பன்னீர் தெளிக்கிறோமில... ப்ளீஸ்... கொஞ்சம் தலை குனியுங்க...

வணக்கம் பங்காளீ! வாங்க, சவுக்கியங்களா? நம்ம வலைபதிவு பக்கம் வந்ததுக்கு நன்றீங்கோ...Get this Widget

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே! என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி! நண்பர்களே!

மனிதர்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் சிந்தனைகள், இங்கு சிதறிகிடக்கிறது. படித்து பார்த்து உங்கள் கருத்துக்களை இடவேண்டுகிறேன்!

தொடர்ந்து, இந்த வலைபதிவுக்கு உங்களின் ஆதரவை தாருங்கள்!!! நன்றி! தொடர்ந்து வருக!!!

இந்த நாள், உங்களுக்கு, இனிய நாளாக அமைவதாக!!!

பாசகார பங்காளி கூட்டமுங்க! நீங்களும் கூட வாறீகளா?

7 Sept 2010

அதிகமா உப்பு! அது ரொம்ப தப்பு!

தந்தனத்தோம் என்று சொல்லியே...
ஆமா வில்லில் பாட ஆமா வில்லில் பாட!
வந்தருள்வாய் கலைமகளே!

அம்மா வாங்க! ஆச்சி வாங்க! ஐயா வாங்க! தமிழ் பேசற மக்களே எல்லோரும் வாங்க!

இன்னைக்கு நாம பாக்க போற விஷயம் எதை பத்தினதுன்னா
தலைப்ப பாத்தீங்க இல்ல! அதே தான் மேட்டரு!

கோட்டருக்கு வாட்டரு குறைஞ்சாலும்
ஆட்டோ மீட்டருக்கு மேல, கொடுக்கிற காச குறைஞ்சாலும்!
டாக்டருக்கு நோயாளிங்க குறைஞ்சாலும்!
மோட்டருக்கு இஞ்சின் ஆயில் குறைஞ்சாலும்!
நம்ப மேட்டரு மட்டும், தரத்தில, குறையாது குறையாது குறையாதுங்க!

உண்மை தானுங்க! நல்லபடியா சபை நிறம்பி கலைகட்டுதுங்க!

சரி! வில்லுபாட்டு கேட்கறதுக்கு, நல்லா ஒரு  ஆச்சி வந்திருக்காக! அவங்களையே முதலில கேப்போம்! ஆச்சி! உங்க பேர பசங்க, ஃபாஸ்ட் ஃபுட், சிப்ஸ்ன்னு நிறைய நொறுக்கு தீனி சாப்பிடறாங்களே, அதை கொஞ்சம் கேட்ககூடாதா?

தம்பி கேட்கணும்னு தான் ஆசை! ஆனா எனக்கு இருக்கிற சர்கரை வியாதினால டாக்டரு வாயை கட்ட சொல்லிட்டாரு. அதனால அவங்க கிட்ட இருந்து எதுவும் கேட்டு வாங்கி திங்கறதில்ல.

ஆச்சி நீங்க தப்பா நினைச்சிகிட்டீங்க போல இருக்கு! நான் சொல்ல வந்தது, நீங்க அவங்ககிட்ட இருந்து கேட்டு வாங்கி திங்கறத பத்தி இல்ல. அந்த மாதிரி வீனா போன உணவு எல்லாத்திலேயும் அதிகமா உப்பை சேத்திருக்காங்க ஆச்சி! அதுங்களை ஏன் சாப்பிடறீங்கன்னு கேட்ககூடாதன்னு சொல்ல வந்தேன்.
அதிகமாச்சின்னா ஆபத்து ஐயாமாருங்களே!

அப்படியா தம்பி! இதைபத்தி விபரமா சொல்லுங்க! விபரம் புரியாதவ நானு! எங்க காலம் எல்லாம் எப்படியோ போயிடிச்சி! விபரம் புரியாமலேயே இத்தனை வருஷம் ஓட்டிட்டேன்! நீங்கல்லாம் படிச்ச மகராசனுங்க! நாலு விஷயம் தெரிஞ்சவங்க! இந்த உப்பு எப்படி தப்புன்னு விபரமா விளக்கி போடுங்க! நாங்க அதை கேட்டு அதன்படி நடந்துக்குறோம்.

ஆச்சி! நீங்க சரியா சொல்லிபோட்டீங்க! அந்த காலத்தில எதையுமே தெரிஞ்சிக்காமலே எல்லோரும் நோயில்லாம வழ்ந்திட்டு போயிடாக! ஆனா நாம எங்கேயோ அட்ரஸ் தப்பி போற நோய்ங்கள கூட வலுகட்டாயமா நம்ப பக்கம் இழுத்திட்டு வர்றோம். அதை பத்தி சொல்ல தான் இப்போ வந்திருக்கேன் ஆச்சி!

நம்ப தலைவரு சூப்பர் ஸ்டாரு ரஜினிகாந்த் சொல்றாரு இல்ல தம்பி பணம் கொஞ்சமா சேர்தா அது உன்னை காப்பாத்தும்! அதே பணத்தை அதிகமா சேர்தா, அதை நீ காப்பத்தணும்.

அந்த மாதிரி தான் ஆச்சி! உப்பு கொஞ்சமா உடம்புல இருந்தா அது நல்லது. ஆரோகியத்துக்கு ரொம்ப அவசியமும் கூட. ஆனா அதுவே அதிகமா போச்சுன்னா ஆரோகியத்துக்கு பாதிப்பு!

உப்புல இருக்கிற சோடியம் தசைகளை சுருக்கி விரிக்க பயன்படுது! நரம்புகள் தகவல்களை பரிமாறிக்க பயன்படுது. ஆனா இது குறைவா இருந்தா தான் இந்த நன்மை கிடைக்குமுங்க.

ஒரு நாளைக்கு ஒரு டீஸ்பூன் அதாவது ரெண்டரை கிராம் உப்பு நமக்கு தேவை படுது. ஆனா உங்க பேர பசங்க மாதிரி, இன்றைய தலைமுறைய சேர்ந்தவங்க, நிறைய உப்பு சாப்பிடற வாய்ப்பு அதிகமா இருக்குங்க

McDonolds போல இருக்கிற ஃபாஸ்ட் ஃபுட் ஹோட்டல்ல எல்லாம் French Fries, burger, Pizza, Chicken fry -ன்னு இஷ்டத்துக்கு வயித்துக்குள்ளாற தள்ளுறாங்க இல்ல?

இந்த மாதிரி குப்பை உணவு, ஆங்கிலத்தில இதுங்களை Junk food-ன்னு சொல்றாங்க ஆச்சி. இதில எல்லாம் உப்பை தாராளமா பயன்படுத்துறாங்க, இந்த படுபாவி பசங்க!

இதனால இதுகளை சாப்பிடறவங்க உடம்புல அதிகமா உப்பு சேர்ந்து பாதிப்பை உண்டாக்குது. ஒரு புள்ளி விபரம் என்ன சொல்லுதுன்னா, இந்த மாதிரி உணவு சாப்பிடறவங்க, தினமும் தங்களுக்கே தெரியாம சராசரியா 10 கிராம் வரைக்கும் கூட உப்பு சாப்பிடறாங்களாம்.

அதாவது தேவைக்கு அதிகமா 4 மடங்கு உப்பு சாப்பிடறாங்க ஆச்சி! இதனால இரத்த கொதிப்பு நோய் - அதுதான் High BP நோய் வருதாம் இல்ல. உப்பு அதிகமா இருந்ததுன்னா அது தண்ணிய உடம்புக்குள்ள அதிகமா தக்க வைக்கும்.

பலரு பாக்கவே சகிக்க முடியாத அளவுக்கு குண்டாக இருக்கிறதுக்கு இந்த மாதிரி அதிகமா உப்பு சாப்பிடறதும் ஒரு காரணம்.        

Edema - அதாவது நீர் கோத்து கைகால்லெல்லாம் ஊதி போகிற நோய். அதுக்கு காரணம் கூட இது தானுங்க. மஞ்சல் காமலை போல உப்பு காமலை நோய் வருமுங்க.

இதனால் இதய கோளாறுங்க பலவும் வருதுங்க. அதுமட்டும் இல்ல Stroke - பக்கவாதம் கூட இதனால் வருது ஆச்சி! நம்மோட Kidney எல்லாம் கூட டேமேஜ் ஆயிடுது.

இது நாமே வழியில போற நோயை விரும்பி வரவழைக்கிற மாதிரி தானே ஆச்சி!

தம்பி நீ சொல்லியாச்சி இல்ல!
இப்போ இந்த கமலா ஆச்சியோட வேலையை பாரு! (சும்மா ஒரு ரைமிங்குகாக Bold செய்திருக்கேனுங்க)

முதல் வேலையே என் பேரபசங்களை திருத்திற வேலை தான்.

கொஞ்சம் கொஞ்சமா உப்பு பயன்பாட்டை குறைச்சிடுங்க ஆச்சி! உணவு மேசை மேல இருந்து அந்த உப்பு டப்பாவை எடுத்திடுங்க. பச்சை காய்கறிங்க, பழங்களை சேத்துக்கோங்க. அவையெல்லாம் நம்ப உடம்புல இருக்கிற உப்பை கொஞ்சம் கொஞ்சமா வெளியே தள்ளி நம்ப உடம்ப ஒரு சமநிலைக்கு கொண்டுவரும். இயற்கையாவே அந்தமாதிரி பச்சைகாய்கறிங்க, பழங்களில உப்பு இருக்கு. அதனால் உப்பை குறைக்கிறது தான் நம்ப எல்லோருக்கும் நல்லது.

என்ன மக்களே! உப்பு அளவா இருக்கணும் புரிஞ்சதா. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு ஆயிடுமுங்க.

(கீழே எழுதி இருக்கிறது, வில்லு பாட்டை முடிக்கிற பாட்டுங்க... அதனால எவ்வளவு கஷ்டமானாலும் பாட்டு மாதிரி படிச்சிடுங்க! பாசகாற உறவுகாரங்களே)

அதிகமா உப்பு!... அது தப்பு தானுங்க...
இதில குத்தம் குறை இருந்ததான்னு சொல்லிட்டுபோங்க
கூடவே ஓட்டும் போடுங்க
நீங்க ஓட்டு போடுங்க!
மகராசா ஓட்டு போடுங்க...

உப்பை தின்னாதால... தீமை ஆச்சி...
ஆச்சிக்கு விஷயம் நல்லா புரிஞ்சிபோச்சி...
இப்போ வில்லுபாட்டும் முடிஞ்சி போச்சி..
நம்ப வில்லுபாட்டும் முடிஞ்சி போச்சி

44 மேதைங்க இதபத்தி என்ன சொன்னாங்கன்னா...:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பதிவு நல்லா உப்பு சப்போடதான் இருக்கு.

ஜெயந்த் கிருஷ்ணா said...

மிகவும் அவசியமான நல்ல பதிவு..

Thangavel Manickadevar said...

ஹோட்டல்களில் சமைக்கப்படும் உணவுகளில் கூட உணவு கெட்டு விடாமல் இருக்க உப்பை அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள். ஒரு வேளை ஹோட்டல் சாப்பாடு அவசியமென்றால் சாப்பிட்டுக் கொள்ளலாம். ஆனால் அதையே தொடர்ந்தால் மருத்துவச் செலவு நிச்சயம். ஆரோக்கியமும் கெட்டுப்போகும்

suneel krishnan said...

தெளிவா சொல்லிருகீங்க , ஒரு சின்ன உபரி தகவல் , bp இருக்குறவங்க இந்த உப்புக்கு பதிலா இந்துப்பு சேர்த்து கொள்ளலாம் , அதுவும் அளவோட என்று இந்திய மருத்துவம் சொல்லுது ,
அப்புறம் junk foods பத்தி , அமெரிக்காவுல இன்னிக்கு உடல் பருமன் பிரச்சனை பெரிய அளவுல டீன் agers பாதிசுருக்காம் , காரணம் இது தான் உடல் உழைப்பு இல்லாமல் junk foods உண்டு , கணினி முன் அமர்ந்து இருப்பது தான் .

தமிழ் உதயம் said...

ரெம்ப பிடிச்சு இருக்கு இந்த பதிவு.

சூப்பர் ஸ்டாரு ரஜினிகாந்த் சொல்றாரு....... அதிகமாக ஆசைப்படற பொம்பளையும், அதிகமாக உப்பை சேர்த்துக்கற மனுஷனும் நல்லா வாழ்ந்ததா சரித்திரம் இல்ல.

priyamudanprabu said...

நல்ல பதிவு..

Chitra said...

என்ன மக்களே! உப்பு அளவா இருக்கணும் புரிஞ்சதா. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு ஆயிடுமுங்க.
....well-said!


தமிழ் உதயம் said...
ரெம்ப பிடிச்சு இருக்கு இந்த பதிவு.

சூப்பர் ஸ்டாரு ரஜினிகாந்த் சொல்றாரு....... அதிகமாக ஆசைப்படற பொம்பளையும், அதிகமாக உப்பை சேர்த்துக்கற மனுஷனும் நல்லா வாழ்ந்ததா சரித்திரம் இல்ல.
....ha,ha,ha,ha,ha,ha...

வெங்கட் நாகராஜ் said...

”உப்பிட்டவரை உள்ளளவும் நினை” - உப்பிடாதவரை?

மொக்கராசா said...

மிகவும் பயனுள்ள பதிவு ,இன்று தான் உங்கள் பதிவை பார்த்தேன்.
இன்றைய கால கட்டத்தில் அனைவரும் கடைபிடிக்க வேண்டிய பயனுள்ள எளிய இயற்கை மருத்துவத்தை அழகாக எழுதியுள்ளிர்கள்.
வாழ்த்துக்கள்!தொடர்ந்து எழுதுங்கள்!!!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சரியா சொல்லியிருக்கீங்க, நாங்கூட இதப்பத்தி எழுதனும்னு நெனச்சிருந்தேன்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இது முதல்லையே தெரிஞ்சிருந்தா காந்தி உப்பு சத்தியா கிரகத்துக்கு போயிருக்க மாட்டாரோ?

Chef.Palani Murugan, said...

ந‌ல்ல‌ த‌க‌வ‌ல்
<>

இதைப் ப‌ற்றி நானும் ஒரு ப‌திவு எழுத‌வேண்டுமென‌ இருந்தேன்.
வாழ்த்துக்க‌ள்

கருடன் said...

பங்காளி தவறா நினைக்க வேண்டாம் தகவல்கலைவிட.. இப்பொ உங்க உரையாடல் அதிகமா இருக்கு.. உப்பு மாதிரி சுவைக்கு கொஞ்சம் சேர்த்துகோங்க.... :)

(என் கருத்து உங்கள் மனதை புண்படுத்தி இருந்தால் மன்னிக்க...)

என்னது நானு யாரா? said...

@வெறும்பய
@பிரியமுடன் பிரபு

படித்து பார்த்து பாராட்டியதற்கு நண்பர்களே

@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா): முதலில் உங்கள் பாராட்டிக்கு நன்றி பங்காளி!

//இது முதல்லையே தெரிஞ்சிருந்தா காந்தி உப்பு சத்தியா கிரகத்துக்கு போயிருக்க மாட்டாரோ?//

அவரு இப்ப இருந்தா கூட சத்தியாகிரகம் செய்வாரு! ஆனா அது கடலை நோக்கி சென்று அல்ல பங்காளி!

உணவுகள்ல உப்பை அதிகமா சேர்கிற ஹோட்டல்களை எதிர்த்து. நன்றி பங்காளி!

என்னது நானு யாரா? said...

@தங்கவேல் மாணிக்கம்:

//ஹோட்டல்களில் சமைக்கப்படும் உணவுகளில் கூட உணவு கெட்டு விடாமல் இருக்க உப்பை அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள்.//

இது பல பேர்களுக்கு புதிய தகவல்களாக இருக்கும். நன்றி நண்பரே!

//ஒரு வேளை ஹோட்டல் சாப்பாடு அவசியமென்றால் சாப்பிட்டுக் கொள்ளலாம். ஆனால் அதையே தொடர்ந்தால் மருத்துவச் செலவு நிச்சயம். ஆரோக்கியமும் கெட்டுப்போகும்//

கண்டிப்பாக அவர்கள் வியாபார நோக்கோடு தானே உணவை விற்கிறார்கள். அதனால் முடிந்த வரை ஹோட்டல்களில் சாப்பிடுவதை தவிர்ப்பதே நலம்.

உங்களின் கருத்துக்கு நன்றி! தொடர்ந்து என் வலைபக்கம் வர வேண்டும் என்று கேட்டு கொள்கின்றேன்.

பெசொவி said...

நல்லா சொல்லியிருக்கீங்க, நன்றி! (உப்புக்கு...............சாரி, ஒப்புக்கு சொல்லலை, நிஜமாதான் சொன்னேன்!)

என்னது நானு யாரா? said...

@dr suneel krishnan:

//ஒரு சின்ன உபரி தகவல் , bp இருக்குறவங்க இந்த உப்புக்கு பதிலா இந்துப்பு சேர்த்து கொள்ளலாம் , அதுவும் அளவோட என்று இந்திய மருத்துவம் சொல்லுது//

உங்களின் கூடுதல் தகவலுக்கு நன்றி நண்பா!

//அப்புறம் junk foods பத்தி , அமெரிக்காவுல இன்னிக்கு உடல் பருமன் பிரச்சனை பெரிய அளவுல டீன் agers பாதிசுருக்காம் , காரணம் இது தான் உடல் உழைப்பு இல்லாமல் junk foods உண்டு , கணினி முன் அமர்ந்து இருப்பது தான் .//

இந்த கலாச்சாரம் வைரஸ் நோயை போன்று எல்லா நாடுகளிலும் பரவிக்கிட்டு இருக்கு. நம்ப நாடும் இதற்கு விதிவிலக்கல்லா.

உங்களின் கவலையை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி நண்பரே! நாம் தான் பிள்ளைகளுக்கு நல்லது கெட்டது எடுத்து சொல்லி இந்த ஆபத்திலிருந்து அவர்களை காபாற்ற வேண்டும்.

என்னது நானு யாரா? said...

@தமிழ் உதயம்:

//சூப்பர் ஸ்டாரு ரஜினிகாந்த் சொல்றாரு....... அதிகமாக ஆசைப்படற பொம்பளையும், அதிகமாக உப்பை சேர்த்துக்கற மனுஷனும் நல்லா வாழ்ந்ததா சரித்திரம் இல்ல.//

கலக்கிட்டீங்க பங்காளி! அருமை! அருமை!! ரொம்ப ரசிச்சேன். வாழ்த்துக்கள்!!!

என்னது நானு யாரா? said...

@Chitra:

அக்கா! உங்களுக்கு எப்பவும் சிரிப்பு தான். நல்லா சிரிங்க! ஆரோகியமா இருப்பீங்க!

தமிழ் உதயம் நண்பர் சொன்ன ரஜினி டயலக் உங்களுக்கு சிரிப்பை தந்ததை நினைத்து எனக்கு ரொம்ப மகிழ்ச்சி!!

என்னது நானு யாரா? said...

@வெங்கட் நாகராஜ்:

//”உப்பிட்டவரை உள்ளளவும் நினை” - உப்பிடாதவரை?//

ஏழேழு ஜென்மத்துக்கும் நினைன்னு இருக்குமோ வெங்கட்?

ஏன்னா உப்பு இடலைன்னா, நம்ப உடம்புக்கு அவங்க நல்லதில்ல செய்றாங்க!! சரியா தான் சொல்றேனா?

நீங்க என்ன நினைக்கறீங்க?

என்னது நானு யாரா? said...

@சரவணக்குமார்:

//மிகவும் பயனுள்ள பதிவு ,இன்று தான் உங்கள் பதிவை பார்த்தேன்.//

உங்களுடைய முதல் வருகைக்கு நன்றி நண்பரே! தொடர்ந்து என் வலைபக்கம் வரவேண்டும் என்று அன்பு கலந்த வேண்டுகோள் வைக்கின்றேன்.

//இன்றைய கால கட்டத்தில் அனைவரும் கடைபிடிக்க வேண்டிய பயனுள்ள எளிய இயற்கை மருத்துவத்தை அழகாக எழுதியுள்ளிர்கள்.
வாழ்த்துக்கள்!தொடர்ந்து எழுதுங்கள்!!!!//

உங்கள் பாராட்டு நன்றி நண்பரே!

என்னது நானு யாரா? said...

@பன்னிக்குட்டி ராம்சாமி:

//சரியா சொல்லியிருக்கீங்க, நாங்கூட இதப்பத்தி எழுதனும்னு நெனச்சிருந்தேன்!//

உங்க ஸ்டைலில எழுதி கலக்குங்க பன்னிகுட்டி சாரே! ரொம்ப ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

உங்க பாராட்டு நன்றி சாரே!

என்னது நானு யாரா? said...

@Chef.Palani Murugan, LiBa's Restaurant:

//இதைப் ப‌ற்றி நானும் ஒரு ப‌திவு எழுத‌வேண்டுமென‌ இருந்தேன்.//

நல்ல விஷயத்தை சீக்கிரம் செய்யணும்னு பெரியவா சொல்லுவா. சீக்கிரம் எழுதுங்க. படிக்க நானும் நண்பர்களும் காத்துகிட்டு இருக்கோம்.

உங்க பாராட்டு நன்றி!

என்னது நானு யாரா? said...

@TERROR-PANDIYAN(VAS):

//பங்காளி தவறா நினைக்க வேண்டாம் தகவல்கலைவிட.. இப்பொ உங்க உரையாடல் அதிகமா இருக்கு.. உப்பு மாதிரி சுவைக்கு கொஞ்சம் சேர்த்துகோங்க.... :)//

பங்காளி! தவறா நினைக்கல! உங்களுக்கு சரின்னு படறதை தானே சொல்றீங்க. உங்க கருத்தை கவனித்தில வெச்சிக்கிறேன்

//(என் கருத்து உங்கள் மனதை புண்படுத்தி இருந்தால் மன்னிக்க...)//

பங்காளிகளுக்குள்ளே மன்னிப்பெள்ளாம் எதுக்கு பங்காளி!

உங்களை போல நண்பர்கள் எழுதறதை பாத்து வந்த பாதிப்பு இது பங்காளி!

அதனால் நீங்க சொல்ற குற்றச்சாட்டுல உங்கள போல நண்பர்களுக்கும் பங்கு உண்டு.

புதுசா இப்பத்தானே வந்திருக்கேன் இல்ல? எது சரியா ஜனங்ககிட்ட எந்த முறையில சேரும்ன்னு ஒரு கணக்கு சரியா வரல.

நீங்க சொல்றதை ஏத்து ஸ்டைல மாத்த பாக்குறேன். உங்க கருத்துக்கு நன்றி பங்காளி!

தொடர்ந்து என் வலைபக்கம் வாங்க! படிச்சி பாத்து கருத்து சொல்லுங்க!

என்னது நானு யாரா? said...

@பெயர் சொல்ல விருப்பமில்லை:

//(உப்புக்கு...............சாரி, ஒப்புக்கு சொல்லலை, நிஜமாதான் சொன்னேன்!)//

ஏன் இந்த தடுமாற்றம் அண்ணா? அண்ணிக்கு தெரியாம, டாஸ்மாக் பக்கம் போகல இல்ல?

செல்வா said...

///ஆச்சி நீங்க தப்பா நினைச்சிகிட்டீங்க போல இருக்கு! நான் சொல்ல வந்தது, நீங்க அவங்ககிட்ட இருந்து கேட்டு வாங்கி திங்கறத பத்தி இல்ல.///
ஐயோ சாமி . வர வர நல்லா காமெடி பண்ணி பழகிட்டீங்க ..!!
//பலரு பாக்கவே சகிக்க முடியாத அளவுக்கு குண்டாக இருக்கிறதுக்கு இந்த மாதிரி அதிகமா உப்பு சாப்பிடறதும் ஒரு காரணம். ///
குண்டா இருக்குரக்கு உப்பு கூட காரணமா ...?

இதோ இனிமேல் நானும் எங்க ஊர்ல இந்த விசயத்த சொல்லி உப்பை கொறைக்க சொல்லுறேன் ..!!

மங்குனி அமைச்சர் said...

நீங்கல்லாம் படிச்ச மகராசனுங்க! நாலு விஷயம் தெரிஞ்சவங்க!/////

ஐயோ, அப்ப நீங்க எல்லாம் படிச்ச புள்ளைகளா ?

சரி இப்ப எனக்கு ஒரு டவுட்டு , இந்த கடலைக்காய் சாப்பிட்ட ஏன்னா வருமுன்னு எனக்கு தெரியும் , ஆனா படிப்பு வருமா ????

என்னது நானு யாரா? said...

@ப.செல்வக்குமார்:

கோமாளி செல்வாவிற்கு நம்ப நகைசுவை பிடிச்சிருக்காமே! ரொம்ப சந்தோஷம் செல்வா!

//இதோ இனிமேல் நானும் எங்க ஊர்ல இந்த விசயத்த சொல்லி உப்பை கொறைக்க சொல்லுறேன் ..!!//

நல்ல விஷயம் செய்ய போறீங்க! ஜமாயிங்க!!

என்னது நானு யாரா? said...

@மங்குனி அமைசர்:

//சரி இப்ப எனக்கு ஒரு டவுட்டு , இந்த கடலைக்காய் சாப்பிட்ட ஏன்னா வருமுன்னு எனக்கு தெரியும் , ஆனா படிப்பு வருமா ????//

அமைச்சருக்கு கடலைக்காய் சாப்பிட்ட என்னா வரும்னு தெரிஞ்சிருக்கு. எனக்கும் அவ்வளவு தான் தெரியும் அமைச்சரே!

கடலைக்காய் சாப்பிட்டா படிப்பு வருங்கிற மாதிரி இருந்தா, பள்ளி கூட வாசல்ல இருக்கிற அவிச்ச வேற்கடலை விக்கிற பாட்டி அம்மாக்களே போதும் இல்ல?

படிப்பு சொல்லி கொடுக்க வாத்தியாருங்களே தேவை இருக்காதே! என்ன அமைச்சரே! சொல்றது சரிதானே?

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

வாவ்... உப்பை பத்தி தப்பில்லாம சப்புனுமில்லாம வில்லுபாட்டையும் சேத்து கதை மாதிரி சொல்லி அசத்திடீங்க வசந்த்... (ஹி ஹி... இப்ப தான் உங்க profile ஒழுங்கா பாத்தேன்... ) குட் ஜாப்... தொடர்ந்து எழுதுங்க... கலக்கல்

என்னது நானு யாரா? said...

@அப்பாவி தங்கமணி:

அப்பாவி அக்கா! நீங்க வந்து வாழ்த்து சொன்னது மனசுக்கு ரொம்ப மகிழ்ச்சியை தருது.

உங்க மாதிரி பெரியவங்களோட ஆசிர்வாதம் இருந்தா யானை பலம் வந்திடாதா மனுஷனுக்கு!

தொடர்ந்து என் கடைக்கு வந்து பலகாரம் எல்லாம் எப்படி இருக்குன்னு டேஸ்ட் செய்து உங்க கருத்துக்களை சொல்லுணும் அக்கான்னு உங்களை அன்போடு கேட்டுக்கிறேன்.

தெய்வசுகந்தி said...

Good info.

Thamizhan said...

தந்தனத்தோம் என்று சொல்லியியே உப்பை தந்தனத்தோம் போடச் சொல்லியே
ஏங்க உப்பு கொஞ்சம் கொறஞ்சிருக்குன்னே
கோபம் வேண்டாமுங்க அது ஒடம்புக்கு தந்தனத்தோம் ஆக்கிடுமாம்
டாகடர் பில்லு
தந்தனத்தோம் போடனுங்க
ஆமா உப்பில்லா பண்டம் குப்பைதானுங்க
ஆனா உப்பு ரொம்ப போட்டால்
தந்தனத்தோம் நாமே
குப்பையிலே போயிடுவோமாம்
!பங்காளி பாடம் சொல்லிட்டாருங்கோ
மங்களம் உப்புக்கு ஒரு மங்களம் சொல்லிடுங்கோ!

என்னது நானு யாரா? said...

@தெய்வசுகந்தி: உங்க பாராட்டு நன்றி தோழி!

@Thamizhan: வாங்க பங்காளி! நாம ரெண்டு பேரும் சேர்ந்து பல இடங்களுக்கு போய் வில்லு பாட்டு கச்சேரி செய்யலாம்.

உங்களுக்கு நல்ல ஞானம் இருக்கு! எனக்கு தனி ஆவர்தனம் செய்ய முடியல. என்ன பங்காளி சொல்றீங்க?

Anonymous said...

பங்காளி அப்படியே.. கொஞ்சம் இதய நோய்க்கு என்ன என்ன சாப்பிடலாம் எது எது சாப்பிட கூடாதுன்னு, சொல்லுங்க எனக்கு ஒருமுறை அட்டாக் வந்துருச்சி, மறுபடியும் வராம இருக்கணும்னா என்ன பண்ணலாம். முடிஞ்சா இத பத்தி விவரமா ஒரு பதிவு போடுங்க பங்காளி நாங்களெல்லாம் உங்க பெற சொல்லி பொழச்சு போறோம். என்ன ஒ.கே வா பங்காளி.நன்றி வாழ்த்துகளுடன் ....ராஜா

என்னது நானு யாரா? said...

@Anonymous:

//கொஞ்சம் இதய நோய்க்கு என்ன என்ன சாப்பிடலாம் எது எது சாப்பிட கூடாதுன்னு, சொல்லுங்க எனக்கு ஒருமுறை அட்டாக் வந்துருச்சி, மறுபடியும் வராம இருக்கணும்னா என்ன பண்ணலாம். முடிஞ்சா இத பத்தி விவரமா ஒரு பதிவு போடுங்க பங்காளி//

பங்காளி கண்டிப்பா உங்களுக்காக கூடிய சீக்கிரம் நல்ல விவரங்களோடு ஒரு பதிவை எழுதறேன். நன்றி ராஜா! தொடர்ந்து வாங்க!!

vasan said...

Good advice/article with the pinch of SALT.
Your style of writing like speaking is very alive.

அது ஒரு கனாக் காலம் said...

கலக்கலா அதே சமயம், உபயோகமான தகவல்களை எழுதுகிறீர்கள் .... பால், தயிர், நெய்யை தவிர், பச்சை காய்கறிகளை சாப்பிடு , பழம் நிறய பலத்தை தரும், வாழை இலை குளியல் , வெயில் குளியல் .... எல்லா பதிவுமே தகவல் பொக்கிஷங்கள் ... ரொம்ப காலத்துக்கு முன் இயற்கை உணவே நோய் தீர்க்கும் மருந்து என்ற புத்தகம் படித்தேன் ( ஆனால் தொடர்ந்து பின் பற்றவில்லை )... தேங்காய் பழ சாமியார் எழுதியது ( திருநெல்வேலி அருகில் )... அவரும் தேங்காய் பச்சையாய் உண்பதில் தவறில்லை என்று கூறியிருக்கிறார்...

எங்கெல்லாமோ போய், என்னவெல்லாமோ சாப்பிட்டு ... இப்போ ஒரு மாதிரி காய் & கனி ஆகாரம் சாப்பிடுகிறேன் , நல்ல மாற்றம் உண்டு - பால் சுத்தமா கிடையாது ( அதாவது டீ / காபி )... மனமும் , உடம்பும் நல்லா ஆரோகியமா இருக்கு ..

தொடர்ந்து வருகிறேன் ( என்னோட கூகிள் பஸ்ஸில் உங்கள் பதிவை இணைத்திருந்தேன் ) ...

நன்றி - வணக்கத்துடன்
சுந்தர்

மோகன்ஜி said...

ஏதோ உப்பு பொறாத விஷயம்னு நெனச்சித்தான் படிச்சேன்.. ஆனா உப்பு (பதிவு) இட்டவரை உள்ளளவும் நெனைக்க வச்சிட்டீங்களே!

என்னது நானு யாரா? said...

@vasan: உங்களின் பாராட்டுக்கு நன்றி!

@அது ஒரு கனாக் காலம்:

//எங்கெல்லாமோ போய், என்னவெல்லாமோ சாப்பிட்டு ... இப்போ ஒரு மாதிரி காய் & கனி ஆகாரம் சாப்பிடுகிறேன் , நல்ல மாற்றம் உண்டு - பால் சுத்தமா கிடையாது ( அதாவது டீ / காபி )... மனமும் , உடம்பும் நல்லா ஆரோகியமா இருக்கு ..//

என்ன ஒரு அருமையா உங்களின் அனுபவத்தை பகிர்ந்துகொண்டீர்கள். நன்றி அண்ணா!

//என்னோட கூகிள் பஸ்ஸில் உங்கள் பதிவை இணைத்திருந்தேன் ) ...//

நல்லது! செய்யுங்கள்! நல்ல விஷயம் அதிகமான பேர்களுக்கு சென்று சேரவேண்டியது தான்.

உங்களின் செய்கையின் மூலம் இன்னமும் அதிகமானவர்களுக்கு தெரிய வரும் இல்லையா? மீண்டும் நன்றி அண்ணா!

என்னது நானு யாரா? said...

@மோகன்ஜி:

//ஆனா உப்பு (பதிவு) இட்டவரை உள்ளளவும் நெனைக்க வச்சிட்டீங்களே!//

உங்க பாராட்டு நன்றி அண்ணா! தொடர்ந்து நம்ப கடை பக்கம் வாங்க! சரக்கு எப்படி இருக்குன்னு டேஸ்ட் செய்து சொல்லிட்டு போங்க!

நமக்கு தெரிஞ்ச நல்ல விஷயம் மத்தவங்களுக்கு தெரிவிக்கறதில ஒரு ஆத்மா திருப்தி ஏற்படுது!!!

ம.தி.சுதா said...

நல்ல பதிவுங்கோ எல்லோருக்கும் பிரயோசனமானது... உப்ப கூடினால் தீர்க்கும் செலவற்ற வழிபற்றி இங்கே இருக்கு நேரம் இருந்தால் வாங்க...
http://mathisutha.blogspot.com/2010/08/blog-post_26.html

ப.கந்தசாமி said...

உப்பைக் குறைத்தால் பல நன்மைகள் உண்டு. சாதாரணமாக பல உணவுகளுக்கு உப்பே தேவையில்லை. இருந்தாலும் நாம் உபயோகிக்கிறோம். இதை எல்லோரும் உணர வேண்டும். அதிக உப்பு விஷத்திற்கு சமம்.

என்னது நானு யாரா? said...

@ம.தி.சுதா: உங்களின் முதல் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி. உங்களின் அழைப்பை ஏற்று, உங்களின் வலைபககம் வந்து பார்வையிட்டேன். பல நல்ல தகவல்களை கொடுக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

@DrPKandaswamyPhD:

//சாதாரணமாக பல உணவுகளுக்கு உப்பே தேவையில்லை. இருந்தாலும் நாம் உபயோகிக்கிறோம். இதை எல்லோரும் உணர வேண்டும். அதிக உப்பு விஷத்திற்கு சமம்.//

சரியா சொல்லிபோட்டீங்க ஐயா! உண்மையான விஷயதை நச்சின்னு சொல்லிட்டீங்க... அருமை ஐயா!

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

Post a Comment

பங்காளி! சரக்கு எப்படி? விக்குமா... விக்காதா...??? கொஞ்சம் சொல்லிட்டு போங்க!!!