பன்னீர் தெளிக்கிறோமில... ப்ளீஸ்... கொஞ்சம் தலை குனியுங்க...

வணக்கம் பங்காளீ! வாங்க, சவுக்கியங்களா? நம்ம வலைபதிவு பக்கம் வந்ததுக்கு நன்றீங்கோ...Get this Widget

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே! என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி! நண்பர்களே!

மனிதர்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் சிந்தனைகள், இங்கு சிதறிகிடக்கிறது. படித்து பார்த்து உங்கள் கருத்துக்களை இடவேண்டுகிறேன்!

தொடர்ந்து, இந்த வலைபதிவுக்கு உங்களின் ஆதரவை தாருங்கள்!!! நன்றி! தொடர்ந்து வருக!!!

இந்த நாள், உங்களுக்கு, இனிய நாளாக அமைவதாக!!!

பாசகார பங்காளி கூட்டமுங்க! நீங்களும் கூட வாறீகளா?

17-Nov-2010

உள் அமைதிக்கு உகந்த படிகள் - பாகம் 3


இந்த பகுதியின் முந்தைய பாகங்கள் படிக்க இங்கே அழுத்தவும்

தயார்படுத்திக்கி கொள்ளுதலின் இரண்டாவது கட்டம்:

அனுவத்தை நமக்கு சொல்லிக்கொண்டிருக்கிறவங்க
Peace Pilgrim - அமைதிப் பயணி

அடுத்தப் படி, இப்பிரபஞ்சத்தை இயக்கும் விதிமுறைகளோடு நமது வாழ்வையும் இணைத்துக் கொள்வது என்பதாகும்.

இங்குள்ள உலகங்களும் அதில் வாழும் உயிரினங்களும் மட்டுமின்றி, அவைகளை ஆளும் விதிமுறைகளும் ஆண்டவனால் படைக்கப்பட்டவைகளே.

இயற்கை உலகிலும், மன இயல் உலகிலும் இயங்கி வரும் இந்த விதிமுறைகள் மனிதனது செயல்பாட்டையும் ஆண்டுவருகின்றன.

நாம் எந்த அளவிற்கு இந்த விதிமுறைகளை புரிந்துக்கொண்டு, நமது வாழ்வில் கடைப்பிடித்து வருகிறோமோ, அந்த அளவிற்கு நமது வாழ்வில் இசைவு வரும். எந்த அளவிற்கு இந்த விதிமுறைகளை நாம் மீறி வருகிறோமோ, அந்த அளவிற்கு நமக்கு நாமே சிக்கல்களை உருவாக்கி கொண்டவர்களாகிறோம்.

நாமே நமக்குரிய மோசமான பகைவர்கள். நமது அறியாமையினால் நாம் இசைந்த வாழ்விலிருந்து விலகியிருந்தால், அதனால் வரும் துன்பம் சிறிதளவேயாகும். ஆனால் நன்றாக தெரிந்திருந்தும் நமது அகந்தையால், விலகியிருந்தால் அதனால் வருவது பெருந்துன்பமாகும்.

நாம் படும் துன்பங்களே, நம்மை ஆண்டவனுக்கு, கீழ்படிதலுக்கு இட்டுச் செல்கின்றன. சில இயற்கை விதிகள் பிரபலமானவையாக இருந்தும், அவைகளை சரியாகப் புரிந்துக் கொள்ளாமலும், அவைகளை சரியாகப் கடைப்பிடிக்கப்படாமலும் இருக்கின்றன.

உதாரணத்திற்கு, தீயதை நன்மையினால் தான் வெல்ல முடியும் என்பது ஒன்று! இன்னொன்று, மற்றவர்களுக்கு தீங்கு செய்பவர்கள், தமக்கு தாமே ஆன்மீக ரிதியான துன்பங்களை விளைவித்துக் கொள்கிறார்கள். இந்த விதிகள் அத்தனை மனிதர்களுக்கும் பொதுவானவை. இவைகளை சரியாகப் பின்பற்றி வாழ்ந்தால் தான் உள் அமைதிக்கு வழிப் பிறக்கும்.

அதனால் நான், ஒரு இனிய திட்டத்தில் என்னை ஆழ்த்திக் கொண்டேன். அதாவது எவைகளை நான் நல்லவைகள் என்று நம்புகிறேனோ அவைகளின்படி வாழ்வது என்பதே அத்திட்டமாகும்.

அவைகளை எல்லாம் ஒரே நேரத்தில் கைக்கொண்டு என்னைக் குழப்பிக் கொள்ள நான் முயலவில்லை. மாறாக, நான் செய்து கொண்டிருக்கும் காரியம் சரியானதல்ல என்று நான் அறிந்தால், அக்காரியத்தை உடனடியாகக் கைவிட்டேன். தயங்கி தயங்கி, இந்த தீயக் காரியங்களை விடவேண்டுமா? இல்லை பரவாயில்லையா? என்றெல்லாம் சிந்தித்துக் கொண்டிருக்கவில்லை. சரியானது அல்ல என்று உள்மனதிற்கு தோன்றினால் அந்த செயலை அப்படியே விட்டுவிடுதலே எனக்கு எளிதாக இருந்தது.   

மனம் பக்குவபட்டவுடனே, கெட்டதைக் கைவிடுவது எவ்வளவு எளிய செயலாக இருக்கிறது தெரியுமா? எதை செய்யவேண்டுமோ, அதை நான் செய்யாமல் இருப்பதை உணர்ந்தால், அதை நான் உடனடியாகச் செய்யத் தீவிரம் காட்டினேன். சிறிது காலத்திற்கு என் வாழ்வு இவ்வாறு கழிந்தது.

இதனால் எதை நான் நம்புகிறேனோ, அதன்படி என்னால் வாழ இப்பொழுது முடிகிறது. இல்லாவிட்டால் எனது வாழ்வு முற்றிலும் பொருளற்றதாகி இருக்கும். என்னுள்ளே இருக்கும் உன்னத ஆன்மீக ஒளிக்கு ஏற்ப நான் வாழ்ந்தபொழுது, மேலும் பல ஆன்மீக ஒளிகள் எனக்குப் புலப்பட்டதை நான் கண்டறிந்தேன். எனக்குப் புலப்பட்ட ஆன்மீக ஒளிக்குத் தக்கபடி வாழ்ந்து மேன்மேலும் புத்தொளி பெறுவதற்கு என்னை ஆயத்தப்படுத்திக் கொண்டேன்.

இயற்கையின் விதிகள் நம் அனைவருக்கும் பொதுவானவை. நாம் ஒன்றாகக் கூடிக் கலந்துரையாடி அவற்றைப் புரிந்துகொள்ள முடியும். அவ்வாறு கலந்துரையாடுவது எனது விருப்பம்.

அமைதி தூதுவர் - மகாத்மா காந்தியடிகள்


பங்காளி தோழர்களே தோழியர்களே! அமைதிப் பயணி, இன்னமும் நமக்கு நிறைய சொல்ல இருக்காங்க... 

சொன்னது வரைக்கும், உங்களை எந்தவிதத்தில பாதிச்சதுன்னு சொல்லிட்டுப் போங்களேன் மக்கா!


46 மேதைங்க இதபத்தி என்ன சொன்னாங்கன்னா...:

தமிழ் உதயம் said...

இயற்கையின் விதிகள் நம் அனைவருக்கும் பொதுவானவை. ;////

உண்மை தான்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

super. enna romba naalaa aala kanom?

THOPPITHOPPI said...

தொடருங்கள் உங்கள் புனித சேவையை

dr suneel krishnan said...

பகிர்வுக்கு நன்றி :)
இயற்க்கையின் விதிகளுக்கு புறம்பாக மனிதன் வெகு தூரம் பயணித்து விட்டான்

என்னது நானு யாரா? said...

@தமிழ் உதயம்

படித்து முதலாவதாக கருத்து சொன்னதுக்கு நன்றிங்க நண்பரே.

என்னது நானு யாரா? said...

@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)

போலிசு! உங்க கருத்துக்கு நன்றிங்க! இப்போ நான் பெங்களூரில இருக்கேன். வேலை விஷயமா வந்திருக்கேன். அதனால தான் உங்களை எல்லாம் அடிக்கடி சந்திக்க முடியாம போயிடுது. விசாரிச்சதுக்கு நன்றிங்க! நீங்க எப்படி இருக்கீங்க

என்னது நானு யாரா? said...

@THOPPITHOPPI

வாங்க நண்பா! எப்படி இருக்கீங்க? சுகம் தானே? உங்க ஊக்கத்திற்கு என்னுடைய நன்றிகள்!

என்னது நானு யாரா? said...

@dr suneel krishnan

//இயற்க்கையின் விதிகளுக்கு புறம்பாக மனிதன் வெகு தூரம் பயணித்து விட்டான்//

உண்மை தான் நண்பரே! யாரெல்லாம் மனம் பக்குவபட்டிருக்கிறார்களோ, அவர்கள் மன அமைதியைப் பற்றி தெரிந்துக்கொள்ளவார்கள். மற்றவர்கள் எல்லாம் அவர்களின் இயல்பின் படியே முட்டிமோதி பின் கடைசியில் பாடம் கற்றுக்கொள்வார்கள். அதுதானே இயற்கை விதி!

எஸ்.கே said...

//மனம் பக்குவபட்டவுடனே, கெட்டதைக் கைவிடுவது எவ்வளவு எளிய செயலாக இருக்கிறது தெரியுமா// இதை நான் அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன்!

நாகராஜசோழன் MA said...

//மனம் பக்குவபட்டவுடனே, கெட்டதைக் கைவிடுவது எவ்வளவு எளிய செயலாக இருக்கிறது தெரியுமா?/


இது உண்மை தான். பக்குவமில்லாத ஒரு மனிதனால் எந்த ஒரு செயலையும் முழு ஈடுபாட்டுடன் செய்ய முடியாது.

வெங்கட் நாகராஜ் said...

நல்ல கருத்துக்கள். பகிர்வுக்கு நன்றி.

என்னது நானு யாரா? said...

@எஸ்.கே

////மனம் பக்குவபட்டவுடனே, கெட்டதைக் கைவிடுவது எவ்வளவு எளிய செயலாக இருக்கிறது தெரியுமா// இதை நான் அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன்!//

அப்படியா! மிகவும் சந்தோஷம் நண்பரே! உங்களுக்கு பக்குவபட்ட மனம் வாய்க்கப்பட்டிருப்பதை அறிந்து மிகுந்த ஆனந்தம். வாழ்க! வளர்க! எப்போதும் மகிழ்வுடன் இருப்பீராக!

என்னது நானு யாரா? said...

@நாகராஜசோழன் MA

//இது உண்மை தான். பக்குவமில்லாத ஒரு மனிதனால் எந்த ஒரு செயலையும் முழு ஈடுபாட்டுடன் செய்ய முடியாது.//

உங்கள் கருத்து மிகவும் சரியானது என்று நானும் நம்புகின்றேன் நண்பா! உங்களின் கருத்துக்கு மிக்க நன்றிகள்!

என்னது நானு யாரா? said...

@வெங்கட் நாகராஜ்

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகுந்த நன்றிகள் நண்பரே! நல்ல விஷயங்களை மனம் திறந்து ஆதரிக்கும் உங்களைப் போன்ற எல்லா நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!

ஹரிஸ் said...

உங்கள் தளத்திற்க்கு இன்று தான் வருகிறேன்,, நல்ல பயனுள்ள கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறீர்கள்..பின் தொடருகிறேன்.தொடரட்டும் உங்கள் பணி..நன்றி

கவிதை காதலன் said...

இதைபப்டிக்கும் போது மனசுக்குள்ள இருக்கிற கோபம், விரோதம் எல்லாம் கொஞ்ச நேரம் சைலண்டா ஆயிடுது.. அருமை.. இனி தொடர்ந்து வருவேன்

என்னது நானு யாரா? said...

@ஹரிஸ்

//உங்கள் தளத்திற்க்கு இன்று தான் வருகிறேன்,, நல்ல பயனுள்ள கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறீர்கள்..பின் தொடருகிறேன்.தொடரட்டும் உங்கள் பணி..நன்றி//

உங்களைப்போன்றோர் நல்ல நண்பர்களின் ஊக்கமும் உற்சாகமும் தான் என்னை எழுத தூண்டுகின்றது. உங்களின் பாராட்டுக்களுக்கு மிகுந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

என்னது நானு யாரா? said...

@கவிதை காதலன்

//இதைபப்டிக்கும் போது மனசுக்குள்ள இருக்கிற கோபம், விரோதம் எல்லாம் கொஞ்ச நேரம் சைலண்டா ஆயிடுது.. அருமை.. இனி தொடர்ந்து வருவேன்//

மிகுந்த நண்றிகள் நண்பா! குணத்தில் சிறந்த மனிதர்கள் பலர் நமக்கு முன்னுதாரணமாக வாழ்ந்து வழிக்காட்டி சென்று இருக்கிறார்கள். அவர்களை எண்ணி சிறிது நேரம் தியானித்தாலே நமக்குள் இருக்கும் பல தீய குணங்கள் மறைந்துவிடும்.

உங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்!

சசிகுமார் said...

உங்கள் வேலைகளுக்கு இடையில் மெனக்கெட்டு என் தளத்திற்கு வந்து ஆதரவாக கருத்து கூறியதற்கு மிக்க நன்றி நண்பரே. நான் திரும்பவும் பதிவு போட தங்கள் கமெண்ட்டும் ஒரு முக்கிய காரணம்

ப.செல்வக்குமார் said...

//நாம் படும் துன்பங்களே, நம்மை ஆண்டவனுக்கு, கீழ்படிதலுக்கு இட்டுச் செல்கின்றன/

சிலசமயங்களில் துன்பம் வந்தா மட்டுமே கடவுள் இருக்கார் அப்படிங்கிற எண்ணம் சிலருக்கு வருவதும் குறிப்பிடத்தக்கது அண்ணா ..!

ப.செல்வக்குமார் said...

// பங்காளி தோழர்களே தோழியர்களே! அமைதிப் பயணி, இன்னமும் நமக்கு நிறைய சொல்ல இருக்காங்க... ///

சொல்லட்டும் சொல்லட்டும் , நல்லாத்தான் போய்க்கிட்டு இருக்கு .!!

என்னது நானு யாரா? said...

@சசிகுமார்

Take it Easy Sasi! கோபம் எப்பவுமே நல்லதில்லைன்னு தெரிஞ்சிக்கிட்டீங்க இல்ல. எல்லாவற்றிலும் ஒரு பாடம் இருக்குது. அதை கண்டு எடுத்துப் படிச்சிக்கிட்டா நம்ப மனசு பக்குவபட்டுடும்.

தியானம் பழகணுங்க சசி! நேரத்தை ஒதுக்கப்பாருங்க!

என்னது நானு யாரா? said...

@ப.செல்வக்குமார்

//சிலசமயங்களில் துன்பம் வந்தா மட்டுமே கடவுள் இருக்கார் அப்படிங்கிற எண்ணம் சிலருக்கு வருவதும் குறிப்பிடத்தக்கது அண்ணா .//

தம்பி செல்வா! நீ கண்டிப்பா கோமாளி இல்லைப்பா! உன் கருத்து எனக்கு தெளிவா உணர்த்துது...

DrPKandaswamyPhD said...

நல்ல கருத்துகள். ஆழ்ந்து படித்து உள்மனதில் ஏற்றவேண்டும். உலகியல் வாழ்க்கையில், ஓய்வு பெற்று சும்மா இருக்கும் எனக்கே முடியவில்லை. வருத்தமாக இருக்கிறது. என்னென்னமோ செய்து நேரம் ஓடிப்போகின்றது. இத்தகைய பதிவுகளை ஆற அமரப் படிக்க முடியாமல் போகின்றது.

"ஆறு நிறையப் பாலாய் ஓடினாலும் *** நக்கித்தான் குடிக்க முடியும்" அந்த மாதிரி ஆகிப்போனது இன்றைய வாழ்க்கை. மாறவேண்டும். மாறமுடிகிறதா பார்ப்போம்.

என்னது நானு யாரா? said...

@DrPKandaswamyPhD

//நல்ல கருத்துகள். ஆழ்ந்து படித்து உள்மனதில் ஏற்றவேண்டும். உலகியல் வாழ்க்கையில், ஓய்வு பெற்று சும்மா இருக்கும் எனக்கே முடியவில்லை. வருத்தமாக இருக்கிறது. என்னென்னமோ செய்து நேரம் ஓடிப்போகின்றது. இத்தகைய பதிவுகளை ஆற அமரப் படிக்க முடியாமல் போகின்றது.//

உங்க கருத்துக்கு நன்றிங்க ஐயா! நீங்கள் சொல்வது மிகவும் சரிதான் ஐயா!

ஆமாம் நேரம் எப்படி எப்படியோ நம்மை விட்டு தவறிப்போகிறது ஐயா! சிறுக சிறுக வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்திக்கொண்டு மனமும் உடலும் ஆரோக்கியத்தோடு வாழலாம்.

எல்லாமுமே பயிற்சியினால் தான் கைவரப்பெறுகிறோம்.

Prasanna said...

எல்லாத்துக்கும் நம்ப மனசு தான் காரணம்னு சொல்றீங்க.. சரிதான்..

ஆர்.கே.சதீஷ்குமார் said...

அதாவது எவைகளை நான் நல்லவைகள் என்று நம்புகிறேனோ அவைகளின்படி வாழ்வது என்பதே அத்திட்டமாகும்//
ரொம்ப நல்ல திட்டமா இருக்கே

சி.பி.செந்தில்குமார் said...

பதிவு டாப்பு.நீங்க எம் ஏ சைக்காலஜியா?

என்னது நானு யாரா? said...

@Prasanna

//எல்லாத்துக்கும் நம்ப மனசு தான் காரணம்னு சொல்றீங்க.. சரிதான்//

ஆமாங்க நண்பரே! மனசு எல்லாம் சரியா இருந்தா வாழ்க்கை எல்லாம் சரியா இருக்குமுங்க. அதுக்கு தான் ஆன்மீகப் பாதை. தியானம், யோகா எல்லாம் நமக்கு இந்த வகையில உதவி செய்கிறது.

என்னது நானு யாரா? said...

@ஆர்.கே.சதீஷ்குமார்

//அதாவது எவைகளை நான் நல்லவைகள் என்று நம்புகிறேனோ அவைகளின்படி வாழ்வது என்பதே அத்திட்டமாகும்//
ரொம்ப நல்ல திட்டமா இருக்கே//

உங்க கருத்துக்கு நன்றிங்க நண்பா!

என்னது நானு யாரா? said...

@சி.பி.செந்தில்குமார்

//பதிவு டாப்பு.நீங்க எம் ஏ சைக்காலஜியா?//

நன்றிங்க நண்பா! நான் M.Phil Peace Making and Gandhian Thought படிச்சேன். ஏன் கேட்கறீங்க தல?

அமைதியைப் பற்றி வாழ்க்கையில எளிமையா இருப்பதுப் பற்றி ஒரு ஆர்வம். அதனால காந்திய சிந்தனைகளைப் பற்றி படிச்சேன். மிகவும் நேசித்துப் படிச்சப் படிப்பு அது!

பயணமும் எண்ணங்களும் said...

பல மிக அருமையான கருத்துகள் சுயம் அறிதல்பற்றி.. நன்று

//நாம் படும் துன்பங்களே, நம்மை ஆண்டவனுக்கு, கீழ்படிதலுக்கு இட்டுச் செல்கின்றன.//

இதற்கு முரணாகவும்..


அதிக பக்தியடைய ஒருவர் தொடர்ந்து தனக்கு துன்பம் நேரும்போது நாத்திகனாக மாறுவதுமுண்டு..

Chitra said...

very nice post. :-)

சசிகுமார் said...

சிறந்த பதிவராக தேர்ந்தெடுக்க பட்டதற்கு வாழ்த்துக்கள் நண்பரே. உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

என்னது நானு யாரா? said...

@பயணமும் எண்ணங்களும்

//அதிக பக்தியடைய ஒருவர் தொடர்ந்து தனக்கு துன்பம் நேரும்போது நாத்திகனாக மாறுவதுமுண்டு.//

உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சாந்தி! நாத்திகனாக மாறினால் எல்லா இன்பத்துன்பங்களுக்கும் அவனே காரணம் என்று ஆகிறது. அப்போதும் மன நிம்மதி இல்லாமல் தவிக்கும் நிலையை தவிர்க்கவேண்டும் என்றால் மன பக்குவபட்ட நிலையை அடையவேண்டும்.

என்னது நானு யாரா? said...

@Chitra

சித்ரா! எல்லா புயல்களும் ஓய்ந்ததா? இப்போது மன அமைதியோடு இருக்கீங்களா?

என்னது நானு யாரா? said...

@சசிகுமார்

//சிறந்த பதிவராக தேர்ந்தெடுக்க பட்டதற்கு வாழ்த்துக்கள் நண்பரே. உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்//

உங்க மனம் திறந்து பாராட்டிய பாராட்டுகளுக்கு மிகவும் நன்றிங்க சசி!

மனக்குழப்பங்கள் எல்லாம் நீங்கிவிட்டதல்லவா? அமைதியோடு இருக்கீங்க அல்லவா? எப்போதும் மன அமைதியோடு இருப்பீராக நண்பா!

சாமக்கோடங்கி said...

உலக உயிர்களிலேயே, இயற்கையின் சங்கிலியை உதித்தவன் மனிதன் மட்டுமே என்பது என் கருத்து..

பலே பாண்டியா said...

congrats for became the best blogger of augest month.
make more

சிவகுமாரன் said...

நாமே நமக்குரிய மோசமான பகைவர்கள்.
நூத்தில ஒரு வார்த்தை.
"தீதும் நன்றும் பிறர்தர வாரா" நம்ம மூதாதையர்கள் எப்பவோ சொல்லிட்டாங்க.

sivatharisan said...

நல்ல கருத்துக்கள்

வெட்டிப்பேச்சு said...

உயர்ந்த கருத்துக்களின் அருமையான பகிர்வு..

வாழ்த்துக்கள்.

God Bless you..

தியாகராஜன் said...

ம்ம்ம்...! நாலு பேரு நல்லா இருக்குனு சொன்னா, எல்லா சரக்கும் நல்ல சரக்குத்தான், என்ன பங்காளி!
கலக்குங்க, நல்ல கருத்துக்களை தொகுத்து...
தொடரட்டும் உமது அமைதிப் பணி!
அன்பின் வழியில்...
உறவுக்காரன் தானு தெரிஞ்சுகிட்ட புது பங்காளி தியாகராஜன், சென்னையிலிருந்து!

Part Time Jobs said...

No Need Registration . One time post your Articles Get Life time
Traffic. i.e No expired your ads life long it will in our website.
Don't Miss the opportunity.
Visit Here -------> www.classiindia.com

அம்பாளடியாள் said...

என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் உறவுகளுக்கும் உரித்தாகட்டுக்கும் மிக்க நன்றி பகிர்வுக்கு ......

Part Time Jobs said...

Hi i am JBD From JBD

Hi i Read Your Information its Really Very interesting & Usefull!


Visit My Website Also : www.cutcopypaste.co.in , www.indiai365.com , www.classiindia.com , www.jobsworld4you.com

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

Post a Comment

பங்காளி! சரக்கு எப்படி? விக்குமா... விக்காதா...??? கொஞ்சம் சொல்லிட்டு போங்க!!!