பன்னீர் தெளிக்கிறோமில... ப்ளீஸ்... கொஞ்சம் தலை குனியுங்க...

வணக்கம் பங்காளீ! வாங்க, சவுக்கியங்களா? நம்ம வலைபதிவு பக்கம் வந்ததுக்கு நன்றீங்கோ...Get this Widget

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே! என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி! நண்பர்களே!

மனிதர்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் சிந்தனைகள், இங்கு சிதறிகிடக்கிறது. படித்து பார்த்து உங்கள் கருத்துக்களை இடவேண்டுகிறேன்!

தொடர்ந்து, இந்த வலைபதிவுக்கு உங்களின் ஆதரவை தாருங்கள்!!! நன்றி! தொடர்ந்து வருக!!!

இந்த நாள், உங்களுக்கு, இனிய நாளாக அமைவதாக!!!

பாசகார பங்காளி கூட்டமுங்க! நீங்களும் கூட வாறீகளா?

29 Aug 2010

வாழையிலை குளியலாமே! என்னான்னு பாத்திட்டு வரலாம், வாங்க!!!

வாழையிலை குளியல் - இதுவும் கூட இயற்கை மருத்துவத்தில ஒரு வினோத சிகிச்சை முறை தானுங்க!  Very Effective!

வாங்க அம்மணி! வாங்க ஐயா! வாங்க பங்காளி! கூட்டாளி பசங்களா, எல்லோரும் வாங்க! எல்லோரும் வந்தாச்சா? இன்னைக்கு,  இயற்கை மருத்துவ சிகிச்சை முறையில இந்த வாழை யிலை குளியல் சிகிச்சை முறையை பத்தி தெரிஞ்சிக்க போறோம்.

தொழுநோய், சோரியாசிஸ், வெண்குஷ்டம் போல, எந்த தோல் வியாதி இருந்தாலும், அதிகமா குண்டான ஆளுங்களும், ஊளை சதை ஆசாமிங்களும் இந்த சிகிச்சை செய்யலாமுங்க!



நல்லா சூரிய ஒளி படும்படியான ஒரு இடத்தில மத்தியானம் நேரத்தில, ஒரு பாயை விரிச்சி பெரிய சைஸ் வாழையிலைகளை பரப்பணும். வாழையிலை மேல நோயாளி படுக்கணும்.

உணவு சாப்பிட்டு, குறைஞ்சபட்சம் 4 மணிநேரம் இடைவெளி இருக்கணும். இந்த சிகிச்சைக்கு முன்னாடி, வயிறு நிறைய தண்ணி குடிக்கணும். இது ரொம்ப முக்கியம்! தலைக்கு வேட்டி துணியை தண்ணியில நினைச்சி கட்டிகணும். தலைக்குள்ள தானே மூளை இருக்கு! அது சூடாகாம இருக்கிறதுக்காக இப்படி செய்யனும்பா! இதை செய்யறதுக்கு மறக்காதீங்க!

(அப்போ! மூளை இல்லாத ஆசாமிங்க இந்த மாதிரி கட்டிக்க வேணாமுன்னு சொல்றீகளா?)

(யாருப்பா அது? ஊடால சௌண்டு குடுக்குறது? நல்ல விஷயம் சொல்லும் போது கவனமா கேட்டுகோங்க அப்பு! உங்க கிண்டல் கேலியை அப்புறமா வெச்சிகலாம்! நானும் வந்து கலந்துகிறேன்)

சரி விஷயத்துக்கு வருவோம்!      

இலை மேல முதுகு தரையில படும்படி நல்லா மல்லாக்கா படுக்க வைச்சபிறகு, நோயாளியோட உடம்பு முழுக்க மூடுகிற மாதிரி வாழையிலைகளை கொண்டு மூடி விடணும். இலையோட உள்பகுதி, அதாவது நாம சாப்பிட பயன்படுத்திற பகுதி, அவரோட உடம்புல படும்படி இலையை வைச்சி வாழை நாரால கட்டிடனும்.
                                             நன்றி: http://naturalfoodworld.wordpress.com/

படத்தை பாருங்க! ஏதோ மார்சரில போட்ட பிணம் கணக்கா இருக்கில்ல. மூச்சி விடறதுக்காக சின்ன ஓட்டை மட்டும் போட்டு, அப்படியே அவரை ஒரு அரை மணி நேரம் இருக்கிற மாதிரி விட்டுடணும்.

சொல்ல மறந்திட்டேனே! அவரு உள்ளாடையில மட்டும் தான் இருக்கணும்பா! பக்கத்திலேயே அவரை கண்காணிக்க ஒருத்தரு இருக்கணும்.

அரை மணி ஆயிட்ட பிறகு, கட்டுகளை எல்லாம் அவிழ்த்து, அவரை ரிலீஸ் பண்ணிடனும் தெரிஞ்சகோங்க? (முன்னே பின்ன ஏதாவது, அவரு மேல கோபம் இருந்தா, இதுதான் பழி தீத்துக்க சரியான நேரம்ன்னு, சொல்லி அவரை டீல்ல விட்டுடாதீங்க அப்பு! அது ரொம்ப தப்பு! ஆமா சொல்லிபுட்டேன்!)

அவரை எழுப்பி பாத்தோம்னா, அந்த இலையெல்லாம் தண்ணியா இருக்கும். அந்த அளவுக்கு அவரு உடம்புல இருந்து கெட்ட நீர் வெளிபட்டு இருக்குமுங்க. அவரு உடம்பு கூட, வேத்து கொட்டி, ஏதோ குளிச்சிட்டு வந்தவக மாதிரி இருப்பாரு.

அவரு ஒரு அரை மணிநேரம் நிழல்ல ஓய்வு எடுத்த பின்னாடி பச்சை தண்ணியில குளிக்கணும்.

இந்த யூஸ் செய்த இலைகளை ஆடு மாடுகளுக்கு திங்க கொடுத்திடாதீக! சரியா? அதுல எல்லாம் நச்சு தன்மை இருக்குமுங்க! எல்லாத்தையும் பூமில குழி தோண்டி புதைச்சிடுங்க!

இந்த சிகிச்சை செய்யும் போது யாருக்காவது நெஞ்சு படபடப்பு, அசௌகிரியம் ஏதாச்சும் இருந்ததுன்னு சொன்னா, உடனே அவரை கட்டுயெல்லாம் அவிழ்த்து ரிலீஸ் பண்ணிடுங்க! லேட் பண்ணிட கூடாது.

வாழையிலை வெய்யில்ல படும்போது Photosynthesis, தமிழ்ல அதுக்கு என்னன்னு சொல்லுவாங்க அப்பு? தெரியலியா? எனக்கும் தெரியல, இருங்க! போய் Dictionary -ஐ பாத்துட்டு சொல்றேன்.

ஆங்.. அதுக்கு பேரு ஒளிசேர்க்கையாம்பா! இந்த ஒளிசேர்க்கை நிகழ்ச்சி நடக்கும்போது, Chlorophyll, அதாம்பா பச்சையம்! அது, நம்ப உடம்புல புகுந்து நம்ப உடம்போட நோய் எதிர்க்கிற தன்மையை வலுபடுத்துது. இந்த சிகிச்சை முறையை நோயாளிங்க தான் இல்ல, ஆரோகியமா இருக்கிறவங்களும் மாசத்தில ஒரு முறை செய்யலாமுங்க.

நம்ப தோல்ல இருக்கிற துவாரமெல்லாம் திறக்கபட்டு, கெட்ட நீரெல்லாம் வெளியே போன பின்னாடி, நோயாவது நொடியாவது. நாம ஆரோகியமா வாழ, எந்த டாக்டரும் வேணாம் , கண்டக்டரும் வேணாம்! ஆமாம்! நூறு வயசு வாழறதுக்கு இது க்யாரண்டியான வழிமுறைங்க!

(எதுக்கு நமக்கு நூறு வயசு? எந்திரன்ல ரஜினியும், ஐஸ்சும், நடிச்சத பாத்த பின்னாடி, வாழ்க்கை முடிஞ்சிட்டா கூட பரவாயில்ல, சந்தோஷம் தான்னு சொல்றவங்களா நீங்க?

(அப்போ நீங்க காத்திருங்க! இன்னும் ஒரு மாசத்தில படம் ரிலீஸ் ஆகுதாம்பா)

சரி நீங்க இவ்வளவு தூரம் வந்ததுக்கு நன்றீங்க! நான் எழுதறது எப்படி இருக்குன்னு ஒரு வார்த்தை சொல்லிட்டு போங்க!

இந்த பதிவு பிடிச்சிருந்தா ஓட்டு போட்டு பிரபலமாக்குங்க! உங்க நல்ல செய்கையால மத்தவங்களுக்கும் இந்த தகவல் போய் சேருமில்ல!

சரி அடுத்த தடவை சந்திக்கலாம்! மறக்காம, ஊர்ல இருக்கிற நம்ப சொந்த பந்தங்களை கேட்டதா சொல்லுங்க! வாரேனுங்க!  

42 மேதைங்க இதபத்தி என்ன சொன்னாங்கன்னா...:

Unknown said...

பங்காளி... வாழைஇலை விருந்து பிரமாதம்.

ஆமா இன்னிக்கு குளிசிங்களா இல்ல லீவா...

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

நல்ல தகவல்.......

அருமை.....

என்னது நானு யாரா? said...

@கலாநேசன்:

//ஆமா இன்னிக்கு குளிசிங்களா இல்ல லீவா..//

ஆரோகியம் தானே முதல்ல! அதனால அதுக்கெல்லாம் லீவு கிடையாது.

நீங்க தொடர்ந்து வந்து எல்லா பதிவுகளையும் படித்து பார்த்து, கருத்து சொல்றது இருக்கே! மனசு சந்தோஷத்தில துள்ளுது!

என்னது நானு யாரா? said...

@உலவு.காம்: உலவு நண்பரே! நீங்கள் படித்து பார்த்து பாராட்டியதற்கு நன்றி!

பத்மா said...

ரொம்ப நல்ல தகவல்ங்க
நல்லா எழுதிருக்கீங்க

Ganesan said...

அருமை.. அருமை.. அருமை..

என்னது நானு யாரா? said...

@பத்மா: நன்றீங்க!

@காவேரி கணேஷ்: பாராட்டுக்கு நன்றி!

@அருண் பிரசாத்: நன்றி நண்பா!

வெங்கட் said...

நல்ல பதிவு..!!
வீட்ல கூட Try பண்ணலாமா..?
எதுவும் தப்பு வந்துடாதே..?

என்னது நானு யாரா? said...

@வெங்கட்: தாரளமா வெங்கட்!

வீட்டில கூட Try செய்யலாம்! ஆனா சொன்ன விஷய்ங்கள் படி செய்யணும். நன்றி!

கருடன் said...

Nalla saakku..

என்னது நானு யாரா? said...

@TERROR-PANDIYAN(VAS): நன்றி டெரர் பங்காளி!

ப்ரியமுடன் வசந்த் said...

ஆஹா.. ஆக ஆக ஆஹா தகவலுக்கு நன்றி பாஸ்!

ஜீவன்பென்னி said...

சூப்பர் தகவல் நன்றி தோழரே.

எம் அப்துல் காதர் said...

ஆஹா அருமையான நல்ல பதிவு நண்பரே

நட்புடன் ஜமால் said...

ஹை! நல்லாயிருக்கே!

Nangavaram Sathish said...

புதிய செய்தி. உங்களின் எழுத்து நடை ரொம்ப புடிச்சது.

என்னது நானு யாரா? said...

ப்ரியமுடன் வசந்த்
ஜீவன்பென்னி
எம் அப்துல் காதர்
நட்புடன் ஜமால்
Nangavaram Sathish

பாராட்டிய அன்பு உள்ளங்களுக்கு, நன்றிங்க! உங்க ஆதரவை நீங்க கண்டிப்பாக தொடர்ந்து கொடுக்கணும்.

cheena (சீனா) said...

அன்பின் வசந்த்

இயற்கை மருத்துவம் பற்றிய பதிவு இதென நினைக்கிறேன். அத்தனை இடுகைகளுமே பயனுள்ள மருத்துவ முறைகளாக இருக்கும் என எண்ணுகிறேன். நல்ல முயற்சி - தொடர்க. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

cheena (சீனா) said...

வெங்கட்டு - உனக்கெதுக்கு இந்த சிகிச்சை - அதுவும் வீட்ல - தேவை இல்லப்பா - இதெல்லாம் மூறையாச் செய்யணும் - ஆமா

என்னது நானு யாரா? said...

@cheena (சீனா):

//இயற்கை மருத்துவம் பற்றிய பதிவு இதென நினைக்கிறேன். அத்தனை இடுகைகளுமே பயனுள்ள மருத்துவ முறைகளாக இருக்கும் என எண்ணுகிறேன்.//

ஆமாம் நண்பரே! மக்களுக்கு மருத்துவம் என்றாலே அது ஆங்கில மருத்துவ முறை மட்டும் தான் என்று ஆகிவிட்டது. காந்தி பரிந்துரைத்த மருத்துவ முறை இது என்பதனை தெரிவிக்கவே இவைகளை எழுத ஆரம்பித்திருக்கின்றேன்.

இன்னும் போக போக காந்திய சிந்தனைகளை கூட பதிவில் ஏற்ற உள்ளேன்.

உங்களின் தொடர்ந்த ஆதரவை என் எழுத்துக்களுக்கு தரவேண்டும் என கோருகிறேன்.

///வெங்கட்டு - உனக்கெதுக்கு இந்த சிகிச்சை - அதுவும் வீட்ல - தேவை இல்லப்பா - இதெல்லாம் மூறையாச் செய்யணும் - ஆமா///

வீட்டிலேயே செய்யலாம்! ஆனால் சொன்ன முறைகள் அத்தனையும் தவறாமல் கடைபிடிக்க வேண்டும். இயற்கை மருத்துவத்தின் சிறப்பே எல்லாமே சிக்கல் இல்லாத எளிய முறை என்பது தான்!

நன்றி!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வாழை இல்லை கிடைக்கலைன்னா பிளாஸ்டிக் வாழை இலை எடுத்துக்கலாமா?

சும்மா... ட்ரை பண்ணிடலாம் பங்காளி...

என்னது நானு யாரா? said...

@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா):

//வாழை இல்லை கிடைக்கலைன்னா பிளாஸ்டிக் வாழை இலை எடுத்துக்கலாமா?//

நண்பா! உங்க ஊரில பிளாஸ்டிக் வாழை இலையில ஒளிசேர்க்கை நடக்குதா? அப்படியென்றால் தாரளமாக ட்ரை செய்யலாம்!

செல்ல நாய்க்குட்டி மனசு said...

பக்கத்திலேயே அவரை கண்காணிக்க ஒருத்தரு இருக்கணும்.//

எதுக்கு உள்ளாடையோட ஓடிடாம இருக்கிறதுக்கா?
ஹா, ஹா, சும்மா ஒரு ஜாலிக்கு தான் .
உபயோகமா நிறைய விஷயங்கள் சொல்றீங்க, வாழ்த்துக்கள் !

என்னது நானு யாரா? said...

@நாய்க்குட்டி மனசு:

//எதுக்கு உள்ளாடையோட ஓடிடாம இருக்கிறதுக்கா?//

உங்க நகைசுவையை நான் ரசிச்சேன்! நன்றி!

dearbalaji said...

மழை வந்த என்ன செயிறது அப்பு !

என்னது நானு யாரா? said...

@dearbalaji:

//மழை வந்த என்ன செயிறது அப்பு !//

இது நன்றாக வெய்யில் அடிக்கும் போது தான் செய்ய முடியும். அப்போது தான் உடலில் தங்கிவிட்ட கெட்ட நீர் வெளியே வரும். மழை பெய்யும் நேரத்தில் இதனை செய்ய முடியாது அப்பு!

கேள்வி கேட்டதற்கு, நன்றி மாப்பு!

puduvaisiva said...

பங்காளி நல்ல தகவலுக்கு நன்றி

இதை வீட்டில் மாடியில் செய்யும் போது காக்கா வாழை இலையை கொத்தமல் இருக பாயில் இரு பக்கமும் பாட்டியின் சவுரி முடியை பயன்படுத்தலாமா?

மற்றும் வாழை இலை குளியலை தி.மு.க கட்சியை சேர்ந்தவர்கள் பயன்படுத்தலாமா? இதனால் இலையை பயன் படுத்தியதுக்காக அவர்கள் மீது கட்சியின் உயர்மட்ட குழு ஏதாவது நடவடிக்கை எடுக்குமா? பங்காளி

:-))

என்னது நானு யாரா? said...

@♠புதுவை சிவா♠: ஓஷோ ருபத்தில வந்து நல்ல நகைசுவையை கொடுத்திட்டீங்க பங்காளி!

உங்க நகைசுவை நல்லா இருக்கு!

VELU.G said...

பங்காளி இதோ நானும் வந்திட்டனுங்கோ

ரொம்ப நல்லாயிருக்குங்க வாழையிலை வைத்தியம்

என்னது நானு யாரா? said...

@VELU.G: வாங்க நண்பரே! நம்ப இளைய பட்டாளம் எல்லாம் சேர்ந்து நோயில்லா இந்தியாவை உருவாக்குவோம்!

என்னா கொள்ளை அடிக்கிறாங்க அப்பா! இந்த இங்கலீஷ் மருத்துவத்தை Practice செய்றவங்க!

Riyas said...

நகைச்சுவை கலந்து நல்ல அருமையான தகவல்களையும் சொல்கிறீர்கள்..

உங்கள் தளத்தை பார்த்தவுடன் பின் தொடர்ந்துவிட்டேன்

செல்வா said...

வாழை இலை வைத்தியம் நல்லா இருக்குங்க.
இந்த மாதிரி நல்ல நல்ல விசயங்கள் நிறைய சொல்லுங்க ..

என்னது நானு யாரா? said...

@Riyas:

//உங்கள் தளத்தை பார்த்தவுடன் பின் தொடர்ந்துவிட்டேன்//

நன்றி நண்பா! நம்ம கூட பங்காளியா சேர்ந்திட்டீங்க இல்ல. இனி உங்க வாழ்க்கையில நல்ல மாற்றங்கள் பலவும் நடக்க இருக்குது! வாழ்த்துக்கள்!

என்னது நானு யாரா? said...

@ப.செல்வக்குமார்:

//வாழை இலை வைத்தியம் நல்லா இருக்குங்க.
இந்த மாதிரி நல்ல நல்ல விசயங்கள் நிறைய சொல்லுங்க .. //

உங்கள போல உள்ளவங்க கொடுக்கிற உற்சாகம் தான் என்னை நல்ல எழுத்துக்களை எழுத தூண்டுகோளா இருக்கு!

சரி, இயற்கை வாழ்வியல் முறைகள்ல எதை எதை கடைபிடிக்க ஆரம்பித்து இருக்கே செல்வா?

வெங்கட் நாகராஜ் said...

நல்ல விஷயம். தில்லில வாழை இலையெல்லாம் கிடைக்காது அப்பு! திருச்சி வரும்போது தான்! பார்க்கலாம்! :)

பெசொவி said...

நல்ல பயனுள்ள தகவல்கள், வாழ்த்துகள் நண்பரே!
இதே வாழை இலையை வைத்து விவேக் காமெடி ஞாபகம் வருகிறது!

என்னது நானு யாரா? said...

@வெங்கட் நாகராஜ்:

//தில்லில வாழை இலையெல்லாம் கிடைக்காது அப்பு! திருச்சி வரும்போது தான்! பார்க்கலாம்! :)//

அதனால் என்ன? உபவாசம் Try செய்யுங்க அண்ணாச்சி!

என்னது நானு யாரா? said...

@பெயர் சொல்ல விருப்பமில்லை:

//இதே வாழை இலையை வைத்து விவேக் காமெடி ஞாபகம் வருகிறது!//

இந்த பதிவினால், நீங்க விவேக் காமெடியை ஞாபகப் படுத்திகொண்டீங்களா? எனக்கு மகிழ்ச்சி! அது என்ன காமெடி என்று தனியாக போன் செய்து சொல்லவும்.

Tirupurvalu said...

in rope we have tie the body or we have to use banana naaru ?

என்னது நானு யாரா? said...

@Tirupurvalu:

//in rope we have tie the body or we have to use banana naaru ?//

வாழைநாறு கொண்டு கட்டினால் போதுமானது. கயிறு எல்லாம் தேவை இல்லை நண்பரே!

SIVAM said...

பங்காளி அருமையான விசயம்.......எப்பூடி இப்படி இயற்கை மருத்துவம் பற்றி தெளிவாக எழுதிகீறீர்கள்.... நன்றி தொடரட்டும் தங்கள்.......சேவை....தமிழ் சமுதாயத்திற்கு தேவை....... ராஜசேகரன்..போடி நாயக்கனூர்...

Anonymous said...

nalla karuthu

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

Post a Comment

பங்காளி! சரக்கு எப்படி? விக்குமா... விக்காதா...??? கொஞ்சம் சொல்லிட்டு போங்க!!!