மக்கா எல்லோரும் சௌக்கியம் தானே? நீங்கெல்லாம் எல்லா வளத்தோட சௌக்கியமா இருக்கனும்னு மனசார வாழ்த்தறேங்க. அப்பு தொடர ஆரம்பிச்சிட்டேன்!
இன்றய தேதில “நீயா நானா” டீவி நிகழ்ச்சி ஆகட்டும், vinavu.com ஆகட்டும், நம் பத்திரிக்கைகள் ஆகட்டும், எல்லோரும் சொல்லி புலம்பும் விஷயம் நம்முடைய மருத்துவ துரையில் வியாபாரமும் அரசியலும் புகுந்து விளையாடுது. நாம இப்படி கையாள ஆகாம இருக்கோமேன்னு தான்.
ஏன் அப்பு இந்த இழி நிலை? நமக்கான மருத்துவம் நம்மிடம் தானே இருந்தது. அதை மறந்தது யாரு அப்பு! நமக்கு சொந்தமான மருத்துவத்தை விட்டுவிட்டு அந்நிய மருந்துகளை நாடினால், நாம இந்த இழி நிலை தானே அடைய முடியும்.
மனுஷனுக்கு ஏற்ற உணவு இயற்கை உணவு! |
நமக்கு சொந்தமான மருத்துவம் எதுன்னு கேட்கறீங்களா? அது இயற்கை மருத்துவம் அப்பு!
கத்தி இல்லாம, இரத்தம் இல்லாம, ஆப்பரேஷன் ஏதும் இல்லாம மூளை கட்டி (அதுவும் 82 மில்லிமீட்டர் நீளம்) இயற்கை மருத்துவ முறையில குணமாச்சுன்னு சொன்னா நீங்க ஒரு வேலை நம்பாம கூட இருக்கலாம். நான் ஏதோ கதை அளக்கிறேன்னு நினைக்கலாம். (அந்த உண்மை சம்பவத்தை பத்தி இன்னொரு பதிவுல எழுதறேன்). மூளை கட்டி மட்டும் இல்ல அப்பு, இருதய கோளாறுகள், சிறுநீரக நோய்கள், வயிற்று கட்டிகள்ன்னு பல விஷயங்களுக்கு இந்த இயற்கை மருத்துவம் குணமாக்குது. இதை எல்லாம் நான் நேரில பாத்திருக்கேன்.
அது என்ன மாய சக்தி இயற்கை வைத்தியத்திலன்னு கேட்கறீங்களா?
முதல்ல அதபத்தி தெரிஞ்சுப்போமே!
இயற்கை மருத்துவம்: இதை பத்தி தெரியாதவங்களுக்கு ஒரு அறிமுகம்
முதல் விஷயம்: நோய் ஒன்றே பல அல்ல
எல்லா நோய்களுக்கான காரணம் ஒன்றே! அது, “உடலில் இருந்து நீங்கா கழிவுகளே”
அப்பு! உடல்ல இருந்து, கழிவுகள், மலஜலமாக, வேர்வையாக, மூக்கு சளியாக, இப்படி பல ரூபங்கள்ல உடலில் தேங்கி நில்லாமல் வெளியேறி விடணும். ஆனா இன்னைய தேதியில மலச்சிக்கல்னால அவதி படுறவங்க நிறைய பேர். அது ஏன்? மக்கா யோசியுங்க கொஞ்சம் யோசிச்சா, கண்டுபிடிச்சிடலாம். எல்லோருக்கும் தெரிஞ்ச சங்கதி தான்.
{குறிப்பு:- விடை தெரிஞ்சவங்க, பின்னூட்டத்தில தெரிய படுத்துங்க. அவங்களுக்கு "ஆரோகிய செம்மல்"ன்னு பட்டம் அளிக்க படும்}
இரண்டாம் விஷயம்: ஜுரம், சளி, கட்டிகள், வாயு தொல்லை, அஜீரண கோளாறுகள் எல்லாம் உடலில் இருக்கும் தானியங்கி செயல்பாடுகளே! இவைகளின் மூலமாக நம்ப உடல், தேங்கி இருக்கும் அழுக்குகளை வெளியேற்ற செய்யும் முயற்சிகளே இவையெல்லாம்.
தீராத வியாதிகளான இருதய நோய்கள், சர்கரை வியாதி, சிறுநீரக வியாதிகள் போன்ற பல வியாதிகளுக்கும் காரணம் என்னன்னு நினைக்கறீங்க?
உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம் அப்பு! அது, ஜுரம், சளி, கட்டிகள், வாயு தொல்லை, அஜீரண கோளாறுகள்ன்னு பார்த்தோமே, அவைகளை குணமாக்குவதாக நினைச்சுகிட்டு கண்ட கண்ட மருந்து, மாத்திரை முழுங்கிகிட்டு, ஊசி போட்டுகிட்டு இருக்கோமே. அதுதான்.
எனக்கு ஜுரமோ, தலைவலியோ, சளியோ வந்தா என்ன செய்வேன் தெரியுமா? வெறும் சுடு தண்ணியோ அல்லது எலுமிச்சை ஜூசோ குடிச்சி, ஒரு நாள் முழுசும் "நீர் உபவாசம்" (Water Fasting) இருப்பேன். ஒரு நாள் முழுதும் வேறு ஆகாரம் ஏதும் சாப்பிடமாட்டேன். ஒரே நாள்ல குணமாகிவிடும். வேறு எந்த மருந்தோ, மாத்திரையோ சாப்பிடுவதில்லை.
போன பதிவுல கேள்வி ஒண்ணு கேட்டிருந்தேனே. கேள்வி "நோய் நமக்கு நன்பன்னு" இது சரியா? தவறா?
அதற்கு பதில்: நோய் நமக்கு நன்பன் தான். நோய் என்பது வேறு ஒண்ணுமில்ல, மேலே பார்த்தோமே நோய் என்பது உடலில் இருக்கும் தானியங்கி செயல்பாடுகளின் வெளிப்பாடே!
நோயின் மூலமாக நம்ப உடல், தேங்கி இருக்கும் அழுக்குகளை வெளியேற்ற செய்யும் முயற்சிகளே இவையெல்லாம். நம் உடல் ஆரோகிய பாதைக்கு திரும்புவதற்கு செய்யும் காரியமே நோயின் ரூபமாக வெளிபடுகிறது.
என்ன இந்த இயற்கை வைத்தியம் பத்தி தெரிஞ்சுக்க ஆவல் வந்திடுச்சா? பேசுவோம் அப்பு!
நாம யாருக்கும் அடிமை ஆகாம நம்ப நாட்ட சேர்ந்த வைத்தியம், அதுவும் செலவு குறைஞ்ச வைத்திய முறை - நம்ப இயற்கை வைத்திய முறை பத்தி பேசுவோம். இதுவும் நாட்டுக்கு நாம செய்கிற தொண்டு தான்.
உங்க கருத்து மிகவும் முக்கியம்! உங்க ஓட்டு - அதுவும் முக்கியம்!
ஓட்டு போடுங்க மகராசா! ஓட்டு போடுங்க மகாராணி! (அவங்களை கேட்கலன்னு கோவிச்சிக்க போறாங்க!)
நன்றிங்க
வரேனுங்க
உங்க...உறவுகாரனுங்க...அப்பு!
19 மேதைங்க இதபத்தி என்ன சொன்னாங்கன்னா...:
Ithu oru arumaiyana thodakkam. Naan Enudaiya Kudumba uravukalidam sollum oru seithi. Koodumana varai marunthu mathiraikal sapiduvathai kuraithu kondal nammai noki varum theera thollaigalil irunthu naam vidu padalam enbathu thaan.
@Vadamally: உங்கள் பாராட்டுக்கு நன்றி! நிறைய பேர்களுக்கு இயற்கை மருத்துவ முறை பற்றிய தகவல்கள் தெரியவில்லை. நீங்களும் இயற்கை மருத்துவ முறைகள் கடைபிடிக்கின்றீரா?
ஏன் வெறுமனே பதிவு எதுவும் இல்லாமல் உங்களின் வலைபதிவை வைத்திருக்கிறீர்கள். எழுதுங்கள்! உங்கள் எண்ணங்களை பதிவேற்றுங்கள். உங்களுக்கு உறுதுணையாக வலைபதிவு நண்பர்கள் நாங்கள் இருக்கிறோம்.
thankyou thankyou thankyou
@guna: எதுக்கு குணா இத்தனை நன்றிகள்! Anyway உங்கள் நன்றிகளுக்கு நன்றிங்க!
எல்லா அன்பர்களுக்கும் வேண்டுகோளுங்க: பதிவ பத்தின உங்க கருத்து சொல்லுங்க. அது ரொம்ப பயனா இருக்கும். இப்போ தான் புதுசா எழுத வந்திருக்கேன். என் எழுத்து நடை எப்படி இருக்கு? நான், தெளிவா, விளங்கற மாதிரி சொல்றேன்னா? இப்படி ஆக்க பூர்வமா கருத்து இருந்தா, ரொம்ப நல்லதுங்க.
என்ன நான் சொல்றது! சரிதானே அப்பு?
வணக்கம் சார் தங்கள் பிளாக் நன்றாக உள்ளது! ஆங்கில வைத்தியம் பார்த்துக் கொண்டிருக்கும் இந்த கால கட்டத்தில் இயற்கை வைத்தியம் பற்றி அறிவது மிக நல்லது! சிறு சிறு விஷயங்களுக்கு கூட ஆங்கில வைத்தியத்தை நோக்கி செல்வது சரியல்ல! தங்களை போன்றவர்களால் கொஞ்சமாவது விழிப்புணர்வு ஏற்படுமல்லவா!
இயற்கை வைத்தியம் பற்றி எழுதும்போது குறிப்பிட்ட பிரச்சினைகளை பற்றி சொல்லி முடிந்தால் அவை ஏற்பவடுவதற்கான காரணங்கள், அதற்கான இயற்கை வைத்திய முறைகள், அந்த இயற்கை வைத்தியத்தினால் நோய் எப்படி குணமாகும் என்பதை பற்றி நீங்கள் விளக்கினால் படிப்பவர்கள் இதை மிகவும் பலனுள்ளதாக கருதுவார்கள்!
தங்களது முயற்சிக்கு என் வாழ்த்துக்களும் நன்றிகளும்!
@எஸ்.கே: வணக்கம் எஸ்.கே சார்! கருத்து சொன்னதற்கு நன்றிங்க!
///இயற்கை வைத்தியம் பற்றி எழுதும்போது குறிப்பிட்ட பிரச்சினைகளை பற்றி சொல்லி முடிந்தால் அவை ஏற்பவடுவதற்கான காரணங்கள், அதற்கான இயற்கை வைத்திய முறைகள், அந்த இயற்கை வைத்தியத்தினால் நோய் எப்படி குணமாகும் என்பதை பற்றி நீங்கள் விளக்கினால் படிப்பவர்கள் இதை மிகவும் பலனுள்ளதாக கருதுவார்கள்!///
கண்டிப்பாக நீங்கள் சொன்ன கருத்துக்கள் இனி வரும் பதிவுகளில் இடம் பிடிக்கும். ஓட்டும் போட்டீங்க இல்லையா தலைவரே? இந்த பதிவு நிறைய பேர்களுக்கு சென்று, நன்மை சேர்க்க வேண்டும் என்று விரும்புகின்றேன்.
நல்ல துவக்கம்.
வலை அனுபவத்திற்கு வருக
வாழ்த்துக்கள்
// (அந்த உண்மை சம்பவத்தை பத்தி இன்னொரு பதிவுல எழுதறேன்).//
சீக்கிரமா எழுதுங்க ..!!
//ஓட்டு போடுங்க மகராசா!//
ஆச்சு ஆச்சு ..
@அருண் பிரசாத்: அண்ணே! வாங்க! உங்க வருகைக்கும், கருத்துக்கும் நன்றீங்கோ!
@ப.செல்வக்குமார்: தம்பி! தங்க கம்பி நீதான்பா! எல்லா பதிவுக்கும், உங்க கருத்தும், ஓட்டும் இடறீங்க.
நன்றி தம்பி! சீக்கிரமே எழுதறேன், அந்த உண்மை சம்பவத்தை பத்தி.
இயற்கை மருத்துவம் பற்றி உங்களிடம் இன்னும் தெரிந்து கொள்கிறோம் தொடருங்கள்
வசந்த் அவர்களுக்கு நன்றிகளுடன் வணக்கம்!
முதலில், மருத்துவம் சார்ந்த வலைப்பதிவை எழுதிவருவதற்கு என் வாழ்த்துக்கள். மருத்துவக் கட்டுரைக்கு பேச்சு வழக்கை தேர்ந்தெடுத்தது நன்று. சோர்வைத் தூண்டாமல் மேலும் படிக்க ஆர்வத்தை ஏற்படுத்துகிறது.
எனக்கு தலைவலி (அடிக்கடி அல்ல அவ்வபோது) வருகிறது. வந்துவிட்டால் இரண்டு நாட்கள் தொந்தரவு கொடுக்காமல் செல்வதில்லை. ஆகையினால், தலைவலி வந்த உடன் என் தாயின் எச்சரிப்பையும் பொருட்படுத்தாமல் நிவாரண மாத்திரைகளை விழுங்குகிறேன்.
தலைவலி வந்தால் அதனை உடனே நிவர்த்தி செய்ய என்ன வழி? தலைவலியே வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
பதிலுக்காக காத்திருக்கிறேன்...
Interesting information. Thank you for sharing them. :-)
மிதுன்! வணக்கம்!
முதலில் உங்க பாராட்டுக்கு நன்றீங்க! சரி உங்க கேள்விக்கு வர்றேன்.
இயற்கை மருத்துவம் என்பது, Alopathy Medicine போல இல்லீங்க! அது நம்ப வாழ்வியல் முறையோடவே கூட ஒத்து போகிற விஷயம். இயற்கை மருத்துவத்துவத்தை Holistic Approachன்னு சொல்றாங்க. நாம எப்பவெல்லாம் ஆரோகிய பாதையில இருந்து தவர்றோமோ அப்ப கண்டிப்பா நோய் நம்ம தாக்குங்க.
கண்டுபிடிங்க! நீங்க என்னவெல்லாம் ஆரோகியம் இல்லா வாழ்க்கை முறை வெச்சிருக்கீங்கன்னு. அதிகமா டீ, காபி குடிக்கறது, சிகரெட் பிடிக்கறது, போதுமான அளவு உறக்கம் இல்லாம இருக்கறது, மலச்சிக்கல், போதுமான அளவு பச்சை காய்கறீங்க, பழங்கள் சேர்க்காத உணவு, அதிகமான அளவு மைதாவில் செயத பொருட்களான, கேக், பிஸ்கேட்ஸ், பப்ஸ் சாப்பிடறது, அதிகமான நேரம் கம்ப்யூட்டரில வேலை செய்றது, இப்படி பல காரணங்கள் இருக்கலாம்.
விரிவான தகவல்களை உங்க ஈமெயிலுக்கு அனுப்பி இருக்கேன். படியுங்க. ஏதாவது சந்தேகம் இருந்தா தொடர்பு கொள்ளுங்க!
@Chitra: சித்ரா! நீங்க வந்ததுக்கு நன்றி! உங்க பாராட்டுக்கும் தான்.
வாங்க பங்காளி... எப்படி இருக்கீங்க... நல்ல தொடக்கம்... உங்களுக்கு நல்ல கிரியேட்டிவிட்டி... தொடர்ந்து கலக்குங்கள்... கூடிய விரைவில் பிரபல பதிவர்கள் வரிசையில் சேர வாழ்த்துக்கள்...
@philosophy prabhakaran: தலைவரே! உங்கள் பாராட்டுகளுக்கும், வாழ்த்துக்களுக்கும் ரொம்ப நன்றீங்க!
நீங்க சொல்வதெல்லாம் நூத்துக்கு நூறு உண்மைதான், மறுப்பதற்கில்லை. ஆனால் ஒரு சில விஷயங்களையும் இங்கு கவனிக்க வேண்டியிருக்கிறது. நாம் உண்ணும் உணவில் செயற்கை உரங்கள் மற்றும் பூச்சி மருந்துகளால் பாதிக்கப் பட்டு விஷத் தன்மை நிறைந்திருக்கிறது. இவற்றைத் தின்று எங்கே ஆரோக்கியமாக இருக்க முடியும்? இயற்கையாக விளையும் பொருள் எல்லோருக்கும் கிடைப்பதில்லை, உற்பத்தி அளவும் மிகக் குறைவு. முன்பு போல காய்ச்சல் வந்தால் தானாகவே சரியாகிவிடும் என்று சும்மாயிருக்க முடியாது, அதுவே பன்றிக் காய்ச்சலாக [இந்த மாதிரி இன்னும் சில வைரஸ்கள் உள்ளன] இருந்து உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று உரிய மருந்துகளை உட்கொள்ளா விட்டால் ஆளே காலி. விபத்துகள் ஏற்பட்டு பலத்த காயமடைந்தால் ஆங்கில மருத்துவத்தை விட்டால் வேறு வழியே இல்லை.
@Jayadeva: ///நாம் உண்ணும் உணவில் செயற்கை உரங்கள் மற்றும் பூச்சி மருந்துகளால் பாதிக்கப் பட்டு விஷத் தன்மை நிறைந்திருக்கிறது. இவற்றைத் தின்று எங்கே ஆரோக்கியமாக இருக்க முடியும்?///
நீங்க சரியாத்தான் சொல்றீங்க. பாதிப்பு கொஞ்சம் இருக்கத்தான் செய்யும். ஆனா முழுக்க நம் உடலுக்கு ஏத்த மாதிரி இயற்கை வாழ்வியல் முறைகளை கடைபிடிச்சோம்னா, அந்த பாதிப்ப கூட இல்லாம ஆக்கிடலாம். உதாரணத்துக்கு நீங்க சொல்றீங்க இல்ல, பல வைரஸ் காய்ச்சல் வர்றதுன்னு. வைரஸ் காய்ச்சல் வர்றதுக்கு மூல காரணம், நம்ப உடம்புல வெளியேற்றபடாத கழிவுகள் தேங்குறது தான். அந்த கழிவுகள் தான் வைரஸ்கள் வளர காரணமா இருக்கு. உடம்புல எந்த ஒரு கழிவும் தேங்கவில்லைன்னா நாம சுத்தமில்லாத தண்ணியை குடிச்சாலும் நம்மை வைரஸ் பாதிக்காது.
விபத்துக்கள் ஏற்பட்டா கண்டிப்பாக ஆங்கில மருத்துவ சிகிச்சை எடுத்துகொள்ளத்தான் வேண்டும். விபத்துகள் செய்ற்கையா வர்றது. உடல்ல இருந்து இரத்தம் கொட்டினால் கண்டிப்பாக உடனே இரத்தம் ஏற்றி தான் ஆக வேண்டும். ஆனா வேற எல்லா நோய்களும், நாம இயற்கைக்கு முரணா நடக்கறதால ஏற்படுதுங்க. நாம திரும்பவும் இயற்கை முறைக்கு திரும்பிட்டா அந்த நோயிலிருந்து விடுதலை கிடைச்சுடுங்க. நிறைய தகவல்கள் இணையத்தில இருக்கு. படியீங்க ஜெயதேவா!
உங்க கருத்து நன்றீங்க!
Post a Comment
பங்காளி! சரக்கு எப்படி? விக்குமா... விக்காதா...??? கொஞ்சம் சொல்லிட்டு போங்க!!!