பன்னீர் தெளிக்கிறோமில... ப்ளீஸ்... கொஞ்சம் தலை குனியுங்க...

வணக்கம் பங்காளீ! வாங்க, சவுக்கியங்களா? நம்ம வலைபதிவு பக்கம் வந்ததுக்கு நன்றீங்கோ...Get this Widget

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே! என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி! நண்பர்களே!

மனிதர்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் சிந்தனைகள், இங்கு சிதறிகிடக்கிறது. படித்து பார்த்து உங்கள் கருத்துக்களை இடவேண்டுகிறேன்!

தொடர்ந்து, இந்த வலைபதிவுக்கு உங்களின் ஆதரவை தாருங்கள்!!! நன்றி! தொடர்ந்து வருக!!!

இந்த நாள், உங்களுக்கு, இனிய நாளாக அமைவதாக!!!

பாசகார பங்காளி கூட்டமுங்க! நீங்களும் கூட வாறீகளா?

16 Aug 2010

பதினாறும் பெற்று..என்னது பதினாறும் பெற்றா!

அப்பு! எல்லோரும் எப்படி இருக்கீங்க, சௌக்கியம் தானே?

முதல் பதிவுக்கு நீங்க கொடுத்த ஊக்கத்துக்கும், உற்சாகத்துக்கும், வரவேற்புக்கும் ரொம்ப ரொம்ப நன்றீங்க! நீங்க எல்லோரும் எல்லா வளமும் பெற்று நலமா வாழனுங்க! 

இப்போ எத பத்தி பேச போறேன்னா,  மனிஷனுக்கு எல்லா செல்வங்களும் வேணுமப்பா. எங்க பெரியவங்க காலத்தில எல்லாம், பதினாறும் பெற்று பெறு வாழ்வு வாழ்கன்னு வாழ்த்துவாங்க. அந்த வாழ்த்துக்குள்ள நிறைய அர்த்தம் இருந்தது. அதை சரியா புரிஞ்சுக்காம, காமடி செய்றதா நினைச்சுகிட்டு, நம்ம சினிமா காமடியன்ஸ், பதினாறு குழந்தைகளை பெத்துகிட்ட பின்னாடியும் எப்படி பெறு வாழ்வு வாழறதுன்னு காமடி செய்வாங்க.

பதினாறு செல்வம்ன்னா என்னன்னன்னு முதல்ல தெரிஞ்சுகலாம் அப்பு. அவை எதுன்னா,
1.    கல்வி
2.    புகழ்
3.    வலிமை
4.    வெற்றி
5.    நன் மக்கள்
6.    பொன்
7.    நெல்
8.    நல்லூழ் (அதிர்ஷ்டம்)
9.    நுகர்ச்சி
10. அறிவு
11. அழகு
12. பொறுமை
13. இளமை
14. துணிவு
15. நோயின்மை
16. வாழ்நாள்

பங்காளி! நல்ல உடல் ஆரோகியம் வேணும். அதனோடு கூட மன ஆரோகியமும் வேணும்.

இந்த பதினாறு செல்வங்கள்ல நான் தலையானதா எதை நினைக்கிறேன்னா உடல் நலனும், மன நலனும். மற்ற செல்வங்கள் நம்மோட இருந்தா கூட, இந்த ரெண்டும்  நம்பக்கிட்ட இல்லன்னா, எந்த செல்வத்தின் பயனையும் அனுபவிக்க முடியாது. என்ன நான் சொல்றது சரிதானே அப்பு?

உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்..அச்சமில்லை! அச்சமில்லை!! அச்சமென்பதில்லையே!!!
உங்களோட ஆசியோடு இந்த விஷயத்தை தொடர் பதிவா எழுதலாம்னு இருக்கேன். என்னப்பு சொல்றீங்க? உங்களுக்கு சம்மதம் தானே?

அப்பு, நான் கிளம்பறதுக்கு முன்னாடி, நம்ப எல்லோரோட மனசுக்கு பிடிச்ச பாரதியார் என்னா சொல்றார் பாருங்க!

ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா
உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா வா
களி படைத்த மொழியினாய் வா வா வா
கடுமை கொண்ட தோளினாய் வா வா வா
தெளிவு பெற்ற மதியினாய் வா வா வா
சிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா
எளிமை கண்டு இரங்குவாய் வா வா வா
ஏறு போல் நடையினாய் வா வா வா 

பார்தீங்களா! நல்ல உடல்நலனை வரவேற்கிற மாதிரி, என்னா தெளிவா சொல்றார். கவிதை சம தூளில்ல! சரி, உங்களுக்கு ஒரு கேள்விங்க. நான் சொல்றேன் "நோய் நமக்கு நன்பன்னு" இது சரியா? தவறா? எங்கே பதில் சொல்லுங்க! யோசியுங்க! நல்லா யோசிச்சு பதில் சொல்லுங்க!

உங்க பதில பின்னூட்டத்தில இடுங்க. நாம எல்லோருமே ஆரோகியமா இருக்கனும்னு ரொம்ப மனப்பூர்வமா விரும்பரேனுங்க. 

ஓட்டு போடுங்க மகராசா! ஓட்டு போடுங்க மகாராணி! (அவங்களை கேட்கலன்னு கோவிச்சிக்க போறாங்க)

நன்றிங்க
வரேனுங்க
உங்க...உறவுகாரனுங்க...அப்பு


    

11 மேதைங்க இதபத்தி என்ன சொன்னாங்கன்னா...:

Srividhya R said...
This comment has been removed by the author.
Srividhya R said...
This comment has been removed by the author.
செல்வா said...

///உங்களோட ஆசியோடு இந்த விஷயத்தை தொடர் பதிவா எழுதலாம்னு இருக்கேன். என்னப்பு சொல்றீங்க? உங்களுக்கு சம்மதம் தானே?///
நாங்க சொன்னா மட்டும் நீங்க நிறுத்தவா போறீங்க ..சரி சரி தொடருங்க ..??!!??

Unknown said...

“பதினாறும் பெற்று பெறு வாழ்வு வாழ்க

என்னது நானு யாரா? said...

@Altruist: உங்களை Followerஆ இணைச்சு கிட்டதுக்கு நன்றீங்க! உங்க வலைபதிவுக்கு வந்திருந்தேன். நல்லா தான் எழுதறீங்க அம்மணி! உங்களின் எழுத்து சேவையை தொடருங்கள்!

என்னது நானு யாரா? said...

@ப.செல்வக்குமார்: வாங்க பங்காளி! நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லலியே! சரி விடுங்க அப்பு! நானே பதில் சொல்லிடறேன்.

என்னது நானு யாரா? said...

@கே.ஆர்.பி.செந்தில்: அண்ணா! உங்க வாழ்த்துக்கு நன்றீங்கோ! உங்க "பணம்" பதிவ பார்தேன். ரொம்ப அருமையா எழுதி இருக்கீங்க. நான் உங்க விசிறி! Usha வா இல்ல Crompton Greaves ஆன்னு கேட்க கூடாது சொல்லிபுட்டேன். ஆமா!

prabhadamu said...

"பதினாறும் பெற்று பெறு வாழ்வு வாழ்க"

என்னது நானு யாரா? said...

@prabhadamu:

///"பதினாறும் பெற்று பெறு வாழ்வு வாழ்க"///

உங்க ஆசிர்வாதத்துக்கு நன்றீங்க!!!

cheena (சீனா) said...

அன்பின் வசந்த்

பதினாறும் பெற்று பெரு வாழவு வாழ வாழ்த்துகிறேன். தொடர்க நினைத்த செயலை.

நல்வாழ்த்துகள் வசந்த்
நட்புடன் சீனா

என்னது நானு யாரா? said...

@cheena (சீனா): ஒரே நாளில் என்னுடைய பல பதிவுகளையும் படித்து, எல்லா பதிவுகளிலும் கருத்தை இட்டு சென்று உள்ளீர்கள். உங்கள் அன்பு என்னை திக்குமுக்காட செய்கிறது.

உங்களின் வாழ்த்துக்களுக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி
நண்பரே!

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

Post a Comment

பங்காளி! சரக்கு எப்படி? விக்குமா... விக்காதா...??? கொஞ்சம் சொல்லிட்டு போங்க!!!