பன்னீர் தெளிக்கிறோமில... ப்ளீஸ்... கொஞ்சம் தலை குனியுங்க...

வணக்கம் பங்காளீ! வாங்க, சவுக்கியங்களா? நம்ம வலைபதிவு பக்கம் வந்ததுக்கு நன்றீங்கோ...Get this Widget

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே! என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி! நண்பர்களே!

மனிதர்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் சிந்தனைகள், இங்கு சிதறிகிடக்கிறது. படித்து பார்த்து உங்கள் கருத்துக்களை இடவேண்டுகிறேன்!

தொடர்ந்து, இந்த வலைபதிவுக்கு உங்களின் ஆதரவை தாருங்கள்!!! நன்றி! தொடர்ந்து வருக!!!

இந்த நாள், உங்களுக்கு, இனிய நாளாக அமைவதாக!!!

பாசகார பங்காளி கூட்டமுங்க! நீங்களும் கூட வாறீகளா?

5 Sept 2010

வாங்களேன்! ஜாலியா சூரியஒளி குளியல் போடலாம்!

இலவசம்! இலவசம்! சூரியஒளி குளியல் இலவசம்! அம்மா வாங்க! ஐயா வாங்க! அண்ணா வாங்க! அக்கா வாங்க!

 என்ன பங்காளி! ஒரே கூப்பாடு பலமா போட்டுனு இருக்க...

வாங்க அப்பு! அது ஒன்னும் இல்ல சூரிய ஒளி குளியலை பத்தி நம்ப கூட்டாளிபசங்களுக்கு சொல்லலாமுன்னு கூட்டத்தை கூட்டினு இருக்கேன்பா!


ஹீரோ! என்ன அழகா சிரிக்கிறாரு! சூரியகுளியலு
இதமா இருக்கு போல... நீங்களும் ட்ரை பண்ணுங்க...


இதில சொல்றதுக்கு என்ன இருக்கு பங்காளி? நாம தான் டீவிலேயும், சினிமாவிலேயும் பாத்திருக்கேமே!

அப்போ, அதை பத்தி, எல்லாம் தெரியும்னு சொல்றே இல்ல? சரி! எங்கே சொல்லு பார்ப்போம், எப்போ சூரியஒளி குளியல் செய்யலாம்!

பங்காளி! என்ன இது சின்னபுள்ள தனமா இருக்கு...பகல்ல தான் செய்ய முடியும். கண்டிப்பா ராத்திரி நேரத்தில செய்ய முடியாது...

ஆமாம்...இந்த வீராப்புக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல...வெட்டி பேச்சி வீராசாமி! உன்ன அப்படியே ஒன்னு போட்டன்னா... பெரிய ஐன்ஸ்டீன் கணக்கா இல்ல பதில சொல்றே...

ஒழுங்கா தெரிஞ்சா, தெரியும்னு சொல்லு... இல்லன்னா ஈகோ பாக்காம தெரியாதுன்னு ஒத்துக்கோ. பங்காளிங்க குள்ள என்ன ஈகோ பாக்கறது...

சரி தான்பா! கோபிச்சிகாத! மன்னிச்சிடு!
எல்லாம் தெரிஞ்சவரு!
நாலணாவிற்கு நல்லவரு!
கைபுள்ளைய விட வள்ளவரு!
சின்னபுள்ளைய விட திள்ளானவரு
போதுமா? நீயே சொல்லிடு.

இந்த கிண்டல் கேலிக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல உங்கிட்ட! உனக்கு அப்புறமா வெச்சிகிறேன் கச்சேரிய! சரி சும்மா இரு! கூட்டம் கூடிபோச்சு! So Be Serious!

சரிங்க தல! நீங்க உங்க பிரசங்கத்தை ஆரம்பிங்க. நான் அமைதியா கேட்டுகிறேன்.

அப்படி வா வழிக்கி...  விஷயத்தை நான் சொல்றேன்! கவனமா கேட்டுகோ... சூரியஒளிகுளியல் காலை 7 மணில இருந்து 9 மணிக்குள்ளேயும், சாயந்திரம் 4 ல இருந்து 6 மணிக்குள்ளேயும் செய்யலாம்.

நல்ல பட்டபகலில எல்லாம் போய் மொட்டைமாடியில படுக்ககூடாது... தெரிஞ்சுதா அப்பு?

20-ல இருந்து 30 நிமிஷம் சூரியஒளி குளியல் போட்டா உடம்பும், மனசும் சும்மா சூப்பர் ஸ்டாரு கணக்கா, கும்முன்னு, புத்துணர்ச்சி வந்திடும்.

சூரியஒளி குளியலுக்கு முன்னாடி நல்லா தண்ணி குடிக்கணும். அப்படி இடையில தாகம் எடுத்தாலும், பக்கத்திலேயே தண்ணிய வெச்சிட்டு குடிச்சிக்கலாம்.

சரி இவ்வளவு சொல்றியே, இதனோட பயன் என்னான்னு சொன்னா தானே நம்ப பங்காளி பசங்களுக்கு ஒரு இண்ட்ரஸ்ட் வரும் இதை செய்றதுக்கு.

ஏன் முந்திரி கொட்டை மாதிரி குதிக்கிற? நான் அதை தானே சொல்ல வந்தேன். சரி, கேட்டுக்கோ! விட்டமின் D சத்தை, நம்ப உடம்பு தயாரிக்கிறதுக்கு உதவியா இருக்கு இந்த குளியலு!

உடம்புகுள்ள இருக்கிற கொலஸ்ட்ராலை ஜீரணத்துக்கு கொண்டு வருது இது. அதனால் 15, 20% இரத்ததில இருக்கிற கொலஸ்ட்ரால் அளவு கட்டுபடுது.

அறிவியல் ஆராய்ச்சி எல்லாம் என்ன சொல்லுதுன்னா, உடற்பயிற்ச்சி செய்தா என்ன பலன் கிடைக்குமோ அது  
இந்த சூரியஒளியில கிடைக்குதாம்பா! இரத்த அழுத்தம் குறையுது, இதயத்தோட படபடப்பை போக்குது, நல்ல ரத்தம் உற்பத்தி ஆகறதுக்கு உதவுது!

இந்த குளியல், மனசோர்வு, கவலை, தூக்கமின்மை எல்லாத்தையும் கூட போக்குதாம் தெரியுமா பங்காளி?

ரொம்ப ஆச்சரியமான தகவல் தான். மேல சொல்லுங்க!

மேல...

என்னாங்க அண்ணா என்னை சொல்லிட்டு, இப்போ நீங்களே விளையாடுறீங்க!

கோபிச்சிக்காத...உன் கூட சேர்ந்தா அந்த விளையாட்டு புத்தி எனக்கும் வந்திடுது...

சரி விஷயத்துக்கு வருவோம்! Osteomalacia, rickets, obesity, insomnia, psoriasis, fatal breast cancer, COPD, psychology depressants, rheumatoid arthritis, lower back ache, osteo arthritis, hemiplegia, scabies, tuberculosis போல நோய்ங்களை குணமாக்குது இந்த சூரியஒளி குளியல். (பங்காளிங்களே மன்னிச்சிடுங்க! இதில இருக்கிற பல வியாதிங்களுக்கு தமிழில என்ன பேருன்னு எனக்கு தெரியல)

சரி! எங்க ஓடறீங்க பங்காளிங்களே!

இப்பவே போய் சூரியஒளி குளியல் செய்திட்டு வந்திடறோம்!

இருங்க! இருங்க! அதிகமா போச்சுன்னா அமிர்தமும் நஞ்சாகும் இல்ல.. அது போல, அதிகமான நேரம் திரும்ப திரும்ப சூரியஒளி குளியல் செய்தா தோல் புற்றுநோய் வரும்ங்கிறதையும் தெரிஞ்சுக்கோங்க.

அப்புறம்! முதலிலேயே, ஏன் நீங்க சொல்லலன்னு சண்டைக்கு வரகூடாது ஆமா...

சரி! நில்லுங்க! போறதுக்கு முன்னாடி ஓட்டு போட்டு கருத்தும் சொல்லிட்டு போங்க!

நீங்க சொன்னது எல்லாம்......

இத பார்றா....சொன்னதை செய்ங்கன்னா, ஒரே ஓட்டமா ஓடறதை.

படிக்கிற நீங்களாவது, ஓட்டு போட்டு, கருத்து சொல்லிட்டு போங்க அப்பு! உங்களுக்கு புண்ணியமா போகும்

20 மேதைங்க இதபத்தி என்ன சொன்னாங்கன்னா...:

ஜெயந்த் கிருஷ்ணா said...

ரொம்ப நல்லா தகவல் பங்காளி.... சென்னை வெயிலில் படுத்த உடம்பு வெந்து போகாதா...

என்னது நானு யாரா? said...

@வெறும்பய:

இளங்காலை இல்லன்னா மாலை வேலையில செய்யுங்க பங்காளி! பதிவுல எழுதி இருக்கிற முறையில செய்தா உடம்புக்கும், மனசுக்கும் ரொம்ப நல்லது பங்காளி

Unknown said...

ஆஹா...அடுத்தக் குளியலா....நல்ல விசயம்தான். இயந்திரமான வாழ்வில் இதற்கெல்லாம் நேரமெப்போ...........

என்னது நானு யாரா? said...

@கலாநேசன்:

//இயந்திரமான வாழ்வில் இதற்கெல்லாம் நேரமெப்போ...//

நீங்க சொல்றது நிஜம் தான் பங்காளி! இயந்தர தனமா தான் வாழ்க்கை ஓடிட்டு இருக்கு! இயற்கை மருத்துவத்தில எந்த எந்த சிகிச்சை முறை இருக்குங்கிறதை சொல்றேன்.

நோய் வந்தவங்களாவது இவைகளை கட்டாயம் செய்து நோயிலிருந்து விடுதலை பெறலாம். நேரம் இருப்பவர்களும் இவைகளை செய்து நோயிலிருந்து தங்களை காப்பாற்றி கொள்ளலாம்.

சைவகொத்துப்பரோட்டா said...

குளியல் தகவல்கள், சுவராசியம்!! நன்றி பங்காளி.

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

பங்காளி சூரிய குளியல்போட படத்துல உள்ள புள்ள தொணைக்கு வருமா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//பங்காளி சூரிய குளியல்போட படத்துல உள்ள புள்ள தொணைக்கு வருமா?//

மணி சார் வயசான காலத்துல உங்களூக்கு இது தேவையா. அந்த படம் எங்கள மாதிரி இளசுகளுக்கு..

பங்காளி இதை நைட்ல பண்ணலாமா?

என்னது நானு யாரா? said...

@சைவகொத்துப்பரோட்டா: உங்க பாரட்டுக்கு நன்றி பங்காளி!

மணி (ஆயிரத்தில் ஒருவன்):

//பங்காளி சூரிய குளியல்போட படத்துல உள்ள புள்ள தொணைக்கு வருமா?//

இது என்ன சின்ன புள்ள தனமா இருக்கு... சூரிய ஒளி குளியல் பகல்ல தானே செய்ய போறீங்க பங்காளி!

என்னமோ நைட்ல தனியா போக பயமா இருக்குன்னு கேட்கற மாதிரி இல்ல இருக்கு, நீங்க கேட்கிறது!

என்னது நானு யாரா? said...

@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா):

//மணி சார் வயசான காலத்துல உங்களூக்கு இது தேவையா. அந்த படம் எங்கள மாதிரி இளசுகளுக்கு..//

அவரு அவ்வளவு வயசானவருங்களா! ஃபோட்டோ வை பாத்தா அப்படி தெரியலையே பங்காளி!

//பங்காளி இதை நைட்ல பண்ணலாமா?//

அதுக்கு அதிகமா துட்டு செலவு ஆகுமே பரவாயில்லையா பங்காளி?

நான் சொல்லவர்றது, இந்தியாவில நைட்டா இருக்கும்போது, அமெரிக்காவுக்கு ஃப்லைட்ல போய், அங்கே பண்ணலாம். பங்காளிக்கு அம்புட்டு வசதியா?!

எனக்கு சொல்லவே இல்லையே!

தமிழ் உதயம் said...

சூரிய குளியலில் இத்தனை விஷயம் இருக்கா.

Prathap Kumar S. said...

எல்லா நல்லா இருக்கு...இந்த மாதிரி படங்களைத்தான் போடனும்னு அவசியமமா என்ன---???

Prathap Kumar S. said...

தலைப்பு : வாங்கலேன்.... அல்ல நண்பரே வாங்களேன்... நல்ல விசயங்கள் எழுத்துபிழை இல்லாமல் இருத்தல் நலம்.

என்னது நானு யாரா? said...

@தமிழ் உதயம்: உங்க பாராட்டுக்கு நன்றி!

@நாஞ்சில் பிரதாப்: தவறுகளை சுட்டிகாட்டியதற்கு நன்றி நண்பரே!

காலையில் கூகுளில் தேடும் போது சரியான படங்கள் கிடைக்கவில்லை. அதனால் பெண்ணின் சூரியஒளி குளியல் படத்தை போட நேர்ந்தது.

எழுத்து பிழையையும் சரி செய்து விட்டேன். சுட்டிகாட்டியதற்காக மறுபடியும் நன்றி!

இப்படி இடித்துரைக்கவும் ஆட்கள் இருந்தால் தானே, கற்றுகொள்ள முடியும். உங்களை போன்றோர் என் நலனில் அக்கறை செலுத்தும் போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

இப்போது ஆபாசம் இல்லாமல் இருக்கிறது என நம்புகின்றேன். பார்த்து விட்டு உங்களின் கருத்தை கூறுங்கள் நண்பரே!

ப.கந்தசாமி said...

ஆஜர் போட்டுக்கிறேன்.

என்னது நானு யாரா? said...

ஐயா! வெறும் ஆஜர் போட்டா... இது செல்லாது செல்லாது... நான் ஒத்துக்கமாட்டேன்.

உங்களை மாதிரி அனுபவசாலிங்க, குறை நிறைகளை சொல்லிட்டு தான் போகனும்.

Prathap Kumar S. said...

:))

என்னது நானு யாரா? said...

@நாஞ்சில் பிரதாப்: மறுபடியும் வருகை புரிந்து உங்கள் மகிழ்ச்சியை வெளிபடுத்தியதற்கு நன்றி!

suneel krishnan said...

நன்றாக உள்ளது , என் அனுபவத்தில் தோல் நோய்களுக்கு இது நல்ல பயன் கொடுத்துள்ளது , vitilgo,psoriasis இவை இரண்டுக்கும் நல்ல பலன்

என்னது நானு யாரா? said...

@dr suneel krishnan:

ஆயுர்வேத டாக்டர், நீங்கள் பாராட்டியது மிகவும் மகிழ்ச்சி!

உங்களின் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கின்றேன்.

எஸ்.கே said...

மிக நல்ல பதிவு!

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

Post a Comment

பங்காளி! சரக்கு எப்படி? விக்குமா... விக்காதா...??? கொஞ்சம் சொல்லிட்டு போங்க!!!