஞ்சம் தலை குனியுங்க...

வணக்கம் பங்காளீ! வாங்க, சவுக்கியங்களா? நம்ம வலைபதிவு பக்கம் வந்ததுக்கு நன்றீங்கோ...Get this Widget

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே! என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி! நண்பர்களே!

மனிதர்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் சிந்தனைகள், இங்கு சிதறிகிடக்கிறது. படித்து பார்த்து உங்கள் கருத்துக்களை இடவேண்டுகிறேன்!

தொடர்ந்து, இந்த வலைபதிவுக்கு உங்களின் ஆதரவை தாருங்கள்!!! நன்றி! தொடர்ந்து வருக!!!

இந்த நாள், உங்களுக்கு, இனிய நாளாக அமைவதாக!!!

பாசகார பங்காளி கூட்டமுங்க! நீங்களும் கூட வாறீகளா?

09-Sep-2010

முரளியின் மரணம்! இதயநோய்க்கு தீர்வு இருக்கிறதா இல்லையா???


          நடிகர் முரளி மரணம்

அவருடைய ஆத்மா சாந்தி அடையட்டும் என்று பிரார்திக்கின்றேன்!

நண்பர்களே! நீங்களும் ஒரு நிமிடம் மவுனமாக அவருடைய ஆத்மா சாந்தி அடைய பிரார்தனை செய்ய வேண்டுகின்றேன்!

நடிகர் முரளி மாரடைப்பு நோயினால் நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 46. அவருடைய உடல் இன்று தகனம் செய்யபடுகிறது.

நண்பர்களே! இது அதிர்ச்சி தரும் செய்தியாக இருக்கிறது. 46 வயதில் மரணம்.

ஒரு மனிதனின் அகால மரணம்! சாவை அணைக்கும் வயசா இது? மிகவும் துக்ககரமான ஒரு கெட்ட செய்து!

இது நம்மை சிந்திக்க வைக்கவேண்டும் என்று தான் உங்களின் கவனத்திற்கு இதனை கொண்டு வருகின்றேன்.

இதய நோய்களை பற்றி சரியான ஒரு புரிதல் நம்மிடம் இல்லை நண்பர்களே! இது மிகவும் வருத்தத்திற்குரிய செய்தி. ஆரோகியம் நம் கையிலேயே இருக்கிறது என்கின்ற செய்தி அதிகமானோர்களுக்கு தெரியவேயில்லை.

நண்பர்களே! மாரடைப்புக்கு காரணம் நம் எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தான். அதற்கு காரணம், நம் உடம்பில் சேரும் கெட்ட கொலஸ்ட்ரால் தான். மற்றவர்களுக்கு இதுபோன்ற நோய்கள் வருமே தவிர, நாம் ஒருபோதும், இதய நோய்களால் தாக்கபட மாட்டோம் என்று ஒரு நினைப்பில், நாம் சாப்பிடும் உணவில் அக்கறை இல்லாமல் இருக்கின்றோம்! இதற்கு விளைவு தான் இந்த இதய நோய்களின் பெருக்கம்!

உணவே மருந்தாகும் என்கின்ற நாகரீகத்தில் இருந்து உணவே நஞ்சாகும் என்கின்ற நாகரீகம் வரை வந்துவிட்டோம்.

நம் நாகரீகம் வேகமாக பள்ளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது!

ஒரு நண்பர் கூட, தனக்கு ஒரு முறை மாரடைப்பு வந்ததென்றும், அதற்காக என்ன செய்யவேண்டும் என்று கூறும்படியும் எழுதி கேட்டிருக்கின்றார். அவருக்காகவும் இந்த பதிவை எழுதுகின்றேன்.

உலகத்தில் இன்று, மூன்றில் ஒரு மரணம் இதய நோய்களால் நேர்கிறது. இது ஆபத்தின் அறிகுறி! மூன்றில் ஒன்று! உங்களை அதிர்ச்சிக்குள்ளாக்குவதற்காக இதனை சொல்லவில்லை. உங்களை சிந்திக்க வைக்கவே சொல்கின்றேன்.

உணவில் கவனம் செலுத்துங்கள் நண்பர்களே! எண்ணெயில் வறுக்கப்பட்ட உணவுகளை மிகவும் கொஞ்சமாக சாப்பிடுங்கள்! மனம் பக்குவம் பட்டவர்கள் முற்றிலும் இவைகளை தவிர்திடுங்கள். மற்றவர்கள் அந்த பக்குவபட்ட நிலைக்கு வருவதற்கு முயற்ச்சி செய்யுங்கள்!

எண்ணெயாலே நமக்கு, என்ன என்ன சக்தி கிடைக்கிறதோ அதற்கு மாற்றை சொல்கின்றேன். கவனமாக கேளுங்கள்! கேட்டு எவை எல்லாம் உங்களின் சௌகரியத்திற்கு ஒத்துவருமோ, அவைகளை கண்டிப்பாக பின்பற்றுங்கள்! நண்பர்களே! இது உங்களின் உடல்நலனை பற்றி சிந்தித்து கொண்டிருக்கின்றோம் என்பதனை மறவாதீர்.  

எண்ணெய்க்கு மாற்றாக, தேங்காயை பச்சையாக வெல்லத்துடன் சாப்பிடுங்கள். வேற்கடலையை இரவில் ஊறவைத்து காலையில் சாப்பிடலாம். எள்ளை முளைகட்டி வெல்லம் கலந்து சாப்பிடலாம். இதனால் நமக்கு வேண்டிய எல்லா சக்தியும் கிடைக்கிறது

கொழுப்பு சத்து உள்ள உணவுகளை கண்டால், அவற்றின் ருசிக்கு மயங்கிடாதீர்கள். அவை எல்லாம் மோகினி பிசாசுகள்! அழகிகளின் முகமுடி போட்டு வந்திருக்கின்றன. நம்மை படுகுழியில் தள்ளாமல் வேறு பக்கம் நகராதவைகள். உங்களுக்கு அவை எவை என்று, நன்கு தெரியும் ஆகையால் அவைகளின் பட்டியலிட்டு சொல்லவேண்டிய தேவை இல்லை என்று நினைக்கின்றேன்.  

நீராவியில் வேகும் உணவுகள் – இட்லி, பிட்டு போன்றவை சாப்பிடலாம். எண்ணெய் சேர்காமல் Non-stick பாத்திரங்களில் சப்பாத்தி தோசை போன்றவைகளை செய்து சாப்பிடலாம்.

நார்சத்து அதிகமாய் இருக்கும் தானியங்கள், பழங்கள் – ஆரஞ்சி, பப்பாளி, அன்னாசி, வாழைபழம், போன்ற பழங்களையும், கேரட், பீட்ரூட் முள்ளங்கி, தக்காளி என்று பச்சையாக உண்ண முடிந்த எல்லா காய்கறிகளையும் கலந்து ஒரு கின்னம் அளவு தினமும் ஒரு வேலையாவது உணவுடன் சேர்த்து கொள்ளுங்கள். இரண்டு வேலைகளில் சேர்த்து கொள்ள முடிந்தால் மிகவும் நல்லது.

நெல்லிகாய், எலுமிச்சை, மாதுளம் பழம் எல்லாம் இதய நோயாளிகளுக்கு மிகவும் ஏற்றது.

நீர்காய்களான, சுரக்காய், கோவைகாய், வெள்ளரி, பூசணி, புடலை எல்லாமும் கூட மிகவும் நல்லது. இவைகளையும் மிகவும் சிறியதாக அரிந்து பச்சைகாய்கறிகள் சேலட் செய்கையில் அவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம். அல்லது தனி தனியாக இவைகளில் இருந்து சாறாக்கி சிறிது உப்பு, மிளகு, சீரகத் தூள் சேர்த்து சாப்பிடலாம்.

தற்போது நெஞ்சு வலி இருப்பவர்கள், தினமும், இஞ்சி துண்டை தோல் சீவி நன்கு அறைத்து, சிறிது தேன் கலந்து நாவினால் நக்கி சாப்பிடுங்கள். வலி குணமாகும்.   

பசி அறிந்து உண்ணுங்கள்! என்ன உண்கின்றீர்கள்? அவைகளில் இருக்கும் காலோரி சத்து எவ்வளவு என்று தெரிந்து உண்ணுங்கள்.

காரம், உப்பு, புளி, எண்ணெய் போன்றவைகளை எந்த அளவு உங்களின் உணவில் குறைக்க முடியுமோ, அந்த அளவு குறைத்து சாப்பிடுங்கள்.

புகை பிடித்தல், மது குடித்தல், அசைவ உணவில், மீனை தவிர எல்லாம் இதயத்திற்கு வில்லன்கள் தாம் என்று புரிந்து கொள்ளுங்கள். மீனையும் எண்ணெயில் வறுத்தீர்கள் என்றால் அதுவும் கேடு நிறைந்த உணவாக மாறிவிடும்!

ஆரோகியமாக இருக்கும் போது செய்யும் தவறுகள், நம்மை அந்த நிமிடமே ஒன்றும் செய்யாதிருக்கலாம்.

அவை கடனை வசுலிக்க சந்தர்பத்தை எதிர்பார்த்து கொண்டே காத்திருக்கின்றன நண்பர்களே! சரியான நேரத்தில், மானை துரத்தும் வேட்டை நாய்கள் போன்று நம்மை துரத்துகின்றன. அவை எப்படி மானின் கழுத்தை பிடித்து கொதறி இழுக்கின்றனவோ, அதுபோலவே இந்த நோய்கள் என்கின்ற அரக்கர்களும் நம்மை கழுத்தை பிடித்து நம் ரத்தம் குடிக்க வெறியுடன் பற்றுகின்றன.

கவலை, மன அழுத்தம், கோபம், பதட்டம், பயம் என்று மனதில் எழும் பலவித உணர்ச்சிகளும் நம் இதயத்தை தாக்குகின்றன. எல்லாம் ஒன்றுக்கு ஒன்று தொடர்பு உள்ளவையே! உடலில் தோன்றும் நோய்கள் மனத்தினை பாதிக்கின்றன. அதேபோல் மனத்தில் தோன்றும் உணர்வுகள் உடல் உறுப்புகளை பாதிக்கின்றன.

உடலுக்கு வேலை கொடுங்கள் நண்பர்களே! எத்தனையோ மனிதர்களுக்கு வேர்வை சுரபியே வேலை செய்யாமல் பல வருடங்களாக பழுதுபட்டு இருக்கிறது. தினமும் 1 மணி நேரமாகிலும், நன்கு நடைபயிற்ச்சி மேற்கொள்ளுங்கள், சூரிய ஒளி குளியல், வாழையிலை குளியல், மெது ஓட்டம், யோகாசனங்கள் என்று என்ன செய்ய முடியுமோ அதனை செய்யுங்கள்.

இந்த நோய்கள் எல்லாம் நம்முடைய வாழ்க்கை முறை சீர்கேட்டால் வருபவை (Life Style Diseases).

நம் வாழ்க்கை முறையை மாற்றி கொள்வோம்! நோய்கள் வராதபடி நம்மையும் நம் குடும்பத்தாரையும், நம் நண்பர்களையும், நம் உறவுகாரர்களையும் காப்பாற்றுவோம் நண்பர்களே!

எல்லாவற்றையும் தொகுத்து சொல்வது இது தான். நோய் நம்மை வந்து தாக்கும் வரை காத்திருக்கவேண்டாம்.

"The best defence is offence" என்று சொல்வார்கள். அந்த வாக்கியத்தின் படி நோய்கள் நம்மை தாக்கும் முன்னே, நாம் முதலில் நோய்களை தாக்குவோம் நண்பர்களே!

வாருங்கள் நோய் ஏதும் இல்லா நாகரீகம் காண்போம்!!!

42 மேதைங்க இதபத்தி என்ன சொன்னாங்கன்னா...:

prabhadamu said...

அவருடைய ஆத்மா சாந்தி அடைய பிரார்திக்கின்றேன்!

SurveySan said...

good info.

என்னது நானு யாரா? said...

@prabhadamu: நன்றி நண்பரே!

@SurveySan: உங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி! தொடர்ந்து வாருங்கள் நண்பரே!

Ananthi said...

நடிகர் முரளியின் மறைவு உண்மையில் அதிர்ச்சி தான்...!! :-(((
ரொம்ப கஷ்டமா இருக்கு..

உங்களின் ஆரோக்யமான உணவு முறை விளக்கம்... உபயோகமான ஒன்று..
பகிர்வுக்கு ரொம்பவும் நன்றி..

வெறும்பய said...

அவருடைய ஆத்மா சாந்தி அடைய பிரார்திக்கின்றேன்..

நல்ல தகவல்கள் பகிர்வுக்கு நன்றி..

rajan said...

புதிய ஆய்வு மாரடைப்புக்கு காரணம் கொலஸ்ட்ரால் என்கிற கொழுப்பு இல்லை ! அமெரிக்க ஆய்வு .மேலும் கொலஸ்ட்ரால் என்கிற கொழுப்பு ஆரோகியமான உடலுக்கு தேவையான ஒன்று , கொழுப்பு இல்லாத மனிதனை நோய் அதிகம் தாக்கும் , மேலும் நல்ல கொழுப்பு கெட்ட கொழுப்பு என்று இல்லை . தகவல் - புகழ் பெற்ற முத்த சித்தமருத்துவர்

rajan said...

if u search "Cholesterol Does Not Cause Heart Disease" in google thousands of pages coming under this title

அது ஒரு கனாக் காலம் said...

ரொம்ப நல்ல தகவல்கள் ... பிரபல ஆங்கில மருத்துவரும் இதையே தான் சொல்லிருக்கிறார் ( அளவோடு சாப்பிடு , எண்ணை வேண்டாம் , நட , ரொம்ப அலட்டிக்காதே , சந்தோஷமாய் இரு ) ..

முரளி அவர்களின் குடும்பத்துக்கு என் அனுதாபங்கள்

அருண் பிரசாத் said...

நல்ல தகவல் வசந்த்!

Free Food donation Widget இணைத்ததற்கு நன்றி

Chitra said...

கொழுப்பு சத்து உள்ள உணவுகளை கண்டால், அவற்றின் ருசிக்கு மயங்கிடாதீர்கள். அவை எல்லாம் மோகினி பிசாசுகள்! அழகிகளின் முகமுடி போட்டு வந்திருக்கின்றன. நம்மை படுகுழியில் தள்ளாமல் வேறு பக்கம் நகராதவைகள்.


.....தெளிவாக - நகைச்சுவையுடன் விளக்கம் தந்து இருக்கிறீர்கள். நன்றி.

தமிழ் உதயம் said...

அக்கறையுடன் சொல்லப்படுகிறது ஒவ்வொரு பதிவும். அதிர்ச்சியடைய செய்தது முரளியின் மரணம்.

Anniyan said...

கட்டுரை எல்லாம் நல்லா இருக்குங்க உங்க கிட்ட தெறமையும் இருக்கு. பிளாக் பிளாக்கா போய் நீங்க எதுக்கு உங்க பிளாக்க்கு மார்கெட்டிங்க் பண்றீங்க அது கொஞ்சம் ஒரு மாதிரியா இருக்கு நண்பரே!

என்னது நானு யாரா? said...

@Ananthi:
@வெறும்பய:
@அது ஒரு கனாக் காலம் சுந்தர்
@அருண் பிரசாத்:
@தமிழ் உதயம்:
@Chitra

பாராட்டிய உங்க அனைவருக்கும் நன்றி நண்பர்களே!

என்னது நானு யாரா? said...

@rajan:

//புதிய ஆய்வு மாரடைப்புக்கு காரணம் கொலஸ்ட்ரால் என்கிற கொழுப்பு இல்லை ! அமெரிக்க ஆய்வு .மேலும் கொலஸ்ட்ரால் என்கிற கொழுப்பு ஆரோகியமான உடலுக்கு தேவையான ஒன்று , கொழுப்பு இல்லாத மனிதனை நோய் அதிகம் தாக்கும்//

நீங்கள் சொல்லி இருக்கும் தகவல் எனக்கு புதிய தகவல். கண்டிப்பாக இதனை பற்றி படிக்க முயல்கிறேன்.

கே.ஆர்.பி.செந்தில் said...

இயற்கை உணவுமுறை மற்றும் முறையான உடற்பயிற்சி அல்லது நடை பயிற்சி இருந்தாலே நோய்களை அண்டவிடாமல் செய்யலாம் ...

என்னது நானு யாரா? said...

@Anniyan:

//பிளாக் பிளாக்கா போய் நீங்க எதுக்கு உங்க பிளாக்க்கு மார்கெட்டிங்க் பண்றீங்க அது கொஞ்சம் ஒரு மாதிரியா இருக்கு நண்பரே!//

முதலில், உங்களின் வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி நண்பரே!

இப்படி மார்கெட்டிங்க் செய்வதால், பல இலட்சங்களை, கோடிகளை சம்பாதித்து விடமுடியும் என்றா என்கின்றீர்கள்?

எல்லா பதிவுகளில், நான் மனிதர்களை நேசிப்பது வெட்டவெளிச்சமாகத் தானே இருக்கிறது?

இந்த பதிவில் கூட, "வாருங்கள் நோய் ஏதும் இல்லா நாகரீகம் காண்போம்!!!" என்று தானே முடித்திருக்கின்றேன். இதில் இருந்தே என்னுடைய நோக்கம் உங்களுக்கு புரியவில்லையா?

இயற்கை வாழ்வியல், இயற்கை மருத்துவம் என்று ஆரோகியமாக வாழ வழி இருக்கிறது என்று மனிதர்களுக்கு தெரியபடுத்துவதை என் வாழ்நாள் இலட்சியமாகவே கொண்டிருக்கின்றேன்.

எழுத தொடங்கி, ஒரு மாதத்திற்குள்ளாகவே, 15,000 பேர்களுக்கு இந்த தகவல்கள் சென்று சேர்க்க முடிந்ததற்கு, நான் பல வலைபக்கங்களில் எனது நோக்கத்தை எடுத்து சொன்னதும் ஒரு காரணம் தான்.

இது செய்யபடவேண்டிய நல்ல விஷயம் என்றே எண்ணுகின்றேன். சிலர் என்னுடைய நோக்கத்தை சரியாக புரிந்து கொள்ளாமல் போனாலும் கூட பரவாயில்லை!

உங்களின் கருத்துக்கு நன்றிகள் பல பல!!!

என்னது நானு யாரா? said...

@கே.ஆர்.பி.செந்தில்: அண்ணனின் வருகைக்கு நன்றி!

//இயற்கை உணவுமுறை மற்றும் முறையான உடற்பயிற்சி அல்லது நடை பயிற்சி இருந்தாலே நோய்களை அண்டவிடாமல் செய்யலாம் ...//


உங்களின் கருத்து மிகவும் சரியானது. தொடர்ந்து வாருங்கள் அண்ணா!

இளந்தென்றல் said...

உங்கள் இடுகைகள் அனைத்தும் பயனுள்ளவை. அருமையான பணி. தொடருங்கள்..

"ஒரு கிளிக் மட்டும் போதுங்க! உணவு தானம் செய்றாங்க.."
இந்த widget இணைப்பு கொடுத்தீர்களானால் எங்கள் வலைப்பூவிலும் சேர்த்து இன்னும் அதிகம் பேர் பயனடைய வழி செய்யலாமே..

dr suneel krishnan said...

நண்பர் ராஜன் ஒரு சுட்டி அளித்திருந்தார் , ஆம் இது சமீபத்திய ஆய்வு , இருப்பினும் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல் , கொழுப்பு அதன் வேலைகளை காட்டுகிறது . cholesterol அளவு குறைவாக இருந்தாலும் அதிகமாக இருந்தாலும் பெரிய மாற்றம் இல்லை என்பதே நிதர்சனம் . cholesterol normal value மக்களை பயமுறுத்த மருந்து நிறுவனங்கள் கையாளும் ஒரு சூத்திரம் என்று குற்றசாட்டு உண்டு .30 வருடங்களில் cholesterol value பல முறை மாற்ற பட்டுள்ளது .அவர்களின் மருந்துகளுக்கு பெரிய சந்தை ஏற்படுத்தி உள்ளது .நமது இடுப்பு சுற்றளவு நெஞ்சை விட கம்மியாக இருக்க வேண்டும் , கீழ் பகுதில் மட்டும் உடல் பருமன் ஏற்பட்டால் அதுவும் இருதய கோளாரில் கொண்டு விடும் .
நண்பர் வசந்த் , உங்கள் நோக்கம் இந்த மாறி விஷயங்களை கொண்டு சேர்பதற்காக என்பது புரிகிறது , நிச்சயம் எல்லாருக்கும் சென்ற சேர வேண்டிய விஷயங்கள் தான் , வாழ்த்துக்கள்
இருதய நோயிலிருந்து காக்க , பூண்டு சேர்ப்பது நன்மை பயக்கும்

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

தேவையான பதிவு.. அவசியமான தகவல்கள்.. மிக்க நன்றிகள் நண்பரே..!

Anonymous said...

இதய நோய் தகவல்கள் மிகவும் பயன் உள்ளவை. கொழுப்பு சத்து உள்ள உணவுகள் மிகவும் ருசியானதால் தவிர்ப்பது தான் பிரச்சனையானது.

என்னது நானு யாரா? said...

@இளந்தென்றல்:

//"ஒரு கிளிக் மட்டும் போதுங்க! உணவு தானம் செய்றாங்க.."
இந்த widget இணைப்பு கொடுத்தீர்களானால் எங்கள் வலைப்பூவிலும் சேர்த்து இன்னும் அதிகம் பேர் பயனடைய வழி செய்யலாமே..//

நண்பரே! அது ஒன்றும் பெரிய விஷயம் இல்லைங்க!
உணவு பற்றிய ஒரு படத்தினை Google ஆண்டவரிடம் கேளுங்கள். அவர் கொண்டு வந்து கொடுப்பார். அந்த படத்தினை உங்களின் computer-ல், Download செய்து கொள்ளுங்கள்.

இல்லையென்றால், இங்கே இருக்கும் படத்தின் மேலேயே, right click செய்து Save Image as என்று கொடுத்து உங்களின் Computer-ல் save செய்து கொள்ளுங்கள்.

பின், உங்க வலைபக்கம் Dashboard-ல Design என்று இருக்கும். அதனை ஒரு கிளிக் செய்து உள்ளே போங்க. அதில Add a Gadget என்று இருக்கும்.

அதை ஒரு Click செய்து, Picture என்கின்ற Widget -ஐ தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.

அந்த Picture Widget-ல் Title, Caption, Link என்று 3 பெட்டிகள் இருக்கும். Title மற்றும் Caption பெட்டிகளில், தமிழில் அங்கே என்ன வேண்டுமோ அதனை தட்டச்சு செய்து கொள்ளுங்கள். உதாரணத்திற்கு நான் செய்திருப்பதை பாருங்கள்.

அந்த Link என்கின்ற பெட்டியில், கீழே கொடுத்திருக்கும் Link -ஐ copy & paste செய்து கொள்ளுங்கள்.

http://www.bhookh.com/index.php

அவ்வளவு தான் வேலை முடிந்தது.

நன்றி நண்பரே!

Praveen-Mani said...

நல்ல நடிகர் நம்ப முடியாத செய்தி...!!!!!!
அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்....

இளந்தென்றல் said...

தகவலுக்கு நன்றி நண்பரே !

என்னது நானு யாரா? said...

dr suneel krishnan:

//30 வருடங்களில் cholesterol value பல முறை மாற்ற பட்டுள்ளது .அவர்களின் மருந்துகளுக்கு பெரிய சந்தை ஏற்படுத்தி உள்ளது .நமது இடுப்பு சுற்றளவு நெஞ்சை விட கம்மியாக இருக்க வேண்டும் , கீழ் பகுதில் மட்டும் உடல் பருமன் ஏற்பட்டால் அதுவும் இருதய கோளாரில் கொண்டு விடும் .//

நீங்கள் கொடுத்திருக்கும் தகவல்கள் மிகவும் பயனுடையவை. அவை எனக்கு மட்டும் அல்ல மற்றவர்களுக்கும் புதியவையாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.

வியபாரத்திற்காக என்னவெல்லாம் செய்கிறார்கள்!!!

என் நோக்கத்தை புரிந்து பாராட்டியதற்கு நன்றி நண்பரே!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அவருடைய ஆத்மா சாந்தி அடைய பிரார்திக்கின்றேன்!

என்னது நானு யாரா? said...

@உண்மைத் தமிழன்(15270788164745573644): உங்களின் பாராட்டுக்கு என் நன்றிகள் நண்பரே!

@Praveen-Mani: உங்களின் வேண்டுதலில் நானும் பங்கெடுக்கின்றேன் நண்பரே!

@இளந்தென்றல்: கொடுத்த தகவல்கள் நன்கு புரிந்திருக்கும் என்று நம்புகின்றேன் நண்பரே! நன்றிகள்!

Anonymous said...

Hi Uravukaaran,

Sorry for typing in English, I have no other go as i don't have Tamil keyboard.

I am Kumar

I was trying to email you to request you to advice the right food habit or natural medicine for my indigestion problem which I am facing for nearly 6 months now, tried English medicine but it doesn't seem to be helping.

The exact problem I am facing is -Read this in Tanglish Nenjula oosi vachi kuthinamadiri vali this happens frequently, continuous yeppam, continous gastric issue.

This problem is there irrespective of whatever food I eat not just only the gastric foods like potato, prawn etc.,


It will be great help if you can advice me on natural medicine to get ride of this problem
I will be very happy if you can email me your advice to 'kumaronmailbox@gmail.com'

Thanks in Advance

வல்லிசிம்ஹன் said...

இஞ்சி உண்பது பற்றிய செய்தி மிகவும் பயனுள்ளது. சரியான செய்தியைச் சரியான நேரத்தில் கொடுத்திருக்கிறீர்கள். மிகவும் நன்றி.
முரளியை நினைக்கும் போது மனம் கனக்கிறது.

என்னது நானு யாரா? said...

குமார்: உங்களின் கேள்விக்கு பதில், ஈமெயில் மூலம் அனுப்பி இருக்கின்றேன். நன்றி நண்பரே!

என்னது நானு யாரா? said...

@வல்லிசிம்ஹன்: உங்களின் முதல் வருகைக்கும், பாராட்டுக்கும் மிக்க நன்றி தோழி!

என்னது நானு யாரா? said...

@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)
@வல்லிசிம்ஹன்:

முரளியின் மரணத்தில் நானும் உங்களின் மன வருத்தத்தில் பங்குகொள்கிறேன். அவருடைய ஆன்மா சாந்தி அடைய வேண்டும் என்று பிரார்திக்கின்றேன்.

மோதி said...

Many thanks for the caring post

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

Superb Article, keep it up!

ப.செல்வக்குமார் said...

//தற்போது நெஞ்சு வலி இருப்பவர்கள், தினமும், இஞ்சி துண்டை தோல் சீவி நன்கு அறைத்து, சிறிது தேன் கலந்து ///
சத்தியமா உங்களுக்கு நன்றி சொல்லனும்க. இதைய நோய் பற்றி அதிகமா தெரியாம இருந்தேன். அத பத்தி விளக்கமா சொல்லிட்டீங்க. நன்றி நன்றி நன்றி ..

ப.செல்வக்குமார் said...

/// பிளாக் பிளாக்கா போய் நீங்க எதுக்கு உங்க பிளாக்க்கு மார்கெட்டிங்க் பண்றீங்க அது கொஞ்சம் ஒரு மாதிரியா இருக்கு நண்பரே! ///
அவரு அப்படி பண்ணுறதுல ஒண்ணும் தப்பு இல்லேங்க..! நிச்சயம் நல்ல விஷயமா இருந்தாலும் அது பல பேருக்கு தெரியனும்.. அதனால அப்படி செஞ்சு தான் ஆகணும் ..!!

என்னது நானு யாரா? said...

மோதி
பெயர் சொல்ல விருப்பமில்லை:

பாராட்டிய அன்பு நெஞ்சகளுக்கு நன்றி! தொடர்ந்து நம்ப கடைக்கு வரணும் என்று கேட்டுகொள்கின்றேன். நன்றி!

என்னது நானு யாரா? said...

@ப.செல்வக்குமார்:

செல்வா! உனக்கு Special-ஆ தேங்க்ஸ் சொல்லணும்பா! உடன்பிறவா சகோதரன்னு நீ நிருபிச்சிட்டே! ரொம்ப ரொம்ப நன்றிப்பா! என்னை ஆதரிச்சி பேசி எனக்கு தைரியத்தையும் தன்னம்பிக்கையும் கொடுத்திட்ட.

நீ எல்லா நலமும் வளமும் பெற்று இனிதே வாழ்கன்னு உன்னை வாழ்த்துகிறேன்பா!

Thank You so much!

எஸ்.கே said...

நம் வாழ்க்கை முறையால் தான் பல நோய்கள் ஏற்படுகிறது.உலகம் முழுதுமே பயமுறுத்தும் நோய் இந்த இதய நோய்தான். நிச்சயம் இதற்கு உணவுப் பழக்கம் மட்டுமின்றி புகை பிடித்தல் மது அருந்துதல் போன்ற பழக்கங்களும் காரணமாகிறது. // நோய் ஏதும் இல்லா நாகரீகம் காண்போம்// இந்த வரிகள்தான் உண்மை நாகரீகம் என்ற பெயரில் நம் உடலை கெடுத்துக் கொண்டிருக்கிறோம்.

எஸ்.கே said...

நண்பரே ஒருவர் சொல்லியது தங்கள் பிளாக்குக்கு வரச்சொல்லும் உங்கள் கமெண்டை பல பிளாக்குகளில் பார்த்திருக்கிறேன். எனக்கு கூட ஆரம்பத்தில் ஏன் இப்படி என தோன்றினாலும் நானும் தங்கள் வாசகனான பின் தங்கள் அருமையை புரிந்துகொண்டேன். தங்கள் பிளாக்குக்கு யாராவது ஒருவர் ஒருமுறை வந்துவிட்டால் உங்கள் எழுத்தின் வலிமையை புரிந்துகொள்வார்.

தங்கள் லட்சியம் நிறைவேறட்டும். மற்றவர் நலத்தை வேண்டும் தங்கள் வாழ்வு இனிமையாக அமையட்டும்.

நட்புடன்

எஸ். கே

என்னது நானு யாரா? said...

@எஸ்.கே:

உங்களின் பாராட்டுக்கும், என் எண்ணங்களை புரிந்து கொண்டதற்கும் நன்றிகள் பல! பல!

//தங்கள் லட்சியம் நிறைவேறட்டும். மற்றவர் நலத்தை வேண்டும் தங்கள் வாழ்வு இனிமையாக அமையட்டும்.//

உங்களின் வாழ்த்து எனக்கு பெரிய ஊக்கத்தை கொடுக்கிறது. நன்றி நண்பரே! யானை பலம் கிடைத்த மாதிரி ஒரு உணர்வு!

Anonymous said...

Fantastic Post(Article).
Good Job.., Continue.., Best Wishes! God bless you!
http://saigokulakrishna.blogspot.com

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

Post a Comment

பங்காளி! சரக்கு எப்படி? விக்குமா... விக்காதா...??? கொஞ்சம் சொல்லிட்டு போங்க!!!