பன்னீர் தெளிக்கிறோமில... ப்ளீஸ்... கொஞ்சம் தலை குனியுங்க...

வணக்கம் பங்காளீ! வாங்க, சவுக்கியங்களா? நம்ம வலைபதிவு பக்கம் வந்ததுக்கு நன்றீங்கோ...Get this Widget

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே! என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி! நண்பர்களே!

மனிதர்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் சிந்தனைகள், இங்கு சிதறிகிடக்கிறது. படித்து பார்த்து உங்கள் கருத்துக்களை இடவேண்டுகிறேன்!

தொடர்ந்து, இந்த வலைபதிவுக்கு உங்களின் ஆதரவை தாருங்கள்!!! நன்றி! தொடர்ந்து வருக!!!

இந்த நாள், உங்களுக்கு, இனிய நாளாக அமைவதாக!!!

பாசகார பங்காளி கூட்டமுங்க! நீங்களும் கூட வாறீகளா?

8 Nov 2010

உன்னை அறிந்தால்… நீ உன்னை அறிந்தால்

உன்னை அறிந்தால்… நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்…
உயர்ந்தாலும்… தாழ்ந்தாலும்… தலை வணங்காமல்
நீ வாழலாம்

பங்காளி! பாட்டுன்னு சொன்னா நம்ப மனசுக்கு உற்சாகம் தர்றதா இருக்கணும். அந்த வகையில கண்ணதாசனோட எளிய நடை சினிமா பாடல்களை யாரால மிஞ்சிட முடியும்? சொல்லுங்க பங்காளி!

என்ன ஆழமான வரிகள்! வாழ்க்கை தத்துவத்தையே சொல்லிடுதே இந்த பாட்டு! எனக்கு ரொம்ப பிடிச்ச பாடல்கள்ல இதுவும் ஒண்ணு! உங்களுக்கு எப்படி பங்காளி, உங்களுக்கும் ரொம்ப பிடிச்சப் பாடலா இது? பதிலை கருத்துப்பெட்டியில சொல்லிப்போடுங்க!

இப்ப பாருங்க! Know Thyself-ன்னு சொன்னாங்க! ஆனா மனுஷனுக்கு எப்பவுமே மத்தவங்களைப் பத்தி அறிந்துக்கொள்கிறதில இருக்கிற ஆர்வம், தன்னைப் பற்றி அறிந்துக்கொள்கிறதில இல்லையே!

என்ன என்னமோ ஆராய்ச்சி எல்லாம் செய்றான்! வான சாஸ்திரம் படிச்சி வானத்தை ஆராய்ச்சி செய்றான், கடலில புதைந்து கிடக்கிற மர்மங்களை ஆராய்ச்சி செய்றான், எரிமலைகள்ல, பனிபிரதேசங்கள்ல போய் படாதபாடு பட்டு பல பல ஆராய்ச்சிகள் செஞ்சு இயற்கையை - பிரபஞ்சத்தை அறிஞ்சுக்கணும்னு துடிக்கிறான். அதனால பலப்பல பயனும் அடையறான்.


வானத்தை ஆராயத் தெரிஞ்சவனுக்கு,
மனத்தை ஆராயத் தெரியணும் இல்ல...


மனித நாகரீகம் பல பல விஷயங்களை சாதிச்சி கற்பனைக்கே எட்டாத அறிவியலோட உசரத்திற்கே போய்விட்டதுன்னு தான் சொல்லணும். அதனோட பயன்களை எல்லோருமே தான் நிதர்சனமா அனுபவிக்கிறோமே. இது ஒருப் பக்கம் மகிழ்ச்சித் தான். ஆனா வேறு விதத்தில மனுஷ நாகரீகம் கெட்டுபோய்கிட்டே இருக்கு! அது வருத்தம் தர்றதா இருக்கு.

பாருங்க பங்காளி! மனுஷன் தனக்குள்ள மூழ்கி, உள்ளே புதைந்து கிடக்கிற மர்ம முடிச்சுகளை அவிழ்க்க மறந்துட்டான். மனுஷன் அனுபவிக்கும் எல்லா இன்பதுன்பங்களுக்கு மனம் தான் காரணம் என்கின்ற விஷயத்தை புரிஞ்சுக்கிட்டா, நரகத்திலேயும் இன்பத்தை அனுபவிக்க முடியும். அதை தெரிஞ்சுக்கொள்ளாததாலே சொர்கத்திலே கூட நரகத்தை உண்டுபண்ணுகிட்டேயிருக்கான். 


நரகத்தைக்கூட சொர்கமாக மாத்தமுடியும் என்கின்ற இரகசியத்தையும் உணர மறுக்கிறான். அதனால கையில இருக்கிறது விலை உயர்ந்த இரத்தினக்கற்கள் என்கின்ற சிந்தனையில்லாம கண்ணாடி கற்கள்னு நினைச்சுக்கிட்டு தூர விட்டு எறிகிறான். சராசரி மனுஷனோட வாழ்க்கையை பத்தி தான் சொல்றேன் பங்காளி!

கொப்பளிக்கிற கோபம்! அதுவும் யார் மேல? தன்னோட உயிரா இருக்கிற நெருங்கியவங்க மேலேயே! பெத்த தாய் மேலே, கட்டிக்கிட்ட தாரத்து மேல, தந்தை மேல, சகோதர சகோதரிகள் மேல, பெத்த பிள்ளைங்க மேல. இப்படி கோபமா வார்த்தைகளை கொட்டி என்னத்தை வாரிக்கிட்டான் சொல்லுங்க!

அடுத்து பாருங்க! பேராசை படுகுழியில மூழ்குறான். அது அவனை கடனில சிக்க வைச்சு அள்ளல்படுத்தி கடைசியில அவனோட வாழ்க்கையையே குடிச்சிடுது.

இப்படியே பொறாமை, வெறுப்பு, அகம்பாவம், தாழ்வுமனப்பான்மை, பயம், அளவுக்கடந்த காம இச்சை, கருமித்தனம், வக்கிர எண்ணம் மத்தவங்களை துன்பப்படுத்திப்பாக்குறது, மிகுந்த சுயநலப்பற்றுன்னு பல பல தீய குணங்களில சிக்கி சின்னாபின்னமாகிறான். என்னமோ அடையணும்னு எண்ணி எப்பவுமே மனநிம்மதியே இல்லாத பேயாட்டம், நாயோட்டம் ஓடிக்கிட்டே இருக்கான். முடிவில மண்டையைப் போடறான்.


நம்ப முன்னோர்களைப் போல புத்திசாலிங்களை எங்கேயும் காணமுடியாது பங்காளி! இந்த துன்பங்களில இருந்து வெளியில வரணும்னா தன்னையே முழுசா அறிஞ்சிக்கணும். மனசுக்குள்ளல தான் எல்லா பாதிப்புகளும் உண்டாகுது, அவைகளை நீர்த்துப்போக செய்து கரைச்சுட்டோம்னா இந்த பாதிப்புகளில இருந்து தப்பிச்சுக்கொள்ளலாம்னு கண்டுபிடிச்சாங்க. உள்ளம் அமைதியோடு இருக்கிற இரகசியத்தை கண்டு உணர்ந்தாங்க. அதை மத்தவங்களுக்கும் சொல்லிக் கொடுத்தாங்க. அது தான் தியான பயிற்சியா பரிணாமம் அடைஞ்சது.

அம்மணி! பரவாயில்லையே தியானம் சூப்பரா செய்றீங்க!



பங்காளி! நான் இப்போ சொல்லப் போறது விபஸ்ஸனா தியான பயிற்சியைப் பத்தி தான். ஒரு பத்து நாள் அமைதியான - எந்த ஒருத் தொந்தரவும் இல்லாம, வெளியுலகத் தொடர்புன்னு எதுவும் வைச்சுக்க முடியாத ஒரு இடத்தில தியானம் கத்துக்கிறதைப் பத்தி என்ன நினைக்கறீங்க?

வேறு எந்த ஒரு வேலையிலேயும் ஈடுபடாம, முழுக்க முழுக்க மௌனம் கடைப்பிடிச்சிட்டு, எழுதறதோ, படிக்கிறதோ, யாருக்கிட்டேயும் பேசறதோ இல்லாம, பத்து நாளும் மௌனம் கடைப்பிடிச்சிட்டு தியானம் மாத்திரம் செய்துக்கிட்டு இருந்தா நமக்குள்ள ஒரு மாற்றம் உண்டாகிறதை உணர முடியும்.

நாடு முழுக்க விபஸ்ஸனா தியான மையங்கள் இருக்கு. http://www.dhamma.org/ என்கின்ற வெப்தளத்தில எல்லா விவரங்களும் இருக்கு. சென்னையிலக் கூட பல்லாவரத்தில இருந்து 7 கிலோமீட்டர் தூரத்தில திருமுடிவாக்கம் என்கின்ற அமைதியான இடத்தில விபஸ்ஸனா தியானம் சொல்லிக் கொடுக்குறாங்க.




இது தான் சென்னையில இருக்கிற 
விபஸ்ஸனா தியான மையம்


இதில ஹைலைட்டான விஷயம் என்னான்னு கேட்டீங்கன்னா இந்த தியானம் சொல்லிக் கொடுக்க எந்த வித கட்டணம்னு ஒண்ணும் கிடையாது. முழுக்க முழுக்க தானத்தினாலத் தான் நடக்குது. பயிற்சி முடிஞ்சுப் போகிறபோது நீங்க, தூய்மையான மனநிலையோடு உங்களால எவ்வளவு பணம் கொடுக்க முடியுமோ அதை மன நிறைவோடு வாங்கிக்கிறாங்க. அதாவது நீங்க பயிற்சியில கலந்துக்கொள்ள உங்களுக்கு முன்னால கலந்துக்கிட்டவங்க தானம் கொடுத்திருக்காங்க. அதேப்போல எனக்கு கிடைத்த மன அமைதி, மனத்தூய்மை இனி வர இருக்கிற மாணவர்களுக்கு கிடைக்கட்டும் என்று தூய மனசோடு நீங்க, உங்க வசதிக்கு என்ன கொடுக்கமுடியுமோ அந்த தொகையை கொடுங்க. அவங்க சந்தோஷமா வாங்கிப்பாங்க.

நேரம் வாய்க்கப்பெற்றவர்கள் கண்டிப்பாக தியானத்தில கலந்துக்கோங்க. கண்டிப்பா உங்க மனசில இருக்கிற விகாரங்களிலில இருந்து வெளிப்பட்டு மன அமைதியையும் சந்தோஷத்தையும் அனுபவிப்பீங்க. 

நான் கிளம்பறதுக்கு முன்னாடி உங்க பார்வைக்கு ஒரு வீடியோவை தர்றதில சந்தோஷம். இது திஹார் ஜெயிலில கிரண்பேடியினால விபஸ்ஸனா தியானத்தை அறிமுகம் செஞ்சப்பின்னாடி சிறைவாசிகள் கிட்ட எந்தவிதமான மாற்றம் வந்ததுன்னு சொல்லுகிற வீடியோ! பார்க்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கும். நேரம் இருக்கும்போது பாருங்க! ஒரு சமயம் இந்த வீடியோ வேலை செய்யலைன்னா இந்த லிங்கில சென்று பார்க்கலாம்



தியானம் இப்போ எல்லோருமே கத்துக்க ஆரம்பிச்சிருக்காங்க. நிறையப்பேரு வர்றாங்க. முக்கியமா வெளிநாட்டு ஆளுங்க வர்றாங்க!

இதெல்லாம் பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு! பூமி சொர்கபுரியாக மாற வாய்ப்பு இருக்கு! என்னோட கூட இருந்ததுக்கு ரொம்ப நன்றீங்க! கட்டாயம் தியானம் கத்துக்கோங்க! மனக்கவலை, சஞ்சலம் இல்லாம வாழுங்க!

இந்த பதிவு எல்லோர்கிட்டேயும் போய் சேறணும்னு நீங்க நினைச்சா, மறக்காம உங்க ஓட்டுகளை, கீழே இருக்கிற ஓட்டுப் பெட்டிகள்ல போடுங்க மக்கா! நீங்க எல்லோரும் தான் அன்பான பங்காளிங்க ஆச்சே! நான் சொல்லாமலே செய்றவங்க இல்லையா அப்பு?

2 Nov 2010

வாழ்க்கை எல்லாம் போராட்டமா???

பங்காளி! மனுஷனுக்கு மட்டும் ஏன் இத்தனை பாரம்? மனுஷ மனசு, வாழ்க்கை சுழலில சிக்கி, சுத்தி சுத்தி எதையோ தேடி தேடிக் வாழ்க்கை முழுசும் அலுத்து, என்னடா இது வாழ்க்கையின்னு எப்போவாவது ஒருதரமாவது தோன்றி இருக்கா உங்களுக்கு?

காலம் எல்லாம் வாழ்க்கையில போராட்டம் தானா
பங்காளி?

எதைத்தேடி எதை அடைஞ்சோம்? மறுபடி மறுபடி என்னென்னமோ தேடி நம்ப வாழ்க்கையில இதுக் கிடைச்சா சந்தோஷம், அதுக் கிடைச்சா சந்தோஷம்ன்னு நினைச்சு எதன் எதன் பின்னோ ஓடி ஓடி வாழ்க்கை கனவாய் காணல்நீராய், வெற்று சுரைக்காய்கூடாய் இப்படிதானா வாழ்க்கை? இவ்வளவுதானா வாழ்க்கை?

சின்ன சின்ன உயிர், சின்ன சின்ன அறிவுங்க மட்டுமே உள்ள ஜீவராசிகள் எல்லாமும் சந்தோஷமாகத்தானே இருக்குதுங்க.

இறக்கும் வரை இறக்கமுடியாத சுமைகள்!
மனுஷனுக்கு ஏன் சலிப்பு வராதா?
எத்தனை எத்தனை பாரங்கள்!

ஏன் மனுஷனோட வாழ்க்கை மட்டும் இவ்வளவு நெருக்கடியில் சிக்கி இருக்குதுன்னு  எப்போவாவது சிந்திச்சி இருக்கோமா?  

இப்படி எல்லாம் பங்காளி நீங்க சிந்திக்கிறதுண்டுன்னு சொன்னீங்கன்னா நீங்க ஞானம் அடைகிற பாதையில நடக்கறீங்கன்னு அர்த்தம்.

விட்டு விடுதலை யாகிநிற் பாயிந்தச்
சிட்டுக் குருவியைப் போலே

எட்டுத் திசையும் பறந்து திரிகுவை
ஏறியக் காற்றில் விரைவொடு நீந்துவை
மட்டுப் படாதெங்கும் கொட்டிக் கிடக்குமிவ்
வானொளி யென்னும் மதுவின் சுவையுண்டு

மேல சொன்னது பாரதியோட ஞான வார்த்தைகள். இதைப் போல விட்டு விடுதலையாகி சிட்டுக்குருவியைப் போலவே நாம் மகிழ்ந்திருக்க வேண்டாமா?

மனுஷனும் இந்த ப்ரபஞ்சத்தின் ஒருத் துண்டுதானே? அவனுக்கு மட்டும் இன்பம் கொடுக்காமல் நடந்துச்சென்றுவிடுமா இந்த ப்ரபஞ்சம். ஆனால் நடைமுறையில் பார்ப்பது என்ன பங்காளி?

உலகத்தில பைத்தியக்காரன்க அதிகமா ஆகிட்டிருக்காங்க. அதிக அதிகமாய் படிக்க படிக்க, வாழ்க்கையிலேயே நடிக்க ஆரம்பிச்சிட்டோம். தற்கொலைகள் எத்தனை எத்தனை! 7 வயசு பிஞ்சுகள் எல்லாம் கூட தற்கொலை செய்து செத்து மடியுதுன்னு செய்திக்கேட்டு பதராம இருக்க முடியலையே பங்காளி! மனசு நிறைய நிறைய வாழ்க்கை வெறுத்து கனக்குதே!

ஐயோ! என் மாந்தர் இனமே! உனக்கு வந்த இந்த இழி நிலையை அந்த எட்டுக்கால் பூச்சியும், வண்ணத்துப்பூச்சியும் கேலி செய்து சிரிச்சி பேசிக்கிட்டு இருந்துச்சே நேத்து, அந்த அந்திசாயும் நேரத்தில, அதோ அந்த மாமரத்து கிளை மேல உட்கார்ந்துக்கிட்டு. நீங்க அதைக் கேட்கவில்லையா? நான் கேட்டேனே பங்காளி! நீங்க எப்படி மிஸ்பண்ணீங்க. ஒருவேலை காதில ஹெட்ஃபோன் மாட்டிகிட்டு FM ரேடியோ கேட்டிட்டு இருந்தீங்களோ என்னமோ?   

வாழ்வோமே பங்காளி ஏகாந்தமாய், எல்லா கட்டுக்களையும் அறுத்து எறிந்துவிட்டு முடியுமானால் முழுவதையும் எரித்துவிட்டு. அதுக்குத்தான் வழியிருக்குன்னு சொல்ல வந்தேன் பங்காளி!

உடல் சார்ந்த வாழ்க்கை வாழும் வரைக்கும் நமக்கு விடுதலைக் கிடைக்காது. என்ன வேணும்னாலும் சாப்பிடுங்க, என்ன வேணும்னாலும் செய்யுங்க, என்ன வேணும்னாலும் உடுத்துங்க, எங்க வேணும்னாலும் போங்க, எல்லாம் வெறும் நிலைத்து செல்லாத அனுபவங்களே!

ஒரு அனுபவம் முடிஞ்சப்பின்னாடி அந்த அனுபவத்தை விட வேறு எதாவது புதுசா, சொகுசா பலபல தினுசா கிடைக்குமான்னுத் தான் மனசு ஏங்குது. அதனாலத் தாங்க பங்காளி இத்தனை குழப்பங்களும், போராட்டங்களும்.

வாழ்க்கையை முழுசா ஏத்துக்கப் பழகணும் பங்காளி! துன்பங்கள் தவிர்க்கபட வேண்டியவை அல்ல தெரியுமா பங்காளி? அவைகளைக் கடந்து செல்ல வேண்டும் என்றே உங்களுக்கு பாடம் நடத்த வருகின்றன. ஒருத் துன்பத்தை மகிழ்ச்சியா கடக்க ஆரம்பிச்சிட்டா உங்க வாழ்க்கையில ஒருப்படி முன்னேறி செல்றீங்கன்னு அர்த்தமுங்க.

உண்மையை சொல்லப் போனா வாழ்க்கையில, உலகத்தில இன்பமும் இல்லை துன்பமும் இல்லை. எல்லாம் மனசுப் போடுகிற கணக்குத்தான். சின்ன வயசுல சேத்தில விளையாடுறது, மழையில நினைஞ்சு கூத்தடிக்குறது சந்தோஷ அனுபவம். ஆனா வளர்ந்தப்பின்னாடி அதுவே பிடிக்காம வெறுக்கப்படுகின்ற அனுபவமா போகுதில்ல.

வாழ்க்கையில வெறுப்பு வர்றது சகஜமான ஒரு விஷயமா போச்சு! என்ன செய்ய நெருக்கடி நிறைஞ்ச காலத்தில வாழறோமே! அந்த மாதிரி மனசு சஞ்சலத்தில மாட்டிக்கிட்டா எப்படி சமாளிக்கிறதுன்னு கேட்டுக்றீங்க இல்ல பங்காளி?

ஒருச் சின்ன தியானம் சொல்லிக்கொடுக்கிறேன். எப்பவெல்லாம் உங்க மனசு சஞ்சலப்படுதோ அப்போ தனியா ஒரு இடத்திலப்போய் யாரும் உங்களை தொந்தரவு செய்ய முடியாத ஒரு அறையில் போய் உட்காருங்க. சாதரனமா உட்காருங்க, முதுகை, நேராகவும், தளர்வாகவும் வைச்சு, கண்களை மூடி உங்க மூச்சுக்காத்தை கவனியுங்க. உள்ளேப்போகிற மூச்சு, வெளியேபோகிற மூச்சு, நீங்க எதனையும் கட்டுப்படுத்தாதீங்க. இயல்பாய் வருகிற போகிற மூச்சுக்காத்தை கவனியுங்க. போதும்.

உங்க மூச்சுக்காத்தை கவனிக்க முடியாம மனசு எங்கெங்கோ அலைப்பாயும். கண்டுக்காதீங்க! மறுபடியும் மூச்சுக்காத்தை கவனியுங்க. ஒரு அரை மணிநேரம் இப்படி செய்தா உங்க சஞ்சலம் நீங்கறதை பார்க்கமுடியும்.

மனசு கவலையில்லாம எப்போதுமே லேசா இருந்தா எவ்வளவு நல்லாஇருக்கும். அனுபவிச்சிப் பாருங்க!

இன்னமும் தியானத்தைப் பத்தி, ஆன்மீகப்பாதை எப்படி நம் வாழ்க்கையில மகிழ்ச்சியைக் கொண்டுவரும் என்கிறதைப் பத்தி எல்லாம் பேசுவோமே! கையைப் பிடிச்சுக்கிட்டு கூடவே வந்தா சந்தோஷம்.




இந்த பதிவு எல்லோர்கிட்டேயும் போய் சேறணும்னு நீங்க நினைச்சா, மறக்காம உங்க ஓட்டுகளை, கீழே இருக்கிற ஓட்டுப் பெட்டிகள்ல போடுங்க மக்கா! நீங்க எல்லோரும் தான் அன்பான பங்காளிங்க ஆச்சே! நான் சொல்லாமலே செய்றவங்க இல்லையா அப்பு?

30 Oct 2010

கைகள் சொன்ன கதை

அழகான கைகள் யாருடைய கைகள்?



சில வருடங்களுக்கு முன்பு, வெலிங்டனில் உள்ள ராணுவ அதிகாரி ஒருவரின் வீட்டுக்குச் சென்று இருந்தேன். அவரது வரவேற்பறையில் இரண்டு கைகளின் புகைப்படம். யாரோ ஒரு புனிதரின் கைகளாக இருக்கக்கூடும் என்று நினைத்து, அதைப்பற்றிக் கேட்கவே இல்லை. அவரோடு காரில் பயணம் செய்யும்போது, அதேபோன்ற கைகளின் புகைப்படத்தை மறுபடியும் பார்த்தேன். ஆவலில் அது யாருடைய கைகள் என்று கேட்டேன்.
 
அவர் புகைப்படத்தைக் கையில் எடுத்துப் பார்க்கும்படியாகச் சொன்னார். புகைப்படத்தை அருகில் தொட்டுப் பார்த்தபோது, அது வயதான ஒரு பெண்ணின் கைகள் என்பதைக் கண்டுகொண்டேன். முதுமையின் ரேகை படிந்த நீண்ட விரல்கள். நகங்கள் சுத்தமாக வெட்டப்பட்டு இருக்கின்றன. நரம்புகள் புடைத்துத் தெரிகின்றன. யாராக இருக்கும் என்று மனது ஏதேதோ துறவிகளை, ஞானிகளை நினைவுபடுத்திக்கொண்டே இருந்தது.
 
அவர் அந்தக் கைகளைப் பெருமூச்சுடன் பார்த்து ஆதங்கமான குரலில் அது என் அம்மாவின் கைகள் என்று சொன்னார். ஆச்சர்யமாக இருந்தது. "எதற்காக அம்மாவின் கைகளை மட்டும் புகைப்படமாக வைத்திருக்கிறீர்கள்?" என்று கேட்டேன்.
 
"அந்தக் கைகள்தான் என்னை வளர்த்தன. என் நினைவில் எப்போதுமே அம்மாவின் கைகள்தான் இருக்கின்றன. அம்மாவின் முகத்தைவிட, அந்தக் கைகளைக் காணும்போதுதான் நான் அதிகம் நெகிழ்ந்துபோகிறேன்.
 
அம்மா இறப்பதற்குச் சில மணி நேரம் முன்பாக இந்தப் புகைப்படத்தை எடுத்தேன். இந்தக் கைகள் இப்போது உலகில் இல்லை. ஆனால், இதே கைகளால் வளர்க்கப்பட்டவன் உங்கள் முன்னால் உட்கார்ந்திருக்கிறேன். என் அம்மா எனக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்து ஓய்வு எடுத்ததே இல்லை.
 
அப்பா பொறுப்பற்ற முறையில், குடித்து, குடும்ப வருமானத்தை அழித்து 32 வயதில் செத்துப் போனார்.அம்மாதான் எங்களை வளர்த்தார். நாங்கள் மூன்று பிள்ளைகள். அம்மா படிக்காதவர். ஒரு டாக்டரின் வீட்டில் பணிப் பெண்ணாக வேலைக்குச் சேர்ந்தார். பகல் முழுவதும் அவர்கள் வீட்டினைச் சுத்தம் செய்வது, பாத்திரம் கழுவுவது, துணி துவைப்பது, நாய்களைப் பராமரிப்பதுபோன்ற வேலைகள். மாலையில் இன்னும் இரண்டு வீடுகள். அங்கும் அதேபோல் சுத்தம் செய்யும் வேலைதான். எத்தனை ஆயிரம் பாத்திரங்களை அம்மாவின் கைகள் விளக்கிச் சுத்தம் செய்து இருக்கும் என்று நினைத்துப்பார்க்கவே மனது கஷ்டமாக இருக்கிறது.
 
இரவு வீடு திரும்பிய பிறகு, சமைத்து எங்களைச் சாப்பிடவைத்து உறங்கச்செய்துவிட்டு அதன் பின்னும் அம்மா இருட்டிலேயே கிணற்றில் தண்ணீர் இறைத்துக்கொண்டு இருப்பார்கள். சமையல் அறையில்தான் உறக்கம். அப்போதும் கைகள் அசைந்தபடியேதான் இருக்கும். எங்கள் மூவரையும் பள்ளிக் கூடம் அழைத்துப் போகையில் யார் அம்மாவின் கைகளைப் பிடித்துக்கொண்டு நடப்பது என்பதில் போட்டியே இருக்கும்.
 
அந்தக் கைகளைப் பிடித்துக்கொள்வதில் அப்படி ஒரு நெருக்கம், நம்பிக்கை கிடைக்கும். அதுபோலவே உடல் நலம் இல்லாத நாட்களில் அம்மாவின் கைகள் மாறி மாறி நெற்றியைத் தடவியபடியே இருக்கும். அம்மா நிதானமாகச் சாப்பிட்டு நான் பார்த்ததே இல்லை. தனது சகலச் சிரமங்களையும் அம்மா தன் கைகளின் வழியே முறியடித்து எங்களை வளர்த்தபடியே இருந்தார். மருத்துவரின் வீட்டில் அம்மா ஒருநாள் ஊறுகாய் ஜாடியை உடைத்துவிட்டார் என்று அடி வாங்குவதைப் பார்த்தேன். அம்மாவின் கன்னத்தில் மருத்துவரின் மனைவி மாறி மாறி அறைந்துகொண்டு இருந்தார். அம்மா அழவே இல்லை.
 
ஆனால், நாங்கள் பார்த்துக்கொண்டு இருப்பதைத் தாங்க முடியாமல், விடுவிடுவென எங்களை இழுத்துக்கொண்டு அந்த வீட்டில் இருந்து வெளியேறினாள். வழியில் பேசவே இல்லை. அம்மாவை எந்தக் கைகளும் ஆறுதல்படுத்தவோ, அணைத்துக்கொள்ளவோ இல்லை. அவள் கடவுள் மீதுகூட அதிக நம்பிக்கைகொண்டு இருந்தாள் என்று தோன்றவில்லை. வீட்டில் சாமி கும்பிடவோ, கோயிலுக்குப் போய் வழிபடவோ, அதிக ஈடுபாடு காட்டியதே இல்லை. வேலை... வேலை... அது மட்டுமே தன் பிள்ளைகளை முன்னேற்றும் என்று அலுப்பின்றி இயங்கிக்கொண்டு இருந்தார்.
 
சிறு வயதில் அந்தக் கைகளின் முக்கியத்துவத்தை நான் புரிந்துகொள்ளவே இல்லை. ஆசையாகச் சமைத்துத் தந்த உணவைப் பிடிக்கவில்லை என்று தூக்கி வீசி இருக்கிறேன். கஷ்டப்பட்டுப் பள்ளியில் இடம் வாங்கித் தந்தபோது படிக்கப் பிடிக்கவில்லை என்று போகாமல் இருந்திருக்கிறேன். கைச் செலவுக்குத் தந்த காசு போதவில்லை என்று அம்மாவுக்குத் தெரியாமல் வீட்டில் திருடி இருக்கிறேன். மற்ற சிறுவர்களைப்போல சைக்கிள் வாங்கித் தர மாட்டேன் என்கிறாள் என்று கடுமையான வசைகளால் திட்டி இருக்கிறேன். அம்மா எதற்கும் கோபித்துக்கொண்டதே இல்லை. அம்மா கஷ்டப்படுகிறாள் என்று தெரிந்தபோதும் யார் அவளை இப்படிக் கஷ்டப்படச் சொன்னது என்றுதான் அந்த நாளில் தோன்றியது. கல்லூரி வயதில் நண்பர்களோடு சேர்ந்து சுற்றவும், புதுப் புது ஆடைகள் வாங்கவும் குடிக்கவும் எத்தனையோ பொய்கள் சொல்லி இருக்கிறேன். என் அண்ணனும் தங்கையும்கூட இப்படித்தான் செய்திருக்கிறார்கள். ஆனால், அம்மா அதற்காக எவரையும் கோபித்துக் கொள்ளவே இல்லை.
 
கல்லூரி இறுதி ஆண்டில் மஞ்சள் காமாலை வந்து, நோயாளியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார் அம்மா. அப்போதுதான் அவர் எங்களை எவ்வளவு அக்கறையோடு, ஆதரவோடு காப்பாற்றி வந்திருக்கிறார் என்று புரிந்தது. அதன் பிறகு, என்னைத் திருத்திக்கொண்டு தீவிரமாகப் படிக்கத் துவங்கி, ராணுவத்தில் வேலைக்குச் சேர்ந்து கடுமையாக உழைத்துப் பதவி-உயர்வு பெற்றேன். அம்மாவை என்னுடனே வைத்துக்கொண்டேன். நான் சம்பாதிக்கத் துவங்கியபோதும், அம்மா ஒருபோதும் எதையும் என்னிடம் கேட்டதே இல்லை. நானாக அவருக்கு எதையாவது வாங்கித் தர வேண்டும் என்று நினைத்து, தங்க வளையல் வாங்கித் தருகிறேன் என்று அழைத்துப் போனேன்.
 
முதிய வயதில் அம்மா மிகுந்த கூச்சத்துடன், 'எனக்கு ஒரே ஒரு வாட்ச் வேண்டும். சின்ன வயதில் வாட்ச் கட்டிக்கொண்டு வேலைக்குப் போக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால், அது நடக்கவே இல்லை. அதன் பிறகு, எனக்குள் இருந்த கடிகாரம் ஓடு... ஓடு... என்று என்னை விரட்டத் துவங்கியது. அலாரம் இல்லாமலே எழுந்துகொள்ளப் பழகிவிட்டேன். இப்போது வயதாகிவிட்டது. சில நாட்கள் என்னை அறியாமல் ஆறு மணி வரை உறங்கிவிடுகிறேன். இரவு உணவை ஏழு மணிக்குச் சாப்பிட்டுவிடுகிறேன். ஒரு வாட்ச் வாங்கித் தருவாயா?' என்று கேட்டார்.
 
அம்மா விரும்பியபடி ஒரு வாட்ச் வாங்கித் தந்தேன். ஒரு பள்ளிச் சிறுமியைப்போல அதை ஆசையாக அம்மா எல்லோரிடமும் காட்டினாள். அதை அணிந்துகொள்வதில் அம்மா காட்டிய ஆர்வம் என்னை நெகிழ்வூட்டியது. அதன் பிறகு அம்மா, நான் திருமணம் செய்து டெல்லி, பெங்களூரு என்று வேலையாக அலைந்தபோது கூடவே இருந்தார். டெல்லியில் எதிர்பாராத நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். நான் கூடவே இருந்தேன்.
 
'நாங்கள் ஏமாற்றியபோது எல்லாம் ஏன் அம்மா எங்களை ஒரு வார்த்தைகூடத் திட்டவே இல்லை?' என்று கேட்டேன். அம்மா, 'அதற்காக நான் எவ்வளவு அழுதிருக்கிறேன் என்று உங்களுக்குத் தெரியாது. ஆனால், அன்று நான் கோபப்பட்டு இருந்தால், என் பிள்ளைகள் என்னைவிட்டுப் போயிருப்பார்கள்' என்று சொல்லி, தன் கையை என்னுடன் சேர்த்துவைத்துக்கொண்டார்.
 
அப்போதுதான் அந்த முதிய கைகளைப் பார்த்தேன். அது எவ்வளவு உழைத்திருக்கிறது. எவ்வளவு தூய்மைப்படுத்தி இருக்கிறது. எவ்வளவு அன்பைப் பகிர்ந்து தந்திருக்கிறது. அதை ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தோன்றியது. பிறகு ஒருநாள், எனது கேமராவை எடுத்து வந்து, புகைப்படம் எடுத்துக்கொண்டேன். இன்று அம்மா என்னோடு இல்லை. ஆனால், இந்தக் கைகள் என்னை வழி நடத்துகின்றன. ஒவ்வொரு நாளும் நான் எப்படி வளர்க்கப்பட்டேன் என்பதை இந்தக் கைகள் நினைவுபடுத்துகின்றன. இதை வணங்குவதைத் தவிர, வேறு நான் என்ன செய்துவிட முடியும்?" என்றார்.
 
ராணுவ அதிகாரியினுடைய முகம் தெரியாத அந்தத் தாயின் கைகளை நானும் தொட்டு வணங்கினேன். அந்தக் கைகள் யாரோ ஒருவரின் தாயின் கைகள் மட்டும் இல்லை. உலகெங்கும் உழைத்து ஓய்ந்துபோன தாயின் கைகள் யாவும் ஒன்றுபோலத்தான் இருக்கின்றன. அவை எதையும் யாசிக்கவில்லை. அணைத்துக்கொள்ளவும், ஆதரவு தரவும், அன்பு காட்டவுமே நீளுகின்றன. அதை நாம் புறந்தள்ளிப் போயிருக்கிறோம். அலட்சியமாகத் தவிர்த்து இருக்கிறோம்.
 
இலக்கு இல்லாத எனது பயணத்தில் யார் யார் வீடுகளிலோ தங்கியிருக்கிறேன். சாப்பிட்டு இருக்கிறேன். எனது உடைகளைத் துவைத்து வாங்கி அணிந்து இருக்கிறேன். அந்தக் கைகளுக்கு நான் என்ன நன்றி செய்து இருக்கிறேன். ஒரு நிமிடம் என் மனம் அத்தனை கைகளையும் வணங்கி, தீராத நன்றி சொன்னது.
 
'கை விரல்களுக்கு இடையில் இடைவெளி இருப்பது இன்னொரு கைகள் நம்மோடு சேர்ந்துகொள்ளத்தான்' என்று எங்கோ படித்தேன். அதை நிறைய நேரங்களில் நாம் உணர்வதே இல்லை. நம் மீது அன்பு காட்டும் கைகளுக்கு நாம் என்ன செய்யப்போகிறோம்?
 
முடிவு நம்மிடமே இருக்கிறது!

குறிப்பு: ஒரு அருமையான நண்பரால் எனது ஈமெயிலுக்கு வந்த கதை. உங்களுடன் பகிர்ந்துக் கொள்வதில் மிகவும் சந்தோஷம். நல்ல விஷயங்களை பகிர்ந்துக் கொள்வதில் தான் எத்தனை ஆனந்தம். 
 

இந்த பதிவு எல்லோர்கிட்டேயும் போய் சேறணும்னு நீங்க நினைச்சா, மறக்காம உங்க ஓட்டுகளை, கீழே இருக்கிற ஓட்டுப் பெட்டிகள்ல போடுங்க மக்கா! நீங்க எல்லோரும் தான் அன்பான பங்காளிங்க ஆச்சே! நான் சொல்லாமலே செய்றவங்க இல்லையா அப்பு?

24 Oct 2010

மக்கா! ஜெய்பூரை ரசிங்க மக்கா!

பாசக்கார பங்காளிகளே! எல்லோருமே சௌகியங்களா? போன பதிவுல கடிச்சிட்டுப் போனேனே. யாருக்கெல்லாம் காயம்பட்டதோ அவங்களுக்கு காயமெல்லாம் ஆறிடிச்சா? ஆறாதவங்க யாருன்னு சொல்லுங்க. அவங்களுக்கு இயற்கை வைத்திய சிகிச்சை முறையை சொல்றேன். உங்க காயமெல்லாம் மாயமா மறைஞ்சுடும். அப்பத்தானே திரும்ப கடிக்க வசதியா இருக்கும்! 

உங்களை கடிச்சிட்டுப் போன கையோட நான் ஜெய்பூருக்கு தியானம் செய்யப் போயிட்டேன். இன்னைக்கித்தான் திரும்பிவந்தேன். திரும்பி வந்துப் பார்த்தா ஒரு சந்தோஷ செய்தி. உங்களோட பகிர்ந்திருக்கிறதில என்னோட சந்தோஷம் இரட்டிப்பாகுது. அது என்னான்னு பாருங்க!


from      ulavu .com
to           n.vasanthakumar@gmail.com
date      10 October 2010 16:23
subject: உலவின் வாழ்த்துக்கள்
mailed-by: gmail.com
                                                                   
வணக்கம்,
 தங்களை ஆகஸ்ட் - 2010 ற்கான சிறப்பு பதிவராக தேர்ந்தேடுத்துள்ளோம். உங்கள் பதிவுகள் மிக அருமை, அனைத்து பதிவுகளும் பயனுள்ள பதிவுகள். உங்களுக்கான பரிசு புத்தகங்கள் அனுப்புவதற்கான முகவரியை இந்த மின்அஞ்சலுக்கு அனுப்பிவைக்கவும், அத்துடன் உங்கள் சமிபத்திய புகைபடமும் அனுப்பவும்

நன்றி
அன்புள்ள சரண்
(
உலவு.காம்)

இதுக்கெல்லாம் உங்களோட ஊக்கமும் உற்சாகமும் தான்  Secret of The success. 

அதனால டன் டன்னாக தேங்க்ஸோ தேங்கஸ்ங்கோ.... எல்லோரும் என்னாலும் எல்லா வளமும் நலமும் பெற்று நீடுழி பல்லாண்டு வாழ்கவென மனசார வாழ்த்தறேனுங்க உங்க பாசக்கார உறவுக்காரன். 

இப்போ ஜெய்பூரு அழகு உங்க கண்களுக்காக!


அமிர் கோட்டைங்க! பல சினிமாக்கள்ல படம் பிடிக்கப்பட்டதுங்க. நம்ப தமிழ் படம் காதல் கோட்டையிலக் கூட வந்திருக்குதுங்க.


எம்மாம்பெரிய கோட்டை தெரியுமா? அதில எத்தனை எத்தனை அறைங்க! அப்பப்பா...!

கோட்டையை சுத்திப்பாக்குறதுக்கு ஆரம்பிச்சா நம்ப காலுங்கதான் கெஞ்ச ஆரம்பிச்சிடும். கால்வலி எடுத்துக்குற அளவு பெரிய கோட்டை! அதுவும் மலைமேல கட்டி இருக்காங்க! எல்லா வசதிகளோட!



கோட்டையோட முகப்பு வாசலுங்க. பார்க்கவே ரொம்ப அழகா இருக்கில்லா!


இதில தான் கோட்டையில இருக்கிறவங்களுக்கு சமையலாம்பா! எம்மாபெரிசு....!!!

எத்தனைப்பேரு அந்த காடாயில, எத்தனைப் பேருக்கு சமைச்சு, எத்தனைப் பேரு அதை சாப்பிட்டு எப்படியெல்லாம் வாழ்ந்திருந்தாங்கன்னு நினைச்சுப்பாக்கவே மலைப்பா இருக்கில்ல! என்ன இருந்தாலும் சாப்பாட்டு விஷயத்தில நம்ப இந்தியர்களை அடிச்சிக்க யாராலேயும் முடியாது அப்பு! என்ன சொல்றீக நீங்க?

அந்த காலத்து போர் விரன் - ஒரு மாடல். ஜெய்பூர் ம்யூசியத்தில வைச்சிருக்காங்க. உடையெல்லாம் இரும்புக் கவசம்! தலையில இரும்புத் தொப்பி! இதையெல்லாம் தூக்கிச் சுமந்துக்கிட்டு எப்படி போருக்குப் போனாங்களோ தெரியல! 

இது ஜல் மகாலுங்க! அப்படின்னா தண்ணிக்குள்ள இருக்கிற கோட்டைன்னு அர்த்தமுங்க! 

பெரிய ஏரி! அதுக்கு நடுவில தண்ணியில ஒருக் கோட்டை! 

மொத்தம் 7 அடுக்கு கட்டிடமுங்க! அதில 4 அடுக்கு தண்ணிக்குள்ள! நினைச்சுப் பாருங்க எப்படி இருக்கும்னு! அப்படி ஒரு கட்டிடத்தில வாழறதை நினைச்சிப் பார்க்கவே ஆச்சரியமா இருக்கில்ல! இது எதுக்குன்னா கேட்கறீங்க? எல்லாம் வெயில் கொடுமையை சமாளிக்கத்தான் இந்த கோட்டை! ராஜாவோட குடும்பம் வெய்யில்ல இருந்து தப்பிக்க இயற்கை ஏசிக் கொண்ட கட்டிட்டம்!

ம்ம்ம்... எப்படியெல்லாம் உட்கார்ந்து யோசிச்சிருக்காங்கப்பா...!!! 

கலர்கலரா உடையில நம்ப ராஜஸ்தானி பாம்பாட்டிங்க! பார்க்கவே ஜோரா இருக்காங்க இல்ல! அவங்களை வெளிநாட்டுக்காரங்க ஆர்வமா படம்பிடிச்சிட்டுப் போறாங்க! ஒரு வெளிநாட்டுக்காரரு என்ன சந்தோஷமா படம்பிடிக்கிறாரு பாருங்க!

அட நம்புங்க பங்காளி! இதுவும் ஜெய்பூரே தான்! அங்கேயும் பச்சை பசுமையா பார்க்கெல்லாம் இருக்குப்பா! என்ன ஒன்னு யாரும் மத்தியான நேரத்தில போகமுடியாது. அந்த அளவு வெயில் வாட்டி நம்பளை ப்ரட் டோஸ்டாக்க்கிடும் மக்கா!



இது ஹவா மகால்! அப்படின்னா காத்து மாளிகை! மன்னர்கள் மாலை நேரத்தில காத்து வாங்குறதுக்கு ஒரு மாளிகை! சாயந்திர நேரத்தில சும்மா சில்லுன்னு காத்து வீசுது! அதை அனுபவிக்க ஒரு மாளிகை! கட்டிடடக் கலையைப் பாருங்க! எவ்வளவு ரம்மியமா இருக்கில்ல!


இது யாரா? இது, உங்க உறவுக்காரனே தான். மொட்டை தலையோட ரொம்ப அழகா அம்சமா இருக்கேன் இல்ல!!!??? யாருக்கும் மயக்கம் ஏதும் வரலியே? ரொம்ப சந்தோஷம்.

நான் இல்லாத சமயத்தில நிறைய நிறைய எழுதி குவிச்சிட்டீங்க போல இருக்கு! எல்லாத்தையும் படிக்க ரொம்ப ஆசை! சந்தோஷ சுமையா ஏத்துக்கிட்டு உங்க பதிவுகளைப் படிக்கிறேன். கரும்புத்தின்ன கூலியாக் கேட்கப்போறேன். 

அப்புறம் ஜெய்பூரில கலந்துக்கிட்ட தியானத்தைப் பத்தி அடுத்தப் பதிவுல சொல்றேன்பா பங்காளி! 
அதுவரை உங்களிடமிருந்து வணக்கம் கூறி விடைப் பெறுவது 





உங்கள் உறவுக்காரன்...உறவுக்காரன்...உறவுக்காரன்.