பன்னீர் தெளிக்கிறோமில... ப்ளீஸ்... கொஞ்சம் தலை குனியுங்க...

வணக்கம் பங்காளீ! வாங்க, சவுக்கியங்களா? நம்ம வலைபதிவு பக்கம் வந்ததுக்கு நன்றீங்கோ...Get this Widget

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே! என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி! நண்பர்களே!

மனிதர்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் சிந்தனைகள், இங்கு சிதறிகிடக்கிறது. படித்து பார்த்து உங்கள் கருத்துக்களை இடவேண்டுகிறேன்!

தொடர்ந்து, இந்த வலைபதிவுக்கு உங்களின் ஆதரவை தாருங்கள்!!! நன்றி! தொடர்ந்து வருக!!!

இந்த நாள், உங்களுக்கு, இனிய நாளாக அமைவதாக!!!

பாசகார பங்காளி கூட்டமுங்க! நீங்களும் கூட வாறீகளா?

04-Sep-2010

அப்பாடி! மாதவிடாய் பிரச்சனையில் இருந்து விடுதலை கிடைச்சதுங்க!

இந்த பெண்மணிக்கு மாதவிடாய் பிரச்சனை மட்டும் இல்லீங்க. தினம் உயிரை வாங்க துடிக்கும் எமன்கள் போல பல பிரச்சனைகள் இருந்த்துங்க. மிகவும் பரிதாபத்திற்குறியவங்க! இந்த பெண்மணி என்ன சொல்றாங்கன்னு நீங்களே கொஞ்சம் கவனமா கேளுங்க! பயனா இருக்கும்.
ஆங்கில மருத்துவம் மனிதர்களை கொல்லுதுங்க... :-(
நீங்க, சாகிற வரை கஷ்டபட்டு தான் ஆகணும். வேற வழி இல்லை. உங்க வலியை குறைக்கணும்னா Weight Tracition சிகிச்சையை தான் எடுத்துக்கணும். 2 மாசம் பெட்ல இருக்கணும். ஆனா இது நிரந்திர தீர்வு இல்ல. Pain Killers -ஐ உங்க வாழ்நாள் முழுசும் எடுத்துக்க வேண்டி இருக்கும்.

இது தான் என்னோட தீராத முதுகுவலிக்கு Specialist டாக்டர் சொன்னது. என்னோட முதுகு தண்டுல, Disc Dislocation ஆயிடிச்சின்னு x-ray ரிபோட் காண்பிச்சதுங்க. டாக்டர்ஸ் மட்டும் இல்லேங்க, ஜோசியகாரங்களும் நான் சீக்கிரம் செத்திடுவேன்னு தான் ஜோசியம் சொன்னாங்க.

கடவுள் தான் என்னை காப்பாத்தினாருங்க! எல்லாமே கடவுள் செயல்தான்னு சொல்லணும்! கொஞ்ச நாள் கழிச்சி, திருநெல்வேலி, சிவசைலத்தில இருக்கிற நல்வாழ்வு ஆசிரமத்தை பத்தி விவரம் கிடைச்சது.   

மனுஷனோட மனசு, உடம்பு இந்த ரெண்டிலேயும் வர்ற பிர்ச்சனைக்கெல்லாம் காரணம் சமைச்ச உணவு தான். சமைச்ச உணவை தவிர்திடுங்க! இயற்கையோடு இசைந்து வாழுங்க! வெறும் பழங்களும், கொட்டைகளும் தான் மனுஷனோட உணவு. அது தான் ஈடில்லா ஆனந்தத்தை கொடுக்குமுங்க.

அவை உங்க உடம்புல இருக்கிற நோய்ங்களை போக்கிறது மட்டும் இல்லைங்க, உங்க முழு உடம்புக்கும், புத்துணர்ச்சி கொடுத்து, சந்தோஷத்தையும் ஆரோகியத்தையும் கொடுக்குதுங்க! இதுதான் ஆசிரமத்தை நிறுவிய திரு. M. இராமகிருஷ்ணன் அவர்கள் எனக்கு சொன்னதுங்க.

1983 மார்ச் மாசம் எனக்கு Tubal Pregnancy-க்காக, முதல் ஆபரேஷன் நடந்தது. Fallopian Tube-ல ஒன்னு வெடிச்சிடுச்சி. 45 நாள் கருவோட அந்த ட்யூபை வெட்டி எடுத்திட்டாங்க.

அடுத்த ஆபரேஷன்ல என்னோட mother fallopian tube-ஐ எடுத்திட்டாங்க. மூனாவது ஆபரேஷன்ல கற்பபையில கட்டி இருந்ததாலே, கற்பபையையே எடுத்தாங்க. கடைசியா நடந்த ஆபரேஷன்ல அபண்டசைடீஸ்சை வெட்டி எடுத்தாங்க.

என்னோட உடம்பில இருந்து, நாலு பாகங்களையும் எடுத்து போட்டுட்டாங்க. இதற்காக, இயற்கை எனக்கு கடுமையா தண்டனைகளை அடுகடுக்கா கொடுத்ததுங்க! மூனு வருஷமா என்னை, தொடர்ந்து இருமல், சளின்னு படாதபாடு படுத்தி எடுத்ததுங்க. இங்கலீஷ் மருந்துகளோட பக்க விளைவுகள் வேற, ஒரு பக்கம், உயிரை வாங்கிடிச்சி! கடைசியா என்னை கடுமையான தீராத முதுகுவலியோடு படுத்த படுக்கையில தள்ளிடிச்சி. என்னால சரியா சுவாசிக்க முடியல, சுலபமா, நிக்கவோ, நடக்கவோ, உட்காரவோ, இல்ல படுக்கவோ முடியாதுங்க. தொடர்ந்து 24 மணிநேரமும் வலி இருக்குமுங்க. அது ஒரு நரகமுங்க. அந்த கொடுமை யாருக்குமே வரகூடாதுங்க!

இந்த மாதிரி சந்தர்பத்தில தான் நான் இயற்கை மருத்துவ சிகிச்சையை ஆரம்பிச்சேனுங்க. உபவாசம் இருக்க ஆரம்பிச்சேன். அப்போ வாந்தியை எடுக்க வெச்சி எல்லா நச்சுக்களையும் வெளியே தள்ளினேனுங்க. வாந்தி வருகிற போது, அந்த இங்கலீஷ் மருந்துகளோட நெடி அடிக்கும் பாருங்க! அவை எல்லாம் வெளியில வர்றபோ என்னால ஈஸியா அவைகளை அடையாளம் காண முடிஞ்சதுங்க.

ஒரு பத்து நாள்ல கொஞ்சம் தேறிவந்தேன். இருமலும் சளியும் முழுசா என்னை விட்டு போயிடிச்சீங்க. 20 நாள்ல என்னோட முதுகுவலியும் சரியாச்சுங்க. உபவாசம், பழஉணவு, அடுத்து, சூரியஒளி குளியல், (sunbath) கூடவே குளிர்ந்த தண்ணியில குளியல்ன்னு, தொடர்ந்து சிகிச்சை முறைகளை எடுத்துகிட்டேன். வேற எந்த சிகிச்சையும் எடுத்துக்கல.

இப்போ தான் ஆர்வமா இயற்கை வாழ்வியல் முறையை பத்தி படிக்க ஆரம்பிச்சேனுங்க. மாமிச புரதம் (Animal Protein) - அது, முட்டை, மாமிசம், பால்ன்னு எந்த வகையை சேர்ந்ததாக இருந்தாலும் மனிதனுக்கு ஏற்றது இல்லைங்க. மனிதனோட ஜீரண உறுப்புகளும், சுரப்பிகளும் அவைகளை ஜீரணிக்க கூடிய வகையில அமைக்கபடவில்லைன்னு தெரிஞ்சிகிட்டேனுங்க.

நான் கடந்த 5 வருஷமா, கொட்டைகளையும், பழங்களையும் உணவா எடுத்திட்டு வர்றேனுங்க. இப்போ உடல்நலன் நல்லபடியா தேறி வருது. உடல் எடையும் என் பழைய அளவுக்கு கூடி இருக்கு. என்னுடைய கூந்தல், நகம், பற்கள், தோல் எல்லாம் கூட நல்லவிதமா மேம்பட்டிருக்கு! என்னுடைய குணத்திலேயும் மாற்றம் வந்திருக்குங்க. நீங்க, சொன்னா நம்பமாட்டீங்க! கோபம் குறைஞ்சிருக்கு, சாந்தம் கூடி இருக்கு!

உங்களுக்கு ஒரு விஷயம் ஆச்சரியம் தர்றதா இருக்கலாம். மாத விலக்கு என்பது செயற்கையானதுங்க. பழங்கள் சாப்பிடுபவர்களுக்கு மாதவிலக்கு என்பது சுத்தமா கொஞ்சம் கூட வர்றதில்லைங்க. முதலில் எனக்கு மாதவிலக்கினால் பல பிரச்சனைகள் இருந்ததுங்க. வயிற்றுவலி, வெள்ளைபடுதல், அதிக இரத்தபோக்கு, கால்வலி, குடைச்சல்ன்னு பல உபாதைங்க தாளமுடியாத அளவில இருக்கும். ஆனால் இப்போ பாருங்க, மாதவிலக்குன்னு ஒன்னு சுத்தமா இல்லவே இல்லைங்க.

இந்த புதிருக்கான விடையை சொல்றேன் கேளுங்க! இயற்கை அன்னை கர்ப்பபையை, இனபெருக்கத்திற்கு மட்டுமே படைத்தாளுங்க. ஆனால் மனிதர்களில் மட்டும் தான், கழிவுகளை வெளியேற்றுகிற வேலையையும் அது சேர்த்து செய்கிற மாதிரி நிலைமை ஆச்சுங்க. வருங்கால சந்ததியினரை, விஷங்களில் இருந்து காப்பாத்துறது இயற்கையோட நோக்கமுங்க.

அதனால, மாதம் ஒரு முறை, மாதவிலக்கு என்கின்ற செயலின் மூலம் உடம்பை சுத்தம் செய்து, கட்டாயமா, கழிவு நீக்கலை செய்யுதுங்க. 

இந்த மாதவிலக்கு இல்லாத ஆச்சரியம் எனக்கு மட்டும் இல்லைங்க, பல நாட்டை சேர்ந்த Fruitarians-களின் (பழங்களை உணவாக கொள்வோர்)  விஷயத்திலும் கூட இது நிறுபணம் ஆகி இருக்குதுங்க. 


அந்த அம்மாவுக்கு தான் கருப்பையையே நீக்கிட்டாங்களே. அப்புறமா ஏன் அவங்களுக்கு மாதவிலக்கு வரப்போகுதுன்னு உங்களுக்கு சந்தேகம் வரலாம். கருபபை இருக்கிறவங்களுக்கும் மாதவிலக்கு இல்லாத அதிசயம் நடக்குதுங்க! அந்த சந்தேகத்தை போக்கிகணும்னா இங்கே போய் படிச்சி பாருங்க அப்பு!


மாமிசபுரதம் உண்போருக்கு, உடம்பில, நச்சு பொருள் அதிகம் இருக்கிறதாலே, மாதவிலக்கு சமயத்தில, இரத்த போக்கும், துர்வாடையும் அதிகமாக ஏற்படுதுங்க. அது வயிறு, கால்களில் அதிகளவில, வலியை ஏற்படுத்துதுங்க. இயற்கை உணவாளர்களுக்கு இந்த பிரச்சனை, சிறிது வீரியம் குறைந்ச அளவில இருக்கும். ஆனால் பழ உணவாளர்களுக்கு இந்த பிரச்சனை கொஞ்சம் கூட இல்லைங்க.

மாதவிலக்கு தான் இல்லையே தவிர, கருமுட்டை உற்பத்தி (ovulation) எல்லாம், எல்லா பெண்களுக்கும் நடக்கிற மாதிரியே இயல்பா இருக்கும். அதில் எந்த பிரச்சனையும் இருக்காது. மலட்டு தனத்தினால் அவதிபடும் தம்பதியினருக்கு பழ உணவு பழக்கத்தால் குழந்தை பேரு கிடைக்குதுங்க. இதனை Denmark-ஐ சேர்ந்த Dr. Nolfi நிருபித்து உள்ளார்.

எல்லோரும் இயற்கை உணவுக்கு மாறணும்னு கேட்டுகொள்கிறேனுங்க!

குறிப்பு: இந்த அனுபவ மடல் இயற்கை உணவே நோய் தீர்க்கும் மருந்து என்கின்ற புத்தகத்தில் இருந்து எடுத்தாளபட்டிருக்கிறது. இதன் ஆசிரியர். திரு. மூ.ஆ. அப்பன் அவர்கள். புத்தக பதிப்பாளர் - இந்து பப்ளிகேஷன்ஸ், சென்னை

இந்த மடலை எழுதிய பெண்மணி திருமதி. R. பாமா அவர்கள், லால்குடி, திருச்சியை சேர்ந்தவர்கள்.   

நண்பர்களே! இவரின் அனுபவத்தை பற்றிய உங்களின் கருத்து என்ன? சொல்லிட்டு போங்களேன்.
          

37 மேதைங்க இதபத்தி என்ன சொன்னாங்கன்னா...:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ok no comments

நாய்க்குட்டி மனசு said...

மாத விலக்கு என்பது செயற்கையானதுங்க. பழங்கள் சாப்பிடுபவர்களுக்கு மாதவிலக்கு என்பது சுத்தமா கொஞ்சம் கூட வர்றதில்லைங்க.//

இது என்ன புதுக் கதையா இருக்கு ?

என்னது நானு யாரா? said...

@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா): வருகைக்கு நன்றி நண்பா!

@நாய்க்குட்டி மனசு: எனக்கும் இது புது செய்தி தான். அதனால் தான் உங்களிடம் பகிர்ந்து கொண்டேன். சோதனை செய்ய நினைப்பவர்கள், முழுதுமாக பழ உணவை மட்டும் ஒரு 6 மாதகாலம் தொடர்ந்து சாப்பிட்டு உங்களின் அனுபவங்களை எழுதுங்கள்.

இது விருப்பம் இருக்கும் பெண்களுக்கு, இடப்படும் அழைப்பு! முயற்ச்சி செய்து தான் பாருங்களேன். நன்மை கிடைக்குமானால், இந்த மனித சமூகத்திற்கே நல்லது தானே!

வெறும்பய said...

இயற்கை உணவுகளுக்கு இவ்வளவு சக்தியா... மலைப்பாக இருக்கிறது...

இப்போது எந்த நாட்டில் நல்ல இயற்கை (ரசாயனங்கள் கலக்காத) உணவு கிடைக்கும் என்று தெரிந்தால் சொல்ல முடியுமா...

என்னது நானு யாரா? said...

@வெறும்பய:

//இயற்கை உணவுகளுக்கு இவ்வளவு சக்தியா... மலைப்பாக இருக்கிறது...//

எனக்கும் இந்த விஷயம் பெரிய அச்சிரியத்தை தருகிறது.

//இப்போது எந்த நாட்டில் நல்ல இயற்கை (ரசாயனங்கள் கலக்காத) உணவு கிடைக்கும் என்று தெரிந்தால் சொல்ல முடியுமா...//

ஏன்? இன்று பல இடங்களில் இயற்கை விவசாயம் மூலம் மருந்தில்லா விவசாயம் செய்யப்படுகிறேதே.

குறைந்த அளவிலே விவசாயம் செய்யப்படுவதால், அதனால் உற்பத்தி ஆகும் பொருட்களின் விலை, சிறிது அதிகமாக இருக்கிறது.

அப்படியே இரசாயண முறை விவசாயம் என்றால் கூட நாம் கவலை பட தேவையில்லை. மாதம் ஒரு நாள் நீர் உபவாசம் இருந்து நம் உடம்பில் தங்கி விடும் நச்சிக்களை வெளியேற்றிவிடலாம்.

அதனால் பயம் ஏதும் கொள்ள தேவையில்லை நண்பா!

துளசி கோபால் said...

ஏங்க பங்காளி,

அந்தம்மாவுக்குத்தான் கருப்பை நீக்கிட்டாங்களே. அப்புறம் எப்படி மாதவிலக்கை பழங்கள்தான் நீக்குச்சுன்னு சொல்றாங்க!!!!

புரியலையேங்க.....

பழங்கள் சிறந்த உணவுதான். ஆனால்.......வெறும் பழங்களையே உணவாத் தின்ன முடியுதா? :(

என்னது நானு யாரா? said...

@துளசி கோபால்:

//அந்தம்மாவுக்குத்தான் கருப்பை நீக்கிட்டாங்களே. அப்புறம் எப்படி மாதவிலக்கை பழங்கள்தான் நீக்குச்சுன்னு சொல்றாங்க!!!!//

உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க தோழி! எனக்கும் இது புது தகவலா தான் இருந்தது. ஆனா இந்த லிங்கை படித்து பார்த்த பின்பு தான், அந்த பெண்மணி உண்மையை தான் சொல்றாங்கன்னு புரிந்தது. நீங்களும் படித்து பார்க்க உங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன்.

http://www.giveittomeraw.com/profiles/blog/show?id=1407416:BlogPost:19962

துளசி கோபால் said...

நான் சொல்லவந்தது என்னன்னா.....

கருப்பை நீக்குனவங்களுக்கு மாதவிலக்கு வராது என்பது.

என்னது நானு யாரா? said...

@துளசி கோபால்:

பொறுமை காத்திடுங்கள் தோழியே! கொடுக்கபட்டிருக்கும் லிங்கில் சென்று முழுதுமாக, படித்தப்பின், உங்களின் கருத்தை சொல்லுங்களேன். நான் எங்கு ஓடி விட போகிறேன்! :-)

kavisiva said...

நண்பரே இப்படி நிறைய பேர் சொல்லிக்கிட்டுதான் இருக்காங்க. இது உண்மையாகவே இருந்தால் கூட ஏற்படும் பின்விளைவுகள் என்னன்னு ஆராய்ச்சிகளுக்கு பின்புதான் முடிவு செய்ய முடியும். ஒரு மாதம் மாதவிடாய் வரலேன்னா(கருத்தரிக்காமல்) அவள் உடலில் என்னென்ன மாற்றங்கள் சிரமங்கள் வரும்னு பெண்களுக்கு மட்டுமே தெரியும். அதனால் யாரும் அவ்வளவு எளிதில் இந்த விஷயத்தில் ரிஸ்க் எடுக்க மாட்டார்கள்.

என்னது நானு யாரா? said...

@kavisiva:

//ஒரு மாதம் மாதவிடாய் வரலேன்னா(கருத்தரிக்காமல்) அவள் உடலில் என்னென்ன மாற்றங்கள் சிரமங்கள் வரும்னு பெண்களுக்கு மட்டுமே தெரியும்.//

தோழி! உங்க கருத்துக்கு நன்றிங்க! உங்களை யாரும் இரசாயணத்தில் ஆன மருந்துகளை உட்கொண்டு சோதித்து பார்க்க சொல்லவில்லையே!

இயற்கை உணவுகளை மட்டுமே எடுத்து கொண்டு தானே பல பெண்கள் தாங்கள் அடைந்த நிம்மதியை சொல்கிறார்கள். கொடுத்திருக்கும் லிங்கில் சென்று படித்தீங்களா தோழியே?

அப்படி படித்தீர்களென்றால், அந்த கட்டுரையை பற்றிய உங்களின் கருத்து என்ன என்று சொல்லுங்களேன்.

யாரும் அறிவியல் ஆதரங்கள் இல்லாமல் சொல்ல மாட்டர்களே. இயற்கை உணவு ஒரு 6 மாதம் எடுத்து கொண்டு இதனை சோதிக்கும் தைரியம் நம் பெண்களிடம் இல்லையா?

Chef.Palani Murugan, LiBa's Restaurant said...

இப்போதுதான் உங்க‌ ந‌ல்லாயிருக்கு.வாழ்த்துக்க‌ள்.
குழ‌ந்தை வேண்டாம் என்ப‌வ‌ர்க‌ளுக்கு என்ன‌ தீர்வு?
சிறு வ‌ய‌திலேயே ஏன் க‌ல்யாண‌த்திற்கு முன்பே க‌ருப்பைக‌ட்டியினால் அவ‌திப்ப‌டுவோர் அல்ல‌து அதை நீக்கியோர் நிலையென்ன‌? மாத‌விடாய்க்கு முன்னும் பின்னும் அது ச‌ம்ப‌ந்த‌மாக‌ அவ‌திப்ப‌டுகிறார்க‌ள்.அதை உட‌னே சொல்லிவிட‌முடியாது

என்னது நானு யாரா? said...

@Chef.Palani Murugan, LiBa's Restaurant:

நண்பரே! உங்களின் கருத்து சரியாக புரியவில்லை எனக்கு! விளக்கமாக சொல்லுங்களேன்.

நான், இயற்கை உணவு மூலம் மாதவிலக்கு என்கின்ற செயலே பெண்களுக்கு ஏற்படாது என்று படித்ததை பகிர்ந்து கொண்டேன்.

அதற்கு ஆதாராமாக ஒரு ஆங்கில வலைபக்கத்தின் லிங்கை, கருத்து பெட்டியில் கொடுத்திருக்கின்றேன். அதை படித்த பின் உங்களின் கருத்துக்களை சொல்லுங்களேன்.

விளக்கமாக உங்களின் கருத்தை சொல்வீர்கள் என நம்பிக்கையுடன்...

kavisiva said...

இணையத்தில் இது போல் பல தகவல்கள் ஆராய்ச்சி முடிவுகள்னு நிறைய கொட்டிக் கிடக்கின்றன. சில மட்டுமே உண்மையாக நிரூபிக்கப்பட்டவை. பலவும் உண்மை போல் எழுதப்பட்டவை. நம்பகத்தன்மை உறுதியாகாமல் ரிஸ்க் எடுக்க முடியாது நண்பரே! வெறும் பழங்கள் மட்டுமே சாப்பிட்டதால் சிலருக்கு ஏற்பட்ட அசௌகரியங்களையும் நான் பார்த்திருக்கிறேன். அதற்கு வேறு காரணங்களும் இருக்கலாம். உறுதியில்லாமல் எதுவுமே சொல்ல முடியாது அதுவும் இக்காலத்தில்

நாஞ்சில் பிரதாப் said...

//பங்காளி! சரக்கு எப்படி? விக்குமா... விக்காதா...??? //

சரக்கு நம்பகத்தன்மை உடையதா இருந்தால் மட்டுமே விற்கும்...:))

என்னது நானு யாரா? said...

@kavisiva:

நன்றி தோழி! இந்த விஷயத்தை தன் வாழ்நாளில் சாகும் விளிம்பில் இருந்த ஒரு பெண்மணி, எப்படி கைகொண்டு தன் வாழ்நாளில் மறுபடியும் சந்தோஷத்தை கொண்டு வந்தாள் என்று மற்றவர்களுக்கும் தெரியட்டுமே என்கின்ற நல்ல எண்ணத்தில் தான் இந்த பகிர்வு.

அந்த பெண்ணுக்கும் இதை சோதிக்கும் தைரியம், அவர் சாகும் விளிம்பில் இருந்ததால் தான் வந்ததோ என்னமோ?

எப்போது நமக்கு ஞானகண் திறக்கபட வேண்டும் என்று இருக்கிறதோ அப்போது தான் திறக்கும்!

நான் வெறும் தூதுவன். நல்ல விஷயங்களை சுமந்து செல்பவன். அந்த செய்தியை எப்படி பயன்படுத்தி கொள்கிறார்களோ, அது அவர்அவரின் தனிபட்ட சுதந்திரம்.

எனக்கு சொந்த பற்றுதல் என்று இந்த விஷயத்தில் ஏதும் இல்லை.

என்னது நானு யாரா? said...

@நாஞ்சில் பிரதாப்:

//சரக்கு நம்பகத்தன்மை உடையதா இருந்தால் மட்டுமே விற்கும்...:))//

நம்பகத்தன்மைக்கு தான் நான் எல்லா விவரங்களையும் கொடுத்திருக்கின்றேனே. திறந்த மனதுடன் யார் வேண்டுமானாலும் இதனை முயன்று பார்க்கலாமே.

முயன்று வெற்றி அடைந்த மனிதர்கள் தான் உதாரணத்திற்கு இருக்கிறார்களே! நான் உயிரை பறிக்கும் நஞ்சை, பரிசோதனை செய்ய சொல்லவில்லையே நண்பரே!

இயற்கை உணவை தானே, உண்டு பார்த்து சோதிக்க சொல்கின்றேன்.

எதனையும் பரிசோதனை செய்யாமல், எப்படி நாம் முடிவிற்கு வரமுடியும்.

நச்சு தன்மை கொண்ட மருந்துகளை டாக்டர் சொன்னார் என்கின்ற காரணத்திற்காக, நாம் விழுங்கி கொண்டு தானே இருக்கிறோம்.

எத்தனை ஆபத்துக்கள் இந்த மருந்துகளால் நடக்கின்றன என்று தெரிந்தும் திரும்பவும் அதே தானே செய்கின்றோம்.

மேலே சொன்ன பதிலையும் இதனுடன் சேர்த்து படித்து கொள்ளுங்கள் நண்பரே!

பிரியமுடன் பிரபு said...

no comments

Chef.Palani Murugan, LiBa's Restaurant said...

மாதவில‌க்கு என்ப‌து இய‌ற்கையாக‌ ந‌ட‌க்கும் ஒரு சுழ‌ற்சிமுறை நிக‌ழ்வு, அதை இய‌ற்கை உண‌வால் நிறுத்துவ‌தால் வேறு ப‌க்க‌ விளைவுக‌ள் வ‌ர‌த்தானே வாய்ப்பிருக்கிற‌து. ஒரு பெண் க‌ருவுற்ற‌து அவ‌ளுக்குத் 3 மாத‌த்திற்குப் பிற‌கே தெரிய‌வ‌ரும்?

முன் Generationல் ம‌ருந்து, உண‌வுமுறையால் ந‌ச்சுத்த‌ன்மையில் உர‌மேறிய‌ நம் JEENS உட‌னே இய‌ற்கை உண‌விற்கு ஆட்ப‌டாது

என்னது நானு யாரா? said...

@பிரியமுடன் பிரபு: வருகைக்கு நன்றி பிரபு!

@Chef.Palani Murugan, LiBa's Restaurant: Chef பங்காளி!(அப்படி கூப்பிடலாம் இல்லையா நண்பா? ஆட்சேபனை ஏதும் இருக்கிறதா?)

அந்த பெண்மணி சொல்வது, உடலில் அசுத்தங்கள் இருக்கும் போது தான், அது மாத விலக்கின் வடிவில் வெளியே தள்ளும் வேலையை இயற்கை, தன்னாலே செய்கிறது என்றும், உடல், இயற்கை உணவின் மூலம் தூய்மையாக இருக்கும் போது, மாதவிலக்கு என்பது, இப்போது இருப்பதை போன்று பயங்கரமானதாக எல்லாம் இல்லாமல், அது வந்ததா, சென்றதா என்று சுவடே தெரியாமல் வந்து சென்றுவிடும் என்பது தான்.

நான் தேடி கண்டுபிடித்த லிங்கிலும் இந்த விவரம் தான் சொல்கிறார்கள். இது வரை படிக்கவில்லையென்றால் தயவு செய்து படித்து விடுங்கள் செஃப் பங்காளியே! என் உயிர் பங்காளி அல்லவா நீங்கள்!

அதனால் மாதவிலக்கை நாம் ஏதோ முயற்சி செய்து நிறுத்துவது என்கின்ற பேச்சுக்கே இங்கே இடமில்லை. இயற்கையே அப்படி சமன்படுத்திவிடும் என்பது தான் இங்கே சொல்லபட்டிருக்கும் கருத்து.

இயற்கை வாழ்வியல் முறை, இயற்கை உணவு, இயற்கை மருத்துவம் எல்லாமுமே நம்மை மனித நிலையில் இருந்து தெய்வ நிலைக்கு உயர்த்தும் சக்தி வாய்ந்தவையாகும் பங்காளி!

முதலில் நல்ல மனிதர்கள் இங்கே என்று மேலே இருக்கும் பக்கத்தில் இருக்கும் Peace Pilgrim-மின் கட்டுரையை படியீங்கள். ஓரளவுக்கு இயற்கையோடு ஒத்து வாழ்வதை பற்றிய விஷயங்கள் புரிய வரும். நேரம் வாய்க்குமானால், அவரின் வளைதளத்திற்கும் சென்று பல விஷயங்களை பற்றியும் அறிந்து கொள்ளுங்கள்.
வலைதள முகவரி http://peacepilgrim.org/

//முன் Generationல் ம‌ருந்து, உண‌வுமுறையால் ந‌ச்சுத்த‌ன்மையில் உர‌மேறிய‌ நம் JEENS உட‌னே இய‌ற்கை உண‌விற்கு ஆட்ப‌டாது//

உடலில் சேர்ந்திருக்கும் நச்சுதன்மையை வெளியேற்றும் பல அற்புதமான சிகிச்சைமுறைகள் இயற்கை மருத்துவத்தில் இருக்கின்றன நண்பா!

Nature cure என்று கூகுளில் தட்டி பாருங்கள் பங்காளி! நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ளலாம்.

Rathi said...

நீங்கள் எந்த மூலத்திலிருந்து இத்தகவல்களை எடுத்தீர்களோ தெரியாது. ஆனால், இதைப் படிப்பவர்களை இங்குள்ள சில தகவற்பிழைகள் தவறான புரிதல்களுக்கு இட்டுச்செல்லுமோ என்று அச்சம் ஏற்படுகிறது. கவனிக்கவும்.

என்னது நானு யாரா? said...

@Rathi:

தோழியே நான் எந்த புத்தகத்தில் இருந்து இந்த செய்தியை எடுத்து சொல்லி இருக்கின்றேன் என்று பதிவிலேயே தெளிவாக சொல்லி இருக்கின்றேனே. இங்கு தகவற் பிழை எங்கிருந்து வந்தது. இயற்கை வாழ்வியல் பற்றிய புரிதல் தான் நம்மிடம் தவறாக இருக்கிறது. ஐஸ்கிரிம், கேக், சாக்லேட் என்று சாப்பிடுவதும், பீர், வைன், விஸ்கி, கோக், பெப்ஸி என்று பாணங்களை பருகுவதும் தான் நாகரீகம் என்று சொல்லி திரிந்து கொண்டு இருக்கின்றோம்.

அதனால் இயற்கை உணவை பற்றி யாராகிலும் சொல்லும் போது சந்தேகத்துடனே பார்கின்றோம். உயிரை வாங்கும் ஆங்கில மருத்துவத்தை எந்த ஒரு எதிர் பேச்சும் இல்லாமல் ஏற்கின்றோம். நல்ல நாகரீகம் இது தோழி!

ஆன்மீக பாதையில் செல்ல தயாராக இருப்பவர் தான் இந்த இயற்கை வாழ்வியல் முறையை பற்றி ஆர்வம் கொள்வார் என்று அடிக்கடி நினைத்து கொள்வதுண்டு. அது உண்மை தான் போலும்!

தெய்வசுகந்தி said...

//அதனால் இயற்கை உணவை பற்றி யாராகிலும் சொல்லும் போது சந்தேகத்துடனே பார்கின்றோம். உயிரை வாங்கும் ஆங்கில மருத்துவத்தை எந்த ஒரு எதிர் பேச்சும் இல்லாமல் ஏற்கின்றோம். நல்ல நாகரீகம் இது தோழி!
//

இது இயற்கை உணவு மேல சந்தேகம் இல்லைங்க. கால காலமாக இப்படித்தான் என்று இருப்பதை அப்படி இல்லை என்று சொல்லும் போது வரும் சந்தேகம்தான்.

இந்த விஷயத்துல ரிஸ்க் எடுக்க யாரும் தயாரா இருக்க மாட்டாங்க.

அந்த பெண், அவருக்கு வேறு வழி இல்லாததால்தான் இதை சோதித்திருக்க கூடும். அதை எல்லோரும் செய்யனும்னு சொல்ல முடியாது இல்லைங்களா.

என்னது நானு யாரா? said...

@தெய்வசுகந்தி:

//இந்த விஷயத்துல ரிஸ்க் எடுக்க யாரும் தயாரா இருக்க மாட்டாங்க.

அந்த பெண், அவருக்கு வேறு வழி இல்லாததால்தான் இதை சோதித்திருக்க கூடும். அதை எல்லோரும் செய்யனும்னு சொல்ல முடியாது இல்லைங்களா.//

உங்களுடைய கூற்றுக்கு நானும் உடன்படுகின்றேன். வேறு வழியில்லாமல் தான் உயிரை காபாற்றிகொள்ள, இயற்கை மருத்துவத்தை நாடினார் போல இருக்கிறது!!

அப்படியாகிலும், இக்கட்டான சூழ்நிலையிலாவது, இப்படி ஒரு சிகிச்சை முறை இருக்கிறது என்று மக்கள் அறிந்து பயன் அடைந்தால் சரிதான். எனக்கு மகிழ்ச்சி தான்.

அலைகள் பாலா said...

///கற்பபையையே எடுத்தாங்க. கடைசியா நடந்த ஆபரேஷன்ல அபண்டசைடீஸ்சை வெட்டி எடுத்தாங்க.///

///உங்களுக்கு ஒரு விஷயம் ஆச்சரியம் தர்றதா இருக்கலாம். மாத விலக்கு என்பது செயற்கையானதுங்க. பழங்கள் சாப்பிடுபவர்களுக்கு மாதவிலக்கு என்பது சுத்தமா கொஞ்சம் கூட வர்றதில்லைங்க. முதலில் எனக்கு மாதவிலக்கினால் பல பிரச்சனைகள் இருந்ததுங்க. வயிற்றுவலி, வெள்ளைபடுதல், அதிக இரத்தபோக்கு, கால்வலி, குடைச்சல்ன்னு பல உபாதைங்க தாளமுடியாத அளவில இருக்கும். ஆனால் இப்போ பாருங்க, மாதவிலக்குன்னு ஒன்னு சுத்தமா இல்லவே இல்லைங்க.///


என்ன பாஸ் காமெடி பண்றீங்க? கர்ப்பபை எடுத்த பிறகு எப்படி பாஸ் மாதவிலக்கு வரும்? கொஞ்சமாவது லாஜிக்கோட எழுதுங்க பாஸ்

என்னது நானு யாரா? said...

@அலைகள் பாலா

//கர்ப்பபை எடுத்த பிறகு எப்படி பாஸ் மாதவிலக்கு வரும்? கொஞ்சமாவது லாஜிக்கோட எழுதுங்க பாஸ்//

முதல்ல உங்க வருக்கைக்கும், கருத்துக்கும் நன்றி பங்காளி! இந்த கேள்வி முதல்லேயே துளசி கோபால் என்கின்ற தோழி கேட்டாங்க. அவங்களுக்கு பதிலும் சொல்லிட்டேனுங்க.

அந்த பதிலை கொஞ்சம் படிச்சி பாருங்க! நன்றி பங்காளி!

நிகழ்காலத்தில்... said...

மொத்தத்தில இயற்கை உணவு சாப்பிட்டா கர்ப்பப்பை ஆரோக்கியமா இருக்கும்.

வீட்டுக்குள்ள குப்பை இல்லைன்னா,கூட்டும்போது பெரிசா ஒன்னும் வெளிய வராது. பேருக்கு கொஞ்சம் வரும்.

இப்படி நீங்க சொன்னதா நான் புரிஞ்சிக்கிட்டேன் சரியா, பங்காளி:)

என்னது நானு யாரா? said...

@நிகழ்காலத்தில்...

//வீட்டுக்குள்ள குப்பை இல்லைன்னா,கூட்டும்போது பெரிசா ஒன்னும் வெளிய வராது. பேருக்கு கொஞ்சம் வரும்.

இப்படி நீங்க சொன்னதா நான் புரிஞ்சிக்கிட்டேன் சரியா, பங்காளி:)//

சரிதான் பங்காளி! ரொம்ப எளிய வார்த்தைகளிலே சொல்லிப் போட்டீங்க!

அலைகள் பாலா said...

பாஸ் அந்த லிங்க் ல இருப்பது மாத விலக்கு தேவையா என்பதைப் பற்றி, நான் கேட்டது, கருப்பப்பை எடுத்த பின் மாத விலக்கு எப்படி வரும்? என்று.

அதன் விளக்கத்தை குடுங்க பாஸ்.

என்னது நானு யாரா? said...

@அலைகள் பாலா

//அந்த லிங்க் ல இருப்பது மாத விலக்கு தேவையா என்பதைப் பற்றி, நான் கேட்டது, கருப்பப்பை எடுத்த பின் மாத விலக்கு எப்படி வரும்? என்று.//

பாஸ்! உங்க கேள்வி சரிதான். இந்த கட்டுரையோட நோக்கமே, ஏதோ பெண்ணாக பிறந்து விட்டாலே, மாதவிலக்கு என்கின்ற ஒரு விஷயம் நடந்தே தீரும் என்கின்ற நம்பிக்கையை மாற்றுவது தான். மாத விலக்கு இயற்கை அல்ல. அது செயற்கையான ஒரு செயல் தான் என்ற தகவலை மக்களுக்கு கொடுப்பதற்காகத் தான் எழுதப்பட்டது.

உங்களின் கேள்விக்கு நேரடியான என்னுடைய பதில் - கற்ப பையை நீக்கி விட்டால், அதற்குப் பிறகு மாதவிலக்கு சாத்தியமல்ல.

இந்த கட்டுரையில் இடம்பெற்ற பெண் பல உடல் உபாதைகளால் துன்பப்பட்டுக்கொண்டிருந்தார். அதில் ஒன்று மாதவிலக்கினால் வரும் பெரும் பிரச்சனைகள். இயற்கை உணவிற்குப் பிறகு எல்லா பிரச்சனைகளும் நீங்கின என்கின்ற கருத்தைத் தான் அப்படி சொல்லி இருக்கின்றார்.

நன்றி பாஸ்! உங்களின் கேள்வி, மற்றவர்களுக்கும், விளக்கம் அளிக்கப் பயன்பட்டுள்ளது. உங்களின் ஆதரவை தொடர்ந்து தர வேண்டும் என்றுக் கேட்டுக் கொள்கிறேன்.

அலைகள் பாலா said...

பதிவில்
//அந்த அம்மாவுக்கு தான் கருப்பையையே நீக்கிட்டாங்களே. அப்புறமா எப்படி மாதவிலக்கு வரும்னு உங்களுக்கு சந்தேகம் வரலாம்.///

பின்னூட்டத்தில்
//உங்களின் கேள்விக்கு நேரடியான என்னுடைய பதில் - கற்ப பையை நீக்கி விட்டால், அதற்குப் பிறகு மாதவிலக்கு சாத்தியமல்ல. //

சரி இல்ல பாஸ். ஏதாவது ஒன்ன டெலிட் பண்ணிருங்க.

அலைகள் பாலா said...

//பெண்ணாக பிறந்து விட்டாலே, மாதவிலக்கு என்கின்ற ஒரு விஷயம் நடந்தே தீரும் என்கின்ற நம்பிக்கையை மாற்றுவது தான். மாத விலக்கு இயற்கை அல்ல. அது செயற்கையான ஒரு செயல் தான் என்ற தகவலை மக்களுக்கு கொடுப்பதற்காகத் தான் எழுதப்பட்டது.///

சுத்த அபத்தம் பாஸ். அப்ப நான் சொல்வேன் தண்ணி குடிக்குறது செயற்கைன்னு. வேற ஒருத்தர் யூரின் போறது செயர்க்கைன்னு சொல்வார். உடல் இயங்கியல் படிங்க பாஸ்.

என்னது நானு யாரா? said...

@அலைகள் பாலா

பதிவில்
//அந்த அம்மாவுக்கு தான் கருப்பையையே நீக்கிட்டாங்களே. அப்புறமா எப்படி மாதவிலக்கு வரும்னு உங்களுக்கு சந்தேகம் வரலாம்.///

பின்னூட்டத்தில்
//உங்களின் கேள்விக்கு நேரடியான என்னுடைய பதில் - கற்ப பையை நீக்கி விட்டால், அதற்குப் பிறகு மாதவிலக்கு சாத்தியமல்ல. //

சரி இல்ல பாஸ். ஏதாவது ஒன்ன டெலிட் பண்ணிருங்க.

பிழையை சுட்டிக் காட்டியதற்கு நன்றி நண்பா! இப்போது அதனை Edit செய்தாகி விட்டது.

என்னது நானு யாரா? said...

@அலைகள் பாலா

//பெண்ணாக பிறந்து விட்டாலே, மாதவிலக்கு என்கின்ற ஒரு விஷயம் நடந்தே தீரும் என்கின்ற நம்பிக்கையை மாற்றுவது தான். மாத விலக்கு இயற்கை அல்ல. அது செயற்கையான ஒரு செயல் தான் என்ற தகவலை மக்களுக்கு கொடுப்பதற்காகத் தான் எழுதப்பட்டது.///

சுத்த அபத்தம் பாஸ். அப்ப நான் சொல்வேன் தண்ணி குடிக்குறது செயற்கைன்னு. வேற ஒருத்தர் யூரின் போறது செயர்க்கைன்னு சொல்வார். உடல் இயங்கியல் படிங்க பாஸ்.//

நம்புவதும் நம்பாமல் இருப்பது உங்களின் உரிமை பாஸ்! நானும், என்னைப் போன்ற இயற்கை வாழ்வியல் ஆர்வலர்களும் அதனை நம்புகின்றோம். நோய் இல்லாமல் வாழ வழி இருக்கிறது என்று காட்டுக்கின்றோம்.

யார் அதனை கேட்க விரும்புகிறார்களோ, கேட்கட்டும். விதைகளைத் தூவி விடுவது தான் என்னுடைய வேலை.

என் நோக்கம், தகவல்களை பரிமாறிக் கொள்ளுவது. யாருக்காவது, அவற்றை எடுத்துக் கொள்ள விருப்பம் இருந்தால், எடுத்துக் கொள்ளட்டும்.

கைக்காட்டி மரத்தின் வேலையை தான் நான் செய்கிறேன். நன்றி நண்பா!

என்னது நானு யாரா? said...

@அலைகள் பாலா

//சுத்த அபத்தம் பாஸ். அப்ப நான் சொல்வேன் தண்ணி குடிக்குறது செயற்கைன்னு. வேற ஒருத்தர் யூரின் போறது செயர்க்கைன்னு சொல்வார். உடல் இயங்கியல் படிங்க பாஸ்.//

சமைத்த உணவு மட்டுமே சாப்பிட்டுக் கொண்டிருந்தால் கண்டிப்பாக பெண்களுக்கு மாதவிலக்கு வந்தே தீரும். பதிவில் அந்த பெண்மணி குறிப்பிட்டதுப் போன்று, இயற்கை உணவை, உண்டுவந்தால் கழிவுகளுக்கு இடம் இல்லை. அதனால் மாதவிலக்கினால் கழிவுகள் வெளியேற்றம் என்பது நின்று விடும்.

அப்படியே இருந்தாலும், அது இப்போது இருப்பது போன்று வலிமிக்கதாக, அபாயகரமானதாக எல்லாம் இருக்காது.

kavisiva said...

முதலில் மாதவிடாய் என்பதை கழிவு என்று கூறுவதே தவறு. கரு உண்டானால் அந்த கரு தங்கி வளர்வதற்கான மெத்தை போன்ற அமைப்பு ஒவ்வொரு மாதமும் கருப்பையில் உருவாகும். கருத்தரிக்காத மாதங்களில் இதுதான் வெளியேற்றப் படுகிறதே தவிர உடலில் சேரும் நச்சுப் பொருட்கள் அல்ல வெளியேற்றப் படுவது.

மாதவிடாய் என்பது பெண்களுக்கு இயற்கை கொடுத்த வரமே தவிர சாபம் இல்லை. அந்த சுழற்சியில் சிக்கல் வராமல் இருக்க ஆரோக்கியமான உணவுமுறையும் வாழ்முறையும் அவசியமே தவிர நீங்கள் சொல்வது போல் மொத்தமாக நிறுத்தி விட்டால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பது உங்களை விட பெண்களுக்கு நன்றாகவே தெரியும்.

என்ன சொன்னாலும் நீங்கள் சொன்னதையே சொல்லப்போகிறீர்கள் என்றுதான் உங்களுக்கு பதில் கொடுக்காமல் இருந்தேன். உங்களுட்டைய முந்தைய பின்னூட்டத்தைப் படித்து விட்டு பதில் போடாமல் இருக்க முடியவில்லை :(

Mags said...

இந்த வலைப் பதிவையும் படிக்கவும்.

http://siddhahealer.blogspot.com.

நாம் அனைவருமே ஏதாவது ஒரு வகையில் ஆங்கில மருத்துவ முறையின் முட்டாள் தனமான அணுகுமுறையால் உடல் நலம், மன நலம், பண நலம் பாதிக்கப்பட்டவர்கள் தான். சுகப்பிரவசத்தைக் கூட ஒரு விபத்தை போல , தாயை நோயாளியைப் போல அணுகும் ஆங்கில மருத்துவ முறையை அனைவரும் புறக்கணிக்க விழைவோம். நமது நலம்

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

Post a Comment

பங்காளி! சரக்கு எப்படி? விக்குமா... விக்காதா...??? கொஞ்சம் சொல்லிட்டு போங்க!!!