பன்னீர் தெளிக்கிறோமில... ப்ளீஸ்... கொஞ்சம் தலை குனியுங்க...

வணக்கம் பங்காளீ! வாங்க, சவுக்கியங்களா? நம்ம வலைபதிவு பக்கம் வந்ததுக்கு நன்றீங்கோ...Get this Widget

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே! என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி! நண்பர்களே!

மனிதர்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் சிந்தனைகள், இங்கு சிதறிகிடக்கிறது. படித்து பார்த்து உங்கள் கருத்துக்களை இடவேண்டுகிறேன்!

தொடர்ந்து, இந்த வலைபதிவுக்கு உங்களின் ஆதரவை தாருங்கள்!!! நன்றி! தொடர்ந்து வருக!!!

இந்த நாள், உங்களுக்கு, இனிய நாளாக அமைவதாக!!!

பாசகார பங்காளி கூட்டமுங்க! நீங்களும் கூட வாறீகளா?

25 Aug 2010

ஆப்பிளை கூட தோல் சீவி சாப்பிடற ஜனங்கப்பா!


ஆப்பிளை கூட தோல் சீவி சாப்பிடற ஜனங்களை பாத்திருக்கியா பங்காளி? அவங்கெல்லாம் வேத்து கிரகத்தை சேந்தவங்களான்னு ஒரு சந்தேகம்பா எனக்கு!  

அவ்வளவு நாசுக்காப்பா அவங்களெல்லாம்? சாதரண ஆப்பிள் தோலை கூட மென்னு சாப்பிட்டு ஜீரணிக்க முடியலையே இவங்களால! இது என்னான்னு கேட்டா, இதுக்கு பேரு Fashion னாமா!

கவர்ச்சியான பகைவன் நமக்கு! யாருன்னு தெரியுதா..???
ஆனா ஆட்டு குடல்கறி, தலகறின்னு மென்னு முழுங்குறாங்க! எலும்பை கூட விட்டுவைக்கிறதில்ல. கடிச்சு துப்பறாங்க! இதெல்லாம் மட்டும் எப்படிங்க ஜீரணமாகுது இவங்களுக்கு?

ஆப்பிள் பழத்தோட தோல்ல தான் அதிகமா நார் சத்து இருக்குங்குற செய்தியை கூட சொல்லி கொடுக்காத, படிப்போட விளைவு தான்பா இதெல்லாம். பெரியவங்க சொல்றது எதையும் கேட்கிறதில்ல; சொந்தமாவும் அறிவை தேடி வளர்த்துகுறதில்ல. என்னா நகாரீகமோ இது! போ பங்காளி!

உங்களுக்கு ஒன்னு தெரியுமா? நாம்ப என்ன வேலை செய்றோமோ, அதுக்கு தகுந்த மாதிரி தான் உணவு பழக்கம் இருக்கனுங்க. ஆபிஸுக்கு போய், சும்மா எழுதற வேலை செய்றவரு, எளிய உணவு - வேகவெச்ச உணவு, பழங்கள், காய்கறி சாலட் சாப்பிட்டா போதுமுங்க!

அதே கடின உடல்லுழைப்பு ஆசாமிங்கன்னா, புரத சத்து, கொழுப்பு சத்து இருக்கிற உணவை, எவ்வளவு உடல் சக்தி செலவழியுதோ அதுக்கு தகுந்த மாதிரி சாப்பிடலாம்.

ஆனா நம்ப ஐயாக்களும், அம்மாக்களும் உடல்சக்தி செலவழியிற மாதிரி வேலை எதுவும் செய்யலன்னா கூட, வேலாவேலைக்கு கொழுப்பு அதிகம் இருக்கிற அசைவ உணவா போட்டு தாக்குறாங்க!

செலவழிக்க பணம் இருக்கு! வருஷத்தில அதிக முறை, டாக்டருங்களுக்கு, மொழி பணம் கொடுக்கிற அளவுக்கு பெரிய மனசு இருக்கு, அப்புறம் அவங்க எதுக்கு கவலை படனும்னு கேட்கறீங்க. பல லட்சம் செலவு செஞ்சி படிச்ச, டாக்டருங்களோட புழைப்பு எப்படிப்பா ஓடும்ன்னு வேற கேட்கறீங்களா! டாகடருங்க மேல உங்களுக்கு இருக்கும் கரிசனத்தை பாராட்டாம இருக்க முடியாது.

ஆனா கைக்காசும் கொடுத்து நம்ப உடம்பை கெடுத்துகலாமான்னு தான் சொல்றேன் பங்காளி!

ஆனா நீங்க சொல்றதும் சரிதான். நான் என்னா செஞ்சும் என் உடம்பை கெடுத்துப்பேன்னு சொல்றவங்க கிட்ட நாம என்ன சொல்லமுடியும்பா? பட்டா கூட இவங்களுக்கு புத்தி வரமாட்டெங்குது. திரும்ப திரும்ப ஒரே பள்ளத்தில, கண்ண திறந்துகினே விழுவேன்னு சொல்றவங்க! செம்மறி ஆட்டுமந்த கூட்டமப்பா!

சரி விடு! நம்ப கதைக்கு வரலாம். இயற்கை மருத்துவத்தோட சில முக்கியமான விஷயங்களை தொடர்ந்து பாத்திட்டு வர்றோமில்ல. சரி போன பதிவோட தொடர்ச்சியை இப்போ பார்போம்மா?     

ஐந்தாவது முக்கிய விஷயம்: இயற்கை மருத்துவத்தில நோயை குணபடுத்த எந்த ஒரு முயற்ச்சியும் செய்ய மாட்டாங்க! அதுக்கு மாறா, நோயாளியையே முழுசா குணமாக்குவாங்க!

அதாவது நோயோட அறிகுறிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டாங்க! மாடு முன்னால நடந்தா, அதனோடு பூட்டபட்டிருக்கிற வண்டியும் முன்னாடி தானே நகறும். அந்த டெக்னிக்கை தான் இங்கேயும் Follow பண்றாங்க. ஆங்கிலத்தில இதை Holistic Approach -ன்னு சொல்லுவாங்க!

நோயோட அறிகுறி எதுவா இருந்தாலும் சரி அதுக்கு மருத்துவ சிகிச்சை எல்லாம் ஒன்னே தான். இன்னேரம் நீங்க கண்டுபிடிச்சி இருப்பீங்க. உடம்புல இருக்கிற எல்லா வாசல்கள் மூலமா, உடம்பு குள்ளே தேங்கிவிட்ட கழிவுகளை வெளியேத்துகிற முயற்ச்சி தான் செய்வாங்க.

முதல்ல அஹிம்சா எனிமா (அப்போ ஹிம்சை எனிமா கூட இருக்கா?!! இருக்காவா, இருக்கு பங்காளி, அடுத்த பதிவில இதபத்தி தான் பேசலாம்னு இருக்கேன்) பயன்படுத்த செய்வாங்க. மலம் வெளியேறி, அதன் மூலமாவே உடம்புல தங்கிவிட்ட முக்கால் வாசி கழிவு பொருட்கள் வெளியேறிடும்.

அடுத்த சிகிச்சை முறை, வயித்துக்கு ஓய்வு கொடுப்பாங்க. புரியலியா பங்காளி! அதாவது உபவாசம். பல ரகமான உபவாசம் இருக்குங்க. Dry Fasting (வெறும் உபவாசம்), Water Fasting (நீர் உபவாசம்), Juice Fasting (பழரச உபவாசம்)

மீதி சூரிய குளியல், வாழையிலை குளியல், நீராவி குளியல்ன்னு பல முறைகள் பயன்படுத்தி, தோல் துவாரங்கள் வழியா வேர்வை சுரப்பிகள் அடைப்பட்டு இருக்கிறதை சரிசெய்வாங்க. (எல்லா முறைகளுக்கும் தனி தனி பதிவு, படங்களோடு போடறேன் பங்காளி)

கண் கழுவும் கப், மூக்கு குவளை, உப்பு நீர் குடிக்க வைச்சி வாந்தி எடுக்க வைக்கிறதுன்னு எல்லாம் கழிவுகள் நீங்கிற சிகிச்சை முறைகள் தான் செய்வாங்க.

யோகாசனம் பிராணயாமம் முறைகளை கூட சேக்கிறதால ஒரு முழுமையான சிகிச்சை முறை நோயாளிக்கு (Holostic Approach) கிடைக்குது. அதனால எந்த மாதிரி நோயும், எந்த தீவிர நிலையில இருந்தாலும் கண்டிப்பா இதன் மூலமா குணம் நிச்சயம். கெமிகல்ஸ் எந்த ரூபத்திலேயும் நம்ப உடம்புகுள்ள போக அனுமதிக்க மாட்டாங்க.  

நம்ப உடம்போட நோய் எதிர்க்கும் சக்தியை உசுப்பி விடறதுக்கு தான் இதெல்லாம் செய்றது. நோய் எதிர்க்கும் சக்தி, நல்ல நிலையிக்கு திரும்பின பின்னாடி, நோயை தீர்க்கிற வேலையை, நம்ப உடம்பே பாத்துக்கும்.

இந்த முறையில செய்ற சிகிச்சை எல்லாம், உடம்போட குணபடுத்திற சக்திக்கு ஒத்தாசை செய்றது தான். அதனால கத்தி வச்சி உடம்பை அறுத்து கூறு போடற கதையெல்லாம் கிடையாது.

மௌன புரட்சியா பல தீராத நோய்களை குணமாக்குறாங்க அப்பு! செலவும் குறைவு! நம்ப காந்தி தாத்தா பரிந்துரைச்ச முறை.

உங்களுக்கெல்லாம் இப்ப நம்பிக்கை வந்திருக்கும்ன்னு நினைக்கிறேன்.

அப்பு! மறக்காம ஓட்டு போடுங்க! இந்த மருத்துவ முறையை நம்ப ஜனங்க கிட்ட பிரபளமாக்கிடலாம்!

முந்தைய பதிவுகளுக்கு ஓட்டுபோட்டு பதிவுகளை பிரபளமாக்கிய எல்லோருக்கும் நன்றீங்க!

மறுபடியும் சந்திக்கலாமுங்க! நிறைய சிந்திக்கலாமுங்க!! வரேனுங்க!!!
  

45 மேதைங்க இதபத்தி என்ன சொன்னாங்கன்னா...:

கருடன் said...

மக்கா நல்லாதான் சொல்லி இருக்க. ஆனா வறுத்த கோழி, ஆடு, ஆடு குழம்பு, கோழி குழம்பு, பிறை, சுக்க, குருமா, கீம,பொறியல் (இன்னும் நிறய இருக்கு) சாப்பிடலன நான் செத்து போய்டுவேன்....

அருண் பிரசாத் said...

ரைட்டு

Unknown said...

மாம்பலம் சந்நியாசி கிருஷ்ண யோகம் அவர்கள் இலவசமாக இதனை சொல்லித்தருகிறார்கள் ....

என்னது நானு யாரா? said...

@TERROR-PANDIYAN(VAS): வாரத்துக்கு ஒரு முறை சாப்பிடுங்க அப்பு! ருசியும் முக்கியம் தான். என்னா பண்றது?

மனுஷன் 2 இஞ்ச் நாக்குக்கு அடிமை. ஆனா நாம நோயில்லாம ஆரோகியமா இருக்கறதும் நமக்கு முக்கிய இல்லையா?

என்னது நானு யாரா? said...

@அருண் பிரசாத்: நண்பா! வந்ததுக்கு நன்றிப்பா! அதிகான ஆணின்னா அதெல்லாம் பிடிங்கிட்ட பின்னாடி வந்து கருத்து சொல்லுப்பா!

வெறும் ரைட்டுன்னு சொன்னா, ரஜினி மாதிரி நீங்களும் பஸ் கண்டக்டர் ஆயிடலாம்ன்னு பாக்கிறீங்களா?

பஸ் கண்டக்டர் ஆயிட்டு சினிமால நுழைஞ்சி அப்புறம் சூப்பர் ஸ்டாராயிடலாம்னு கனவாப்பா?

Chitra said...

Interesting information. Thank you, Sir.

////ஆப்பிள் பழத்தோட தோல்ல தான் அதிகமா நார் சத்து இருக்குங்குற செய்தியை கூட சொல்லி கொடுக்காத, படிப்போட விளைவு தான்பா இதெல்லாம்.////
In an organic fruit, it is not a problem to eat the skin. But over here, most of the time, to make the apple look good with bright red color, it is color treated with Red #40
whenever you have time, please read:
http://en.wikipedia.org/wiki/Allura_Red_AC

rajan said...

வணக்கம் பங்காளி இன்னிக்கு தான் முதல் தடவிய வரேன் , எல்லாத்தையும் படிச்சிட்டு வரேன் , எனக்கு ஒரு சந்தேகம் , சொத்த பல் அயிட்ட டாக்டர் Root canal செய்ய வேண்டும் என்று சொல்லரு , இயற்கை மருத்துவத்தில் இதற்கு திர்வு உண்டா ?

என்னது நானு யாரா? said...

@கே.ஆர்.பி.செந்தில்: அண்ணா! வாங்க! நீங்க சொன்ன மாதிரி நல்ல இதயங்கள் இருக்கிறதால தான் இப்போ கூட மழை பெயிது.

பதிவர்களின் பேரில் உங்களின் ஆர்வம்! அடடா! என்ன ஒரு விந்தை மணிதர் அண்ணா நீங்க!

சௌந்தர் said...

ஆப்பிள் அப்படியே சாப்பிடுறோம் ஆனா இந்த கோழி ஆடு இது சாப்பிடாம இருக்க முடியாதே....நண்பா

என்னது நானு யாரா? said...

@Chitra: அக்கா வாங்க! நீங்க கொடுத்த லிங்கில போய் படிச்சேன். இது கொடுமைங்க அக்கா! மனுஷன் காசுக்காக என்னவெல்லாம் செய்ய துணியறான்.

இயற்கை விவசாயத்தில விளைந்த பொருட்களை தான் நாம சாப்பிடனும் அக்கா! அது கொஞ்சம் விலை அதிகமானலும், அது தாங்க்கா உடம்புக்கு நல்லது!

என்னது நானு யாரா? said...

@சௌந்தர்: வாங்க நண்பா! நீங்க சொல்றது சரி தான். நாக்க கட்டுபடுத்த தெரிஞ்சா, சாதரண மனுஷ நிலையில இருந்து ஞான நிலைக்கு முன்னேறி போயிடுவான் மனுஷன்.

அந்த நிலைக்கு தான் நாம போயாகனும். அதுவரை கொஞ்ச கொஞ்சமா நம்ப ருசிக்காகவும் திணி இடவேண்டியது தான். ஆனா அதோட அளவை பத்தி ஒரு எண்ணம் நம்ப கிட்ட எப்போவுமே இருக்கனும்.

துளசி கோபால் said...

சில நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் ஆப்பிள்களைக் கட்டாயம் தோல்சீவித்தான் சாப்பிடணும். சீக்கிரம் கெடாமல் இருக்கவும் பளபளப்பாகக் கண்களை கவர்ந்து இழுக்கவும் ஒருவித மெழுகைப்பூசி அனுப்பறாங்க.

ஆனால்............. நியூஸிலாந்து நாட்டிலிருந்து வரும் வகைகளை தைரியமாத் தோலோடு சாப்பிடலாம். சும்மாக் கழுவிட்டு ஒரு கடி:-)

நேரம் கிடைச்சால் இங்கே பாருங்க.


http://thulasidhalam.blogspot.com/2008/10/blog-post_06.html

என்னது நானு யாரா? said...

@rajan: ///சொத்த பல் அயிட்ட டாக்டர் Root canal செய்ய வேண்டும் என்று சொல்லரு , இயற்கை மருத்துவத்தில் இதற்கு திர்வு உண்டா ?///

உங்க முதல் வருகைக்கு நன்றி பங்காளி! உங்க கேள்விக்கு பதில் என்னான்னா, கண்டிப்பா இதற்கு தீர்வு உண்டு. இயற்கை மருத்துவத்தில நோய் ஒன்னு தான். ஆங்கில மருத்துவத்தில நோய்கள் 4800 -க்கும் மேல வகை படுத்தி வைச்சிருக்காங்க.

பதிவுல சொன்னது போல, நோயோட அறிகுறிக்கு, இயற்கை மருத்துவத்தில சிகிச்சை கொடுக்க மாட்டாங்க! நோயாளியோட நோயை போக்க, உடம்பில தானா இருக்கிற நோயை குணமாக்குற சக்திக்கு ஊக்கம் கொடுக்கிறத வேலையை தான் செய்வாங்க.

இயற்கை மருத்துவர் கிட்ட உங்க நிலைமையை பத்தி பேசுங்க. நிச்சயம் தீர்வு தருவாரு!

ஹுஸைனம்மா said...

//சாதரண ஆப்பிள் தோலை கூட மென்னு சாப்பிட்டு ஜீரணிக்க முடியலையே இவங்களால!//

நம்ம தோட்டத்துல விளைஞ்ச ஆப்பிள்னா ஓ.கே. ஆனா, இப்பல்லாம், பழங்கள், காய்கறிகள் தோல் மேலே பளபளப்புக்கும், கெடாமல் இருக்கவும் ரசாயனங்கள் தடவறாங்களாம். அப்புறம் பழம் மரத்துல இருக்கும்போது, பூச்சிக்கொல்லி மருந்து, உரமருந்துன்னு அடிப்பாங்களே, அதன் தாக்கமும் தோல்லதான் அதிகமாம். அதனால தோலை எடுத்துட்டுச் சாப்பிடுறதுதான் பாதுகாப்பு இப்போ!!

ஹுஸைனம்மா said...

சித்ராவும், துளசி டீச்சரும்கூட இதைச் சொல்லிட்டாங்க போல!! பரவால்ல, திருப்பித் திருப்பிச் சொன்னா மனசுல நல்லா பதியும்!! :-))

என்னது நானு யாரா? said...

@துளசி கோபால்: உங்க வருக்கைக்கும், கருத்துக்கும் நன்றீங்க! நீங்க சொல்றது உண்மை தான். நல்லா கழுவிட்டு, ஒரு 20 நிமிஷம் தண்ணியீல ஊர வைச்சி சாப்பிட்டா அந்த மாதிரி பூச்சி மருந்து பாதிப்பில இருந்து விடுபடலாம்னு சொல்றாங்க.

எதுக்கு ரிஸ்க்ன்னு நினைகிறவங்க, கண்டிப்பா இயற்கை விவசாய முறையில வளர்க்கபடுகிற காய்கறி பழங்களை சாப்பிடறது தான் சிறந்தது.

எல்லோரும் இயற்கை விவசாயத்தை ஆதரிச்சோம்னா விலையும் கூட குறையும் இல்லைங்கிலா? உடல்நலத்துக்கும் நல்லது!

உங்க பதிவை பார்த்தேன். அருமையா படங்களோட ஆப்பிளை பத்தி எழுதியிருக்கீங்க. நன்றிங்க!

புதுசா எழுத வந்திருக்கும் எனக்கு உங்க ஆதரவு வேணுமுங்க!

என்னது நானு யாரா? said...

@ஹுஸைனம்மா: உங்க வருக்கைக்கும், கருத்துக்கும் நன்றீங்க!

///இப்பல்லாம், பழங்கள், காய்கறிகள் தோல் மேலே பளபளப்புக்கும், கெடாமல் இருக்கவும் ரசாயனங்கள் தடவறாங்களாம். அப்புறம் பழம் மரத்துல இருக்கும்போது, பூச்சிக்கொல்லி மருந்து, உரமருந்துன்னு அடிப்பாங்களே, அதன் தாக்கமும் தோல்லதான் அதிகமாம்.///

நீங்க சொல்றது நூத்துக்கு நூறு உண்மை தாங்க. பணம் சம்பாதிக்கிற நோக்கத்துக்காக இப்படியெல்லாம் செய்றாங்க!

நாம, இயற்கை முறையில, இயற்கை உரங்கள், ரசாயனம் இல்லா பூச்சிகொள்ளிகள், பயன்படுத்தபட்ட இயற்கை விவசாய விளைபொருட்களை பயன்படுத்தி நம்ப உடல்நலனை பாதுகாக்கனும்னு சொல்றது தான் இந்த வலைபக்கத்தை ஆரம்பிச்ச நோக்கமுங்க.

மனிதன் அடுத்த நிலைக்கு உயரணும்னா, கண்டிப்பா ஆன்மீக பாதைக்கு போகனும். அதுக்கு, இயற்கையோடு சம்பந்தபட்டு வாழனும். அந்த விழிப்புணர்வு கொண்டுவருவது தானுங்க என் நோக்கம்.

அதுக்கு ஏத்தபடி, இயற்கை விவசாயம், இயற்கை வாழ்வியல், இயற்கை உணவு, இயற்கை மருத்துவம், ஆன்மீகம், தியானம், யோகாசனம், பிராணயாமம், எளிய வாழ்வு, எல்லாரிடத்திலும் அன்பு செய்றதுன்னு வாழ பழகனும். இல்லன்னா மூன்றாம் உலக போருக்கு நாம எல்லோரும் தயாரா இருக்கனுங்க!

நன்றீங்க! புதுசா எழுத வந்திருக்கும் எனக்கு உங்க ஆதரவு வேணுமுங்க!

எஸ்.கே said...

ஆப்பிள் தோல் மட்டுமில்ல உருளை கிழங்கு தோலை கூட சாப்பிட மாட்டேங்கிறாங்க!
அப்புறம் Holostic Approach அதுதான் இந்த இயற்கை வைத்தியத்தோட சிறப்பு. உண்மையில் உலகம் முழுவதுமே பலர் இந்த இயற்கை வைத்தியத்தில் இப்போதெல்லாம் ஆர்வம் காட்டுகிறார்கள்.

(வாழையிலை குளியல் புதுசா இருக்கு படிக்கணும்!)

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

தங்கள் பதிவின் சாராம்சத்துடன் ஒத்துப் போகிறேன் ஆனால் ஆப்பிள் உண்ணும் விடயத்தில் யோசிக்கவேண்டும். நீங்கள் உண்ணும் ஆப்பிள் உங்கள் தோட்டத்தில் விளைந்ததானால் கட்டாயம்
அதைத் தோலுடன் உண்பதே! சிறந்த பலன் தரும். ஆனால் கடையில் வாங்கிய ஆப்பிளானால் பஞ்சிப்படாமல் தோலைச் சீவிச் சாப்பிடுவதே உடலாரோக்கியத்துக்கு நன்று.
ஆப்பிள் விரைவில் அழுகாமலும்; அதன் பளபளப்புக் குறையாமலும், நாள்படும் போது தோல் சுருங்காமலும் இருக்க அதன் மேற்பகுதியில் ஒரு வகை மெழுகுப் பூச்சு இடப்படுகிறது.
இப் பூச்சு குடலுக்கு உகந்ததல்ல; அதனால் தோல் சீவுவதே நன்று. இவற்றைப் பூசும் ஆப்பிள்
உற்பத்தியாளர்களுக்கு இது தெரியும்; வியாபாரம் என்று வந்து விட்டால்...ஆரோக்கியம் பின் தள்ளப்படுவது இயல்பு.
சந்தேகமிருந்தால் கடையில் வாங்கும் ஆப்பிளின் தோலை கத்தியால் வழித்துப் பார்க்கவும்.

என்னது நானு யாரா? said...

@எஸ்.கே:///ஆப்பிள் தோல் மட்டுமில்ல உருளை கிழங்கு தோலை கூட சாப்பிட மாட்டேங்கிறாங்க!///

ஆமாங்க நண்பரே! சரியா சொன்னீங்க! நார் சத்து இல்லைன்னா கழிவுகளை வெளியே தள்ளபடாமல் குடலுக்குள்ளேயே தங்கி விடுகிறது. அது தான் நோய்க்கு காரணம் ஆகுது.

அடுத்த பதிவுல மலச்சிக்கல பத்தி தான் எழுதபோறேன். கட்டாயம் படியீங்க!

என்னது நானு யாரா? said...

@யோகன் பாரிஸ்(Johan-Paris):உங்க வருக்கைக்கும், கருத்துக்கும் நன்றீங்க!

///ஆப்பிள் விரைவில் அழுகாமலும்; அதன் பளபளப்புக் குறையாமலும், நாள்படும் போது தோல் சுருங்காமலும் இருக்க அதன் மேற்பகுதியில் ஒரு வகை மெழுகுப் பூச்சு இடப்படுகிறது.
இப் பூச்சு குடலுக்கு உகந்ததல்ல; அதனால் தோல் சீவுவதே நன்று///

அந்த மெழுகு தேன்கூடு மெழுகுன்னு (Honey Bee hive wax) சொல்றாங்க. அது Paraffin Wax இல்லையாம். அதனால எந்த பாதிப்பு வராதுன்னு சொல்றங்க. இந்த மெழுகுக்கு அமெரிக்காவில இருக்கிற FDA நிறுவனமே ஒப்புதல் தந்திருக்காங்கலாம்.

எல்லா நண்பர்களும் கொடுத்திருக்கிற லிங்கை படியீங்கன்னு கேட்டுகிறேன். http://www.arimifoods.com/wax-coating-apple-fruits-healthy-or-unhealthy/

எதுக்கு ரிஸ்க்குன்னு நினைக்கிறவங்க இயற்கை முறையில விளைஞ்ச பழங்களை வாங்கி சாப்பிடலாம். வேற என்ன வழி!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஆப்பிள் விரைவில் அழுகாமலும்; அதன் பளபளப்புக் குறையாமலும், நாள்படும் போது தோல் சுருங்காமலும் இருக்க அதன் மேற்பகுதியில் ஒரு வகை மெழுகுப் பூச்சு இடப்படுகிறது.
இப் பூச்சு குடலுக்கு உகந்ததல்ல; அதனால் தோல் சீவுவதே நன்று///

அடப்பாவிகளா நான் படிச்சிட்டு இந்த கமென்ட் போடுறதுக்குள்ள வேற யாரோ போட்டுடாங்களே...

என்னது நானு யாரா? said...

@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா): என்ன பண்றது பங்காளி! எல்லோருக்கும் ஒரே கருத்து தான் மனசுல வருது!

உண்மை என்னான்னா, Edible Coating தான் செய்றாங்களாம்பா! அதனால பயமில்லையாம். மேல கொடுத்திருக்கிற லிங்கை படியீங்கப்பா!

பெசொவி said...

நல்ல நல்ல விஷயங்களாகச் சொல்கிறீர்கள், வாழ்த்துகள்!

என்னது நானு யாரா? said...

@பெயர் சொல்ல விருப்பமில்லை: உங்க வருகைக்கும், பாராட்டுக்களுக்கும் நன்றீங்க அண்ணா!

வெங்கட் said...

நான் எப்பவும் ஆப்பிளை
கழுவிட்டு., தோலோட தான்
சாப்பிடுவேன்..

இப்ப உங்க பதிவு + Comments
படிச்சப்புறம் நான் குழம்பிட்டேன்..

இனிமே நான் ஆப்பிளை
தோலோட சாப்பிடறதா.?
தோல் சீவிட்டு சாப்பிடறதா..??

என்னது நானு யாரா? said...

@வெங்கட்: ஏன் இந்த சந்தேகம்! மேல குடுக்கிற கோட்டிங் Edible Coating தான்னு சொல்றாங்க. கொடுத்திருக்கிற லிங்க்குக்கு போய் படிச்சீங்க இல்ல?

ஓடுகிற தண்ணியீல (Running Tap Water) கழுவிட்டு சாப்பிடலாம். கொஞ்ச நேரம் தண்ணியில ஊரவெச்ச பின்னாடியும் சாப்பிடலாம். நான் அப்படி தான் சாப்பிட்டு கொண்டு இருக்கேன்.

எனக்கொரு கெடுதலும் வரல. அப்படி பயம்னா இயற்கை விவசாயத்தில விளைஞ்ச காய்கறி பழங்களை வாங்கி சாப்பிட வேண்டியது தான்.

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

நல்ல உபயோகமான பகிர்வு.. அதிலும் அங்கங்கு உங்க நகைச்சுவை டச் நல்லா இருக்கு.. :))

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

நல்ல எழுதுறீங்க.. தொடர்ந்து வளர வாழ்த்துக்கள்.. :-))

Thomas Ruban said...

//அந்த மெழுகு தேன்கூடு மெழுகுன்னு (Honey Bee hive wax) சொல்றாங்க. அது Paraffin Wax இல்லையாம். அதனால எந்த பாதிப்பு வராதுன்னு சொல்றங்க. இந்த மெழுகுக்கு அமெரிக்காவில இருக்கிற FDA நிறுவனமே ஒப்புதல் தந்திருக்காங்கலாம். //

அமெரிக்காவில வேண்டுமானால் தேன்கூடு மெழுகு உபோயோகிப்பார்கள் ஆனால் இந்தியாவில்!!!

//இயற்கை முறையில விளைஞ்ச பழங்களை வாங்கி சாப்பிடலாம். //

இயற்கை முறையில விளைஞ்ச பழங்களா என்று எப்படி கண்டுபிடிப்பது...

இயற்கை முறையில விளைஞ்ச பழங்கள் எங்கு கிடைக்கும்.

பகிர்வுக்கு நன்றி.

என்னது நானு யாரா? said...

@Ananthi: உங்க வருகைக்கும், கருத்து சொன்னதுக்கும் ரொம்ப நன்றீங்க!

உங்கள் பாராட்டுதல்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றீங்க!

தொடர்ந்து பதிவுகளை படிச்சி பாத்து, கருத்து சொல்லி, உங்க ஆதரவை கொடுக்கனுங்க!

Thomas Ruban said...

இங்கு தாய்ப்பால் தவிர மற்ற எல்லாமே கலப்படம் தான்...அதுவும் தாய்ப்பால் கூட தாய் உண்ணும் கலப்பட உணவுப் பொருட்களால் மாறி வாருகிறது என்கிறார்கள்.

என்னது நானு யாரா? said...

@Thomas Ruban: உங்க வருகைக்கும், கருத்து சொன்னதுக்கும் ரொம்ப நன்றீங்க!

///அமெரிக்காவில வேண்டுமானால் தேன்கூடு மெழுகு உபோயோகிப்பார்கள் ஆனால் இந்தியாவில்!!!///

ஆமாம்! இந்தியாவில, உணவில இருந்து மருந்து வரை எல்லாத்திலேயும் கலப்படம் செய்றாங்க! Organic Foods விக்கிற இடங்களுக்கு சென்று வாங்கி கொள்ளலாம். விலை கொஞ்சம் கூட ஆகும். குறைவான Demand மட்டுமே அதற்கு இருப்பதனால்.

///இயற்கை முறையில விளைஞ்ச பழங்களா என்று எப்படி கண்டுபிடிப்பது... ///

அதற்கு தர சான்றுகள் இடபடுகின்றன. அதை வைத்து தான் அவைகளை இனம் காண முடியும். எல்லா பெரிய Super Stores-களிலேயும், இந்த Organic Foods- வென்றே, தனி இடம் ஒதுக்கி இருக்கிறார்கள்.

நன்றியிங்க!

என்னது நானு யாரா? said...

@Thomas Ruban:///அதுவும் தாய்ப்பால் கூட தாய் உண்ணும் கலப்பட உணவுப் பொருட்களால் மாறி வாருகிறது என்கிறார்கள்///

முற்றிலும், அப்பட்டமான உண்மை! அடுத்து வரும் பதிவுகளில், நம் உடம்பில் இருந்து நச்சு பொருட்களை எப்படி நீக்கி கொள்வது என்பதை பற்றி தான் விரிவாக எழுத இருக்கிறேன்.

என்ன செய்வது? நாம் தான் ஜாக்கிரதையாக இருந்துகொள்ள வேண்டி இருக்கிறது!

தொடர்ந்து பதிவுகளை படிச்சி பாக்க உங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன். நீங்க, உங்க கருத்துகளை சொல்லி, உங்க ஆதரவை கொடுக்கனுங்க!

நன்றீயீங்க!

Thomas Ruban said...

உங்கள் விளக்கத்திற்கு நன்றி.

//தொடர்ந்து பதிவுகளை படிச்சி பாக்க உங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன். நீங்க, உங்க கருத்துகளை சொல்லி, உங்க ஆதரவை கொடுக்கனுங்க!//

கண்டிப்பாக ஆதரவு உண்டு நன்றி...

செல்வா said...

///ஆப்பிள் பழத்தோட தோல்ல தான் அதிகமா நார் சத்து இருக்குங்குற செய்தியை கூட சொல்லி கொடுக்காத, படிப்போட விளைவு தான்பா இதெல்லாம்.///
உண்மை தாங்க .. ஆனா சிலபேர் சொல்லிக்கொடுத்தாலும் படிக்கரதில்லையே ..??
//செலவழிக்க பணம் இருக்கு! வருஷத்தில அதிக முறை, டாக்டருங்களுக்கு, மொழி பணம் கொடுக்கிற அளவுக்கு பெரிய மனசு இருக்கு, //
என்னதான் மனசு இருந்தாலும் நம்ம உடம்புதானே கேட்டுப் போகுது. அதுவும் இந்த சர்க்கரை வியாதி மாதிரி ஏதாவது வந்ததுன்னா கஷ்டப்படுறது யாரு ..
//மறுபடியும் சந்திக்கலாமுங்க! நிறைய சிந்திக்கலாமுங்க!! வரேனுங்க!!!//
சீக்கிரம் வாங்க .. காத்திருக்கிறேன் ..நல்ல நல்ல விசயங்கள் தான் செய்யுறீங்க.. தொடர்ந்து வாங்க .. நாங்களும் வரோம் ..

Prathap Kumar S. said...

//சில நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் ஆப்பிள்களைக் கட்டாயம் தோல்சீவித்தான் சாப்பிடணும். சீக்கிரம் கெடாமல் இருக்கவும் பளபளப்பாகக் கண்களை கவர்ந்து இழுக்கவும் ஒருவித மெழுகைப்பூசி அனுப்பறாங்க.//

Well said....
Good post...:))

என்னது நானு யாரா? said...

@ப.செல்வக்குமார்: செல்வா! படிச்சி பாத்து கருத்து சொன்னதுக்கு நன்ற்ப்பா!

@நாஞ்சில் பிரதாப்: கருத்து சொன்னதுக்கும், வாழ்த்து சொன்னதுக்கும் நன்றீங்க!

உங்க ஆதரவை எதிர்பார்கிறேன். தொடர்ந்து படியீங்க!

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

நல்ல பதிவு ...
நாங்களும் பங்காளி ஆயிட்டோம்ல

என்னது நானு யாரா? said...

@மணி (ஆயிரத்தில் ஒருவன்): வாங்க பங்காளி! நம்ப ஜோதியில நீங்களும் ஐக்கியம் ஆயிட்டீங்க போல!

உங்களை வருக! வருகன்னு வரவேற்கிறேனுங்க!

saravanakumar sps said...

நான் ஒரு இதய நோயாளி என்னால் எந்த வேலையும் செய்ய இயலாது உட்கார்ந்து கொண்டே சாப்பிடுவதால் உடம்பு பெருத்து போகிறது எனது உடல் கொழுப்பை குறைக்க எதாவது வழி இருந்தால்தெரியப்படுத்தவும்
saravanakumars28@gmail.com

என்னது நானு யாரா? said...

@saravanakumar sps: ///உடல் கொழுப்பை குறைக்க எதாவது வழி இருந்தால்தெரியப்படுத்தவும்///

இயற்கை மருத்துவத்தை விட்டால் வேறு வழி ஏது? உங்களுக்கு விரிவான பதிலை உங்கள் ஈமெலுக்கு எழுதி அனுப்புகின்றேன். நன்றிங்க!

Jayadev Das said...

இங்க ஆப்பிளை ஏன் தோலோடு சாப்பிட முடியாதுங்கரதுக்கு எல்லா காரணமும் சொல்லிட்டாங்க. அதன் மீது பூசப் படும் மெழுகு எப்படிப்பட்டதுன்னு அதை பூசுபவன் கொடுக்கும் சான்றிதழை ஏற்றுக் கொள்ள முடியாது. அக்மார்க் மாதிரி மூன்றாம் நிறுவனம் [neutral third party] சான்றிதழை கொடுத்தால் நம்பலாம். ஆப்பிள் கதை இப்படி என்றால், வாழப்பழம், மாம்பலம், பப்பாளி போன்றவற்றை பழுக்க வைக்க கார்பைடு கல்லைப் பயன் படுத்துகிறார்கள், இதைத் தின்றால் ஆரோக்கியம் வராது கேன்சர் தான் வரும். பெங்களூரில் இயைக்கை முறையில் விளைவிக்கப்படும் பொருட்கள் எங்கு கிடைக்கும்? விலை, தூரம் இவற்றைப் பொருட்படுத்தாமல் வாங்கிக் கொள்ளத்தயார்.

என்னது நானு யாரா? said...

@Jayadeva: லாப நோக்குக்காக மனிதர்கள், கீழ்தரமான செயல்கள் செய்யவும் துணிகிறார்கள். நாம் தான் நம்ப உடம்பை காப்பாத்திக்க வேணும். இப்ப எழுதி இருக்கிற பதிவு http://uravukaaran.blogspot.com/2010/08/blog-post_28.html -ல இதை பத்தி தான் சொல்லி இருக்கின்றேன். படிச்சி பாருங்க நண்பா!

Organic Food outlets in Bangalore-ன்னு கூகுள்ல தட்டுங்க. நிறைய இடங்களை சுட்டி காண்பிக்கிறது! நன்றி நண்பா!

Unknown said...

nan indruthan ungalin blogs padika thodanginayen.ungalin maruthuvam migavum arumai tholarey............valthukal..........uravukaraa ..........

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

Post a Comment

பங்காளி! சரக்கு எப்படி? விக்குமா... விக்காதா...??? கொஞ்சம் சொல்லிட்டு போங்க!!!