பால் நமக்கு சரியான உணவு இல்லை மக்களே! ஒரு பதிவில, பாலை பத்தி ஒரு கருத்தை சொன்னேன். அந்த பதிவை படிக்கணுமா? இங்கே அழுத்துங்க!
நான் எழுதினதை படிச்சபின்னாடி, பின்னூட்டத்திலும், ஈமெயிலும் இது ஏன்னு? கேட்டு எழுதிபோட்டாங்க நம்ப கூட்டாளிங்க! அவங்களுக்கும், இதோ! இப்போ படிக்க வந்திருக்கிற உங்களுக்கும் என்ன சொல்ல வர்றேன்னா...
அதுங்க எல்லாம் என்ன பாவம் செஞ்சதுங்க.... எப்பவுமே நின்னபடியே இருக்கிற மாதிரி வெச்சிட்டானே இந்த பாழா போன மனுஷன். |
சரி கதையெல்லாம் விட வேணாம். விஷயத்துக்கு வாங்க பங்காளி!
சரி! சரி! வந்திட்டேன். அதுக்காக இப்படி அதட்டணுமா? நான், கைபுள்ளைக்கு பக்கத்து வீட்டுகாரன்னு முதல்லிலேயே சொல்லி இருக்கேன் இல்ல. கொஞ்ச பயந்தபுள்ளைங்க நானு! நிசமா! உம்ம்ம்ம்ம்ம்....
சரி, விஷயம் இதுதானுங்க. எல்லோரும் என்ன சொல்றாங்க? பால் ஒரு பரிபூரண உணவு, கொறஞ்ச காசுக்கு, நிறைஞ்ச சத்தை கொடுக்கிற உணவுன்னு சொல்றாங்களா இல்லையா? இதில படிச்ச டாக்டருங்க கூட அடக்கம் இல்லயா பங்காளி!
ஆனா உண்மை என்னான்னா, இன்னைக்கி இருக்கிற சூழ்நிலையில பாலும், பாலில இருந்து கிடைக்கிற தயிரு, வெண்ணெய், நெய் எல்லாம் சாப்பிட்டி வந்தீங்கன்னா, நோய்ங்க எல்லாம் க்யூகட்டி, உள்ளே நுழையறதுக்கு, “நான் தான் முந்தி” “இல்ல, இல்ல, நான்தான் முந்தின்னு” உங்க வீட்டு வாசல்ல குடுமிபிடி சண்டை போடறதை பாக்கலாம்.
இதுக்கு காரணங்கள் என்னவா இருக்கும்ன்னு ஒரே ரோசனையா இருக்கா? அதுங்களையும் சொல்லி போடறேன். கவனமா கேட்டுகோங்க!
முதல்ல இத யோசியீங்க! மாட்டோட பால் மனுஷனுக்கு ஆகுமா? கன்னுகுட்டியோட உடலு சீக்கிரம் வளரணும்னு, கன்னுகுட்டிக்கு ஏத்தபடி அதிக புரத சத்து (protein) கொழுப்பு சத்து இருக்கிற மாதிரி மாட்டு பாலை இயற்கை டிசைன் செய்து கொடுத்து அனுப்பினா, அந்த பாலை, சிசுவா இருக்கிற கன்னுகுட்டியை, குடிக்க விடாம இந்த பாழாபோன மனுஷன் அதை பிடுங்கி குடிக்கிறான். இது எவ்வளவு பெரிய பாவ செயல் இல்ல!
அடுத்து என்னா விஷயம்ன்னா “யானை திங்கறதை பூணை திங்க முடியுமா” சொல்லுங்க?
மாட்டோடு மனுஷனை ஒப்பிட்டு பாத்தோம்னா, மனுஷனோட உடம்பு வளர்ச்சியோ குறைவு; ஆனா மூளை வளர்ச்சி ரொம்ப அதிகம். மனுஷன் தன்னோட மூளை வளர்ச்சியை ஊக்கபடுத்திற உணவா சாப்பிடனுமா? இல்ல மாடு மாதிரி உடம்பு வளர்கிற உணவை சாப்பிடனுமா? மாடு ரெண்டே வருஷத்தில பெரிய சைஸ் ஆயிடும். ஆனா மனுஷன், அப்படியா சொல்லுங்க?
இப்போ எல்லா இடத்திலும் பாக்கிறது; கண்ணை உறுத்திற விஷயம், நீங்க கூட பாத்திருக்க முடியும்; குண்டு குண்டா குழந்தைங்க! பாக்கிறதுக்கே சகிக்கில. என்ன கொடுமைங்க இது சரவணன்! எந்த மாதிரி ஒரு பரிதாபமான சூழ்நிலைங்க இது பங்காளி!
இன்னைக்கு நம்ப குழந்தைங்க மத்தியில Childhood obeseity ரொம்ப அதிமா பரவி இருக்கு. இந்த ஒவ்வாத குண்டு தன்மையால, என்ன என்ன நோய்ங்களுக்கும் ஆளாகுதுங்க இந்த குழந்தைங்க! ச்சீ! பாவம் இல்ல!
இதய கோளாறுங்கிறான், கிட்னி கெட்டுபோச்சுன்னு சொல்றான், லிவர் டேமேஜ்ன்னு சொல்றான், கண்பார்வை சரியில்லைங்கிறான். ஏனுங்க பங்காளி இந்த மாதிரி நோய்ங்க எல்லாம், இப்போ நம்ப குழந்தைங்க வரை வந்தாச்சே! உடலு ஆரோகியம் இல்லன்னா, என்னா பணவசதி இருந்து என்னா லாபம் சொல்லுங்க? இதை பத்தி எப்பவாச்சும் யோசிச்சீங்களா?
வேறென்ன? இதெல்லாம், அதிகமா புரதசத்து, கொழுப்புசத்து இருக்கிற உணவா சாப்பிடறதால வந்த விணைங்க. ஐஸ்கிரிம், சாகலேட், பிஸ்கேட்டுன்னு கேக்குன்னு கண்டதை சாப்பிட வேண்டியது.
இந்த டீவிகாரங்களை கல்லாலேயே அடிக்கணும்பா! கவர்ச்சியா விளம்பரம் போட்டு பசங்களை மயக்கி போடுறானுங்க! அவங்களும் பின்விளைவுகளை பத்தி கவலை படாம, விளம்பரத்தில வர்ற பொருட்களை வாங்கி தின்னு உடம்பை கெடுத்துக்க வேண்டியது.
அணைகட்டை உடைச்சிட்டு போகிற வெள்ளத்தை போல ஒரு அளவுக்கு மேல அதிகமான புரதசத்தை, கொழுப்பை நம்ப உடல்ல இருக்கிற உறுப்புகளால ஜீரணிக்க முடியாம போகுது. இப்படி சரியா ஜீரணிக்க படாத உணவை வெளியேத்தறதுக்கு நம்ப கழிவு மண்டல உறுப்புகள் சிரம படுதுங்க.
அதுங்களுக்கெல்லாம் வாய்ன்னு ஒன்னு இருந்தா ‘ஓன்னு’ ஒப்பாரி வெச்சி அழுவும். “என்னை விட்டுடு ராசா! என்னால முடியல ராசான்னு” கதறி அழுதிருக்கும்.
இன்னைக்கி சூழ்நிலையில, அதுங்கெல்லாம், மௌனமா புலம்பறதை கேக்கிற நிலைமையிலா இருக்கான் மனுஷன்?
அப்படியே வெள்யேற்றபடாம backlog ஆகி, ஜீரணிக்க படாத உணவு பொருள் எல்லாம் உடம்புக்குள்ளேயே தங்கிவிடுது. மத்ததெல்லாம் தான் உங்களுக்கே தெரியுமே பங்காளி! இதுங்க தான் நோய் வர்றதுக்கு காரணம்ன்னு பல முறை நானும் சொல்லிட்டேன்; நீங்களும் அதை கேட்டுட்டீங்க!
பால்ல செய்ற கலப்படம் பத்தி கேட்டாலே மனசு பகீர்ரெங்குது! பால்ல யூரியா கலக்கறான், மாடுங்களுக்கு, பால் அதிகமா சுரக்குறணும் என்கிறதுக்காக, மாட்டுக்கு ஹார்மோன் ஊசி போடறான். இதெல்லாம் மனுஷனோட பணவெறியை தானே காட்டுது!
இப்போ சொல்லுங்க! உடல் ஆரோகியத்துக்கு கேடு விளைவிக்கிற பொருளை, அது சுத்தமில்லாதது, நச்சு தன்மை உள்ளதுன்னு தெரிஞ்ச பின்னாடியும் அதை பயன்படுத்த தோணுமா?
இந்த விஷயத்தை பத்தி, மீதியை அடுத்த முறை சொல்றேன். சொன்ன விஷயங்களை ஜீரணிக்கவே உங்களுக்கு டைம் எடுக்கும் இல்லையா மக்களே? உங்களை யோசனை செய்ய வெச்சிட்டேன்னு நினைக்கிறேன். அது போதுங்க எனக்கு! உடம்பையும் மனசையும் பத்திரமா பாத்துகோங்க! வாரேனுங்க!
நண்பர்களே! இதன் தொடர்ச்சியை படிக்க இங்கே அழுத்தவும்
நண்பர்களே! இதன் தொடர்ச்சியை படிக்க இங்கே அழுத்தவும்
55 மேதைங்க இதபத்தி என்ன சொன்னாங்கன்னா...:
//நான் பொய் சொல்லி பழக்கம் இல்லைன்னு உங்களுக்கே நல்லா தெரியும் தானே?//
யார் அந்த அரிசந்திரன் பங்காளி?
பால் குடிச்சா சீக்கிரம் பால் ஊத்திடுவாங்கன்னு நினைக்கிறேன். அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
Hormone injection, childhood obesity எல்லாம் சரி...ஆனா பால் குடிக்கிறது உடம்புக்கு நல்லதல்லன்னு சொல்றது சரியா?
பங்காளி நெசமாத்தான் சொல்றியா...
@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா):
//யார் அந்த அரிசந்திரன் பங்காளி?//
அது நான் தான்னு வேற சொல்லனுமா அப்பு!
//பால் குடிச்சா சீக்கிரம் பால் ஊத்திடுவாங்கன்னு நினைக்கிறேன். அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//
டக்குன்னு புரிஞ்சிக்கிட்டீங்க பங்காளி!
@கலாநேசன்:
//Hormone injection, childhood obesity எல்லாம் சரி...ஆனா பால் குடிக்கிறது உடம்புக்கு நல்லதல்லன்னு சொல்றது சரியா?//
அது சரி தான் நண்பரே! கட்டுரையோட இன்னொரு பகுதி நாளை வெளியிடறேன். படிச்சி பாருங்க!
@வெறும்பய:
//பங்காளி நெசமாத்தான் சொல்றியா..//
மாப்பு! என் குணம் உனக்கு நல்லா தெரியும். பொய் சொல்லறது எனக்கு பிடிக்காத விஷயம்ன்னு திரும்பவும் உனக்கு ஞாபகபடுத்தனுமா என்ன?
இதைப்பற்றி, இன்னும் விரிவாக எழுதுங்களேன்.
OHHHHHH.
இதைப்பற்றி, இன்னும் விரிவாக எழுதுங்களேன்.
ஆனா பால் குடிப்பது காலகாலமா நடக்கற விஷயம், child obesity 100 ல் ஒரு குழந்தைக்கு தான் வருகிறது. குழப்புது பங்காளி. தெளிவா சொல்லுங்க
பால் குடிச்சா சீக்கிரம் பால் ஊத்திடுவாங்கன்னு நினைக்கிறேன். //
அப்படியா புண்ணியவான்...
@சைவகொத்துப்பரோட்டா:
@பிரியமுடன் பிரபு: நாளை இதன் தொடர்ச்சியை வெளியிடுகிறேன் படித்து பாருங்கள் நண்பர்களே!
@அருண் பிரசாத்:
//child obesity 100 ல் ஒரு குழந்தைக்கு தான் வருகிறது.//
புள்ளி விவரம் தப்பு அருண்! 30 சதவீத குழந்தைங்க இந்த Childhood obesity -னால பாதிப்பு அடைஞ்சிருக்காங்க. பெரியவங்க adult obesity - அது தனி கணக்கு!
நோய்கள் பெருக்கத்திற்கு பல காரணங்கள் இருக்கு. அதில இந்த பால் பொருட்களை பயன்படுத்துவதும் ஒன்று!
நோயில்லாம வாழறதுக்கு தானே நாம ஆராய்ச்சிகளை செய்யறோம். அது காலகாலமா செய்துட்டு வர்ற பழக்கம் என்கிறதாலே அதை ஆராய்ச்சி செய்ய கூடாதா என்ன அருண்?
அந்த காலத்து மனிதர்கள் ஆரோகியமா வாழ்ந்ததுக்கும் இந்த கால மனிதர்கள் நோய்வாய்பட்டு இருக்கிறதுக்கும் ஒரு தொடர்பு இருக்கா இல்லையா? அந்த தொடர்பை நாம கண்டுபிடிக்கணுமா இல்லையா?
நாளைக்கு இதனுடைய தொடர்ச்சியை வெளியிடுகிறேன். படித்து பாருங்கள் அருண்!
பாலிலிருந்து கிடைக்கும் பொருட்களில் அதிகக் கொழுப்புச் சத்து காரணமாக பயன்படுத்தக்கூடாது என்பது சரி எனலாம். ஆனால் பாலை ஏன் விலக்க வேண்டும்? பெண்கள், குழந்தைகளுக்குத் தேவையான கால்சியம் சத்துக்கு நாம் பெரும்பாலும் பாலைத்தானே சார்ந்து இருக்கீறோம். (சில காய்கறிகளில் இருந்தாலும், அவை சமைக்கப்படுவதால் முழுமையாகக் கிட்டுவதில்லை; அல்லது நாம் உண்ணும் அளவில் தேவையான அளவு கால்சியம் இருப்பதில்லை)
மாட்டுக்கு வழங்கப்படும் கலப்பட உணவு காரணம் என்பதைத் தவிர, வேறு என்ன காரணங்கள் பாலைத் தவிர்க்க? அதில் கொழுப்பு அதிகம் எனில் கொழுப்பு நீக்கிய பால் பயன்படுத்தலாமா?
பாலுக்கு இணையாகக் கால்சியம் கிட்டும் உணவு எது? (குழந்தைகளாலும் விரும்பிச் சாப்பிடக்கூடியதாக இருக்கவேண்டும்).
ஹுஸைனம்மா: //அதில் கொழுப்பு அதிகம் எனில் கொழுப்பு நீக்கிய பால் பயன்படுத்தலாமா?//
அது மட்டும் காரணம் இல்லை தோழியே! சந்தையில் கிடைக்கும் பாலில் Antibiotics மற்றும் Vitamin D -யும் அதிகமாய் இருக்கிறது.
இது மனிதர்களுக்கு, ஒவ்வாமை, தோல்வியாதிகள், ஆஸ்துமா, வயிற்றில் ஜீரண கோளாறுகள், மலசிக்கல, என்று பல நோய்களை, ஏற்படுத்திவிடுகிறது.
பால் பொருட்களை குடல் ஜீரணிக்கும் சமயத்தில் galactose என்கின்ற சர்கரை பொருளை உடலில் சேர்கிறது. இது கற்பபை புற்றுநோக்குக்கும் கண் புரை வியாதிக்கும் காரணமாக அமைந்துள்ளது
Google-லில் Why milk is not good for you என்று தட்டி பாருங்கள்!
இதில் என் அனுபவமும் இருக்கிறது. நாளை வரை காத்திருக்கவும். நாளை இதன் தொடர்ச்சியை வெளியிடுகின்றேன்.
மீதிப் பகுதியையும் படிச்சிட்டு சப்ஜெக்ட்டுக்கு வருவோம் பங்காளி!
@தமிழ் நாடன்:
//மீதிப் பகுதியையும் படிச்சிட்டு சப்ஜெக்ட்டுக்கு வருவோம் பங்காளி!//
அதுவும் சரிதான்! நன்றி பங்காளி!
//மாட்டோட பால் மனுஷனுக்கு ஆகுமா?கன்னுகுட்டியோட உடலு சீக்கிரம் வளரணும்னு மாடு ரெண்டே வருஷத்தில பெரிய சைஸ் ஆயிடும். ஆனா மனுஷன், அப்படியா சொல்லுங்க?//
இந்த லாஜிக் இடிக்குதே,இப்படி பார்த்தா தாவரங்கள்கூட ரெண்டே வருஷத்து மரமாயிடுது,அல்லது சின்னசெடியாவே இருக்குது..அதையும் சாப்பிடக்கூடாதே.இந்த child obesityயெல்லாம் இப்ப வந்தது.. பால் எத்தனைக்காலமா... குடிச்சுட்டுவர்றோம், நீங்ககூட. ஏங்கோ குழம்பியிருக்கீங்களோ அண்ணாச்சி.
ரொம்பயோசிச்சா எதையுமே சாப்பிடமுடியாதே முடிவு இப்படித்தான் வரும்.
@Chef.Palani Murugan, LiBa's Restaurant:
//இப்படி பார்த்தா தாவரங்கள்கூட ரெண்டே வருஷத்து மரமாயிடுது,அல்லது சின்னசெடியாவே இருக்குது..அதையும் சாப்பிடக்கூடாதே//
பங்காளி! பால்ல இருக்கிற அதிகமான புரதம், கொழுப்பு பத்திதானே சொல்றேன்.
தாவிர உணவில அந்த அளவு புரதமும் கொழுப்பும் எங்கே இருக்கு? ஏன் பால்ல அந்த அளவுக்கு புரதமும் கொழுப்பும் இருக்குங்கிற காரணத்தை தான் விஞ்ஞானிகள் இந்த மாதிரி நமக்கு புரியற மாதிரி சொல்றாங்க
//இந்த child obesityயெல்லாம் இப்ப வந்தது.. பால் எத்தனைக்காலமா... குடிச்சுட்டுவர்றோம்//
Childhood obesity எல்லாம் இப்போ வந்தது தான். அதற்கு Support -ஆ எப்படி இந்த பால்பொருட்கள் இருக்குன்னு தானே நாம பாக்கணும்?
நோய்ங்கிறது செயற்கை அப்பு! நாமலா நோய்ங்களை தேடி போறோம் என்பது தான் உண்மை. அதுக்கு மாற்று என்னன்னானு யோசிச்சி சொல்றாது நம்ப கடமையில்லையா பங்காளி?
நீங்கள் சொல்றதை பார்த்தால், அந்த பழ சாலட் தவிர, வேறு எதுவும் நான் சாப்பிட முடியாது போல.... அவ்வ்வ்வ்.....
கொழுப்பு இன்றளவில் எல்லா உணவிலயும் நீக்கமற நிறைந்திருக்கு. ஏன் தாய்ப்பால் கூட கலப்படம்தான். இந்நிலையில் எப்படி எங்கே தேடி எதை நம்பி நல்லதைப் பெறுவது.
பாழாய்ப்போன மண்ணில் வளர்க்கப்பட்ட தாவரங்களில் அதிக உரம்,செயற்கை தீனி போட்டு வளர்க்கப்பட்ட மாமிசம்,டப்பாக்களில் அடைக்கப்பட்ட உணவு,இப்படி இன்னும்....இதி நாம்தான் ஓரளவிற்கு கெட்டதை தேடவேண்டும்.எதையும் அளவோடு உண்டால், குறைந்த விஷத்தோடு கொஞ்சகாலம் வாழலாம்.
பசும்பால் மனிதனுக்கு படைக்கப் படவில்லை. ஒ.கே. தாவரங்கள் மனிதனுக்காக படைக்கப் பட்டவையா?
malnutrition எனப்படும் ஊட்டச்சத்து குறைபாடில் இருந்து கிராமத்து குழந்தைகளை காப்பாற்றியது பால் தானே நண்பரே!
அப்போ எதை நம்ம சாப்பிடலாம்....எதையும் சாப்பிடாதே.......
அடடே பால் போச்சே :-)
@Chitra:
//நீங்கள் சொல்றதை பார்த்தால், அந்த பழ சாலட் தவிர, வேறு எதுவும் நான் சாப்பிட முடியாது போல.//
இன்னமும் சில உணவுகள் இருக்கே அக்கா! காய்கறிங்க, கீரைங்க, கொட்டைங்க, பருப்புங்க தானியங்கன்னு பல தாவர உணவுகள் இருக்கதானே செய்யுது.
நோய் வரணுமா வேணாமான்னு தானே அக்கா நாம பாக்கனம?
@Chef.Palani Murugan, LiBa's Restaurant:
//பாழாய்ப்போன மண்ணில் வளர்க்கப்பட்ட தாவரங்களில் அதிக உரம்,செயற்கை தீனி போட்டு வளர்க்கப்பட்ட மாமிசம்,டப்பாக்களில் அடைக்கப்பட்ட உணவு,இப்படி இன்னும்...//
அதே தான் பங்காளி! மாற்ற முடியாத, நம் கையை மீறிய பல விஷயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. நாம் நம் அறிவு திறனை கொண்டு நம் வாழ்க்கையை செம்மையாக்கி கொள்ளவேண்டியது தான்.
என்ன செய்வது பங்காளி! மனுஷனை மனுஷன் சாப்பிடறாண்டா தம்பி பயலே! இந்த பாட்டை பட்டுகோட்டையாரு 50 வருஷம் முன்னாடியே பாடி வெச்சிட்டாரு!
@அலைகள் பாலா:
//malnutrition எனப்படும் ஊட்டச்சத்து குறைபாடில் இருந்து கிராமத்து குழந்தைகளை காப்பாற்றியது பால் தானே நண்பரே!//
ஆமாம்! நீங்கள் சொல்வது உண்மை தான். எல்லோருக்கும் உணவு பாதுகாப்பு (Food Security) வழங்க தவறிவிட்டோம். ஒரு தவறை சரியாக்க, இன்னொரு தவறை செய்கின்றோம்.
நோயில்லா சமூகத்தை படைக்க குறுக்கு வழிகள் இருக்க முடியுமா நண்பரே?
@சௌந்தர்:
அப்போ எதை நம்ம சாப்பிடலாம்....எதையும் சாப்பிடாதே..//
சௌந்தர்! சித்ரா அக்காவின் கேள்விக்கு என்ன பதில் கொடுத்தேனோ அதை படிச்சிகோங்க!
@சிங்கக்குட்டி:
//அடடே பால் போச்சே :-)//
பால் போனா போயிட்டு போகுது விடுங்க! பழம் இருக்கு இல்ல சிங்ககுட்டி!
ஒரு வேலை, முயல், மான்னு வேடையாடுவீங்களோ?
இன்னமும் சில உணவுகள் இருக்கே அக்கா! காய்கறிங்க, கீரைங்க, கொட்டைங்க, பருப்புங்க தானியங்கன்னு பல தாவர உணவுகள் இருக்கதானே செய்யுது.///
நீங்க என்ன (காலை மாலை இரவு) சாப்பிடுரிங்க சொல்லுங்க
/// மூளை வளர்ச்சியை ஊக்கபடுத்திற உணவா சாப்பிடனுமா? இல்ல மாடு மாதிரி உடம்பு வளர்கிற உணவை சாப்பிடனுமா? மாடு ரெண்டே வருஷத்தில பெரிய சைஸ் ஆயிடும். ஆனா மனுஷன், அப்படியா சொல்லுங்க? //
நிச்சயமா மூளை வளர்ச்சியை ஏற்படுத்துற உணவுதான் சாப்பிடணும்..! ..
ஐயோ .. பாலுல இவ்ளோ பிரச்சினை இருக்கா ..?
இது தெரியாம நான் டீ குடிக்கறதுக்கு பதிலா பால் குடிசிட்டிருக்கேனே ..?
புரதச் சத்து கொழுப்பு அதிகம்னு சொன்னீங்கன்னா, அப்ப அளவைக் குறைத்துச் சாப்பிட வேண்டியதுதான் :) உதா 4 டம்ளர் பாலுக்குப் பதில் ஒரு நாளைக்கு 1 டம்ளர்.. சரியா?
//இந்த டீவிகாரங்களை கல்லாலேயே அடிக்கணும்பா//
இந்த டீவி காரங்க ”கல்லாவ” அடிக்கனும்னா வந்து ஒரு கை கோக்கலாம்.
பங்காளி அடுத்த பதிவ சீக்கிரமா போடுங்க ஒரு முடிவுக்கு வந்துடலாம்...
some hospital conducting kolu kolu kulanthai contest..?
@சௌந்தர்:
//நீங்க என்ன (காலை மாலை இரவு) சாப்பிடுரிங்க சொல்லுங்க//
என்ன ஒரு சந்தேகம்பா! இங்கே ஒன்னு சொல்லிட்டு வீட்டில ஒன்னு சாப்பிடறேன்னு நினைகறீங்க போல! காலையில காரட், தேங்காய் துருவல், வெல்லம் கலந்து சாப்பிடுவேன். நிலகடளை இரவில ஊற வெச்சி காலையில சாப்பிடுவேன்
மதியம் எப்போதும் சமைத்த உணவு. ரெண்டு சப்பாத்தி, இல்லன்னா கேழ்வரகு கூழ் இல்லன்னா கேழ்வரகு களி, அதோடு கொஞ்சம் ரச சாதம். காய் எல்லாம் கூட சமைச்ச உணவு தான். கீரை வாரத்தில 3 இல்ல 4 தடவை எடுத்துப்பேன்.
இரவு 7 மணிக்கு ஏதாவது பழங்களோ இல்லன்னா இட்லியோ சாப்பிடுவேன்
காபி, டீ, பால், கோக், பெப்ஸின்னு எந்த பாணங்களையும் குடிக்கிறதில்ல. 4 லிட்டருக்கு குறையாம தண்ணி குடிப்பேன்.
அசைவம் சாப்பிடறதில்ல. மத்தியில் நொறுக்கு தீனி ஏதும் இல்லை. போதுமா சௌந்தர்? உங்க கேள்விக்கு விடை கிடைச்சதா?
@ப.செல்வக்குமார்:
//இது தெரியாம நான் டீ குடிக்கறதுக்கு பதிலா பால் குடிசிட்டிருக்கேனே ..?//
இப்போதான் விவரம் தெரிஞ்சி போச்சே செல்வா! இனி நல்ல முடிவா எடுங்க
ஜ்யோவ்ராம் சுந்தர்:
//புரதச் சத்து கொழுப்பு அதிகம்னு சொன்னீங்கன்னா, அப்ப அளவைக் குறைத்துச் சாப்பிட வேண்டியதுதான் :) உதா 4 டம்ளர் பாலுக்குப் பதில் ஒரு நாளைக்கு 1 டம்ளர்.. சரியா?//
நாளை பதிவு வரை காத்திருங்க! அப்புறமா உங்க முடிவை சொல்லுங்க! ஒரு அவசரமும் இல்லை
@சத்ரியன்:
//இந்த டீவி காரங்க ”கல்லாவ” அடிக்கனும்னா வந்து ஒரு கை கோக்கலாம்.//
அவங்கல்லாம் பெரிய இடத்து ஆளுங்க! வம்புல மாட்டீவிட்டுடுவீங்க போல இருக்கே பங்காளி!
@Jey:
//பங்காளி அடுத்த பதிவ சீக்கிரமா போடுங்க ஒரு முடிவுக்கு வந்துடலாம்...//
அதுதானே நாளைக்கு முதல் வேலை! காலையிலேயே போட்டுடறேன்.
@Anonymous:
//some hospital conducting kolu kolu kulanthai contest..?//
ஆரோகியத்தோடு கொஞ்சம் சதைபற்று மிக்க குழந்தைங்களை பார்க்க பார்க்க ஆனந்தம் தானே! நான் சொல்றது குண்டு மகா குண்டு குழந்தைகளை பத்தி நண்பா!
தாங்கள் கூறுவது உண்மையாக இருந்தாலும், நிறுத்துவது கடினம்தான். ஆனால் பாலிற்காக ஹார்மோன், யூரியா போன்றவற்றின் கலப்படம்தான் மிக கவலைக்குரிய விஷயம். இது குடிப்பவர்களின் உடலை ஒரு பக்கம் பாதித்தால் மாடுகளின் நிலை?
உலகத்தோடொட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலாதார் - குறள் 140.
The Proof of the pudding is in its eating.
எல்லோரும் முட்டாள்களாக இருந்தால் நீயும் முட்டாளாக இருக்க வேண்டுமா?
இவைகள் எல்லாம் கேள்விகளல்ல. நம் சிந்தனைக்கு உண்டான கருத்துகள்.
இன்றைய கால கட்டத்தில் 100 க்கு 99 பேர் ஒரு முறையைக் கடைப்பிடிக்கிறார்கள் என்றால் அதை சாதாரணமாக ஒதுக்கி விடமுடியாது.
இங்குதான் இயற்கை வழி வாழ்வு அல்லது இயற்கை விவசாயம் தோற்றுப்போகிறது. பேசுவதற்கும் எழுதுவதற்கும் மிக சுவாரஸ்யமான பொருள் இயற்கை வழி வாழ்வு. நடைமுறையில் ஒரு சில பேர்கள் வேண்டுமானால் இதைப் பரிசோதிக்கலாம். ஆனால் பெரும்பாலான மக்களுக்கு சாத்தியமில்லை.
பாலை காலம் காலமாக மனிதன் அருந்தி வருகிறான். அதனால் நன்மைதான் அடைந்திருக்கிறானே ஒழிய தீமை அடந்ததாக எங்கும் காணவில்லை.
ரொம்பயோசிச்சா எதையுமே சாப்பிடமுடியாதே பங்கு!!!
இனிமேல் குறைதுகொல்கிறேன்
G.S.V
@எஸ்.கே:
//இது குடிப்பவர்களின் உடலை ஒரு பக்கம் பாதித்தால் மாடுகளின் நிலை?//
உங்க கவலையை நானும் பகிர்ந்துகிறேன்
@DrPKandaswamyPhD:
//இன்றைய கால கட்டத்தில் 100 க்கு 99 பேர் ஒரு முறையைக் கடைப்பிடிக்கிறார்கள் என்றால் அதை சாதாரணமாக ஒதுக்கி விடமுடியாது.//
ஐயா! அறியாமை இருளிலே தானே உலகமே சிக்கிகிட்டு இருக்குது. எல்லோரும் அறிவாளியா இருந்திருந்தா, புத்தர், இயேசு, சாக்ரடீஸ், காந்தின்னு பெரிய மனிதர்களின் தோற்றத்திற்கு காரணமே இல்லையே!
//ஆனால் பெரும்பாலான மக்களுக்கு சாத்தியமில்லை.//
ஆரோகியம் எல்லா மனிதர்களுக்கும் உண்டான உரிமை தானுங்களே ஐயா?
//பாலை காலம் காலமாக மனிதன் அருந்தி வருகிறான். அதனால் நன்மைதான் அடைந்திருக்கிறானே ஒழிய தீமை அடந்ததாக எங்கும் காணவில்லை.//
பழைய கால வாழ்க்கை முறையில இருந்து எத்தனையோ ஒளி ஆண்டுகள் (Light years) தூரம் விளகி வந்துட்டானே இன்னைக்கி இருக்கிற மனிதன். அந்த கால வாழ்க்கை முறையோடு இன்னைக்கி இருக்கிற வாழ்க்கையை எப்படி ஒப்பிட முடியும்?
@G.S.V:
//ரொம்பயோசிச்சா எதையுமே சாப்பிடமுடியாதே பங்கு!!!//
பங்காளி! ஒன்னுமே யோசிக்காம வாழ்ந்தா என்ன ஆகுங்க நிலைமை? முதலிலேயே வாழ்க்கை நரகமா இருக்கு இப்போ. இன்னும் கண்ணை மூடிட்டு யோசிக்காமா வாழ்ந்தோம்னா அம்புட்டுதான். கதை கந்தல்!!!
Pangali athellam sarithan naanum veetula solli parkiren onnum kathaiku aaga maatenguthe.
Athu sari ippellam enga thanni paal mattum thaane kedaikuthu.
romba nandri. arumaiyana thagavalgal
அப்போ எதை நம் சாப்பிடலாம்?
@prabhadamu:
//அப்போ எதை நம் சாப்பிடலாம்?//
இதன் தொடர்ச்சியை படித்து பாருங்கள் நண்பரே. அதில் விடை இருக்கிறது
@Vadamally:
//Athu sari ippellam enga thanni paal mattum thaane kedaikuthu.//
தண்ணி பால் கிடைச்சாலும் பரவாயில்ல, பல நஞ்சுகளை ஒன்னா சேர்த்த, நச்சு காக்டைலா தானே பால் நமக்கு கிடைக்குது! :-(
after reading this post, i can not ignore to reply this... so, thank you.
@kumar: உங்களின் பாராட்டுக்கு நன்றி நண்பா!
அப்போ தயிர் மோரும் கெடுதலான சமாசாரங்களா? நீங்களே நீர் மோர் பத்தி இன்னொரு இடுகையில நல்ல மாறி எழுதிருக்கீங்களே.தயிர் மோரில்லாத உணவு பழக்கம் கொண்டுவர ரொம்ப சிரமப் பட வேண்டியிருக்கும்.
@அனுமன்:
//நீங்களே நீர் மோர் பத்தி இன்னொரு இடுகையில நல்ல மாறி எழுதிருக்கீங்களே//
நண்பரே! உங்களின் வருகைக்கும், கருத்துக்கும் முதலில் நன்றி சொல்லி கொள்கிறேன்.
உங்களின் ஐயத்திற்கு விளக்கமாகவே பதிலை சொல்லுகிறேன். நீர் மோரை பற்றி என்ன சொன்னேன் என்றால் அதில் 90% தண்ணீர் தான் இருக்கிறது. அதனால் மற்ற பால் பொருட்களை விட அது அவ்வளவு கெடுதல் இல்லை. நாம் பயன்படுத்தி கொள்ளலாம் என்று சொன்னேன்.
உடலை குளிர்ச்சி செய்ய வேண்டி இருப்பவர்கள் நீர் மோரை பயன்படுத்தலாம். அதற்கு மாற்றாக, இளநீர், பழசாறுகள், தக்காளி, காரட் என்று பச்சைகாய்கறிகள், பழங்கள் எல்லாம் இருக்கின்றன. அவைகளை நீர்மோருக்கு மாற்றாக வேண்டுமானால் பயன்படுத்தலாம். ஆனால் அதிகமாய் கெட்டியாக இல்லாத நீராக இருக்கும் நீர்மோரை பயன்படுத்தினால், நமக்கு ஆபத்து மிக மிக குறைவு.
//தயிர் மோரில்லாத உணவு பழக்கம் கொண்டுவர ரொம்ப சிரமப் பட வேண்டியிருக்கும்.//
நீங்கள் சொல்வது முழுமையான உண்மை. நாம் நம்முடைய உணவு பழக்கத்தை அவ்வாறு அமைத்து கொண்டிருக்கின்றோம். அதனால் அந்த பழக்கம் நம்மை கெட்டியாக குரங்கு பிடியாக பிடித்து கொண்டிருக்கிறது.
சிறுக சிறுகத் தான் நாம் அந்த பழக்கத்தில் இருந்து விடுதலை பெற்று வெளியே வந்தாக வேண்டும். பழக்கத்தை காரணமாக காட்டி நாம் ஆரோகியத்தை இழக்க முடியாது இல்லையா நணபரே?
Post a Comment
பங்காளி! சரக்கு எப்படி? விக்குமா... விக்காதா...??? கொஞ்சம் சொல்லிட்டு போங்க!!!