பன்னீர் தெளிக்கிறோமில... ப்ளீஸ்... கொஞ்சம் தலை குனியுங்க...

வணக்கம் பங்காளீ! வாங்க, சவுக்கியங்களா? நம்ம வலைபதிவு பக்கம் வந்ததுக்கு நன்றீங்கோ...Get this Widget

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே! என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி! நண்பர்களே!

மனிதர்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் சிந்தனைகள், இங்கு சிதறிகிடக்கிறது. படித்து பார்த்து உங்கள் கருத்துக்களை இடவேண்டுகிறேன்!

தொடர்ந்து, இந்த வலைபதிவுக்கு உங்களின் ஆதரவை தாருங்கள்!!! நன்றி! தொடர்ந்து வருக!!!

இந்த நாள், உங்களுக்கு, இனிய நாளாக அமைவதாக!!!

பாசகார பங்காளி கூட்டமுங்க! நீங்களும் கூட வாறீகளா?

9 Nov 2010

ஒட்டகசிவிங்கி சொல்லி கொடுக்கிறத படிங்க மக்கா!


ஒட்டகசிவிங்கி உலகத்தில் பிறப்பது என்பது மிகவும் கடினமான ஒருக் காரியமாம்ஒருக் குட்டி ஒட்டகசிவிங்கி, 10 அடி உயரத்தில் இருக்கிற தாயின் கருவறையில் இருந்து பூமியின் மீது விழுகிறதாம். அது பெரும்பாலும் தன் முதுகு புறம் பூமியில் படும்படியாகவே விழுகிறது. சிறிது நேரத்திற்கெல்லாம் அது கால்களை மடக்கி தன் உடம்போடு இணைத்துக் கொண்டு இந்த பூமியை முதன்முறை பார்க்கும். அது தன் கண்களில, காதிகளில தங்கி இருக்கிற கர்பபை நீரை நீக்க, உதறிக்கொள்கிறது. அதற்குப் பிறகு, தாய்ஒட்டகசிவிங்கி குட்டிக்கு வாழ்வின் நிதர்சனமான உண்மையினை அறிமுகபடுத்துகிறது. அது எப்படின்னு நீங்களே பாருங்க






தாயம்மா! நீங்க சொல்லிக்கொடுக்கிற வாழ்க்கை பாடம் ஜோரம்மா!!!

A View from the Zoo என்கின்ற புத்தகத்தில் கேரி ரிச்மெண்ட் (Gary Richmond) பிறந்த சிசுவாயிருக்கிற ஒட்டகசிவிங்கியின் குட்டி எப்படி தன்னுடைய முதல் பாடத்தை கற்றுக்கொள்கிறது என்பதைப் பற்றி எழுதியுள்ளார்.     

குட்டி பிறந்தவுடனே தாய் ஒட்டகசிவிங்கி, தன் தலையை போதுமானபடி தாழ்த்தி குட்டியை பார்க்குமாம். அது குட்டிக்கு நேராக அருகில் இருக்கும்படியான ஒரு நிலையில் நின்றுக்கொண்டு சில நொடிகள் அந்தக் குட்டியைப் பார்த்துக்கொண்டிருக்குமாம். பின் தன் நீண்ட கால்களை வீசி தன் குட்டியை எட்டி ஒரே உதை உதைக்குமாம். அந்த உதைக்கு அந்த குட்டி தலைக்குப்புற பல்டி அடித்து வீழ்ந்துப் புரலுமாம்.

அந்த குட்டி இந்த உதைக்கு எழுந்து நிற்காமல் போனால், திரும்ப திரும்ப இந்த வன்செயல் தொடர்ந்தபடியே இருக்கும். குட்டியும் எழுந்து நிற்க முயன்று முயன்று, மறுபடி மறுபடி கீழே வீழ்ந்துக்கொண்டிருக்கும். அது சோர்ந்துவிடும் போது, தாய் சும்மா இருக்காது. மறுபடியும் ஓங்கி ஒரு உதை! அதனுடைய முயற்சியைக் கூட்ட இவ்வாறு செய்கிறதாம். முடிவாக அந்த கன்று தன் ஆட்டம் போடும் கால்களைக் கொண்டு எழுந்து நிற்கும்.


இப்போது தாயானவள் ஒரு அதிசியதக்க காரியம் ஒன்று செய்கிறாள். எழுந்து நின்றக் குட்டியை எட்டி உதைத்து கீழே விழவைக்கின்றாள். ஏன்? ஏன் இப்படி செய்கிறாள் என்று எண்ணத்தோன்றுகிறது அல்லவா நண்பர்களே? அது ஏன்னென்றால், அந்த குட்டி தான் எப்படி எழுந்து நின்றது என்பதனை மறக்காமல் இருக்கத்தானாம். காட்டில் குட்டி ஒட்டகசிவிங்கிகள் தன் கூட்டத்தோடு இணைந்து பாதுகாப்பான இடத்தில் இருக்க, எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அவைகள் எழுந்து நிற்க வேண்டியது அவசியமாம். சிங்கங்கள், கழுதைப்புலிகள், சிறுத்தைகள், வேட்டைநாய்கள் என்று எல்லா விலங்குகளுக்கும் குட்டி ஒட்டகசிவிங்கிகள் விருந்தாகிப் போகிற வாய்ப்பு இருக்கிறது. அந்த தாயானவள் தன் குட்டிக்கு சீக்கிரத்தில் எழுந்து நிற்கும் பாடத்தினை கற்பிக்காதுப் போனால், கண்டிப்பாக இது நடப்பதை யாராலும் தடுக்க முடியாது

மறைந்த எழுத்தாளர் இர்விங் ஸ்டோன் (Irving Stone) இந்தக் கருத்தினை நன்கு புரிந்துக்கொண்டார். தன் வாழ்நாள் முழுவதும் மேன்மையைப் பற்றி படிப்பதிலேயே செலவிட்டவர் அவர். மைக்கேலாஞ்சிலோ (Michelangelo), வின்சண்ட் வேன் கோ (Vincent van Gogh), சிக்மெண்ட் ப்ராய்ட் (Sigmund Freud), மற்றும் சார்லஸ் டார்வின் (Charles Darwin) போன்ற பிரபல மனிதர்களைப் பற்றிய வாழ்க்கை சரிதங்களை கதைவடிவில் எழுதியவர்.

இர்விங் ஸ்டோன் அவர்களை ஒருமுறை ஒருக்கேள்விக் கேட்கப்பட்டது. அது என்னவெனில், அவர் பல பெரிய மனிதர்களின் வாழ்க்கையை ஆராய்ந்த வரையில் ஏதாவது ஒரு அம்சம் எல்லோருக்கும் பொருந்தும் அம்சமாக இருந்திருக்கிறதை கண்டாரா என்றுக் கேட்கப்பட்டது

அதற்கு அவரின் பதில், அவர்கள் எல்லோரும் பல பயங்கரமான தோல்விகளை தங்களின் வாழ்வில் சந்தித்திருக்கிறார்கள். அவர்கள் பல ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளானார்கள். அவர்கள் பல பல வருடங்களுக்கு ஒன்றும் உறுப்படாத நிலையிலேயே தேங்கியிருந்தவர்கள். ஆனால் எப்போதெல்லாம் அவர்கள் பலமாக அடிவாங்கி சறுக்குகிறார்களோ, அப்போதெல்லாம் எழுந்து நின்றார்கள். அவர்களை அழிக்கவே முடியாது. அவர்களின் வாழ்வின் முடிவில், அவர்கள் என்ன சாதிக்க வேண்டும் என்று நினைத்திருந்தார்களோ, அதில் மதிக்க தக்க அளவு சாதித்திருந்தார்கள்.

நண்பர்களே! ஒட்டகசிவிங்கி மனிதர்கள் எப்போதும் தோற்பதில்லை. அவர்கள் தோற்பதுப் போன்று தோற்றம் காணப்படினும் அது தற்காலிக தோல்வி தான். அவர்கள் அந்த தற்காலிக தோல்வியின் நிலையில் இருந்து சோர்வின்றி பயணம் தொடர்ந்து நிரந்தர வெற்றி என்கின்ற மலை உச்சியை சேர்ந்துக்கொள்கிறார்கள்.

அதனால் வெற்றி தேவதை, ஒரேக் கண்கொண்டு தான் எல்லோரையும் பார்க்கிறாள் என்று புரிந்துக் கொண்டு செயலாற்றுவோம். சோர்வின்றி இலக்கை நோக்கி முன்னேறிச் செல்வோம். நாம் கவனிக்க வேண்டியது நமது இலக்கு நமக்கும் நல்லதாக, ஊருக்கும் நல்லதாக இருக்கிறதா என்பதனை மட்டுமே. என் வாழ்வு மற்றவர்களின் தாழ்வு என்று இருக்குமானால் அந்த வெற்றி அடைந்தும் பயனில்லை. என் வளர்ச்சி ஊருக்கும் உலகத்திற்கும் கூட நன்மையே என்கின்ற நிலையில் இலக்கை முடிவு செய்வோம். செம்மையாக வாழ்வோம்!

குறிப்பு: இந்த பதிவில முடிவுரை மட்டும்தான் என்னுடைய சரக்கு பங்காளி! இந்த செய்தியினை, ஆங்கிலத்தில் ஒரு அருமையான நண்பரால் எனக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதை தமிழ்படுத்தி முடிவிலே முடிவுரை எழுதியது மட்டுமே என்னுடைய வேலை. அதனால இந்த செய்தியினை தந்ததால், பாராட்டுக்கள் எல்லாம் அவருக்கே உரியது.    



    
இந்த பதிவு எல்லோர்கிட்டேயும் போய் சேறணும்னு நீங்க நினைச்சா, மறக்காம உங்க ஓட்டுகளை, கீழே இருக்கிற ஓட்டுப் பெட்டிகள்ல போடுங்க மக்கா! நீங்க எல்லோரும் தான் அன்பான பங்காளிங்க ஆச்சே! நான் சொல்லாமலே செய்றவங்க இல்லையா அப்பு?

25 மேதைங்க இதபத்தி என்ன சொன்னாங்கன்னா...:

Madhavan Srinivasagopalan said...

me the first ?

சூப்பரான மேட்டரு.... சொன்ன மெசேஜ் எனக்கு நல்லாவே தெரியும், ஆனா, அந்த ஒட்டகச்சிவிங்கி உதாரணம் ரொம்ப டச்சிங் அண்ணாத்தே..

கருடன் said...

நல்ல தகவல் பங்காளி ரொம்ப நாள் அப்புறம் சந்திக்கிறோம்... அருகம்புல் ஜுஸ் இருந்தா கொடுங்க.. குடிச்சிட்டு கிளம்பரேன்... :))

அருண் பிரசாத் said...

புதிய தகவல்! ஆச்சர்யமான விஷயம்...

Chitra said...

பகிர்வுக்கு நன்றிங்க.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஆஹா அருமையான தகவல், என்ன பங்காளி நம்ம கடைப்பக்கம் ஆளையே காணோம்?

Unknown said...

அருமையான பகிர்வு..

மோதி said...

vote pottachu pangali

என்னது நானு யாரா? said...

@Madhavan

//ஆனா, அந்த ஒட்டகச்சிவிங்கி உதாரணம் ரொம்ப டச்சிங் அண்ணாத்தே.//

எனக்கும் அதே உணர்வு தான் பிரதர்! போராட்டம் எல்லோருடைய வாழ்க்கையிலேயும் இணைஞ்சிருக்கு! நன்றிங்க பிரதர்!

என்னது நானு யாரா? said...

@TERROR-PANDIYAN(VAS)

//அருகம்புல் ஜுஸ் இருந்தா கொடுங்க.. குடிச்சிட்டு கிளம்பரேன்.//

பரவாயில்லையே அருகம்புல் ஜூஸ் உடம்புக்கு நல்லதுன்னு தெரிஞ்சு வைச்சிருக்கீங்களே! இல்ல நீங்கெல்லாம் டாஸ்மாக் கஸ்டமர்ஸ் ஆச்சே! அதனால ஒரு சின்ன டவுட்!

என்னது நானு யாரா? said...

@அருண் பிரசாத்

ரொம்ப நன்றிங்க அருண்! தீபாவளி மேட்டரு பதிவா போடசொல்லிக் கேட்டிருந்தேனே! அங்கே மௌரிஷியஸில எப்படி தீபாவளிக் கொண்டாடப்படுதுன்னு ஒரு பதிவுப் போடுங்க அருண்! படிக்க ஆவல்!

என்னது நானு யாரா? said...

@Chitra

சித்ரா உங்க லொள்ளு தாங்க முடியல! என்ன தினம் ஒரு கெட்டப்பில வர்றீங்க! தினம் தினம் ஃப்ரொஃபைல் ஃபோட்டோவை மாத்திக்கிட்டே இருக்கீங்க! என்ன சங்கதி மேடம்?

என்னது நானு யாரா? said...

@பன்னிக்குட்டி ராம்சாமி

//ஆஹா அருமையான தகவல், என்ன பங்காளி நம்ம கடைப்பக்கம் ஆளையே காணோம்?//

நன்றிங்க! நீங்க என்னையெல்லாம் கூப்பிடணுமா என்ன? இங்கே பெங்களூரில வேலை விஷயமா வந்திருக்கேன். அடுத்த மாசம் முதல் வாரத்தில தான் ஊர் திரும்புறேன். அதனால வேலையில கொஞ்சம் ஆணி! அது தான் காரணம். கண்டிப்பா நேரம் இருக்கும் போது வந்துப் பாக்குறேன்.

என்னது நானு யாரா? said...

@சிநேகிதி

ரொம்ப நன்றிங்க சகோ!

மோதி! படிச்சுப் பார்த்து ஓட்டுப்போட்டதுக்கு நன்றிங்க!

மாணவன் said...

"நமது இலக்கு நமக்கும் நல்லதாக, ஊருக்கும் நல்லதாக இருக்கிறதா என்பதனை மட்டுமே. என் வாழ்வு மற்றவர்களின் தாழ்வு என்று இருக்குமானால் அந்த வெற்றி அடைந்தும் பயனில்லை. என் வளர்ச்சி ஊருக்கும் உலகத்திற்கும் கூட நன்மையே என்கின்ற நிலையில் இலக்கை முடிவு செய்வோம். செம்மையாக வாழ்வோம்!"

அருமையா சொல்லியிருக்கீங்க...

உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

வாழ்க வளமுடன்

என்றும் நட்புடன்
மாணவன்

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பகிர்வு. தெரியாத விஷயம் தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி.

Anonymous said...

டிஸ்கவரி சேனல் பார்த்த உணர்வு..
நல்ல பகிர்வு. நன்றி.

Unknown said...

ஒட்டக சிவிங்கி மட்டுமல்ல ஒவ்வொரு விலங்கும் வாழ்வியல் முறைகளை பயிறருவிக்கின்றன.. ஆனால் சோசியல் அனிமல் எனப்படும் நாம் முறையான பயிற்சிகளை வழங்குவதில்லை ...

என்னது நானு யாரா? said...

@மாணவன்

உங்க பாராட்டுக்கு நன்றிங்க மாணவன். எப்பவுமே மாணவனாக இருக்க விருப்பமா உங்களுக்கு. நல்லக் கொள்கை!

என்னது நானு யாரா? said...

@வெங்கட் நாகராஜ்

நன்றிங்க வெங்கட்! எப்படி இருக்கீங்க? டெல்லியில குளிர் அடிக்க ஆரம்பிச்சாச்சா? எப்படி சமாளிக்கிறீங்க நண்பரே?

என்னது நானு யாரா? said...

@இந்திரா

//டிஸ்கவரி சேனல் பார்த்த உணர்வு..
நல்ல பகிர்வு.//

உங்க பாராட்டுக்கு மிக்க நன்றிங்க! அதில சொல்லி இருக்கிற கருத்தைக்கூட பிடிச்சிட்டு இருப்பீங்கன்னு நினைக்கிறேன்.

என்னது நானு யாரா? said...

@கே.ஆர்.பி.செந்தில்

//ஒட்டக சிவிங்கி மட்டுமல்ல ஒவ்வொரு விலங்கும் வாழ்வியல் முறைகளை பயிறருவிக்கின்றன.. ஆனால் சோசியல் அனிமல் எனப்படும் நாம் முறையான பயிற்சிகளை வழங்குவதில்லை//

உண்மை தான் செந்தில் அண்ணாச்சி! வாழ்க்கையை எப்படி வாழ்வது என்பதை மனிதன் கற்றுக்கொள்ளாததும், கற்றுக்கொடுக்காததும் குறையே! உங்க கருத்துக்கு நன்றிங்க!

cheena (சீனா) said...

ம்ம்ம் அருமையான இடுகை - ஒட்டகச் சிவிங்கி யிடம் கற்றுக் கொள்வோம் - சறுக்கி விழும் போதெல்லாம் எழ முயல்வோம். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

பிரிட்டோ said...

ஒட்டகசிவிங்கி கேள்விப்பட்ட தகவல், ஆனால் கேள்விப்படாத விளக்கங்கள்... அருமை

cineikons said...

Latest Tamil Movies review,Tamil cinema latest News in Tamil
www.cineikons.com

cineikons said...

Latest Tamil Movies review,Tamil cinema latest News in Tamil
www.cineikons.com

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

Post a Comment

பங்காளி! சரக்கு எப்படி? விக்குமா... விக்காதா...??? கொஞ்சம் சொல்லிட்டு போங்க!!!