பன்னீர் தெளிக்கிறோமில... ப்ளீஸ்... கொஞ்சம் தலை குனியுங்க...

வணக்கம் பங்காளீ! வாங்க, சவுக்கியங்களா? நம்ம வலைபதிவு பக்கம் வந்ததுக்கு நன்றீங்கோ...Get this Widget

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே! என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி! நண்பர்களே!

மனிதர்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் சிந்தனைகள், இங்கு சிதறிகிடக்கிறது. படித்து பார்த்து உங்கள் கருத்துக்களை இடவேண்டுகிறேன்!

தொடர்ந்து, இந்த வலைபதிவுக்கு உங்களின் ஆதரவை தாருங்கள்!!! நன்றி! தொடர்ந்து வருக!!!

இந்த நாள், உங்களுக்கு, இனிய நாளாக அமைவதாக!!!

பாசகார பங்காளி கூட்டமுங்க! நீங்களும் கூட வாறீகளா?

10 Sept 2010

ஐயோ! எப்படி சாப்பிடணும்னு கூட சொல்லி கொடுக்கணுமா மாப்பு?

மாப்பு! என்ன ஒரு கொடுமை! சாப்பிடறது எப்படின்னு கூட சொல்லி தரணுமாப்பா உனக்கு?

பங்காளி! என்ன என்ன சாப்பிடணும்னு சொன்னே இல்ல. ஆனா எப்படி சாப்பிட்டா நல்லதுன்னு ஜனங்களுக்கு தெரிய வேணாமா? அவங்க சார்பா தான்...

போதும்! அசடு வழியாத... சரி! சொல்றேன் கவனமா கேளு!

சந்தோஷமா சாப்பிடறாங்க...கண்ணு வைக்காதிங்க!
அப்புறம் அவங்களுக்கு வயிறு வலிக்க போகுது

முதல் விஷயம் என்னான்னா... நாம குறைவா சாப்பிட்டா உணவை நாம ஜீரணிக்கிறோம்.. அதிகமா சாப்பிட்டா உணவு நம்பளை ஜீரணிச்சிடும்.

விளக்கமாவே சொல்றேனே! நாம அதிகமா வயித்தில போட்டு தினிக்காம Moderate -ஆ சாப்பிட்டோம்னா அது உடம்புக்கு நல்லது! நோய் எதுவும் இல்லாம நீண்ட நாள் குறைஞ்சது 10ல இருந்து 40 வருஷம் வரைக்கும் Extra -வா சந்தோஷமா இருக்கலாம்.

சிலரு, இல்ல.. இல்ல.. பலரும் செய்ற தப்பு என்னான்னா, மணியை பாத்து சாப்பிடறது. பசி இருக்கோ இல்லையோ, சாப்பிடற டைம் வந்தாச்சுன்னா, சாப்பாட்டு தட்டுக்கு முன்னால உட்கார வேண்டியது! இது ரொம்ப தப்பு மாப்பு!

நிறைய பேரு செய்ற இன்னொரு தப்பு ஒரே நாள்ல 4 முறை 5 முறைன்னு சாப்பிடவேண்டியது. இதுவும் பெரிய தப்பு தான்.

விஷயம் என்னான்னா, இப்படி பசியில்லாம சாப்பிட்ட உணவு, வயித்துக்குள்ளாற தங்கி தேவையில்லாம எல்லா பாகங்களுக்கும் டென்ஷன் கொடுக்கிற வில்லன்பா. முக்கியமா ஜீரண உறுப்புகளுக்கு பெரிய வேதனை தான்போ! ஏண்டா பாவி! எங்களை சும்மாவே விடமாட்டியான்னு அதுங்கெல்லாம் ஓன்னு ஒப்பாரி வெச்சி அழுவுங்க!

அப்படி உள்ளே தள்ளின உணவு, ஜீரணத்திற்கு வராமலே இருக்குதுங்கிறது மட்டும் இல்ல, அதை வெளியே தள்ளவும் முடியாம சிரமமா போயிடுது நம்ப உடம்புக்கு! சாப்பிட்ட உணவு மூலமா நமக்கு சக்தி வரணும். ஆனா அதுக்கு மாறாக, நம்ப உடம்புக்குள்ள இருந்து இந்த வீணா போன உணவை வெளியே தள்ளுறதுக்கு உடம்புக்குள்ள ஏற்கனவே இருக்கிற சக்தி செலவு ஆகுது. இப்போ புரியுதா?

இந்த தப்பு அடிக்கடி தொடர்கதை மாதிரி தொடர்ந்தா, அப்புறம் சீக்காளியா மாற வேண்டியது தான். சோக்காளியா இருந்தவன் நோயாளியா ஆவறது, பெரிய கொடுமை தானே மாப்பு?  

நான் திரும்பவும் சொல்றேன் நல்லா ஞயாபகம் வெச்சுக்கோ! கொஞ்சமா சாப்பிட்டா நாம உணவை ஜீரணிக்கிறோம். அதிகமா சாப்பிட்டா உணவு நம்பளை ஜீரணிக்க ஆரம்பிச்சிடும்! O.kay வா!

புரியுது பங்காளி! சிலரு டேஸ்டா இருக்குன்னு அளவுக்கு அதிகமா, உணவை வயித்துக்குள்ள தள்ளுறாங்களே, என்னமோ நாளைக்கே உணவு ஏதும் கிடைக்காம, பஞ்சம் வந்துடும்ங்கிற மாதிரி...!!! இது கூட தப்பு தானே?

இதில என்ன சந்தேகம்? இயற்கையே இந்த தப்புக்கு அவங்களுக்கு தண்டனை கொடுத்திடுதே! வயிற்று உப்பசம், அஜீரணம், மந்தம், வாயு தொல்லை, தலை வலி, தொந்தி விழறது, சர்கரை வியாதின்னு பல பல நோய்களை அவங்க பக்கம் அனுப்பி வைக்குதே மாப்பு!

அமெரிக்காவில நடந்த ஒரு ஆய்வுல, அதிகமா சாப்பிட்டு நோய்வாய் பட்டவங்க, தினமும் ரெண்டு வேலை மட்டும் சாப்பிட ஆரம்பிச்சதுக்கு அப்புறமா எவ்வளவோ நன்மைகள் அவங்களுக்கு கிடைச்சிருக்காம்.

அவங்களுக்கு இருந்த நோயெல்லாம் மறைஞ்சி, ஆரோகியம் நல்லபடியா கூடி இருக்கு. உடல் எடையும் ஒரு சம நிலைக்கு வந்திருக்கு, அவங்க ஜீரண உறுப்புகள் எல்லாமும் கூட நல்லபடியா வேலை செய்ய ஆரம்பிச்சிருக்காம்.

உடலுக்கு நம்மோட ஆரோகியத்தை பத்தி நிறைய விஷயங்கள் தெரியுமப்பா. அதனோட பேச்சை கேட்டாலே போதும்! எல்லா நோயிலிருந்தும் நாம விடுபட்டுவிடுவோம்.

என்ன மாப்பு நான் சொல்றது?

சரியாத்தான் சொல்றீங்க! வேற எதனாச்சும் இருக்கா மாப்பு?

ம்... இருக்கே... உணவை நல்லா மென்னு சாப்பிடணும். Express ரெயில் மாதிரி சாப்பாட்டை உள்ளே தள்ள கூடாது. ஜீரணம் வாயிலிருந்தே ஆரம்பிக்குதுன்னு உனக்கு தெரியுமா பங்காளி?

உணவை நல்லா மென்னும் போது எச்சில்ல இருக்கிற Enzymes உணவோடு சேர்ந்து ஜீரணத்துக்கு உதவி செய்யுது. அப்புறம் பல்லு எதுவும், வயித்துக்குள்ள இல்லை தானே? அதனால உணவை மாவாக்கி, கூழாக்கி, வயித்துக்கு அனுப்பணுமே தவிர அப்படியே அனுப்ப கூடாது. வயிறு பாவம் இல்ல! வாயில்லாத அப்புராணிப்பா! அதை கொடுமை படுத்தலாமா, நீயே சொல்லு?

சாப்பிடும் போது தண்ணியை குடிக்க கூடாது. இது ஏன்னா?

ஜீரணத்துக்கு தயாரா வயித்தில தீவிர நிலையில Hydrochloric அமிலம் இருக்குது. தண்ணியை குடிச்சி அந்த அமிலத்தை நீர்த்து போக செய்தோம்னா, ஜீரணம் நடப்பது பாதிப்பு அடையுது. குறைஞ்ச பச்சம் சாப்பிட்டு 30  நிமிஷம் பொறுத்து தண்ணீரை குடிக்கிறது தான் நல்லது.

அதுக்கேத்த மாதிரி காரம், உப்பு எல்லாம் குறைவா இருக்கிற மாதிரி உணவு இருக்கிறது பெட்டர்.

சாப்பிடும்போது பேச கூடாது. இதை பெரியவங்க சொல்லி கேள்விபட்டிருப்ப இல்ல! ஆனா அது எதுக்குன்னு அவங்க சொல்லல இல்லை? அதுக்கு பதிலு இது தான்!

சாப்பிடறதை நாம தியானம் மாதிரி மனசை ஒருநிலை படுத்தி சாப்பிட்டோம்னா, சாப்பாட்டு ருசியோட ஒன்றி போவோம். அதிகமாவும் சாப்பிடமாட்டோம், குறைவாகவும் சாப்பிடமாட்டோம், ஜீரண வேலை சுலபமா நடக்க உதவி செய்றோம். அது மட்டும் இல்லாம தியானம் பழகுறதும் ஈஸி!

என்னது பங்காளி இது புது கதையா இருக்கு! சாப்பட்டை வெச்சே தியானம் பழகிட முடியுமா?

மாப்பு! தியானம் என்கிறது வேற ஒன்னும் இல்ல! நாம செய்ற செயலை மனம் ஒன்றி செய்தாலே அது தியானம் தான். நீ வேணா இன்னைக்கி சாப்பிடும் போது மனசு ஒன்றி, வேற ஏதும் சிந்தனை இல்லாம, யாருகிட்டேயும் பேச்சு கொடுக்காம, சாப்பாட்டிலேயே லயிச்சி, சாப்பிட்டு பாரு! அதனோட அனுபவம் எப்படி இருந்ததுன்னு அப்புறமா சொல்லு!

கண்டிப்பா இத்தனை நாள் அனுபவிக்காத ஒரு வித்தியாசத்தை உன்னால அனுபவிக்க முடியும். 

(படிக்கும் நீங்களும் கூடத்தான்! தியானம் போல சாப்பாட்டை சாப்பிட்டு உங்களுக்கு ஏற்பட்ட அனுவங்களை எனக்கு தெரியபடுத்துங்களேன்!)

கவலையில, கோபத்தில இருக்கும் போது சாப்பாட்டை மறந்திடு! கவலையில, கோபத்தில இருக்கும்போது வயித்தில ஜீரணிக்க தேவைபடுற அமிலங்கள், Enzyme-கள் எல்லாம் சரியாக சுரப்பதில்லை.

நீ அந்த மாதிரி நேரங்கள்ல, சாப்பிடாம விட்டேன்னா, உன் உடம்பு அதுக்காக, உனக்கு தேங்க்ஸ் சொல்லும்பா தேங்க்ஸ்!

இப்போ ரொம்ப முக்கியமான ஒரு விஷயம்பா. சாப்பாடு சரியான அளவு சாப்பிட்ட உடனே ஒரு சிறிய ஏப்பம் வரும். அந்த நேரத்தில நீ சாப்பிடறதை நிறுத்தி விடுறது பெட்டர். அந்த ஏப்பம் தான் உடம்பு நமக்கு கொடுக்கிற சிக்னல். எனக்கு தெரிஞ்சது அவ்வளவு தான்!     

இதை படிக்கிற மக்களே! இது சம்பந்தமா, உங்களுக்கு தெரிஞ்ச மத்த விஷயங்களை என்னோடு பகிர்ந்துக்கோங்க!

உங்களுக்கு பயனுள்ள பதிவை எழுதி இருக்கிறேன்னு நம்புறேன்!

பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க, கருத்தும் சொல்லுங்க

பிடிக்கலைன்னா ஓட்டு போடாதீங்க! ஏன்னு காரணத்தை மட்டும் சொல்லுங்க! அது எனக்கு ரொம்ப Use ஆகும்.

(எப்படியும் ஓட்டு போடுவீங்கன்னு தெரியும்! நீங்க தான் பாசகார உறவுகாரங்களாச்சே!!!)

நான் உங்ககிட்ட மேலே கேட்ட மாதிரி, உங்க அனுபவங்களை பகிர்ந்துகோங்க! வேற ஒரு சமயத்தில மறுபடியும் சந்திக்கிலாம்!

இப்போதைக்கு டா..டா... பை... பை... மகிழ்ச்சியோடு இருங்க!!!

27 மேதைங்க இதபத்தி என்ன சொன்னாங்கன்னா...:

Unknown said...

நகைச்சுவை கலந்த நல்ல பதிவு.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சரி பங்காளி இன்னிக்கு எனக்கு அஞ்சப்பர்ல சாப்பாடு வங்கி கொடுங்க...

என்னது நானு யாரா? said...

@கலாநேசன்: பாராட்டுக்கு நன்றி நண்பா!

@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா):

//சரி பங்காளி இன்னிக்கு எனக்கு அஞ்சப்பர்ல சாப்பாடு வங்கி கொடுங்க..//

பிறந்த நாள் விழா கொண்டாடினா, உபசரிப்பவரு தானே விருந்து கொடுக்கணும். நீங்க சொல்றது புது கதையா இல்ல இருக்கு!!!

முதல்ல உங்க பிறந்த நாளுக்கு எல்லாருக்கும் நல்லா ஒரு இயற்கை உணவு விருந்து வைங்க. அப்புறமா பதில் விருந்தா, நான் உங்களுக்கு அஞ்சப்பர்ல சாப்பாடு வாங்கி தர்றேன். சரியா நான் சொல்றது?

ஜெயந்த் கிருஷ்ணா said...

நல்ல பதிவு மக்கா...

ஜெயந்த் கிருஷ்ணா said...

அனைவருக்கும் ஈத் பெருநாள் - விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்

Chitra said...

கவலையில, கோபத்தில இருக்கும் போது சாப்பாட்டை மறந்திடு! கவலையில, கோபத்தில இருக்கும்போது வயித்தில ஜீரணிக்க தேவைபடுற அமிலங்கள், Enzyme-கள் எல்லாம் சரியாக சுரப்பதில்லை.


..... இந்த அறிவுரை நிறைய பேர் மனதில் வைத்து கொள்ள வேண்டியது.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா):

//சரி பங்காளி இன்னிக்கு எனக்கு அஞ்சப்பர்ல சாப்பாடு வங்கி கொடுங்க..//

பிறந்த நாள் விழா கொண்டாடினா, உபசரிப்பவரு தானே விருந்து கொடுக்கணும். நீங்க சொல்றது புது கதையா இல்ல இருக்கு!!!

முதல்ல உங்க பிறந்த நாளுக்கு எல்லாருக்கும் நல்லா ஒரு இயற்கை உணவு விருந்து வைங்க. அப்புறமா பதில் விருந்தா, நான் உங்களுக்கு அஞ்சப்பர்ல சாப்பாடு வாங்கி தர்றேன். சரியா நான் சொல்றது? //

helloooooooooooooooooooooooooooooooo....என்ன பங்காளி. இங்க பஸ் சத்தத்துல ஒண்ணுமே கேக்கலை. கொஞ்சம் சத்தமா பேசுங்க....

சௌந்தர் said...

இப்போ ரொம்ப முக்கியமான ஒரு விஷயம்பா. சாப்பாடு சரியான அளவு சாப்பிட்ட உடனே ஒரு சிறிய ஏப்பம் வரும். அந்த நேரத்தில நீ சாப்பிடறதை நிறுத்தி விடுறது பெட்டர்.////////

இது ஓகே நீங்க சொன்ன மாதிரியே செய்து விடலாம்

என்னது நானு யாரா? said...

@வெறும்பய: நன்றி பங்காளி! நானும் அனைவருக்கும் ஈத் பெருநாள் - விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களை தெரிவிச்சிகிறேன்.

@@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா):

//helloooooooooooooooooooooooooooooooo....என்ன பங்காளி. இங்க பஸ் சத்தத்துல ஒண்ணுமே கேக்கலை. கொஞ்சம் சத்தமா பேசுங்க...//

நீங்க நல்லவன்னு வேற சத்தியம் செய்றீங்க. அதனால நான் நம்பிட்டேன். போதுமா பங்காளி?

என்னது நானு யாரா? said...

@Chitra:

//..... இந்த அறிவுரை நிறைய பேர் மனதில் வைத்து கொள்ள வேண்டியது.//

அக்கா! இந்த விஷயத்தில நீங்க எப்படி? ஆரோகிய வழிமுறைகளை கடைபிடிக்கறீங்கன்னு நம்புறேன். சரி தானே?

என்னது நானு யாரா? said...

@சௌந்தர்:

//இது ஓகே நீங்க சொன்ன மாதிரியே செய்து விடலாம்//

அப்போ மத்த விஷயமெல்லாம் சௌந்தர்? எல்லாத்தையும் Choice-ல விட்டுட்டீங்களா? பரிட்சையில வேணா choice-ல விட்டாலும் பாஸ் ஆயிடலாம்.

ஆனா சாப்பாட்டு விஷயத்தில அப்படி இருக்க முடியாதுங்கோ!

முதல்ல ஒரு விஷயத்தோடு ஆரம்பிக்கறேன்னு சொல்றீங்க. அப்படிதானே? நடத்துங்க! வாழ்த்துக்கள்!

செல்வா said...

/// பசி இருக்கோ இல்லையோ, சாப்பிடற டைம் வந்தாச்சுன்னா, சாப்பாட்டு தட்டுக்கு முன்னால உட்கார வேண்டியது! ///
நிறைய பேரு அப்படிதாங்க .. நானும் கூட சில நேரங்களில் அப்படி சாப்பிட்டதுண்டு ..!!

செல்வா said...

// “கொஞ்சமா சாப்பிட்டா நாம உணவை ஜீரணிக்கிறோம். அதிகமா சாப்பிட்டா உணவு நம்பளை ஜீரணிக்க ஆரம்பிச்சிடும்! ///
ஹா ஹா ..!!
//அப்புறம் பல்லு எதுவும், வயித்துக்குள்ள இல்லை தானே?///
ஆமா .
//குறைஞ்ச பச்சம் சாப்பிட்டு 30 நிமிஷம் பொறுத்து தண்ணீரை குடிக்கிறது தான் நல்லது.
///
இதுவும் நல்ல விசயம்தான் ..!!

Chef.Palani Murugan, said...

வ‌ண‌க்க‌ம் ப‌ங்காளி.சாப்பிடும்போது த‌ண்ணீர் குடிக்க‌க்கூடாதுன்னு சொல்றீங்க‌.ம‌ருத்துவ‌ர்க‌ள் த‌ண்ணீர் குடிப்ப‌து,உண‌வின் கார‌த்த‌ன்மையை குறைக்கும்,ம‌ல‌ச்சிக்க‌லை த‌விர்க்கும் ந‌ல்ல‌துன்னு சொல்றாங்க‌ளே,உண‌வு தொண்டையில் ச‌ரிவ‌ர‌ இற‌ங்க‌ இடையிட‌யே சிறித‌ள‌வு குடிப்ப‌து ந‌ல்ல‌துதானே.

என்னது நானு யாரா? said...

@ப.செல்வக்குமார்:

//நிறைய பேரு அப்படிதாங்க .. நானும் கூட சில நேரங்களில் அப்படி சாப்பிட்டதுண்டு ..!!//

என்ன செய்றது செல்வா! எல்லாமுமே நேரம் பாத்து செய்ய வேண்டியதா தானே இருக்கு!

ஒவ்வொரு வேலையும் வயித்தை முழுசா நிறப்பற மாதிரி சாப்பிடாம கொஞ்சம் இடத்தை காலியா வெச்சா, அடுத்து வேலை சாப்பிடும் போது சரியான அளவு பசி இருக்கும்பா! என்ன நான் சொல்றது?

என்னது நானு யாரா? said...

@Chef.Palani Murugan, LiBa's Restaurant:

//ம‌ருத்துவ‌ர்க‌ள் த‌ண்ணீர் குடிப்ப‌து,உண‌வின் கார‌த்த‌ன்மையை குறைக்கும்,ம‌ல‌ச்சிக்க‌லை த‌விர்க்கும் ந‌ல்ல‌துன்னு சொல்றாங்க‌ளே,உண‌வு தொண்டையில் ச‌ரிவ‌ர‌ இற‌ங்க‌ இடையிட‌யே சிறித‌ள‌வு குடிப்ப‌து ந‌ல்ல‌துதானே.//

செஃப் பங்காளி! நீங்க சொன்ன காரணங்களுக்காக கொஞ்சமா தண்ணிய குடிக்கலாம்!

எல்லாமுமே இயற்கை உணவா இருந்திட்டா, சாப்பிடும்போது தண்ணீருக்கே தேவை இருக்காது. ஆனா காரசாரமா சமையல் செய்து சாப்பிட்டா வேற என்ன தான் வழி இருக்கு??!!

ஆனால் இயற்கை மருத்துவர்கள், காரம், மசாலா எல்லாம் குறைவான உணவை மட்டுமே சாப்பிட சொல்கிறார்கள். அதை சாப்பிடும் போது நன்கு பற்களால் அரைத்து சாப்பிட்டால் உமிழ் நீர் சுரக்க ஆரம்பித்து, உணவுடன் நன்கு கலந்து, விழுங்க சிரமம் இல்லாமல் இருக்கும்.

நான் அப்படி தான் செய்கின்றேன். இயற்கை வாழ்வியல் பிரியர்களும் அந்த பழக்கமே வைத்திருக்கிறார்கள்! முதலில் சிறிது சிரமமாக இருக்கலாம். ஆனால் பழக்கத்தில் சரியாக வந்துவிடும்.

மலசிக்கலுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை பங்காளி! தினமும் குறைந்தது 3 அல்லது 4 லிட்டர் நீர் குடித்தால் இந்த பிரச்சனை வராது. நன்றிங்க பங்காளி!

ப.கந்தசாமி said...

//நாம குறைவா சாப்பிட்டா உணவை நாம ஜீரணிக்கிறோம்.. அதிகமா சாப்பிட்டா உணவு நம்பளை ஜீரணிச்சிடும்.//

ரொம்ப சரி. ஆனா இதைத் தெரிந்து கொள்ள மக்கள் ரொம்ப காலம் எடுத்துக் கொள்கிறார்கள்.

நிகழ்காலத்தில்... said...

நல்லா மென்னு சாப்பிட்டாலே மலச்சிக்கல் தீரும் என்பதில் சந்தேகமே இல்லை.

அதோட இரவு உணவில் அளவைக்குறைத்தால் வயிறுக்கும் ஓய்வு, உறக்கமும் நன்றாக வருகிறது.

அவசியமான கருத்தைப் பகிர்ந்திருக்கின்றீர்கள்

வாழ்த்துகிறேன்

என்னது நானு யாரா? said...

@DrPKandaswamyPhD:

//ரொம்ப சரி. ஆனா இதைத் தெரிந்து கொள்ள மக்கள் ரொம்ப காலம் எடுத்துக் கொள்கிறார்கள்.//

அப்படி ரொம்ப காலம் எடுத்துக்கொள்ள கூடாதுன்னு தான் ஐயா, நான் ஆசைபடுறதே! இந்த தகவல் எல்லாம் மக்களுக்கு போய் சேர்ந்தா எல்லோரும் ஆரோகியமா இருப்பாங்க இல்லையா ஐயா!

பெரியவங்க நீங்க! உங்க உறவுகாரங்க, நண்பர்களுக்கு ஆரோகியத்தை பற்றிய தகவல்களை சொல்லுங்க ஐயா! கண்டிப்பா கேட்பாங்க! கேட்டு பயனடைவாங்க!

என்னது நானு யாரா? said...

@நிகழ்காலத்தில்:

//நல்லா மென்னு சாப்பிட்டாலே மலச்சிக்கல் தீரும் என்பதில் சந்தேகமே இல்லை.

அதோட இரவு உணவில் அளவைக்குறைத்தால் வயிறுக்கும் ஓய்வு, உறக்கமும் நன்றாக வருகிறது.//

அருமையான உபரி தகவல்களை சொல்லிட்டீங்க! நன்றிங்க! தொடர்ந்து நம்ப வலைபக்கம் வரணும்னு கேட்டுகிறேன்.

Madhavan Srinivasagopalan said...

ரொம்ப நல்ல விஷயங்களா சொல்லுறீங்க.. தகவல்களுக்கு நன்றிகள்.

பால் விஷயம்தான் என்னால ஒத்துக்க முடியலை.. நமக்குத் தெரிஞ்சு கொவில்லேருந்து.. நல்ல ஒழுக்கமான சாமியார்கள் கூட பால பயன் படுத்துறதா பாத்திருக்கேன்.. -- சரி வரவாயில்லை.. பாத்துக்கலாம்..

என்னது நானு யாரா? said...

@Madhavan:

//பால் விஷயம்தான் என்னால ஒத்துக்க முடியலை.. நமக்குத் தெரிஞ்சு கொவில்லேருந்து.. நல்ல ஒழுக்கமான சாமியார்கள் கூட பால பயன் படுத்துறதா பாத்திருக்கேன்..//

அண்ணாச்சி! உங்க முதல் வருகைக்கும், கருத்துக்கும் நன்றிங்க! பால் காமத்தை தூண்டி விடுறது உண்மை தானுங்க. காந்தி தாத்தாவே இந்த சோதனையில இறங்கி சொன்னதுங்க.

சரி அண்ணாச்சி! பாலை பற்றி மத்த விஷயங்கள் கூட சொல்லி இருக்கேன் இல்லையா? அவைகளை பற்றி நீங்க என்ன நினைக்கறீங்க?

Anonymous said...

//பங்காளி! சரக்கு எப்படி? விக்குமா... விக்காதா...??? கொஞ்சம் சொல்லிட்டு போங்க!!!//

சரக்கு வித்துப் போச்சு போல??

இருந்தாலும் நல்ல சரக்கு :)

Anonymous said...

நீங்கள் பிறந்த தேதி 9 , 19 ,29 இவைகளில் ஏதோனும் ஒன்றா? (என்னுடைய பிறந்த தேதி 9 ) . நீங்கள் உண்மையை சொல்லுங்கள் நான் காரணத்தை சொல்கிறேன்

என்னது நானு யாரா? said...

@ராதை/Radhai: உங்களின் முதல் வருகைக்கும் பாராடுக்கும் நன்றி தோழி!

@Anonymous:

//நீங்கள் பிறந்த தேதி 9 , 19 ,29 //

என்னுடைய பிறந்தநாள் 29ம் நாள் நள்ளிரவு. அதனால் நான் என்னுடைய பிறந்தநாள் 30 என்றே கருதுகின்றேன். என்ன காரணம் நண்பரே?

Madhavan Srinivasagopalan said...

//சரி அண்ணாச்சி! பாலை பற்றி மத்த விஷயங்கள் கூட சொல்லி இருக்கேன் இல்லையா? அவைகளை பற்றி நீங்க என்ன நினைக்கறீங்க? //

I already expressed my opinion briefly as "ரொம்ப நல்ல விஷயங்களா சொல்லுறீங்க.. தகவல்களுக்கு நன்றிகள்."

Plz continue..

Unknown said...

sooper saraku :-)

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

Post a Comment

பங்காளி! சரக்கு எப்படி? விக்குமா... விக்காதா...??? கொஞ்சம் சொல்லிட்டு போங்க!!!